செவ்வாய், 10 ஏப்ரல், 2018

வாணதிராயர் வரலாறு / வாணாதிராயர் வரலாறு / வாணதிரையர் வரலாறு

வாணர் வரலாறு : வாணகோவரையன் வரலாறு : வாணதிரையர் வரலாறு : வாணாதிராயர் வரலாறு 

"வாணதிராயர்கள் பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தில் குறுநிலத் தலைவர்களாகவும், அரச அதிகாரிகளாகவும் இருந்துள்ளனர். பாண்டியர் வீழ்ச்சிக்குப் பின் விசயநகர மற்றும் நாயக்க மன்னர்களுக்குக் கீழ், மதுரை கள்ள அழகர் கோயில் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு தனிஅரசு நடத்தியுள்ளனர். இவர்களின் கல்வெட்டுகள் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளன. இவர்கள் வைணவ மதத்தைப் பின்பற்றியவர்கள்.


மூன்றாம் குலோத்துங்கன் பாண்டியரை வெற்றி பெற உதவிய வாணாதிராயர் ஒருவனை பாண்டியன் என பெயர் கொடுத்து பாண்டியர் பட்டத்தை சூட்டினான்.

மாறவர்மன் சுந்தர பாண்டியன் தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்தி சோழமன்னன் முடியை பறித்து முதலில் ஒரு வாணாதிராயருக்கு சூட்டி மகிழ்ந்தான்.

இப்படி புகழ்பெற்ற வாணாதிராயர் வழி வந்த கள்ளர் மரபினர் வாழும் பகுதிகள்



Census of India 1951

வாணாதிராயர் - கள்ளர்


தமிழ் நாட்டின் - யார் விடுதலைப் போராளிகள் - WHOS WHO OF FREEDOM FIGHTERS - TAMIL NADU என்ற நூலில்  

Freedom Fighters of Kallar - கள்ளர் மரபை சேர்ந்த வாணதிராயர்





வாணாதிராயன் குடிகாடு:- தஞ்சாவூர் மாவட்டம்,  மதுக்கூர் வட்டத்தில் மதுக்கூர் வடக்கு ஊராட்சியில்  உள்ள வாணாதிராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

வாணாதிராயன்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டத்தில் வாணாதிராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

வாணவராயன்குடி :- திருவையாறு வட்டம் வாணவராயன்குடி, வாணாதிராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

மேலும் வாணதிராயர் பட்டமுடைய கள்ளர்கள் 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, கண்ணந்தங்குடி, வலங்கைமான், அம்மாபேட்டை, பைங்காநாடு 

திருவையாறு வட்டம் திருச்சினம் பூண்டி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கல்விகுடி,  

திருச்சி மாவட்டம் துவாக்குடி, அரியமங்கலம்

பட்டுக்கோட்டை வட்டம் பட்டுக்கோட்டை, அணைக்காடு

கும்பகோணம் வட்டம் சாக்கோட்டை முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

கள்ளர் குடியில் 20 ஆம் நூற்றாண்டில் சிறப்போடும் புகழோடும் வாழ்ந்த தஞ்சை பகுதியின் பகுத்தறிவு சிங்கம் பட்டுக்கோட்டை டேவிஸ் வாணாதிராயர்




வாணாதிராயர் என்ற மாவலிவாணாதிராயர் சேவித்துத் தம்முடைய பிறந்த நாளின்போது வழிபாட்டுக்காக வெட்டுமாவலி வாணாதிராயர் சந்தி ஏற்படுத்தினார்.  வாணாதிராயர் மற்றும் மாவலியர் வழி வந்த கள்ளர் மரபினர் இன்றும் வாழ்ந்த வருகின்றனர்.





வாணாதிரயர், மாவாலியார்







பஞ்சவராயர்









வடக்கே பாலாற்றுக்கரையில் ஆண்டோர் வாணாதிராயர் என்னும் மன்னர்களாவர். இங்கு வாணாதிராயன் பட்டினம் என்றோர் ஊரும் உண்டு. மாபலிச் சக்கரவர்த்தி வழி வந்தவர்கள் என்று வாணாதிராயர்கள் கூறிக்கொண்டார்கள்.

இவர்கள் பாணர் என்றும் வாணர் என்றும் அழைக்கப்பட்டனர். சங்காலம் தொட்டு பதினேழாம் நூற்றாண்டு வரை நீண்ட நெடிய வரலாறு உடையவர்கள் வாணாதிராயர்கள். அதே போல் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் சங்காலம் தொட்டு இருபதாம் நூற்றாண்டு வரை நீண்ட நெடிய வரலாறு உடையவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கவர்கள்.

வாணாதிராயர், தொண்டைமான் மன்னர்களின் வீரம், நிர்வாக திறமையும், குலமரபும் இவர்களது ஆதரவை புறக்கணிக்க இயலாதவாறு பல பேரரசுகளால் ஏற்றுக்கொள்ளப்பெற்று வந்த்தும் இவர்களின் நீண்ட வாழ்விற்கு மற்றொரு முக்கிய காரணம்.


ஊர்க்காவல் வாணாதிராயர்‌ குடும்பம்‌

திருமயம்‌ வட்டம்‌, காரையூர்‌, சுந்தரராஜ.ப்‌ பெருமாள்‌ கோயிலில்‌ உள்ள கி.பி.1472அஆம்‌ ஆண்டு விருபாக்‌ஷ மன்னர்‌ காலக்‌ கல்வெட்டில்‌ அங்கிருந்த  ஊர்க்காவல்புரிய நன்கொடையாக வழங்கப்பட்ட பல உரிமைகளில்‌ அவர்கள்‌ வெளியே செல்ல (பல்லக்கு, தேர்‌) ஏறும்போதும்‌, இறங்கும்போதும்‌ ஏறச்சங்கு, இறங்கச்சங்கு அளதிக்கொள்வதற்கு உரிமை வழங்கப்பட்டதிலிருந்து சங்கூதுதலுக்கு மேல்நிலைக்‌ குடியினர்‌ அளித்த முக்கியத்துவத்தை அறியலாம்‌.


சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே  பிராமணக்குறிச்சியில் உள்ள கல்வெட்டில் “சுந்தரதோள் மகவலி வணதராயர் தன்மம் அனகுறிச்சி அகிராகரம்” என எழுதப்பட்டுள்ளது. அதன் மேல் கமண்டலமும், திரிதண்டமும் கோட்டுருவங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. வாணதிராயர் குலத்தைச் சேர்ந்த மன்னர் சுந்தரதோள் மகாவலி வாணதிராயர், கி.பி.15-ம் நூற்றாண்டில், அனகுறிச்சியில் பிராமணர்களுக்கு தானமாக அக்ரகாரம் அமைத்துக் கொடுத்துள்ளதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. 






மாவலி மகாராஜாவின் வம்சத் தில் வந்தவர்களாக அறியப்படும் வாணகோவரையர்கள் 11-ம் நூற் றாண்டு முதல் 15-ம் நூற்றாண்டு வரை சேலம் மாவட்டம், ஆறக ளூரை தலைநகராக கொண்ட, ‘மகதை’ நாட்டை ஆண்டுவந்தனர் என்பது வரலாறு சொல்லும் செய்தி.


இவர்களின் முன்னோர் மாவலி மன்னரைப் பற்றி ஒரு புராணக் கதை கூறப்படுகிறது. முன் ஜென்மத்தில் ஒரு சிவாலயத்தில் ஒரு விளக்கு அணையாமல் இருக்க திரியை ஒரு எலி தூண்டி விட்டுக்கொண்டிருந்தது. அதன் பலனாக மறு ஜென்மத்தில் அந்த எலி மாவலி மன்னராக அவதரித்ததாகக் கூறப்படுகிறது.

மாவலியின் வம்சத்தில் வந்த வாணகோவரையர்கள் தங்கள் குலச் சின்னமாக எலியை ஏற்றுக் கொண்டனர். அந்தச் சின்னமே கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன.

வாணகோவரையர்கள் இந்தப் பகுதியில் இருந்த வன்னெஞ்சம் செய்வார் பிள்ளையார் கோயிலுக்கு செய்த நிலதானத் தைப் பற்றி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள்

வாணக்கோவரையர், வாணாதிராயர், வாணாதிராசர், மகதேசன், மகதேசநாயணார் என்றும் அழைக்கப்பட்டனர்.

பாலியார், பால்நாட்டார், பாலாண்டார், மாவாலியார், வாணதரையர், வாணதிரையர், வாணாதிராயர், வீணாதிரியர் என்னும் கள்ளர் பட்டப்பெயர்கள் வாணர்களுக்கு உரியன.

மாவலியார் :- மாவலியார் என்ற பட்டமுடைய கள்ளர்கள் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் அன்பில், பொதகரை (பொதையேரி பேச்சு வழக்கு) ஆகிய ஊர்களில் உள்ளனர்.

பாலாண்டார்களம் :- புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோயில் வட்டத்தில் புலியூர் ஊராட்சியில் பாலாண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

பாலாண்டம்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம்,  பாலாண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

மாதைராயர், மாதையாண்டார், மாத்துராயர், மாந்தரையர் என்னும் கள்ளர் பட்டப்பெயர்கள் மகதை நாட்டோடு தொடர்புபடுத்துகின்றன.

புதுக்கோட்டை பகுதி பட்டமானங்காத்த மண்டலம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. 

பட்டமானங்காத்தான் என்பது வாணதிராயரின் பட்டப்பெயராகும். கள்ளர் பட்டப்பெயரான மாணாங்காத்தான் இப்பட்டம் வாணதிராயரின் பட்டமானங்காத்தான் என்பதோடு ஒப்புநோக்கதக்கதாகும். 

சங்ககாலம் முதல் ஏறத்தாழ பதினேழாம் நூற்றாண்டுவரை தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப்பெற்ற வாணர்களுக்கும் கள்ளர் மரபினருக்கும் இடையே அமைந்த உறவினை அவர்களின் பட்டப்பெயர்கள் சில உணர்த்துகின்றன.

சோழர் கல்வெட்டுகளில் சோழநாட்டுக்கும் வாணவர்களுக்கும் இடையே நிலவிய நெருங்கிய உறவு தெளிவாக புலப்படுகிறது.

இப்பட்டப்பெயருடைய கள்ளர்கள் இன்றும் வாழ்ந்து வருவது இவ்வறலாற்றின் எச்சமாகும்.


வரலாற்றில் வாணாதிராயர்கள்

சங்க இலக்கியத்தில் முக்கிய நூலான பத்துப்பாட்டில் வாணரைப் பற்றி

“தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும்
பழிநமக் கெழு வெண்ணாய் விழுநிதி” (அடி 202 – 204 மதுரைகாஞ்சி)
– எனக் குறிப்பிடுகிறது.

உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பொருள் கூறும்போது “தென்திசை நிலத்தின் மலைகளெல்லாம் நிறையும்படி வாணன் என்னும் சூரன் வைத்தப் பொருள் திரள்” என்று வாணனை சிறப்பித்துக் கூறுகின்றார்.

வித்தியாதரரும் விஞ்சையரும் ஒரே குழுவினராவர் எனத் தெளிவாகிறது. வாணன் ஆயிரம் கைகள் கொண்டு சிவபெருமான் நடனத்திற்கு குடமுழா வாசிப்பவனாகக் குறிக்கப்படுகிறான்.

விஞ்சிராயர் மரபினர் கள்ளர்குடியில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். கள்ளர்குடியில் பேராசிரியர் சந்திரமோகன் விஞ்சிராயர் சிறப்பு பெற்றவர்.

வாண அரசர்களில் வாண வித்தியாதரன் எனவும் வாண விச்சாதர பிரபுமேரு என்று தங்களைக் குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள்.

விக்கரம சோழனின் 4ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டில் வாணகோவரையன் வேண்டுகோளின்படி எலவானரூர் அருகில் மலைய விச்சாதிரி நல்லூர் என்ற ஊரை ஏற்படுத்தியுள்ளான்.

விக்கரம சோழனின் 6ஆம் ஆட்சி ஆண்டில் விருதராஜப பயங்கர வாண கோவரையன் வாணவிச்சாதிரி நல்லூரிலுள்ள முடிகொண்ட சோழ ஈச்சரமுடைய மாதவருக்கு திருப்பணி செய்துள்ளான்.

வாணர்களும் தாய் தெய்வ வழிபாடும் 


கள்ளர்களின் 
கொற்றவை வழிப்படே, இவர்களின் வழிப்பாடாகவும் உள்ளது. (விந்த அணங்கு) அரிகேசரி பராக்கிரம பாண்டியன் கல்வெட்டில் (கி.பி.1442 முதல் கி.பி.1463 வரை ஆட்சி செய்த அரசன்)

“அணிகொண்ட விந்த வணங்குமொன றேஅடியேற்குணக்கும்
மணி கொண்ட வாசற் பணியும் ஒன் றேபகை மன்னரையும்”

– என்று குறிப்பதை பொருள் விளக்கம்தரும் வித்துவான் வை.சுந்தரேசவாண்டையார் அவர்கள் விந்த அணங்கு என்பது வெற்றித் தெய்வமாகிய கொற்றவை என்று கூறுகின்றார்.

பாகவதத்தில் வாணன் தாய் கொட்டார எனக் கூறப்படுகின்றாள். இவள் கொற்றவை எனப்படும் தெய்வம்.

வாணர்களும் தலைநகரமும்

மகாபலிவாணர்களின் தொடக்கக்கால ஆட்சிப் பகுதி தக்காணமே எனலாம். விந்திய மலையை யட்டித் தெற்கே அமைந்துள்ள மலைத் தொடர் மாவால் என்றும் மாவாள எனவும் சாதவாகனர் கல்வெட்டுகளில் கி.பி.முதல் நூற்றாண்டில் கூறப்பட்டுள்ளது. (Early History of Andhradesa) இப்பகுதி பழங்குடிகள் மாவலியர் என்று அழைக்கப்பட்டனர் என மராட்டியர் வரலாற்று நூல்களால அறியலாம். எனவே வாணர்களின் பூர்வீகம் மாவால மலைத்தொடரும் தக்காணமும் எனக் கொள்ளலாம். இத்தகைய தோற்றத்தின் காலம் கி.மு.முதலாயிரம் ஆண்டுகளாக இருக்கலாம்.

கணிமங்களைப் பிரித்தெடுக்கும் முறை இவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இக்கருத்தை உறுதி செய்வது போல் அதிவீரராம பாண்டியர் இயற்றிய கூர்ம புராணத்தில் வாணன் தன் மகள் உசைக்குச் செம்பொன் கொடுத்ததாகக் கூறுகிறது. விஞ்சையும் பெருமலை விளங்கொளி வெள்ளி என்ற பெருங்கதைக் குறிப்பையும் இத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.

செம்பியன் மகாபலி வாணன் எனப்படும் சங்க அரசன் இரண்டாம் பிரிதிவிபதியின் தலைநகரம் பரிகிபுரமாகும்.

முதல் ராஜராஜன் காலத்து அரசியல் அதிகாரியான மறவந்தர சிம்மகபன்மனான ரஜ்ஜ ராஜ வாணகோவரையர் தலைநகர் பரிவைபுரமாகும்.

பரிவை, பரிவிபுரி, பரிஜிபுரம் என்பது வாணர்களின் தலைநகரமாக இருந்துள்ளது. பரிஜி என்பதற்கு இரும்பாலான துண்டு என்ற் அபொருள் வடமொழி அகராதியில் காணப்படுகின்றது.

வாணர்களும் கோபுரமும்

‘வாணன் பேரூர் மறுகிடை நாந்து நீணில் மளந்தோணாடிய’ (சிலம்பு 6 45-5)

‘வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி

நிணில மளந்தோன் மகன் முன்னாடிய’ (மணி:3:12:4)

வாணன் பேரூர் என்பது சோ நகரமாகும். சோப்பூரு என்று கல்வெட்டில் குறிப்பிடப்படக் கூடியது தொப்பூர், சேலம் தர்மபுரி மாவட்ட எல்லைகளில் உள்ளது. இது ஒரு பெருங்கற்கால புதைகுழி உள்ள ஊராகும்.

ஏகம்ப வாணன்

திருக்கோவலூர் பகுதியில் ஆற்றுார் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன் ஏகம்பவாணன். ஆற்றுார் ஆறை' எனவும் மருவி வழங்கும். வாணன் இலக்கியங்களில், ஆறையர்கோன், ஆறைநகர் காவலன், ஆறை ஏகம்பவாணன் என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ளான். கொடை மறமும் படை மறமும் ஒரு சேரமிக்குத் திகழ்ந்தான். சோற்றுக்கு அரிசி கேட்ட புலவர் ஒருவர்க்கு இவன் யானையைக் கொடுத்தானாம்.

இதனைப் பெருந்தொகையிலுள்ள
“சேற்றுக் கமலவயல் தென்னாறை வாணனையான்
சோற்றுக் கரிசிதரச் சொன்னக்கால் - வேற்றுக்
களிக்குமா வைத்தந்தான் கற்றவர்க்குச் செம்பொன்
அளிக்குமா றெல்வா றவன்

சிற்றரசர் பலரேயன்றி, முடியுடைப் பேரரசராய சேர சோழ பாண்டியரும் இவ் வாணனுக்கு அடங்கியிருந்தனர்.

ஆறைநகர் காவலனாகிய வாணன் 'மகதேசன்’ எனச் சுட்டப்பட்டுள்ளான். மகத+ஈசன்=மகதேசன். அஃதாவது மகதநாட்டின் தலைவன் மகதேசன் என்பது பொருளாம். எனவே வாணர் ஆண்ட பகுதிக்கு மகதநாடு’ என்னும் பெயர் உண்மை புலப்படும்.

முதலாம் பராந்தகனுக்கு உதவியாக இருந்த இரண்டாம் பிரிதிவிபதிக்கு அவன் வாணர்களின் தலைவன் என்பதால் செம்பியன் மாவலி வாணாதிராயன் என்னும் வீர விருது வழங்கப்பட்டது. 

சுத்தமலிவளநாடு முடிச்சோணாடு திருஇரும்பூளை என்கின்ற தஞ்சாவூர் ஆலங்குடி (குரு ஸ்தலம்) கோயிலின் இரண்டாம் பிராகாரத்தைக் கட்டுவித்தவர் வாணாதிராயர் என்கிற இராசேந்திரக் கொத்தமங்கல நாடாள்வார்.

பாலையூர் உடையான் சந்திரசேகர வீதி விடங்கனான குலோத்துங்க சோழ மாவலி வாணாதிராயன்

இராசாதிராசன் (கி.பி. 1018 - 1054) சேனாபதி இராசேந்திர சோழ மாவலி வாணராயர் என்பவன் ஒருவன்.

நடுகல்லில் வாணாதிராயர்

தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் புளியனூர் - 6 ஆம் நூற்றாண்டு.

கோவிசைய சிங்கவிண்ண பருமற் / குப் பத்தொன்பதாவது மேல் வேண்ணா / ட்டுச் சிறுப்பாழாளும் பாலாயிரியரு மக்கள் / சிறுப்படுவாணாரு கருங்காலிப்பாடித் / தொறுக் கொளப் பூசல் சென்று புய / நாட்டுப் பில(யாசதங்)கள் / எறிந்து பட்டான்

சிம்மவிஷ்ணுவின் பத்தொன்பதாம் ஆட்சி ஆண்டில் (565 CE) அவன் ஆட்சிக்கு உட்பட்ட மேல் வேணாட்டுப் பகுதியின் சிறுப்பாழ் எனும் ஊரை ஆளுகின்ற வேள் பாலாசிரியன் என்பானிடத்தில் 'மகன்' எனும் அதிகாரப் பொறுப்பு பெற்ற படைத்தலைவன் அல்லது மகன் சிறுப்படுவாண் என்பவன் கருங்காலிப்பாடியின் ஆநிரைகளைக் கவர்ந்து வரப் பூசல் மேற்கொள்ளச் சென்ற போது புயநாட்டைச் சேர்ந்த பிலயா சதங்கன் அவனை எதிர்த்துத் வென்றிடவே அப்பூசலில் வீர சாவு எய்தினான்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கொட்டையூரில் அமைந்த நடுகல் - 7 ஆம் நூற்றாண்டு.

கோவிசைய ம / சீந்திரபருமற்கு / முப்பத்து மூன்றாவது / வாணகோ அரைசரு மரும / க்கள் பொன்னரம்பனார் / மேல் வாணகோ அரைசரு மரு / மக்கள் கந்தவிண்ணனா / ர் வேல்மறுத்திச் சென்ற ஞா / ன்று கந்தவிண்ணனா / ர் தஞ்சிற்றப்பனார் பொ / ன்னி(தன்)னார் இளமகன் / பொங்கியார் மகன் கத் / தி எய்து பட்டான் கல்.

முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் முப்பத்து மூன்றாவது (623 CE) ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய வாண கோ அரசனிடம் 'மருமகன்' எனும் அதிகாரப் பொறுப்பில் உள்ள சிற்றரசன் பொன்னரம்பன் என்பான் மீது வாண கோ அரசனிடம் அதே 'மருமகன்' எனும் அதிகாரப் பொறுப்பில் உள்ள சிற்றரசன் கந்தவிண்ணன் என்பவன் அவனை எதிர்த்து வேல் கொண்டு போய் போர் செய்த போது அப் போரில் அக் கந்தவிண்ணனின் சிற்றப்பன் பொன்னிதன் என்பானுடைய இளையமகன் பொங்கி என்பவன் வழிவந்த பேரன் கத்திக் குத்துப் பட்டு வீர சாவடைந்ததன் நினைவில் அவனுக்கு நிறுவப்பட்ட நடுகல் என்பதே செய்தி.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கொட்டையூரில் நடுகல் - 7 ஆம் நூற்றாண்டு.

கோவிசைய மயேந்திரபருமற்கு / முப்பத்து மூன்றாவது வாணகோ அரைசரு / மருமக்களுட் பொணைமன்னார் மகன் / னார் பொன்னரம்பனார் இண்ணபந்த மகன்னார் கந்த (வி)ண்ணனார் வெலட்டு(ண்) / மேல்ச் சென்றெறிந்த ஞான்று / நல்ல / னாய் தி / ரிந்து ப / ட்டான் / கந்தவிண்ண / னார் (சேவக) / ன் புத / ண்டி மக்(க) / ள் - - - - / - - - - - / தனெத ம / - னாதன் / - - - -

முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் முப்பத்து மூன்றாம் (623 CE) ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய மன்னன் வாண கோ அரசனிடம் 'மருமகன்' எனும் அரசு அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசன் பொணை மன்னன் என்பவன் மகனான பொன்னரம்பன் என்பவன் மேல் வாண கோ அரசனிடம் அதே போல் 'மருமகன்' எனும் அரசு அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசன் இண்ணபந்தன் என்பவனின் மகன் கந்தவிண்ணன் என்பவன் போர் தொடுத்து அட்க்கடுக்கான வெற்றிகளைக் குவித்து போர்புரிந்து வரும் வேளையில் அந்தக் கந்தவிண்ணனின் படைத் தலைவனான புதண்டியின் மகன் - -தனெதம- -னாதன் என்பவன் போர்க்களத்தில் நற்பெயர் ஈட்டியபடி போர்மேல் செல்கையில் ஒரு கட்டத்தில் பகைவர் தாக்குதலில் வீர சாவு எய்தினான் என்ற மட்டில் கல்வெட்டு தெளிவாக உள்ளது. அடுத்து உள்ள நான்கு சிறு வரிச் செய்திகள் நடுகல்லில் சிதைந்து உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் எடுத்தனூர் - 7 ஆம் நூற்றாண்டு காலத்தது.

கோவிசைய / மயிந்திர பருமற்கு / முப்பத்து நான்காவது வாணகோ / அரைசரு மருமக்கள் பொற்றொக்கை / ஆர் இளமகன் கருந்தேவகத்தி தன் / னெருமைப் / புறத்தே வா / டி ப்பட்டா / ன் கல் / கோபால / ன்னென்னு / ந் நாய் ஒ / ரு கள்ள / னைக் கடித் / துக் காத்திரு / ந்தவாறு

முதலாம் மகேந்திரன் வர்மப் பல்லவனின் முப்பத்து நான்காவது (624 CE) ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கி ஆண்ட வாண அரசனிடம் 'மருமகன்' எனும் அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசன் பொற்றொக்கை என்பானின் இளைய மகன் அல்லது இளம்வீரன் கருந்தேவகத்தி என்பவன் தன் எருமை நிரைகளைப் பகைவரிடம் இருந்து மீட்கும் கால் பகைவரின் தாக்குதலில் தோல்வியுற்று தன் எருமைக்குப் புறத்தே உயிர் நீத்து வீர சாவடைந்து வீழ்ந்திருந்தான். அந்த எருமை நிரைகளைக் கவர வந்திருந்த கள்ளருள் இருவரைக் கருந்தேவகத்தியின் கோபாலன் எனும் பெயருடைய நாய் கடித்துத் துரத்தி எருமை நிரையைக் காத்து நின்றது என்பதனை நடுகல் குறிப்பு தருகின்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் சே. கூடலூரில் - 7 ஆம் நூற்றாண்டு.

கோவிசை / ய மஇந்திர பரு / மற்கு முப்பத்தெட்டா / வது வாணகோஅரைசரு மரு / மக்கள் கந்தவிண்ண / னார் கூடல் தொறுக் கொண்ட / ஞான்று தொறு இடுவித்துப் பட்டா / ன் பொன்னரம்பனார் கொல்லகச் / சேவகன் காகண்டி அண்ணாவன் கல் / கூடல் இள மக்கள் நடு / வித்த கல்.

முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் முப்பதெட்டாவது (628 CE) ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கி ஆண்ட வாண அரசனிடன் 'மருமகன்' எனும் அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசன் கந்தவிண்ணன் என்பவன் கூடல் எனும் கூடலூர் ஆநிரைகளைக் கவர்ந்து சென்ற போது பொன்னரம்பன் என்பவனின் கருவூலக் காவற்தலைவன் காகண்டி அண்ணாவன் என்பான் கவரப்பட்ட ஆநிரைகளை மீட்டுப் போரில் வீர சாவடைந்தான் என்பதை நினைவூட்டும் நடுகல். அந் நடுகல்லை கூடல் ஊரைச் சேர்ந்த இள மறவர்கள் நடுவித்தனர் என்ற செய்தியும் உள்ளது. இது மகேந்திர வர்மனின் 33 ஆம் ஆண்டு கொட்டையூர் நடுகல்லில் குறிக்கப்பிடும் சிற்றரசரொடு தொடர்புடைய செய்தி.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் சாத்தனூர் - 7 ஆம் நூற்றாண்டு

கோவிசைய மசீந்திரபரு / மற்கு முப்பத்தொன்பதாவது / வாணகோ அரைசரு மருமக்கள் பொ / ற்றொக்கையார் சருக்கிருந்த ஊர் போ / ந்தை மேற் சக்கரவரு படை வந்த ஞா / ன்று ணாக்கையார் இளமகன் வத்தாவ / ன் மகன் னந் / (தி எறி)ந்து பட்டா / ன் கல்

முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் முப்பத்தொன்பதாவது (629 CE) ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய வாண அரசனிடம் 'மருமகன்' எனும் அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசன் பொற்றொக்கை என்பான் தங்கி இருந்த ஊரான போந்தை மேல் சக்கரவன் படை வந்து தாக்கிய போது நாக்கை என்பான் இளையமகன் வத்தாவன் என்பானுடைய மகன் நந்தி என்பவன், இதாவது, நாக்கையின் பேரன் வெல்லப்பட்டு வீர சாவடைந்தான். அவன் நினைவாக எழுந்ததே இந் நடுகல்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தண்டராம்பட்டு - 7 ஆம் நூற்றாண்டு.

கோவிசைய நரை / சிங்கபருமற்கு யா / ண்டேழாவது மேற்கோவ / லூர் மேல் வாணகோ முத்தரைசர் நாடு பாவிய தஞ்சிற் / றப்படிகள் பொன்மாந்தனார் மேற் / வந்த ஞான்று பொன்மாந்தானார்க்காய்ப் பட்டா / ன் கடுவந்தையார் மகன் விற்சிதை கல் வாண / கோக்கடமர்

முதலாம் நரசிம்ம வர்மப் பல்லவனின் ஏழாம் ஆட்சி ஆண்டில் (637 CE) அவனுக்கு அடங்கிய வாணகோ முத்தரசன் தன் நாட்டு எல்லையைக் கடந்து முத்தரசனின் நாட்டுள் பரவிப் படர்ந்து அவன் நாட்டுப் பகுதிகளைக் கவர்ந்து தன் நாட்டு எல்லையை விரிவுபடுத்திய தன் சிற்றப்பன் பொன்மாந்தன் என்பவன் மேல் போர் செய்ய மேல் கோவலூர் நாட்டின் மேல் படை செலுத்திய போது பொன்மாந்தன் சார்பில் கடுவந்தை என்ற வேளின் மகன் அல்லது வீரன் விற்சிதை என்பவன் போரிட்டு வீர சாவடைந்தான். அவன் வீரத்தை நினைவு கொள்ளும் வகையில் எழுந்ததே இந் நடுகல். இக்கல்லை நிறுவியவன் வாணகோக் கடமன் என்று தெரிகின்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தண்டராம்பட்டு - 7 ஆம் நூற்றாண்டு.

கோவிசைய நரை / சிங்கபருமற்கு யா / ண்டேழாவது வாணகோ முத் / தரைசரு நாடு பாவிய மேற் கோ / வலூர் மேல் வந்து தஞ்சிற்றப் / படிகளை எறிந்த ஞான் / று பட்டான் சேவர்பரி அட்டுங் கொள் / ளி துருமா / வனார் மக / ன் மாற்கடலன்.

முதலாம் நரசிம்ம வர்மப் பல்லவனின் ஏழாம் (637 CE) ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கியவாணகோ முத்தரைசன் தன் நாட்டு எல்லைக்குள் வந்து தன் நாட்டுப் பகுதிகளில் தமது ஆட்சியை விரித்து நாடு கவர்ந்த மேல் கோவலூரில் வாழும் தன் சிற்றப்பன் (பொன்மாந்தன்) மீது படை கொண்டு வென்ற போது குதிரைப் படைவீரர்தம் குதிரைத் திரள் முழுமைக்கும் காவல் பொறுப்பு கொண்ட துருமாவன் என்பான் மகன் மாற்கடலன் அப்போரில் வீழ்ந்துபட்டு வீர சாவடைந்தான்.

சேலம் வட்டம் பள்ளத்தாண்டனூரில் - 7 ஆம் நூறறாண்டு.

கோவிசைய ஈச்சுர பருமற் / கு பன்னீராட்டைக் கெதிரா மா / ண்டு கொங்க பருமரையர் / நொன் கம்பூர் எரிந் / த ஞான்று பட்டான் வா / ண பெருமிள வரையர / ப்ப வாரத்தான் ம - / மக - ன்- கல்

ஈச்சுர வர்மனின் பதின்மூன்றாம் ஆட்சி ஆண்டில் கொங்கரான கங்க வேந்தன் நொன் கம்பூரைத் தாக்கி அழித்த போது வாண பெரும் இளவரையர் அப்ப வாரத்தான் என்பானின் மருமகன் பொறுப்பு அதிகாரியோ அல்லது அவன் மகனோ இறந்தான். அவன் நினைவில் நிறுவிய கல்.

தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் ஒட்டம்பாடி - 8 ஆம் நூற்றாண்டு.

சிவமார பருமர்க்கு யாண்டு யிருபத் / திரண்டாவது மாவலி வாணரயர் க / ங்க நாடாள இந்தரன் தகடூ / ர் மேல் வந்த ஞான்று மறவனா / ர் சேவகன் கண்ணனூருடைய கமிய / த் தழமன் பட்டான்

கங்கரான கொங்கணி அரசன் முதலாம் சிவமாறன் என்பான் தனி ஆட்சி செய்து வரும் இருபத்திரண்டாவது ஆட்சி (701 AD) ஆண்டில் அவனுக்கு அடங்கிய வாண அரசன் மாவலி வாணரயன் கங்க நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் வேளையில் இராட்டிரகூட மன்னன் இந்திரன் என்பவன் தகடூர் மீது படைநடத்தி வந்த போது தகடூரின் வேள் மறவன் என்பானுடைய படைத் தலைவன் கண்ணனூர் கமியத் தழமன் என்பான் வீர சாவு எய்தினான்.

வாணகோவரையன் சித்தவடத்தடிகள்

735 இரண்டாம் நந்திவர்மன் சிற்றரசனான மலையநாட்டு மன்னனாக வாணகோவரையன் சித்தவடத்தடிகள் ஆண்டிருந்தான்

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கைலாவரம் - 8 ஆம் நூற்றாண்டு.

ஸ்ரீ கட்டிணை பருமற்கு யாண்டு முப்பத்தே / ழாவது கந்தவாணதிஅரையர் புறமலை நாடாள அருட்டிறையர் தொறுக் கொண்ட ஞா / ன்று அமர நீலியார் சேவகர் / பையச்சாத்தனார் தொ / று மீட்டு / பட்டார் கல்

கங்கரான பிரிதி கொங்கண அரசர் கட்டிணை அல்லது கட்டாணை பருமர் (வர்மர்) பேரரசராக தனி ஆட்சி நடத்தி வந்துள்ளார். அவருடைய முப்பத்தேழாவது ஆட்சி (757 AD) ஆண்டில் அவருக்குக் கட்டுப்பட்ட வாண அரசன் கந்தவாண் அதிஅரையன் புறமலை நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் வேளையில் அருள் திறையன் என்பான் (இக்காலக் கைலாபுரப் பகுதியில்) ஆநிரைகளைக் கவர்ந்த பொழுது கைலாபுரப் பகுதியின் வேள் அமரநீலி என்பானுடைய படைவீரன் பையச்சாத்தன் என்பான் அவ் ஆநிரைகளை மீட்டான். அப்பூசலில் அவன் வீர சாவு எய்தியதன் நினைவில் நிறுவப்பட்ட நடுகல் என்பது செய்தி.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தா. வேளுர் - 9 ஆம் நூற்றாண்டு

ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிசைய கம்ப பருமற்கி யாண் / டெட்டாவது வயிர மேக வாணகோவரையரா / ளத் தகடூர் நாட்டுப் பாகாற்றூர்க் கதவ / மாதேவன் மகன் காளமன் மீய்கொன் / றைநாட்டு மேல் வேளூர் இருந்து வாழாநின்ற காலத் / து முருங்கைச் சேர்ந்ததன்ற மையனார் / மகளைக் கள்ளர் / பிடிகரந்துரந / று கொண்டய/ ந் அவளை விடு / வித்துக் தா / ன்பட்டான் கா / ளமன்.

கம்ப வர்மப் பல்லவனுடைய எட்டாம் ஆட்சி ஆண்டில் (877 CE) அவனுக்கு அடங்கிய வாண மன்னனான வயிரமேக வாணகோவரையன் தகடூர் நாட்டை ஆண்டு வரும் காலத்தில் இவனுடைய ஆட்சிப் பகுதியான மேல் கொன்றை நாட்டு உட்பிரிவான மேல் வேளூரில் தகடூர் நாட்டு பாகற்றூரைச் சேர்ந்த கதவமாதேவன் என்பவன் மகன் காளமன் வாழ்ந்து இருந்தான். இவன் தமையன் முருங்கு எனும் ஊரைச் சேர்ந்தவன். இவனுடைய மகளைக் கள்ளர் பிடித்து மறைத்து அச்சுறுத்த நறுமணம் கமழும் கொண்டயன் காளமன் போரிட்டு அவளை விடுவித்தான். அப்போரில் காளமன் வீர சாவு எய்தினான்.

விக்கிரமாதித்த வாணராயன் 

மூன்றாம் நந்திவர்மன்  கிபி 825 - 850 , 17 ஆம் ஆட்சி ஆண்டில் ஆண்ட மாவலி வாணராயன் என்ற விக்கிரமாதித்த வாணராயனுடைய கல்வெட்டொன்று காணப்படுகிறது.

முதலாம் ஆதித்த சோழ தேவர் காலத்தில்

முதலாம் ஆதித்த சோழரின் 19 ஆம் ஆட்சி காலத்தில் கிபி 890ல் வெட்டப்பட்டதாகும். ஆக இக்கல்வெட்டும் அண்ணாமலையார் கோவிலின் காலத்தால் முற்பட்ட கல்வெட்டு என்றால் அது மிகையாகாது. மேலும் இக்கல்வெட்டானது, ஏற்கனவே பதிவான கல்வெட்டால் அறிய இயலாத அக்காலத்திய வரலாற்றினில் சிறிது வெளிச்சமிட்டு காட்டுகிறது. இக்கல்வெட்டு மூலம், இன்றைய வேலூர் மாவட்டம் திருவல்லத்தை தலைநகராக கொண்டு முதலாம் ஆதித்தரின் கீழ்ஆட்சி புரிந்த குணமந்தன் குறும்ப கோலாலன் வைரமேகனூர்கொடுக்கன் என்ற வாணகோவரையர் வம்சத்தை சார்ந்த குறுநில மன்னர் இருபது பொன் கழஞ்சுகள் தானமாக கொடுத்த தகவல் தெரிய வருவதுடன், அக்காலத்தில் திருவண்ணாமலையானது திருவண்ணாநாடு எனவும், சதிர்வேதிமங்கலாமாக இருந்தது என்பதும் தெரிய வருகிறது.”

முதலாம் இராஜராஜ தேவரின் காலத்தில் வாணகோவரையன்

இராஜராஜன் I காலத்தில் நாராயணன் ஏகவீரன் ஒரு மண்டபம் கட்டினான். நல்லூருக்கு அப்போது பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற பேர் இருந்தது. வீர ராமநாதன் காலத்தில் அகோரவீரன் கோயிலுக்கு ஒரு பூதானம் செய்தான். விக்கிரம சிங்கதேவன் கோவிலுக்கு ஒரு நிலம் விற்றான். வாணகோவரையன் ஒரு விளக்குத் தானம்செய்தான்.

ராஜேந்திர சோழ தேவர் காலத்தில்

முதலாம் ராஜராஜனின் மகனான ராஜேந்திர சோழன் (கி.பி.1012-1044) 




“கோ ராச கேசரி மன்மர்கி யாண்டு ……ஆவது வாணகொவரையர் குணமந்தன் குறும்பகொலாலன் வயிரமெகனார் கொடுக்கன் சிற்றண்புலியூர் நாடன் திருவண்ணாநாட்டு தெவதாநப் பிரமதெயம் புவியூர் நாடி சதுர்வேதிமங்கலத்து எரிக்கு அறமாக குடுத்த பொன்முதல் இருபதின் கழஞ்சு துளை பொன் காற்ப விசையால் ஆட்டு ஐங்கழஞ்சு பொன் பங்கினி பட்டதலையா………..” 

முதலாம் இராசேந்திரன் காலத்தில் செம்பியன் மகாவலி வாணராயன் என்பவன் படைத்தலைவனாக விளங்கினான். அவன் இராசேந்திர சோழ மாவலி வாணாராயன் என்று அழைக்கப்பட்டதை அறியமுடிகிறது.

முதலாம் இராசாதிராசன் காலத்தில்

முதலாம் இராசாதிராசன் ( கி.பி. 1012 - கி.பி. 1044) தளபதிகளில் ஒருவனான இராசேந்திர சோழ மாவலி வாணராயன் புதுசேரி திருபுவனியில் கல்லூரி ஏற்படுத்த 72 வேலி நிலத்தை கொடையாக அளித்தான் .


* பாணாதிராசன் (11 ஆம் நூற்றாண்டு - அழகர்கோயில் கல்வெட்டு)


கி.பி.1124 ல் சுத்த மல்லனை வென்ற வாணகோவரையன் என்பவன் வானவிச்சாதர நல்லூர் இறைவர்க்கு நிலக்கொடை


* வாணாதிராசன் (12 ஆம் நூற்றாண்டு பாண்டியன் அதிகாரி)


* மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியில் 1178 - 1218


குலோத்துங்கன் காலத்தில் இம்மரபினர் இருவர் இருந்தனர். அவருள் ஒருவன் ‘ஏகவாசகன் குலோத்துங்க சோழ வாண கோ அரசன்’ என்பவன். இவன் கல்வெட்டுகள் சேலம், திருச்சிராப்பள்ளி, தஞ்சைக் கோட்டங்களில் அமைந்துள்ளன[27]. மற்றொரு தலைவன் ‘பொன்பரப்பினான் வாணகோவரையன்’ என்பவன். இவனைப் பற்றிய பாடல்கள் பல திருவண்ணாமலை முதலிய இடங்களில் உள்ள கோவில் கல்வெட்டுகளில் இருக்கின்றன[28]. அப்பாடல்கள் சிறந்த தமிழ்ப் புலவர் பாடியனவாகக் காண்கின்றன. எனவே, இச்சிற்றரசன், நல்ல தமிழ்ப் புலவர்களைப் பாராட்டி ஊக்கி வந்தான் என்பது தெளிவாகிறதன்றோ? இவன் திருவண்ணாமலைக்  கோவிலைப் பொன் வேய்ந்தமையால் ‘பொன் பரப்பினான்’ எனப் பெயர் பெற்றான். இவன் பாண்டிய தாட்டுப் போரில் ஈடுபட்டுச் சோழன் ஏவற்படி, பாணன் ஒருவனைப் பாண்டிய நாட்டிற்கு அரசனாக்கினன் என்ற செய்தி ஒரு பழம் பாடலால் தெரிகிறது[29]. இச் செயல் சோழன் செய்ததாக அவனது கல்வெட்டுக் குறிக்கிறது. எனவே, இச்செய்தி ஒரளவு உண்மை என்பது தெரிகிறது. இவனைப் பற்றிய கல்வெட்டுகள் இவன் மதுரையை வென்ற செய்தியையே மிகுதியாகக் குறிக்கின்றன.


* ஆற்றூருடையான் அரையன் ராஜ. ராஜ தேவனான வாணகோவரையன், தஞ்சாவூர் குடந்தை கல்வெட்டில் உடையார் ராஜராஜஷ்வரமுடையார் திருந்ந்தவனம் எனும் பெயரால் நந்தவனம் அமைத்தான்.



* இராசராசவாண கோவரையன் பொண்பரப்பினான் மகதைபெருமாள் 


* குலோத்துங்க சோழ வாணகோவரையர்


தெடாவூர் ஆற்றங்கரையில் இன்றும் பொழிவு குன்றாமல் சிறப்பாக விழங்கும் சிவன் கோவிலின் பெயர் ஏகாம்பரநாதசுவாமி கோவில். இதை கட்டியவர் மூன்றாம் குலோத்துங்க சோழன் என்றும், 1183-ம் ஆண்டு இதற்கு குடமுழுக்கு நடந்ததாகவும் இதன் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.


கோவில் மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர்கல்வெட்டுக்கள்


கி.பி.1183 ஆம் ஆண்டு இந்த ஏகாம்பரநாத சுவாமி கோவில் மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் குலோத்துங்க சோழ வாணகோவரையர், திருவேகம்பமுடைய நாயனார்க்கு பூசைக்கும், திருப்பணிக்கும், திருநாள் செலவுக்கும் நன்செய் நிலமும், புன்செய் நிலமும் கொடையாக அளித்த செய்தியை தெரிவிக்கிறது.


மூன்றாம் இராசராசன் காலத்தில் (கி.பி. 1216-1246)


இராசராசன் காலத்திற் சிறப்பு பெற்ற அரண்மனை ஆயிரத்தளியே ஆகும். தஞ்சை, உறையூர்களில் இருந்த அரண்மனைகள் சுந்தர பாண்டியனால் அழிவுண்டன. ஆயிரத்தளியும் ஒரளவு பாதிக்கப்பட்டது. இவனுக்கு இரு மனைவியர் இருந்தனர். அவருள் ஒருத்தி கோப்பெருந்தேவி வாணகோவரையன் மகள் ஆவள். இளையவள் ‘புவனம் முழுதுடையாள்’ எனப்பட்டாள்.


1.   ஸ்வஸ்திஸ்ரீ வாணகோவரையன் (ஓலை சிற்றகழி ஊரவர் கண்டு தங்களூரில்) இருபத்

2.   தெட்டாவது முதல் மகனார் சவுண்(ட)பர் நம(க்)கு நன்றாக வைத்த அ(கர)த்துக்குப்

3.   பேர் கொண்ட பட்டர்கள் இருபத்தொரு(வரு)க்கு த(ங்க)ளூரிலே ஒருவர்க்கு ஒரு (ம)னையும்  புன்

4.   செய் நிலத்திலே ஒருவருக்கு ஒன்(ற)ரையாக வ(ந்த) புன்செய் நிலம் முப்ப(த்)தொன்றரை

5.   யும் வைத்திய விருத்திக்கு ஒரு மனையும் பு(ன்)செய் நிலத்திலே ஒன்றரை நிலமும்

6.   (ஆகப்பேர் இருபத்திருவருக்கும் மனை இருபத்திரண்டும் புன்செய்) நிலம் முப்பத்திரு வே

7.   (லியும் இறையிலி ஆக இட்டோம். இந்நிலம் மகதேசன் கோலாலே அளந்து கொ)

8.   ண்டு நமக்கு நன்றாக சந்திராதித்த(வ)ரையும் இறையிலிஆக அனுபவிப்பார்களாகப்

9.   பண்ணுவதே. இவை வாணகோ(வ)ரையன் எழுத்து.

10. (இப்பட்டர்கள்) குடியிருக்

11. கிற மனைகளுக்கு நிலம் கா

12. லும் பாடிகாப்பானுள்

13. ளிட்டபணி செய் மக்களு

14. க்கு நிலம் காலும் ஆக நி

15. லம் முப்பத்திரு வேலியும்

16. சந்திராதித்தவரையும் இ

17. றையிலி ஆக விட்டோம்.

18. இந்நிலம் மகதேசன் கோலாலே அளந்து கொண்டு அனுபவிப்பார்களாகப் பண்ணவதே.

19. (கன்னட மொழியில் கையெழுத்து உள்ளது)


இடம்: பெரம்பலூர் வட்டம் சித்தளி கிராமம். வரதராஜபெருமாள் கோவில் மகாமண்டபம் தென்சுவரில் வெட்டப்பட்ட 19 வரி கல்வெட்டு.



விளக்கம்: மூன்றாம் இராசராசனுக்கு 28 ஆவது ஆட்சிஆண்டில் (1244 AD) அவனுக்கு அடிபணிந்து ஆட்சிபுரிந்த மூன்றாம் அதிகார நிலை அரையனான வாணகோவரையன் தனக்கு உடல்நலம் தேறவேண்டி அவனுக்குக் கீழ்படிந்த வீரனான சவுண்டபர் அகரம் வைக்கிறான். அந்த அகரத்தை செய்த இன்றைய சித்தளியான அன்றைய சிற்றகழி ஊர் பிராமணர் 21 பேருக்கும், ஒரு மருத்துவரின் வளர்ச்சிக்கும் ஆக 22 பேருக்கு பேர் ஒருவருக்கு ஒரு வீடும், 1-1/2 புன்செய் நிலமும் பெறும்படியாக 32 வேலி நிலமும் அரசவரி இன்றி வழங்கப்படுகின்றது. இந்நிலங்கள் மகதேசன் கோலால் அளந்து கொடுக்க ஏற்பாடானது. நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரை இப்படி நடக்கவேண்டும் என்று வாணகோவரையன் ஆணைஓலை வெளியிட்டான். வாணர் கோலார் பகுதியில் இருந்து வந்ததால் அவர் தாய்மொழி கன்னடம் என்பதால் இறுதியில் கன்னடத்தில் கையொப்பம் இட்டான்

பாண்டிய நாட்டில் வாணாதிராயர்

சோழர் வலுவிழந்த்தும் பாண்டியர் அதிகாரிகளாகவும், சிற்றரசர்களாகவும் இருந்தனர்.

மாவலிவாணாதிராயர்கள் கி.பி. பத்து, பதினோராவது நூற்றாண்டுகளில் சோழநாட்டில் இருந்து பாண்டிய நாட்டில் குடி புகுந்தவர்கள். பாண்டிய மேலாண்மையை ஏற்ற குறுநில மன்னர்களாகவும் விளங்கினர்.

இவர்கள் "மதுராபுரி நாயகர்", "பாண்டியகுலாந்தகர்" என்ற விருதுகளையும் பெற்று இருந்தனர்.

மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் (1216 - 1239)


* திருநட்டபெருமானான சுந்தரபாண்டிய வாணவதரையர் 


* வாணவதரையர் வழுதிநாராயணதேவர்


* சுந்தரபாண்டிய வாணவதரையன்



இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் ( 1238 - 1250)


* கங்கைகொண்டான் சுந்தரபாண்டிய வாணாதிராயன்


இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் ( 1239 - 1251) 


* அருளானன் சேவகத்தேவனான வாணாதிராசன்


* சீவளவன்மதுரைப் பெருமானாண வாணகோவரையன்


* திருவேங்கடத்துடையான் வாணாதிராயர்


இரணிய முற்றத்து ஆற்காட்டு ஊரினரான திருவேங்கடத்து உடையான் வாணாதிராயன் , அழகர் கோவிலிலும், பொன்னமராவதியிலும் திருப்பணிகளை செய்துள்ளனர்.


* மகாபலிவாணாதிராயர் 


முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் (1251 - 1271)


* அரசு புத்தன் சாமந்தன் வாணாதிராயன்


* அண்ணன் வாணாதிராசன்


* விக்கிரபாண்டிய வாணாதிராயர்


* பராக்கிம்பாண்டிய மாவலிவாணாதிராயர்


* தஞ்சைவாணன் (சந்தரவாணன்)


* வாணாதிராயர் சோலைமலைப்பெருமாள்


* கங்கைப்பிள்ளை அழகியபிள்ளை வாணாதிராயர்


* கங்கைகொண்டான் சூரியத்தேவன்


இளையாங்குடி, திருக்கோட்டியூர், திருகானப்பேர், துகவூர் கோவிலிலும் திருப்பணிகளை செய்துள்ளனர்.


* கெங்காதர வாணவராயர்


முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் (1268 - கி.பி 1311)


* கங்கைகொண்ட சூரியத் தேவன் வாணாதராயன் காலிங்கராயன்


* வாணவதரையர்


* வளத்தார் சுந்தரபாண்டிய வாணவதரையர்


* சுந்தரபாண்டியன் அதிகாரி வாணாதிராயர்


* அம்மன் மகாபலி வாணாதிராயர்


* பிள்ளை வாணகோவரையர்


* வாணாதிராசன்


* வாணவிச்சாதரன்


* உய்யவந்தானான விக்கிரசிங்கதேவன்


* வாணாதிராயன்


விஜயநகர ஆட்சியில்


விசயநகர வேந்தர்கள் காலத்தில் இவர்களின் சிறப்பு, சில சமயங்களில் பாண்டியரைக் காட்டினும் கூடியிருந்ததும் உண்டு. புதுக்கோட்டை, மதுரை, பழைய முகவை பகுதியில் விஜயநகர ஆட்சியில் சிற்றரசர்களாக இருந்தனர்.

அப்பொழுது, இவர்களுள் ஒருவன், தன்னைப் பற்றிச் செருக்குடையோனாகத் திகழக் காளமேகத்தின் நெஞ்சத்தின்கண் வேதனை பெருகுகின்றது.

புகழ்பெற்ற பாண்டியவரசை அழித்துப் 'பாண்டிய குலாந்தகன் என்ற விருதையும் சூடிக்கொண்ட வாணனை அவர் வெறுப்புடனேயே கருதுகின்றார். அவனை இகழ்ந்து சொல்லிய செய்யுள் இது. சொக்கன் மதுரையில் தொண்டர்க்கு முன்னவிழ்த்த பொய்க்குதிரை சண்டைக்குப் போமதோ-மிக்க கரசரணா வந்தக் கரும்புறத்தார்க் கெல்லாம் அரசரணா மாவலிவா னா! இதன்பாற் குறிப்பிடப்படும் வாணன் 'திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயன்' என்பர். மாவலிவாணனே.


சொக்கேசப்பெருமான், அந்நாளிலே தம் தொண்டரான வாதவூரடிகளின் பொருட்டாக, மதுரை நகரிற் கொண்டுவிட்ட பொய்க்குதிரைகள், போர்க்களத்திற்குப் போகக் கூடியவையோ? அவை போகாவன்றே! அது போலவே, பருத்த காலுங் கையுங்கொண்டு உருவால், பெரிதாக விளங்குபவனே! விலங்குகளைக் கொன்று அவற்றின் ஊனைத் தின்று திரியும் இழிதொழிலாளர்க்கு அரசனே நீதான் இந் நாட்டு மக்களைக் காத்துப் பேணுதற்கு ஏற்ற அரசாகிய அரணாவாயோ? 'நீ ஆக மாட்டாய்' என்பது கருத்து.


* வாணவன் சுந்தரன்


* திருமாலிருஞ்சோலைநின்றான் மாபலிவாணதிராயன் உறங்காவில்லிதாசனான சமரகோலாகலன் (1428 - 1477)


நாற்பத்தொன்பது ஆண்டுகள் திருமாலிருஞ்சோலையைத் (அழகர் கோயில்) தலைநகராகக் கொண்டு

மதுரைப்பகுதி பாண்டிமண்டலத்தை ஆண்டு வந்தான். இவனது ஆட்சிப்பரப்பு பாண்டி நாட்டில் தெற்கே  ஸ்ரீவில்லிபுத்தூர் வரைக்கும், வடக்கே புதுக்கோட்டை மாவட்டத்தை உள்ளடக்கியதாக இருந்தது.


* சுந்தரத்தோளுடையான் மகாபலி வாணதிராயன் (1468 - 1488)


விசுவநாத நாயக்கர் காலத்தில் (1529– 1564)


* இறந்தகாலம் எடுத்த சுந்தரத்தோளுடையான் மகாபலி வாணாதிராயன் (1515 - 1538)


* வலிவாணாதி மகாபலி வாணாதிராயர்


குமார கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில்  (1563 –1573 )


* மணலி வாணாதிராயன்


முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் (1602–1609)


* வாணாதிராயன்


* சுந்தரத் தோள் உடையார் மாவலி வாணாதிராயர்


* வாணதிராசன்