புதன், 24 அக்டோபர், 2018

மருது பாண்டியரும் கள்ளர் தலைவர்களும்



சின்ன மருதுவால் முன்னெடுக்கப்பட்ட தென்னிந்திய புரட்சி பிரிட்டீஸ் இந்தியாவால் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல இயலாது.


இந்த தென்னிந்திய புரட்சியின் தமிழ் நாட்டின் தலைமை இடமாக திகழ்ந்தது ஆனையூர்(கருமாத்தூர்) கள்ளர் நாடு என்பதை பிரிட்ஸார் மிகவும் ஆணித்தனமாக குறித்துள்ளனர்.

சிவகங்கை கள்ளர் நாட்டு தலைவர்கள், நெல்லை நாயக்க, மறவர் தலைவர்கள், இராமநாத மறவர் தலைவர்கள், திண்டுக்கல் நாயக்க தலைவர்கள் அனைவரும் ஆங்கிலேயருக்கெதிராக திட்டம் தீட்டி, செயல்பட்ட இடம் தான் ஆனையூர்(கருமாத்தூர்) கள்ளர் நாடு.


இந்த தென்னிந்திய புரட்சியை மேற்கோள் காட்டும் ஆங்கில வரலாற்று ஆய்வாளர்கள் “கள்ளர் பழங்குடிகளை ஆங்கிலேயரின் பரம்பரை எதிரிகள் என்றும் கள்ளர்களின் சுயாட்சி கொள்கையாலும், வீரியத்துடன் மார்பை காட்டி எதிர்த்து நிற்கும் குணத்தாலும், இடைவிடாத தாக்குதல் பண்பாலும் கள்ளர் பழங்குடிகளை கண்முடித்தனமாக ஆங்கிலேய தளபதிகள் கொலை செய்துள்ளனர் என குறிக்கின்றனர்.


இந்த வேங்கை சின்ன மருதுவின் தென்னிந்திய புரட்சியில் நாம் கடந்து செல்ல முடியாத ஊர்களில் மேலூர் கள்ளர் நாடும் மற்றும் திருமங்கலம்(ஆனையூர் நாட்டு பிரிவு) ஏனென்றால் இங்கு தான் மருது பாண்டியர்களின் ஆயுத தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. மேலும் இந்த ஆயுத தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களை மேலூர் கள்ளர் நாட்டு காடுகளில் மண்ணில் புதைத்து வைத்து ஆங்கிலேயர்கள் வரும் போது திடீரென புதைத்து வைத்த ஆயுதங்களை எடுத்து கொரில்லா தாக்குதல் நடத்தியுள்ளனர்.


இந்த மேலூர் கள்ளர் நாட்டின் ஆயுத தொழிற்சாலையை புரட்சியின் இறுதிகாலத்தில் ஆங்கிலேயர்களால் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டது. இந்த தென்னிந்திய புரட்சியில் மிகவும் வீரியத்துடன் சண்டையிட்ட கருமாத்தூர் கள்ளர் தலைவர்கள் மூவரை பின்னாங் தீவிற்கு நாடு கடத்தப்பட்டு சொந்த நாட்டிற்காக போர் புரிந்த வீரர்கள் அன்னிய தேசத்தில் அடக்கமாயினர்.


1. ஆண்டியப்ப தேவர்
2. சடை மாயன்
3. கொன்றி மாயத் தேவர்

மேலும் புரட்சி மேலோங்கி இருந்த காரணத்தாலும், திண்டுக்கல்லை பிரிட்டிசார் கைப்பற்றியதாலும். கோபால நாயக்கர் ஆனையூர் கள்ளர் நாட்டுக்கு பொன்னித்தேவர் (கள்ளப்பட்டி அதாவது செல்லம்பட்டிக்கு அருகில்) உதவியால் தப்பிச்செல்கிறார், இந்த சம்பத்தில் பொன்னித்தேவர் பிரிட்டிஸ் படையால் கொல்லப்படுகிறார்.

பிறகு கோபால நாயக்கர் ஆரிப்பட்டி,கருமாத்தூர், நமணூர் நாட்டில் உள்ள கள்ளர் தலைவர்களுடன் சேர்ந்து மறு தாக்குதல் செய்கிறார்.

இந்த தென்னிந்திய புரட்யில் மேலூர், வெள்ளலூர் நாட்டு கள்ளர்கள் திருப்பரங்குன்ற மலையில் இருந்து ஆங்கிலப்படைகள் மதுரையிலிருந்து சிவங்கை செல்லவிடாமல் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த புரட்சி இறுதியில் ஆங்கிலேயர்கள் மருதுபாண்டியர்களை வீழ்த்த மிகவும் நேர்த்தியாக செயல்பட்டு உள்ளனர்.

அதாவது முதலில் ஆனையூர் நாட்டு பிறமலைக்கள்ளர்களை தொடர் தாக்குதல் நடத்தி அவர்களின் ஆயுதங்களை முற்றிலுமாக அழிக்கின்றனர்.

பின்பு மேலூர்,வெள்ளலூர், திருப்பத்தூர் (அம்பலம்) நாட்டு கள்ளர்களை தொடர் தாக்குதல் நடத்தி அவர்களின் இரண்டு தொழிற்சாலைகளை தரைமட்டமாக்கி ஆங்கிலேய படை சிவங்கையை நோக்கி சிறுவயலுக்கு முன்னேறுகிறது.

சிவங்கை நாட்டு எல்லையில் நுழைந்த ஆங்கிலேய படைகளுக்கு அதிர்ச்சி வைத்தியமாக கண்டதேவி, தேர்போகி (ஏழுகிளை கள்ளர் நாடு (அம்பலம், சேர்வை) நாட்டு கள்ளர்கள் மிகவும் வீரம் செரிந்து போரிட்டனர்.

தேர்போகி நாட்டு கிளைவழி கள்ளர்கள் மிகவும் வீரத்துடனும் சண்டையிட்டுள்ளனர் மேலும் புரட்சியாளர்களின் தளபதிகளுக்கு மிகவும் தோளுக்கு தோளாக நின்றுள்ளனர்.


இவர்களின் தாக்குதலை தவிர்க்க பிரிட்டீஸார் மருது பாண்டியர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் எனவும், தேர்போகி நாட்டு கள்ளர்களுக்கு போர் மன்னிப்பு கொடுக்கிறோம் என்று பிரிட்ஸ் தளபதி பிளாக் பர்ன் பரிந்துரைக்கிறார். ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்து விட்டனர்.


புரட்சியில் தோல்வியால் இந்த தேர்போகி நாட்டு கள்ளர்களும் கருவறுக்கப்பட்டனர். கண்டதேவி கள்ளர் நாட்டில் 3000 வீரர்களை திரட்டி ஆங்கில தளபதி பிளாக் பர்னுக்கு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியுள்ளனர். இதனால் தளபதி அறந்தாங்கிற்கு மறு தாக்குதல் நடத்த செல்கிறார்.



அதே போல் பாலை நாட்டு கள்ளர்களும் அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் பிரிட்டீஸாருக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறார்கள். இந்த கிளை வழி கள்ளர் நாட்டை முழுவதுமாக வீழ்த்தி ஆங்கிலேயர்கள் சிவகங்கை உள்ளே நுழைகின்றனர்.

அங்கு தான் நம்முடைய தென் பாண்டி சிங்கம் பாகனேரி நாட்டு பட்ட அம்பலக்காரர் வாளுக்கு வேலி அம்பலம் எல்லை சாமியாக நின்று துரோகத்தால் வீழ்த்தப்பட்டார் என்பது தனித்த காவிய வரலாறு. இந்த ஒட்டு மொத்த கள்ளர் நாட்டு தலைவர்களை வீழ்த்திய பின்பு தான் மருது பாண்டியர்களை ஆங்கிலேயர்கள் தூக்கில் இட்டுள்ளனர்.

மருது சகோதரர்களை வீழ்த்த வேண்டுமாயின் கள்ளர் நாட்டு தளபதிகளை வீழ்த்த வேண்டும் என்று பிரிட்டீஸார் நன்கு புரிந்து அதை செயல்படுத்தியும் உள்ளார்கள்.


இதுபோக தூத்துக்குடி பரதவ மக்கள் அவர்களுடைய பரத குலத்தலைவன் பின்னால் அணிவகுத்து ஆங்கிலேயருக்கு எதிராக போர் செய்துள்ளனர்.

மருதுபாண்டியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள்

1) மதுரை கிழக்கு மற்றும் மேற்கு நாட்டு கள்ளர்கள்

2) களக்காடு மறவர்கள்

3) நாங்குனேரி மறவர்கள்

4) மருதுபாண்டியர்கள் கிழக்கு நாட்டு கள்ளர்களது {அம்பலகாரர்கள் } ஆதரவை பெற்றிருந்தனர்.

5) மல்லா கோட்டை நாடு கள்ளரான கருவாபாண்டியன் சேர்வை அவர்களின் விசுவாச மிக்க தளபதியாக செயல்பட்டார்.

6) கிழக்கு நாட்டு {மேலூர் } கள்ளர்களது தலைவர்களான சேதுபதி அம்பலமும் -சண்முகபதி அம்பலமும் மருதுபாண்டியர்களுக்கு ஆதரவாக களமிறங்கினர். மருதுபாண்டியர்களின் உற்ற நண்பர்களாக விளங்கிய கள்ளர் நாடுகளின் தலைவர்கள் சேதுபதி அம்பலம் அபிராமம் என்ற இடத்திலும் சண்முகபதி அம்பலம் அவருடைய சொந்த கிராமத்திலும் தூக்கிலிட்டு கொல்லப் பட்டனர்.

7)  திண்டுக்கல் கோபால நாயக்கர் - திண்டுக்கல் விருப்பாச்சி கோபால நாயக்கர் புறமலை கள்ளர்களின் ஆதரவை வேண்டி 1799 ஆனை யூர் நாட்டிலுள்ள கள்ளபட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னிதேவரிடம் தஞ்சமடைந்தார் இதனால் உற்சாகம் அடைந்த கருமாத்தூர் ஆரியபட்டி நாமனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பல்லாயிரகணக்கான கள்ளர்கள் வெள்ளையரை தாக்குவதற்கு தயாராயினர் இதனை கேள்விப்பட்ட மதுரை கலெக்டர் இன்ச் என்பவன் 1799 மே 4ம் தேதி பெரும்படையை வைத்து மக்களை சிதறடித்து பொன்னிதேவரை கொலைசெய்து கோபால நாயகரை சிறைபிடித்து சென்றான்.

8) சிவகங்கை இளவரசி வெள்ளச்சி நாச்சியாரை மணந்த சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவர்.

9) ஊமத்துரை

10) துரைசாமி சேர்வை ( சின்ன மருதுவின் இளைய மகன்- நாடு கடத்தப்பட்டவர்)

11) பொம்மநாயக்கர் (வராப்பூர் பாளையக்காரர்)(நாடுகடத்தப்பட்டார்)

12) புரட்சியில் பங்கேற்று உயிர் துறந்த நூற்றுக்கணக்கான முகமறியா போராளிகள்

13) பினாங்கு நாட்டுக்கு கடத்தப்பட்டு அந்நிய தேசத்தில் மாண்ட எழுபதுக்கும் மேற்பட்ட தியாகிகள்.




நன்றி :

உயர்திரு. சுந்தர வந்திய தேவன் - பிறமலைக்கள்ளர் வாழ்வும் வரலாறும் - நூலாசிரியர்

உயர்திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
உயர்திரு. சோழ பாண்டியன்

South Indian Rebellion - By Dr. Rajayyan
Historical dictionary of the Tamils - By Mrs.Vijaya Ramaswamy