புதன், 31 ஜனவரி, 2024

ஜல்லிக்கட்டு கள்ளர் வீரர்கள்


2024 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்  முதல் மூன்று பரிசையும் தட்டிச் சென்ற 

கள்ளிக்காட்டு புள்ளத்தாச்சி கள்ளன் பெற்ற வீரனும், ஜல்லிக்கட்டில் காளை முட்டி சரியும் குடலே மாலையாக இடும், போர்குடி கள்ளர் மரபின் அம்பலங்கள்

1 பரிசு கருப்பாயூரணி கார்த்தி அம்பலம் 

2 ஆம் பரிசு பூவந்தி அபிசித்தர் அம்பலம்

3 ஆம் பரிசு குன்னத்தூர் திவாகர் அம்பலம் 





மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் 10 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து மகேந்திரா தார் கார் மற்றும் ஒரு லட்சம் ரொக்க பண தட்டிச் சென்றார் அபிசித்தர்_அம்பலம்  





அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாவீரன் சங்கங் கோட்டை ஸ்ரீதர் தேவர்



2020 கிள்ளனுர் ஜல்லிகட்டில் PK ஹரி சோழகர் முதல் பரிசு Bike பெற்றார்



2020 நாஞ்சிக்கோட்டை ஜல்லிக்கட்டுவில் மணி ஓணயர் அவர்கள் முதல் பரிசு பெற்ற தருணம்




2022 ஆண்டு தை மாதம் திருச்சியில் உள்ள கள்ளர் நாடான பெரிய சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தென்னலூர் யோகேஷ் மழவராயர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.




2022 ஆம் ஆண்டு தை மாதம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி தமிழ்செல்வன் சாமந்தர் (சாமந்தர் - படைதலைவர்)   அவர்களுடைய காளை முதலிடம்




புதன், 24 ஜனவரி, 2024

தொ பரமசிவன் பார்வையில் கள்ளர்கள்




பண்பாட்டு அசைவுகள்  - தொ பரமசிவன்   


கள்ளரும்‌ அழகரும்‌ கள்ளழகரும்‌


அழகர்கோயிலில்‌ ஆண்டுதோறும்‌ சித்திரை மாதம்‌ ஒன்பது நாள்‌ நடைபெறும்‌ சித்திரைத்‌ திருவிழாவின்போது நான்காம்‌ திருநாளன்று அழகர்‌, கள்ளர்‌ திருக்கோலத்துடன்‌ மதுரைக்குப்‌ புறப்படுகிறார்‌. ஒன்பதாம்‌ திருநாளன்று இரவு கோயிலுக்குத்‌ திரும்பவும்‌ வந்து சேர்கிறார்‌.

“துர்வாச முனிவரால்‌ தவளையாகும்படி சபிக்கப்பட்ட சுதபஸ்‌ முனிவரின்‌ சாபவிமோசனத்தின்‌ நிமித்தமாகவும்‌, சுந்தரத்தோளுடையான்‌ என்று ஸ்ரீ ஆண்டாள்‌ மங்களாசாசனம்‌ செய்த சுந்தரத்‌ தோள்களுக்கு வருஷம்‌ ஒருமுறை ஆண்டாள்‌ சாற்றிக்‌ கொடுத்தத்‌ இருமாலையை ஏற்றுக்கொள்ளும்‌ பொருட்டும்‌ ஸ்ரீசுந்தரராஜன்‌ 'கள்ளழகர்‌' திருக்‌ கோலத்துடன்‌ மதுரைக்கு எழுந்தருளுகிறார்‌" என்று கோயில்‌ அழைப்பிதழ்‌, அழகர்‌ மதுரைக்கு வருவதன்‌ காரணத்தைக்‌ கூறுகிறது.'

இத்திருவிழாவில்‌ அழகர்‌, கள்ளர்‌ திருக்கோலம்‌ பூண்டு வருகிறார்‌. 'நீ ஒருவர்க்கும்‌ மெய்யனல்லை என்று பெரியாழ்வாரும்‌, 'வஞ்சக்‌ கள்வன்‌ மாமாயன்‌' என்று நம்மாழ்வாரும்‌, இத்தலத்து இறைவனான - அழகரைப்‌ பாடியிருப்பதைக காட்டி: அதுகாரணமாகவே அழகர்‌, கள்ளா வேடம்‌ பூண்டு வருகிறார்‌ என்று புராணிகர்கள்‌ கூறுகின்றனர்‌. இக்கருத்து பொருத்த

கள்ளர்‌ என்ற சாதியாரில்‌ அழகர்மலைப்‌ பகுதியிலும்‌ மேலூர்‌ பகுதியிலும்‌ வாழ்கின்ற 'மேலநாட்டுக்‌ கள்ளர்‌' என்ற பிரிவினர்‌ போல அழகர்‌ வேடமிட்டு வருகிறார்‌. அச்சாதியினரின்‌ அசாரங்களுக்கேற்ற வேடத்தையே அழகர்‌ புனைந்து வருகிறார்‌ என்பது தெளிவு. கைக்கொன்றாக வளதடி எனப்படும்‌ வளரித்தடி, சாட்டை போன்ற கம்பு, மேலநாட்டுக்‌ கள்ளர்‌ சாதி ஆண்கள்‌ இடுகின்ற கொண்டை, தலையில்‌ உருமால்‌, அவர்கள்‌ பெரிதும்‌ விரும்பி அணியும்‌ வண்டிக்கடுக்கன்‌ - இவ்வாறு அமைகிறது கள்ளர்‌ வேடம்‌.











அறியப்படாத தமிழகம் - தொ பரமசிவன்

சங்கும்‌ சாமியும்‌ 

மதுரை மாவட்டம்‌ மேலூர்‌ கள்ளர்‌ சாதியினரில்‌ மணப்பெண்ணை மணமேடைக்கு அழைத்து வரும்பொழுது மணமகனின்‌ சகோதரி துிருச்சங்கு ஊதி அழைத்து வருகிறாள்‌. இவை தமிழர்கள்‌ இடத்தில்‌ முச்சங்க வழக்கம்‌ இருந்ததற்கான எச்சங்களாகும்‌.





தெய்வம் என்பதோர் தொ பரமசிவன்

மரபும்‌ மீறலும்‌ -- சாதி சமய அரசியல்‌ பின்னணி

தேவகோட்டை, சிவகங்கைப்‌ பகுதிகளில்‌ கள்ளர்‌ சாதியினரின்‌ 'நாடு' அமைப்பு இன்னும்‌ இருந்து வருகிறது. இதன்‌ வழி எல்லாச்‌ சாதியினர்‌ மீதும்‌ அதிகாரம்‌ செலுத்த அவர்களால்‌ முடியும்‌. அண்மைக்‌ காலம்வரை அரசுக்குப்‌ போட்டியாகப்‌ பொதுவளங்களை அதாவது புறம்போக்கு மர ஏலம்‌, கண்மாய்‌, மீன்பாட்டம்‌, கள்ளச்‌ சாராயம்‌ காய்ச்சுதல்‌ ஆகியவற்றில்‌ பிற சாதியினர்மீது அவர்கள்‌ மேலாதிக்கம்‌ செலுத்திவந்தனர்‌.


1980இல்‌ தேவகோட்டை அருகே பாகனேரி பில்வ நாயகி அம்மன்‌ கோயிலில்‌ பிற்படுத்தப்பட்ட 'நாட்டார்‌ கள்ளர்‌' வகுப்பினரோடு போராடியே தாழ்த்தப்பட்ட மக்கள்‌ கோயில்‌ நுழைவு உரிமை பெற்றது இதற்கு ஒரு சான்றாகும்‌. ஆக, 1930களின்‌ இறுதியில்‌ முடிந்துபோனதாக அரசியல்‌ கட்சிகள்‌ கருதிய ஒரு சமூக உரிமைச்‌ சிக்கல்‌, நாடு விடுதலை பெற்று 50 ஆண்டுக்காலம்‌ கழித்துச்‌ சமூக அரசியல்‌ உரிமைச்‌ சிக்கலாகப்‌ புதிய வடிவம்‌ காட்டுகிறது.





நீராட்டும் ஆறாட்டும் தொ பரமசிவன்

குடும்பப்‌ பெயர்களை இடும்‌ வழக்கு நம்மிடம்‌ இல்லை. தஞ்சாவூர்‌ பகுதி கள்ளர்‌ மக்களிடையே மட்டுமே அந்த வழக்கு இருந்துவருகிறது.