புதன், 28 மார்ச், 2018

மாமனிதர் ராவ்பகதூர் வை.பு.வையாபுரி அம்பலம்


மேலூர் 18 பட்டி பெரிய அம்பலகாரர் வெள்ளனாயகம்பட்டி ( கூத்தப்பன்பட்டி) வை.பு.வையாபுரி அம்பலம். மேலூர் கிராம முன்சீப் ஆக பதவி வகித்தவர்.


முல்லைப்பெரியாறு அணைக்காக பென்னிகுக் அவர்களிடம் அன்றைய காலகட்டத்தில் 3லட்சரூபாய் நிதிவசூலித்து கொடுத்து மேலூர் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தினார்.

பெரியாறு அணைத்திட்டத்திற்கு பெரும் நிதிதிரட்டி அளித்ததற்காகவும் ,அத்திட்டம் மேலூர் பகுதியில் முறையாக அமுல்படுத்தப்படுவதற்கு எல்லாவிதமான நடைமுறை ஒத்துழைப்பும் வழங்கியதையும் பாராட்டி அன்றைய வெள்ளைய அரசு அவருக்கு ராவ் பகதூர் பட்டமளித்து பாராட்டியது.

சிடி ஆக்ட் என்னும் குற்றபரம்பரை சட்டம் நாடு முழுவதும் பிரகடனம் செய்யப்பட்ட வேளையில் மேலூர் பகுதியிலும் பிரகடனம் செய்யப்பட்டது .

குற்றப்பரம்பரைச் சட்டம் மேலூர் பகுதி கள்ளர்கள் மீது திணிக்கக்கூடாது என வழக்கறிஞர் நாவினிப்பட்டி நல்லமணி அம்பலம் அவர்களுடன் இணைந்து அதை எதிர்த்து லண்டனில் வழக்கு தொடுத்தார்.

அந்த மனுவில் உங்களால் ராவ்பகதூர் பட்டம் வழங்கப்பட்ட என் சாதி மக்கள் எப்படி குற்றபரம்பரை ஆயினர், எங்கள் மீது ஏன் இந்த அடக்கு முறை, மேலூர் பகுதியில் விபரிதம் ஏதும் நடந்தால் நானே பொறுப்பு என்று வழக்கு கொடுத்தார் .வெள்ளைய அதிகாரிகளிடம் வாதிட்டு கொடுஞ்சட்டத்திலிருந்து மக்களை காத்தார்.

அந்த வழக்கில் வெற்றியும் கண்டார், மேலூர் பகுதியில் சிடி ஆக்டையும் ஒழித்தார் . இன்று பலரது நினைவில் அவர் இல்லை என்பதே வருத்தம்.

ஐயா வையாபுரி அம்பலம் தாழ்பட்டோருக்கு சொத்துக்களை தானமளித்தது . 

1966 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட வருடம். கல்வெட்டில் பதிவான 1966 ஆல் வழங்கப்படவில்லை, அது 1954 ஆம், ஆண்டிற்கு முன்பு வழங்கப்பட்டது என்பதுடன் அதே சமுதாயத்திற்கு போஸ் கலப்பை கம்பெனிக்கு அருகில், 54 சென்டு கல்யாண மண்டபமும் திரு.வையாபுரி அம்பலம் அவர்களால் வழங்கப்பட்டது.


மேலும் The Gandhian Techniques for the Liberation of the Weaker Sections, Sarvodaya Ilakkiya Pannai, 1987 என்ற நூலில்

Rao Sahib Vaiyapuri Ambalam ' ' donated the site for the boys' Hostel, “Gandhi Manavar //lam' and the Girls' Hostel, Kasturiba Manavar ///am' was developed stage by stage with the efforts of the Harijan Sevak Sangh.


தனது சொந்த கட்டிடத்தை அரசாங்க அலுவலகம் செயல்பட தானமாக வழங்கினார் அது இன்றும் மேலூர் பேருந்து நிலையம் எதிரே கிராம நிர்வாக அதிகாரி அலுவலகமாக செயல்பட்டு இந்த மாமனிதனின் நினைவுச்சின்னமாக நிலைத்து நிற்கின்றது.

நன்றி: உயர்திரு. குழந்தைவேலு சோழகர்