ஞாயிறு, 30 ஜூன், 2024

கள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை


மாராயம் என்பது சிறந்த படைவீரனுக்கு வழங்கப்பட்ட சங்ககால விருது. தொல்காப்பியம் இந்த விருதைப் பற்றிக் கூறுகிறது. ஆனிரைகளைக் கவர்ந்து வந்த வீரனுக்கு இது வழங்கப்பட்டது. அரையன் < அரசன் என வருவது போலவும், அரசன் > ராசன் என வருவது போலவும் மா-அரையன் என்னும் சொல் மாராயன் என மருவும்.

"பஞ்சவ மாராயன்......கொங்காள்வான்" எனபது கல்வெட்டில் வரும் தொடர். அரசன் பெறும் விருது. மாராயம் பெற்றவன் நெடுமொழி கூறுவான். சங்ககாலத்தில் அரசன் போரில் சிறந்து விளங்கிய வீரனை ‘மாராயம்’ என்னும் விருது வழங்கிப் பாராட்டுவது வழக்கம். இப்படி மாராயம் பட்டம் பெற்றவன் அரசனின் பெருமையை எடுத்துப் பேசுவதோடு மட்டுமன்றித் தன் பெருமையையும் எடுத்து கூறுவது வழக்கம். இதற்கு நெடுமொழி கூறல் என்று பெயர். வஞ்சிப் போரில் வெற்றியைத் தேடித்தந்த வீரனுக்கு மாராயம் பட்டம் வழங்கப்பட்டதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. மாராயம் பெற்றவன் மாராயன். மாராயன் விருதை மன்னவன் தகைமை இல்லாத ஒருவனுக்கு வழங்காமல் இருப்பது நன்று என அறநூல் கூறுகிறது.

பண்டைய தமிழர் வரலாற்றில் தொழில், கலை, வீரம் முதலானவற்றில் சிறந்து விளங்கும் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டதைக் காணமுடிகிறது. இந்த விருதுகள் அரசவையில் வழங்கிப் போற்றப்பட்டன.


எட்டி – சிறந்த வணிகர்
காவிதி – சிறந்த உழவர்
கிழார் – ஊர்த்தலைவர், புலவர்
கிழான் – ஊர்த்தலைவன், சிற்றரசன்
தலைக்கோல் - சிறந்த அவைக்கூத்து நாட்டியக்காரி
தாமரை (விருது) – சிறந்த தெருக்கூத்து விறலி
மாசாத்துவன் –  தரைவணிகரின் தலைவன்
மாநாய்கன் – கடல்வணிகரின் தலைவன் 
மாராயம் – சிறந்த படைவீரன்


சங்ககால வேந்தர்கள் அறிவு வலிமை, சான்றோமை, வீரவலிமை பெற்ற தம் குடிமக்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தமை சங்ககாலத்திற்கு பின்பும் இச்சிறப்புப் பெயர் மரபு தொடர்ந்து வந்துள்ளது. குறிப்பாக கள்ளர் குலம் இப் பட்டங்களை தங்களின் உயிர் காக்கும் கேடயமாக உணர்ந்து பாதுகாத்து வருகின்றனர்.

செங்கோல் சிறக்க செங்குருதி கொட்டியதற்காக சுமார் ஈராயிரம் பட்டங்களை சுமந்துள்ள கள்ளர் மரபு வரலாறு, உலக வரலாற்றில் ஒரு வரலாறாகும்.

சோழப் பெருவேந்தர்கள் தங்களுக்குப் பட்டமுடைய பெயர்களை பூணுவதிலும் தம்மைச் சாந்தோர்களுக்கு பட்டங்களை அளிப்பதிலும் மிகுந்த அக்கரையும் விருப்பமும் கொண்டிருந்தனர் என்பதை கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உணர்துகின்றன. இப் பட்டங்களும், பட்டப்பெயர்களும் அரச அவையில் இருந்த சான்றோர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது. 


முற்கால மெய்க்கீர்த்திகளின் நடை சிறப்பு, அமைப்பு போன்றவை மூலம் இவை எல்லாம் புலமை படைத்த சான்றோர்களால் எழுதப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் பட்டப் பெயர்களை நான்கு பிரிவுகளாக அறியமுடிகிறது.


1) பேராசர்கள் தங்களின் சிறப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப தாங்களே சூடிக்கொண்ட பட்டங்கள். இராசகண்டியன், சிவபாதசேகரன், இரவி குலமாணிக்கம் போன்றவை.


2) பேராசர்கள் தங்களின் அரசுப்பிரதிநிதிகளாக இருந்த தானைத் தலைவர்களுக்கும், தம் உறவினர்களுக்கும் குலத்தவர்களுக்கும் சூட்டிய பட்டங்கள். கடாரம்கொண்டான், சோழங்கன், மாரையன் போன்றவை.


3) பேராசர்கள் தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட குறுநில மன்னர்களுக்கும், அதிகாரிகளுக்கும், தலைவர்களுக்கும் வழங்கிய பட்டங்கள். காலிங்கராயன், சேதிராயன், மழவராயன், நாடாள்வான் போன்றவை.


இராஜராஜன், இராஜேந்திரன் முதலான சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளிலே இன்னோர் பெயர்களிற் சிற்சில காணப்படுகின்றன. அவை:- கச்சியராயன், காடவராயன், காடுவெட்டி, காலிங்கராயன், சீனத்தரையன், சேதிராயன், சோழகங்கன், சோழகோன், தொண்டைமான் , நந்தியராயன், நாடாள்வான், பல்லவராயன், மழவராயன், மேல்கொண்டான், வாண்டராயன், வில்லவராயன் முதலியன.


இவ்வாறே , வேறு சில பட்டங்களும் கல்வெட்டுகளில் உள்ளன. அவை:-


அனகராயன், களப்பாளராயன், குருகுலராயன், சம்புவராயன், தமிழதரையன், பங்களராயன், மன்றாடி, மீனவராயன், மூவராயர்கண்டன், மூவேந்தரையன், வங்கத்தரையன், வாளுவராயன், விலாடத்தரையன், விளுப்பாதராயன் முதலியன.


கள்ளர் குலபட்டங்களை ஆராயும் போது பெரும்பாலும் அவை அரையர், இராயர், ஆண்டார், ஆள்வார், உடையார், கொண்டார், பூண்டார், பிரியர், சுற்றியார், பொறுக்கியார், நட்டார், தலைவர், வென்றார், தேவர், கிளையார், உண்டார் என்றே முடிவுறும்.

4) பேராசர்கள் தங்களின் பல்வேறு கலைஞர்களுக்கும் (அரசியல் மற்றும் அதிகாரம் சார்பற்ற) வழங்கிய பட்டங்கள். கற்றளிப்பிச்சன், தலைக்கோலி, வாச்சிய மாராயன் போன்றவை.

கள்ளர் குல பட்டங்கள் ஏதோ 15 ஆம் நூற்றாண்டில் தான் கள்ளர்களுக்கு வந்தது போலவும் , கள்ளர்கள் பிற சாதியினர் பட்டங்களை திருடி விட்டார்கள் என்றும் பலர் புலம்புவதை காணமுடிகிறது. இவர்கள் இதற்கு ஆதாரமாக 1950 ஆம் ஆண்டுவாக்கில் பர்டன் ஸ்டெயின் (Burton Stein) எழுதிய, விஜய நகர வரலாறு என்ற நூலில் 15 ஆம் நூற்றாண்டில் தான் கள்ளர்களுக்கு பட்டங்கள் வந்ததாக குறிப்பிட்டுள்ளார் என்று கூறுகிறார்கள். இதற்கு அவர் எந்த ஆதாரமும் கொடுத்துள்ளாரா என்றால் அதில் எதுவும் இல்லை. 

150 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டீசார் குறிப்பிட்ட கள்ளர்களின் சில வம்சபட்டங்கள்:

தஞ்சை வாழ் கள்ளர்கள் பல்வேறு வம்சங்களை தங்களுள் கொண்டுள்ளனர்.  இத்தகைய வம்சங்கள் பல்வேறு பட்டங்களால் அழைக்கப்படுகின்றது "

தஞ்சை கள்ளர்களின் பிரபலமான பட்டங்களில் சில :-

தஞ்சிராயர்
வன்னியர் 
சேர்வைக்காரர்
மேனாட்டரையர்
சிறுநாட்டரையர்
சோழகர்
சோழங்கதேவர்
காலிங்கராயர்
வாண்டையார்
தென்கொண்டார்
அண்ணவிசாரர்
தொண்டைமான்
இராசாளியார்
பொன்னப்பூண்டார்
மழவராயர்
காடவராயர்
களாக்குடையார்
பல்லவராயர்
மாதுராயர்
பன்னிக்கொண்டார்" 



சோழ தேச கள்ளர்கள் பல்வேறு வம்சங்களாக தங்களது பட்டங்களை சுமந்து பழங்கால பெருமைகளுக்கு சான்றாக வாழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு பட்டமுடையவர்கள் திருமண முறையில் இணைவதை காலங்காலமாக பின்பற்றி வருகின்றனர்.  

கள்ளர்கள் பல்வேறு பட்டப்பெயர்களை சுமந்து வாழ்ந்து வருவதை 150 ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்களே தங்களது ஆவணங்களில் பதிவு செய்திருப்பது மிகச்சிறப்பிற்குரியது......

A manual of the district of tanjore in the madras presidency/ k venkasamy row / 1883


பல சாதியினருக்கும் பல பட்டங்கள் உள்ளன, அதில் ஒரே பட்டம் பல சாதியினர்க்கும் உள்ளது. ஆனால் கள்ளர்களுக்கு உள்ளது போல சங்க இலக்கியங்களிலும் , தொன்மையான தமிழ் வார்த்தைகளிலும் உள்ள பட்டங்கள் யாருக்கும் இருக்கிறதா  என்றால் கண்டிப்பாக இல்லை.

உதாரணமாக, இங்கே கீழே உள்ள சில பட்டங்கள் வேறு சாதியினருக்கு உண்டா என்றால் கண்டிப்பாக யாருக்கும் கிடையாது.  

1) அம்பர்த்தேவன்
2) அம்பராண்டான்
3) அருவாநாட்டான்
4) உறந்தைராயன்
5) காவிரிநாடன்
6) மண்வெட்டிக்கூழ்வாங்கி
7) புத்திகழிந்தான்
8) முனையதரையன்
9) ஆர்சுத்தியார்
10) சிவலிங்கதேவர்
11) விழுப்பரையர்
12) நாட்டார்
13) களரி
14) பார்புரட்டியார்
15) நாயக்கவாடியார் (நக்கன்வாடி)
16) குடைகிழார்
17) ஆழியான்


இதைப்போல பழமையான தமிழ் சொல்லில் உள்ள பட்டங்கள் இன்னும் பல உண்டு. இதற்கான விளக்கத்தையும், சொல்லின் பழமையும் கீழே காண்போம்.

கள்ளர்களில் உள்ள ஒவ்வொரு பட்டங்களிலும் பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. ஒரே ஊரிலும் அல்லது அதே பட்டங்களில் 200 கிமீ அப்பாலும் உள்ளனர். கள்ளர் பட்டங்களின் பெயர்களால் பல ஊர்களே இன்று சிறந்து விளங்குகின்றன.

இவர்கள் சொல்வது போல கள்ளர்கள் 15 ஆம் நூற்றாண்டளவில் தான், இத்தனை பட்டங்களை அதாவது பழமையான தமிழ் சொல்லில் உள்ள பெயர்களை கூட, தங்கள் பட்டங்களாக தமக்கு தாமே சூட்டி கொண்டார்கள் என்றால் அது நகைப்புக்குரியது மட்டுமல்லாமல், அது அவர்களின் அறியாமை.

மூன்றாம் இராஜராஜ சோழன்
புதுக்குடியான ரா[ஜெ]ந்திர சொழமங்கலத்துக்‌ காணி உடைய கள்ளரில்‌ பெரும[£]ன்‌ அழகனான மணவாள முத்தரயன் 


கல்வெட்டில் பட்டங்கள் கள்ளன் என்பதற்கு - கல்லன் என்று எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டில் குறில் நெடில் என்று மாற்றி எழுதப்படும். அதைபோல் ‘ள’ கரம் ‘ல’ கரமாவது உண்டு . கல்லன் என்பதற்கு அகராதி தரும் விளக்கங்கள் தீயவன் என்று மட்டுமே. தீயவன் என்பது கல்வெட்டில் பொருந்தாது. ற-ர, ந-ண, ல-ள தவறுதலாக ஒன்றிற்க்கு ஒன்றை மாற்றி இலக்கண பிழையோடு எழுதியே வந்துள்ளனர். அதற்க்கான ஆதாரம் கீழே உள்ளன.


மொழி ஒப்பியலும் வரலாறும் என்ற நூலில் 

தேவர் என்பதே தெவர்  என்று குறிக்கப்பட்டுள்ளது

கிபி 1226!! காஞ்சீபுரம்!! சுந்தரபாண்டியன் கால கல்வெட்டில் உள்ள நமது கள்ளர் இன பட்டங்கள், நேரடியாகவே கல்லன் என்றே குறிக்கின்றது.


இந்த கல்வெட்டில்

1) கிளிமங்களமுடையன் கல்லன்
2) கடம்பராயன் கல்லன்
3) காங்கேயன் கல்லன்
4) மாகதராயன் கல்லன்

என்று உள்ளது. கல்லன் பாடகம் என்று வருகிறது. பாடகம் என்பது நில அளவை குறிக்கும். இதற்கான உதாரணமாக ஒரு கல்வெட்டு 

குருவித்துறைக் கோவில் கல்வெட்டு 

1 சோழ குலாந்தகச்ச
2 (துர்வேதி) மங்கலத்(தி)ல் இ
3 ன்னாயனார் சிவநாமத்தா
4 ல் அனுபவித்து வருகிற
5 பாடகம் இருபதாலுள்ள
6 பாடிகாவல் ஸ்ரீ ஸுந்தர பா
7 ண்டிய தேவற்கு யாண்டு
8 20 ஆவது முதல் இன்னா
9 யனாற்கு அமுதுபடியாக
10 க்குடுத்தோம் இவ்வோ

பாடிகாவல் – ஊர், நாடு முதலியவற்றைக் காத்தல்; அதன்பொருட்டுத் தண்டும் வரி. அமுதுபடி – படையல் சோறு 

மேற்படி சதுர்வேதிமங்கலத்து நாயனார் பெயரில் உள்ள இருபது பாடகம் அளவுள்ள நிலத்தின் விளைவிலிருந்து பெறப்படும் வரிவருமானம் பாடிகாவல் செலவினங்களுக்குத் தற்போது பயன்பட்டு வருகிறது. அவ்வருமானம் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவரின் இருபதாவது ஆட்சியாண்டிலிருந்து இக்கோயில் இறைவற்கு அமுதுபடிச் செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படவேண்டும் எனக் கல்வெட்டு ஆணை கூறுகிறது. பாடகம் – ஒரு நில அளவு.

இது போல் காங்கேயன் கள்ளன் பாடகத்தில் (அளவுள்ள) நிலத்தின் விளைவிலிருந்து பெறப்படும் என்றே பொருள்.


விழுப்பரையர் (விழுப்பாதராயர்)


விழுப்பரையர் என்ற பெயரான போரில் பல விழுப்புண்களை பெற்ற அரையர் (சிற்றரசர்) என்று அர்த்தம். கோயிலிற் சுவாமி திருமுன்புகணக்கு வாசிக்கும் உரிமையுடைய மரபினன். பாண்டிபதினாலுக்கும் வேண்டிய விழுப்பாதராயர் (திருவாலவா. அரும்.).

இந்த விழுப்பரையர் சோழர்களின் சிற்றரசாகவும், முதன்மை தளபதியாகவும் கல்வெட்டுகளில் வருகிறார். 

மேலும் கிபி973ல் ஆட்சி செய்ய உத்தம சோழ மன்னர், விழுப்பரையரின் மகளான “கிழானடியை” திருமணம் செய்து கொண்டார், கிழானடியாரே சோழ நாட்டின் பட்டத்தரசியாக இருந்துள்ளார். இதன்மூலமாக சோழர்களின் வரலாற்றில் விழுப்பரையரின் முக்கியத்துவம் எவ்வளவு அளப்பரியது என அனைவரும் அறியலாம்.

சோழர் காலக் கல்வெட்டுகளில் விழுப்பரையரின் போர் வெற்றிகளையும், கொடைகளையும் பல இடங்களில் நாம் அறியலாம். அப்படிப் பட்ட விழுப்பரையரின் கல்வெட்டில் தன்னை கள்ளர் என்றே குறித்துள்ளார்.

ஆம் கிபி 1222 ல் மூன்றாம் இராசராச சோழர் காலத்தில் தொடையூரைச் சேர்ந்த நால்வர்களான கவுசியன் கண்ணன் பட்டன், கவுசியன் திருவரங்கமாளி பட்டன், சூரியதேவ பட்டன், வாச்சியன் என்போர் நத்த நிலங்களை 10,300 காசுக்கு,

கள்ளன் சதுரநான மழை நாட்டு விழுப்பரைருக்கு விற்றுக் கொடுக்கிறார்கள். இதில் தெளிவாக விழுப்பரையரை கள்ளர் என்றே குறிப்பிடுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த ஒப்பந்த கல்வெட்டில் தனது கையெழுத்தாக 

“கள்ளன் சதிரனான மழை நாட்டு விழுப்பரையன்” என்றே குறிப்பிட்டுள்ளார்.






அவரை தொடர்ந்து அவருடன் கையெழுத்திட்ட மற்ற அதிகாரிகளும் தங்களை கள்ளன் என்றே கையொப்பம் இட்டுள்ளனர்.

“கள்ளன் பெரிய தேவன்”
“கள்ளன் பெருமாள்”
“கள்ளன் சீராளத் தேவன்”

இதில் இருவர் தேவர் பட்டம் தாங்கி நிற்பது மற்றொரு சிறப்பு.





கிபி 1043 ல் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் திருக்கோயிலூரில் கிடைத்த கல்வெட்டில் " கிழக்கடையான் கல்லன்" எனும் பெயரில் ஒரு நில அளவு முறை இருந்துள்ளது. 

சான்றோர்களின் பெயரில் நில அளவுமுறைகளை வைப்பது அக்கால நடைமுறை. இந்த காலத்தில் ஒருவரது பெயரில் நாணயம், ஸ்டாம்ப் போன்றவை வெளியிடுவது போல. இதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக புதுக்கோட்டையில் பல்லவராயர்கள் பெயரில், பல்லவராயர் படி எனும் அளவுமுறை கிபி 16-18 ஆம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்துள்ளது. 


கிழக்கிடையான் என்பது கள்ளர் பட்டமாகும். கிழக்கடையான் எனும் பட்டமானது இன்று திரிந்து கிளக்கடையார், கிளாக்குடையார் என கள்ளர் இன மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற நடிகை மனோரமா கிளாக்குடையார் வம்சத்தில் உதித்தவர். இப்பட்டமுடையவர்கள் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் வடக்குக்கோட்டை எனும் பகுதியிலும், பாபநாசம் வட்டத்தில் புலவர் நத்தம் எனும் பகுதியிலும் வாழ்கின்றனர்.


கள்ளர் இனத்தை சேர்ந்த ஒருவரின் பெயர் "'வன்னியர் மிசிரிகண்டன் பொன்னம்பலநாத தொண்டைமான்என்று கல்வெட்டு ( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-845,ஆலங்குடி ) கூறுகிறது .

“ இந்த நாடுகளையும் அறியாமல் செங்கீரையில் பிள்ளன் விசையரையனும் புறம்பன் வன்னியரையனும் ஆலங்குடி மழவராயர் படையை அழைத்து வந்து நாட்டிலே ...'( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-818, திருமெய்யம் )

மேலும் கள்ளர்களுக்கு "நாயக்கர்" என்ற பட்டமும் இருக்கிறது. கள்ளர் பாளையகாரர்களில் நாயக்கர்பாளையம் (அய்யம்பேட்டை) சாவடி நாயக்கர் புகழ்பெற்றவர்கள். இடங்கை வலங்கை வரலாறு என்ற நூலில், பக்கம் - 86 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.


"அய்யம்பேட்டை அப்பு நாயக்க னென்கிற கள்ளனும், பெருமாக்கூர் அப்பு நாயக்க னென்கிற கள்ளனும், மேல்மாந்தை அப்பு நாயக்க னென்கிற கள்ளனும்".

நாவாய் மூலம் வணிகம் செய்யும் கடல் வணிகருக்கு நாவிகன், நாயகன் போன்ற பெயர்களும். சாத்துகள் மூலம் தரைவழி வணிகம் செய்யும் வணிகருக்கு சாத்தன் அல்லது சாத்துவன் என்ற பெயர்.

நாயக்கர் பாளையம் சாவடி நாயக்கர்கள், நாயக்க மற்றும் மரட்டிய மன்னர்களுக்கு போர் உதவி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்று பல சாதிகள் வரலாற்றில் உயர்வான பட்டங்களை, அதாவது வன்னியன், உடையான், முதலியான், முத்தரையன்,  என்ற பட்டங்களை தங்கள் சாதி பெயராக மாற்றிக்கொண்டார்கள். பள்ளி சாதியினர் வன்னியன் என்றும், வலையர், முத்துராஜா போன்ற 29 பிரிவுகள் முத்தரையன் என்றும் , இந்த நூற்றாண்டில் தங்கள் சாதி பெயராக மாற்றிக்கொண்டார்கள்.


முக்குலோத்தோரை தேவர் என்ற ஒற்றை சாதியாக தமிழக அரசு மற்றம் செய்ய தஞ்சை கள்ளர்கள் மற்றும் சிவகங்கை அகமுடையார் எதிர்ப்பு தெரிவித்ததால் மாற்றவில்லை.

நஞ்சுண்டோன்‌” (திருவாலவா. 30:9), 2. கள்ளரில்‌ ஒரு பிரிவினர்‌



நட்டாழ்வார்




தமிழ் பல்கலைக்கழக இணைய தளத்தில் சில பட்டங்களுக்கு தரும் விளக்கம், கள்ளர் இனத்தை மட்டுமே குறிக்கும் என்கிறது. அவை

1) வாண்டையார்



2) இராசாளியர்



3) அண்ணூத்திப்பிரியர் / ஐநூற்றுவர் 



4) அங்கராயர்



5) நாட்டார் 




கீழே உள்ள பட்டம் கள்ளர்களுக்கும் மற்றும் பல சாதிகளுக்கு உள்ளதாக காட்டுகின்றது.

1) வன்னியன்



2) சோழகன்




3) தேவர்



4) பல்லவராயர்




5) தொண்டைமான்





6) மழவராயன்






7) காங்கேயன்




8) முத்தரையன்






9) கொங்கராயர்



கள்ளர்களின் பட்டங்கள் பழமையானது என்பதற்கு சில தரவுகள் 

அம்பர்த்தேவன்:

அம்பர் என்பது மிகவும் பழமையான சொல். 
அம்பர்த்தேவன் என்ற பட்டம் எதன் அடிப்படையில் கள்ளர்களுக்கு வந்தது என்று அறிய முடியவில்லை. ஆனால் இலக்கியங்களின் வரும் மிகவும் பழமையான சொல்லாகும்.

அம்பர் கட்டிகள் 30-90 மில்லியன் ஆண்டுகளாய் உறைந்து கெட்டியாய் ஆன மரப்பிசின் பெயர் ஆகும். மேலும் அம்பர் என்பது தமிழில் ஓர்க்கோலை, பொன்னம்பர், பூவம்பர், மீனம்பர், குறிக்கப்படுகின்றது. அம்பர் பெருந்திருக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக் கோவில் பெயராகும்.

அம்பர் கிழான் அருவந்தை என்பவன் மிகவும் புகழ்பெற்றவன்.


பாடியவர்: கல்லாடனார். பாடப்பட்டோன்: அம்பர் கிழான் அருவந்தை.

புறநானூறு - 385. காவிரி அணையும் படப்பை!
"காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி அம்பர் கிழவோன்.
நல்அரு வந்தை, வாழியர்; புல்லிய
வேங்கட விறல்வரைப் பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே"

பொருள் : காவிரி பாய்ந்துநெல் விளையும் அம்பர் அருவந்தை அவன் பெயர். புலவர் அவனை வாழ்த்தினார். அவன் நீண்டநாள் வாழவேண்டும். கள்வர் கோமான் புல்லி அரசன் ஆளும் வேங்கட மலையில் பொழியும் மழைத்துளியின் எண்ணிக்கையை விட அதிக நாள் வாழவேண்டும்.

அருவாநாட்டான் :

காவிரியின் கழிமுகப் பகுதிக்கு வடக்கேயுள்ள பொண்ணையாற்று பள்ளத்தாக்கு அருவாநாடு என்று அழைக்கப்பட்டது. அதனை ஆண்டவர்கள் அருவாளர் எனப்பட்டனர். காலம் 2000 ஆண்டுகள் முந்திய பெயர். இன்றும் கள்ளர்களில் அருமைநாட்டார், அருவாநாட்டார் பட்டமுடையவர்கள் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.



உறந்தைராயன் :

உறையூர் (சோழருறந்தை யவையத்து (புறநா. 39).) உறையூரின் பழமையான பெயர். தஞ்சை உறந்தைராயன் குடிக்காடு : இவ்வூரில் மக்கள் தொகையில் கள்ளர் பிரிவினரே பெரும்பான்மையினர். அங்கு உறந்தைராயர் பட்டமுடையவரே முதன்மையானவர்கள்.







காவிரிநாடன் :

கரிகால் பெருவளத்தான், காவிரிநாடன் எனும் சிறப்புப் பெயர்களை பெற்றிருந்தான். கள்ளர் குலத்தில் காவிரிநாடன் எனும் பட்டப்பெயர் இவன் சந்ததியினருக்கு வழங்கிவருவதையும் அறியமுடிகிறது. இப்பட்டம் தான் கள்ளர் குல பட்டங்களில் மிகவும் பழமை வாய்ந்தது என்று அறியவும் முடிகிறது.

சிலப்பதிகாரம் பாடலில் "எல்லா நாம் காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும் பூவிரி கூந்தல் புகார்’-சிலம்பு-2915 




"காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான்”-சிலம்பு-1-5,6

திருச்சியில் இன்றும் காவிரியார், காவிரிநாடான் பட்டம் உள்ளவர்கள் உள்ளனர்.


மண்வெட்டிக்கூழ்வாங்கி :

மிக பழமையான தமிழ் சொல், தமிழில் கூழய்யன் என்பது செப்ப வடிவம். கூழைமன் ஒரு சோழ அரசன் பெயர். கூழ்பான் தண்டலம் (திருக்கழுக்குன்றம்) ஓர் ஊர். இவன் காலமுதல் பூமியில் சுரங்கம் அமைத்து தங்கம் எடுக்கும் வழக்கம் உண்டாயிற்று. மண்வெட்டி மூலம் பொன்மணலை அள்ளியதால் மண்வெட்டியில் கூழ்வாங்கி என்ற பட்டம் பெற்றான். (கூழ் என்றால் பொன் என்று அர்த்தம் : பொன் (திவா.) )

பசும்படியார் :

பசுபோகசோழன். ஆவூர் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பசுபதி என்றும்வழங்கலாயிற்று. பசுபதிமங்கை (பசுபதிகோயில்) என்னுமூர்களையும், பசுபோக ஆறு என்னும் சிற்றாற்றையும் உண்டாக்கி அரசு புரிந்தான். பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் அமைந்துள்ள இடம் கள்ளர் பசுபதிகோயில் என்றழைக்கப்படுகிறது.

கள்ளர்களின் பட்டங்களான பசும்படியார் என்பது சிவனின் மற்றொரு பெயர் ஆகும் மேலும் சங்க இலக்கியங்கள் "பசும்படி " என்பது மனங்கொண்ட ஒரு "இலை" என்று போற்றுகிறது. 

பசும் (பொன்) + படி (உலகம்) + உடையார் = பசும்படியுடையார் (அ)  பசும்படியார்.

திருக்குறளில்  "படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும்"  என்பதன் விளக்கமாக நிலம் முழுவதும் ஆண்டாரது செல்வம் தானே வந்து எய்திய இடத்தும்





பசும்படியார் இன்றும் சோழமண்டலத்தில் சிறப்புடன் வாழ்கின்றனர். தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முதல்வர் அன்பு பசும்படியார் ஆவார். இவரது தலைமையில் தமிழக அரசின் அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தைப் பற்றிய அடிப்படை விவரம், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, சுத்த தங்கம் கணக்கிடும் முறை, தங்கத்தை அழித்து தரம் அறியும் முறை, அழிக்காமல் தரம் அறியும் முறை, உரைகல் முறையில் தங்கத்தின் தரம் கண்டறியும் செய்முறைப் பயிற்சி அளிக்கப்படுகிறது.  தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும். 

பாப்புரெட்டி & பாப்பரையன் :

மிக பழமையான தமிழ் சொல்

இவர்களின் பட்டங்கள் பார்புரட்டியார் என்ற பட்டபெயரில் இருந்து திரிந்து பல்வேறு திரிபு பெயர்களை கொண்டுள்ளது. பார்புரட்டியார் என்றால் தம் வீரத்தால் பகைவரை தலைகீழாக புரட்டக்கூடிய ஆற்றல் மிக்கவர் என்று பொருள் படும். இப்பட்டம் உடையவர்கள் திருவையாறு, திருச்சின்னம்பூண்டி, இளங்காடு, வானரங்குடி, திருச்சி, தஞ்சாவூர் முதலிய ஊர்களில் வாழுகின்றனர். மண்ணுக்காக நடந்த மிகப் பெரிய யுத்தத்தின் கதைதான் மகாபாரதம் : மகா பார் அதம். மகா என்றால் பெரிய, பார் என்றால் நிலம் அல்லது பூமி, அதம் என்றால் போர்.

புத்திகழிந்தான், புற்றில்கழிந்தான்:

மிக பழமையான தமிழ் சொல்

பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் புத்திகழிச்சசோழன் ( அறிவு மிகுந்தசோழன்) . புத்திகழிச்ச : அறிவு மிகுந்தபுத்தி என்பது மருவி என்று புற்றி என்றாகிவிட்டது.  கழி என்பதற்கு மிகுந்த என்றும் கழிந்தோர் என்பதற்கு வலிமையானவர் என்றும் அகராதி விளக்கம் தருகிறது 




முனையதரையன், முனையதிரியர் :


சோழ மண்டலச் சதகம் எனும் நூலின் 42 வது பாடலில் இவ்வரலாறு கூறப்படுகின்றது. பாடல்:
“புனையும் குழலாள் பரிந்தளித்த
பொங்கல் அமுதும் பொறிக்கறியும்
அனைய சவுரிராசருக்கே
ஆம் என்று அழுத்தும் ஆதரவின்
முனையதரையன் பொங்கல் “

திருக்கண்ணபுரம், இப்பகுதியை முனையதரையன் என்றொரு குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். திருக்கண்ணபுரத்தின் சிறப்புப் பிரசாதம் ’முனையதரன் பொங்கல்’. இந்த சிறப்புப்பொங்கலுக்கு தனி வரலாறு உண்டு.

மக்கள் செல்வர் T.T.V. தினகரன் முனையதரையர் அவர்கள், இன்று புகழ்பெற்ற அரசியல் தலைவர் ஆவார் 

ஆர்சுத்தியார் :

சோழர் அணிந்து கொள்ளும் பூ ‘ஆர்’. இந்த ஆர் என்னும் பூ ‘ஆத்திப் பூ

“நெடுந்தண் “ஆர”த்து அலங்கு சினை வலந்த
பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலம்
தீந்தேன் கொள்பவர் வாங்குபு பரியும். நற்றிணை 292-௨
ஆர் மரத்தில் தொடுத்திருந்த தேனை எடுப்பதற்காக ஆர் மரத்தை வளைத்தனர். அப்போது ஆர் மரத்தைப் பற்றியிருந்த தமாலக்கொடி நழுமுத்தரையன்விட்டது.

ஆர் (ஆத்திப்பூ) 

புறப்பொருள் வெண்பா மாலை, மூவேந்தருக்குரிய அடையாளப் பூக்கள் சூடுதலைப் பற்றிக் கூறுகிறது. அதில் "அலங்கல் அமர்அழுவத் தார் " காவிரி நாடனான சோழன் ஆத்திமாலை சூடுவான்.

ஆர் என்பது ஆத்திப்பூவைக் குறிக்கும். சோழனுக்குரிய அடையாளப் பூ ஆத்தி. இதனைப் போர்க்காலத்தில் சூடுதல்.

சுற்றியார் :  சூடிக் கொள்வது



குடர் நெடுமாலை சுற்றி - குடல்களாகிய நெடிய மாலையைச் சுற்றி


சோழனின் போர்மறவர்கள் ஆர் (ஆத்திப்பூவை) சுற்றி ( சூடி) போர்க்களத்திற்கு போவார்கள். அந்த போர்மரபினரின் வழிவந்தவர்கள் ஆர்சுத்தியார்கள்.

நரசிங்கதேவர், நரங்கியதேவர் :

பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர்கோவில் கல்வெட்டு:

அரசு: வாணாதிராயர், ஆண்டு:14-ஆம் நூற்றாண்டு
செய்தி : செம்மயிர் பாடிகாவல் சண்டையில் நரசிங்க தேவர், சோழகோன், பல்லவராயர், பஞ்சவராயர்..........

மாவலி வானாதிராயர் காரியத்திர்க்கு..........செவ்வலூர் உரவரும் வடபற்று நாட்டவரான செவ்வலூரு பஞ்சவராயர், நரசிங்க தேவர் உள்ளிட்டோர்க்கும் சோழ்கோனார், பல்லவராயர் உள்ளிட்டார்க்கும் விரோதமான செம்மயிர் விரோதமாய் வெட்டி.......

புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லைப்பகுதியான விராலிமலையில் உள்ள ஊர்களான கட்டலூர், பெரம்பூர் ஊரை மையமாக கொண்டு அந்த ஊரில் உள்ள முதல் கல்வெட்டில் சிவன்கோவில் தெற்கே பொரித்துள்ள வாசகப்படி பெரம்பூர் அரசு நரசிங்க தேவன் என குறிக்கப்படுகிறது.


இரண்டாவது கல்வெட்டில் குன்னாண்டார் கோவிலில் பொரிக்கப்பட்ட வாசகப்படி சோழவளநாட்டு வடகோனாட்டு பெரம்பூர் அரசு அடைக்கலங்காத்தவனான நரசிங்க தேவன் என குறிக்கப்படுகிறது.


ள்ளர்குல நரசிங்க தேவன் வழியினர் கிபி1686ஆம் ஆண்டு மத நல்லிணக்கத்திற்காக கிறித்துவர்களுக்கு தேவாலயம் அமைக்க ஆவூர் பகுதியில் அனுமதி கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை சமகாலத்தில் வாழ்ந்த ஒரு பாதிரியார் கட்டலூர்,பெரம்பூர் கள்ளர் அரசர் ஆவூரில் தேவாலயம் கட்ட அனுமத்தித்தார் என குறித்துள்ளார்.





பண்டாரத்தார் :

நூலகத்தைச் சோழர் காலத்தில் 'பண்டாரம்' என்று அழைத்தனர். பண்டாரம் என்றால் கருவூலம் என்று பொருள். சரஸ்வதி, கல்விக்கான கடவுளாகக் கருதப்படுவதால், நூல்கள் நிறைந்த இடம் 'சரசுவதி பண்டாரம்'. பண்டார வீதி என்றால் அரச வீதி என்று பெயர்.  பாளையவனம் மற்றும் கந்தர்வகோட்டை கள்ளர் குல அரையர்கள் பட்டமாக இன்றும் பண்டாரத்தார் பட்டமாக உள்ளது. 'கொற்றச் சோழர்' எனப் போற்றப்பட்டவர்கள் குடந்தை நகரில் அரசுச் செல்வத்தைப் பாதுகாத்தனர். இது பண்டைய கருவூலம் அதிகாரிகளின் பட்டமாக இருந்துள்ளது.  




தமிழ் பல்கலைக்கழக இணைய தளத்தில் சில பட்டங்களுக்கு தரும் விளக்கம் :

அம்பலகாரன் : 

கிராமத் தலைவன், கள்ளர் மற்றும் வலையர் பட்டப் பெயர்.


கொங்கராயர்: 

கொங்கராயபாளையத்திலுள்ள உடையார் சாதியைச் சார்ந்த பாளையக்காரர்களின் பட்டப் பெயர் மற்றும் கள்ளர் சாதிவகையினரின் பட்டப்பெயர்.




செம்புலி : 


பழுப்புநிறமுள்ள புலிவகை மற்றும் கள்ளர் சாதியில் ஓர் உட்பிரிவு



சேதிராயர் : 

தமிழகத்தின் நடுநாட்டரசர், திருவிசைப்பாவாசிரியருள் ஒருவரான சிவனடியார் மற்றும் கள்ளர் பட்டங்களிலொன்று


சேர்வை : 

அகம்படியர்க்கும், மறவர் கள்ளர் மற்றும் வன்னிய சாதி உள்வகுப்பினர்க்கும் வழங்கும் பட்டப்பெயர்.


சோழகன் : 

கோயம்புத்தூர்க் காடுகளில் வசிக்குங் காட்டுச் சாதியான் மற்றும் கள்ளர் பட்டப் பெயர்களுள் ஒன்று.


தொண்டைமான் : 

புதுக்கோட்டையரசர் பட்டப்பெயர், கள்ளர் மறவர் முதலிய சிலசாதியாரின் பட்டப்பெயர்.


நாட்டார் : 

நகைசெய்ய (திருவாச), நாட்டு மகாசனம், நாட்டாண்மைக்காரர், கள்ளர் மற்றும் செம்படவர் முதலிய சில சாதியாரின் பட்டப்பெயர்.


பல்லவராயன் : சோழர் தம் சேனாபதிகளுக்கு அளித்துவந்த பட்டங்களுள் ஒன்று, கள்ளர் மற்றும் ஓச்சர் முதலிய சிலசாதிகளின் பட்டப் பெயர்.

ராயர் : இராயர் மற்றும் கள்ளர் முதலிய சில சாதியாரின் பட்டப்பெயர்.


பகவராயர் : 




வன்னியன் : 

ஒரு சாதி, கள்ளர் மற்றும் வலையர் முதலிய சில சாதியாரின் பட்டப் பெயர்.

நாயக்கவாடியார்



அங்கராயர் : 

பெருங்குறிஞ்சா. (சித். அக.), கள்ளர் பட்டங்களுளொன்று.


அச்சுதப்பண்டாரம் :

கள்ளர் பட்டங்களுளொன்று.

அச்சுதப்பண்டாரம் : அரிசி  கருவூல தலைவர் 

அச்சுதம் - அரிசி

பண்டாரம் - கருவூலம்

சொல்
அருஞ்சொற்பொருள்
அச்சுதம்கெடுதலின்மை ; அழிவற்றது ; அறுகும் அரிசியும் கூட்டி அணிவது ; அட்சதை .

மழவராயன் : 

கள்ளர்முதலிய ஒரு சார் சாதியினரின் பட்டப் பெயர்.


🎆

முதலியான் :

சோழர் ஆட்சியில் தலைவர்களையும், உயரதிகாரிகளியும் முதலி என்று அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது. முதலி என்ற சொல்லுக்கு முதன்மையானவர் என்று பொருளாகும். இவர்களுள் சேனைமுதலி, படைமுதலி, அகம்படிமுதலி என் மூவகை முதலிகள் உண்டு. தேவார ஆசிரியர்களை மூவர் முதலிகள் என்று அழைப்பதுமுண்டு. முதலியான் காலப்போக்கில் திரிந்து முதலியார் என்று வழங்கலாயிற்று. இப்பட்டம் சோழர் படையுடன் தொடர்பு கொண்டதாக அறியப்படுகிறது. இப்பட்டமுடைய கள்ளர் இனத்தவர் தஞ்சை குருங்குலம், சுந்தராம்பட்டி, குளிச்சப்பட்டு, வாகரைகோட்டை,ஒரத்தநாடு ஈச்சங்கோட்டை, மன்னார்குடி மூவரக்கோட்டை, பெருகவாழ்ந்தான், கீழ்க்கரம்பையம், நீடாமங்கலம்,திருவரங்கநல்லூர், பட்டுக்கோட்டை கிளாமங்கலம் முதலிய ஊர்களில் வாழுகின்றனர். ஒரத்தநாடு முதலிப்பட்டி என்னும் ஊரில் முதலியார் பட்டமுடையோர் முத்ன்மையானவர்களாகவுமதிகமாகவும் வாழுகின்றனர்.


கள்ளரின பட்டங்கள் .(Trichy gazetteer --1907)



பூனையர்

திருமெய்யம் பகுதியில் பூவனைக்குடியில் பூதி களறி அமருன்றி என்னும் முத் தரையன் குடைவித்த புஷ்பவனேசுவரர் கோயிலுண்டு . பூனையர் என்ற பட்டப் பெயர் மேலும் சான்றாக அமையும். பூவனைக்குடி கள்ளர்களின் பட்டமாகிய பூவனையரையர் என்ற பட்டம் இன்று பூனையர் என்று திரிந்து வழங்குகிறது.

பூலுவர் / பாலுவர் 




சானையர்




காலிங்கராயர்




ஆய்வு : 

சியாம் சுந்தர் சம்பட்டியார், 

சிவம் சோழங்கராயர்,  
பரத் கூழாக்கியார்

நன்றி : உயர்திரு. ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்.

சர்வதேச கள்ளர் பேரவை.