திங்கள், 12 மார்ச், 2018

சிங்கவள நாட்டு புன்னைநல்லூர் மாரியம்மன்




தஞ்சை ஆண்ட சோழ பேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வமாக அமைத்தார்கள். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்ப்புறத்தில் அமையப் பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் என்று “சோழசம்பு” எனும் நூல் கூறுகிறது.

தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜ ராஜ சோழன் (கி.பி. 985-1014) காலத்தில், தான் ஆண்ட ஊர்களைப் பல மண்டலங்களாகப் பிரித்தான். அவற்றிற்கு "வள நாடுகள்" எனப் பெயரிட்டான்.

இராசராசசோழன் காலத்து தஞ்சாவூர் நகர எல்லைகள் கிழக்கு எல்லை - புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில், மேற்கு எல்லை - வல்லம் களிமேடு, வடக்கு எல்லை - விண்ணாறு (வெண்ணாறு), தெற்கு எல்லை - நாஞ்சிக்கோட்டை தெரு,

முதலாம் இராசராசசோழனது ஆனேயின்படி ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.


அவற்றுள் இராசேந்திர சிங்கவளநாடு என்பது ஒன்று. இராசேந்திர சிங்கன் என்பது முதலாம் இராசராச னது சிறப்புப் பெயர்களில் ஒன்று.
“ராஜராஜ தேவர்க்கு யாண்டு 22-ஆவது வடகரை சரஜேந்திர சிங்கவள நாட்டுப் பொய்கை நாட்டுத் தேவ தானம் திருவையாற்று ஒலோகமாதேவீச்சரத்து மகாதேவர் (S. I. I. Volume V 516)” . இந்த கல்வெட்டில் குறிப்பிடும் சிங்கவளநாடு என்பது தற்போது உள்ள சிங்கவளநாடு பகுதி அல்ல.


குளிச்சப்பட்டு, கத்தரிநத்தம், தளவாபாளையம் மற்றும் மருங்கை ஆகிய நான்கு ஊர்களை சேர்த்து சிங்க வளநாடு உருவாக்கப்பட்டது. இதில் குளிச்சப்பட்டு அதிக மக்கள் தொகை கொண்ட ஊராகவும், சிங்க வளநாட்டின் தலைமை கிராமமாகவும் விளங்குகின்றது.

சிங்க வளநாட்டிற்கு பெருமை சேர்த்தவர், புன்னைநல்லூர் ராஜ கோபுரத்தைக் கட்டியவர், குளிச்சப்பட்டு பள்ளியின் வளர்ச்சிக்கு உதவியர் , கள்ளர் மரபை சேர்ந்த குளிச்சப்பட்டு அரசுகாரதெரு ஆ. சிவசாமி முதலியார் அவர்களின் மகன் சி. ஞானநடத்தரசு ஆவார். இவர்களுக்கும் சிங்கவளநாட்டில்  உள்ள அரசுக்காரத்தெரு கள்ளர் மரபை சேர்ந்த முதலியார்களுக்கு ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் சன்னாசியம்மன் கோயில் நாட்டு திருவிழாவில் நாட்டு அரசு என்ற மரியாதை சுழற்சி முறையில் தரப்படுகிறது.




அய்யம்பேட்டையில் உள்ள ஒரு பிரபலமான கள்ளர் குடும்பம் மருங்கை சிங்கநாட்டாழ்வார் பட்டம் உடையவர்கள். அய்யம்பேட்டை அவர்களுக்கு இனாம் கிராமம் (Local chieftain )

நாட்டு குலதெய்வ கோவில் வழிபாட்டு முறையை பின்பற்றி வந்த தஞ்சை கள்ளர்கள். தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அப்பொழுதே 20000 மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இக்கோவில்களில் பிராமணர்களுக்கே அனுமதி இல்லை.


கிபி (1800_1850) வாக்கில் அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியர் இந்த மாரியம்மன் கோவிலையும் பிராமணர்களை கைப்பற்ற சொல்ல அதற்கு பிராமணர்கள் நாங்கள் கள்ளர்களால் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்றும், எங்கள் கால்நடைகள் அவர்களால் கொள்ளையடிக்கப்படும் எனவும் பதில் அளித்துள்ளனர்.

தெய்வம் - துர்க்கை, மாரியம்மன் (முத்துமாரி), தீர்த்தம் – வெல்லகுளம், தலவிருட்சம் – வேம்புமரம்.

இந்த கோவிலின் முக்கியமான மூலவர் மாரியம்மன். முத்துமாரியம்மன் என்றும் சொல்வதுண்டு. புன்னை வனத்தில் இருந்ததால் புன்னைநல்லூர் மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறார்.

புன்னை மரத்தின் சிறப்பாக கல்லெழுத்துச் சாசனத்தில் சுந்தர சோழன் காலத்தில் ஊர் சபையினர் கோயில் அருகேயுள்ள புன்னை மரத்தடியில் கூடி கோயில் சார்ந்த முடிவுகளை எடுத்தனர் என்று கூறுகின்றது. அன்னியூர் என்னுமிடத்தில் இருந்துகொண்டு சங்ககாலத்தில் ஆண்ட மன்னன் அன்னி. அன்னியின் காவல்மரமான புன்னை மரத்தை குறுக்கைப் பறந்தலைப் போரில் வென்ற திதியனும், சோழனும் பாண்டியனும் வெட்டிச் சாய்த்துவிட்டனர். கள்ளர்களின் பட்ட பெயரான புன்னைகொண்டார், புன்னையர், அன்னிவாசல்ராயர் இங்கு குறிப்பிடத்தக்கது.


இங்கே ராமசாமி கண்டியரால் குதிரை வாகனத்தில் அம்மன் புறபாடு நடைபெறுகிறது.



மரகதவள்ளி மாணிக்க குச்சிராயர்


ஆறடி உயரமுள்ள இந்த புன்னைநல்லூர் மாரியம்மன் புற்றுமண்ணால் ஆன சுயம்பு வடிவம். அம்மனைக் காணக் கண்கோடி வேண்டும். அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. 5 வருடத்துக்கு ஒரு முறை, ஒரு மண்டலத்துக்கு தைலக்காப்பு சாத்தப்படுகிறது. இந்த நேரத்தில் வெண் திரையில் அம்மனை வரைந்து அதற்கு ஆவாகனம் செய்து அர்ச்சனைகளும் ஆராதனைகளும் செய்வார்களாம். இந்த நேரத்தில் மூலவரான மாரியம்மனுக்கு இரு வேளைகளும் தைலக்காப்பு, புனுகுச் சட்டம் சாத்தப்படுகிறது. இந்த நேரத்தில் அம்மன் உக்கிரமாக இருப்பாராம். அதனால் இளநீர் போன்றவை நைவேத்தியம் செய்யப்படுகிறது.

முத்துமாரியம்மன் சன்னதி அருகில், துர்க்கை அம்மனுக்குத் தனி சன்னதி உள்ளது. இரு அம்மன்களும், அருகருகே எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பு. அம்பாள் சன்னதியின் வலப்புறம் பேச்சியம்மன் சன்னதி உள்ளது. கோயிலின் உள்ளே ஒரு குளமும், வெளியே ஒரு குளமும் உள்ளன.

அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் பிராத்தனைக்காக இங்கு தங்கியிருந்து குணமடைந்து செல்கின்றனர். 

கோவிலில் தண்ணீர்த் தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. குடம் குடமாகத் தண்ணீரைக் கொண்டு வந்து இதில் கொட்டுகிறார்கள். இதனால் அம்மனின் உக்கிரம் தணியுமாம். கோடைக் காலங்களில் அம்மனின் முகத்திலும் சிரசிலும் முத்து முத்தாக வியர்க்குமாம்.


இந்த கோவிலின் உற்சவ மூர்த்திக்கும், விஷ்ணு துர்க்கைக்கும் தினந்தோறும் அபிஷேகம் நடைபெறுகிறது. சுற்று சன்னிதிகளாக காத்தவராயன், பேச்சியம்மன், அய்யனார், விநாயகர், முருகன் சன்னிதிகள் உள்ளன.

ஆங்கிலேய துரைகளுக்கும் தன் சக்தியை காட்டியிருக்கிறார். மராட்டிய காலத்தில் “ரெசிடெண்ட்” என்ற ஆங்கிலேய துரை அம்மனுக்கு அடிபணிந்ததாக வரலாறு கூறுகிறது.

இங்கு திருவிழாவென்று பார்த்தால் ஆடி மாதம் முத்து பல்லக்கு, ஆவணி மாதத்தில் கடைசி ஞாயிற்றுகிழமை தேரோட்டம், புரட்டாசி மாதம் தெப்போற்சவம், மற்றும் நவராத்திரி என்று வெகு விமர்சையாக கொண்டாடப் படுகிறது.











சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்ட காலத்தில், மகா மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் மற்றும் இரண்டாவது பெரிய சுற்றுச்சுவர் கட்டி பெரும் திருப்பணி செய்யப்பட்டது. மராட்டிய மன்னரான சிவாஜி இக்கோயிலுக்கு 3வது திருச்சுற்றும், ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் கட்டி கொடுத்துள்ளனர்.

ஆய்வு : திரு. பரத் கூழாக்கியார்