செவ்வாய், 2 மே, 2023

சோலைமலைக் கள்ளன் (மாயோன் - கள்ளர் அழகர் - கள்ளழகர் வரலாறு )



கள்ளழகர்


"ஆதி சுந்தரராசன் இந்திரகுல கள்ளரைப்போல"

- அழகர் வர்ணிப்பு ஒலைச்சுவடிகள் -
கிபி1690


திருமாலிருஞ்சோலை அழகர் கள்ளர் குல பக்தர்களின் தலைவன். இது க்ஷேத்ர மாஹாத்மியத்தில் சொல்லப்பட்டுள்ளकृ விஷயம்.

இதை ஸ்தல புராணம் – தக்ஷிண மதுரா மாஹாத்ம்யம்  கூறுகிறது.


उत्तर मधुरायास्तु  विद्यते वृषभाचल : |
तस्मिंश्चोरकुलस्यापि भगवानिष्टदैवतम् ||

பொருள்  : மதுரைக்கு வடபுறம் வ்ருஷபாசலம் என்ற சோலைமலை இருக்கிறதுष्ण.  அங்கு கள்ளர்களுக்கும் குலதெய்வமான அழகர் இருக்கிறார்.


श्री भगवानुवाच
चोरराजोSस्मि  भगवन् वसामि वृषभाचले |
नाम्ना सुन्दरबाहुश्च मृगयार्थिमिहाSSगमम् ||

பொருள் : “நான் கள்ளர்களின் தலைவன் ;  எனக்கு சுந்தரபாஹு என்று  பெயர் ; சோலை மலையில் வசிக்கிறேன் ; வேட்டையாடி இங்கு வந்தேன்.”  – இந்த வாக்கியங்களை  திருமாலிருஞ்சோலை அழகரே மண்டூக மஹர்ஷியிடம் சொல்லுவதாகकृ ஸ்தல புராணம் உரைக்கிறது.

இன்றும் திவ்ய தேசங்களில் ப்ரஹ்மோத்ஸவ பூர்த்தியின் போது, புராண படனம் என்று வாசிக்கிறார்கள். அதை ஒரு முறையாவதுपा  ஶ்ரவணம் செய்தால், ஆதி காலம் தொட்டு ஒரு திருக்கோவிலின் சரித்திரம் எப்படி வழங்கி வந்துள்ளது என்பது புரியவரும்.

திவ்ய பிரபந்தத்தில் ‘வஞ்சக் கள்வன் மாமாயன்’  பாசுரத்தைக் கொண்டு, சோலை மலை அர்ச்சக ஸ்வாமி  கள்ளர்களின்कृ வழிபாட்டுத் தொன்மையை நன்கு சாதித்துள்ளார்.

கள்ளர்குடி கலியன் தோன்றிய குலம். அந்த பக்த பக்தி கள்ளர் பக்தர்களிடம்  இயல்பாகவே இருக்கும். கடவுள் வளர்ந்த குலத்தோர்   போல்  தலைக் கனத்தோடு திரிய மாட்டார்கள்.


கள்ளழகர்  பற்றி மதுரை ஸ்ரீ. உ. வே. அரங்கராஜன் ஸ்வாமி அவர்களின் வார்த்தைகள் :

சித்திரா பௌர்ணமி உத்ஸவத்தில் சோலை மலை அழகரின் மேல் கள்ளர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பர். அவ்வாறு செய்யக் கூடாது என ஒரு வருடம் தடை உத்தரவு வாங்கினர் சிலர். அந்த வருடம்  அழகர் மேல் வேர்த்துச் சொட்டி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தது போல சேவை இருந்தது. இதை அர்ச்சக ஸ்வாமி எடுத்துச் சொல்ல, அந்தத் தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அழகர் அதை ஆசைப்படுகிறார் என்று தெரிந்தது.


வேத முழக்கத்தின் நடுவே வீதியார எம்பெருமான் வருவது  ஒரு அழகு என்றால் , மதுரையில் இன்று கள்ளர்கள் புடைசூழ சுந்தரத் தோளுடையானைக் காண்பது தனி அழகு.

எழுத்து : வைணவ ரத்னா வைணவத்திருமதி கிருஷ்ணக்ருபா அம்மங்கார் அவர்கள் எழுதியது

மிகப் பழமையான கோயில்களில் ஒன்று திருமாலிருஞ்சோலை எனும் அழகர் கோயில்.. ராசராசப் பாண்டிவளநாட்டு, ராஜேந்திர சோழவள நாட்டு கீழ் இரணிய முட்டத்து திருமாலிருஞ்சோலை என்கிறது ஒரு கல்வெட்டு.

அழகர் கோயில் ராசகோபுர வாயிலை தங்கள் கருப்பருக்கு உரியதாக்கிக் கொண்டதோடு, அழகர் சுந்தரராசப் பெருமாளையும் அழியா அழகுடைய வடிவில் தன் சாதிக்காரர் ஆக்கிக் கொண்டார்கள் போர்க்குடிக் கள்ளர்கள்.

ஸ்ரீ_கள்ளழகர்_கோயில்_வரலாறு





பதினெண்சித்தர்களில் மஹா மகுத்துவம் பொருந்திய போக முனிவர் திருவாய்மலர்ந்தருளிய சத்தகாண்டம் 7000  - பாடலில்


"அடலான வாய்கால்‌ மண்டபந்தான்‌ அழகான கள்ளழகர்‌ கோட்டைதானும்‌"

"பதியான பாறையின்மேல்‌ மகிமைமெத்த பாங்கான கோட்டையது கள்ளர்கோட்டை"








சுயப்பிரகாச தேசிக அரங்கதாதக்கவிராயர்‌ இயற்றிய சோ மபான சோடசக்‌ கட்டளைக்கலித்‌ துறை, 5-வது கவி:

“ தமிழும்‌ மதுரஞ்சுரா மதுரைப்பெயர்‌ தாமுஞ்சுரா அமீர்தர்கன்‌ ள்ளரரிக்‌ கள்ளழகர்‌ சான்றோனரயன்‌ கமிழுஞ்‌ சு. ரததிவேணியனலுஞ்‌ சொகச்கநாயகனமே லமை குலப்பாண்டிய நாடன்‌ பழையன அருமதியே"



கள்ளர் வேடம் தரித்து அழகர் கோவிலிலிருந்து மதுரை வரும் கள்ளழகர்





காசி_விசுவநாத_சதகம்


சென்னை கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ள கையெழுத்துப்படி நூலில் "கள்ளர்க்கு உரிய அழகர் பிரான்"என்றும், "கள்ளர் குலத்துத் திருப்பணி வேண்டிய கள்ளழகர்" என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.





சுந்ததத்தோளுடையான்‌ என்று ஸ்ரீ ஆண்டாள்‌ மங்களாசாசனம்‌ செய்த சுந்தரத்‌ தோள்களுக்கு வருஷம்‌ ஒருமுறை ஆண்டாள்‌ சாற்றிக்‌ கொடுத்த திருமாலையை ஏற்றுக்‌ கொள்ளும்‌ பொருட்டும்‌ ஸ்ரீசுந்தரராஜன்‌ “கள்ளழகர்‌” திருக்கோலத்‌துடன்‌ மதுரைக்கு எழுந்தருளுகிறார்‌' என்று கோயில்‌, அழைப்பிதழ்‌, அழகர்‌ மதுரைக்கு வருவதன்‌ காரணத்‌தைக்‌ கூறுகிறது.


திருமாலிருஞ்‌ சோலைமலை "அழகர்‌ மாலை” என்னும்‌ நூல்‌ 

"கள்ளக்‌ குடிகட்கு உரிமை அமைத்தருள்‌ காரணத்தால்‌, கள்ளர்க்குரிய அழகப்பிரான்‌ எனக்‌ காதலுரைத்‌ (து)

உள்ளத்‌ துறையும்‌ பிரானே அழகில்‌ ஒப்பிலியே" என்று கள்ளழகர்‌ என்ற பெயரையும்‌, கள்ளர்க்கு உரிமையுடையவர்‌ அழகர்‌ என்ற செய்தியினையும்‌ குறிப்பிடுகின்றது. 


சென்னையில் கீழ்த்திசை சுவடி நூலகத்திலுள்ள "திருமாலிருஞ்சோலைமலை அழகர்மாலை” என்னும் கையெழுத்துப்படி ‘(manuscript) நூல் "கள்ளக்குலத்தார் திருப்பணி - வேண்டிய கள்ளழகா” என்றும் , "கள்ளர்க்குரிய அழகப்பிரான்"' என்றும், இப்பெயரினையும் , பெயருக்குரிய விளக்கத்தினையும் தருகிறது. நாட்டுப்புற மக்களால் பாடப்பெறும் பாடல்களில் கள்ளழகர் பெயர் காணப்படுகிறது.


கள்ளர் நாட்டிலுள்ள அழகர்மலையில் கோயில் கொண்டுள்ள கள்ளழகர், கள்ளர் இன ஆண்மகனைபோல வேடமணிந்து வருகிறார். கைகளில் சங்கு, சக்கரம், தலையில் கீரிடம், என காட்சியளிக்கும் அழகர், கள்ளர் மரபினரின் ஆசாரங்களுக்கு கேற்றவாறு கைகொன்றாக 


வளத்தடி எனப்படும் வளரித்தடி, (கள்ளரின் பழைய போர்க்கருவிகளான வளைதடியும் குறுந்தடியும்) 



சாட்டை போன்ற கம்பு 



கள்ளர் இன ஆண்மகன் அக்காலத்தில் இடுகிற கொண்டை, தலையில் உருமால், 



காதுகளில் வண்டிகடுக்கன் (தொங்கும் காது மடல்களை உடையவராக) 
என அணிந்து மதுரை நோக்கி வருகிறார். 





கள்ளர் திருக்கோலத்தில் வரும்போது அழகர் கையில் இருக்கும் வளரிக்கும், மேலநாட்டு கள்ளருக்கும் உள்ள தொடர்பு நெடிய தொடர்புள்ளது. மேல நாடு எனும் நாட்டமைப்பு, வடக்குத்தெரு, தெற்குத்தெரு, மேலத்தெரு, பாளையப்பட்டு , பத்துக்கட்டு, பறப்புநாடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

"வளரியை அனுப்பி பெண்ணை எடு" எனும் வழக்கம் மேலநாட்டு கள்ளர்களிடம் இருந்ததாக " எட்கர் தர்ஸ்டன்" கிபி 1908ல் எழுதப்பட்ட தனது நூலான Caste and tribes of southern india வில் கூறுகிறார்.

கீழ்திசை சுவடிகள் நூலகத்திலுள்ள "கள்ளர் ஜாதி விளக்கம்" எனும் நூல் மேல நாட்டு கள்ளருடைய சங்கதி எனும் தலைப்பில் பின்வரும் செய்தியை தருகிறது:-

"அப்பால் மாப்பிள்ளையுடைய உடன் பிறந்தவள், பெண் வீட்டுக்குப் போய், பரிசங் கொடுத்து, ஒரு சீலையுங் கொடுத்து, குதிரைமயிர் காணணி பெண்ணுக்குத் தாலியுங் கட்டி, வளைதடி மாற்றிக்கொண்டு, பெண்ணையுங் கூட்டிக் கொண்டு உறவுமுறையாருடன் வருகிறது"

மேல நாட்டுக் கள்ளர்கள் திருமணத்தின் போது வளரியை பரிமாற்றம் செய்து கொள்வது சடங்காகவே நடந்துள்ளதை உறுதிப்பட அறியலாம்.

அழகருக்கு இடப்படும் கொண்டை மேலநாட்டு கள்ளரின் கொண்டையை போல ஒத்து வருகிறது. Madurai gazetter. எழுதிய நெல்சன் கள்ளச்சாதியில் 15 வயதான ஆண்மகன், தான் விரும்பிய அளவு முடி வளர்த்துக் கொள்ளும் உரிமை பெற்றவர் என குறிப்பிட்டுள்ளார்.

அழகர் அணியும் கடுக்கண் மேலநாட்டுக் கள்ளர் அணியும் வகையில் அமைந்துள்ளது. இதன் பெயர் வண்டிக்கடுக்கண் ஆகும்்


தொள்ளங்காது கள்ளர் நாடு 






மேல நாட்டு கள்ளர்கள் அழகர் கோயில் கள்ளழகரை வழிப்படுகின்றவர்கள். கள்ளழகர் கோயில் தேர்திருவிழாக்களில் பட்டுப் பரிவட்டம் முதல் மரியாதைகள் இவர்களுக்குண்டு நரசிங்கன் பட்டி அம்பலக்காரர்கள் பரம்பரையாகக் கள்ளழகர் தேவஸ்தானம் தர்மகர்த்தர்களாக இருந்து வருகின்றார்கள். மதுரை, தல்லாகுளத்தில் கள்ளழகர்க்குச் சிறந்த மண்டகப்படி இவர்களால் நடைபெற்று வருகிறது. கள்ளழகர் கோயில் தேர்த்திருவிழாவின் போது தேரினை இழுக்கும் உரிமை பெற்றவர்கள்.



கள்ளர் வேடம் தரித்து அழகர் கோவிலிலிருந்து மதுரை வரும் கள்ளழகர் முதலில் நரசிங்கம்பட்டி மேல்நாட்டு கள்ளர் அல்லது அழகர்மலை கள்ளர் அம்பலகாரரான நரசிங்கம்பட்டி திரு. இராமசாமி அம்பலகாரர் குடும்பத்தினருக்கு பாத்தியப்பட்ட மண்டபத்திற்குதான் முதலில் வருகிறார்



அங்குள்ள பதினெட்டாம்படி கோபுரத்திற்கு "தொண்டைமான்" கோபுரம் என்று பெயர் உள்ளது






1757 இல் மூர்க்கன் ஹைதர் அலி பெரும்படையுடன் வந்து அழகர் கோயில் கல்யாண மகாலில் இருந்த விக்கிரகங்களை நொறுக்கியதோடு ஏராளமான பணத்தையும் நகைகளைமும் கொள்ளையடித்துப் போயிருக்கிறான். ஹைதர் அலியின் படையை, புதுக்கோட்டை ரசர் இராய ரகுநாத தொண்டைமான் நேரடியாக போரிட்டு வீழ்த்தினார்.

கள்ளர் அழகர் கோவிலில் உள்ள ஓர் கோபுரத்தின் பெயர் தொண்டைமான் கோபுரம். கள்ளழகர் கோவிலின்‌ உள்ளே உள்ள ஒரே மண்டபம் மாங்குளம் கிராமத்தாருக்கு பாத்தியப்பட்டது. மாங்குளம் கிராமத்தார்கள் என்பவர்கள் மேல்நாட்டு கள்ளர் அம்பலக்காரர்கள். இவர்களுக்கே கோவிலும் பாத்தியப்பட்டது, முதல் மரியாதை, வடம் இழுப்பது அனைத்தும்.



அழகருக்கு அலங்காநல்லூரில்தான் அலங்காரம் நடைபெற்றது. அதன் காரணமாகவே அந்த ஊருக்கு அலங்காரநல்லூர் என்ற பெயர் ஏற்பட்டு, தற்போது அலங்காநல்லூர் என்று மருவிவிட்டது'.



அழகர் கோயில் பிற்காலத்தில் கள்ளழகர் கோயில் என மக்களால் அழைக்கப்பட்டது. திருமாலிருஞ் சோலைமலை அழகர்மாலை எனும் ஒலைச்சுவடித் தொகுப்பில் " கள்ளர் குலத்தார் திருப்பணி வேண்டிய கள்ளழகா" , " கள்ளர்குரிய அழகுப்பிரான்" என பல இடங்களில் அழகர் கள்ளர்களுக்கு உரியவர் எனும் விதத்தில் பாடப்பட்டுள்ளது. 

கிபி 1751ல், பிரெஞ்சு அரசாங்கத்தின் சார்பாக கள்ளர்களின் ஆதரவை கேட்டு தன்னரசு கள்ளர் நாடுகளுக்கு கடிதங்கள் எழுதப்பட்டது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட கள்ளர் நாடுகளில் அழகர் கோயில் கள்ளர் என மேலநாட்டு கள்ளர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 


அழகர்கோயிலை மையமாக கொண்டு கள்ளர்கள் தன்னரசு ஆட்சி நடத்தியதை இந்த கடிதம் நிரூபிக்கிறது. ( Diary of ananda ranga pillai Vol 8). அழகரைஅழகரை கள்ளர்களின் மிக முக்கிய தெய்வமாகவே வரலாற்று சான்றுகள் எடுத்துரைக்கின்றன.


கள்ளர் வழிமறிப்பு சடங்கு

" அழகர் வர்ணிப்பு " எனும் ஒலைச்சுவடியில் , சித்திரைத் திருவிழாவின் போது, அழகர் மதுரை வரும்போது, தல்லாக்குளம் தாண்டி, கள்ளந்திரி எனும் பகுதியில் கள்ளர்கள் அழகரை மறித்ததாக கூறப்பட்டுள்ளது. 



"கள்ளர் வழிமறித்து காயாம்பு மேனியை கலகமிகச் செய்தார்கள்
வள்ளலார ப்போது - நீலமேகம்
கள்ளர்களைத் தான் ஜெயிக்க" 


எனும் பாடல் வரிகள் கள்ளர்கள் அழகரை மறித்த செய்தி குறித்து கூறுகிறது.

அழகர் வர்ணிப்பு கூறும் இந்த நிகழ்ச்சி இன்றளவும் சித்திரை திருவிழாவின் போது சடங்காக நடந்து வருகிறது. சித்திரை திருவிழாவின் முடிவில் அழகர், தனது கோயிலை நோக்கி திரும்பி வரும்போது, தல்லாக்குளம் அருகில், கள்ளர்கள் பெருஞ்சத்தத்தோடு, பல்லக்கை நோக்கி வந்து, பல்லக்கின் கொம்புகளை " வாழக்கலை" எனும் ஈட்டி போன்ற கருவியால் குத்தி, மூன்று தடவை பல்லக்கை சுற்றி வருகின்றனர்.

அழகரை வழிமறிக்கும் உரிமை மேலநாட்டை சேர்ந்த மாங்குளம் கிராமத்து கள்ளர்களுக்கே உண்டு

சித்திரைத் திருவிழாவில் மாங்குளம் கிராமத்தாருக்கு தோசை உரிமை உண்டு. நாட்டுக்கள்ளரில் மாங்குளம் கள்ளர்களுக்கு மட்டும் இரணியன் வாசல் அருகில் ஒரு பழைய மண்டபம் உரிமையாய் உள்ளது.

சித்திரை திருவிழாவின் போது அழகரின் ஆடை மற்றும் அணிகலன் பெட்டியை மதுரைக்கு கொண்டு வரும் உரிமை மாங்குளம் கிராமத்தாருக்கே உரியது. மதுரை செல்லும் வழியில் அழகர் இறங்கும் மண்டபங்கள் தோறும் நான்கனா வசூலிக்கும் உரிமையும் மாங்குளம் கிராமத்தாருக்கே உண்டு.

ஆடி மாதத்தில் நடைபெறும் அழகர்கோயில் தேரோட்டத்தில் வடம் இழுக்கும் உரிமை நாட்டுக்கள்ளர்களுக்கு உண்டு. முதல் வடம் வெள்ளியங்குன்றம் ஜமீன் கிராமங்களும், மற்ற மூன்று வடங்கள் இழுக்கும் உரிமை முறையே தெற்குத்தெரு, வடக்குத்தெரு, மேலத்தெரு கள்ளர்களுக்குரியதாகும். 


தேர் இழுக்கும் முன் , வடம் இழுக்கும் உரிமை பெற்ற கள்ளர்கள், தேருக்கு முன் நாட்டுக்கூட்டம் நடத்துகின்றனர். அங்கு தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை விவாதிக்கப்படுகிறது. 



ஜமீன்தாருக்கும், ஏனைய மூன்று தெரு கள்ளர் தலைவர்களுக்கும் 8 முழம் அளவுள்ள " நாகமடிப்பட்டு" கோயில் மரியாதையாக தரப்படுகிறது. கள்ளர்கள் இழுக்கும் ஒவ்வொரு வடத்திற்கும், 2 தோசை மற்றும் 2 படி அரிசிப்பொங்கல் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

சித்திரை திருவிழாவின் போது கள்ளர் வேடம் தரித்து அழகர் கோவிலிலிருந்து மதுரை வரும் கள்ளழகர் முதலில் நரசிங்கம்பட்டி மேல்நாட்டு கள்ளர் அம்பலக்காரர் மண்டபத்தில் தங்கி அருள் தருகிறார். அம்பலக்காரர் மண்டபத்தில் கள்ளர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.

திருமங்கை ஆழ்வார் வேடுபறி நிகழ்வு

பன்னிரு ஆழ்வார்களில் கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வார் கள்ளர் மரபினன் என திவ்ய சூரி சரிதம் எனும் நூல் உரைக்கிறது. திருமங்கை ஆழ்வாரின் வேடுபறி நிகழ்வு அழகர் கோயிலில் மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை நடத்தும் பொறுப்பு வெள்ளியங்குன்றம் பாளையக்காரருடையதாகும். இந்த நிகழ்வின்போது கள்ளர் வேடம் பூண்டு கோயில் மரியாதைகளை மாங்குளம் கள்ளர்களே பெறுகின்றனர்.

மாங்குளம் கள்ளரில் பொன்னம்பல புலியன், ஆனைவெட்டி தேவன், ஒஞ்சியர், வப்பியர் ஆகிய பிரிவினரும், வடக்குத் தெரு கள்ளரில் அஞ்சாங்கரை அம்பலம் ஆகிய ஐந்து பிரிவினரும் தங்களுக்குள் திருமங்கை ஆழ்வார் வேடுபறி நிகழ்வில் பங்குகொள்வதற்கான பட்டு பரிவட்ட மரியாதையை மாறி மாறி பெற்றுக்கொள்கின்றனர்.

அழகருக்கும் கள்ளர்களுக்குமான தொடர்பு மிகவும் பிரசத்தி பெற்று விளங்குகிறது. அழகர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பான்மையாக வாழும் கள்ளர் இன மக்கள், தங்களது வீரத்தாலும், தலைமைப்பண்பாலும் அழகர்கோயிலில் பல்வேறு சிறப்புகளை பெற்று விளங்குகின்றனர்.



அழகர் கோயில் கல்வெட்டுகள்

மொண்ணை பிரான்‌ விரதமுடித்த பெருமானான முனையதரையர் தனது பெயரால்‌ மண்டபம்‌ . இன்றும் கள்ளர்களில் முனையதரையர் மரபினர் வாழ்ந்துவருகின்றனர் 
மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் அறங்காவலர் கதிவேல் முனையதிரியர், திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் டிரஸ்டி  T. K. தங்கவேல் முனையதரையர் மற்றும் மக்கள் செல்வர் TTV தினகரன் முனையரையர் குறிப்படத்தக்கவர்கள். 





கள்ளர்களில் முனையதரையர் - இந்திய விடுதலைப் போராளிகள்




வாணாதராயர்‌ மன்னருக்குச்‌ சொல்ல தானமாக முனையதரையர்‌ என்பாருக்குக்‌ கொடுக்கப்பட்ட

இன்றும் கள்ளர்களில் முனையதரையர் மரபினர் வாழ்ந்துவருகின்றனர் 






Freedom Fighters of Kallar - கள்ளர் மரபை சேர்ந்த வாணதிராயர்




மாவலி


திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் கள்ளர்களின்    மாவலியார் மரபினர் வாழும் மாவலியார் தெரு உள்ளது.  மாவலியார் மரபினர்  தஞ்சையின் பலப்பகுதியில் செறிந்து வாழ்கின்றனர். தஞ்சை மாவட்ட விவசாய பிரிவுத் தலைவர் கணபதி மாவலியார், திருவையாறு தமிழிசை மன்றத் தலைவர் ம. வேலு மாவலியார் போன்ற  மாவலியார் மார்பினார்கள் இன்று சிறப்புடன் விளங்குகின்றனர்.



குன்டைய தேவர்‌ தங்கள்‌ தம்பிமார்களின்‌ வைய்சல தேவர்‌ பேரால்‌


கல்வெட்டில் அதிகைமான் கையெழுத்து 






கள்ளர் மரபை சேர்ந்த அதிகைமான்
ஸ்ரீகூத்தபெருமான் கோவில் நந்தி பலிபீடம், கள்ளர் மரபை சேர்ந்த வேங்கூர் சுப்பிரமணிய அதியமான் பாரியைகள் மூலம் புதுப்பிக்கப்பட்டது.







கல்வெட்டில் சேதிராயன் கையெழுத்து 





கள்ளர் மரபை சேர்ந்த  1967 ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் ஜி. முருகையா சேதுரார்.




தொண்டைமான்‌ கோபுரம்‌ 
திருப்பதிப் பகுதியில் “ தொண்டைமான் கோட்டை ” என்ற இடம் அவர்கள் பூர்வீகம் என்று கருதப்படுகிறது. அங்கு வாழ்ந்த கள்ளர் மரபினர் வேளாண்மையில் ஈடுபட்டதோடு யானைகளைப் பிடிப்பதிலும் , அவற்றைப்பழக்குவதிலும், அவைகளுக்கு ஏற்ற பயிற்சி அளிப்பதிலும் சிறந்து விளங்கினர். இராய தொண்டைமான்மீது பாடப்பெற்ற தொண்டைமான் " அனுராகமாலை" என்னும் நூல் "இந்நிலமன் சீரங்கராயருக்கு ராயத்தொண்டை -மன்னன் பிடித்தனுப்பும் மால்யானை ” என்று கூறுவதால் பிற்காலம் வரை அவர்களுக்கு யானைத் தொடர்பு இருந்தது புலப்படுகிறது. இவர்கள் திறமையை மூவேந்தரும், பல்லவர்களும், தமிழகத்தை ஆட்சிபுரிந்த பிறமன்னர்களும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். பேரரசர்கள் பலரிடம் பணிபுரிந்த இத்தொண்டைமான்கள் புதுக்கோட்டைப் பகுதியில் அறந்தாங்கி, அன்பில், சூரைக்குடி போன்ற இடங்களிலும் குடியேறி வாழ்ந்தனர் .

கல்வெட்டில் பல்லவராயன் கையெழுத்து 
பல்லவராயர் கள்ளர் சாதி 
(தமிழக அரசு)


நாட்டாழ்வான் 

கள்ளர் குடியை சேர்ந்த இராமசாமி நாடாள்வார் நினைவாக அவரது மகன் பழனியாண்டி நாடாள்வாரால் கட்டப்பட்டது. 


கல்வெட்டில் மாதவராயன் கையெழுத்து 



கள்ளர் மரபை சேர்ந்த  1921ஆம் ஆண்டு கருப்பு களர் சுப்பையா சுவாமிகளின் சீடர்களில் ஒருவர் திருக்களர் மு.சுவாமிநாத உபாத்தியாயர். இவரது குடும்ப பட்டம் மாதவராயர்

கல்வெட்டில் மழவராயர் கையெழுத்து 

Freedom Fighters of Kallar - கள்ளர் மரபை சேர்ந்த மழவராயர்




மாயோன்

இவனை மாயோன் என்றுதான் 'தொல்'காப்பியம் அழைக்கிறது. மாயோன் என்றால் கள்வன்தானே! கண்ணன் கள்வன் என்று எல்லோரும் மாய்ந்து, மாய்ந்து பாட்டு எழுதிவிட்டனர். அவன் சித்சோரன் (நெஞ்சக் கள்வன்) அதனால் கள்ளழகர். பின்னால் கள்ளர் ஜாதிக்கு குலபதியானதினாலும் கள்ளழகர். ஆண்டாள் மனதைக் கவர்ந்ததினாலும் கள்ளழகர்.

சங்க இலக்கியமான பரிபாடலில் இரணியம் கிராமத்தைச் சேர்ந்த புலவர் இளம்பெரு வழுதியார் இதைத் திருமால் குன்றம் என்கிறார் சிலப்பதிகாரம் இதை திருமால் மலை என்கிறது. பூதத்தாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் அழகரைத் தொழுது 108 பாக்களை பாடிப் பரவியுள்ளனர். இவர்களுக்குப் பிறகு, ஏராளமான சிற்றிலக்கியங்கள் கள்ளழகரை கவிதையில் ஏற்றியுள்ளன.

சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிய நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இதனைப் பாடியவர் இளம்பெரு வழுதி. இரண்டாம் நூற்றாண்டிலேயே கள்ளழகர் என்று பரிபாடலில் அழைக்கப்படுகிறார்.

கள்ளழகர் மலையைக் குறிக்கும்பெயர்களில் குறிப்பிடத்தக்கவை சில.

திருமாலிருஞ்சோலை
இருங்குன்று
பெரும்பெயர் இருவரை
கேழ் இருங்குன்று


இக் குன்றில் குடிகொண்டுள்ள திருமலால் "கள்" ( கள்ளணி பசுந்துளவு என்பது துளசிப் பூவோடு கூடிய துளசியிலை மாலை) அணிந்த பசுந்துளசியை மாலையாக அணிந்து கொண்டுள்ளதால் கள்ளழகர் எனப்பட்டார். 

அருகர் போற்றிய சோலைமலை, என்றும் முருகனுக்கு உரிய திருமலையாகும். பழுமுதிர் சோலைமலையில் அமர்ந்து அருளும் குறிஞ்சிக் கிழவனாகிய குமரனை,

"சூரர் குலம்வென்று வாகை யொடுசென்று 
சோலை மலைநின்ற - பெருமாளே"
என்று திருப்புகழ் பாடிற்று.

சோலைமலை பழங்காலத்தில் பாண்டியர்க்கு உரிய கோட்டையாகவும் விளங்கிற்று. பாண்டியர் அரசு வீற்றிருந்த தலைநகராகிய மதுரையின் வட கிழக்கே காதவழி தூரத்தில் உள்ளதாய், பத்து மைல் நீளமும், நாற்பது மைல் சுற்றளவும் உடையதாய்த் திகழ அம் மலையைப் பாண்டியர் தம் காவற் கோட்டையாக்கிக் கொண்டனர். மலையத்துவசன் என்ற பாண்டியன் அக் கோட்டையைக் கட்டினான் என்பர்.

அந் நாளிலே கட்டிய உட்கோட்டை, வெளிக் கோட்டை ஆகிய இரண்டும் இன்றும் காணப்படுகின்றன. திண்ணிய மதில் அமைந்த சோலைமலையைக் கண்டு, கண்ணும் மனமும் குளிர்ந்தார் பெரியாழ்வார்; "மதில் சூழ் சோலைமலைக்கு அரசே" என்று பாடினார்.


இத்தகைய படை வீட்டையும் கோட்டையையும் காத்து நின்றான் ஒரு வீரன். முறுக்கிய மீசையும், தருக்கிய விழியும் உடைய அவ் வீரன் இப்பொழுது காவல் தெய்வமாய். பதினெட்டாம்படிக் கறுப்பன் என்ற பெயரோடு சோலைமலையிலே காட்சியளிக்கின்றான். அவனை நினைத்தாலே குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்; படிறுடையார் உள்ளம் பறையடிக்கும். நீதி மன்றத்தில் தீராத வழக்குகளும் கறுப்பையன் படிக்கட்டில் தீர்ந்துவிடும். 


கறுப்பன் கள்ளர்களுக்கு உரிய தெய்வம். அதிலும் மேலூரைச் சார்ந்த கள்ளர்களுக்கு அவர் மிகச் சிறப்பான உரிமை உடையவர். அப்பகுதியில் கறுப்பணசாமி கோயிலே கள்ளர்கள் பஞ்சாயத்து அவை கூடும் சாவடியாகும். கள்ளர் அல்லது குயவர் சாதியைச் சேர்ந்தவர்களே அவருக்குப் பூசாரியாக இருப்பர். 

முருகனுக் குகந்த படைவீட்டிலே - கறுப்பையன் காக்கும் கோட்டை மலையிலே - ஒரு கள்ளனும் நெடுங்காலமாக உள்ளான்! அன்று இன்று எனாதபடி, என்றும் அவன் உள்ளான் என்று ஆன்றோர் கூறுவர். கள்ளனும் அவனே; காப்பானும் அவனே! ஆதியும் அந்தமும் அவனே! ஆதியும் அவனே; சோதியும் அவனே! சோலைமலை அரசனும் அவனே! அம் மாயக் கள்வனைக் கண்டு கொண்டார் ஞானக் கவிஞராகிய நம்மாழ்வார்.

"வஞ்சக் கள்வன் மாமாயன் 
மாயக் கவியாய் வந்துஎன் 
நெஞ்சம் உயிரும் அவையுண்டு 
தானே யாகி நிறைந்தானே"


என்று பாடினார்; பரவினார்; பரவசமாயினார்; உள்ளம் கவர்ந்த கள்வனை நினைந்து உருகினார்; அவன் அழகைக் கண்ணாற் பருகினார்; இன்ப வாரியில் மூழ்கினார்.

இங்ஙனம் ஆழ்வாரது நெஞ்சிலே புகுந்து திருவாய்மொழி பாடுவித்த வஞ்சக் கள்வனே சோலை மலையில் நின்று அருளும் திருமால். அவர் பெருமையால் சோலைமலை, 'திருமால் இருஞ்சோலை' என்னும் பெயர் பெற்றது.

"அருகரோடு புத்தரும் அமர்ந்தருளும் சோலை 
மருகனோடு மாமனும் மகிழ்ந்துறையும் சோலை 
கருமையோடு* வெள்ளையும் கலந்திலங்கும் சோலை 
அருமையான சோலைஎங்கள் அழகர்பெருஞ் சோலை"

என்று ஆடிப் பாடினாள் சோலைமலைக் குறவஞ்சி. அச்சோலையிலே கள்ள அழகரைக் காண்பது ஓர் ஆனந்தம்! --- * வெள்ளை - வெள்ளை நிறமுடைய பலதேவன். அவரும் கண்ணனோடு அம் மலையில் காட்சியளித்தார் என்பது பரிபாடலால் விளங்கும்.




அழகர்கோவிலில் தேரினை இழுக்கும் உரிமை பெற்றவர்கள்




 




 












 






அழகர்கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் திருவிழாவில் ஒன்பதாம் நாளான பௌர்ணமியன்றுநடைபெறும் “கள்ளழகர்“ தேரோட்டம் முடிகின்ற வரையில் திருவிழா நாட்களில் காலையிலும் மாலையிலும் இறைவனின் போர்கருவியான திருவாழியாழ்வார் (சக்கரத்தாழ்வார்) தேரோடும் வீதியில் வலம்வந்து திக்குத்தெய்வங்களுக்கு படையல் இடுகின்றார்.

கோவிலுக்கு வெளியே வரும் சக்கரத்தாழ்வார் ஆண்டுமுழுவதும் அடைக்கப்பெற்றுள்ள பதினெட்டாம்படிக்கோபுர வாசலைத்திறந்து அதன் வழியே வெளிவருவதும் அதே வழியில் திரும்பிச்செல்வதும் இத்திருவிழாவின் சிறப்பம்சமாகும்.

இத்தேரோட்ட திருவிழாவில் தேரினை இழுக்கும் பொறுப்பு மத்தம் மேலநாடு கிராமத்தவர்களின் பொறுப்பாக உள்ளது .

தேர் இழுப்பதனை மரியாதைக்குரிய உரிமையாகவே இவர்கள் கருதுகிறார்கள். தேரின் நான்குவடங்கள் முதல் வடம் வெள்ளியங்குன்றம் ஜமீனுக்கு உட்பட்ட கிராமத்தில் வாழும் கள்ளரினத்தவர்களும் 

அடுத்த இரண்டாவது வடத்தை “மேலத்தெரு” நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி ஆகிய கிராம கள்ளரினத்தவர்களும் 

தேரின் மூன்றாவது வடத்தை “வடக்குத்தெரு” வல்லாளபட்டி, கல்லம்பட்டி, மாங்குளம், அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, கள்ளந்திரி, ஆகிய கிராமத்தின் கள்ளரினத்தவர்களும், 

தேரின் நான்காவது வடத்தினை தெற்குத்தெரு கிராமத்தின் கள்ளரினத்தவர்களுக்கும் இழுக்கும் உரிமை பெற்றவர்கள்...

தேரோட்டம் துவங்குவதற்கு முன்னர் இம்மூன்று நாட்டவர்கள் அம்பலகாரர்கள் தலைமையில் தேருக்கு முன்பாக ஒன்றுகூடி மேளதாளங்களுடன் தாரை, கொம்பு முழக்கத்துடன் குலவையிட்டு ஆர்ப்பரிப்பர் பின்னர் நாட்டு அம்பலகார்களுக்கு 8 முழமுள்ள “நாகமடிப்பட்டு” கோயில் மரியாதை தரப்படுகிறது.


அப்போது 5 சீரகசம்பா தோசையும் 5 படி அரிசி பொங்கலும் பிரசாதமாக நாட்டார்களுக்கு வழங்கப்படுகிறது. பின்னர் தேய்காய் உடைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டவுடன் தேரின் மீது ஏறிய மத்தம் மேலநாட்டு அம்பலகாரர்கள் “வல்லம்” வீசியவுடன் கள்ளழகர் தேரோட்டம் தொடங்கும் .


அழகர் ஆற்றில் இறங்குவது ஏன் என்பதற்கும் , அழகர் பற்றிய சில செவிவழி செய்திகளாக கூறுவது:

கள்ளந்திரி மேன்மைதங்கிய ஊர் பெரிய அம்பலக்காரர் பொன்வேல்முருகன்



அழகர் மலைக்கு 3 கி.மீ. தூரத்தில் உள்ள கள்ளந்திரி கிராமம், கள்ளர்கள் வாழ்ந்த இடம் என்பதால் அப்பெயர் பெற்றது. இப்போதும், கள்ளழகர் இவ்வூரிலிருந்து கள்ளன் வேடம் தரித்து மதுரை நோக்கிப் புறப்படுகிறார். இது ஆண்டு தோறும் நடக்கிற சித்திரைத் திருவிழாவின் ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது. 
.

அழகர் என்பவர் அப்பகுதியில் வாழ்ந்த கள்ளர் சமுதாய மக்களின் தலைவன் என்றும், இவர் கொரில்லா முறை தாக்குதல்களை நடத்தி கொள்ளையடித்தும்; மாடுகளைக் கவர்ந்தும், மலையில் ஆட்சி நடத்தி வந்தார் என்றும்.

பழைய மதுரை; அதாவது அன்றைய பாண்டிய நாடு வைகை ஆற்-றுக்குத் தெற்காக இருப்பது மட்டும்தான்! ஆற்றின் வடக்கே இருந்த பகுதிகள் மருத மரங்கள் நிறைந்த பெரும் காடுகளாக விளங்கின. வடபகுதியில் இருந்து மீனாட்சி- சொக்கன் திருக்கல்யாணத்-திற்கு வருகின்ற பெருத்த சீமான்களைத் தடுத்து நிறுத்தி கொள்ளையிடுவது அழகரின் கள்ளர் படை வழக்கமும் ஆகும். கள்ளர் தலைவன் அழகர் குதிரைகளுடன் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுடன் வண்டியூர் சென்று தனது வைப்பாட்டியான துலுக்க நாச்சியார் வீட்டில் தங்கியிருப்பதும், பின் பாதுகாப்புடன் மலையேறுவதும், அவர் வழக்கமாயின!
.

பிற்காலத்திலும் அழகர் மலைக் கள்ளர்களை, மதுரை வீரன் வரை போராடிப் பார்த்தும் அவர்களை அடக்கவும், ஒடுக்கவும் முடியாமல் இருந்து வந்துள்ளது. சங்கிலிக் கருப்பன் என்பவர் அழகரின் பின் தோன்றல் ஆவார். பாண்டிய நாட்டு ஆட்சியை நாயக்-கர்கள் கைப்பற்றிக் கொண்டபோது, கள்ளர்களை எதிர்த்து அமைதியான ஓர் ஆட்சியை நடத்த முடியவில்லை. திருமலை நாயக்க்கர் காலத்தில் கள்ளர்களுடன் இணக்கத்துடன் இருந்து பிறகு மதுரை காவல் கள்ளர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. 

சித்திரைத் திருவிழால இன்னும் பழைய மரபுகள் நிறைய இருக்கிறது. அன்று முதல் இன்றுவரை கள்ளந்திரி கிராமத்தினர்தான், கையில் தீப்பந்தங்களை வைத்துக்கொண்டு அழகர்கூடவே பாதுகாப்பாக வந்து செல்கின்றனர். இதுபோன்ற பல மரபுகள் இந்தத் திருவிழாவில் இன்னும் கடைபிடிக்கப்படுது

அப்பன்திருப்பதி, கள்ளந்திரி பகுதிகளில் கள்ளழகர் மலைக்கு திரும்பும் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கள்ளழகர் வருகையையொட்டி அப்பன்திருப்பதி, கள்ளந்திரி பகுதிகளிலுள்ள கிராமங்கள் விழாக்கோலம் பூண்டு அந்த பகுதிகளில் உள்ள திருக்கண், மண்டபங்களில் நாடகம், கரகாட்டம், இன்னிசை கச்சேரி என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கள்ளழகர் மலைக்கு திரும்பும் விழா, இந்த பகுதிகளில் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.


கள்ளழகர் எட்கர் தர்ஸ்டசன் பார்வையில்

















கள்ளழகர் கோவிலில் கள்ளர்களுக்கு பரிவட்டம் கட்டப்படும் போது பதினெட்டாம் படி கருப்பர் கோவிலில் பதினெட்டாம்படியில் நின்று உறுமொழி சரியாக செயல்படுவேன் என பதினெட்டாம் படி கருப்பருக்கு உறுதிமொழி கொடுக்க வேண்டும். பரிவட்டம் கட்டுபவர் பொய் கூறினால் சரியாக மூன்றாம் நாள் இறந்துவிடுவார். இதே நடைமுறையில் வேறுஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.

கள்ளர்களின் தலைமை கோவிலான கள்ளழகர் கோவிலில் கள்ளழகர் விஷ்ணுவாக பாளிக்கிறார் இவர் மீனாட்சியின் சகோதரர். மீன்களை போன்ற அழகிய கண்களை உடைய மீனாட்சி பாண்டிய மன்னனின் அழகிய மகள் சிவனை மணப்பதால் இங்கு பிராமணத்துவம், திராவிடமாக மாறுகிறது.

கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை அக்காலத்திலேயே சுமார் 3 லட்சம் பக்தர்கள் கண்டு களித்துள்ளனர் அம்மூன்று லட்சம் பேர்களில் கள்ளர்களே அதிகம்.

கள்ளர் அழகரை தூக்கிசெல்ல,வடம் பிடிப்பது முழுக்க முழுக்க கள்ளர்களே அதன்பின்பே மற்ற சாதியினர் இணைகின்றனர்.

கள்ளர்கள் தங்கள் தெய்வத்திற்கு இரத்த காணிக்கையாக கிடாய் வெட்டுதல், கோழி அறுத்தல் போன்ற பழக்க வழக்கங்களை கொண்டவர்கள்.

களரி ஆயுதமானது கள்ளர்களால் பயன்படுத்தப்படுகிறது. சில கள்ளர் திருவிழாக்களில் கள்ளர்கள் தங்கள் வளரிகளை பரிமாறிக்கொள்வதும் நடந்துள்ளது. இங்கே அழகரும் மதுரைக்கு வருகையில் கள்ளர்கள் பயன்படுத்தும் வளரிதடி, கடுக்கன், தடி, தலைப்பாகை போன்றவற்றை அணிந்தே வருகிறார்.

அழகர் கோவிலில் பலிகொடுக்கும் முன்பாக வெள்ளை மற்றும் சிகப்பு பூக்களை போட்டு சிறுவர்களை அழைத்து எடுக்க வைக்கிறார்கள் அதில் வெள்ளையை எடுத்தால் வெற்றி என்பது அர்த்தம்.

ஆகவே அழகர் ஆற்றில் இறங்கும் விழா என்பதை விட ககள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா கள்ளர் திருவிழா என்பது சாலச்சிறந்தது.

கள்ளழகர் கோயில் பார்ப்பனர்கள் கறுப்பானவர்களாக இருக்க என்ன காரணம். எந்த நகரத்திலும் எந்தக் கிராமத்திலும் அமைக்காமல் நடமாட்டமற்ற மலையடிவாரத்தில் கட்ட.பட்டது அழகர் கோயில்! அழகருக்கு அடியவர் திருக்கூட்டத்தையும்
பக்தர்களையும் திரட்டுவதற்காக பல திட்டங்களை இக் கோயில் நிர்வாகம் செய்திருக்கிறது!

அழகருக்கு தொண்டு செய்து அடியார்களை பெருக்குவதற்காக 'திருமாலை ஆண்டார் 'என்றபணிப்பிரிவை
ஏற்படுத்தி, அதன் தலைமைப் பொறுப்பில் சுந்தரத் தோளுடையார் என்ற அந்தணரை நியமித்திருக்கிறார் ராமானுஜர்!

தேவகுரு என்று அழைக்கப்பட்ட அந்தத் திருமலை ஆண்டார் தனது தளபதிகளாக கள்ளர் பள்ளர் பறையர் நாயுடு கோனார் வலையர் கவுண்டர் உள்ளிட்ட பல சாதியாரை நியமித்து பதினெட்டுச் சமயத்தார் என்ற பெயரை அக் குழுவிற்குச் சூட்டியுள்ளார்!

தங்கள் தங்கள் சாதியாரை அழைத்து வந்து கள்ளழகருக்கு அடியார்கள் ஆக்குவதே அக் குழுவின் பணி! கள்ளழகரின் தீவிர அடியார்கள் தேவகுரு முன்னிலையில் அக்கினி முத்திரை குத்திக் கொள்வார்கள்! அதாவது, உலோகத்தால் ஆன சங்கு சக்கரச் சின்ன அச்சுகளை தீயில் வாட்டி புதிய அடியாரின் இரண்டு தோள்பட்டைகளிலும் சூடு வைப்பார்கள். அது கொப்புளமாகி,காய்ந்து வடுவாகி, அந்திமம் வரை அழியாத தழும்பாகி நிற்கும்! அதுவே அக்கினி முத்திரை!

கள்ளழகர் விழாவில் அழகருக்கு முன்னால் பல்லக்கில் தேவகுரு செல்வார்!


அழகருக்கு உரிய மரியாதை தேவகுருவுக்கும்!

திருமாலை ஆண்டார் பரம்பரை 23 தலைமுறைகள் தொடர்ந்திருக்கிறது! 24 ஆவது தேவகுரு 1977இல் காலமானார். அவருக்கு வாரிசில்லை. அவரோடு அந்தப் பணியும் பல்லக்கும் மரியாதையும், பதினெண் சமயத்தார் குழுவும் நின்றுபோயின



வெள்ளியங்குன்றம் பாளையம் போலி செப்பேடு 






வெள்ளியங்குன்றம் பாளையம் விஸ்வநாத நாயக்க மன்னர் தமிழ்நாட்டை பல பாளையங்களாக பிரித்த போதே உருவான பழமையான பாளையம். இப்பாளையத்தை கன்னடம் பேசுகின்ற அனுப்ப கவுண்டர் வம்சத்தினர் ஆண்டுள்ளனர்.

ஶ்ரீகள்ளழகர் கோவில் மரியாதை மேல் நாட்டு கள்ளர்களுக்கு காலங்காலமாக வழங்கப்பட்டு வருகிறது. இடைக்காலத்தில் சில விசமிகளால் மறுக்கப்பட்ட போது அதனை சட்ட போராட்டம் நடத்தி மேல் நாட்டு கள்ளர் நாட்டு அம்பலங்கள் மீட்டார்கள்.

ஶ்ரீகள்ளழகர் கோவில் மரியாதையை கள்ளர் நாட்டு அம்பலங்கள் பெறுவதை போல, வெள்ளியங்குன்றம் கன்னட கவுண்டர் தாங்களும் பெறுவதற்காக ஒரு போலியான செப்பேட்டை கிபி1981ல் உருவாக்கியுள்ளன. வெள்ளியங்குன்றம் செப்பேடு என வரும் இந்த செப்பேட்டில் உள்ள செய்தி என்னவென்றால்.

ஶ்ரீகள்ளழகர் கோவிலில் சகம் 1491 (கிபி1670ஆம்) ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் வேடர்கள் உள்ளே புகுந்து தங்கம்,வெள்ளி பாத்திரங்கள் மற்றும் ஶ்ரீகள்ளழகர் ஆபரணங்களையும் கொள்ளையடித்து ஓடிவிடுகிறார்கள்.

இதனால் கோவில் தலத்தார்கள் மதுரைக்கு சென்று மன்னர் திருமலை நாயக்கரிடம் முறையிடுகின்றனர்.

திருமலை நாயக்கர் உடனடியாக வெள்ளியங்குன்றம் பாளையக்காரரை வரவழைத்து திருடு போன அனைத்து பொருட்களையும் மீட்டு வருமாறு கட்டளையிடுகிறார்.

இதனை ஏற்ற வெள்ளியங்குன்றம் பாளையக்காரர் கள்ளர்களை தலையை வெட்டி ஆபரணங்களை மீட்டு திருமலை நாயக்கருக்கு முன்பு வைக்கிறார்.

இதனால் மன நெகிழ்ச்சி அடைந்த திருமலை நாயக்கர் ஶ்ரீகள்ளழகர் கோவிலின் கருவூல பாதுகாவலராகவும், கோவில் மரியாதையையும் பெற்றுக் கொள்ளுமாறு செப்பேடு அளித்தாராம்.

செப்பேடு போலி என்பதற்கான ஆதாரம்

போலி :1

சக ஆண்டு 1491 என்று உள்ளது அதற்கான ஆங்கில வருடத்தை கணக்கிட நாம் 78வருடங்களை கூட்ட வேண்டும். அப்படி கூட்டினால் வரும் ஆண்டு கிபி1569ஆண்டு வருகிறது. ஆனால் கிபி1670 என்று முட்டாள் தனமாக குறித்துள்ளார்கள்.

சரி அப்படியே கிபி1569 என்றால் அப்போது திருமலை நாயக்கர் மதுரையில் ஆட்சி செய்யவில்லை, அப்போது ஆட்சியில் இருந்தவர் இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர்.












போலி :2




ஆங்கில வருடம் கிபி1670 திருமலை நாயக்கர் காலத்தில் சம்பவம் நடந்தது என்று கூறியுள்ளனர். திருமலை நாயக்கர் கிபி1659லே இறந்துவிட்டார், அப்போது ஆட்சியில் இருந்தவர் சொக்கநாத நாயக்கர். இது இரண்டாவது திரிபு.



போலி: 3




கோலிலில் திருடியது வேடர்கள் என செப்பேட்டில் முதல் வரியில் வருகிறது, ஆனால் திருமலை நாயக்கர் தன்னை கள்ளர்களை வெட்டி வருமாறு ஆனையிடுகிறார் என்று அடுத்த வரியில் வருகிறது. திருடியது வேடர்களா....? கள்ளர்களா .....?. இதில் கள்ளர் என சேர்ந்தததே கோவில் உரிமை அவர்களிடம் பறிக்க என்பது நன்கு புலப்படுகிறது.




போலி : 4




இதற்கு சாட்சியாக திருமலை நாயக்கரின் தளபதி இராமப்பையன் என்று வருகிறது. திருமலை நாயக்கர் காலமே தொங்கும் போது அவருடைய தளபதியின் காலத்தை சொல்லவா வேண்டும். அதுமட்டுமில்லாமல் திருமலை நாயக்கரின் உரிமையியல் செப்பேடுகளில் சாட்சியாக கள்ளர் நாட்டு தலைவர்களும், சிவகங்கை, புதுக்கோட்டை மன்னர்களும் வருகிறார்கள் ஆனால் இதில் மட்டும் இராமப்பையன் வருகிறார்.

சட்ட போராட்டம் நடத்துவதே சரியான முடிவு செய்யப்பட்டுள்ளது.


கள்ளர்களும் அழகர் கோவிளும் வடுக திருட்டும் புரட்டும்

வரலாற்றைக் கால நிரல் படுத்துவதில் ஏற்பட்ட காட்சிப் பிழையால் கொற்றக்குடியான கள்ளர் குடி குற்றக் குடியாகவே திராவிடம் பேசும் வஞ்சகர்களால் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

வேல் போல நிமிர்ந்தும் வாளைப்போல கூராகவும் கோலோச்சி வாழ்ந்த குடி முக்குலத்தின் மூத்த குடி கள்ளர் குடி

நாட்டுப்புர வழக்கியல் ஆய்வாளரான தொ.பரமசிவனின் பண்பாட்டு அசைவுகள் என்ற நூலை மறுவாசிப்பு செய்த போது இரண்டு கட்டுரைகள் என் சிந்தையில் சிக்கிமுக்கி கற்களை உரசின.

1)அழகர் கோவில் அமைப்பும் தமிழக கோவில் அமைப்பும்

2)கள்ளரும்- அழகரும் - கள்ளழகரும்

இரண்டாவது கட்டுரையின் சாரம்சம் இதுதான் ஆதியில் அழகர் கோவிளுக்கும் கள்ளர்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. வடுக வந்தேரிகள் காலத்தில் அழகர் மதுரை வரும் போது கள்ளர்கள் அழகரை கொள்ளையிட்டனர் (நகைககள்- ஆபரணங்கள்). அதனால் பதறிய கோவில் நிர்வாகிகள் அழகர் உங்களுக்கும் பொதுவானவர் என உரைத்து சமரசம் செய்து கோவில் மரியாதை செய்தனர். பின்புதான் அழகர் கள்ளழகர் ஆனார்.

கொள்ளையிட்டதால்தான் கள்ளர்களும் அழகர் கோவிளுக்கும் தொடர்பு உண்டானது என்கிறார் தொ பா. (இவரின் முனைவர் பட்ட ஆய்வேடும் அழகர் கோவில் பற்றித்தான் - கள்ளர் என்ற தலைப்பில் இதே செய்திதான்)

வடுக திரவிட வாசிப்பின் தீட்டை மறு ஆய்வு செய்வோம்

அழகர் கோவில் கல்வெட்டுகளும் கள்ளர் சமூகமும்

1)பிற்காலப் பாண்டியர் 13 நூற்றாண்டு ஆண்டறிக்கை 270/192-30 விரத முடித்த பெருமாளான முனையதரையன் செய்வித்த தூண்.

2)நில விற்பனை ஆவணம் 13நூற்றாண்டு பாண்டியர் சிற்றூரூடையானான சோரன் உய்ய நின்றாடுவானான குருகுலத்தரையன் செய்த நிலதானம்.

இதில் வடதலை செம்பி நாட்டு கீழைக் கொடுமாளூரான மதுரோதைய நல்லூர் அரையன் சுந்தர பாண்டிய சேதிராயனுக்கும் காணி இருந்துள்ளது.

கையொப்பமிட்டோர்
செம்பிதரயன்
தொண்டைமான்,
விழுப்பராஜன்...

நில ஆவணத்தை ஒருங்கினைத்தவர் அமைச்சர் மழவராயர்

3) நில ஆவணம் 13 நூற்றாண்டு பாண்டியர் ..

மழவராயப் பேராறு குறிக்கப்பட்டுள்ளது

கையொப்பமிட்டவர்கள்.

உத்தம சோழ பாண்டிய விழுப்பரையன் .

ஆசி உலகமுண்ட தேவனான செம்பித்தரையன்.
கொங்கராயன்.
கோட்டூரூடையான் தொண்டைமான்

4) நில ஆவணம் ..ஊர்.க.எண்.54 ...
குலசேகர பாண்டிய தேவர்.
இராமன் கண்ணபிரானான கலிங்கடித்த பாண்டிய தேவர்.

5) நில ஆவணம் ஊர்.க.எண்.55
சடையவர்மர் குலசேகர பாண்டிய தேவர்

கையொப்பமிட்டோர்

பெருமண நல்லூர் மந்திரி ஆதித்த தேவனான பல்லவராயர்.
ஜெயங்கொண்ட சோழர் சீவல்ப தேவன்.
நாடாழ்வான் மழவராயர் நில ஆவணத்தை ஒருங்கினைத்துள்ளார்.

காடுவெட்டிக்கும் பல்லவராயனுக்கும் தனிக் காணி இருந்துள்ளது.

6)பாண்டியர்:13 நூற்றாண்டு .ஊர்.க.எண்.56

ஆதித்த தேவர் பல்லவராயனுக்கு விற்றுக்கொடுத்த நில ஆவணம் .

செம்பித்தரயனுக்கு தனி காணி இருந்துள்ளது

7) பாண்டியர்.13 நூற்றாண்டு. ஊர்.எண்.57-57A+பி௧ நில ஆவணம்.

இறைவனுக்கும் வைஷ்ணவர்களுக்கும் நம்பு செய்வோருக்கும் கொடுத்த நில தானம் (திருவாதிரை மார்கழி ஐப்பசி திங்கள் உணவுக்காக) முத்துக் கூற்றத்து கப்பலூரான மூன்று கரையார் கொடுத்தது ஆவணத்தை ஒருங்கினைத்தவர் முனையதரையன் .

கையொப்பமிட்டோர்.
பொன்னன் சூரியதேவனான
சேதிராயன்.
பல்லவராயன்.
தென்னவராயன்.
கண்காணி இராராஜ பல்லவராயன்.
விராடராயன்.

கப்பலூரூடையானான நம் இளை வித்தனான முனையதரையன்

புரவரி திணைக்கள நாயன் சோழதேன் பல்லவராயன்
பொத்தபிச் சோழன்

8) பாண்டியர் .13 நூற்றாண்டு .ஊர்.க.எண்.82

பாண்டிய மன்னன் மந்திரி இராமனான பல்லவராயன் செய்த நில தானம்.

கையொப்பமிட்டோர்
மீனவதரயன்
சொழபாண்டிய தேவன்

9) பாண்டியர்.13 நூற்றாண்டு.ஊர்.க.எண்.95

குன்னய தேவர் தன் தம்பி (வையசய தேவர்) பெயரில் செய்த நில தானம் . காணியுடையோர்.

பெருமாள் முனையதரயன்.
தென்னவன்
விழுப்பதரயன்.

10) பாண்டியர்..13 நூற்றாண்டு. ஊர்.க.எண்.100.

வல்லப தேவர் செய்த நில தானம்.

கையொப்பமிட்டோர்

நாராயண தமிழ் பல்லவராயன் பாண்டியதரையர்.
கண்ட நாடாழ்வான்.
வானாதிராயன்.
மழவராய சுந்தர பாண்டியன்

11) நில ஆவணம். பாண்டியர். 13 நூற்றாண்டு. ஊர்.க.எண். 116-122.

கையொப்பமிட்டவர்கள்
முனையதரையர்கள்.
வில்லவராயர்

12) நில ஆவணம்..பாண்டியர். 13நூற்றாண்டு.ஊர்.க.எண்.139 part 1

கள்ளிக்குடி(கள்ளர்?) கொண்ட விளாகமுள்ளிட்ட பற்றும். பாகனூர்(பாகனேறி) கூற்றத்துப் பற்றும்

13) நில ஆவணம் . குலசேகர பாண்டிய தேவர் 13 நூற்றாண்டு. ஊர்.க.எண்.139 iv v.

கையொப்பமிட்டோர் வில்லவதரயன் தொண்டைமான்.

14) நில ஆவணம். பாண்டியர் 13நூற்றாண்டு ஊர்.க.எண்.142.

திருவரங்க தேவனான ஈழத்தரையன்.
கப்பலூரூடையான் அரையன் இராமநான

15) பாண்டியர் 13நூற்றாண்டு.ஊர்.க.எண். 144

காலிங்கராயன் மகன் தொண்டைமான் எடுத்த கோபுரம் (இன்றும் அது தொண்டைமான் கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது)

16) பாண்டியர்.13நூற்றாண்டு.ஊர்.க.எண். 147 தொண்டைமான் கோபுரம் .

மாவ லி வாணாதிராயன்

17) நில ஆவணம். விக்ரம பாண்டிய தேவர். ஊர்.க.எண்.150

களவழி நாடு மாவலி வாணாதிராயர்.
களவழி நாடாழ்வான் ..தமிழ்தரையன்

18) நில ஆவணம். பாண்டியர் 13-14. ஊர்.க.எண்.153-63 துண்டு கல்வெட்டுகள்.

மாவலி வாணதிராயன்.
பொத்தபி சோழன்.
திருவரங்க தேவனான விசயதரயன்.
வில்லவராயன்.
பள்ளனாற்(பள்ளன்?)குட்ட.
கப்பலூரான்.
மழவராயன்.

19) நில ஆவணம் பாண்டியர்(13நூ)ஊர்.க.எண்.188(போசாள மன்னன் பெயரில் சந்தி)

கையொப்பமிட்டோர்.
அழகிய பாண்டிய விழுப்பரையன்.
முடி வழங்கும் பெருமாளான விக்ரம பாணடிய விச்சாதரர்.
அரையன் விரதமுடித்தானான பல்லவராயன்.
மழவராயன்.
வில்லதரயன்.
திணைக்கள நாயகம் அழகனான கச்சிராயன்
கலிங்கத்தரையன்.
விசயராயன்
திணைக்கள நாகம் அழகிய தேவனான அரிந்தவன் விழுப்பரயன்.
திணைக்கள நாயகம் பழதீபரயன்.
திணைக்கள நாயன் சேணாவரயன்.
அழகன் நாராயண தேவனான விழுப்பதரயன்.
உலகுடைய தேவர் வழுதுங்கரயர்.
ஏனாதி கலிங்கத்தரயர்.
பல்லவராயர்.

20) நில ஆவணம். விக்ரம பாண்டிய தேவர்(13)ஊர்.க.எண்.189.

சோழவந்தான் இராஜேந்திர பல்லவராயன்

21)நில ஆவணம். பாண்டியர். 13 நூற்றாண்டு. ஊர்.க.எண்.190.

கையொப்பமிட்டோர்.

வில்லவதரையன்.
குருகுலராயன்.
கள்ளி(கள்ளர்)நாட்டு
காடுவெட்டியான்.
குலசேகர சேதிராயன்.
விழுப்பரயன்.
பொத்தப்பிச் சோழன்.
களவழி நாடாழ்வான்.
ஆதித்த தேவனான பூழித்தரையன்.
ஒருங்கினைத்தவர் காலிங்கராயத் தொண்டைமான்

22) நில ஆவணம் சடையவர்ம குலசேகர பாண்டியத் தேவர். 1203.ஊர்.க.எண்.192

கலிங்கராயர்.
சுந்தர தேவரான பல்லவராயன்

23) விஜய நகர அரசு 1535.ஊ.க.எ.197.செட்டியார் நில தானம்.

கையொப்பம் குலசேகர விழுப்பரயர்.

24) பச்சையப்ப முதலியார் (அகமுடையார்) 1 இலட்சம் வராகன்.

அதிகைமான்.
அணுக்கர்
பன்னாட்டான்.
திருமலைத் தேவர் என நீளும் கல்வெட்டுகள்.

கொடை கொடுத்தல். நில வற்பனை நில உடமை. நில ஆவணத்தில் கையெழுத்திடும் உரிமை. பாண்டிய மன்னருக்கு முடி வழங்கும் உரிமை. அமைச்சர் முதல் அணுக்கர் படை வரை. கள்ளர் குடியினர் அழகர் கோவில் கல்வெட்டு முழுதும் வியாபித்துள்ளனர். பின் எப்படி கொள்ளையிட்டதால் உரிமை பெற்றனர். வடுகர்கள் தங்களை மட்டுமே மன்னர்களாக காட்டிக் கொள்ள புரட்டுகளை கட்டமைத்து புனைவுகளை வரலாறாக்கி திராவிடம் வளர்க்கிறார்கள் திருடர்கள்

இன்றும் இதே பட்டங்கள் உடைய கள்ளர்கள் வாழ்ந்து வருவதும், தமிழ் அகராதி கள்ளர்கள் பட்டங்களாக குறிப்பதும் நாம் அறிந்ததே.

சேதிராயன்
செம்பிதரயன்
தொண்டைமான்,
மழவராயர்
கொங்கராயன்.
தேவர்.
நாடாழ்வான்
காடுவெட்டி
பல்லவராயன்.
தென்னவராயன்.
மீனவதரயன்
முனையதரயன்.
தென்னவன்
விழுப்பதரயன்.
பாண்டியதரையர்.
வானாதிராயன்.
வில்லவராயர்
ஈழத்தரையன்.
காலிங்கராயன்
கச்சிராயன்
கலிங்கத்தரையன்
விழுப்பரயன்
அதிகைமான்.

கள்ளிக்குடி(கள்ளர்)
பாகனூர்(பாகனேறி) கூற்றத்துப் பற்றும்

கள்ளர் அழகர்

 நன்றி

திரு. சோழபாண்டியன் சேர்வைக்காரர்
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு. முனிராஜ் வாணாதிராயர்
திரு : அநன் கார்த்திக்