சனி, 14 அக்டோபர், 2017

மள்ளர் (மறவர்) மற்றும் கள்ளர் இருவருமே கலந்ததுவே மூவேந்தர்கள் வரலாறு அதுவே முக்குலத்தோர் வரலாறு.

கடந்த நூற்றாண்டு வரை போரை மட்டுமே தொழிலாக கொண்டவர்கள் கள்ளர், மறவர், அகமுடையார்கள் மட்டுமே.

இதில் சங்க இலக்கியம் சுட்டும் மள்ளர் மற்றும் மல்லர் இரண்டுமே மறவர்களை மட்டுமே குறிக்கும். சில இடங்களில் உழவர், வீரர் போன்று சிலவற்றையும் குறிக்கும்.

"மள்ளரொடு புணர்ந்த மாண்பிற் றாகிக்
கள்ளரொடு புணர்ந்த கட்டரண் குறுகிப்"

(விளக்கம்) மள்ளர் - மறவர். கள்ளர்- கள்வர். கட்டரண் - காவலையுடைய அரண்.

மள்ளர் , கள்ளர் என்றால் கருமையானவர்கள் என்பதே ஆதி சொல்.

மள் - (மய்) - மை = கருமை, முகில், காராடு. மள்-மழை = முகில், முகில் நீர். மள் - மண் - மணி = நீலக்கல், கரும்பாசி. மணிமிடற்றோன் = கரிய .

முள் - மள் - மாள் - மாய் - மாயோன் (திருமால்), மாயோள் (காளி). மாய் - மாயம் = கருமை. மள் - (மய்) - மை = கருமை, முகில், காராடு, கரிய குழம்பு

மேலும்



மல்லர் - மற்போர் செய்வோர், வலியர்.

மல்லன் - திண்ணியன், வலியோன், பெருமையிற் சிறந்தோன்.

மள்ளம் - வலி, மள்ளல், பலம்.

மள்ளர் - மறவர், உழவர், குறவர்
( சூடாமணி நிகண்டு " குறவர்கானவரே மள்ளர் குன்றவர். புனவரோடும் இறவுளர்குறிஞ்சிதன்னிலின்புறுமாக்கள்பேரே "), குறிஞ்சி நில மாக்கள், திண்ணியர், படைவீரர்.

மள்ளல் - வலி, மள்ளம்திடம்.

மள்ளன் - படை வீரன், இளைஞன், மருத நிலத்தான் , திண்ணியோன் , படைத்தலைவன், குறிஞ்சி நிலத்து வாழ்வோன்.


"மள்ளர் மள்ள, மறவர் மறவ செல்வர் செல்ல எனும் புறநானூற்று இளந்திரையன் பாடலுக்கு உரையாசிரியர் யாவரும்,

1.மள்ளர் மள்ள எனில் போர்மறவருள் சிறந்த போர்மறவர் என்றும்

2.மறவர் மறவ எனில் கொடு மறத்தனத்திற்கு சிறந்த மறவர் எனவும் பொருள் கூறியுள்ளனர்.


மறக்கருணை - அழித்துக் காட்டுங் கருணை, நிக்கிரக ரூபமான கருணை.

மறக்களம் - போர்க்களம்.

மறக்களவழி - போரிற் பகையழிக்கும் ஒருவனை உழும் வேளாளனாக மிகுத்துக் கூறும் புறத்துறை.

மறக்கற்பு - சீற்றங்காட்டி நிறுத்துங் கற்பு.

மறத்தியர் - பாலை நிலப் பெண்கள்.

மறநிலையறம் - நிரை மீட்டுப் பகை வென்று செஞ்சோற்றுக் கடன் கழியாதாரைத் தண்டித்துக் குறைவுறச் செய்தல், அரசன்

பகையறுத்து நாட்டினைக் காவல் புரியும் அறச் செயல்.

மறநிலையின்பம் - குறியெய்தல் ஏறு தழுவல் முதலிய மறத்தகையால் கன்னியை மணம் முடித்து இன்புறல்.

மறப்பிலி - கடவுள் : நித்தியன் : சுயம்பு : விவேகி.

மறப்புலி - சிங்கம்.

மறமலி - யானை, மதகரி, களிறு, மாதங்கம்.

மறம் - கலம்பகத்தின் ஓர் உறுப்பு, கெடுதி, கொலைத் தொழில், கோபம், சினம், நமன்், பாவம், பிணவலி, வீரம்,
வலி, வெற்றி, போர், மறக்குடி, மயக்கம்.

மறம்வைத்தல் - வன்மம் வைத்தல்.

மறவர் - படைவீரர் : பாலைநில மாக்கள் : வேடர்.

மறவன் - மலைவேடன், வீரன், பாலி நிலத்தான், மறக்குடியான், படைத்தலைவன், கொடியோன்.

ஆனால் இன்றைய பள்ளர்கள் தான் மள்ளர்கள் என்பதற்கும். இன்னும், நெல் பண்பாட்டைக் கொண்டு வந்தவர்கள் பள்ளர்களே என்பதற்கும் எந்தச் சான்றுமில்லை. ஆனால் நெல் பயிராயினும் சரி வேறு எந்தப் பயிராயினும் சரி தமிழகத்தில் வேறாகவும் குமரிக் கண்டத்தில் வேறாகவும் மக்கள் அதனைத் தொடங்கி வைத்துள்ளனர்.

தமிழகத்தை ஒதுக்கீட்டுக்காக மூன்று மண்டலங்களாகப் பிரிக்க வேண்டும்” என்ற திட்டத்தின் படியமைந்த மூன்று மண்டலங்களாகப் பிரிவதைப் பாருங்கள். இந்த மூன்று மண்டலங்களிலுமுள்ள உழுகுடிகள் முறையே பறையர், சக்கிலியர், பள்ளர் என்பது காண்க. பள்ளர்களே நெற்குடிகள் என்ற தங்களது கூற்று இங்கு பொருந்தாமை காண்க.

கி.பி.10ஆம் நூற்றாண்டில் பள்ளர் என்ற சொல் இராசராசன் கல்வெட்டொன்றில் ‌‌‌வெ‌ளிப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அப்படியானால் பள்ளர் என்ற சாதியின் தோற்றம் கிட்டத்தட்ட அந்தக் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காலகட்டத்தில் இருக்கலாம். சோழப் பேரரசின் காலத்தில்தான் பழைய சாதிகள் மறைந்து எண்ணற்ற புதிய சாதிகள் உருவாயின. எண்ணற்ற கோயில்கள் கட்டப்பட்டு அவற்றின் கீழ் நிலங்களும் அவற்றோடு பண்ணையடிமைகளும் கொண்டுவரப்பட்ட காலத்தில் கோயில் கட்டுமானம், பராமரிப்பு, குத்தகைவேளாண்மை என்று புதிய வேலைப் பங்கீடுகளும் தொழில்களும் அதன் விளைவான சாதிகளும் உருவாயின என்பது வரலாறு. 17ஆம் நூற்றாண்டு வாக்கில் பள்ளர்கள் ஒரு வலுவான மக்கள் குழு‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வினராக உருவான போது பள்ளுப்பாடல்கள் உருவாகியிருக்கலாம். மள்ளர் தான் பள்ளர்' என்பதற்கு ஆதாரமாக இவர்கள் காட்டும் பாடல் .

“ "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்கோர்
பள்ளக் கணவன்" ”
—-முக்கூடற் பள்ளு

அதைப்பற்றி : இது 17 அல்லது 18 ம் நூற்றண்டில் எழுதியது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இதை ஆதாரம் கட்டுவது ஏற்புடையதல்ல.

"நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது" என்ற சொலவடையின் அடிப்படையில் பள்ளு வகைக்களை பட்டியலிட்டு பார்த்தால் இவர்களின் உண்மை வரலாறு அறிய முடியும்.

"அடியவர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத்தென்மனார் புலவர்" என்று தொல்காப்பியம் தரும் தமிழர் பண்பாடு. உடலுழைப்போருக்கு களவு, கற்பு எனப்படும் அக வாழ்வு கிடையாது. அவர்களது பெண்கள் "மேலோரி"ன் கட்டற்ற நுகர்வுக்குரியவர்கள் என்று நேற்றுவரை இருந்த நடைமுறை.

"தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப"(கற்பியல். 52)

என்பது தொல்காப்பியம்.

இங்ஙனம் முதன்முதல் தாழ்த்தப்பட்ட தமிழ வகுப்பினர் பாணர். அதற்கடுத்துத் தாழ்த்தப்பட்டவர் பள்ளர். பள்ளர் என்பது பள்ளமான மருதநிலத்தில் வாழ்பவர் என்னும் பொருள். மறவரைக் குறிக்கும் மள்ளர் என்னுஞ் சொல் வேறு.

உழுதுண்ணுங் காராளர் வகுப்பைச் சேர்ந்த மள்ளர் பண்டைக் காலத்தில் இழிவாய்க் கருதப்படவில்லை யென்பது கீழ்வருஞ் செய்திகளால் விளங்கும்.

"நுங்கோ யாரென வினவின் எங்கோக்
களமர்க் கரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கிற் காமம்வீட வாரா
ஆரற் கொழுஞ்சூ டங்கவுள் அடாஅ
வைகுதொழில் மடியும் மடியா விழவின்
யாணர் நன்னாட் டுள்ளும் பாணர்
பைதற் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
கோழி யோனே கோப்பெருஞ் சோழன்."(புறம். 212)

"பெருவிறல் யாணர்த் தாகி யரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையும் உழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையும் அறைநர்
கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந." (புறம். 42)

"மென்புலத்து வயலுழவர்
வன்புலத்துப் பகடுவிட்டுக்
குறுமுயலின் குழைச்சூட்டோடு
நெடுவாளைப் பல்லுவியற்
பழஞ்சோற்றுப் புகவருந்திப்
புதற்றளவின் பூச்சூடி
.........அரியலாருந்து." (புறம். 395)

பள்ளருக் கடுத்தாற்போல் ஒருமருங்கு தாழ்த்தப்பட் டிருந்தவர் நாடார் என்னும் சான்றார் குலத்தார். ஆயின் அவர் தீண்டாதாரல்லர். கோயிலுக்குள் மட்டும் புகவுபெறாம லிருந்தார். கள்ளிறக்குவார் சிவன் கோயில்களுட் புகக்கூடா தென்று ஆகமசாத்திரம் கூறுவதாகச் சொல்லப்பட்டது.

இதனை விரிவாக வேறு ஒரு பதிவில் காணலாம்.