வெள்ளி, 17 ஜூலை, 2020

அரசு ஆவணங்களில் சில பட்டங்கள்



விஞ்சிராயர் 

விஞ்சிராயர்குறுக்கண்டார் / சேதுராயர் / முதலியார் / நாட்டார் /
நாயக்காவாடியார்

  வாண்டையார் / மண்ணையார் / நந்தியர் / குருக்கையாண்டார் 
 வாண்டையார் / வன்னியர்
விஞ்சிராயர்

விஞ்சிராயர்

விஞ்சிராயர்


 வாண்டையார் / மண்ணையார் / நந்தியர் 
வாண்டையார்

விஞ்சிராயர் /  பூவாட்சியார் 


P. மாரி அய்யா சானையர்


புதுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (1997-2001) , ஐயா மாரி அய்யா சானையர்.

புதுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

முன்னாள் கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்.

அணைத்து கட்சியின் தலைவர்கள் தோழர்களுடன் அரவனைப்போடு பழகியவர்.

தன்வாழ்நாள் முழுவதும் பெரியார் கொள்கைகளில் உருதியாக நின்றவர்.

வருந்துகிறோம் எனது நெருங்கிய உறவினரும் அரசியல் வழிகாட்டிகளில் முதன்மையானவர் கந்தர்வகோட்டை மாவீரர் மாண்புமிகு பே.மாரிஅய்யா

இவரது இல்லம் கோமாபுரத்தில் அமைந்துள்ளது.






திரு.எஸ். மாணிக்கம் ராஜாப்ரியர்



அய்யம்பேட்டை திரு.எஸ். மாணிக்கம் ராஜாப்ரியர் 1950 ஜனவரி 26 சென்னையில் நடந்த குடியரசு தின அணிவகுப்பு விழாவில் மெடல் பெற்றவர். இவரின் மருமகன் ஐயா. செல்வராஜ் நாயக்கவாடியார் அவர்கள்.




மருது சகோதரர்களும் ஆங்கிலேயரும்

இந்த பதிவு வீரம் நிறைந்த மருது சகோதரர்களை இழிவு படுத்தும் பதிவு இல்லை என்பதனை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.  

ஆனாலும் தொண்டைமான் மன்னர்களை இழிவுபடுத்தும் சில ஈனர்களுக்கான  விளக்கமாக, இதை குறிப்பிடுகிறோம்.

தொண்டைமான் மன்னர்கள் தான் மருது சகோதரர்களை பிடித்து தந்தாக, வெள்ளையரோடு சேர்ந்து துரோகம் செய்ததாக எழுதி வருகிறார்கள். முதலில் வரலாற்றை அன்றைய சூழ்நிலையில் தான் பார்க்க வேண்டுமே தவிர, இன்றைய நவீன காலத்துடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது. (மருது சகோதரர்களை காட்டி கொடுத்தது வலையர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது வரலாற்று பதிவு)


The history of Kattabomman and the Maruthu brothers has been written by many scholars in Tamils generally catering for the common people, who have drunk deep in the desire for freedom and who are eager to find their heroes in these men. But most of these works are not based soundly on available records as detailed above. It was once said in the Madras Legislative Assembly by Mr. C. Subramaniam, the then Minister for Education, that a history of Kattabomman as that of a hero does not arise from the records, not because the records are few but because they are many.






மருது சகோதரர்கள் தொடக்கத்தில் ஆங்கிலேயருடன் மிகவும் நட்புடனே இருந்தனர். ஆங்கிலேயருடன் வேட்டைக்குச் செல்லும் அளவிற்கு நட்புடனே இருந்தார்கள். ஆங்கிலேயத் தளபதி கர்னல் வெல்த் என்பவர் (1795இல்) சின்னமருதுவிடம் வளரி வீசும் பயிற்சியினைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 

ஆங்கிலேயருக்கு ஆதரவாக போரிட்ட மருது சகோதரர்கள்:

கிபி 1797 ல், இராமநாதபுர மன்னரை (ரிபெல் சேதுபதி)விடுவிக்க மறவர்கள் ஆங்கிலையரை எதிர்த்து கிளர்ச்சி செய்தனர். அச்சமயம் மறவர்களை ஓடுக்க மருதுபாண்டியர்கள் ஆங்கிலேயருக்கு ஆதரவாக படை அனுப்பி வெள்ளையரை எதிர்த்த மறவர்களை கொன்று ஆங்கிலைய கொடி பறக்க உதவினர். இதனால் மகிழ்ந்த ஆங்கிலேயர்கள் மருதுபாண்டியரை அழைத்து விழா எடுத்தனர். மருதுபாண்டியரும் " தாங்கள் எப்பொழுதும் வெள்ளையர் அரசுக்கு அடிபணிந்து , இருப்போம் என நன்றியுடன் தெரிவித்தனர். மருதுபாண்டியர்கள் மிக வலிமையான படையை கொண்டிருந்ததும், இராமநாதபுர மறவர்கள் ஒடுக்கி போரில் வீரதீரம் காட்டியதும் அவர்களின் போர் வன்மைக்கு ஒர் சான்றாகும் --( Madurai district records! - மாவீரர் மருதுபாண்டியர் SM கமால்! !)

விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்
by கமால், எஸ். எம். எழுதிய நூலில் மருது சகோதரர்களை பற்றி கூறியவை 

பக்கம் 52 இல் 

அரண்‌ மனையில்‌ அடிமைப்‌ பணிபுரியும்‌ பெரிய மருது, அரசியாரை தமது கட்டுப்பாட்டிற்குள்‌ வைத்தது மறவர்‌ இன மக்களிடம்‌ மனக்‌ கொதிப்பை ஏற்படுத்தியது, அண்டை நாடான பெரிய மறவர்‌ சீமையின்‌ சேதுபதி மன்னருக்கு மருது சகோரர்களது. நடவடிக்கைகள்‌ அதிர்ச்சியை அளித்தன.


எல்லைப்பகுதி ஒன்றிலே உள்ள புஞ்சைக்‌ காட்டின்‌ விளைச்சலை அறுவடை செய்து எடுத்துவரும்‌ பொழுது சிவகங்கையார்‌ அந்த நிலம்‌ தங்களது சீமையைச்‌ சேர்ந்தது என உரிமை கொண்டாடி அறுவடை மகசூலை பறித்துச்‌ சென்றனர்‌. துணிகரமான முறையில்‌ நடந்து கொண்ட இந்த தீய நடவடிக்கைக்கு மாற்று நடவடிக்கை யாக இராமனாதபுரம்‌ ஆட்கள்‌ அன்று இரவே அந்தக்‌ கிராமத்தைச்‌ சூறையாடினர்‌. அங்கு வந்த மருது சகோதரர்‌ களின்‌ மக்கள்‌ இராமனாதபுரம்‌ மறவர்களில்‌ சிலரைக்‌ கொன்று எஞ்சியவர்களை தங்களது எல்லையினின்றும்‌ துரத்தி அடித்‌ தனர்‌. 

பக்கம் 57 இல் 


கிளர்ச்சிக்காரர்கள்‌ கை ஓங்கிமிருந்தது. இதனைச்‌ சமாளிக்க சிவகெங்கையிலிருந்து மருது சகோதரர்களின்‌ வீரர்‌ களை வரவழைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில்‌ கலெக்டர்‌ பயன்படுத்தினார்‌.



ந்தப்‌ போரில்‌ கும்பெனியாருக்கு பக்கபலமாக பெரிய மருது வின்‌ மகன்‌ தலைமையில்‌ போரிட்ட சிவகங்கை அணியை கும்பெனியார்‌ பிறகு பாராட்டி தங்கப்பதக்கம்‌ வழங்கினர்




மருது சகோதரர்களை ஒடுக்கும்படி நவாப்புகளிடம் முறையிட்ட வேலுநாச்சியார்:- 

நவாப்புகளுக்கு கிஸ்திப்பணமாக ஒரு லட்சம் தந்த மருது சகோதரர்கள்;

ஆங்கிலேயருக்கு ஆதரவாக திருமயத்தில் பெரும்படையை நிறுத்திய தொண்டைமான்கள்.

ஆதாரம்:- இந்தப்புத்தகம் தமிழ்நாடு அரசின் அருங்காட்சியக்துறையால் முறையான ஆதாரங்களோடு எழுதப்பட்டது.


தொண்டைமான்களுக்கு எதிராக மருது சகோதரர்கள் பல முறை செய்லபட்டனர்.  இதனை வேலுநாச்சியார் பல முறை தடுத்துள்ளார். 



தொண்டைமான் மன்னர்களுக்கும் மருது சகோதரர்கள் ஆங்கிலேய அரசின் உதவியுடன், தன்னுடைய பக்கத்து நாட்டில் வளர்வதும் பிடிக்கவில்லை. (இது சாதிய அடிப்படையில் அல்ல, அவர்களுடைய நாட்டின் எல்லையை சேர்ந்தது)

ஜம்பூ தீவப் பிரகடனம்” 

துருக்கிய-மங்கோலிய தைமூரியத் தலைவனான அவுரங்காசீப் வழிவந்தவரகள் ஆற்காடு நவாப்புகள் ஆவர். ஜம்பூ தீவப் பிரகடனம், அந்நியரான ஆங்கிலேயன் என்ற கொள்ளையனை விரட்டி அங்கே, அந்நியரான நவாப் என்ற கொள்ளையனை அமரவைக்க வேண்டும் என்று கூறுகின்றன. மருது சகோதரர்கள் "'ஜம்பூ தீவப் பிரகடனம்” த்தில் ஆங்கிலேய ஆதரவாக இருந்த மராட்டியர், தொண்டைமானை விரட்டி அங்கே நாயக்கனை அமர வைக்கவேண்டும் எனவும் கூறப்படுகிறது. 

""மேன்மை தங்கிய நவாப் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடம் கொடுத்து விதவை போலாகிவிட்டார்.""

""மேன்மை தங்கிய நவாபிற்கு ஆற்காட்டு சுபாவும் மற்றும் விசயமணத் திருமலை நாயக்கருக்கு கர்நாடகமும் தஞ்சாவூரும் முதல் கட்டமாகவும், மற்றவர்களுக்கு மற்ற சீமைகள் அடுத்த கட்டமாகவும், அந்தந்த நாட்டு வளமைகளையும் நெறிகளையும் மீறாமல் திரும்ப அளிக்கப்படும்.""

"இனி வருங்காலத்தில் ஒவ்வொருவரும் அவரவர் பரம்பரைப் பாத்தியதையே அடையலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐரோப்பியர் தம் பிழைப்புக்கு மட்டும் நவாப்பின் கீழ் பணிபுரிந்து, இடையீடற்ற உண்மையான மகிழ்ச்சி கொள்ளலாம். ஐரோப்பியர் ஆதிக்கம் ஒழிந்துவிடுமாதலால் இனி (ஐரோப்பியர்) தலையீடற்ற நவாபின் ஆட்சியில் கண்ணீர் சிந்தாத இன்ப வாழ்வு வாழலாம். "

இந்த பிரகடன அறிவிப்பு மூலம் தொண்டைமான், மராட்டியர் எதிர்ப்பை பெறுகிறார்கள் மருது சகோதரர்கள்.

மாவீரர் மருதுபாண்டியர் புத்தகத்தில் ஆங்கிலேயருக்கான கடிதம்



அன்று மருது சகோதரர்கள் நடத்திய போரில் நட்புடன் பாண்டிய நாட்டு கள்ளர்கள், மருது சகோதரர்களுக்கு ஆதரவாக இருந்தனர். தொண்டைமான் என்ற கள்ளருக்கு ஆதரவு அளிக்கவில்லை.  

சேதுபதி மன்னர்கள், திருவாங்கூர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், பாஞ்சாலங்குறிச்சி (கட்டபொம்மன்) போன்ற மன்னர்கள் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்தனர். சில முரண்பாடு காரணமாக அல்லது பிரஞ்சு நட்பு என பல காரணங்களால் மட்டுமே ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட்டனரே தவிர, எள்ளலவும் இந்திய சுதந்திர போர் அல்ல.

சேதுபதி மன்னர்களுக்கும் ஆங்கிலேய நட்பும்.




கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேய நட்பும்

கட்டபொம்மன் தாத்தா ஆங்கிலேயனின் நெருங்கிய நட்பு
கிபி 1755, மார்ச் 4 அன்று கர்னல் ஹரான் தலைமையிலான படை திருநெல்வேலி நோக்கி சென்று நத்தக்கோட்டையை தாக்கி அழித்தனர் . பிரிட்டீஷ் படை வருவதை அறிந்த பொல்லாப்பாண்டிய கட்டபொம்மன்( இவர் வீரப்பாண்டிய கட்டபொம்மனின் தாத்தா) ,ஆங்கிலேயருக்கு சமாதான தூது அனுப்பினார்.தான் கப்பத்தை கட்டிவிடுவதாகவும், ஆனால் தவணை முறையில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். முழு தவணையை கட்டும் வரை கட்டபொம்மன் சார்பாக சில பிணையாட்களை வெள்ளையரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவிதாங்கூர் வசம் இருந்த களக்காடு கோட்டை மற்றும் நத்தக்கோட்டை ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. மீதம் இருந்த சிறு பாளையங்களும் அடிபணிந்தன.
(Tinnevelly gazetter 1917 pg 376/387) 



மராட்டியர் ஆங்கிலேய நட்பு





திருவாங்கூர் ஆங்கிலேய நட்பு



திருவாங்கூர் படையில் மறவர்களும் இருந்தனர். 

பூலிதேவருக்கும் பிரஞ்சு நட்பும்






அன்றைய போர்கள் என்பது தங்களுடைய பகுதிகளுக்கான போரே தவிர, அது இந்திய நாட்டிற்காக அல்ல. அன்று இந்தியா என்ற ஒருங்கிணைந்த நாடும் இல்லை. 


டெல்டாவில் பெரும்பான்மையாக வசிக்கும் அகமுடையார்களை, அவர்களைவிட குறைந்த எண்ணிக்கையில் வாழும் கள்ளர்கள் அரசியலில் ஏமாற்றிவிட்டதாக பொய்களை கூறி குழப்பம் விளைவிக்கின்றனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் 1921 ல்( தஞ்சை/ திருவாரூர்/ நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை) மாவட்டங்கள் உள்ளடக்கியிருந்தது. இவற்றில் தஞ்சை/ திருவாரூர் பகுதிகளில் கள்ளர் அடர்த்தியாகவும் மற்ற இரு மாவட்டங்களி


ல் கணிசமாக உள்ளனர். 1921 காலகட்ட சென்சஸ் அறிக்கையின்படி டெல்டாவில் யாரும் யாரையும் வஞ்சிக்கவில்லை, மக்கள் அடர்த்தியின்படியே தேர்தல் வாய்ப்புகள் அமையப்பெற்றதை அறியலாம்!


கள்ளர் இன்றும் சாதிய கட்சியை ஆதரிப்பது இல்லை. அகமுடையார், மறவர், வலையர் நின்றாலும் கட்சியை பார்த்தே வாக்கு அளிக்கின்றனர். கள்ளர்கள் அரசியலில் இன்று வெற்ற பெறுவதற்கு காரணமாக இருப்பது எல்லா சமூகங்களையும் அரவணைத்துச் செல்வதே தவிர சாதியின் அடிப்படையில் அல்ல.


கள்ளர் சரித்திரம்


சென்ற நூற்றி இருபத்திரண்டாண்டுகளுக்குமுன் தஞ்சை நடுக்காவிரியில் முத்துசாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும் நன்மகளாய் அவதரித்தார் பாவால் சுவை வளர்க்கும் பைந்தமிழைக் கற்றுயர்ந்த நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் .


12-04-1884ல் பிறந்தார்கள் அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் என்னும் ஆய்வுக்கட்டுரையை நான் ஈங்குரைக்க விளைகிறேன்.


கள்ளர் சரித்திரம் என அய்யா அவர்கள் எழுதினாலும் மற்ற இனத்தவரை தாழ்த்தாமலும் , தான் சொல்ல வந்த இனத்தை மிகைபடுத்தாமலும் உள்ளதை உள்ளபடியே மற்றைய ஆராய்சியாளர்கள் சொல்லியதை மேற்கோள் காட்டி இக்கால மக்களுக்கு அக்காலத்து தெரியாத பல செய்திகளை விளக்கமாக அவரது இயல்பான உரையிலே கூறியவற்றை நான் சில வற்றை மட்டும் மாற்றி எழுதியுள்ளேன்.


நாட்டார் ஐயா அவர்கள் மற்ற பட்டபெயர்களை செவ்வனே செப்பினாலும் நாட்டாரைப் பற்றி அதிகம் சொல்லாதது அவரது தன்னடக்கத்தைக் காட்டுகிறது.


அவரது ஆய்வுக்கு ஆதாரமாக உறையூர் புராணம், பழைய திருவானைக்காவப் புராணம், செவ்வந்திப் பராணம், கணசபைப்பிள்ளையவர்களின் ஆய்வறிக்கை, சர் வால்டர் எலியட், வின்சன் ஏ. ஸ்மித் மற்றும் சிலவற்றைக் கைக்கொண்டார்.


எதையுமே தான் இட்டுக்கட்டி கூறாமல் ஒவ்வொரு செய்திக்கும் ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.


முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதியவர்கள் தம்முடைய 'தென்பாண்டிச் சிங்கம் ' எனனும் வரலாற்று கதை எழுத இக்கள்ளர் சரித்திரத்தை த் துணைகொண்டார்.



முதல் அதிகாரம் :



பழந் தமிழ் மக்கள்


இரண்டாம் பதிப்பின் முகவுரையாக இதன் ஆசிரியர் எழுதியது


குடி செய்வ லென்னு மொருவற்குத் தெய்வம்


மடிதற்றுத் தான் முந் துறும்---திருவள்ளுவர்


உலகத்தில் எவ்வகையான நற்செயலுக்கும் ஊக்கமும், உணர்ச்சியும் இன்றியமையாதன. மக்கள் அவற்றை அடைதற்குரிய சாதனங்கள் பலவற்றிலும் அவர்களது முன்னோரைப் பற்றிய அறிவும், நினைவும் சிறந்தவை . ஆக, அந்நோக்கத்தினைஅடிப்படையாகக் கொண்டு எழுதப்பெறும் தேச சரித்திரங்கள் பெரிதும் பயன் படுவனவாம். ஒரு சாதி அல்லது வகுப்பினைக் குறித்து எழுதப்படும் சரித்திரம் அவ்வகுப்பினர்க்குள் உணர்ச்சியுண்டாக்கும் அளவாவது பயனளித்தல் கூடும். அன்றி, தேச சரித்திரத்திற்கு அஃது ஓர் உறுப்பாதலும் அமையும். இக்கருத்தால் பற்பல நாட்டிலும் பல வகுப்பினர் தங்கள் சாதி சம்பந்தமாப் புத்தகங்கள்எழுதி வைத்திருக்கின்றனர்.


ஆனால், தமிழ் நாட்டு மக்களில் தொகையாலும், நிலவுரிமை முதலியவற்றாலும் பெரிதும் கருதப்படவேண்டியோரான கள்ளர், மறவர், அகம்படியார் என்பவர்களைப்பற்றி யாதொரு சரித்தரமும் வெளிவந்த தில்லை. சில 'ஜில்லா மான்யுவல்' ஜில்லாக் கெசட்டியர்களிலும், வேறிடங்களிலும் இவர்களைக் குறித்துச் சிறுபான்மையாக எழுதப் பட்டிருக்கின்றன. எனினும் அவை முற்றிலும் உண்மையறிந் தவர்களால் எழுதப்பட்டவையல்ல. அது மாத்திரமன்றி, எழுதினோரிற் சிலர் குறுகிய நோக்கமும் அசூயையும் கொண்டுளோர் எனவும் கருதவேண்டியிருக்கிறது.


கள்ளர்கள் தொன்று தொட்டு ஆட்சி நடாத்தி வந்த வகுப்பினர் என்பதை எவரும் மறுத்தற்கில்லை. இற்றைக்கும் இவ்வகுப்பினரில் ஒரே தமிழ் வேந்தராகிய புதுக்கோட்டை மன்னர் அரசாண்டு வருகின்றனர். ஜமீன்தாரும், பெருநிலக்காரரும் மிகுதியாக இருக்கின்றனர். சென்னை அரசாங்கத்தினரால் ஏற்படுத்தப் பெற்றுள்ள ஓர்சட்டத்திலிருந்தே இவ்வுண்மை அறியலாகும். சென்னை இராஜதானியைச் சேர்ந்த ஜமீன் நிலங்களைக் கூடியவரையில் பாதுகாக்க வேண்டுமென்னும் நோக்கத்துடன் சென்னை அரசாங்கத்தினரால் 1903-ஆம் வருடத்தில் ஓர் சட்டம் இயற்றப்பட்டது.


இக்கொள்கையை நிலை நறுத்துதற்காகப் பின்பு சென்னபட்டினத்து 1903-ஆம் வருடத்து4-வது மசோதா சட்டமும் தோன்றிற்று. இச்சட்டத்தின் பெயர் 'பங்கிடக்கூடாத நிலச் சொத்துக்களைக் குறித்த சென்னபட்டினம் 1903-ஆம் வருடத்து மசோதா சட்டம்' (The Madras Impartible Estates Bill, 1903) என்பது. இதன் எல்லைக்குள் (ஷெடியூலுக்குள்) அகப்பட்ட ஜமீன்களில் தஞ்சையில் உள்ளவை: கண்டர்கோட்டை, கல்லாக்கோட்டை, கோனூர், சில்லத்தூர், பாலையவனம், பாப்பாநாடு, சிங்கவனம், மதுக்கூர், நெடுவாசல், சேந்தங்குடி, அத்திவெட்டி என்னும் பதினொன்றுமாம். இவற்றுள் கோனூர், அத்திவெட்டி என்னும் இரண்டு தவிர மற்றையவெல்லாம் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவை. அவ்விரண்டுங்கூட ஆதியில்கள்ளர் ஜமீன்களைச் சேர்ந்திருந்தனவே.

மற்றும் பாளையக் காரர்களைப்போன்றோ சிறிது ஏற்றத் தாழ்வாகவோ செல்லமும், செல்வாக்குமுடையோர் பலர் இவ்வகுப்பில் இருந்திருக்கின்றனர். இவ்வகுப்பினைக்குறித்துஎழுதினோர் யாரும் இவைகளைச் சிறிதும் ஓர்ந்தவரெனக் காணப்படவில்லை. இக்காரணத்தாலேயே கள்ளர் சரித்திரம் என்னம் இவ்வுரை நூல் எழுதுமாறு நேர்ந்தது.



இதனைப் படிக்கும் அறிஞர்கள் சில கற்பனைக் கதைபோலன்றி உண்மையாராச்சியுடன் கூடிய சரித்திரமாக எழுதுதற்குப்பொரிதும் முயன்றுளேன் என்பதனையும், ஒருவகுப்பினைப் பெருமைப் படுத்துதற்காக ஏனை வகுப்புக்களை இழித்துரைக்கும் குறுகிய மனப்பான்மையடையாரக்கு இஃது அறிவு கொள்ளத்தக் உடையதாம் என்பதனயும் இதிலுள்ள செய்திகள் பெரும்பாலனவும் தமிழ் மக்கள் அனைவரும் படித்தறிய வேண்டியனவாம். தமிழ் நாட்டின் வரலாற்றில இதுவரை யாராலும் வெளிவராத பல அரிய செய்திகளை இந்நூலின் ஐந்தாம் அதிகாரத்திற் காணலாகும்.


இந்நூல் 1923-ஆம் ஆண்டில் வெளியான பொழுது பல சிறந்த புலவர்களின் மதிபுரையையும், பல பத்திரிகைகளின் பாராட்டுரையையும் பெறுவதாயிற்று, சங்க இலக்கியங்களும், இலக்கணங்களும், புராணங்களும், பிரபந்தங்களுமாக அளவில்லாத தமிழ்நூல்களை ஆராய்ந்து வெளிப்படுத்தி வரும் சான்றோராகிய மகா மகோபாத்தியாயர் ஸ்ரீமத் உ.வே. சாமிநாதையரவர்கள் தாம் இதனை முழுதும் படித்துப் பார்த்ததாகவும், கலாசாலை மாணக்கர்கள் படித்துப் பயநெய்துமாறு இது பாடமாக வைக்கத் தகுந்தது எனத் தாம் கருதுவாதாகவும் அன்புடன் தெரிவித்தார்கள் என்பதனை இங்கே குறிப்பிடுகின்றேன்.


இப் பதிப்பிலே பல அரிய புதிய செய்திகள் சேர்க்கப் பெற்றுள்ளன; மிகையாகத்தோன்றிய சில குறைக்கப் பெற்றும், சில திருத்தப்பெற்றும் இருக்கின்றன; பாண்டி நாட்டிலுள்ள கள்ளர் நாடுகளின் வரலாறு முழுதும் செவ்வையாக ஆராய்ந்து எழுதப் பட்டிருத்தலை இப்பதிப்பிற் காணலாகும். கள்ளருடைய நாட்டின் பெயர்களிலும், பட்டப்பெயர்களிலும் பல வழக்கத்தில் உருச் சிதைந்து உண்மையறியக் கூடாதனவாகவுள்ளன.


ஆராய்ச்சியில் உண்மை வெளியான பெயர்கள் மாத்திரம் செப்பஞ் செய்யப் பெற்றும், ஏனையவை வழங்குகிறபடியும் இதில் எழுதப் பெற்றுள்ளன. மற்றும் கள்ளருடைய நாட்டு விவரங்களும், பழக்க வழக்கங்களும் முதலியவற்றில் இன்னும் ஆராய்ந்து காண வேணடியவை பல இருந்தல் கூடும். என் அறிவு ஆராய்ச்சிக்குறைவால் பல பிழைகள் நேர்ந்திருத்தலும் கூடும். அவைகளைக் காண்கின்ற அறிவுடையோர்கள் அருள் கூர்ந்து அவற்றைத் தெரிவிப்பரேல் அடுத்த பதிப்பிலே இதனைப் பின்னும் செப்பஞ் செய்த வெளியிட இடனுண்டாகும்.


கள்ளர் வகுப்பினர் சிற்சில இடங்களில் செல்வம், கல்வி முதலியவற்றிலும், பழக்க வழக்கங்களிலும் மிகவும் கீழ்நிலை யடைந்தவர்களாய்க் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர் என்பது உண்மை. அத்தகையோர் சிறிதேனும் நன்மையடைதற்குத் துணைபுரிதலே இஃது எழுதியதன் முதல் நோக்கமாகும், அந்நோக்கம் இந்நூல் வெளியான நாலைந்து ஆண்டுகளுக்குள்ளாக ஓரளவு நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.

இந்தியாவிலன்றி, இலங்கை, பர்மா, மலேயா நாடுகள், சுமத்திரா முதலிய தீவுகள் ஆகியபல இடங்களிலுள்ளோர் இதனை ஆர்வத்துடன் வரவழைத்துப் படிப்பாராயினர். இவ்வகுப்பினர்க்குள் ஒருவகையான ஊக்கமும், கல்வி விருப்பமும் இதனால் உண்டாயிருக்கின்றன வென்பது நிதரிசனமாகின்றது.



கும்பகோணம் வாணாதுறை ஹைஸ்கூல் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகிய திருவாளர்.T.V.சதாசிவப் பண்டாரத்தாரவர்கள் முதலிய அன்பர்கள் இந்நூல் எழுதுதற்குச் செய்த உதவிகள் முதற்பதிப்பிலே காட்டப்பெற்றன. பாண்டிநாட்டிலே உயர்குடும்ப மொன்றில் பிறந்தாரும், செந்தமிழ்ப் புலமையிற் சிறந்த சந்தநலந்திகழும் பாக்களை நினைத்தமாத்திரையில் பாடும் ஆற்றல் கைவரப்பெற்றாரும்,


துறவு புண்டு திருத்தொண்டியற்றி வருவாரும் என்பாற் பேரன்புடையாரும் ஆகிய திருமிகு. கல்லல் குக. மணிவாசக சரணாலய சுவாமிகள் பாண்டி நாட்டுக் கள்ளர் நாடுகளின் விவரமனைத்தையும் செவ்வனே ஆராய்ந்து தெரிவித்து இப்பதிப்பானது திருத்தமெய்தும்படி செய்தார்கள். அவர்கள் புரிந்த இவ்வுதவியும், மற்றும் பலவாற்றானுஞ் செய்து வரும் உதவிகளும் என்னால் எப்பொழுதும் பாராட்டப் பெறுவனவாகும்.



தமிழகத்திலே தஞ்சை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் கள்ளர் என வழங்கப்படுகிறது. இப்பொழுது இக்குழுவினரில் நீதி மன்றங்கள் பலவும் அமைத்துத் தமது நாட்டினை ஆட்சிபுரிந்து வருகின்ற ஓர் மன்னரும், குறுநில மன்னராய் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.


இன்னவரின் முன்னோர் பழைய நாளில் எவ்விடத்தில் எந்நிலைமையில் இருந்தனர்; இடைக்காலத்தில் அவரது நிலைமை யாது?; இப் பொழுது எப்படியிருக்கின்றனர்? ;என்பன போன்றவை இந்நூலில் ஆராய்ந்து காட்டப்படும் . அதற்குமுன் இந்திய நாட்டிலும், ஈழம், கடாரம் முதலிய நாடுகளிலும் பண்டைநாளில் வந்திருந்து மக்களைக் குறித்துப் பொதுவாக ஒரு சிறிது ஆராய்வது இன்றியமையாதது.


மிகப் பழைய நாளிலே நாகர் என்ற ஓர் வகையினர் இந்திய நாடு முழுதும் பரவியிருந்தனர் என்றும், பின்பு இந்தியாவிற்குப் புறம்பே வடக்கிலுள்ள நாடுகளிலிருந்து திராவிடர் என்பார் இந்தியாவிற்குல் புகுந்து சிறிது சிறிதாக இந்நாடு முழுதும் பரவினர் என்றும், அதன்பின் ஆரியர் என்ற கூட்டத்தார் அவ்வாறே இந்நாட்டில் புகுந்து பரவலுற்றனர் என்றும் சரித்திரக்காரர் கூறுகின்றனர். இதுபற்றி எத்தனையோ வகையான கொள்கைகள் உண்டு; 'ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளில் முந்தகைய தமிழர் ' என்னும் நூலினை ஆங்கிலத்தில் எழுதிய அறிஞர் வி . கனகசகைபப் பிள்ளை அவர்கள் இந்தியாவிலிருந்து பழைய மக்களைப்பற்றிப் பெரிதும் ஆராய்ச்சி செய்திருக்கின்றனர்.


முன் சொன்ன முத்திறத்தாரையுங் குறித்து அவரும் அப்படியே குறிப்பிடுகின்றார். எனினும், திராவிடர்க்கும் ஆரியர்க்கும் நடுவே தமிழர் என்ற வகுப்பினை அவர் புகுத்துஉரைக்கின்றர். அவரது கொள்கைப்படி நாகர், திராவிடர் , தமிழர், ஆரியர் என்ற நான்கு பிரிவுகள் ஏற்படுகின்றன. ஆனால் அவர் எழுதியதிலிருந்தாவது, மற்றவர்கள் எழுதியிருந்ததிலாவது இப்பொழுது காணப்படும் மக்களில் இன்னவரே நாகர், இன்னவரே திராவிடர் என்று இவ்வாறு திடமாக வகுத்தரைக்கக் கூடவில்லை, உரைப்பது அத்துணையெளிதன்று.


எனினும் மறைந்து கிடக்கும் உண்மைகளைக் காண அவாவுதலும், அது குறித்து ஆராய்தலும் இயல்பே யாகலின், பழைய தமிழ் இலக்கிய, இலக்கணங்களையும், புராண, இதிகாசங்களையும், கல்வெட்டு, பட்டயம், பிற்காலத்தோர் எழுதிய சரித்திரங்கள் என்பவைகளையும் பற்றாகக் கொண்டு, இக்காலத்து மக்களியல் புளில் பொருந்துவனவற்றை அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஒருவாறு உண்மையெனத் தோன்றுமவைகளை வெளிப்படுத்தலே இவ்வாரய்ச்சியின் நோக்கமாம்.


தொல்லை நாளில் நகார் என்ற வகுப்பினர் பல இடங்களில் மேன்மை யுற்றிருந்தனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. ஒரு காலத்தில் பவுநேயர் எனப்படும், ஆறுகோடி கந்தருவர் பாதாலத்திலிருந்த நாகருடைய தலைசிறந்த மணிகளையும், அன்னவராட்சியையும் வெளவிக் கொண்டனரென்றும், நாகர் திருமாலிடத்திற் சென்று முறையிட, அப்பெருமான் அவர்களை நோக்கி, 'மாந்தாதா என்னும் சக்கரவர்திதியன் மைந்தனான புருகுச்சன் என்பானிடத்தில்டயாம் ஆவேசித்து நுங்கள் பகைவரை அடக்குதும்' என அருளிச்செய்தன ரென்றும், நாகர் அது கேட்டு வணங்கி விடை பெற்றுப் பாதலம்புக்கு,


தங்கள் உடன் பிறந்த நருமதையென்பாளைப் புருகுச்ச மன்னனுக்கு மனைவியாம்படி அனுப்பினரென்றும், அவளும் அவ்வேந்துடன் சேர்ந்து அவனைப் பாதலத்திற்குக் கொண்டு வந்து விட அம்மன்னவன் மாயோனின் பேரொளியால் ஆவேசிக்கப் பட்டு, அக்கந்தருவர் யாவரையும் அழித்து விட்டுத் தன் பட்டணம் அடைந்தனன் என்றும், புருகுச்சனுக்கு நருமதை வயிற்றில் திரசதஸ்யு என்பான் தோன்றினன் என்றும், அத் திரசதஸ்யுவின் வழியிலே சத்தியவிரதன், திரிசங்கு, அரிச்சந்திரன் முதலிய அரசர்கள் தோன்றினரென்றும் விட்டுணுபுரானம் (விஷ்ணுபுரானம்), நாலம் அமிசம், மூன்றாம் அத்தியாயத்திற் சொல்லியிருக்கிறது.


இனி, வியாச பாரதம், சாந்திபருவத்தின் இறுதியிலுள்ள பன்னிரண்டு அத்தியாயங்களில் பதுமன் என்னும் பெயருள்ள ஓர் நாகனைப்பற்றிய செய்திகள் சொல்லப் பெற்றுள்ளன. அவற்றின் சுருக்கம்:-


"கங்காநதியின் தென் கரையிலுள்ள மகாபதுமம் என்னும் பட்டணத்திலே அத்திரி வமிசத்தவரான ஓர் பிராமணர் இருந்தார், ஐம்பொறிகளையும் வென்று தவத்தில் மேம்பட்டவரான அப்பிராமணர் எந்தக் கருமம் செய்யத்தக்கது? எல்லாவற்றினும் மேலான இடம் எது? அதனை அடையும் நெறியாது? என்பன வற்றை இடைவிடாது ஆராய்ந்து வந்து விடைகிடைக்காதவராயிருந்தார். அப்படி இருக்கும் நாளில் சமாதி நிலையடைந்த பெரியவரான ஒரு அதிதி அவரிடம் வந்தார்.


அவர் மகிழ்ச்சியுற்று அப்பெரியாரைப் பூசித்துத் தமது ஐயத்தைத் தீர்த்தருளும்படி வேண்டிக்கொள்ள, அதிதியானவர் 'யானும் இவற்றில் மயக்கமுடையனாகவேயிருக்கிறேன்: எனக்கும்உண்மை தெரிந்து கொள்ள வேண்டுமெனும் விருப்பமுண்டு. உலகிலே சிலர் முத்திப்பேற்றைப் புகழ்கின்றனர் ; சில வேதியர் யாகத்தின் பயனைக் கொண்டாடுகின்றனர்; சிலர் இல்லறத்தைச் சார்ந்திருக்கின்றனர்; சிலர் அரச தர்மத்தைப் பொருந்தியுள்ளார்; குருவின் பணிவிடை மேற்கொண்டவர் சிலர்; தாய் தந்தையர்களுக்கு ஊழியம் செய்வார்கள் சிலர்; சிலர் அஹிம்சையினையும், சிலர் சத்தியத்தையம் மேற்கொண்டிருக் கின்றனர்;


சிலர் போர் புரிந்து மாள்கின்றனர்; சிலர் உஞ்சவிருத்தி செய்கின்றனர். இவ்வாறாக மேலுலகத்தை அடையம் விருப்பமுடையவர்கள்பல்வேறு வகைளில் நடப்பவராகின்றனர். அதனால் என் மனமும் கலக்க மடைந்திருக்கிறது எனினும் என் குருவினால் உபதேசிக்கப்பட்ட ஓர் செய்தியை உனக்குக் கூறுகிறேன். கோமதி நதி தீரத்தில் நைமிசம் என்ற வனம் உள்ளது. அது முன் படைப்பில் தரும வடிவமான சக்கரம் தங்கப்பெற்றதாகும். அங்கு நாகபுரம் ஒன்றுள்ளது. பதுமன் என்னும் பெயருள்ளவனும் புகழ்மிக்கவனுமான நாகன் ஒருவன் அங்கிருக்கிருக்கின்றனன்.


அவன் கர்மம் உபாசனை, ஞானம் என்னும் மூன்று நெறியிலும் நிலை பெற்றவன்; தன் மனம் மொழி மெய்களினாலே எவ்வுயிர்க்கும் இன்பம் விளைப்பவன்; வாய்மை நெறி தவறாதவன். அவன் உண்மையை அறிவுறுத்துபவன். அன்னவன் கங்கை நீரில் வசிக்கின்றனன்' என்று கூறினர். அது கேட்ட பிராமணர் மிகவும் மகிழ்ந்து, வழி வினாவிக்கொண்டு அந்நாகன் இருப்பிடம் அடைந்து. பல நாள் காத்திருந்து நோன்பியற்றி, முடிவில் அந்நாகர் பெருமானைக் கண்டு ஐயந்தெளிந்து மீண்டனர்" என்பது.


இங்கே காட்டிய இவ்விரு கதைகளிலிருந்தும் நாகர் என்பார் செல்வத்திலும் ஞானத்திலும் மேம்பட்டவராவர் எனக் கொள்ளக்கிடக்கிறது.


நாகர்களைப்பற்றிக் கனகசபைப்பிள்ளையவர்கள் கூறுமாறு:- "தொகையிற் பெருக்க மடைந்து நாகரிகம் வாய்ந்த ஒரு சாதியார் இந்தியா, கடாரம் (பர்மா) இலங்கையென்னும் தேயங்களில் பெரும் பகுதிகளை ஓரொரு காலத்தில் ஆண்டிருக்கின்றனர். இராமாயணத்து நாடவிட்ட படலம் இவர்கள் பெயரைக் குறிப்பதன்றித் தென்னாட்டின் நடுவணிருந்த இவர்களது அரச நகரைப் பின்வருமாறு விரித்துக் கூறுகின்றது.

போகவதிக் கருகே நாகர் வாழும் பதி யொன்றுள்ளது; அது பெரிய தெருக்களையும் மதிற்காப்பினையும் உடையது; தம் நச்சுப் பற்களால் மிகவும் கொடுமை வாயந்துள்ள நாகர் மைந்தரின் சேனைக்கூடம் அதனை காவல் புறிந்திருக்கும் ; மணி மண்டபத்தில் அரியனை வீற்றிருந்து அவர்களை ஆளும் அரசன் வாசுகி என்பான். அந்நகரையும் நகர்ப்புறத்தையும் நன்கு தேடுமின்"



"கி.மு. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் கங்கை, யமுனை ஆறுகளுக்கு இடையில் நாகராண்ட நாடுகள் இருந்ததாக மகாபாரதம் விளக்குகிறது. திங்கள் மரபிற்தோன்றிய ஆரிய வரசர்கள் இப்பொழுது தில்லி(டெல்லி) இருக்கிமிடத்திற்கு அருகில் ஒரு நகரமைக்க ஆங்கிருந்த நாகரை வென்று அப்புறப் படுத்தியதாக அந்நூல் கூறுகிறது. கதாநாயகனான அருச்சுனன் தீர்த்தயாத்திரை சென்ற பொழுது உலூபி என்ற நாக கன்னியொருத்தியையும், மணிபுரத்தையாண்ட நாக வரசனாகிய சித்திர வாகனன் மகள் சித்திராங்கதையையும் மணந்து கொண்டான்.


இவன் பெயரன் தட்சகன் என்ற நாகவரசனால் கொல்லப்பட்டன் , கொலையுண்ட பரீட்சித்தின் மகன் சனமேசயன் நாகருடன் பெரும்போர் விளைத்து அவர்களை ஆயிரக் கணக்காக மடிவித்தான். மற்றும் கி.மு. ஆறாவது நூற்றாண்டில் மகத நாடு நாகரது ஆட்சியிலிருந்ததாகச் சரித்திர ஆராய்ச்சியால் விளங்குகிறது. இவ் வமிசத்து ஆறாம் அரசனாகிய அசாத சத்துருவின் காலத்தில் தான் கெளதம புத்தர் தம் புதுக்கோட்பாடுகளைப் போதித்து, நாகர் பெரும்பாலும் அவற்றையே தழுவும்படி செய்தது".


"இலங்கைத் தீவின் சரித்திரமெல்லாம் தொடக்கத்தில் நாகரைப்பற்றியே கூறும். கி.மு. ஆறாவது நூற்றாண்டில் இத்தீவின் குடபாலெல்லாம் நாகர் ஆளுகையில் இருந்ததெனவும், அதுபற்றியே இதற்கு நாகத்தீவம் என ஓர் பெயர் வழங்கிற்று எனவும் முன்னூல் மேற்கோள்களால்அறியப்படுகிறது. கல்யாணி நகரந்தான் நாகரது தலைநகர். கல்யாணி யரசன் தங்கை மகள் கனவடமாறோலை யரசனாகிய ஒரு நாகனுக்கு மணஞ்செய்விக்கப்பட்டாள். இம்லை, கல்யாணிக் கெதிரில் இந்தியக்கரையில் இக்காலத்து இராமேச்சுரத்திற்கு அருகேயுள்ள கந்தமாதனக்குன்றமாக இருக்கும் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டு .

இப்பொழுது அமராவதி முதலிய இடங்களில் காணப்படும் சிலைகள் பின்புறத்திற் படம் விரிந்த பாம்பின் தலையுடையனவாய் நாகரைக் குறிப்பனவாக உள்ளன. அமராவதிப் பாழ்களிலிருந்து எடுக்கப்பட்ட இச் சிலைகளன் சில பினனங்களைச் சென்னையிற் பொருட்காட்சி மன்றத்தில் காணலாம். இச்சிலைகளில் அரசர்க்கு மூன்று படமும், அவர் மகளிர்க்கு மூன்று படமும், மற்றை நாகர்க்கு ஒற்றைப்படமும் காணப்படும்.



தொழில் திறம் பொருந்த இச்சிலைகளையியற்றிய சிற்பிகள், இந்நாகரை அரவின் தன்மை வாய்ந்து மக்களுருவமும் பாம்புஉருவமும் கலந்த மெய்யினரென்றே நினைத்தனர் போலும். பண்டைக்காலத்துத் தமிழ்ப்புலவர்களும் இவ்வாறே எண்ணம் கொண்டிருந்தனர். தம் காலத்து நாகரை மக்கட்பிறப்பினராய்க் கூறி, தமக்கு முற்பட்ட காலத்தவரை உலகின் கீழ்ப்பாதலத்து உறைவோராய்க் கூறியிருக்கின்றனர். சோழர் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்தின் தொன்மையையும், செல்வப் பெருக்கையும் குறித்தற், இளங்கோவடிகள், "நாக நீணகரொடு நாக நாடதனொடு, போகநீள் புகழ் மன்னும் புகார் நகர்" என்று கூறுவர்.


ஆகலின், ஆயிரத்தெண்ணூறாண்டுகளின் முன்பிருந்த தமிழரது நினைப்பில் நாகரினும் தொன்மையான நாடாண்டோர் உண்டென்ற கொள்கையிருந்ததாக் கொள்ளுதற்கில்லை" என்பன.


இவையெல்லாம் சரித்திவுண்மை நிறைந்த கூற்றுக்கள் என்பதில் ஐயமில்லை, மேற்காட்டியவற்றிலிருந்து, நாகரென்பார் இந்திய நாட்டிலும், இந்தியாவின் தெற்கிலும் கிழுக்கிலும் உள்ள தீவுகளிலும் மிகப்பழைய நாளில் வாழ்ந்து வந்த மக்களென்பதும், சூரிய சந்திர குலத்துப் பேரரசராயினரும் இவ்வகுப்பினருடன் கல்யாணத்தாற் கலந்திருக்கின்றனரென்பதும் இன்னவர் நாகரிகத்தில் மிக மேன்மையுற்றிருந்தவர் என்பதும் நன்கு வெளியாதல் காண்க. இங்ஙனம் பல்வேறிடங்களில் வாழந்துவந்தவர்கள் நாகர் என்னும் ஒரே பெரால் வழங்கப்படிருப்பினும், அவரெல்லாம் நாகரிகம் மிக்குடையார் என அறியப் படினும் அவர்களுக்குள் எவ்வகைப்பிரிவும் இல்லை


அவர்கள் ஒழுக்கங்களில் ஏற்றத்தாழ்வில்லை என்று கூறுதல் தலைமையானது. காவிரிப் பூம்பட்டினத்திலிழருந்த சாதுவன் என்னும் வணிகன் கப்பலேறிப் பொருள் தேடச் செல்லுங்கால் இடையே கப்பலுடைந்து நிற்க , ஒருவாறு உயிர் பிழைத்து அருகிலுள்ள நாகர் மலையை அடைந்து, அங்குள்ள நக்க சாரணர் என்னும் நாகர்களுக்கு நல்லறிவு கூறி அவர்களைத் தீ நெறியினின்றும் நீங்குவித்து மீண்டனன்; என மணிமேகலை கூறுவதாலும் இஃதறியலாகும். எனினும், புத்த மதத்தின் மேன்மையை உணர்த்து வதற்குப் பிரைச் சிறிது தாழ்த்துக் கூறியிருப்பதாக இவ்விடத்துக் கருதுதலும் இழுக்கன்று.


நாகநாடு, நாகபுரம், நாகர்மலை, என்ற இடங்கள் மணிமேகலையிற் கூறப்பட்டுள்ளன. நாகநாடானது, "கீழ் நில மருங்கின் நாகநாடு" என்றும், "நாக நன்னாட்டு நானுறி யோசனை" என்றும் கூறப்பட்டிருத்தலின் அஃது இந்தியாவின் கிழக்கேயுள்ள ஓர் பெரிய நிலப்பரப்பு என்பது பெறப்படும், ஒருகால் அது நாகப்பட்டினத்தைத் தொடர்நது கிழக்கேயிருந்து கடல் கொள்ளபட்டிருப்பினும் இருக்கலாம்.


சோழனொருவனை மணம் புணர்நத பீலிவளையின் தந்தையாகிய வளைவணன் என்னும் அரசனால் ஆளப்ட்டது நாக நாடு என்பது முற்கூறிய நாக நாடோ, பிறிதொன்றோ தெரியவில்லை. நாகபுரம் என்பது தெற்கிலுள்ள தீவாகிய சாவக (ஜாவா) நாட்டின் தலைநகர்; இந்திரன் குலத்தில் வந்தோரான பூமி சந்திரன், புண்ணியராசன் என்னும் வேந்தர்களுக்கு இருப்பிடமானது.


இனி, இதுகாறும் காட்டிப் போந்த வற்றுள் ஒன்றேனும் வட வேங்கடம் தென்குமரியிடைப்பட்ட தமிழகத்துள் வாழ்ந்தோரைக் குறிப்பதாகக் கொள்ளுதற்கு தவறு இல்லை. தமிழக மக்களைத் தெரிந்து கொள்வதற்குப் பழைய தமிழ் நூல்களே சிறந்த கருவியாகும். அவற்றுடன் சேர்ந்தே பிறவும் கருவியாக அமையும். ஆகவே அவற்றைத் துணையாகக்கொண்டு தமிழர் என்பவர் யார் என்று பார்ப்போம்.


திராவிடம் என்ற சொல்லானது தமிழ் எனத்திரிந்த தென்று ஒரு சாரரும், தமிழ் என்னும் சொல்லே திராவிடமாயிற்று என மற்றொரு சாரரும், திராவிடம் என்பது நாட்டின் பெயர், தமிழ் என்பது மொழியின் பெயர் எனப் பிறிதொரு சாரரும் இங்ஙனம் பலபடக் கூறுவர். கனகசபைப் பிள்ளையவர்களோ இருசொல்லையும் இயைபில்லாத வேறு வேறு எனக்கொண்டு திராவிடர் வேறு, தமிழர் வேறு என்பர். அவர், திராவிடர் முன்னும், தமிழர் பின்னுமாக இந்நாட்டிற்கு குடியேறினர் என்பதன்றி, திராவிடராவார் இவர், தமிழராவார் இவர் என விளங்க உரைத்திலர்.


கங்கைக் கரையிலுள்ள தமிலித்தி என்ற இடத்திலிருந்து போந்தவர் தமிழர் என்கின்றனர். தமிழர் வடக்கினின்றும் போந்தவரென்பது நிறுப்படும் பொழுது அவர் கூற்று உண்மையாகலாம். பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர் உறைவிடம் தமிழகம் ஆய தென்னாடேயென்பதும், அவர்கள் ஓரொருகால் வடக்கிலும் சென்று ஆண்மை காட்டிருக்கின்றனர் என்பதும் நாம் காணும் உண்மையாகும். தமிழ் என்னுஞ்சொல் தொன்றுதொட்டு மொழியின் பெயராகவும், நாட்டின் பெயராகவும் வழங்கி வருகின்றது. திராவிடம் என்னுஞ் சொல் பழைய தமிழ் வழக்கிற் காணப்படுவதன்று. திராவிடம் என்பதன் திரிபு தமிழ் என்பது சிறிதும் பொருத்தமில்லாத கூற்றாகும். அது நிற்க:-


இப்பொழுது இந்தியாவிற்குத் தெற்கிலுள்ள இந்துமாகடலானது ஓர் காலத்து ஒரு பெரிய நாடாக விருந்த தென்றும், அந்நாட்டில் தான் முதல் முதல் மக்கள் தோன்றிப் பின் பல நாடு கட்கும் சென்ற ரென்றும் செருமானய நாட்டு ஆசிரியராகிய எக்கல் என்பவர் தமது ஆராய்ச்சியால் கண்டு கூறுகிறார். அங்ஙனம் இருந்து அழிவுற்ற நாட்டினைக் குமரிக் கண்டம் என்றும், இலமூரியா என்றும் பிற்காலத்தார் வழங்குவராயினர்.


குமரிக் கண்டம் என்பது வடக்கில் விந்தியமும் தெற்கில் தென் கடலும், கிழக்கில் சாவகத்தீவும், மெற்கில் மடகாசிகர் தீவும் எல்லையாகவுடையது என்பர். இஃது அழிவுற்றதை மேற்புல ஆசிரியர் பலர் வலியுறுத்துரைக்கின்றனர், கலித்தொகை, சிலப்பதிகாரம், இறையனார் அகப்பொருளுரை முதலிய பழைய தமிழ் நூல், உரைகளாலும் இவ்வுண்மை புலனாகின்றது. தென்புவியில் முதன் முதற் தோன்றியவர்களே தமிழரென்பதும், அதன் பின்னர் பல நாடு கட்கும் முறையே குடியேறினரென்பதும் கருதக் கிடக்கின்ற உண்மைகளாகும். முதன் மக்களின் தோற்றத்திற்கு நெடுங்காலம் பின்ரே தமிழகம் அல்லது தமிழ்நாடு என்ற வரையறை ஏற்பட்டிருத்தல் வேண்டும்.


'சதுமறையாரியம் வருமுன் சகமுழுதும்நினதாயின்


முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பமே'


என்று அறிஞர் சுந்தரம் பிள்ளை யவர்கள் கூறியிருப்பதிலிருந்து தமிழ் இந்தியா முழுவதும் வழங்கியதென்பது அவர்கள் ஆராய்ந்து கண்ட முடிபு என அறியலாகும். பின் ஒரு காலத்தில் தமிழகமென்பது தென்னிந்தியா முழுதுமாயிருத்தல் வேண்டும் . எனினும்இவையெல்லாம் காலங்கடந்த செய்திகளாதலின் இவற்றை விடுத்து. வடவேங்கடம் தென்குமரியிடைப்பட்ட தமிழகத்து மக்களைக் குறித்து ஈண்டு ஆராய்வோம்.


புவியானது மலையும், காடும், பள்ளத்தாக்கும, கடற்கரையுமாகப் பகுக்கப்படுதலின் நானிலம என்று வழங்கப்படுவதாயிற்று. மலையும் காடும் சாந்த விடம் கால வேற்றுமையால் திரிந்து சுரமாதலும் உண்டு. ஆகையால் நிலம் ஐந்துஎனவும் படும், இவற்றை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை எனத் தமிழ் நூல்கள் கூறும். இவற்றிலுள்ள மக்கள் அங்கங்கே பிரிந்து வாழ்ந்து வந்த காலத்தில் அந்த நிலங்களின் இயற்கைப் பண்புகளுக் கேற்ப அவர்களுடைய குணம்,


தொழில், பெயர் முதலியனவும் வேறுபடுமாகலின் மக்கள் ஐந்துவகுப்பினராயினர். இவையே இயற்கையின் உளவாய வேற்றுமையாகலின் தமிழ் நூல்கள் இப்பாகு பாட்டினை அடிப்படையாகக் கொண்டு நிகழா நிற்கும். தமிழின் தென்மைக்கு இஃதோர் சான்றாதல் அறிக.


இவர்களுள், குறிஞ்சி நிலமக்கள் குன்றவர், வேட்டுவர் முதலிய பெயர் பெறுவர். முல்லை நிலமக்கட்கு ஆயர், இடையர் முதலிய பெயர்கள் வழங்கும். பாலை நிலத்தார் எயினர், மறவர் முதலிய பெர்களால் வழங்கப் பெறுவர். மருத நிலத்தினர்க்குக் களமர், உழவர் முதலியன பெயர்களாம். நெய்தனில மக்கட்கு நுளையர், பரதவர் முதலிய பெயர்கள் உள்ளன. மிகப்பழைய நாளில் தமிழகத்தில் இருந்த மக்கள் இவர்களே. இவர்களுள் குறிஞ்சி நிலமக்கள் வலியும், வீரமும் இயல்பிலே மிக்குடையராகலின் ஏனையரை அடக்கியாளும் பெற்றியும் உடையராயினர்.


இன்னவரே " கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு - முன்தோன்றி மூத்தகுடி" என்று கூறப்படுதலும் காண்க. எனினும் நாகரிகமானது மருத நிலத்தே தான் முற்பட வளர்சியடைந்திருத்தல் வேண்டும். ஐந்திணை மக்கள் அறிவும், நாகரிகமும் உடையரான காலத்தே அறிவரும், அரசரும், வணிகரும், பாணர், துடியர் முதலிய ஏனைக்குடி மக்களும் அவர்களுள்ளே தோன்றுவராயினர். தமிழருள்ளே பதிணென்குடி உண்டேன்பது உலக வழக்கால் அறியலாவது.


இவ்வற்றால் தமிழகத்தேயிருந்த இவரெல்லம் தமிழ ரெனப்பட, தமிழகத்தைச் சூழவிருந்த பல திறத்தாரும் நாகரென வழங்கப்படுவராயினர் என்க. தமிழரும், நரகரென்பாரும் இடத்தால் வேறுபட்ட வரேயன்றி, பிறவற்றில் எல்லாம் முற்றிலும் வேறுபட்டவரல்லர். தமிழரது மொழியும், நாகரது மொழியும் இடம்பற்றிச்சிறிது வேற்றுமையடைந்திருந்த தமிழே யன்றிப்பிறிதன்று. காவிரிப்பூம் பட்டினத்தலிருந்து நாகர்மலையை அடைந்த சாதுவன் என்னும்வாணிகன்அங்கிருந்த நாகர்களோடு அவரது மொழியிற்பேசினான் என மணிமேகலை கூறுவதும்



 இக்கருத்திற்கு சார்பாதல் காண்க. தெலுங்கு, கன்னடம் என்னும் மொழிகள் தமிழினின்று உண்டானவை என்னுங்கொள்கை அங்கெல்லாம் முதலில் வழங்கிய மொழி தமிழ் என்பதனைப் புலப்படுத்தும். தமிழானது இங்ஙனம் வெவ்வேறு மொழியைப் பிறப்பித்துவிட்டுத் தான் ஓர் எல்லையுட் பொருந்தி நிற்க, பின்பு அதன் கண்ணும் வேற்றுமை உண்டாகிச் செந்தமிழ், கொடுந்தமிழ் என்னும் பாகுபாடுகளாயிற்று. நெடுங்காலஞ் சென்றபின் ஒரு புறத்திருந்துகொடுந்தமிழ் வேறு மொழிகளாக மாறி மலையாளம் எனப்பட்டது.



ஐந்திணை மக்களுள்ளே சிலரைத் திராவிடரென்றும், சிலரை நாகரென்றும் ஒரு சாரார் கூறுவது எத்துணையும் பொருந்துவதன்று. "நாகரில் மறவர், எயினர்,ஒளியர்,ஓவியர்,அருவாளர், பரதவர் என்ற பல கிளைகளுண்டு; இக்கிளைகளுள் மிக்க வன்மையும், போர்த்திறனுமுடையராய்த் தமிழர்களிடத்திற் தீராப்பகை கொண்டிருந்தவர் மறவரே" என இவ்வாறு கனகசபைப் பிள்ளையவர்கள் கூறுவதன் காரணம் நமக்குப் புலப்படவில்லை.



ஒளியர், அருவாளர், ஓவியர் என்போர் சில குறுநில மன்னரெனப் பட்டினப்பாலை முதலிய வற்றால் அறியலாவது. அவர்களை நாகரென்று கூறிற் கூறுக. ஒருவாற்றால் அவரும் தமழழரே, மறவர், எயினர், பரதவர், என் போரை நாகரென்று கூறுவதும், மறவர் தமிழருடன் பகைமை கொண்டிருந்தன ரென்பதும் எங்ஙனம் பொருந்தும்? இவ்வாறாறால் தமிழர், நாகர் என்ற இருபாலோரும் தமிழகத்திலும், அதனைச் சூழ்ந்த இடங்களிலும் பழங்காலந் தொட்டிருந்து வந்த தொன்முது மக்கள் என்பது கடைப் பிடிக்க. எனவே, இடைக்காலத்தே இந்நாட்டில் குடியேறியவர் ஆரியரென்பதும் ஈண்டே அறியற்பாலது. ஆரியரின் வருகையைப் பற்றியும் சிறிது கூறுதும்.



ஆரியர்கள் ஆதிகாலத்தில் நடு ஆசியாவில் வசித்தவரென்பதும், அவர்கள் அங்கிருந்து இந்தியா, பெருசியா ஐரோப்பா முதலிய இடங்கட்குப் பிரிந்து போயினரென்பதும் சரித்திரக்கார் கொள்கை. ஆரியர் முதலில் வடபெருங்கடற்கரையில் அதாவது வடதுருவப்பககத்தில் வசித்தவரென உலகமானிய பாலகங்காதரதிலகரால் முடிவு செய்யப்பெற்றுள்ளது. இவ்விருகொள்கையும் ஒன்றாக அடக்கிக் கொள்ளினும், ஆரியரது தோற்றம் பற்றி முற்றிலும் வேறுபட்ட இருகொள்கைள் முன்னிற்கின்றன.



இந்தியாவிற்குத் தெற்கிழக்கிலிருந்து ஒரு காலத்தில் அழிவெய்திய குமரிகண்டத்தில் மக்கள் முதற்கன்தோன்றின ரென்பது ஒன்று. இக்கொள்கையின்படி தெற்கெ தோன்றி முதன் முதலில் வடக்கே சென்றுவிட்டவர் ஆரியர் என என்னல் வேண்டும். மத்திய ஆசியாவிலோ வடதுருவப்பக்கத்திலோ முதலில் தோன்றினர் என்பது மற்றொன்று. இவற்றுள் யாதேனும் ஒன்று உண்மையொ? அன்றி இரண்டும் உண்மையோ? எவ்வாறாயினும் ஆரியர் வடக்கிலிருந்து இந்தியாவில் குடியேறியவரல்லர் என வாதிப்பாரும் உண்டு.



எனினும் அவர் தென்னிந்தியாவில் இடைக்காலத்தில் குடியேறியவர் இல்லை என மறுப்பார் யாரும் இலர். முதலில் அவர்களிடத்தும் சாதிப் பாகுபாடு இருந்ததில்லை யெனவும், பின்னரே பிரம, சத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற வருணப்பாகுபாடுகளை ஏற்படுபடுத்திக் கொண்டனர் எனவும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். வருணம் என்பது நிறத்தைப்பற்றி உண்டாய பிரிவு என ஒரு சாரார் கூறுகின்றனர்.



மக்களின் குண கர்மங்களுக்கு ஏற்றபடி நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டன வென்று கண்ணபிரான் கூறியதாகப் பகவத்கீதை உரைக்கின்றது. இக்காலத்துப் பெரியோர்களாகிய காந்தியடிகளும், இரவீந்திரநாததாகூரும் முறையே வருணப் பாகுபாடு அறிவு நூற் கொள்கையோடு பொருந்தியது எனவும், பொருந்தாது எனவும் வேறுபடக் கருதுகின்றனரெனத் தெரிகிறது. எங்ஙனமாயினும் ஆதியில் இந்தகைய பாகுபாடுகளை ஏற்படுத்தி நெடுங்காலம் நிலவச் செய்தவர்கள் பேரறிவுடையவர்களாய் இருந்திருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை.



உலகியல் முட்டின்றி நன்கு நடைபெறுதற்கு இம்முறை இன்றியமையாததென அன்னார் கருதினர் போலும்? மிக ஏற்றத் தாழ்வான சட்டதிட்டங்கள் நீண்ட காலஞ்சென்ற பின்பே கற்பிக்கப் பட்டிருத்தல் வேண்டும். இப்பிரிவு ஏற்பட்ட பின்னும் ஒரு வருணத் தான் மற்றோரு வருணத்தில் கல்யாணஞ் செய்து கொள்ளுதலும் இயல்பாகவே இருந்தது. சூத்திரன் ஒழுக்கத்திற் சிறந்த பிராமணன் ஆவதும், ஒழுக்கத்தின் வழுவிய பிராமணன் சூத்திரனாலவதும் அப்பொழுது இயற்கையே.



ஆரியர் இங்ஙனம் வடக்கிலிருக்கும் பொழுது தமிழகமானது நாகரிகத்தில் ஆரியநாட்டினும் விஞ்சியேயிருந்தது, ஆரியர் தமிழருடன் மாறுபாட்டுணர்ச்சி கொண்டு எழுதிய நூல்களிலும் தமிழர் நாகரிகம் மிகுத்துக் கூறப் பட்டிருக்கிறது. " ஆரியர் வருவதற்கு முன்னரே தமிழர் மிக்க நாகரிக மடைந்து விட்டன ரென்பதை, ஆரியத்தினுதவியின்றியே பெருக்கமாய்க் கிடக்கும் தமிழ்ச் சொற்களாலே நினைத்தவற்றைத் தெளியக் கூறும்படி யிருப்பதே விளக்கும். உணமையில் நிலைபெற்ற பழைய தமிழ் நூல்களில் இசை, இலக்கணம், சோதிடம், தத்துவம் முதலிய பயிற்சிகளுக்கு வேண்டிய சொற்கள் தமிழ்ச் சொற்களாகவே காணப்படுகின்றன.



ஆகையால் பிரமணரோ அல்லது மற்றை ஆரியர்களோ வருதற்கு முன்னரே இக்கல்விகள் போற்றி வளர்க்கப்பட்டன என்பது திண்ணம்" என்று கனகசபைதப்பிள்ளயைவரக்ள கூறுவது முற்றிலும் உண்மையாகும். தமிழகத்தின் நாகரிகமும், செல்வப் பெருக்கும் அன்றோ ஆரியமக்கள் அதன் கட் குடிப்புகும்படியான பேரவாவை யெழுப்பிவிட்டன. ஆரியர் எப்பொழுது தமிழகத்தில் குடிப் புகுந்தனரென இப்பொழுது அறுதியிட்டுரைக்கக் கூடவில்லை.



 எனினும் நெடுங்காலத்தின் முன்பே புகுந்துவிட்டனரென்பதற்குத் தமிழ் நூல்களே சான்று பகரும். முதலில் பிராமணர் அல்லது நோன்பிகளே வந்து கொண்டிருந்தனர். தமிழ் நாட்டிலுள்ள தெய்வத் தலங்களையும், தீர்த்தங்களையும் நோக்கி அங்கும் இங்கும் சென்று கொண்டிருப்பதே அன்னாரது தொழில். இப்பொழுதும் தண்டு, கமண்டலம் முதலியன கைக்கொண்டு இராமேச்சுரம் முதலிய வற்றிற்குச் சென்று வருகிற வடநாட்டுப் பிராமணரை நாம் பார்க்கின்றோம்.



பண்டும் இப்படித்தான் சென்று கொண்டிருந்தாராவர். பின்பு அவர்கள் தமிழ்வேந்தரையடுத்துப் பல வழியாலும் அவர்களைத் தம்வயமாக்கி, தம் இனத்தவரை ஒவ்வொரு கூட்டமாகக் குடியேறும்படி செய்துகொண்டனர். தமிழரோ பிரதேசத்தினரை விருந்தேற்றுபசரிக்கும் பெருமாண்பு இயற்கையில் வாய்ந்தவர். அதனோடு, சிறிது அறிவு முதலியன வாய்ந்தாரைக் கண்டால் அவர் எப்படி யொழுகுவரென்பது கூறவேண்டுவதில்லை.



இவ்வாறு ஆரிய மக்கள் தமிழ் வேந்தருடன் கலந்து நட்புச் செய்து கொண்டு, அவருதவியால் தமிழ் நாட்டிலும் நால்வருணப் பாகுபாட்டினை யேற்படுத்தினர். ஒரு நாட்டினர் வேறு நாட்டிற் சென்று செல்வாக்குப் பெற்ற பொழுதில் தமது கொள்கையை அங்கும் நிலை நாட்ட முயல்வது இயற்கைதானே. தமிழகத்தில் அறிவரும், அரசரும், வணிகரும், உழவரும், முன்பே இயல்பாக இருந்தனரெனினும், அன்னார் வேறு வேறு வகுப்பினரென்றாவது. அவர்க்கு இன்னின்ன தொழில்களே உரிய வென்றாவது வரையறை இருக்கவில்லை.



ஆரியமக்களே வரையறை ஏற்படுத்தினர். எனினும் ஆரிய நால்வருணத்திற்கும், தமிழ் நாற்குலத்திற்கும் வேற்றுமை பெரிதாகும. ஆரியரில் நாலாம் வருணத்தவர் சூத்திரர் ஆவர்; மேல் மூன்று வரணத்தாரும் ஏவிய செய்தலே அவரவது தொழில், தமிழரில் நாலாம் குலத்தவர் வேளாளர் ஆவர்; அவரது தொழில் உழவு அல்லது வேளாண்மை ஆகும்.



'வேளாண் மாந்தரக் குழுதூணல்ல



தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி'




என்று தொல்காப்பியம் கூறுகின்றது. தமிழரில் உழவராயுள்ளோர் பெரிதும் மதிப்பிற் குரியரென்பது துணிபு. ஆரியப் பிராமணரும் தமிழரசரும் சேர்ந்து இங்ஙனம் வரையறை ஏற்படுத்தினராயினும் தமிழரில் பெரும் பகுதியினர் இதற்குக் கட்டுப் படவில்லை; இன்றைக்கும் கட்டுப்படாமலிருக்கின்றனர். தமிழர் யாவரும் அவ்வரையறையை ஏற்றுக்கொண்டிருப்பின், தொல்காப்பியர் 'ஆயர் வேட்டுவர்' என்று சூத்திரம் செய்திருத்தல் அமையாது;




பழந்தமிழ் நூல்களிலெல்லாம் ஐந்திணை மக்களைத் திணைப் பெயரால் கூறுதல் பொருந்தாது; தொன்றுதொட்டு இன்றைய நாள்வரை நான்கி லடங்காத வேறு வேறு பெயர்களால் அவர்கள் கூறப்பட்டு வருதலே நாற்குல வரையறைக்கு அன்னவர் கட்டுப் படவில்லை யென்பதை நன்கு விளக்கும். இது குறித்துக் கனகசபைப்பிள்ளையவரக்ள கூறுவதும் அறிந்து கொள்ளத்தக்கது. அவர் சொல்வது:-




"கிறித்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளில் தொல்காப்பியர் எனபவர் தமிழில் இலக்கணம் செய்து, தம் பெயரை அந்நூலுக்கு வைத்து தொல்காப்பியம் என வழங்கினார். அவர், அறிவர் அல்லது தமிழ் முனிவரைப்பற்றிப் பல இடங்களில் குறித்திருக்கின்றனர். ஆனால், மரபியலில், அவரைப்பற்றி ஒன்றுஞ் சொல்லாது விடுத்து, பூணூல் தரித்த பார்ப்பனரை முதல் வகுப்பினராகக் குறிக்கின்றார். அரசரை இரண்டாவது வகுப்பினராகவும், வணிகரை மூன்றாவது வகுப்பினராகவும் கூறுகின்றார். பின்பு, வேளாளரை நான்கவது வகுப்பினராகக் கொண்டு அவர்க்கு உழுதலைத்தவிர வேறு தொழிலில்லை என்று சொல்லுகிறார் . தமிழரை வருணபேதத்தில் தமக்குக் கீழாக்கப் பிராமணர் செய்த முதல் முயற்சி இதுதான். தமிழகத்தில் சத்திரிய, வைசிய, சூத்திரப் பாகுபாடு இல்லாத பொழுது தமிழரின் மேம்பட அன்னார்க்குக் கூடவில்லை.




தொல்காப்பியர் ஆயரையும், வேட்டு வரையும் பற்றிக் கூறுகின்றார். ஆனால் வருணப் பாகுபாட்டிற்கு ஒத்து வராமையால் அவர்களையம், மறவர், வளையர், என்போரையும் அவர் மரபியலில் குறிக்கக் கூடவில்லை" என்பது.




பின்பு தமிழ் வேந்தர்கள் வேள்வியியற்று மாறு கற்பிக்கப்பட்டு, எண்ணிறந்த வேள்விகளை யியற்றினர். அவ்வேள்விகளில் எல்லாம் பிராமணர் ஆசிரியராயிருந்து வந்தமையின் அவரது பெருமை பெரிதும் மிகுவதாயிற்று. ஆரியரும் தமிழரும் மதக்கோட்பாட்டில் ஒருவாற்றால் ஒன்றுபட்டனர். இந்தியநாடு முழுதுமுள்ள ஆரியரும் தமிழருமாகிய அனைவர்க்கும் ஒரே வேதம் மத நூலாயிற்று. தமிழ் நாட்டிலுள்ளாரில் பிராமணரை ஆரியரென்றும், ஏனையரைத் திராவிட ரென்றும் பிரித்தலும் பொருந்தாது. ஆரிய நாட்டிலிருந்து பிராமணர் மட்டும் தமிழகத்தில் குடியேறினர் என்பது பொருந்தாமையின் தமிழருள்ளும் ஆரியர் கலந்திருக்கின்றனர் என்பது உண்மை. பிராமணரும் வதுவையால் (திருமணத்தால்) கலந்து விட்டனர். ஆகலின் அவரை வேறு பிரிப்ப தென்பது எங்ஙனம் பொருந்தும்.





திருவாளர் பி.டி.சீனிவாசையங்கார் ( எம்.ஏ. , எல்.டி..) அவர்கள் பின் வருமாறு கூறுவர்: "இப்போழ்து இந்தியாவில் இருக்கும் 'ஆரியர்' 'தமிழர்' என்பாரைப்பற்றிப் பார்க்குங்கால் அவர்கள் 'ஆரியத் தமிழர்' 'தமிழ் ஆரியர்' என்னும்படி ஒன்று பட்டுக் கலந்து கொண்டமையால் தனி ஆரியராயினும் காண்பதரிது. வடபாலிருந்து முன்வந்த ஆரியர் என்னும் ஆற்று வெள்ளம் இந்தியாவென்னும் தனித்தமிழ் நாட்டிலுள்ள தமிழரென்னும் பெருங்கடலுட்புக்க பின்னர் ஆரியர் தமிழரேயாயினர் என்று கூறுதலே சால்புடைத்து" பல்லாயிரம் ஆண்டுகளாக ஓரிடத்திலிருந்து, பழக்க வழக்கங்களில் ஒன்று தலுற்று ஒரு கடவுளை வழிபட்டு நண்பராய் வாழ்ந்து வவோரக்குள் காலதே இயல்புக்கேற்பச் சில காரணங்களால் பிரிவு உண்டயினும், அதனை நீடிக்க விடாது பிரிவின் காரணங்களை யறிந்து விலக்கி, ஒற்றுமையாய் வாழ்தலே கடனாம். பழைய தமிழ்ச்சங்க நாளிலே பிராமணருள்ளிட்ட அனைவரும் தமிழைத் தங்கள் தாய் மொழியாக் கொண்டு மதித்துப் போற்றி வந்திருக்கின்றனர் என்பதும், மற்றும்




சிறிது பிற்காலத்திருந்த திருஞான சம்பந்தர் முதலிய பெரியாரெலல்லாம் தம்மைத் தமிழரென்றே பெருமையுடன் பாராட்டி வந்திருக்கின்றனர் என்பதும் அறியற் பாலவாம். சமய குரவர் முதலாயினார் பெருமையினையும், அவர்கள் செய்து வைத்துள்ள உதவிகளையும் தமிழ் மக்கள் சிறிதும் மறப்பாரல்லர். அங்கெல்லாம் வகுப்பு வேற்றுமையினை யேற்றுவோர் அறிவிலிகளேயாவர். உண்மைத் தமிழராயினாரும், உண்மை அறிவுடையாரும் அவர்களை என்றென்றும் தெய்வமாகக் கொண்டு போற்றுவர் என்க.




இனி, இப்பொழுது வழங்குவது போல ஐயர், ஐயங்கார், நாயுடு, செட்டி, பிள்ளை, முதலியார் என்னும் பட்டப் பெயர்களாவது, கள்ளர் வகுப்பினர் முதலானோர் பால் காணப்படும் அளவற்ற பட்டப் பெயர்களாவது சங்க நாளில் வழங்கவில்லை. அவையெல்லாம் இடைக் காலத்துத் தோன்றியவையே. ஐயர் என்பது முமனிவர் அல்லது பெரியாருக்கே சிறப்பாய் வழங்கியது. கண்ணப்பர், நந்தனார் முதலிய வேறு குலத்துப் பெரியார்களையும் சிறப்புப்பற்றி ஐயர் என ஆன்றோர்வழங்கியிருக்கின்றனர். சிறப்புப் பெயர் வருங்காலும்,




'சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவீக்கும்



இயற்பெயர்க் கிளவி முற்படக்ட கிளவார்'




என்ற விதிப்படி, அமர முனிவன் அகத்தியன், தெயவப்புலவன் திருவள்ளுவன், சேரமான் சேரலாதன் என்றாற் போல இயற் பெயர்க்கு முன் வருதலே மரபு. பிற்காலத்தில் தான் பெயர்கள் இம்முறை மாறி வரலாயின. சிறப்புப் பெயரும் முன்பு யாவர்க்கும்வழங்குவனவல்ல. எனவே பண்டை மக்கள் தம்மை வேறுபடுத்திக் காட்டப் பெரிதும் விரும்பவில்லையென்பது போதரும்.





இரண்டாம் அதிகாரம் :




நாக பல்லவ சோழரும், கள்ளரும் :




இனி, கள்ளர் குலத்தவர் முற்கூறிப் போந்த மக்களுள் எவ்வினத்தைச் சேர்ந்தவர் என்றும், இன்னவர் நிலைமை எத்தன்மைய தென்றும் பார்ப்போம், சங்கநாளிலே திருவேங்கடத்தை ஆண்ட புல்லி என்னும் அரசன் கள்வர் கோமான் என்று கூறப் படுகின்றான். அவன் வீரத்தினூம், வள்ளன்மையினும் மிக மேம் பட்டவனென்று தெரிகிறது. பொய்யடிமையில்லாத புலவராகிய சங்கத்துச் சான்றேருள், கபில பரண நக்கிர ரோ ஒப்பப் பெருமை வாய்ந்த கல்லாடனாரும் , மாமூலனாரும் பல பாட்டுக்களால் அவனைப் பாடியிருப்ப தொன்றே அவனது பெருமையை நன்கு புலப்படுத்தா நிற்கும்.





அகநானூற்றில்,




கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்’
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை வழுச்சீர வேங்கடம்’
‘புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து’
‘புல்லி நன்னாட் டும்பர்’
‘பொய்யா நல்லிசை மாவண் புல்லி’
‘நெடுமொழிப் புல்லி’



என மாமூலருமம்,




‘புல்லி-வியன்றலை நன்னாட்டு வேங்கடம்’

‘மாஅல்யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடம்’



எனக் கல்லாடனாரும் பாடியிருக்கின்றனர்.



நற்றிணையில்,



‘கடூமான் புல்லிய காடிறந்தோரே’



என்றார் மாமூலனார் . அதனுரை,



‘கடிய குதிரையையுடைய கள்வர் கோமான் புல்லியென்பவனுடைய வேங்கட மலையிலுள்ள காட்டின் கண்ணே சென்ற நமது காதலர்’ — என்பது.



புறநானூற்றிலே, கல்லாடனார், அம்பர்கிழான் அருவந்தையை வாழ்த்துமிடத்தும்,



‘காவிரி கனையுந் தாழ்நீர்ப் படப்பை
நெல்விழளை கழனி யம்பர் கிழவோன்
நல்லருவந்தை வாழியர் புல்லிய
வேங்கட விறல்வரைப் பட்ட
ஓங்கல் வானத் துறையினும் பலவே’



எனப் புல்லியது வேங்கடத்தைச் சிறப்பித்தலினாலே அவர் தம் உள்ளத்தை அத்தோன்றலுக்கே ஒப்பித்துவிட்டடனரென விளங்குகிறது.



அகநானூற்றிலே,



‘கள்வர் பெருமகன் — தென்னன்’



என, மதுரைக் கணக்காயனார் ஒரு பாண்டியனைக் குறித்துள்ளார்.



இவ்வாற்றால், சங்கநாளிலே அதாவது ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளின் முன்பு ‘கள்வர்’ என்ற பெயர் வழக்கு இருந்ததென்பதும், கள்வர் குலத்தவர் அரசராயிருந்தனரென்பதும் வெளியாகின்றன.



அகநானூற்றில்’



‘வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர்’
நாக பல்லவ சோழரும், கள்ளரும்



என்று வெங்கட மலையானது தொண்டையருடையதாகக் கூறப் படுதலின், தொண்டையர், கள்வர் என்ற பெயர்கள் ஒரு வகுப்பினர்க்கு உரியன என்பதும். பண்டை நாளிலே வேங்கடமும், அதைச் சார்ந்த நாடும் அன்னவரது ஆட்சியிலிருந்தன வென்பதும் போதரும். இப்பொழுதும் தொண்டைமான் என்ற பெயர் கள்ளர்க்கே வழங்குவதும், தொண்டைமான் என்னும் பட்ட முடைய மாட்சிமிக்க புதுக்கோட்டை அரசர் கள்ளர் வகுப்பினராயிருப்பதும் இங்கு அறியற்பாலன. வேங்கடமலையிலிருந்து ஆதனுங்கன் என்ற வள்ளலும் இவ் வகுப்பினனேயாவன். இவனைக் கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவர் பாடிய பாட்டுக்கள் புறநானூற்றில் உள்ளன. அவர் பாடிய,



‘எந்தை வாழி யாதனுங்க
என்னெஞ்சந் திறப்போர் நிற்காணகுவரே
நின்னியான் மறப்பின் மறக்குங் காலை
என்னுயிர் யாக்கையிற்பிரியும் பொழுதும்
எனியான் மறப்பின் மறக்கவென்’



என்னும் அருமைப்பாட்டை நோக்குங்கால் யாவர் நெஞ்சுதான் உருகாதிருக்கும்? சங்கநாளில் விளங்கிய அரசருள்ளும் வள்ளியோருளும் பலர் இவ் வகுப்பினரர்கல் வேண்டும் எனினும் இவர்கட்குச் சிறப்பானுரிய பெயரானும் இடத்தானம் வெளிப்படத் தோன்றினோரையே இங்கே குறிப்பிடலாயிற்று. புல்லியைப்பற்றி எடுத்துக்காட்டிய ஒன்பது மேற்கோள்களில் ஒன்றிலெ தான் ‘கள்வர் கோமான்’ என்ற பெயர்வந்துளது. அஃது இல்லையேல் அவனை இவ்வகுப்பினன் என அறிந்துகொள்வது எங்ஙனம்? இவ்வாற்றால் அறிந்துகொள்ளலாகாத பலர் இருந்திலர் என்று எங்ஙனம் கூறமுடியும்?



இனி, இவர்களில் ‘முத்தரையர்’ என்னும் பெயருடையராய் வள்ளன்மை மிக்க ஓர் குழுவனர் பழைய நாளில் இருந்திருக்கின்றனர். நாலடியாரில் இவர்களைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அவை,



‘பெருமுத்தரையர் பெரிதுவந்தீயும்
கருனைச் சோறார்வர்’ (200)
‘நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத்தரையரே
செரவரைச் சென்றிரவாதார்’ (296)



என்பன இவற்றிலிருந்து, இவர்கள் யாவர்க்கும் நறிய உணவளித்துப் போற்றி வந்தவரென்பதும், எல்லையிகந்த செல்வமுடையா ரென்பதும் விளங்கா நிற்கும், விஜயாலயன் என்னும் சோழமன்னன் கி.பி. 849ல் தஞ்சையைப் பிடித்துச் சோழராட்சியை நிலை நிறுத்துமுன், தஞ்சையில் மன்னரா யிருந்தோர் முத்தரையரே என்பர் சரித்திரக்காரர். இப்பொழுது ‘முத்திரியர்’ என வழங்கும் வேறு வகுப்பினர் இருப்பினும், முன் குறிக்கப்பட்டவர் கள்ளர் வகுப்பினரே என்பதற்கு ஆதரவுகள் உள்ளன. செந்தலைக் கல்வெட்டில் இவர்களில் ஒருவனைக் குறித்து,



‘வல்லக்கோன், தஞ்சைக்கோன், கள்வர் கள்வன், பெரும்பிடுகு முத்தரையன்’ என்று கூறியிருக்கிறது. இக்கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்ட தூண்கள், முற்குறித்த பட்டங்களையுடைய இரண்டாவது பெரும்பிடுகு முத்தரையனால் திருக்காட்டுப்பள்ளியின் மேல் புறமுள்ள நியமம் என்னும் ஊரிலே கட்டப்பட்ட பிடாரி கோயிலிலிருந்து இடித்துக் கொண்டு வரப்பெற்றவை. கல்வெட்டில் குறித்திருப்பதற்கேற்ப, வல்லத்தரசர், தஞ்சைராயர், செம்பிய முத்தரையர் என்னும் பட்டமுள்ள கள்ளர் குலத்தவர் தஞ்சையிலும், தஞ்சையைச் சூழ்ந்த இடங்களிலும் இப்பொழுதும் இருக்கின்றனர். கல்வெட்டுத் தோன்றி நியமம் என்னும் ஊரிலும், அதனைச் சூழ்ந்த ஊர்களிலும் இருப்போரும் கள்ளர் வகுப்பினரே. அன்றியும் கல்வெட்டுல், ‘கள்வர்’ என்ற பெயர் வெளிபடக் கூறியிருப்பதே சான்றாகும். திருவாளர் மு. இராகவையங்கார் அவர்கள் முத்தரையரைப் பற்றிக் கூறியிருப்பதும் இங்கு அறியற் பாலது. அது,



‘ நாலடியாரில் முத்தரையரைப் பற்றி இரண்டிடங்களில் குறிப்பிக்கப்ட்டுள்ளது. இன்னோர், தென்னாட்டில் 7,8-ம் நூற்றாண்டுகளில் பிரபலம் பெற்ற கள்வர் மரபினராவர். இவ்வமிசத்தவர் சங்க காலத்திலேயே சிற்றரசராக விளங்கியவரென்பது, கள்வர் கோமான் புல்லி, கள்வர் கோமான் தென்னவர் என்னும் பெயர்கள் அகநானூற்றுப் பயில்வதனால் அறியப்படும்’ என்பது. (செந்தமிழ் தொகுதி 13, பக்கம் - 273)



இம் முத்தரையரைக் குறித்துப் பின்னரும் சிறிது ஆராயப்படும்.



இனி, பழைய தமிழர் முதலானோரில் கள்ளர் குலத்தவர் எவ் வகுப்பி லடங்குவர் என்பது பற்றி வேறுபட்ட கொள்கைகள் உண்டு. இவர்களை நாகர் வகுப்பின ரெனச் சிலரும், சோழர் வகுப்பினரெனச் சிலரும், பல்லவர் வகுப்பின ரெனச் சிலரும் கூறுவர். கனகசபைப் பிள்ளை அவர்கள் நாகர் வகுப்பினரெனக் கூறகின்றனர். இராமநாதப்புரத்தரசர், மாட்சிமிக்க பா. இராஜராஜேசவர சேதுபதி அவர்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவில் தலைவர்களாக எழுந்தருளிக் கூறிய விரிவுரையில் பின்வருமாறு காட்டியுள்ளார்கள்;



‘ சோழர்கட்கு முன் இப்போதுள்ள மறவர், கள்ளர் இச்சாதியாரின் முன்னோர்கள் நாகர் என்ற பெயரோடு இச்சோழ ராச்சியத்தை ஆட்சி புரிந்ததாகவும், அவர்களின் தலை நகராகத் தஞ்சை, திருக்குடந்தை, காவிரிப்பூம்பட்டடினம் இவ்விடங்களிருந்தனவாகவும் சரித்திர வாயிலாக வெளியாகிறது.



மேன்மை பொருந்திய வா. கோபாலசாமி ரகுநாத இராசாளியார் அவர்கள் இந்திர குலாதிபர் சங்கத்தின் நான்காவது அண்டு விழாவில் தலைவராக அமர்ந்து செய்த விரிவுரையில் பின்வருமாறு கூறியுள்ளனர்:



‘இந்நாட்டை யாண்ட அரசர் பெருமக்களுள் சோழரைக் கள்வர் எனவே டாக்டர் பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளாரகள்.



திருவாளர்கள் ம. சீனிவாசையங்கார் அவர்கள், ‘சோழர் சாதியிற் கள்ளரென்றும், பாண்டியர் சாதியில் மறவரென்றும் ஒரு சாரார் கொள்கை’ என்பர்.



(செந்தமிழ், தொகுதி -2 , பக்கம்–175)



வின்சன் ஏ. ஸ்மித் என்னும் சரித்திர அறிஞர் ‘புராதன இந்திய சரித்திரம்'’ என்னும் தமது நூலில் பல்லவர் வரலாறு கூறுமிடத்தே கள்ளர் வகுப்பினரையும் இயைந்து கூறுகின்றனர். அவருரைப்பது,



“பல்லவர் யாவர்? எங்கிருந்து வந்தனர்? தென்னாட்டு மன்னர்களில் எங்ஙனம் தலைமை யெய்தினர்? என்ற கேள்விகளுக்கு இப்பொடுது தக்க விடை யளித்தல் இயலாது. ‘பல்லவர்’ என்ற பெயர் ‘பகல்வா’ என்னும் பெயருடன் பெரும்பாலும் ஒத்திருப்பதால், பல்லவர் என்பதும் பகல்வா என்பதும் ஒரே பொருளன என்றும், ஆகவே, தென்டனாட்டில் காஞ்சியிலாண்ட அரசர் குடி பெருசியா நாட்டில் தோன்றியதாக வேண்டும் என்றும் டாக்டர் பிளீட்டும், ஏனைய ஆசிரியர்களும் நினைக்கின்றனர். இந்த நூலின் முதற் பதிப்பிலும் இக்கொள்கை சரியானதா யிருக்கலாமென எழுத நேர்ந்தது. ஆனால் இப்பொழுதைய ஆராய்ச்சி இக்கொள்கை அவ்வளவு சரியானதன் றென்று காட்டி விட்டது. சென்னை மாகாணத்தின் வடபாகத்தில் கிருட்டிணா, கோதாவரி யாறு கட்கு இடையேயிருந்த வெங்கி நாட்டில் வசித்த ஒருவகுப்பினரெனச் சொல்வதே ஏறக்குறையச் சரியான கொள்கை யெனலாம். தமிழ் மன்னர்களுக்கும் பல்லவருக்கும் இடைவிடாப் பகைமை யேற்பட்டிருந்ததும், பல்லவரது ஆட்சிக்குட்பட்ட நிலம் இன்னதென இன்று வரை உறுதிப்படுத்த முடியாதிருப்பதும் பல்லவர் தமிழரல்லர் என்பதனைக் காட்டி நிற்கின்றன. ஆகவே, பல்லவர் தென்னாட்டு மன்னரை வென்றே தமது ஆட்சியைத் தமிழ் நாட்டில் நிலை நிறுத்தி யிருத்தல் வேண்டும், மகாராட்டியரைப் போன்றே பல்லவரும் ஒரு கொள்ளைக் கூட்டத்தார், அல்லது வகுப்பினர் என்றும், அவர்களைப் போன்றே தங்களது வலிமையால் சோணாடு முதலிய நாடுகளைத் தமது ஆட்சிக் குட்படுத்தினரென்றும் கொள்வோமாயின் இதுவரையிற் கிடைத்துள்ள ஆதாரங்கள் அதனை உறுதிப்படுத்து மென்றே நினைக்கின்றேன்.



கள்ளர்களின் தலைவராகிய புதுக்கோட்டை மன்னர் தம்மை ராஜபல்லவ ரென்றும், பழைய அரச வமிசத்தின ரென்றும் சொல்லிக் கொள்கின்றனர். சர் வால்டர் எலியட் என்பார் கள்ளர்கள் கலகக்கூட்டத்தாரில் ஒரு வகுப்பின ரென்றும, ஆண்மையும், அஞ்சாமையும், வீரமும் உள்ளவர்களென்றும் கூறுகின்றார். சரித்திர்ப்படி பல்லவர்களும் அவர்களை யொத்தவர்கள்தான். கள்ளர்கள் இன்று வரையிலும் கருநாடக பூமியிலுள்ள குடிமக்களை அடக்கியாண்டு, அவர்களிடமிருந்து. மகாராட்டியர் செளத் என்ற வரிவாங்கி வந்ததுபோல் ஒருவரியும்வாங்கி வந்திருக்கின்றனர். பல்லவரும் எதிரிகளாகிய தமிழ் மன்னர்களின் வலிமைக்கேற்பத் தமது ஆட்சியை நிலைநிறுத்தி வந்திருக்கின்றனர் என்று நம்பவேண்டியிருக்கிறது. கள்ளர், மறவர் இவர்களுடன் பள்ளி வகுப்பாரும், உழுது பயிரிடும் வேளாளரிற் சிலரும் தாங்கள் பல்லவரைச் சேர்ந்தவர்களென்று சொல்லிக் கொள்கின்றனர். பல்லவரோடு கொள்ளைக் கூட்டத்தின ரென்று கூறப்படும் இவர்களும் தமிழருக்கு முன்பே இந்நாட்டில் வசித்து வந்த ஒரு வகுப்பாரைச் சேரந்தவர்களாயிருக்கலாம்”



இனி, மேல் எடுத்துக்காட்டிய கொள்கை ஒவ்வொன்றிலும் எத்துணை உண்மை யிருக்கின்ற தென்பது பின் ஆராய்ச்சியால் அறிந்து கொள்ளலாகும். கள்ளர் நாகரினத்தவர் என்னுங் கொள்கையை முதற்கண் ஆராய்வோம், நாகரின் வரலாறும், பெருமையும் முன்னரே கூறியுள்ளோம். அவர்கள் கைத்தொழில் முதலியவற்றில் எவ்வளவு மேன்மை யடைந்திருந்தன ரென்பது பின்வரும் கனகசபை பிள்ளையவர்கள் கூற்றால் நன்கு விளங்கும்:



” நாகர்கள் பல நுட்பத் தொழில்களில் தெளிவடைந் திருந்ததோடு, நெய்தற் தொழிலில் மிக்க திறமையடைந்திருந்தனர் கலிங்க நாட்டிலிருந்து நாகர் இத்தொழிலில் அடைந்திருந்த புகழ் பற்றிக் கலிங்கம் என்ற சொல்லே தமிழில் துணியை உணர்த்துவதாயிற்று. பாண்டி நாட்டின் கீழைக் கரையிலிருந்த நாகர் இத்தொழிலில் மிக மேம்பாடெய்தி, துணியும், மசிலினும் பெருக ஏற்றுமதி செய்தனர். இவர்கள் நெய்த நுட்ப இழைகளாலான ஆடைகள் தமிழர்களால் மிக மதிக்கபட்டும், பிற நாடுகளில் நம்பத் தகாதவிலைக்கு விறகப்பட்டும் வந்தன . நாகரிடமிருந்த தான் ஆரியர் எழுதும் வித்தையைக் கற்றுக் கொண்டனர் அது பற்றி இற்றைக்கும் வடமொழியெழுத்திற்குத் தேவநாகரி என்ற பெயர் வழங்குகிறது.”



நாகர் குலத்து மகளில் பேரழகு வாய்ந்தோரென மணிமேகலை யாலும், பிற நூல்களர்லும் அறியப்படுகின்றது. அவர்கள் சிவபக்தியிலும் மேம்பட்டவரென்பது நாககன்னியர் சிவபெருமானைப் பூசித்து வரம் பெற்றனரென்று உறையூர்ப் புரர்ணம் , பழைய திருவானைக்காப்ப புராணம் , செவ்வந்திப் புராணம் முதலியன கூறுதல் கொண்டு அறியலாகும்.



நாகர் வீரத்திலும் மேம்பட்டவரென்பது, சோழ நாகர் என்பார் உறையூரிலிருந்து அரசுபுரிந்த சோழர்களை அப்பதியினின்றும் போக்கிச் சோழ ராட்சியைக் கைப்பற்றிக்கொண்டனரென்று பழைய ஐரோப்பிய ஆசிரியரான தாலமி என்பவர் கூறுவதால் அறியலாகும். சோழ நாகரென்பார் சோழரும், நாகரும் வரைவாற் கலந்ததிற் பிறந்த வழிபோலும் என்று கனகசபைப் பிள்ளை யவர்கள் கருது கின்றனர். பழைய நாளில் சோழர்கள் நாகர் குலத்தில் கல்யாணஞ்செய்து கொணடிருக்கின்றனர் என்பது தேற்றம். நெடு முடிக்கிள்ளியென்ற சோழவேந்தன் நாக நாட்டரசனாகிய வளைவணன் என்பானது மகள் பீலிவளையை மணம்புரிந்த செய்தி மணிமேகலையிற் கூறப்பட்டிருக்கறிது. தொண்டைமான் இளந்திரையனைப் படிய பெரும்பாணாற்றுப்படையுள் கீழ்வரும்பகுதி அவனது பிறப்பு வரலாற்றை யுணர்த்துகின்றது.



‘இருநிலங் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் புறங்கடை யந்நீர்த்
திரைதரு மரபி னுரவோ னும்பல்
மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும்
முரச முழுங்குதானை மூவ ருள்ளும்
இலங்குநீர்ப் பரப்பின வளைமீக் கூறும்
வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பின்
அல்லது கடிந்த அறம்புரி செங்கோற்
பல்வேற் றிரையன்”.



நச்சினார்கினியர் இதிலுள்ள சொற்களைக் கொண்டு கூட்டி “மூவேந்தருள்ளும் தலைமை வாய்ந்தோனும், திரூமாலின் பின் வந்தோனுமாகிய சோழன் குடியிற் பிறந்தோன். கடலின் திரை கொண்டு வந்தமையால் திரையன் என்னும் பெயரை யுடையவன்’ என்று பொருள் கூறி, ‘ என்றதனால் நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாககன்னியைப் புணர்ந்த காலத்து, அவள், யான் பெற்ற புதல்வனை என்செய்வேனெற்பொழுது, தொண்டையை அடையாளமாகக் கட்டிக் கடலிலே விட அவன் வந்து கரையேறின் அவற்கு யான் அரசவுரிமையை எய்துவித்து நாடாட்சி கொடுப்பலென்று வென் கூற, அவளும் புதல்வனை அங்ஙனம் வர விடத் திரைதருதலின் திரைய னென்று பெயர் பெற்ற கதை கூறினார்.’ என ஓர் வரலாறும் குறித்துள்ளார்.



நெடுமுடிக்கிள்ளிக்கு நாகர் மகளான பீலிவளை வயிறறுப் பிறந்தோனே இவ்விளந்திரையன் என்றும் சிலர் கூறுவர். அவர் நச்சினார்கினியர் எழுதியதை உறுதியாக மேற்கொண்டே அங்ஙனம் கூறுவர். நச்சினார்க்கினியரும், மணிமேகலையில் ‘ புதல்வன் வரூஉ மல்லது பூங்கொடி வாராள்’ என்று சாரணர் சோழனுக்குக் கூறிய தாகவுள்ள தொடரை யுட்கொண்டோ, அதுபற்றி வழங்கி வந்ததொரு கதையை மேற்கொண்டோ, அங்ஙனம் எழுதினாராகல் வேண்டும். அவர்,’தொண்டையை அடையாளமாகக் கட்டிவிட’ என்றமையின், தொண்டைமான் என்ற பெயரின் காரணமும் அதுவென நினைந்தாராகல் வேண்டும்.



இனி, பெரும்பாணாற்றுப் படையடிகட்கு அவர் கூறியவுரை பொருந்தா தென்பது காட்டுதும். ‘முந்நீர் வண்ணன் புறங்கடையந்நீர்த்–திரைதரு மரபி னுரவோனும்பல் ‘ என்பதற்கு, ‘கடல் வண்ணனாகிய திருமாலின் பின்வந்தோனும், கடல் நீர்த் திரையால் தரப்பட்ட மரபினையுடைய உரவோனும் ஆகிய சோழனது வழித் தோன்றல்’ என்பதே நேரிய பொருளாகும். நச்சினார்க்கினியர், இளந்திரையன் திரையால் தரப்பட்டவனாதல் வேண்டு மென்னுங் கொள்கையுடையராய், அதற்கேற்பச் சொற்களை மாற்றி நலிந்து பொருள் கூறினர். திரையன் என்பது சோழனுக்குரியதோர் பெயரெனக் கொள்ள வேண்டும் கனகசபைப்பிள்ளை யவர்களும் , திரையர் என்னும் பெயரை சோழருக்கே உரியதாக்குகின்றனர் . தொண்டைமான் என்னும் பெயரும் தொண்டையை அடையாளமாகக் கட்டி விட்டமையால் இளந்திரையனுக்கு வந்த தென்பது பொருந்தாது, அகநானுற்றில் ‘வினைநவில் யானை விறற்போர்த் தொண்டைர்–வேங்கடம்’ என வந்திருப்பது முன்னரே காட்டியுள்ளோம், பெரும்பாணாற்றிலேயே இளந்திரையன் ‘ தொண்டையோர் மருகன்’ என்று கூறப்படுகின்றான். இஃதொன்றுமே இளந்தரையனுக்கு முன்பே தொண்டையர்என்னும்வழக்குண்மை நிறுத்தப் போதியதாகும்.. இவ்வாற்றால் தொண்டையர் என்னும் பெயர் காஞ்சி, திருவேங்கடம் முதலியவற்றைத் தன்னகத்தே யுடையதொரு நாட்டிலே தொன்று தொட்டு ஆட்சி புரிந்த ஓர் வகுப்பினரைக் குறிப்பதென்பதே தேற்றம் . இளந்திரையானவன், சோழனொருவன் தொண்டையர் மகளை மணந்து பெற்ற புதல்வன் என்றும், அவனே தாய்வழி யுரிமையால் தொண்டை நாட்டுக்கு அரசனாயினான் எனறும் தாய்வழியாற் தொண்டைமான் என்னும் பெயரும், தந்தை வழியால் திரையன் என்னும் பெயரும் அவனுக்கு எய்தின என்றும் கோடல் வேண்டும்..



இனி, இத்தொண்டையரும் காஞ்சியிலிருந்து அரசு புரிந்திருக்கின்றனர். பல்லவரும் காஞ்சியிலிருந்து ஆட்சி நடத்தியுளர். ஆகலின் இவ்விருவரும் வெவ்வேறு வகுப்பினரா? ஒரே வகுப்பினரா? என ஆராய வேண்டியிருக்கிறது. பல்லவர் வடக்கே பெருசியாவிலிருந்து வந்தவரென சரித்திரக்காரர்கள் சொல்லி வந்திருக்கின்றனர் இப்பொழுது சிலர் அக்கொள்கையை மாற்றியும் வருகின்றனர் இவர்கள் பல்லவர் தொன்றுதொட்டு இந்நாட்டவரேனெத் துணிந்துரையாவிடினும், இந்நாட்டினராக யிருக்கலாம் என கருதுகின்றனர் . தொண்டைமான் என்னும் பெயர் கொடிபற்றி வந்ததென்று கூறப்படுதலாயினும் .பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும் இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும் ஒரு பொருளுள்ளனவே எனச் சிலர் கருதுகின்றனர். பல்லவர்க்கு வழங்கும் போத்தரசர் என்னும் பெயரும் இப்பொருளதே யென்கினறனர். காஞ்சியிலாண்ட தொண்டைமான் இளந்திரையனையும் சோழன் கரிகாலனையும் உருத்திரங்கண்ணனார் என்னனும்புலவர் பாடியிருத்தலால் இளந்திரையன் கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் இருந்தோன் எனத் தெரிதலானும், அதற்கு முன்பு பல்லவர் செய்தி யொன்றும்கேட்க்கப்படாமையானும் இளந்திரையனது வழியில் வந்தோரே பல்லவர் என்றும் சிலர் கருதுகின்றனர். இவர்கள், பல்லவராயினார் சோழர்க்கும் தமக்கும் ஏற்பட்ட பகைமை பற்றியே தம்மை வேறு பிரித்துக்கொள்ள நினைந்து, தமக்குப் பாரத்துவாச கோத்திரத்தைக் கற்பித்துக் கொண்டனர் என்பர். பல்லவர் பெருசியாவிலிருந்து வந்தோரென கூறுபவருக்கு ஆதாரமாக வுள்ளது சில வடமொழிப் புராணவிதிகாசங்களில் காணம்படும் பகல்வா என்னும் பதமாம். அச்சொல்லே பல்லவர் எனத் திரிதுதிருக்கும் என்பது அவர்கள் கருத்து. பல்லவர் இன்னகாலத்தில் இன்னவிடத்திருந்து இவ்வழியாக இவ்விடத்தை யடைந்தனரென்பது வேறுபல மேற்கோள்களால் உறுதிப் படுத்தப்பெற்ற பின்பற்றி தெற்கே காஞ்சியைத் தலைநகராகக் கெண்டு ஆண்ட வகுப்பினர் பெயராய பல்லவர் என்பது பகல்வா என்பதன் திரிபு என்று கொள்ளல் சிறிதும் பொருந்தாது.



வின்சன் ஏ. ஸ்மித் என்பாரும், வால்டர் எலியட் என்பாரும் பல்லவர் கோதாவரி யாறுகட்கு இடையிலுள்ளதான வெங்கி நாட்டில் இருந்தோராகலாம் எனக் கருதுகின்றனர்



பல்லவரைப்பற்றித் தனிநூல் எழுதியியுள்ள புதுச்சேரியிலிருக்கும் புரொபசர் ஜி.ஜே. துப்ரீல் என்பாரும், பல்லவர் ஆந்திர நாட்டிலிருந்தோராகலாமென்றும், பல்லவர் இருகூறாய்ப் பிரிந்து ஆந்திரநாட்டிலும், தமிழ் நாட்டிலும் அரசு புரிந்தனரென்பதும் பொருந்தும் என்றும் இங்ஙனம் கருதுகின்றனரே யன்றிப் பெருசியா முதலிய இடங்களிலிருந்து வந்தொரெனக் கூறவில்லை. பல்லவரது முதன்மைப் பட்டணம் காஞ்சி என்பதும், அவர்கள் ஆந்திர நாட்டுடன் தொண்டைமண்டலத்தையம் ஒரே காலத்தில் ஆண்டிருக்கினறன ரென்பதும் சரித்திரத்தில் நன்கு விளக்கமாம்.



இனி, இவர்களைக் குறித்து எமது ஆராய்ச்சியிற் புலப்பட்ட வற்றை இங்கே காட்டுதும். காஞ்சி முதலிய இடங்களுள்ள பகுதி முன்பு அருவா நாடு எனவும் வழங்கப்பட்டது. அங்கிருந்தோர் அருவாளர் எனப்பட்டனர். அந்நாடு தமிழகத்தின் பகுதியே யாகலின் அருவாளரும் தமிழரே யென்பது கூறாதே அமையும். அருவாளரை நாகரென்பார் கொள்கையும் முன்னரே காட்டப்பட்டது இவருடன், ஆந்திரரும், கருநாடரும் தமிழ் மூவேந்தர்க்குப் பகையாயிருந்தமையாலே’ வடுகரருவாளர் வான் கருநாடர் …..குறுகாரறிவுடையார்’ என்று இழித்திடப் பட்டனர். சோழன் கரிகாலன் அருவாளரை வென்றதும் தெரிந்ததே. அருவா நாடு தொண்டை நாட்டின் கண்ணதாகலின் அந்நாட்டினை முன்பு ஆண்டோர் எனப் பட்ட தொண்டையர் என்பாரும் அருவாளரும் ஓரினத்தவரென்று கருதலாகும். பழைய நாளில் இவர்கள் ‘ மன்பெறு மரபின்ஏனோர்’ எனவும், ‘குறுநில மன்னர் எனவும் கூறப்பட்டு வந்தனர்.



‘வில்லும் வேலுங் கழலுங் கண்ணியுந்
தாரு மாரமுந் தேரும் வாளும்
மன்பெறு மரபின் ஏனோர்க்கு முரிய’
என்னும் மரபியற் சூத்திரமும்,



‘மன்பெறு மரபின் ஏனோரெனப்படுவார் அரசு பெறுமரபிற் குறுநில மன்னர் எனக் கொள்க. அவை பெரும்பாணாற்றுள்ளும் காணப்படும்’ என்னும் அதனுரையும் இவ்வுண்மை தெரிப்பனவாகும். கி.பி. முதல் நூற்றாண்டின் முன்பு தொண்டை நாட்டின் ஆட்சியும், நிலைமையும் எப்படி யிருந்தனவென்று விளக்கமாக அறிதற்கு இடமில்லை. கரிகாற் பெருவளவன் காலத்திலிருந்து அது நல்ல நிலமை யடைந்து விட்டதென்று கொள்ளலாகும் . கரிகாலன் காஞ்சிப் பதியை விரிவுபட வகுத்தமைத்தனன் என்பது.



நாக பல்லவ சோழரும், கள்ளரும்



‘என்று முள்ளவிந் நகர்கலி யுகத்தி
லிலங்கு வேற்கரி காற்பெரு வளத்தோன்
வன்றி றற்புலி யிமையாமல் வரைமேல்
வைக்க வேகுவோன் றனக்கிதன் வளமை
சென்று வேடன்முன் கண்டுரை செய்யத்
திருந்து காதநான் குட்பட வகுத்துக்
குன்று போலுமா மதில்புடை போக்கிக்
குடியி ருத்தின கொள்கையின் விளங்கும்’



என்று பெரிய புராணம் கூறுதலால் வெளியாகின்றது. கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன். அவனட்சியின் பெருமையை,



‘கைப்பொருள்வெளவுங் களவோர் வாழ்க்கைக்
கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புலம்
உருமு முரறா தரவுந் தப்பா
காட்டு மாவு முறுகண் செய்யா’



என்றும்,



‘முறைவேண் டுநர்க்குங் குறைவேண் டுநர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டினர்க் கருளி
யிடைத்தெரிந் துணரு மிருடீர் காட்சிக்
கொடைக்கட னிறுத்த கூம்பா வுள்ளத்
துருப்பில் சுற்றமோ டிருந்தோன்’



என்றும், பிறவாறும் பெரும்பாணாற்றுப்படை கூறுதல் கொண்டு அறியலாகும். இளந்திரையனுக்குச் சில தலைமுளை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே தொண்டையர், பல்லவ ரெனப்பட்டனர். இப்பெயரக்ளும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி யென்னம் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெரும், பல்லவர் என்னும் பெயரும், ஒருவகுப்பினரையே குறிப்பன என்பதில் எத்துணையும் ஐயமில்லை.



திருமங்கையாழ்வார் பல பாட்டுக்களில் பல்லவரைக் குறித்திருக்கின்றனர்



அவற்றுள் அட்டபுயகரப் பதிகத்தில்,



‘மன்னவன் றொண்டையர் கோன் வணங்கு
நீண்முடி மாலை வைரமேகன்
தன்வலி தன்புகழ் சூழ்ந்த கச்சி
யட்ட புயகரத் தாதிதன்னை’



என்றும்,



திருவரங்கப்பதிக்கத்தில்,



‘துளங்கு நீண்முடி யரசர்தங் குரிசில்
தொண்டைமன்னவன்



என்றும் ஓர் பல்லவனைத் தொண்டை மன்னன் எனப் பாடியிருக்கின்றனர்.



வண்டை நகரதிபனும், முதற் குலோத்துங்கச் சோழனுடைய மந்திரத்தலைவனும ஆகிய கருணாகரத் தொண்டைமானை,



‘பல்லவர்கோன் வண்டைவேந்தன்’



என்று செயங்கொண்டார் பரணியிற், கூறுகின்றனர், பல்லவர் தொண்டையர் என்னும் பெயர்கள் ஒரே மரபினரைக் குறிப்பன என்பதற்கு இவற்றினும் வேறென்ன சான்று வேண்டும்.



கல் வெட்டுக்களிலும் பல்லவரைத் தொண்டையர் என்று குறித்திருக்கிறது. தளவானூர்க் கல்வெட்டில் ஒரு பல்லவன் ‘தொண்டையர் தார்வேந்தன்’ என்று கூறப்படுகின்றான்.



‘மறைமொழிந்தபடி மரபின் வந்த குலதிலகன் வண்டை நகரரசனே’ என்று பரணி கூறுவது பல்லவர் அல்லது தொண்டையர் பின்பு அரச வகுப்பினராகக் கொள்ளப் பட்டு வந்தமைக்குச் சான்றாகும்.



கி.பி.4-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டின் இடைக் காலம் வரையில் பல்லவராட்சி மிக மேன்மையடைந்திருந்தது. அக் காலததில் சோழர்கள் பல்லவர்க்குக் கீழே சிற்றரசராயிருந்தனர். பல்லவரில் புகழ் பெற்ற மன்னர் பலரிருந்தனர். பல்லவர் காலத்தில் சிற்பம் உர்ந்த நிலையில் இருந்ததுபோல் வேறு காலத்தில் இருந்ததில்லை அவர்களிற் சிலர் சிறிது காலம் சமண, பெளத்த மதங்களைத் தழுவியிருப்பினும், பெரும்பாலோர் சைவராகவோ வைணவராகவோ இருந்து வந்தனர். அவர்கள் கட்டிய கோயில்களும் பல. பெரிய புராணத்திற் கூறப்பட்ட திருத்தொண்டர்களில் பல்லவர் பலரிருக்கின்றனர். சைவசமய குரவர்களும், ஆழ்வர்களும் அக்காலத்தில்தான் தோன்றி விளங்கினர். சமயக் குரவரும், ஆழ்வாரும் புகழந்து பாடும் பெருமையும் பல்லவர் பெற்றிருந்தனர். இத்தகையாரையோ ஒரு கொள்ளைக் கூட்டத்தார் எனச் சிலர் கருதுவது ! இது காறும் கூறியவற்றிலிருந்து பல்லவ ரென்பார் தொன்று தொட்டுத் தொண்டை நாட்டி லிருந்துவந்த தொண்டையரே! என்பது விளக்கமாம். அவர் வடக்கிலிருந்து வந்தோ ரென்பதற்குச் சிலர் கூறும் வேறு காரணறங்கள்:



பல்லவர்க்கள் முதலில் அளித்த செப்புப் பட்டயங்கள் பிராகிருதத்திலும், வடமொழியிலும் இருப்பதும், அவர்கள் பாரத்துவாச கோத்திரத்தைச் சேர்ந்தவரென்றும், வேள்விகள் புரிந்தனரென்றும் கூறப்படுதலும் ஆம்.



பட்டயங்கள் எங்கோ சில சிற்றூர்களிலும், காடுகளிலும், நிலத்தின் கீழும் இருந்து இங்ஙனம் அகப்பட்டவை. அவைமுற்றிலும் கிடைத்து வட்டன என்று எங்ஙனம் கூறமுடியும்? அன்றியும் தமிழ் வழங்காத தெலுங்கு நாட்டை அவர்கள் கைப்பற்றி ஆண்டபொழுது அங்கே அளித்த பட்டயங்கள் தமிழில் எப்படி இருக்கக்கூடும்? தமிழராயிருந்தோர் பிராகிருதத்தில் சாசனம் அளித்திருக்க முடியா தென்றால், பிராகிருதம் அல்லது வடமொழியே பயினறவர் பின்பு எங்ஙனம் தமிழராகித் தமிழிலே சாசனம் அளித்திருத்தல் கூடும்? இதனாலே அக்காரணம் அத்துணை உறுதியிடைத்தன் என்பது தோன்றும்



அவர் பாரத்துவாச கோத்திரத்தைச் சேர்ந்தவ ரென்றும் சொல்வது காரணம் ஆகலாம், எனின், தமிழ் வேந்தர்கள் சூரியன் மரபினரென்றும், சந்திரன் மரபினரென்றும் கூறப்படுவதற்கு யாது சொல்வது? சோழர்களோடு மாறுபட்டிருந் தோரும், ஆந்திர நாட்டையும் கைப்பற்றி ஆண்டோரும, எண்ணிறந்த பிராணர்களைத தமிழகத்திற் குடியேற்றிஅவர்கட்கு எண்ணிறைந்த தானங்களை அளித்தோரும் ஆகிய பல்லவர், தம்மை அசுவத்தாமன் வழியில் வந்தோர் என்றும் பாரத்துவாசர் கோத்திரத்தினர் என்றும் கூறிக்கொள்வதில் வியப்பென்னை? பல்லவரது மரபின் வரலாறு நாளடைவில் விரிந்து வந்திருப்பதை சாசனங்கள் விளக்குமன்றோ?



அவர்கள் வேல்வி புறிந்ததுதான் எங்ஙனம் காரணமாகும்? தமிழ் மூவேந்தரும் எண்ணிறந்த வேள்விகள் செய்திருத்தலை சங்கநூல்களால் அறியலாகும். பண்டியன் பல்யாக சாலை முதுக்குடுமி பெருவழுதி என்னும் பெயரே அதனை விளக்கும் அவனைப் பாடிய நெட்டிமையார் என்ற புலவரும் ‘நின்னுடன் எதிர்த்து தோற்றொழிந்த பகைவர் பலரோ, நீ வேள்வி புறிந்த களம் பலவோ’ என்று கூறுகின்றார் இவ்வாற்றால் பல்லவர் வடக்கிலிருந்து வந்தோர் என்பார் அதற்குக் கூறும் காரணம் ஒன்றேனும் திட்ப்ப முடைதன் றென்பது விளங்கா நிற்கும். பல்லவரது ஆதி ஊறைவிடம் தொண்டை நாடே என்பதனை மறுக்கக் தகுந்த வேறு ஆதரவுகள் கிடைக்கு மேல் அவர் மணிமேகலையில் கூறப்பட்டதும் தமிழ் நாட்டை யடுத்து தெற்கிலுள்ளதுமாகிய மணிபல்லவம் என்னும் தீவினின்று வந்தோர் எனக் கருதல் பொருத்தமுடைத்தாகும்.



இனி கள்ளர் வகுப்பினரை பல்லவர் வழியினர் என்பதற்கு பல பொருத்தங்களுள்ளன. அவற்றினை இங்கே காட்டுதும். பல்லவர் தொண்டையர் என்னம் பெயர்கள் ஒரே வகுப்பினரை குறிப்பன வென்று முன் விளக்கப்பட்டதும். காடவர், சேதிபர், காடுவெட்டி என்னும் பெயர்களும் பல்லவருக்கு உரியவை. திருத்தொண்டர்களில் ஒருவாராகிய ஐயடிகள் காடவர்கோன் நாயநாரை



‘பத்திக்கடல் ஐயடிகளாகின்ற நம்பல்லவே’
என்று திருத்தொண்டர் திருவந்தாதியும் ;
‘வைய நிகழ் பல்லவர் தங் குலமரபின் வழித்தோன்றி’



எனவும்,



‘கன்னிமதில் சூழ்காஞ்சி காடவ ரையடிகளார்’
எனவும் பெரியபுராணமும் கூறுகின்றன
சுழற்சிங்க நாயனாரை,
‘கடல் சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற் சிங்கன்’



என்று திருத்தொண்டத் தொகையும்;



‘பல்லவகுலத்த வந்தார்’



என்று பெரியபுராணமும் கூறுகின்றன.



திருமுனைப்பாடி நாட்டுக்கச் சேதி நாடு என்பதும் ஒரு பெயர். மெய்ப்பொருணாயனார் புராணத்தில் ,



‘சேதிநன்னாட்டு நீடு திருக்கோவலூர்’



என்று கூறப்பட்டுள்ளது. சேதிநாடு ஆண்டமைபற்றிப் பல்லவர் சேதிபர்கோன்எனவும் படுவர்.



காடுவெட்டி என்பதும் பல்லவரது பெயராகச் சாசனங்களில் வருகிறது. ‘காடு வெட்டித் தமிழ் பேரரையன்’ என்று கல்வெட்டிற் காணப்படுவதிலிருந்து இப்பெயர்அரசரக்குரியதென்பது விளங்கும்.



பழைய திருவிளையாடற் புராணத்திலிருந்து கீழே காட்டியள்ள ஒரு சரித்திரத்தாலும் இது விளங்கம்.



‘சிவபக்தியில் மேம்பட்டவனும் மிக்க புகழ்வாய்ந்தோனும் ஆகிய காடு வெட்டி யென்னும் ஓர் தலைவன் மதுரையிற்சொக்கலிங்கப் பெருமானைப் பணிதற்குச் சென்று வையையாற்றின் வடகரையை அடைந்தான். அப்பொழுது பாண்டியன் நாற் புரத்த மதிற் கதவையும், சாத்தித்தன் முத்திரையிட்டு, அவனுடன் படையெடுக்க முயன்றான். வையையும் பெருகிவிட்டது. இந்நிலைமையில் சிவபிரானானவர் காடு வெட்டியின் அன்புக்கு இரங்கி, நள்ளிரவில் வடக்கு மதில் வாயிலை முரித்து வந்து, ஓர் இயந்திரத்தால் அவனையாற்றின்தென்கரையில் ஏற்று வித்து, மதில் இடித்த வழியாகக் கொண்டு சென்று, இருளை வெளிதாக்கி, அவனுக்குச் சோதி விமானத்தையும், தாம் தமது ஒப்பற்ற திருவுருவத்தையும் காட்டியருள, அவனம் கண்டுபோற்றி மனமுருகி நின்றான். நின்றவன் பின் பெருமானது கட்டளையால் விடியமுன்னே மதுரையை விட்டுப்போய் விட, ஆலவாயடிகளாரும் மதிலை புதுப்பித்துத் தமது இடபவிலச்சினையிட்டுப் பாண்டியனுக்குக் கனவிலே அறிவித்தருளினார்’ என்பது கதைச் சுருக்கம். இதில் சுட்டியுள்ள தோன்றலை ஓர் சோழன் என்று கடம்பவனபுராணம் முதலியன கூறுகின்றன. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணம் இவனைச் சோழன் என்று கூறினும் கச்சியில் இருந்தவனாகத் தெரிவிக்கின்றது. வரலாற்றுண்மை அறிய வழியில்லாத நிலைமையில் புராண ஆசிரியர்கள் இவனைச் சோழனென்று கருதினர் போலும்? மேலெ குறிப்பிட்ட பெயர்கள் (தொண்டைமான், பல்லவராயர், பாடவராயர், சேதிராயர், காடு வெட்டி) எல்லாம் கள்ளர் வகுப்பினரக்குள் வழங்கும் கிளைப்பெயர் அல்லது பட்டங்களாக உள்ளன. வாண்டையார் (வண்டையார்) என்னம் பட்டமும் வண்டை வேந்தனாகிய கருணாகரத் தொண்டைமான் வழியினர்என்பதைக் காட்டும். இவர்களுக்குள்வழங்கும் பட்டப் பெயர்களேல்லாம் இந்நூலிறுதியில் தொகுத்துக் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெயரினையு முடையார் பற்பலவூர்களில் இருந்தலால் அவ்வூர்களை அங்கே குறிப்பது மிகையாகும்.



இனி, முத்தரையர் என்பார் கள்ளர் வகுப்பினரென முன்போ காட்டப்பட்டது. முத்தரையர் என்னும் பெயர் முதலில் பல்லவர்க்கு உரியதாய்ப் பின்ப அவர் கீழ் ஆண்ட சிற்றரசர்க்கு வந்ததெனச் சிலர் கருதியுள்ளனர். முதல் மகேந்திரவர்மன், முதற் பரமேச்சுரவர்மன் என்ற பல்லவ வேந்தர்கட்கு முறையே பகாப்பிடுகு. பெரும் பிடுகு (பிடுகு = இடி) என்ற பட்டங்கள்உள்ளன. முத்தரையர்க்கும் இப்பெயர் வழக்குண்டு என்பதனைப் பெரும்பிடுகு முத்தரையன் என்னும் பெயர் காட்டும். புதுக்கோட்டை நாட்டிலுள்ள திருமெய்யத்தில் ‘விடேல்விடுகு’ என்னும் பெயருள்ள முத்தரையன் ஏரிகள் வெட்டு வித்திருக்கின்றனன். நந்திக் கலம்பகத்தில் நந்திவர்ம பல்லவன் ‘விடேல் விடுகு’ என்று கூறப்படுகின்றனன்.



.இங்ஙனம் பல பெயர்கள் ஒத்திருப்பது முத்தரையரும் பால்லவ வகுப்பினரே யென்று காட்டும். காஞ்சியிலிருந்து ஆண்ட பேரரசர்களாய பல்லவர்கள் தம் இனத்தவரையே தஞ்சை முதலிய இடங்களில் அரசாளும்படி செய்திருந்தனரென்பது பொருத்தமாம். இது காறும் கூறியவற்றிலிருந்து கள்ளர்கள் பல்லவ வகப்பினர் அதாவது பல்லவரின் ஒரு கிளை என்பது பெறப்படும். பெயர்கள் ஒத்திருப்பது கொண்டு இவர்கள் பல்லவ வகுப்பினரெனல் பொருந்தாது எனின், பெயர்களே யன்றி வரலாறுகளும் ஒத்திருத்தல் இதில் பலவிடத்தும் காணப்படும். பல்லவரல்லர் என்பதற்கோ யாது காரணமும் இல்லையென்க.



கள்ளர் வகுப்பினராகிய புதுக்கோட்டை அரச பரம்பரையினர் தொண்டைமண்டலத்திலிருந்து வந்த பல்லவர் எனவே புதுக்கோட்டைச் சரிதம் கூறுகின்றது. வின்சன் எ. ஸ்மித் முதலியோரும் அங்ஙனமே கருதியுள்ளாரென்பது முன்பு காட்டப் பட்டது. திருவாளர் பி.டி. சீனிவாசையங்கார் அவர்கள் தாம் எழுதியுள்ள பல்லவர் சரிதத்தில், ( நாம் முன்பு மறுத்துள்ள) சில காரணங்களையெடுத்துக் காட்டிப் பல்லவர் கள்ளரினத்தினினின்றும் உதித்தவராகாதர் எனக் கூறினரேனும், பின் பல்லவர் தமிழராகிவிட்டாரென்று கூறி வந்து, தமது நூலை முடிக்குமிடத்தில் ‘ஒரு தெலுங்கு பல்லவக் கிளையார் 17-ம் நூற்றாண்டில் தொண்டைமான் என்றும் பல்லவ ராஜா என்றும் பட்டத்துடன் புதுக்கோட்டை அரசரானார். இப்போது புதுக்கோட்டை அரசரே பல்லவகுல மன்னருடைய புகழை நிலை நிறுத்தி ஆள்கிறார்’ என்று குறித்திருக்கின்றனர். இங்ஙனம் பலர் கருத்தும் இக்கொள்கையை ஆதரிப்பனவாகவேயுள்ளன.



இனி, புதுக்கோட்டை மகராஜா காலேஜில் தலைவராக இருந்த திருவாளர் வெ. இராதாகிருட்டினையர் அவர்கள் எழுதிய புதுக்கோட்டைச் சரிதத்திலிருந்தும், கல்வெட்டு முதலியவற்றிலிருந்தும் கள்ளர்களைப் பற்றி அறியப்படுகின்ற பல அறிய செய்திகளை இங்கே தொகுத்துக் காட்டுவோம்.



“பாண்டி நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் இடையிலுள்ள பகுதி பன்றி நாடு எனப்பட்டது. இந்நாட்டில் முதலில் இருந்தவர் வேடுவர். பின் குறும்பர் வந்தனர். அவர்க்குப்பின் வெள்ளாளர் வந்தனர். பன்றி நாட்டின் ஒரு பகுதி பாண்டியர் ஆட்சியின் கீழும், மற்றெரு பகுதி சோழர் ஆட்சியின் கீழும் இருந்தன. காராள வெள்ளாளர் கி.பி. முதல் நூற்றாண்டின் முன்பே சோழ தேயத்திற்கு குடியேறி விட்டனர். அவர்கள் தங்கள் உழவு தொழிலால் ஏற்பாரது வறுமையைப் போக்கி, அரசற்குப் பொருள் பெருக்கினார்கள். மூவேந்தருக்குட்பட்டுச் செல்வர்களாய் இருந்திருக்கின்றனர். சேர சோழ பாண்டியர்கள் வெள்ளாள குலத்தவரென்று கானகசபைப்பிள்ளை யவர்கள் கூறுவது தவறு. ஆதொண்டைச் சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து வெள்ளாளர்களைச் சோணாட்டல் குடியேற்றினர் என்றும், பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கீழ்க் காஞ்சியிலிருந்து நாற்பத்தொண்ணாயிரம் வேளாண்குடிகளைப் பாண்டி நாட்டிற் குடியேற்றினர் என்றும் தெக்கத்தூர், சுப்பிரமணியவேளார் என்பாரிடம் உள்ள ஒரு ஒலைச்சுவடியில் குறித்திருக்தகிறது. குறும்பரைத் துரத்தியடித்து வெள்ளாளர் தங்களை நிலத்தலைவராகச் செய்துகொண்டிருக்க வெண்டும். வெள்ளாளரைப் பற்றிய சாசனங்களெல்லாம் அவர்களை ‘நிலத்தரசு’ என்றே குறிப்பிடுகின்றன. சோழ பாண்டியரைப்போல் முடியரசாக இல்லாமை பற்றியே நிலத்தரசு என்று குறிப்பிட்டடிருக்கவேண்டும். நெடுங்காலம் வெள்ளாளர் நலத்திலும் பலத்திலும் மிக்கு வாழந்தனர். அதன் பின், கோனாடானது சம்மதிராயர் கடம்பராயர், மாளுவராயர், கொங்குராயர், கலிங்கராயர், அச்சுதராயர், குமதராயர் என்ற தலைவர்களிடம் கீழ்ப்பட்டிருந்தது.



கானாட்டுவெள்ளாளர்க்கும் கோனாட்டு ஒளியூர் வெள்ளாளர்க்கும் பகை யுண்டாகி அவர்கள் தங்கள் தங்கட்குத் துணையாக இராசேந்திர மங்கல நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான குடிகளடங்கிய மறவர்களைக் கொண்டு வந்தனர் என ஒரு ஓலைச் சுவடியில் காணப்படுகிறது.



நெட்டிராச பாண்டியன் இருநூறு மறவர் குடிகளைக் கொண்டு போய்த் தன் பகைவனை வென்று, பின் அவர்கட்கு நிலங்கள் அளித்து ‘மறவர் மதுரை’ என்னும் கோட்டையும் கட்டிக் கொடுத்தான். இவன் ஒரு மறவர் மகளைக் கல்யாணஞ் செய்து கொண்டு, இவர்க்குப்பிறந்த கிள்ளைக்கு ஏழு கிராமங்கள் கொடுத்தனன். வெள்ளாளர் தங்கள் உரிமைகளை மதுரைத் தேவனுக்கு விட்டு விட்டனர்.



கள்ளர்களைத் குறித்து அகநானூற்றுச் செய்யுட்கள் விரிவாகக் கூறுகின்றன. திருவேங்கட மலையில் வசித்தோரும்., அஞ்சா நெஞ்சு படைத்தவருமாகிய இவர்கள் ‘கள்வர் பெருமகன் தென்னன்’ என்ற பாண்டியனால் தென்னாட்டிற்கு அழைக்கப்பட்டனர் எனத் தோன்றுகிறது. புதுக்கோட்டைக்கு வடகீழ்பாலுள்ள வீசங்கி (மீசெங்கள) நாட்டில் இவர்கள் தலைமை வகித்திருந்தனர். இவர்களில் பலர் அரசர்களோடு சம்பந்தப் பட்டிருக்கின்றனர். நாராயணப் பேரரசு மக்கள் என்றும், படைத்தலைவர் என்றும், தந்திரிமார் என்றும், கர்த்தர் என்றும் கள்ளர்கள் அழைக்கப் பட்டனர்.



கள்ளர் வகுப்பினர் மேன்மேல் ஆதிக்கம் பெற்றனர். அவர்களிடம் நிலங்கள் ஒப்பவிக்கப்பட்டன. கோயிற் சொத்துக்களைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொள்ளப்பட்டனர். கோனாட்டு வெள்ளாளர்க்கும் கானாட்டு வெள்ளாளருக்கும் ஏற்பட்ட சண்டைகளில் கள்ளர்கள் இருதிறத்தார்க்கும் உதவி புரிந்தனர். வாணாதி ராயர்க்கும் மற்றைக் கார்காத்த வெள்ளாளர்க்கும் உண்டாகிய சண்டையில் வீசங்கி நாட்டுக் கள்ளர்கள் வெள்ளாளர்களைச் சூரைக்குடி வரையில் ஓட்டு வித்து, ஏழுபிரபுக்களைச் சிறைப்பிடித்து வாணாதிராயர் முன் கொண்டுவந்து விட்டனர். பின்பு இவர்களைச் சிவந்தெழுந்த பல்லவராயரிடம் கொண்டு போயினர். பல்லவராயர் கோனாட்டுப் பிரபுக்களைக் கூப்பிட்டு, இனி நீங்கள் கள்ளர்களோடு மாமனும் மருமகனும் போல வாழவேண்டுமென்ற கூறி, கள்ளர்களுக்கு 530 கலம் நெல்லும், 550 பொன்னும் வெள்ளாளர் கொடுக்கும்படி தீர்ப்பு அளித்தார்.



வெள்ளாற்றின் வழக்கிலுள்ள கோனாடானது உறையூர்க் கூற்றம், ஒளியூர்க்கூற்றம் , உறத்தூர் கூற்றம் என மூன்று கூற்றங்களாகவும் வெள்ளாற்றின் தெற்கிலுள்ள கானாடானது மிழலைக் கூற்றம், அதழிக் கூற்றம் என இரண்டு கூற்றங்களாகவும் பிரிக்கப் பட்டிருந்தன. இக்கூற்றங்களை 10,11-வது நூற்றாண்டுகளில் அரையர் அல்லது நாடாள்வார் என்னும் தலைவர்கள் ஆண்டு வந்தனரென்று கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது. கோபிநாதராவ் அவர்கள் சொல்லுகிறபடி இப்பொழுதும் இவ்வகையினர் சிற்சில் இடங்களில் இருத்தல் அறியலாம்.



அரையர்களில் அவர்கள் இருந்த இடம் பற்றி, சுருக்காக் குறிச்சிராயர் வாணாதிராயர் (வாணாதிராயன் கோட்டை), கடம்பராயர் (புலவயல் அரசர்), ஆலங்குடி நாட்டு இரண்டுவகை அரையர், அம்புகோயில் ஐந்து வீட்டரையர், இரும்பாலி யரையராகிய கடாரத் தரையர், குலோத்துங்கசோழதரையர், (குன்றையூர் அரசர்) எனப் பல பிரிவுகள் இருந்தன. சோழ, பாண்டியர்களின் அதிகாரம் இவ்விடங்களில் மிகுதியும் பரவவில்லையெனத் தெரிகிறது. அக்காலத்தில் வலிமிக்கவன் செய்வன வெல்லாம் சரியானவையே ஒரு தலைவன் பலமுள்ளவனாயின் தனது அதிகாரத்தைச் செலுத்திக் கொண்டேயிருக்கலாம். ஒரு கல்வெட்டில் ஐந்து கிராமக் குடிகள் ஒன்று கூடிக் காங்கெயன் என்ற ஒரு தவைனை மீட்டும் தவைனாகக் கொண்டு வந்த செய்தி சொல்லப் பட்டிருக்கிறது. சிலர் வாணதிராயரென்றும், மகாபலி கோத்திரத்தைச் சேர்ந்தவர்களென்றும் சொல்லியிருக்கிறது.



கி.பி.14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலிக்காபர் (மாலிக்கபூர்) முதலிய மகம்மதியர் தென்னாட்டின் மேற் படையெடுத்துக் கோயில்களை இடித்துப் பல கொடுமை விளைத்தனர். அப்பொழுது மக்களெல்லாரும் அரையர்களைச் சரண் புகுந்து ஊர்க்காவலை அவர்களிடம் ஒப்புவிக்கவே அவர்கள் அனைவரையும் பாதுகாத்தனர் என்று கல் வெட்டுக்களால் தெரிகிறது. குடிகளுக்குள் உண்டாகும் வழக்குகளையும் அரையர்களே விசாரித்துத் தீர்ப்பளித்து வந்தனர். அதற்காக அரசு சுந்தரம் என்ற ஒரு வரி அவர்களால் வாங்கப்பட்டு வந்தது. அரசு சுந்தரம் என்பது விளையும் பொருள்கள் எல்லாற்றிலும் ஒருபங்கை அரையருக்குக் கொடுப்பது. இவர்களில் சூரைக்குடி அரையர்கள் 300வருடங்கள் வரையில் ஆண்டு கொண்டிருந்தனரென்று தெரிகிறது. அரையர்களுக்கு அரசு என்றும், நாடாள்வார் என்றும் பட்டமுண்டு. அரையர்களிற் பலர் தேவர் என்ற பட்டமும் தரித்திருந்தனர்.



அறந்தாங்கியில் அரசு செலுத்திய தொண்டைமான்களுக்கும், 17ம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் இருந்த தொண்டைமான்களுக்கும் தொடர்பு புலப்படவில்லை. அறந்தாங்கி தொண்டைமான்களைப்பற்றி கி.பி.1426ல் தான் முதலில் தெரிகிறது. பொன்னம்பல நாத தொண்டைமான் (கி.பி.1514—1567) மிகவும் வலியும். செல்வாக்கும் முள்ளவனென்று தெரிகிறது. இவன் இலங்கையை ஏழுநாளில் வென்றதாகச் சொல்லப்படுகிறது. பாளையக்காரர் என்போர் வேறு வேறு தகுதியுடைய படைத்தலைவராவர். இவர்களிற் சிலர் பழைய அரசர்களின் வழியினர் அல்லது அமைச்சர் முதலானோரின் வழியினர் என்று சொல்கின்றனர். இவர்களின் முன்னோர் அரசர்களிடமிருந்து, அவர்களது மதிப்பைக் காப்பாற்றியதற்கோ, தாம் புரிந்த நன்றிக்கு மாறாகவோ, பட்டாளத்தை வைத்துக்கொள்ளவோ பெரு நிலங்களை இனாமாகப் பெற்றிருக்கின்றனர். பாளையக்காரரும் நிலவரி வாங்கியும் கிராமங்களைப் பாதுகாத்தும் வந்தனர்.



கி.பி.1378-ம் ஆண்டுக்குப் பின இவ்விடங்களில் பல்லவராயகர்கள் அரையர் என்னும் பெயருடன் இருந்தனர். இவர்கள் பன்னாள் வரை குளத்தூர்த் தாலுகாவிலுள்ள வழுத்தூரிலும், பெருங்களூரிலும் தலைவர்களாக இருந்தனர். தொண்டை மண்டலத்தைச் சோழர்கள் வென்றுவிட்ட பின்பு பல்லவராட்சி முடிவுக்கு வந்தமையின் பல்லவரின் கிளைகள் சோழரிடம் படைத்தலைவராகவும், அமைச்சராகவும் இங்ஙனம் அமைந்தனர். கலிங்கத்துப் பரணியிற் சொல்லப்பட்ட கருணாகரத் தொண்டைமான் அவர்களில் ஒருவன். கல்வெட்டக்களை ஆராயும் இந்திய அதிகாரியான வெங்கையா அவர்கள் சொல்லுகிறபடி வழுத்தூரிலிருந்து பல்லவராயர்கள் பல்லவர் குடும்பத்திற்கு எட்டிய உறவாயிருக்காலம். தஞ்சாவூருக்குக் கிழக்கே எட்டு நாழிகை வழியிலுள்ள வழுத்தூரிலிருந்து பல்லவராயர்கள் தெற்கே புற்பட்டதாக ஒரு வரலாறு உண்டு. சிவந்தெழுந்த திருமலைராய பல்லவராயரென்பர் பாண்டியர்களைப் பாதுகாத்தவரென்று திருநாரண குளத்திலுள்ள 1539-ம் ஆண்டுக் கல்வெட்டில் சொல்லியிருக்கிறது. மூன்று அல்லது நான்க பால்லவராய அரசர்கள் கார்காத்த வெள்ளாளர் காலத்தில் இருந்தனராக ஆதரவுகள் கூறுகின்றன.



வளரும்……….(1)




பாண்டி நாட்டரசனான உக்கிரவீர பாண்டிய மன்னன் ஏழு ஆண்டுகள் தொண்டை மண்டலத்தில் வேங்கடாசலப் பல்லவராயரைஅழைத்து வருதற்பொருட்டுக் காத்திருந்ததாகவும், பின் அவருதவியைக் கொண்டு சேதுபதி நந்தி மறவனைவென்றதாகவும், அதன் பொருட்டுப் பாண்டியன் பொன்னமராவதிப் பக்கத்தில் அவர்க்கு நிலங்கள் கொடுத்ததன்றி,’ அரசனின் மருமகன்’ என்ற பட்டமும், ஒரு அரண்மனையும் தந்ததாகவம் செப்புப் பட்டயத்தில் சொல்லியிருக்கிறது. தொண்டைமான் சக்கரவர்த்தி யென்று பட்டம் பெற்ற தொண்டைமான் பல்லவராயருடன் வந்தெனனெனவும் , அவனுக்கு அப்பகோவிலில் நிலங்கள் அளிக்கப்பட்டன எனவும் சொல்லப்படுகிறது.




கி.பி.1387-ல் வழுத்தூர்ப் பல்லவராயர்கள் திருக்கோகரணம் என்னமிடத்தில் தருமம் செய்திருப்பது தெரிகிறது. கல் வெட்டில் ‘இராஜ்யம் பண்ணியருளகையில்,



என்று வருவதால் இவர்கள் அரசரென்றே சொல்லப்பட்டனரென்பது விளங்கும். கி.பி.1312-ல் ஒரு பல்லவராயன் ஆரணிப்பட்டியிலுள்ள கடவுளுக்கு நிலங்கள விட்டமை புலனாகின்றது. வழுத்தூர்ப் பல்லவராயர்கள் தங்கள் அடையாளமாக ‘பல்லவன் குளம்’ என்ற வாவியும், பல்லவன் படி என்ற அளவுகருவியும் உண்டாக்கியிருக்கின்றனர். இப்பொழுது தசரா விழாவில் அரிசி அளப்பதற்கு இப் படி கருவியாக விருக்கின்றது. பல்லவன் குளம் என ஒன்று புதுக்கோட்டைக்கு நான்கு நாழிகை வழியிலுள்ள பெரியூர் என்னமிடத்தில் இருக்கிறது. வழுத்தூரில் அழிந்துபோன கோட்டைகள் உள்ளன.



பல்லவராயர்களில் , கோனேரிப் பல்லவராயர், மாஞ்சோலைப் பல்லவராயர், அச்சுதப்பப் பல்லவராயர், இளையபெருமாள் பல்லவராயர், ஆவுடைய பல்லவராயர், கந்தப்ப பல்லவராயர், மல்லப்ப பல்லவராயர், சிவந்தெழுந்த பல்லவராயர் என்ற பெயர்கள் காணப்படுகின்றன.



புலிக் கொடியும், மீன் கொடியம், வெண்குடையும், ஆறுகாற்சிங்காதனமும், ஆத்தி மாலையும் பல்லவராயர்கள் உடையராயிருந்தனர். புலிக்கொடி காஞ்சிப்பல்லவரது தொடர்பைக் காட்டுகிறது. மீன் கொடி பாண்டியர்களைத் தோல்வியிலிந்து காப்பாற்றியபின் தரித்திருக்கலாம். சோழருக்குரிய ஆத்திமாலை சூடியிருப்பது இவர்கள் சோழர்களின் சார்பு பெற்றிருக்கலாம் என்பதனைக் காட்டுகிறது.



புதுக்கோட்டை, கண்டர்கோட்டை, கல்லாக்கோட்டை முதலிய வற்றின் தலைவர்கள் உதிரத்தாலும், கல்யாணங்களினாலும் சம்பந்தமுடையராவர். இவர்கள் படைவீரராகவும், தலைவர்களாகவும் இருந்தனர். தனித்தனியாகத் தங்களுக்குள் இராச்சியமும் ஏற்படுத்திக்கொண்டனர்.




திருச்சிராப்பள்ளியை மகம்மதியர் முற்றுகை யிட்டபொழுது கள்ளர்கள் வந்து தாக்கி மகம்மதியரை அஞ்சச் செய்தனர். கள்ளர்கள் இந்நாட்டிற்கு அரசராயிருந்தனர். இவர்கள் மதுரை அரசனுக்குத் தீவையாவது கப்பமாவது கொடுக்கவில்லை. அரசன் இவர்களை யடக்குவது கூடாமையாருந்தது பின்பு மங்கம்மாளின் மந்திரி படைகளைக் கொண்டுபோய்ச் சிலரை மடித்து, அங்கே காட்டின் நடுவில் ஒரு கோட்டையைக் கட்டிச் சில பட்டாளங்களையும் வைத்தனன். ஆனால் அவர்கள் கடையாள ரெல்லோரையுங் கொன்று, கோட்டையையும் தவிடு பொடியாக்கிவிட்டனர். இங்கே சொன்வை புதுக்கோட்டைப் பக்கத்தில் நிகழவில்லை. அதற்குக் காரணம் பால்லவராயர் அல்லது தொண்டைமான்கள் இதை ஆண்டுவந்தமையே.





கி.பி.1116-ல் இராசேந்திர சோழன் ஆட்சியின் 5-வது ஆண்டில் நார்த்தாமலையிற் குறித்துள்ள கல்வெட்டில் தொண்டைமான் என்ற பெயர் குறிப்பிட்டிருக்கிறது. இப்பொழுதிருக்கிற தொண்டைமான் மரபினர் தொண்டை மண்டலத்திலுள்ள திருப்பதியைச் சார்ந்த தொண்டைமான் கோட்டையிலிருந்து தொண்டைமான் புதுக்கோட்டைக்கு வந்ததாகச் சொல்வது வழக்கம்.. தொண்டைமான் தொண்டைமண்டலத்திலிருந்து வந்தவரென்று ‘இராஜ தொண்டைமான் அநுராக மாலை’ என்ற சுவடியிற் சொல்லியிருக்கிறது.




தொண்டைமான் வமிசாவளி’ என்ற தெலுங்குச் சவடியில் (வெங்கண்ணாவால் 1750-ல் எழுதப்பட்டது) தேவேந்திரன் ஒரு நாள் பூமியில் சுற்றி வந்தனனென்றும், அப்பொழுது ஒரு கன்னிகையை மணந்தானென்றும், அவள் பெற்ற பிள்ளைகள் பலரில் ஒருவன் அரசனாயினானென்றும், சொல்லப்பட்டிருக்கிறது. இதன்படி தொண்டைமான் இந்திர வமிசம் என்று கொள்ளப்படும்.



தொண்டைமான் அம்புகோவிலில் குடியேறுதற்கு முன்பு அன்பில் என்ற இடத்தில் தங்கியிருந்தனனெறும், தங்சைக்கத் தெற்கில் உள்ள அம்புகோவில் நாடானது பன்னிரண்டு தன்னரச நாடாக ஏற்பட்டதென்றும் வெளியாகின்றது. வெங்கட்டராவ் புதுக்கோட்டை மானுவலில், தொண்டைமான்களோடு ஒன்பு குடிகள் அம்பு நாட்டில் குடியேறினரென்று கூறி, அவர்கள் பெயரும் குறிப்பிடுகின்றார்.



பெயர்கள்



(வடக்குத் தெருவார்கள்)



1.மாணிக்காரன்
2.பன்றிகொன்றான்
3.பின்பன்றி கொன்றான்
4.காடுவெட்டி
5.மேனத்தரையன்
தெற்குத் தெருவார்கள்
6.பல்லவராயன்
7.தொண்டைமான்
8.ராங்கியன்
9.போர்ப்பன்றி கொண்டான்
10.கலியிரான்



‘இவர்கள் பத்து வீட்டினரும் அரசு என்றும் சொல்லப்படுகின்றனர். இவர்கள், தங்களது புது நாட்டிற்குக் குருக்கள், பிச்சர், மாலைகோப்பார், மேளகாரன், வண்ணான், பரிகாரி என்னும் இவர்களைக் கொண்டு வந்தனர், இன்னவர் அம்பு நாட்டிற் குடியேறிய பின்பு ஆதிய வலங்கன், காளிங்கராயன் என்ற இரண்டு குடும்பங்களும் இவர்களுடன் சேர்ந்து கொண்டன வென்றும், இவர்கள் எல்லோரும் சேர்ந்து நாலா பக்கங்களிலும் சென்று, பிலாவிடுதி, கரம்பக்குடி, வடக்கலூர், நெய்வேலி, கல்லாக்கோட்டை, நரங்கியன்பட்டி, அம்மணிப்பட்டி, பந்துவாக்கோட்டை, மங்கல வெள்ளாளவிடுதி என்னும் ஒன்பது இடங்களில் குடியேறின ரென்றும் அறிகின்றோம்.




தொண்டைமானால் குறிக்கப்ட்டுள்ள பல தாம்பிர சிலாசாசனங்களில், அவர்கள் தற்காலூரில் (அம்புநாட்டில்) நிலங்களை யுடைய இந்திரகுல அரையர் என்று குறிப்பிட்டிருக்கிறது. சிவன், பிள்ளையார், மாரியம்மன், வீரமாகாளி என்ற தெய்வங்களைப் பூசிப்போர் இவர்கள்.




ஸ்ரீரங்கராயலு என்ற விஜயநகர அரசன் இப்பக்கமாக இராமேச்சுரத்திற்கு யாத்திரை சென்ற பொழுது அவ்வரசனுடைய யானை மதங்கொண்டு பல சேதங்களை யுண்டுபண்ண, அதனை யறிந்த ஆவடைரகுநாத தொண்டைமான் அந்த யானையைப் பிடித்து அடக்கி ராயலுவிடம் கொண்டு வந்தனன் என்றும், அப்பொழுது தொண்டைமானுக்கு ‘ராயராகுத்த ராயவஜ்ரீடு ராயமன்னீடு ராய’ என்னம் பட்டமும், பல நிலங்களும், யானையும் சிங்கமுகப் பல்லக்கும், பிறவும் வரிசையாக அளிக்கப்பட்டன என்றும். அதிலிருந்து ‘தொண்டைராய தொண்டைமான’ என அவன் வழங்கப்பட்டனன் என்றும் அறியப்படுகிறது. இந்த மூன்றாவது ஸ்ரீரங்கராயலு என்ற அரசன்றான் சென்னையை ஆங்கிலேயருக்குக் கொடுத்தவன் இதிலிருந்தே (கி.பி.1639) புதுக்கோட்டை தொண்டைமானால் ஆளப்பட்டு வருகிறது.”




இதுகாறும் காட்டியவற்றி லிருந்து, கள்ளர்கள் தொண்டை நாட்டினின்றும் சோழ, பாண்டி நாடுகளிற் குடியேறி, அரையர், என்னும் பெயருடன் தன்னரசாக ஆட்சிபுரிந்து வந்தனர் என்னும் உண்மை நன்கு புலப்படுதல் காணலாம். பல்லவராயர் , தொண்டைமான், கள்ளர் என்னும் பெயர்கள் ஒரே வகுப்பினர்க் குரியனவென்று துணிந்து கூறமாட்டாது சரித்திர ஆசிரியர் சிறிது இடர்ப்படினும், அவர் கூறிய வரலாறெல்லாம் ஒரு வகுப்பின ராகவே வலியுறுத்தி நிற்றல் காண்க. யாம் முன்பு கூறியவைகளை இவற்றுடன் சேர்த்துப் பார்க்குமிடத்து நடுவு நிலையுடைய அறிஞர் எவரும் கள்ளர் பல்லவ வகுப்பினரே யென்னும் முடிவினை மேற்கொள்வரென்று துணிகின்றனம். ஒரு காலத்தில் தொண்டை மண்டலத்தோடு, சோழ மண்டலத்தையும் அடிப்படுத்து ஆட்சி புரிந்து வந்த பல்லவ சக்கரவர்த்திகள் பின்பு தம் பேரரசாட்சியை இழந்து, பிற விடங்களிற் குடியேறிச் சிற்றரசர்களாயும், சோழர்களிடத்தில் அமைச்சர், தண்டத் தலைவர் முதலானோராயும் இருந்து வந்தனரென்பது மறுக்க வொண்ணாத சரித்திர வுண்மையாம். இவர்கள் தம் பெரும்பதவிகளை யிழந்து சிறுமையுற்ற விடத்தும் இவர்களடன் பிறந்த அஞ்சாமையும், வீரமும் ஒழிந்து விடவில்லை யென்பது மேலே காட்டிய வரலாற்றுக் குறிப்புகளாற் புலபடும். கருணாகரத் தொண்டைமானது வரலாறும் இதனை வலியுறுத்தா நிற்கம்.




தென்னிந்திய சாசன புத்தகம் இரண்டாவது தொகுதி, முதற் பகுதி 22-வது சாசனத்தில்,



” பாண்டி குலபதி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூரில் தொண்டைமானார் தம் பேரால் வைத்த அகரம் சாமந்த நாராயணச்சதுர்வேதி மங்கலம்” என்று வருகிறது. இதுற்கு விளக்கம் எழுதியிருப்பது,



“தொண்டைமானார் என்பவர் இந்நிலங்களை வாங்கித் தந்தவர். சாமந்த நாராயணன் என்பதே இவர் பெயராகவும் வழங்கி வந்திருக்கவேண்டும். இவர் ஒரு சிற்றரசராகவோ அன்றி ஒரு பெரிய பதவியினராகவோ இருந்திருக்க வேண்டும். இப்பொழுது புதுக்கோட்டை அரசர் தொண்டைமான் என்னும் பட்டம் புனைந்தவர், இவருடைய முன்னோர் 1680 ல் பல்லவராய தொண்டைமானைத் தள்ளிவிட்டுப் பட்டத்திற்கு வந்தவர். இவர் ஒருகால் சாமந்த நாராயண தொண்டைமான், கருணாகரத் தொண்டைமான் இவர்கள் வழியினராக இருத்தல் வேண்டும். கலிங்கத்துப் பரணியின்படி கருணகரத் தொண்டைமான் வண்டை நகரில் வசித்த பல்லவ அரசன்: குலோத்துங்கனடைய முதன் மந்திரி. தொண்டைமான் என்னும் பட்டத்திற்குப் பொருள் தொண்டை நாட்டரசக் என்பதாம். தொண்டை மண்டலம் என்பது பல்லவர் நாட்டின் தமிழ்ப் பெயராகும். காஞ்சிபுரம் அதன் தலைநகரம். இந்நகரில் அகப்பட்ட எண்ணிறநத சாசனங்கள் பல்லவராச்சியம் சோழ மன்னருக்கு இரையானமையைத் தெரிவிக்கின்றன” என்பது. இத்தகைய ஆதவுகள் எண்ணிறந்தனவுள்ளன.



இத்துணையும் காட்டிப் போந்தவைகளால் கள்ளர் பல்லவ வகுப்பினரே யென நிலை நாட்டப்படுகின்றது. எனினும் சோழர்குடி முதலியவும் பிற்காலத்தில் இம்மரபிலே கலந்து விட்டன எனத் தெரிகிறது. இங்கே சோழரது கலப்பைக் குறித்துச் சிறிது காட்டுதும்.




சோழர்கள் கி.பி. 14-ம் நூற்றாண்டு வரையில் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். பின்பு அவர்கள் எங்கே போயினர்? அவரது ஆட்சி நிலை குலைந்து விட்டதேயன்றி அவர் தாமும் கிளையுடன் அறவெயொழிந்து விட்டனராவரா? எந்த குலமும் அஃது எவ்வளவு சீர்கேடான நிலையை அடைந் திருப்பினும் அறவேயொழிந்துவிடு மென்பது பொருத்தமாகாது. ஆயின், அது மற்றொன்றிற் கலந்து விடுதலும், பெயர் முதலியன மாறி நிற்றலும் இயல்பே ஆகலின் சோழர்கள் எம்மரபிலே கலந்துள்ளனர் என்பதே ஆராய வெண்டுவது.




கள்ளர்களைச் சோழர் மரபினரெனச் சிலர் கருதியுள்ளாரென்பது முன்பு காட்டப்பட்டது. இவர்கள் முதலில் பல்லவ வகுப்பினரே யென்றும், சோழர்கள் பின்பே இவர்களுடன் கலந்துள்ளனரென்றும் நாம் கூறுகின்றோம். சோழர் கலந்துள்ளன என்பதற்கும் வேறு ஆதரவுகள் வேண்டும். அவ்வாதரவுகளே இங்கே எடுத்துக் காட்ட விருப்புகின்றவை.



இப்பொழுது பெரிய மனிதர்களாகவோ, பெரிய மனிதர்களின் வழியினராகவோ கள்ளர்கள் பெருந்தொகையினராய் இருந்து வரும் காவிரி நாடே சோழர்கள் வழி வழியிருந்து ஆட்சி புரிந்த நாடு என்பதை முதலில் நினைவிற் கொள்ளவேண்டும். சோழர்கள் சோணாடேயன்றி வேறு நாடுகளையும் ஓரொருகாலத்தில் வென்று ஆண்டிருக்கின்றனர். சோழரிற் சிலர்க்கு ‘கோனேரிமேல் கொண்டான்’ என்னும் பட்டம் வழங்கியிருக்கிறது, இப்பெயர் தரித்திருந்தோரும் , கொங்கு நாட்டையும் ஆட்சி புரிந்தோருமான மூன்றாம் குரோத்துங்க சோழனும், வீர சோழனும் முறையே வெங்கால நாட்டுக் கம்மாளர்க்கச் செய்திருக்கும் தீர்ப்பு ஒன்றும், கருவூர்க் கோயிற் பணியாளர்க்கு இறையிலி நிலம் விட்டிருப்பதைக் குறிப்பது ஒன்றுமாக இரண்டு கல்வெட்டுக்கள் கருவூர் பசுபதீச்சுரர் கோயிலில் வெட்டப்பட்டுள்ளன. அவை பின் வருவன:



“திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீகோனேரிமேல் கொண்டான் வெங்கால நாட்டுக் கண்மாளர்க்கு 15-வது ஆடி மாதம் முதல் தங்களுக்கு நன்மை தின்மைகளுக்கு இரட்டைச் சங்கும் ஊதி, பேரிகை உள்ளிட்டவும் கொட்டுவித்துக் கொள்ளவும், தாங்கள் புறப்படவேண்டும் இடங்களுக்குப் பாதரஷை சேர்த்துக் கொள்ளவும், தங்கள் வீடுகளுக்குச் சாந்து இட்டுக்கொள்ளவும் சொன்னோம். இப்படிக்கு இவிவோலை பிடிபாடாகக் கொண்டு சந்திராதித்தவரை செல்லத் தக்கதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலும், செம்பிலும் வெட்டிக் கொள்க. இவை விழுப்பாதராயன் எழுத்து.”



‘’கோனேரி மேல்கொண்டான் கருவூர்த் திருவானிலை ஆளுடையார் கோயில் தேவர்கன்மிகளுக்கு — இந்நாயனார் கோயிலுக்கு நம்பெயரால் இயற்றின வீரசோழன் திருமடவளாகத்தில் குடியிருந்த தவசியர்க்கும், சிவப்பிராமணர்கும், தேவரடியார்க்கும், உவச்சர்க்கும், பலபணி நிமந்தக்காரர்க்கும் சீவனசேஷமாகத் தென்கரை ஆந்தனூரான வீரசோழ நல்லூர் கொடுத்து இவ்வூரால் வந்த இறையும் எலவையும் உகவையும் கொள்ளப்பெறாதோமாக விட்டு மற்றுள்ள குடிமைப்பாடும் எப்பேர்ப்பட்டதும் இந்நாயனார் கோயிலுக்குச் செய்து இவ்வூர் இப்படி சந்திராதித்த வரை அநுபவிப்பார்களாக நம்மோலைக் கொடுத்தோம். இப்படி செம்பிலும் சிலையிலும் வெட்டிக்கொள்க. இவை விலாடத்தரையன் எழுத்து”



இவற்றிலிருந்து தோன்றும் பிற உண்மைகள் ஒருபுறம் நிற்க. கோனேரி மேல்கொண்டான் என்னும் பெயரே இங்கு வேண்டுவது. பெயரினைக் குறித்துத் தென்னிந்தியசாசன புத்தகம் இரண்டாவது தொகுதி, முதற்பகுதி 21-ம் சாசனத்தில் சாசன பரிசோதகர் பின் வருமாறு குறித்திருக்கின்றனர்.:



“இப்பெயர் ஒரு விடுகதை பொன்றே இருந்து வந்திருக்கிறது. பலர் பலவிதமாக இதனை எழுதியுள்ளார்கள்……..கோனேரின்மை கொண்டான் என்பதற்கு அரசர்க்குள் ஒப்பிரல்லாதவன் என்று பொருள்கொள்ளலாம். கோனேரி எனப் பின்னர் மருவியிருக்கிற தாகத் தெரிகிறது, வீரசோழனும், குலோத்துங்க சோழதேவனும் கோனேரிமேல்கொண்டான் எனவும், கோனேரிமேங்கொண்டான் எனவும் பட்டம் பூண்டிருக்கின்றனர். ஒரு நாணயத்தில் கோனேரி ராயன் என்று எழுதப்பட்டிருக்கிறது. கோனேரின்மை கொண்டான் என்னும் பட்டம் சோழவரசர் ராஜராஜ தேவராலும் கொள்ளப் பட்டிருக்கிறது. சுந்தர பாண்டியனுக்கும் இப்பட்டமுண்டு. வீரபாண்டியன், குலசேகர தேவன் இவர்களுக்கும் இப்பட்டத்தையே கொண்டவர்கள்”



இப்பெயர் இங்ஙனம் திரிந்து காணப்படினும், கோனேரி மேல்கொண்டான் என்பதே திருத்தமுள்ளதாக இப்பொழுது கொள்ளற்பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்த்தம் கோனேரி என்னும் பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்தம் கோனேரி என்னும் பெயரதாதலும், கோனேரிராஜபுரம் எனச் சில ஊர்களிருத்தலும், கோனேரி என்று பலர் பெயர் வைத்துக் கொண்டிருத்தலும் இவ்வுண்மையை விளக்குவனவாகும். குலசேகர ஆழ்வார் காலத்திலேயே கோனேரி என வழங்கியிருப்பது, அவர்,



‘கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே’



என்று பாடுவதால் அறியலாகும்.



இவ்வாற்றால் கோனேரி, மேல்கொண்டான் என்னும் இரு பெயர்களை இணைந்து ஒரு பட்டமாக வழங்கியிருப்பது புலனாகும். இப்பெயர்களில் யாதேனும் யாருக்காவது இப்பொழுது பட்டப்பெயராக வழங்குகின்றதா என்பதே கண்டறிய வேண்டுவது. கள்ளருக்குள் வழங்கும் பல்வகையான பட்டப் பெயர்களில் மேல் கொண்டார் என்பதும் ஒன்று. இப்பட்ட முடையார் செங்கிப்பட்டி முதலிய இடங்களில் இருக்கின்றனர். இன்னோர் பரம்பரையாக மிக்க மேன்மை யுடையராய் இருந்து வந்திருக்கின்றனர். மதுக்கூர்ச்சமீன்றாரின் மாப்பிள்ளையும் கூனம் பட்டியின் அதிபருமாகிய திரூவாளர் S. குமாரசாமி மேல்கொண்டார் அவர்களை இதற்குச் சான்றாகக் குறிப்பிடுதல் பொருந்தும். கோனேரி என்னும் பெயரும் கள்ளர்களில் பலர் தரித்து வந்திருக்கின்றனர் இவகைளிலிருந்து. சோழர் பலர்க்கு வழங்கிய மேல்கொண்டான் என்னும் பெயர் அவர் வழியினர்க்குப் பட்டமாக இருந்துவருகிறதென்றும், அவர்கள் பல குடும்பங்களாகப் பிரிந்து தங்கள் நாடாட்சியை இழந்து பிற்காலத்திலே சோழர் குடியிற் றேன்றினோ ரென்னும் உண்மை மறக்கப்பட்டிருக்கிறதென்றும் துணியலாகும்.



இனி, இவர்கள் பட்டங்களில் சோழங்கர் அல்லது சோழங்க தேவர் என்பதும் ஒன்று, இப்பெயரின் வரலாற்றை ஆராயும் பொழுது சோழ சம்பந்தம் பெறப்படுகிறது. சோழ மன்னர்கள் ஓரொருகால் தாம் வென்று கைப்பற்றிய நாடுகளில் தம் கிளைஞரைப் பிரதிநிதிகளாக நியமித்து, அவர்கட்கு வெவ்வேறு பட்டங்கள் கொடுத்திருக்கின்றனர் எனத் தெரிகிறது. சோழ பாண்டியன், சோழ கேரளன், சோழபல்லவன் முதலியன அங்ஙனம் உண்டாய பட்டங்களாகும். தென்தனிந்திய சாசன புத்தகம் மூன்றாவது தொகுதி, முதற் பகுதி 59-ம் சாசனத்தில் வந்துள்ள பட்டங்களில் ‘சோழங்கன்’ என்பதும் ஒன்று, ‘தன்றிருத்தம்பியர் தம்முள்–மதுராந்தகனைச் சோழகங்கனென்றும், மணிமுடிசூட்டி’ எனக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து சோழமன்னன் ஒருவன் தம்பி சோழகங்கன் சோழங்கன் மருவுவது மிக எளிதே. இப்பட்டமுடைய கள்ளர் குல மக்கள் துண்டுராயன்பாடி, அந்தலை முதலிய இடங்களில் இருக்கின்றனர். இவரெல்லாம் தொன்றுதொட்டுப் பெருமை வாய்ந்துள்ள குடும்பத்தினர்களாவர். இன்னோர் கோட்டை கட்டியும் ஆட்சி புரிந்திருக்கின்றனர். அது பின் கூறப்படும்.



சாசனங்களில் ‘சோழகோன்’ என ஒரு பட்டம் வந்துள்ளது. இது சோழகன் எனத்திரிந்து பன்மையில் சோழகர் என்றாகி இவ்வகுப்பினர்க்கு வழங்குகிறது.



கள்ளர்களில் நாட்டாள்வார் அல்லது நாடாள்வார் என்னும் பட்டந்தரித்தோர் பல இடங்களில் பெருந்தொகையினராக இருக்கின்றனர். கோனாடு, கானாடுகளின் பிரிவுகளை ‘அரையர் ‘ ‘நாடாள்வார்’ என்னும் பட்டமுடையார் ஆட்சிபுரிந்த செய்தி கல்வெட்டுகளில் வெளியாவது முன்பே காட்டப்பட்டது. நாடாள்வார் என்னும் இப்பெயர் முதல் குலோத்ததுங்கன் மகனாகிய விக்கிரம சோழனுக்கு வழங்கியுள்ளது. குருபரம்பரைப் பிரபந்தம் என்னும் தமிழ்ச் செய்யுள் நூலில், இராமாநுசர் சரிதையில்,



‘சீராரு மரங்கத்துச் சிலபகல்கண் மன்னவந்நாட்




பாராளு மன்னவன் பாகவத ரிடத்திலென்றும்





ஆராத காதலனாம் அகளங்க நாடாள்வான்





ஏராரும் வைகுந்த நாடாள வேகினான் (794)




என்று கூறப்படுதல் காண்க. (செந்தமிழ் தொகுதி 3, பாக்கம் 347-351)



விக்கிரமனுக்குப் பின்னர் ஸ்ரீரங்கத்தில் சிற்றரசர்களாயிருந்தோர்க்கும் இப்பெயர் வழங்கிய செய்தி கல்வெட்டக்களால் வெளியாகின்றது. அது பின்பு காட்டப்படும். இவைகளிலிருந்து முடியுடை வேந்தராகிய சோழர்க்கு வழங்கிய நாடாள்வார் என்னும் பெயர் அவ்வழியினர்ககும் ஆட்சி சுருங்கிய பிற்காலத்தும் வழங்கி வந்திருப்பது புலனாம். இவ்வாறே மற்றும் பல பட்டங்கள் சோழர்க் குரியன கள்ளரிடத்திற்காணப்படுகின்றன.



இது காறும் தட்டியவற்றிலிருந்த பல்லவர் வழியினராகிய கள்ளரோடு சோழரும் கலந்து விட்டமை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் விளங்கும். பல்லவர் வழியும் சோழர் வழியும் ஒன்றுபட்ட ஓர் வகுப்பு இஃது எனலும் பொருந்தும்.



இனி, இவர்கட்கு வழங்கும் கள்ளர், இந்திரர் என்னும் பெயர்கள் எப்படி வந்தன என்பது ஆராயற்பாலது. இந்திர குலாதிபர் சங்கம் நாலாவது ஆண்டு விழாவில் தலைமை வகித்த சீமான் வா. கோபாலசாமி ரகுநாத இராசாளியார் அவர்கள் தமது முகவுரைப் பிரசங்கத்தில் இப்பெயர்களைக் குறித்து விரிவாக ஆராயந்துள்ளார்கள் . அவற்றில் ஏற்பவற்றை இங்கே சுருக்கிக் காட்டுதும்.



1.”கள்வனென் கிளவி கரியோனென்ப’ எனத் திவாகரமும், ‘கடகரிப் பெயரும் கருநிற மகனும், கர்க்கடக விராசியும் ஞெண்டும் கள்வன்’ எனப் பிங்கலந்தையும் கூறுவதிலிருந்து கள்வன் என்னுஞ் சொல் கருநிறமுடையோன் என்னும் பொருளில் தொன்று தொட்டு வழங்கியுள்ளமை புலனாகும் . ஆரியர் தமிழரைக் கரியவரென்று இருக்குவேத மந்திரத்திற் கூறுகின்றனர். இந்திரனுக்கும் கரியோன் எனப் பெயரிருக்கிறது. சோழனும் கருநிறம் பற்றியே ‘மால்’ என அழைக்கப்படுகின்றான். இவ்வாற்றால் இந்திர குலத்தவர் எனினும், கள்வர் குலத்தவர் எனினும் இந்தியப்பழங் குடியினரான தமிழர் என்பதே பொருள் எனத் துணியப் படுகிறது.



2.கள்வர் என்னும் சொல்லுக்குப் பிறர் பொருளை வெளவுவோர் என்னும் பொருளும், பகைவர் என்னும் பொருளும் உண்டு. இதற்கு நேரான ‘தஸ்யு’ என்னும் சொல்லை வடமொழி அமரகோசத்தில் சூத்திர வர்க்கத்தில் சேரான் என்னும் பொருளில் வைத்திருப்பதோடு ஷத்திரிய வர்க்கத்தில் பகைவன் என்னும் பொருளில், வைத்திருத்தலும் காண்க. ஆரியர் இந்நாட்டுப் பழங்குடிகளைத் ‘தஸ்யுக்கள்’ என வழங்குகின்றனர். இங்ஙனம் ஆசிரியர்களால் தமக்குப் பகைவர் என்று அழைக்கப்பட்ட பழந்தமிழரே கள்வர் என்னும் சொல்லுக்குப் பொருளாய் நிற்றல் துணியப்படுகிறது.



கள்ளர் என்னுஞ் சொல்லுக்குக் கரியவர், பகைவர் என்ற இரு பொருளும், இந்திரன் குலத்தவர் என்னுஞ் சொல்லுக்குக் கரியவர் என்ற ஒரு பொருளும் இங்கே கொள்ளப்பட்டுள்ளன.



இனி, ஒரு சாரார் களப்பிரர் என்னும் பெயரே கள்வர் எனத் திரிந்ததாகும் எனக் கருதுகின்றனர். களப்பிரர் என்பார் தட்சிணத்தை ஆண்ட ஓர் அரச வமிசத்தினர். இவர்கள் ஒரு காலத்திற் பண்டி நாட்டையும் வென்று அடிப்படுத்திருக்கின்றனர்.



இனி, சீவகசிந்தாமணி 741 -ம் செய்யுளில் உள்ள ” கள்ளராற் புலியை வேறு காணிய’” என்னந் தொடருக்கு ‘அரசரைக் கொண்டு சீவகனைப்போர் காணவேண்டி’ என உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் பொருள் கூறியிருத்தலின் கள்ளர் என்னும் சொல்லுக்கு அரசர் என்னம் பொருள் கருதப்படுகிறது. சீவகனைப் புலியென்று கூறியதற்கேற்ப அரசரைக் கள்ளர் என்றார் எனின், அப்பொழுதும் வீரத்தின் மேம்பட்டார் என்னும் பொருள் பெறப் படுகின்றது. வீரர் என்னும் பொருள் பற்றியே கள்வர் அல்லது கள்ளர் என்னும் குலப்பெயர் தோன்றியதென்பது பழைய ஆதரவு கட்கும் யூக அநுபவங்கட்கும் ஒத்ததாயிருக்கின்றது. இதனை மறுப்பதற்கு எவ்வகையான காரணமும் இல்லை.



காட்டில் வாழும் ஆறலை கள்வர் என்பார் உளராயினம் அன்னவர் வேறு இவர் வேறு என்பதனைச் சிறிதறிவுடையாரும் அறிவர். பொய்யடிமையில்லாப் புலவர் பெருமக்களால் கள்வர்கோமான் புல்லி எனவும் , கள்வர் பெருமகன் தென்னன் எனவும் சிறப்பித்தோதப் பட்டிருத்தலை அறியும் அறிவுடையார் எவரும் கள்வர் என்னும் குலப்பெயர்க்கும் உயர்பொருள் கொள்ளாமலிரார். கள்வர் கோமான் புல்லிக்கும் இன்னவர்க்கும் யாதும் தொடர்பில்லை ; இவர்கட்கு இப்பெயர் சிறிது காலத்தின் முன்பே இவர்களது தீச்செயலால் ஏற்பட்டிருக வேண்டும் என்னில், புல்லிக்கம் இவர்க்கும் தொடர்பில்லாது போயினும் பல்லவ, சோழ மன்னரது வழியினராய், இற்றைக்கும் பல இடங்களில் குறு நில மன்னராய், இருந்து வரும் ஓர் பெரிய வகப்பினர் தமது தீச்செயல் பற்றிப் பிறர் இட்ட பெயரினைத் தமக்குக் குலப்பெயராக ஒருங்கே ஏற்றுக்கொண்டன ரென்பது எவ்வளவு அறியாமை யாகும்! இனி வெட்சிமறவர் கள்வர் எனவும். கரந்தை மறவர் எனவும் வழங்கப்படுவரென்னில்,



வஞ்சி மறவர், உழிஞைமறவர், தும்பை மறவர் முதலியோர்க் கெல்லாம் ஒவ்வொரு வகுப்பினரைக் காட்டுதல் வெண்டும் என்க. ஓர் அரசனாதல், அவன் படையாளராதல் தாம் புரியும் போர் முறைபற்றி வேறு வேறு திணைக்கும் உரியராவரென்பதும், அதனால் ஒருவர்க்கே பல பெயரும் பெற உரிமை யுண்டென்பதும் தமிழிலக்கணம் கற்றவர் நன்கு அறிவர்.



இனி, இவர்கள் வீரராயினும் அரசராகவோ, படையாளராகவோ சென்று மாற்றாரது நிலத்தைக் கொள்ளை கொண்டமையால் இவ்பெயர் எய்தினாராவர் என்னில், உலக சரித்திரத்தில் அறியலாகும் எந்த அரச பரம்பரையினரும் கொள்ளை கொள்வோர் என்னும் பெயருக்கு உரியராகாது தப்பவியலாது; இப்பொழுது ஐரோப்பாக் கண்டத்திலுள்ள எல்லா அரசுகளும் இப்பெயரினைப் பெறுதற்கு முற்றிலும் தகுதியள்ளவை; எனினும் இது குறித்து இப் பெயர் உண்டாதல் வழக்காறன்று,



இனி இவ்வகுப்பினரில் களவுத் தொழில் செய்வார் இருப்பதும் உண்மையே. வேறு எவ் வகுப்பிலே தான் இத்தீத்தொழில் செய்வோர் இல்லாதிருக்கின்றர்? களவுக்குக் காரணம் அவரவர் நிலைமையே யன்றி, ஓர் வகுப்பினுட் பிறத்தலன்று என்பதை அறிவுடையோர் எவரும் மறுக்கார்.



அரசாங்கத்தினரும், பொது மக்களும் எழைகளின் நிலைமையறிந்து அவர்க்கு உதவி புரியாது புறக்கணித்திருப்பதனாலேயே இத்தகைய குற்றச் செயல்கள் மிகுகின்றன. எனவே குற்றத்திற்கு அனைவரும் பங்காளிகள் என்பதனை உணரவெண்டும். இதுகாறும் கூறியவற்றிலிருந்து கள்வர் அல்லது கள்ளர் என்னும் குலப்பெயரின் வரலாறு பலராற் பலவாறு கூப்படினும் வீரர் என்னும் பொருள் பற்றி அப்பெயர் உண்டாயிற்றென்பதே முற்றிலும் பொருந்தியதெனல் பெறப்படுமாறு காண்க.



இனி, இந்திரகுலத்தார் என இவர்கள் வழங்கப்படுதற்கும் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளக்கு முற்பட்ட ஆதரவுகள் கிடைக்கின்றன. தேவேந்திரன் ஒரு நாள் பூமியிற் சுற்றி வந்தானென்றும், அப்போது ஒரு கன்னிகையை மணந்தா னென்றும், அவள் அநேக பிள்ளைகளைப் பெற்றனளென்றும், அவர்களில் ஒருவன் அரசனானானென்றும் 172 ஆண்டுகளின் முன் எழுதப்பெற்ற தொண்டைமான் வமிசாவளி என்னும் நூலிற் கூறியிருப்பது முன்பே காட்டியுள்ளாம்,



கள்ளர்,மறவர், அகம்படியர் என்ற மூன்று வகுப்பினரும் ஒரே யினத்தவரென்றும், இவர்க ளெல்லாரும் இந்திர குலத்தினரென்றும் பலர் சொல்லியும், எழுதியும் வந்திருக்கினறனர். பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியும் கொதமர் பத்தினியும் ஆகிய அகலிகையைத் தேவேந்திரன் கரவிற் புணர்ந்த காலத்து மூன்று மக்கள் பிறந்தனரென்றும், முனிவர் மனைக்குத் திரும்பியபொழுது மறைந்தவன் கள்ளனென்றும், மரத்திலேறியவன் மரவனென்றும், அகங்காரத்துடன் நின்றவன் அகம்படியனென்றும் பெயர்பெற்றன ரென்றும் கதை கூறுவர்.



இதிலிருந்தே இக்கதையைப் படைத்தவன் எவ்வளவு அறிவிலியாயிருக்க வேண்டுமென்பது புலப்படும். இது போலும் அறிவிலார் கூற்றுக்களை ஆராயாதே ஆங்கிலத்தில் எழுதிச் சரித்திரமாகக் காட்டிவிடும் பெரியோர்கள் இன்னமும் இவ்வுலகத்தில் இருக்கின்றனர் ! இக்கதை, இந்திர குலம் என்ற வழக்கை வைத்தக்கொண்டு, சூரிய குலம், சந்திர குலம் என்பவற்றின் உறபத்திக்கு ஆண் பெண் வேண்டி யிருந்தமை போல இதற்கும் வேண்டுமென்று கருதிய யாரோ கட்டியதொன்றாகும். கட்டியவரது கல்வி, மறவர் முதலிய பெயர்க்குப் பொருள் காணலாகாத அளவினதாகும்.



இந்திரனுக்கும் அகலியைக்கும் பிறந்தார் என்பதில் ஓர் குறைவு இருப்பதாகக் கருதி இங்ஙனம் கூறுககின்றே மல்லேம். உலகத்தின் படைப்பையும், சூரிய சந்திர வமிசங்களின் தோற்றத்தையும், வசிட்டராதி முனிவர்களின் பிறப்பையும் நோக்குங்கால் அவையாவும் இழிவுள்ளனவாகவே நமக்குத் தோற்றுதல் கூடும். தமிழர்களாய இவர்களை இந்திரனுக்கும் அகலியைக்கும் பிறந்தவர்களென்று கூறுவது சிறிதும் சரித்திர இயல்படையதாகா தென்பதே நம் கருத்து. அகலியை வரலாறு கூறும் இராமாயணம் முதலியவற்றில் கள்ளர் முதலியோரின் பிறப்புக் கூறப்பட்டிருக்குமேல் அது சரித்திர மாகாவிடினும் ஒருவாறு மதிப்பிற்குரியதாகும். அங்ஙனமின்றி யாரோ அறிவிலார் கட்டிவிடுவதெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்ளத்தகும்?



இனி, இம்மூன்று வகுப்பையும் குறித்துப் பூவிந்திர புராணம், கள்ளகேசரி புராணம் என்ற தமிழிலே புராணங்கள் எழுதப் பட்டிருக்கின்றன. இவையெல்லாம் பிரமாண்ட புராணம் முதலியவற்றைச் சேர்ந்தனவாம். சிவபிரான் உமாதேவிக்கும்,



அகத்தியர் புலத்தியர்க்கும், சூதபுராணிகர் நைமிசவன முனிவர் கட்கும் கூறியனவாம். இவற்றின் சிறப்பையும் மதிப்பையும் இங்கெடுத்துக் கூறுதல் மிகை. இந்திரன் அகலியைபால் விருப்பங்கொண்டதை யறிந்த இந்திராணி தன் சாயையால் அகலியை போலும் அழகுடைய மோகனாங்கி என்பாளைப் படைத்திட, இந்திரன் அவளைச் சேர்ந்து கள்ளர், மறவர், அகம்படியர் என்னும் பூவிந்திரர் மூவரைப் பெற்றனனென்றும், அவர்கள் தமிழ்நாடு மூன்றுக்கும் அரசராயினார்கள் என்றும் அப்புராணங்கள் கூறும். இவையும் இந்திர குலம் என்னும் பெயர் வழக்கிலிருந்து தோன்றியவை யென்பது கூறவேண்டியதில்லை. இவைகளிலிருந்து, நெருங்கிய சம்பந்தமுடையராய், இந்திர குலத்தினரென வழங்கப் பெற்று வந்திருக்கின்றனர். என்ற அளவு உண்மையெனக் கொள்ளலாகும்.



இனி, ஏறகுறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளின்முன்பே இந்திரகுலம் என்னும் வழக்குண்மை வெளியாகின்றது. சாவக நாட்டிலே நாகபுரத்தில் இருந்து அரசு புரிந்த பூமி சந்திரன், புண்ணியராசன் என்னும் நாக அரசர்களை இந்திர குலத்தார் என மணிமேகலை கூறுகின்றது. சூரிய சந்திர வமிசங்களைக் காட்டு தற்கும் மணிமேகலையினும் பழமையான சான்று தமிழில் இல்லை. இங்ஙனம் மிகப் பழைய நாளிலே இந்திர குலத்தின ரெனப்பட்ட நாகரது வழியிலே அல்லது நாகராய பல்லவர் வழியிலே வந்தமையால் கள்ளர்கள் இந்திர குலத்தினரென்று வழங்கப்பட்டாராதல் வேண்டும்.



அன்றி, சோழர்களே இந்திரன் வழியினரென்பது ஒரு சாரார் கொள்கை. இந்திரன் ஆரியர் வழபட்ட கடவுள் என வடமொழி நூல்களிற் பெறப்படுமேனும், தமிழரது தெய்வம் என்று சிலர் கருதுகின்றனர். சோழர் தம் குல முதல்வனாகிய வேந்தனைத் தெய்வமாகக்கொண்டு வழிபட்டு வந்தன ரென்றும் கூறுவர். பழைய நாளில் சோழர்கள் இந்திரனுக்குப் பெருஞ் சிறப்புடன் திருவிழாச் செய்து போந்தமை சிலப்பதிகாரம் முதலியவற்றால் வெளிப்படை, ‘சுராதி ராசன் முதலாகவரு சோழன்” எனக் கலிங்கத்துப் பரணி கூறுகின்றது. இவ்வற்றிலிருந்து சோழர் இந்திர குலத்தாரென்பது பெறப்படுமேல் அவர் வழியினராகிய கள்ளர் இந்திர குலத்தினர் எனப்படுவது அதனானே அமையும்.



 தேவர் என்னும் பெயர், இராசராச தேவர், இராசேந்திர தேவர், குலோத்துங்கசோழதேவர் எனச் சோழ மன்னர்க்கு வழங்கியிருப்பதும், கள்ளர், மறவர் அகம்படியர் என்னும் இவ்வகுப்பினரும் தேவர் என வழங்கப்படுவதும் இங்கு அறியற்பாலன.



இவ்வாற்றால் பண்டுதொட்டு வழங்கியுள்ள இந்திரகுலம் என்னும் வழக்கும் இவ்வகுப்பினர்க்குப் பொருத்தமான தென்றே ஏற்படுகிறது. கள்ளர், இந்திர குலத்தார், தேவர், அரையர், நாடாள்வார் என்னும் இவ்வைந்தும் இவ்வகுப்பினரைக் குறிக்கும் பொதுவான பெயர்களாகும், இவற்றுள்ளும் அரையர் என்பது பல பட்டங்களோடும் கலந்திருத்தலானும், சரித்திர ஆதரவுடைமையானும் முற்றிலும் பொருந்தியதோர் பொதுப் பெயராகக் கொள்ளற்பாலது.
மூன்றாம் அதிகாரம்




அரையர்களின் முற்கால நிலைமை :




கள்ளர் அல்லது அரையர் என்பார் பல்லவரும் சோழரும் கலந்த ஓர் வகுப்பினரென்பது பல தக்க மேற்கோள் கொண்டு மேலே வலியுறுத்தலாயிற்று. சோழரென்பார் படைப்புக் காலந் தொடங்கித் தமிழகத்திலிருந்து செங்கோலோச்சி வந்த பேரரசராகலானும், பல்லவரும் தமிழ் நாட்டுடன் ஆந்திர நாட்டையும் ஒரு காலத்தில் திறமையுடன் ஆட்சிபுரிந்த செங்கோல் மன்னராகலானும் இவர்களின் அப்பொழுதைய நிலைமையை இங்கு வேறாக எடுத்துக் கூறவேண்டுவதின்று.



இன்னவரின் ஆட்சி நிலை குலையத் தலைப்பட்டதன் பின்பு இருந்துவந்த நிலைமையே இங்கே ஆராய்தற் பாலது. இவ்வாராய்ச்சிக்கு இவர்களுக்குள் வழங்கும் கிளைப் பெயர்கள் பெரிதும் உதவி புரிவனவாகவுள்ளன. பழைய தமிழ்ச் சங்க நாளிலே இப்பொழுது வழங்குவன போன்ற பல பட்டப் பெயர்கள் மக்களுக்கு வழங்கவில்லையென முன்பே கூறியள்ளாம். இப்பெயர்களின் தோற்றங்களை ஆராயுமிடத்தே இவையெல்லாம் அவரவர் இருந்த நாடு பற்றியும். பிறநாடுகளை வென்று கைக் கொண்டமை பற்றியும், படைத்தவைராகவோ, படைவீரராகவோ இருந்தமை பற்றியும், நாடாட்சி முதலியன பற்றியும் இடைக் காலத்தே உண்டாயின என்பது விளக்கமாம்.. இங்ஙனம் ஒவ்வொரு காரணம் பற்றி ஒவ்வொருவர்க்கும் உண்டாகிய இப்பெயர்கள் பின்பு அவர்களின் வழியில் வந்தோர்க்கெல்லாம் வழங்கு வனவாயின.



விஜய நகர அரசர்கள் தம் படைத்தலைவர்களைப் பல இடங்கட்கு அனுப்பினர். படைத்தலைவர் என்ற பொருளில் நாயக் அல்லது நாயக்கர் என்ற பெயர் அப்பொழுது அவர்கட்கு உரியதாயிருந்தது. இப்பொடுது அப்பெயர் ஓர் பெருங்கூட்டத்தினையே குறித்து நிற்பது காண்கின்றோம். முதலி என்னுஞ் சொல்லும் படைத்தலைவன் என்னம் பொருளது எனச் சாசன அராய்ச்சியாளர் கூறுகின்றனர். படையாட்சி என்பது படையை ஆள்பவன் அதாவது படைத்தலைவன் என்னும் பொருளதாதல் வெளிப்படை. பெரிதும் பிற்காலத்திலுண்டாய சாஸதிரி, தீக்ஷிதர், குருக்கள், ஓதுவார் முதலிய பெயர்களும் இப்பொழுது குலப் பெயராக வழங்குதலையும், அவர்களில் பலர் இப்பெயர்களின் பொருட்குச் சிறிதும் பொருத்தமில்லாத திருத்தலையம் காண்கின்றோம், கள்ளர்களின் பல பட்டங்களைக் குறித்து யாம் எழுதுவதும் அவர்களது பழைய வரலாறு தெரிவிப்பதற்கே யன்றி இப்பொழுதை நிலைமை கருதியன்று.



கள்ளர் வகுப்பினர்க்கு வழங்கும் பட்டங்களை இப்புத்தகத்தின் இறுதியிற் காணலாம். யாம் அறியலாகாத பட்டங்கள் பல இன்னம் இருத்தல் கூடும். வேறு எவ்வகுப்பினுள்ளும் இத்துணை மிகுதியான பட்டப்பெயர்கள் இருப்பதாக யாம் விசாரித்தவளவில் வெளியாகவில்லை. அங்கராயர், அரசாண்டார், ஈழத்தரையர், உலகம்பாத்தார், உறந்தைராயர், கலிங்கராயர், காடவராயர், குச்சராயர், கொங்கரையர், கொல்லத்தரையர், சீனத்தரையர், சேதிராயர், சோழகர், தஞ்சைராயர், நாடாள்வார், நாட்ரையர், பல்லவராயர், பாண்டியர், மழவராயர், முனையதரையர், மூவரையர், விஞ்சைராயர், வில்லவராயர் முதலிய பெயர்களெல்லாம் நில ஆட்சியில் இவர்க்களுக்குள்ள சம்பந்தத்தைப் புலப்படுத்துகின்றன. ஈழங் கொண்டார், கடாரந்தாங்கியார் முதலிய பெயர்கள் இவர்கள் பிற நாடுவென்று கைப்பறினைமையைக் குறிப்பிடுகின்றன. களத்துவென்றார், களமுடையார், கொற்றப்பிரியர், கோதண்டப்புலியர், யுத்தப்பிரியர், வாள்வெட்டியார் முதலிய பெயர்கள் இன்னவர் படைவீரராயிருந்தமையைத் தெரிவிக்கின்றன.



இராஜராஜன், இராஜேந்திரன் முதலான சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளிலே இன்னோர் பெயர்களிற் சிற்சில காணப்படுகின்றன. அவை:- கச்சியராயன், காடவராயன், காடுவெட்டி, காலிங்கராயன், சீனத்தரையன், சேதிராயன், சோழகங்கன், சோழகோன், தொண்டைமான் , நந்தியராயன், நாடாள்வான், பல்லவராயன், மழவராயன், மேல்கொண்டான், வாண்டராயன், வில்லவராயன் முதலியன.



இவ்வாறே , வேறு சில பட்டங்களும் கல்வெட்டுகளில் உள்ளன. அவை:- அனகராயன், களப்பாளராயன், குருகுலராயன், சம்புவராயன், தமிழதரையன், பங்களராயன், மன்றாடி, மீனவராயன், மூவராயர்கண்டன், மூவேந்தரையன், வங்கத்தரையன், வாளுவராயன், விலாடத்தரையன், விளுப்பாதராயன் முதலியன.



இவையும் கள்ளர்க்குரியனவாயிருப்பினும் இருக்கலாம். இப்பட்டங்கள் உடையார் எங்கிருக்கின்றன ரென இப்பொழுது எமக்கு அரியவாராமையால் இவை இன்னார்க்குரியவெனத் துணிந்துரைக்கக் கூடவில்லை. மன்றாடி என்பது கொங்கு வேளாளர்க்குள் வழங்குகின்றது.



கோயில்களுக்கு நிலம் முதலியன தானஞ் செய்தவிடத்தும், அரசர்கள் சில தீர்ப்புச் செய்த விடத்தும் கீழே கையெழுத்திட்டோரின் பெயர்களாக இப்பட்டங்கள் கல்வெட்டுகளிலே காணப்படுகின்றன. இதிலிருந்தே இப்பெயர்களையுடையோர் சற்று உயர்ந்த நிலையில் இருந்திருக்க வேண்டுமெனக் கருதலாகும். இவர்கள் அமைச்சர் முதலானோராயிருந்தமையைக் கல்வெட்டுகள் வெளிப்படையாகவும் கூறுகின்றன.



‘திருமந்திரவோலை வானவன் பல்லவ தரையன் எழுத்து’ திருமந்திரவோலை நாயகம் இராஜராஜனான தொண்டைமான் எழுத்து. அரையன் இராஜராஜனான வீரராஜேந்திர ஐயமுரி நாடாள்வான் எழுத்து. வீரராஜேந்திர மழவராயன் எழுத்து’ (தென்னிந்திய சாசன புத்தகம் தொகுதி 3, பகுதி1, பாகம் 40) என்று இங்ஙனம் பல விடங்களில் வருகின்றன. திருமந்திரவோலை என்பது அமைச்சர்க்கும், திருமந்திரவோலலை நாயகம் என்பது முதலமைச்சர்ககும் உரிய பெயர்களாகும் இது சாசன ஆராய்ச்சியாளரின் துணிபு.



11,12 வது நூற்றாண்டுகளில் எழுந்த தமிழ் நூல்களிலிருந்தும் இன்னோரின் உயர்ந்த நிலைமை வெளிப்படுகிறது. கருணாகரத் தொண்டைமான் முதற் குலோத்துங்கனுடைய முதலமைச்சன் என்பது கலிங்கத்துப் பரணியால் வெளிப்படை .



விக்கிரம சோழனுலாவில்



‘முன்னம்



குலையப் பொருதொருநாட் கொண்ட பரணி
மலையத் தருந்தொண்டை மானும் - பலர்முடிமேல்
ஆர்க்குங் கழற்கா லனகன் றனதவையுட்
பார்க்குமதி மந்திர பாலகரிற்–போர்க்குத்
தொடுக்குங் கமழ்தும்பை தூசினொடுஞ் சூடிக்
கொடுத்த புகழ்முனையார்கோனூமுடுக்கரையும்
கங்கரையு மாராட் டரையுங் கலிங்கரையும்
கங்கரையு மேனைக் குடகரையும்- தங்கோன்
முனியும் பொழுது முரிபுருவத் தொடு
குனியுஞ் சிலைச்சோழ கோனும்……….
அடியெடுத்த வெவ்வே றரசிய வீரக்
கொடியெடுத்த காலிங்கர் கோனும்-கடியரணச்
செம்பொற் பதணச் செறியிஞ்சிச் செஞ்சியர்கோன்
கம்பக் களியானைக் காடவனும்’



என்று வருதலானும் இன்னோர் நிமை புலனாம்.



சோழ ஆட்சி நிலைதளரந்த பின்பு கள்ளர்கள் இந்நாட்டைக் கூற்றங்களாகவும், நாடுகளாகவும் பிரித்துத் தன்னரசுகளாக இருந்து ஆண்டிருக்கின்றனரென்பதும், அங்ஙனம் ஆண்டவர்கட்கு அரையர், நாடாள்வார் என்னும் பெயர்கள் வழங்கின வென்பதும் முன்பு காட்டப்பட்டன. சர்க்கரைப் புலவரின் வழித்தோன்றலாய திருவாளர், சர்க்கரை இராமசாமிப் புலவரவர்களின் வீட்டில் இருந்த தொரு மிகப்பழைய ஏட்டில் ஏழு கூற்றமும், பதினெட்டு நாடும், ஏழு கூற்றத்திற்கும் ஏழு ராயரும் கூறப்பட்டுள்ளன, கூற்றமும், நாடும் பின்காட்டப் பெறும். ராயர் எழுவராவார்: சேதிராயர், கலிங்கராயர், பாணாதிராயர், கொங்குராயர், விசையராயர், கனகராயர், கொடுமளூர்ராயர் என்போர்.



திருவானைக்காக் கல்வெட்டு ஒன்று பின்வருமாறு கூறகின்றது:



‘ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு 4107-வது பாண்டி குலாசனிவள நாட்டு மீகோழை நாட்டுத் தேவதான பிரமதேயம் திருவானைக்காவில் திருவெண்ணாவற்கீழ் அமர்ந்தருளிய திரிபுவன பதிக்கு மூலப்பிருத்தியனாகிய சண்டேசவரன் உள்ளிட்ட தேவகன்மிகள், ஜயசிங்ககுல கால வளநாட்டு மீசெங்கிளிநாட்டு வளம்பகுடி அரையன் மகன் முனையன் அருமொழி தேவனான வில்லவராயனுக்கு நாம் விற்றுக்கொடுத்த நிலமாவது…………..(தென்னிந்திய சாசன புத்தகம் தொகதி 3, பகுதி 2 , பக்கம் 168).



இதிற் குறித்துள்ள வளம்பகுடி என்பது பூதலூருக்குத் தெற்கில் ஐந்தாறு நாழிகையளவில் உள்ளதோர் ஊர். இவ்வூர் அந்நாட்டுக் கள்ளர்கள் நாட்டுக் கூட்டம் கூடுதற் குரிய பொது விடமாகும். வில்லவராயன் பட்டி என்பதோர் ஊரும் பூதலூருக்குத் தெற்கில் ஒரு நாழிகையளவில் உள்ளது. வளம்பகுடியில் இருந்த கள்ளர் குலத்தவனாகிய வில்லவராயனை ‘ அரையன் மகன்’ என்று கூறியிருப்பது காண்க. இக் கல்வெட்டில் ‘இவன்’ உடையார் திருவானைக் காவுடைய எம்பெருமான் கோயிலில் இடங்கை நாயகரென்று எழுந்தருளவித்த இடப வாகன தேவர்க்கும் நம் பிராட்டியாரக்கும்’ என்று வருதலால் இவனது பிரதிட்டைத் திருப்பணியும் புலனாம்.



ஸ்ரீரங்கத்திலுள்ள ஓர் கல்வெட்டிலிருந்து, அங்கிருந்த கைக் கோள முதலிகள் சிலர் அவ்வூர் தலைவராகிய அகளங்க நாட்டாள்வார் உயிர் துறக்க நேரும்பொழுது தாமும் உடன் உயிர் துறப்பதாகப் பிரதிஞ்ஞை செய்து கொண்டனர் என்னும் செய்தி வெளிப்படுகிறது. குருபரம்பரை, இராமநுஜ திவ்யசரிதை இவ்விரு பிரபந்தங்களிலும் அகளங்க நாட்டாள்வான் இராமாநுஜரது சீடனாகக் கூறப்படுகின்றான். திருச்சிராப்பள்ளியில் இன்றும் நாட்டாள்வார் என்று, கள்ளரில் ஒரு வகுப்பினர் இருக்கின்றனர். இப்பெயர் தற்காலம் நாடாவார் என மருவி நிற்கிறது. (செந்தமிழ், தொகுதி 3, பக்கம் 252) இங்ஙனம் எத்தனையோ பல சான்றுகள் இவர்களது பழைய ஆட்சி நிலையைக் குறிப்பனவாகவுள்ளன.



பல ஊர்ப்பெயர்கள் இன்னோர் பெரால் அமைந்திருத்தலும் அவ்தவிடங்களில் இவர்கள் முதன்மையுற்றிருந்தன ரென்பதற்குச் சிறந்த சான்றாகும். அவற்றுள் எமக்குத் தெரிந்தன கீழ்வருவன:-



1.காங்கெயன்பட்டி
2.சோழகன்பட்டி
3.ராயமுண்டான்பட்டி
4.வாலியன்பட்டி
5.தொண்டைமான்பட்டி
6.கண்டியன்பட்டி
7.சாதகன்பட்டி
8.துண்டுராயன்பாடி
9.ஆரமுண்டான்பட்டி
10.ஓசையன்பட்டி
11.வில்லவராயன்பட்டி
12.செம்பியன்களர்
13.உலகங்காத்தான்பட்டி
14.மலைராயன்பட்டி
15.திராணிபட்டி
16.கலியராயன்பட்டி
17.சாணூரன்பட்டி
18.கச்சியராயன்மங்கலம் (கச்சமங்கலம்)
19.ஏத்தொண்டான்பட்டி
20.பத்தாளன்கோட்டை
21.பாப்பரையன்பட்டி
22.மாதைராயன்பட்டி
23.சேதிராயன் குடிக்காடு
24.நல்ல வன்னியவன் குடிக்காடு
25.வல்லாண்டான்பட்டி
26.வாண்டையானிருப்பு
27.தென்கொண்டானிருப்பு
28.நரங்கியன்பட்டி
29.பாலாண்டான்பட்டி
30.கண்டர்கோட்டை
31.வன்னியன் பட்டி
32.பாண்டுராயன்பட்டி
33.சுரக்குடிப்பட்டி (சுரக்குடியார் பட்டி)
34.காடவராயன்பட்டி
35.சாளுவன்பேட்டை
36.நாய்க்கர்பாளைம் (சாவடி நாயக்கர் கிராமம்)
37.செம்பின் மணக்குடி



இனி, கள்ளர் சிற்றரசர்களாயிருந்த காலத்தில் பல விடங்களில் அரண் (கோட்டை)கள் கட்டியிருந்தனர் என்பது அறியற்பாலது.



1.துண்டுராயன்பாடி
2.பலபத்திரன்கோட்டை
3.காங்கெயன்பட்டி
4.ஆற்காடு
5.சுரக்குடிப்பட்டி
6.சோழகன்பட்டி
7.உறத்தூர்
8.விண்ணமங்கலம்
9.திருக்காட்டுப்பள்ளி
10.பூண்டிபானமங்கலம்
11.அன்பில்
12.மாங்குடி
13.கண்டர்கோட்டை
14.கிள்ளிக்கோட்டை
15.பாத்தாளன் கோட்டை
16.வாழவந்தான் கோட்டை
17.பனையக்கோட்டை
18.காசாங்கோட்டை
19.பட்டுக்கோட்டை
20.கல்லாக்கோட்டை
21.கோட்டைப்பத்து
22.பிங்களக்கோட்டை
23.திருமங்களக்கோட்டை
24.வத்தனாக்கோட்டை
25.மல்லாக்கோட்டை
26.எயிலுவான்கோட்டை
27.நடுவாக்கோட்டை
28.மயிலாடுகோட்டை
29.வாளமரங்கோட்டை
30.துரையண்டார்க்கோட்டை
31.தெற்குக்கோட்டை
32.சூரக்கோட்டை
33.சத்துருசங்காரக்கோட்டை
34.நாயக்கர்கோட்டை
35.ஆதனக்கோட்டை
36.மாதைராயன் புதுக்கோட்டை



என்னும் இடங்களிலெல்லாம் இவர்களுடைய கோட்டைகள் இருந்தன. இவற்றுட் சில ஊர்களில் கோட்டை அழிந்தவிடத்தில் திடர்களும், நிலங்களும் கோட்டைமேடு, பீரங்கிமேடு, என்னும் பெயர்களால் வழங்குகின்றன.



முற்காட்டிய ஊர்களில் துண்டுராயன்பாடி என்பது தஞ்சை சில்லாவில் ஐயனார்புரம் புகைவண்டித் தங்கலுக்கு அரைநாழிகை யளவில் விண்ணாற்றின் தென்கரையில் இருப்பது, அதில் செங்கல்லாலய கோட்டை மதிலின் அடிப்பகுதியம், நாற்புறத்தும் கொத்தளமும் இன்னமும் இருக்கின்றன. கோட்டைக்குள்ளேயே வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அங்கு நிலத்திற் புதைந்துகிடந்து அகப்பட்ட பல பீரங்கிக் குண்டுகளை நேரிற்பார்த்துள்ளேம். ஒரு மகம்மதிய மன்னரானவர் கண்தெரியாமலிருந்து, துண்டுராயன்பாடியிலுள்ள கள்ளர் குலப் பெரியாராகிய சோழங்கதேவர் ஒருவரால் கண் தெரியப்பெற்று, அவருக்குப் பரிசாக ஓர் தந்தப் பல்லக்கும், பாட்சா என்னும் பட்டமும் அளித்தனர் என்றும், அதிலிருந்து அவர் ‘செங்கற் கோட்டை கட்டித் தந்தப் பல்லக்கேறிக் கண்கொடுத்த சோழங்கதேவ பாட்சா’ எனப் பாராட்டப்பட்டு வந்தனரென்றும் கூறுகின்றனர். துண்டராயன்பாடிக் கோட்டையிலிருந்து சோழங்க தேவ அம்பலகாரர்க்கும் . அதனையடுத்து விண்ணாற்றின் வடகரையிலுள்ள ஆற்காட்டுக் கோட்டையிலிருந்த கூழாக்கி அம்பலகாரர்க்கும் பகைமை மிகுந்திருந்ததாகவும், சோழங்கதேவர் படையெடுத்துச் சென்று ஆற்காட்டுக் கோட்டையை அழித்துவிட்டதாகவும், கூழாக்கியார் அப்பொழுது தஞ்சையில் அராசாண்டு வந்த மராட்டிய மன்னர் தம்மிடம் நண்பு பூண்டிருந்தமையின் அவ்வரசரிடம் தெரிவித்துத் துண்டுராயன்பாடி மீது படைகளை அனுப்பச்செய்ததாகவும், அதனால் அக்கோட்டையும் அழிவெய்தியதாகவும் கூறுகின்றனர்.



பலபத்திரன் கோட்டை என்பது ஐயனார்புரத்தின் மேற்கே முக்கால் நாழிகை யளவில் உள்ள விண்ணனூர் பட்டியில்மஏறக்குறைய இருநூறு ஆண்டுகளின் முன்னிருந்த பலபத்திரச் சோழகரால் கட்டப்பட்டது. பிறகோட்டைகளின் வரலாறுகள் பின்பே ஆராய்ந்து தெரியவேண்டியிருத்தலின் அவற்றைக் குறித்து ஒன்றும் எழுதாதுத விடுக்கின்றோம். இப்பொழுது இக்குலத்தாரில் அரசரும், குறுநில மன்னருமாயுள்ளார் வரலாறுகள் அடுத்த அதிகாரத்திற் காட்டப்படும்.



நான்காம் அதிகாரம்




புதுக்கோட்டை மன்னர்கள் :


தோட்டி முதல் தொண்டைமான் வரையில்’ என்று வழங்குகிற பழமொழி மூவேந்தருக்கப் பின் தொண்டைமானே தமிழ் நாட்டு மக்களில் தலைவர் என்பதனைப் புலப்படுத்தா நிற்கும். தொண்டைமண்டலமாகிய பல்லவ நாட்டினினறும் குடியேறிய பல்லவராயர் அல்லது தொண்டைமான் என்னும் பட்டமுடைய அரசர் பலர் குளத்தூர், அறந்தாங்கி முதலிய இடங்களில் பல நூற்றாண்டுகளின் முன்பே விளங்கியிருந்தமை மேல் எடுத்தக் காட்டப்பட்டது. அம்புகோவிலில் தங்கி ஆண்டுகொண்டிருந்த தொண்டைமான் வழியினர் 17-ஆம் நூற்றாண்டிருந்த புதுக்கோட்டை அரசராயினர். இவர்கள் ஆட்சிபுரியலான நாடுகள் இவையென்பதனை.




‘ஆலங் குடிநா டமரா பதிநாடு கோலங் கடுவன் குடிநாடு - மேலான செங்காட்டு நாடு திருப்பேரை யூர்நாடு மங்காத வல்ல வளநாடு - கொங்காரும் மெய்யமலை நாடு மேவுசந்த்ர ரேகை நா டையன் கொடுங்குன்ன றணீநாடு - செய்ய சீருக் கோளக் குடிகாடு கோனா டெனப் புரந்தே ஆளப் பிறந்த வரசர்கோன்’




என்பது விளக்கும். புதுக்கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்த மன்னர்களின் வரலாறு சுருக்கமாக இங்கே கூறப்படும். ஸ்ரீரங்கராயலு என்னும் விஜய நகர அரசனது மதம் கொண்ட யானயை அடக்கிப் பல விருதுகள் பெற்ற ஆவடை ரகுநாத தொண்டைமானைப் பற்றி பின்னர் கூறுகிறேன். — தொண்டைமானுடைய புதல்வர் இருவரில் மூத்தவர் இரகுநாதராய தொண்டைமான். இளையவர் நமன தொண்டைமான்.
தொடரும் . . . ..



இரகுநாத தொண்டைமான் 2 - 1686 - 1730



புதுக்கோட்டை மன்னர்களில் முதல்வர் இவரே. இவர் சிங்கமங்கலம், கலசமங்கலம் என்னும் நகரங்கள் அழிந்த பின்னர் அவைகள் இருந்த விடத்தில் ஓர் புதிய நகரையுண்டாக்கி, அதற்குப் புதுக்கோட்டை யென்று பெயர் கொடுத்தார். இரு நாழிகை வழி நீளமுள்ள மதிலும், கோட்டையும் கட்டினர். மதுரையை ஆண்ட நாயக்கருக்காகத் திருவாங்கூர், மைசூர், தஞ்சாவூர் என்னும் இடங்களில் இருந்த அரசர்கள் மேல் படையெடுத்தச் சென்று அவர்களை வென்றனர். சொக்கநாத நாயக்கர் வலிமை மிகவது கண்டு அச்சமுற்றனராக, அக்கால் அவருக்கு முதல் மந்திரியாய் இருந்த கோவிந்தப்ப ஐயர் சூழ்ச்சியார் இவரது வலி குன்ற நேர்ந்தது, பின்பு, இவர் இராமநாதபுரம், தஞ்சை முதலிய இராச்சியங்களிலிருந்து திருமெய்யம், பட்டுக்கோட்டை முதலிய நகரங்களைக் கைப்பற்றினார். 1717 - 1721 ஆகிய ஆண்டுகளில் நாயக்கராலும் அவரது முதல் அமைச்சர் நாரணப்ப ஐயராலும் மிக்க இடுக்கண்களுக் குள்ளான கிறித்தவர்களும், கிறித்தவப் பாதிரிமார்களும் பதுக்கோட்டையில் அடைக்கலம் பகுந்து அன்புடன் ஆதரிக்கப்பட்ட தலமுற வாழ்ந்து வந்தனர். இம்னமரது நடுவு நிமை கிறித்தவர்களை நடத்தினமுறைமையிலிருந்துஅறியக்கிடக்கின்றது. இவர் வீரத்தாலும், புய வலியாலும் மனவுறுதியாலும். நடுவு நிலையாலும் மிகவும் புகழ்வாய்ந்தவராவர். இவருக்கு ஆறு மனைவியர் இருந்தனர். இவர் காலத்திலேயே இவருடைய பிள்ளைகளெல்லாம் மரித்துவிட்டமையால் இவர் தம்பேர்களில் மூத்தவராகிய விஜயரகநாதராய தொண்டைமானுக்கு முடி சூட்டிவிட்டு 1730-ல் இவ்வுலக வாழ்வு நீங்கினார்.



தொடரும் . . . . .. . .



விஜயரகுநாதராய தொண்டைமான் 1730-1769



இவருக்குச் சிவஞானபுர துரைத் தொண்டைமான் என்றும் பெயருண்டு. இவர் பட்டத்துக்கு வந்தவுடன் தமது சகோதரர்களாகிய இராஜகோபால தொண்டைமான், திருமலைத்தொண்டைமான் என்னும் இருவர்க்கும் இரண்டுபாளையப்பட்டுகளை அளித்து, தமக்கு உதவியாக வைத்தக் கொண்டனர், அக்காலத்தில் மொகலாயர் (சந்தாசாகிப்) படையெடுப்பினால் நாயக்கர் அரசாட்சி ஒழிந்தது. புதுக்கோட்டையிலுள்ள அரண்மனையும் பகைவருடைய பீரங்கிக் குண்டுகளால் அழிந்து விட்டது ஆதலின் இவர் புதுக்கோட்டைக்குத் தென்கிழக்கே சிவஞானபுரம் என்னும் ஓர் புதிய அரண்மனையைக் கட்டிக்கொண்டு அங்கிருந்து மத விசாரணை செய்து வந்தனர். சதாசிவப்பிரமம் என்று கூறப்படும் பெரியார் ஆசிரியராக வந்து அருள் புரியும் பேற்றினையும் இவர் எய்தினார்.



1733-ல் தஞ்சை அரசரின் சேனைத் தலைவனாகிய ஆனந்தராவ் ஒரு பெரிய சேனையுடன் புதுக்கோட்டை மேல் படையெடுத்துப் போர்புரியமாலே சூழ்ச்சியால் பெரும் பகுதியைப் பற்றிக்கொண்டார் ஆயினும், நெடு நாள் வரை திருமெய்யம் கோட்டையைப் பிடிக்க முடியமையால் முடிவில் புதுக்கோட்டையைக் கைவிட்டு ஓடி விட்டான். ‘கனத்த புகழ்படைத்த காளிக் குடிக்கோட்டையில், ஆனந்தராயனை அதிரவெட்டுந் தொண்டைமான்’ என்று பாடுவதும் உண்டு.



ஐதராபாத்து நைசாம் ( ஹைதராபாத் நிஜாம்) எண்பதினாயிரம் குதிரைப் படையும், இரண்டு லட்சம் காலாட் படையும் கொண்டு தென்னிந்தியாவின் மேல் படையெடுத்து வந்து, திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டபொழுது புதுக்கோட்டை மீதும் படையெடுக்க உத்தேசித்திருந்தான். அதனையறிந்த கூனப்பட்டி , துழாய்குடி மற்றும் சில ஊர்களின் தலைவர்கள் அவனுடைய குதிரை முதலியவற்றைக் கொள்ளையடித்தனர் அவர்களைத் தண்டிக்கமாறு நைசாமால் அனுப்பப்பட்ட படைத்தலைவன் அவர்களிடத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் சமாதானமாய் திரும்பினான்.



மகமதலிக்கும் சந்தாசாகிப்புக்கும் கர்நாடக இராட்சியவிடமாய் நடந்த பெயர் பெற்ற போரிலே இம்மன்னர் ஆங்கிலேயருடன் மகமதலிக்கு துணையாய் நின்று சந்தா சாகிப்பையும் பிரெஞ்சுக் காரரையும் எதிர்த்தனர். இந்த போரின் பயனாக இவருக்கு அனேக நாடுகள் சேர்ந்தன. நாவப்புக்கு திரைக் கொடுப்பதில்லை எனவும் உடன்படிக்கை செய்து கொண்டனர் . இதனாலேயே தஞ்சாவூர் முதலியன அரசிழந்த காலத்திலும் புதுக்கோட்டை தமிழ் நாட்டின் ஒரே அரசாங்கமாக நிலைத்தது. பிரெஞ்சுக் காரருக்கும் ஆங்கிலேயருக்கும் தென்னாட்டில் இடைவிடாது நடந்த போராட்டங்களிலெல்லாம் இம்மன்னர் ஆங்கிலேயரை பிரியாமல் அவர்கட்கே உதவி செய்து வந்தனர். இவர் தமது நுன்னிய அறிவினாலே ஆங்கிலேயரே வெற்றிபெறுவார் என்பதனை தெளிவாக உணர்ந்திருந்தார். புதுக்கோட்டை மேன்மையடைந்தது. ஆங்கில சேனாதிபதியாக (கர்னல்) லாரன்சு ஐரோப்பாவிற்கு புறப்பட்டு போகும் போது இம்மன்னருக்கு ஓர் கடிதம் விடுத்துச் சென்றார். அது



எங்கள் வெற்றிக்கு காரணமான தங்கள் உதவியை நான் ஆங்கில அரசர் திருமுன்பு தெரிவிப்பேன். என்னிடம் தாங்கள் காட்டிய உண்மையான நட்புக் குணத்தை யான் என்றும் மறவேன். நான் தூரதேயத்திற்கு சென்ற விட்டாலும் எனக்கு தாங்கள் புறிந்த நண்மைகளும், உதவிகளும் என் மனதில் நின்றுகொண்டே இருக்கும் என்பது.



இவர் மதவிடங்களில் மிகப்பற்றுடையராயிருப்பது கொண்டே தமது இராச்சியத்தின்உள்விவகாரங்களை மறந்துவிடாது கவனித்து வந்திருக்கின்றார். புதுக்கோட்டை இராச்சியத்தை நிறுவினவர். ராயரகுநாத தொண்டைமான் எனின், அதை வலிமையுறச் செய்தவர் இம்மன்னரேயாவார். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் வரையில் இடைவிடாது போரிலே காலங்கழித்து வந்த இவ்வரசர் 1769-ல் இவ்வுலக வாழ்வை நீத்தனர். இவருடைய மனைவியர் அறுவரில் மூன்றாவது மனைவியாகிய ரெங்கம்மாஆய் என்பவருக்குப் பிறந்தவர் அடுத்த மன்னராகிய இராயரகுநாத தொண்டைமான் என்பவர்.



இராயரகுநாத தொண்டைமான் 4 பகுதி (1769 – 1789)



இவர் , 1738-ல் பிறந்தார். தமது முப்பத்தோரவது ஆண்டில் பட்டத்திற்கு வந்தார். தம் முன்னோரைப் போன்றே ஆங்கிலேயரிட த்தில் நட்பு பூண்டிருந்தார்.1780-ல் ஐதரலி கருநாடக சமவெளி மீது ஓர் பேரிடிவிழுந்தாற்போலப் பாய்ந்து வந்த காலையில் ஆங்கிலேயர் இவ்விடுக்கணைத் தடுப்பதற்கு ஓர் உபாயமும் செய்யாதிருந்தனர். தென்னாட்டுத் தலைவர்கள் யாவரும் ஐதலியுடன் சேர்ந்து கொண்டனர். இம்மன்னர் ஒருவரே ஆங்கிலேயர்க்கும், நவாப்புக்கும் உதவியாய் நின்றனர். ஐதரின் சேனையானது ஆதனக் கோட்டைக்கு அருகில் புதுக்கோட்டடை நாட்டில் புகுந்தபோது இவருடைய சேனை சோத்துப்பாளை என்றவிடத்தில் அதனை சந்தித்து முறியடித்து ஓட்டிவிட்டது இவ்வெற்றியைக் கேள்வியுற்ற ஆங்கிலப் படைத்தலைவர் சர் அயர் கூட் என்பார் இம்மன்னருக்குக் கீழ்க்கண்ட கடிதம் எழுதினர்:



“நாடு எங்கணும் போர்புரிந்து வந்த என் கட்சியார் எல்லாரிடமும் இருந்து கிடைத்த செய்திகளில் ஒன்று தான் எனக்கு வெற்றியைத் தெரிவித்தது. அதாவது, தாங்கள் மிக்க ஆண்மையுடன் உங்கள் நாட்டை அழிக்க வந்த பகைவரைத் தண்டித்து நூற்றுக்கணக்கான குதிரைப் படை வீரரைச் சிறைகொண்டதேயாம்.. தாங்கள் இன்னம் சிறந்த வீரச்செயல்களைச் செய்வீர்களென்று எனக்கு மிகுந்த உறுதியுண்டு.”



இந்த வெற்றியினால் புதுக்கோட்டை மன்னர் தென்னிந்திய நாட்டிற்குச் செய்த பேருதவி யாரும் எளிதில் மறக்கற்பாலதன்று. ஐதர் தான் படையெடுத்துச்சென்ற நாடுகளில் ஊர்களைத் தீயிட்டும், மரங்களை வெட்டியும், பயிர்களையழித்தும் ஏரிகுளய்களின் அணைகளை வெட்டியும் கொடுமைகள் இயற்றிவந்தான். அன்றியும் பெண்டிக்களும் குழந்தைகளும் சொல்லொணாத் துன்பத்திற்கு உள்ளானார்கள். இக்கொடியோனை முற்ற முறியடித்தற்கு இம்மன்னரே காரணமாய் இருந்தார். ஐதரலியின் மகனாகிய திப்புவுக்கு எதிராகவம் இவர் ஆங்கிலேயருக்கு உதவிபுரிந்தார். நவாப்புக்கு இவர் செய்த உதவியின் பயனாகப் பட்டுக்கோட்டடைத் தாலுகாவின் ஒரு பகுதி இவருடைய ஆட்சிக்குள்ளாயிற்று. இவர் ஒன்பது மணம் செய்து கொண்டனர். இவருக்கு ஆண் பிள்ளை இல்லை, ஒரே மகள் தான் உண்டு. 1789 டிசம்பர் 30-ல் இவ்வரசர் விண்ணுலகடைந்தார்.



ராஜா விஜயரகுநாத தொண்டைமான் பகதூர் 5 1789 – 1807



இவர், இராய ரகுநாத தொண்டைமானின் சிறிய தந்தையாகிய திருமலைத்தொண்டைமானுடைய மூத்த புதல்வராவர். இவர் தமது முப்பதாவது வயதில் பட்டத்திற்கு வந்தார். 1790 ல் திப்புசுல்தான் திருச்சிராப்பள்ளிமேல் படையெடு்த்து வந்தகாலை இம்மன்னர் ஆங்கிலேயருக்குத் துணையாக நன்று அவனை மடக்கியடித்தார்.



1795-ல் ஆற்காட்டு நவப்பாகிய மகமதலி இவருக்கு ராஜாபகதூர் என்னும் பட்டத்தை அளித்தனன். அதனால் 1500 குதிரைப் படையும், கொடியும், முரசும், முடியும், பட்டத்து யானையும் வைத்துக் கொள்ள உரிமையுடையரானார்.



இவர் மூன்று கல்யாணம் செய்துக்கொண்டார். இவரது மூன்றாவது மனைவிக்குப் பிறந்த பிள்ளைகளில் உயிருடன் இருந்த விஜயரகநாதராய தொண்டைமானும், ரகுநாததொண்டைமானும் முறையே 1807-லும், 1825-லும் மன்னராயினர்.



இவ்வேந்தர் சிறப்புடன் அரசாண்டு வந்து 1807-ல் வானுலகெய்தினர். இவருடைய பத்தினியாராகிய ஆயிஅம்மாள் ஆய் என்பார் உடனட்கட்டையேறிவிட்டார்.



இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் பகதூர் 6 (1807 – 1825)



இவர் பட்டத்துக்கு வந்தபொழுது பத்து வயதுள்ள சிறுவராய் இருந்த படியால் இவருடைய பங்காளி விசய ரகுநாத தொண்டைமான் அரச காரியங்களை நடாத்தி வந்தார், அப்பொழுது புதுக்கோட்டையில் நவாப்புக்குள்ள உரிமை மாறி ஆங்கிலேயரைச் சார்ந்ததனால் இவருடைய அரசவுரிமையை ஒப்புக்கொள்ளும்படி வியரகுநாத தொண்டைமான் ஆங்கில அரசாங்கத்தினரைக் கேட்டுக்கொண்டார். ஒப்புக்கெர்ணபின், இவருக்க முடிசூட்டுவிழா பதுக்கோட்டை நகரில் மிக்க சிறப்புடன்நடைபெற்றது. இவர் காலத்து மேஜர் ப்ளாக்பர்ன் என்னும் ஆங்கிலேயர் புதுக்கோட்டைக்கு ரெசிடெண்டாக இருந்து அரசாங்கத்தைச் சீர்திருத்தி மிகவும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்தார், கழந்தைகளாகவிருந்த விஜய ரகநாதராய தொண்டைமான், இரகுநாத தொண்டைமான் இருவரும் வடமொழி, மகாராட்டிரம், ஆங்கிலம் முதலான மொழிகளும், குதிரையேற்றமும், வில்வாட் பயிற்சியும் ்பயிற்றுவிக்கப்பெற்றனர்.



இம்மனர் காலத்துத்தான் புதுக்கோட்டை ஐந்து தாலுகாக்ளாகப் பகுக்கப்பட்டது; நீதிமனறங்கள் நிறுவப்பட்டன; வரி வாங்குதற்கு அதிகாரிகள் நியமிக்கப்ட்டனர். அரசாங்கத்திற்கு வேண்டிய மற்றைக் காரியங்களும் செய்யப்பெற்றன.



1812-ல் புதுக்கோட்டை நகர் தீக்கு இரையாயிற்று, இவ் பொழுதுள்ள அழகிய நகரம் பின்பு கட்டப்பெற்றது. 1812-ல் இம்மன்னருக்கும், இவர் தம்பியார்க்கும் மணம் நடைபெற்றது. 1817 முதல் இவர் பூரண சுதந்திரமுடையராய் ஆட்சி புரியலானார். இவருக்கு இருமனைவியர் உண்டு.



இவர் 1825-ல் உலக வாழ்க்கையை நீங்கவே இவரது தம்பியாகிய இரஜநாத தொண்டைமான் முடி சூட்டிக் கொண்டார்.



ஹிஸ் எக்சலென்சி இராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் 7 (1825 – 1839)



இவர் மிகச் சிறந்த நீதிமன்னர். பற்பல அறங்களை நடத்தினவர். 1830-ல் ஆங்கில அரசாங்கத்தாரால் ‘ஹிஸ் எக்சலென்சி’ என்னும் பட்டம் அளிக்கப் பெற்றனர்.



இவர் 1839 ஜுலை 13-ல் இம் மண்ணுலக வாழ்வை வெறுத்தேகினர்.



ஹிஸ் ஹைனெஸ் ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் 8 (1839 – 1886)



இவர் பட்டத்துக்கு வந்த காலத்தில் ஒன்பது வயதுள்ள சிறுவராயிருந்தார். 1844-ல் இருந்து தாமே அரசாண்டு வந்தார். 1866-ல் நீதிமன்றங்கள் திருத்தி அமைக்கப்பெற்றன.



1. அப்பீல் கோர்ட்டு
2. மூன்று ஜட்ஜிகள்உள்ள செஷன்ஸ் கோர்ட்டு
3. ஸ்மால் காஸ் கோர்ட்டு
4. ஐந்து முன்சீபுக் கோர்ட்டுகள்



இலாகாக்கள்:-



1.வரிவசூல் (ரெவின்யூ).



1. கிராமம்
2. தாலூகா
3. காவல்
4. சிறைச்சாலை
5.தபால்
6.பங்களா
7.மராமத்து
8.உப்பளம்
9.காடு
10.நீதிமன்றம்
11.ஸர்க்கில் ஆபீஸ்



இவர் 1876-ல் தம் மூத்த புதல்வியின் மூன்றுவது குமாரரைத் தத்து எடுத்துக்கோண்டார். 1884-ல் இந்திய சக்கரவர்த்தினியாகிய விக்டோரியா மகாராணியார் இம்மன்னர்க்கும், இவருடைய சந்ததியார்க்கும் பதினொரு மரியாதை வேடுகள் போடும் நிரந்தர உரிமையை அளித்தார். இவ்வரசர் காலத்திலேயே தந்தி, தபல் ஆபீசுகள் ஏற்பட்டன. 2-வது வகுப்புக் காலேஜும் ஏற்படுத்தப்பெற்றது.



இவர் 1886-ல் தமது ஐம்பத்தேழாவது வயதில் விண்ணுலகடைந்தார்.



ஹிஸ் ஹெனெஸ் ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் ஜி.சி.ஐ.இ. (1886முதல்) 9



இவர் பதினொரு வயதுடையவராயிருக்கும் பொழுது. 1886-ல் திருக்கோகரணத்தில் இவருக்கு முடி சூட்டு விழா நடந்தது. சிறு வயதிலேயே இம்மன்னர் தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகளில் மிக்க தேர்ச்சி பெற்றார். 19-வது வயதிலிருந்து இராச்சியத்தைத் தாமே பார்த்து வருவாராயினர். குதிரை யேற்றம் முதலியவற்றில் அளவு கடந்த திறமையுடையவர். மண் உப்புக் காய்ச்சுவதால் புதுக்கோட்டை அரசாங்கத்தார்க்கும், ஆங்கில அரசாங்கத்தார்க்கும் ஏற்பட்ட வழக்கு இம் மன்னர் காலத்தில் முடிவுற்றது. இம் முடிவுப்படியே ஆங்கில அரசாங்கத்தார் ஆண்டு தோறும் முப்பத்தெட்டாயிரம் ரூபாய் இம்மன்னருக்கு கொடுக்கம்படி நேரிட்டது. புதுக்கோட்டை அரசாங்கத்தில் மூன்று லட்சம் ஏக்கர் நிலம் வரையிலும் இனாமாக விட்பபட்டிருந்தது. இந்த இனாம் நிலங்கள் பகுதி நிலங்களைவிட மிகுதியாயிருந்தன. ஆதலால் ஆங்கில அரசாங்கத்தாரின் யோசனைமேல் இனாம் நிலங்களையெல்லாம் அளந்து சிறிது வரிவித்தனர். அதனால் ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு தோறும் அரசாங்கத்திற்கு மிகுவதாயிற்று. பயிர் செய்யாத தரிசு நிலங்களெல்லாம் பயிர் செய்யப்பட்டு நிலக்காரரெல்லாம் பணக்காரராயினர். இவர் காலத்தில் பட்டணம் சீர்திருத்தப்பட்டது. கல்லூரி மருத்துவ நிலையம், அலுவலம் இவற்றின் கட்டிடங்கள் திருத்தி அமைக்கப்பெற்றன. நீதி இலாக்காவும் மீண்டும் திருத்தி அமைக்கப்பெற்றன. இதன் படி மூன்று நீதிபதிகள் அடங்கிய உயர்நீதி மன்றம் ஆக 1887-ல் அமைக்கப்பட்டது.



உப்பு காய்ச்சலுக்கு ராயலிட்டி கேட்கப்போக இனாம் நிலத்துக்கும் நிலவரி விதித்து விட்டான் வெள்ளையன் பாருங்கள்
தொடரும் . . . . . . . .



1898-ல் இவர் ஐரோப்பா கண்டத்திற்குப் போக வேண்டியிருந்தமையால் , திவான், தமையனாகிய விஜய ரகுநாத துரை ராஜா இவர்களிடத்தில் அரசாட்சியை விட்டுச் சென்றனர், ஐரோப்பாவில் பல இடங்களுக்ச் சென்று பிறகு இங்கிலாந்துக்ச் சென்ற பொழுது இளவரசர் ஏழாவது எட்வர்ட் மன்னரால் தமது அரண்மனையில் மே மாதம் 23ந் தேதி வரவேற்று சிறப்பிக்கப்பட்டார், ஜுலை 14ல் மகாராணியார் தமது அரணமனையில் வரவேற்று கெளரவப் படுத்தினார்கள். 1898 நவம்பரில் இவ் வேந்தர் புதுக்கோட்டைக்கு திரும்பி பொழுது மக்கள் இவரைப் பேரார்வத்துடன் வரவேற்றனர். மகாராணியார் இம் மன்னரைவரவேற்று கெளரவப் படுத்தியதற்கு அறிகுறியாகப் புதுக்கோட்டையில் நகர மன்றம் (டவுன் ஹால்) கட்டப்பெற்றது.



1902-ல் 30 உறுப்பினர் அடங்கிய பெருமக்கட் கழகம் (மக்கள் பிரதிநிதிச் சபை) ஒன்று அமைக்கப் பெற்றது. மக்களுடைய குறைகளை யெல்லாம் தீர்த்து வைப்பதற்கு இக்கழகம் பெரிதும் உதவியாய் இருந்து வருகிறது. 1907ல் இருந்து இதில் 18 உறுப்டபினர் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். வினைப்பொறுப்புக் கழகம் (காரிய நிர்வாக சபை) ஆனது திவான் , நாட்டுக்காவற் தலைவர் (ஸ்டேட் சூப்பரிண்டெண்ட்) ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி இவர்கள் அடங்கியதாகும. இம்மனர்காலத்தில் நாடு பல வழியிலும் சீர்திருத்தி மேனிலைக்குக் கொண்டுவரப்பட்டது. 1911 டிசம்பர் 12-ல் டில்லி மாநகரில் நடந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பெருமான் முடிசூட்டு விழாவுக்க இவ்வரசரும் அழைக்கப்பட்டிருந்தார்.



1913-ல் இவர் பட்டத்திற்கு வந்த இருபத்தைந்தாதவது ஆண்டு விழா புதுக்கோட்டையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது இவருக்கு ஜி.சி.ஐ.இ. (கிராண்ட் கமாண்டர் ஆப் தி இண்டியன் எம்பையர்) என்னும் பட்டம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் அளிக்கப்பட்டது.



இவ்வரசர் தமது சமஸ்தானத்திற்குச் செய்த சிறப்புடைய நன்மைகளாவன:-



1.புதுக்கோட்டைச் சீமையில் வேளாண்மையை வளம் சேர்க்கும் பொருட்டுக் கால்நடை மருத்துவ சாலையும், கால் நடைக் கண் காட்சியும் ஏற்படுத்தியதுடன், விதையும் உழவு மாடும் வாங்குதற்குக் குடியானவர்களுக்கு வட்டியின்றிப் பணம் கொடுத்துதவ ஏற்பாடு செய்தார்.



2.பல சாலைகளையும் வெள்ளாற்றுப் பாலத்தையும் உண்டாக்கி வாணிகம் பெருகும்படி செய்தார்.



3.பத்திரங்களைப் பதிவு செய்வதற்குத் தொலை விலுள்ளோர் புதுக்கோட்டைக்கு வரும் வருத்தம் நீங்குப்படி காப்புக்களரிகள்(பத்திர பதிவு அலுவலகங்கள்) பல இடங்களிலும் ஏற்படுத்தினார்.



4.புதுக்கோட்டை நகரத்தில் ஓர் பெரிய ஆங்கில மருத்துவ சாலையும் மற்றும் பல வைத்திய சாலைகளும் ஏற்படுத்தினார்.



5.நகரத்தில் வீதிதோறும் குழாய்கள் வைத்துப் புதுக்குளத்திலிருந்து நல்ல தண்ணீர் வரும்படி செய்தார்.



6.குழந்தைகள் சம்பளமின்றிப் படிக்கும்படி ஊர்தோறும் ஆரம்பப் பள்ளிக்கூங்கள் வைத்தார்.



7.தொழிற்சாலை, விவசாயசாலை முதலியன ஏற்படுத்தினார்.



8.எளியவர்கள் அதிக வட்டிக்குப் பணம் வாங்காது தொழில் செய்து வாழ்வதற்கு உதவியாகக் கூட்டுறவுத் தொழிற் சங்கங்கள் ஏற்படுத்தினார்.



9.நீதிமன்றத்தில் பெரிய குற்றங்களை விசாரிக்கும் போது நீதிபதிகளுக்கு உதவியாக இரண்டு அல்லது மூன்று அஸெஸர்கள் இருந்து நியாயம் வழங்க ஏற்பாடு செய்தார்.



10.மக்கள் பிரதி நிதிச் சபை ஏற்படுத்தினார்.



தொடரும் . . . . . . . . . .



இவ்வரசர் மீது ‘ இயன்மொழி வாழ்த்து ‘ என்னும் ஓர் அழகிய தமிழ்ப் பிரபந்தம் ப்னனத்தூர் நாராயணசாமி ஐயர் என்னம் பலவரால் இயற்றப்பெற்று , மகா மகோபத்தியாய உ.வே. சாமிநாத ஐயர் அவரக்ளின் சாத்துக் கவியுடன் வெளிவந்துள்ளது.



அதிலே இவ்வேந்தர் பெருதைமகள்,



‘ தானந் தனியருள் ஞான முதலன
வுரிய நாயக னுத்தம குணநிதி
பெரியநா யகிபதம் பிரியா வுளத்தன்மு
னவிலும் விசயரகு நாதன் மகன் மக
னிவநெனக் கன்ன னிவனென நுவலும்
கராமடிந் திடச்சக் கரப்படை விடுத்த
இராம சந்திர வேநதல்சேயென
ஓராயிரந் தண்கதி ரொன்றா யுதித்தென
அராவணை யமல னருளொருங் குதித்தெனக்
குராவணி குமரவேள் குவலயத் துதித்தெனப்
பாராவருந் தருமம் பாரில் முளைத்தெனச்
சராசன மதனன் றனிவடி வெடுத்தென
இராசமுண் டலத்தி விவற்கிணை யிலையெனச்
சராதி டராசன் றொல்குலம் விளங்கத்
தராதவலம் விளங்கத் தவநெறி விளங்கப்
புராதன நான்மறை மபுவியிசை விளங்க
ஆவிர்ப் பவித்த வாசர் சிகாமணி’
என்று இங்ஙனம் பலவாறு சுறப்பட்டுள்ளன.



மாட்சி பொருநட்திய விஜயரகுநாத துரராஜ தொண்டைமான் பகதூர் 1922 முதல் :



இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் அவரகள் தமது அரசாங்க நிர்வாகத்தைத் தமையனாராகிய இவரிடம் ஓப்புவித்துவிட்டு ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்று விட்டமையால், இவர் 1922 அக்டோபரிலிருந்து தாமே அரசாட்சியை நடத்தி வருகின்றார். இவர் 1872 ஏப்பிரல் 17-ல் பிறந்தவர். காலஞ்சென்ற மகாராஜா இராமச்சந்திர தொண்டைமான் சாகிப் அவர்களின் மூத்த பேரர். இவர் 1898-ல் காரிய நிரவாக சபையில் ஒருவராக அமைந்தனர். 1908-ல் இங்கிலாந்து சென்று திரும்பினர். 1990-ல் திவான் பதவியை ஏற்றுக்கொண்டனர். 1922-ல் அரசாட்சியை ஒப்புக்கொண்ட பின் நாட்டிற்கு அநேக நன்மைகள் புரிவதாக வாக்களித்து அங்ஙனமே செய்து வருகின்றார். இவர் இது காறும் செய்திருக்கிற நன்மைகளில், நகர பரிபாலன சபையில் 8-ஆக இருந்த அங்கத்தினர் தொகையை 12-ஆக உயர்த்தியிருப்பதும், 60 அங்கத்தினர்கள் கொண்ட புதிய சட்ட நிருமாண சபையொன்று ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத் தக்கவைகளாம். நகர சபையில் 8 அங்கத்தினரும், சட்டசபையில் 35 அங்கத்தினரும் மக்களால் தெரிந்தெடுக்கப்பட வேண்டியவராவர். இன்னும் நமது நாடு முழுதும் கட்டாய இலவசக்கல்வி ஏற்படுத்திப் பெரும் புகழுடன் இவ்வரசர் பெருந்தகை நீடுழி வாழ்வாராக.



ராஜா ராஜகோபாலத் தொண்டைமான் :



புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் கடைசி மன்னராகவும் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராகவும் விளங்கியவர் ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான். இம்மன்னரின் காலத்தில் தான் திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் புதிய புகை வண்டித்தடம் 1929 இல் தொடங்கப்பட்டது. 1928 இல் நகரில் முழுமையாக மின்சார வசதியும் செய்யப்பட்டது. மன்னரின் உபயோகத்திற்காக புதிய அரண்மனை கட்டப்பட்டு. 1929 இல் முடிவுற்றது. மன்னர் 1930 ஆம் ஆண்டு இங்கு குடியேறினார்.



இந்திய வைஸ்ராய் மார்க்கியூஸ் வெல்லிங்கடனும், அவரது துணைவியாரும் இவரது ஆட்சியின் போது 1933ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தனர். 17.01.1944 இல் ராஜகோபாலத் தொண்டைமான் தனது 22-வயதில் சமஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1947 இல் டெல்லி சென்ற மன்னர் மகாத்மா காந்தியை சந்தித்து உரையாடினார். 1948 இல் மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஈமக்கிரியை நாளில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் சரிசமமாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார்.



1948 மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று 1948 மார்சு 3ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார். அப்போது புதுக்கோட்டை கஜானாவில் இருந்த பல லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கங்களையும், தங்கம் போன்ற ஆபரணங்களையும் அப்படியே மத்திய அரசிடம் ஒப்படைத்தார். மேலும் அவருக்குச் சொந்தமான விலைவமதிப்பற்ற பல கட்டிடங்களையும் . மன்னர் நிர்வாகத்தில் இருந்த அரசர் கல்லூரியையும் அரசிடம் ஒப்படைத்தார். 1972இல் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உறுவானபோது தமிழ் நாடு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க புதுக்கோட்டை அரண்மனையையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கினார்.



ராஜகோபாலத் தொண்டைமான் திருச்சிராப்பள்ளியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்திலேயே மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார் . சிறந்த மோட்டார் வாகன தொழில் நுட்ப வல்லுனராக திகழ்ந்து மிக சாமான்ய மனிதானக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற இவர்1997இல் மறைந்தார்.



ராஜகோபாலத் தொண்டைமானின் மருமகளாகிய திருமதி சாருபாலா தொண்டைமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகர மேயராக வெற்றி பெற்று உள்ளார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும், எம்.பில் பட்டமும் பெற்ற இவரும் மக்கள் தொண்டில் பெரிதும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார்.



புதுக்கோட்டைக்கும் இராமநாதபுரத்திற்கும் ஓர் காலத்தில் ஒரு கல்யாண சம்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. மற்று, புதுக்கோட்டை யரசர்களின் சம்பந்திகளாயுள்ளோர். மாங்காட்டான் பட்டி இராங்கியர், மேலைக் குறிச்சி இராங்கியர், கல்லாக்கோட்டை சமீன்தார் சிங்கப்புலி ஐயா, காட்டுக்குறிச்சிப் பன்றிகொண்டார், நெடுவாசல் சமீன்தார் பன்றிகொண்டார் முதலாயினார் ஆவர்.



புதுக்கோட்டை இராட்சிசயம் சிறிதாயிருப்பினும் தமிழ் நாட்டு முடியுடை வேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர் ஆட்சிக்குப் பின்பு இதுவே தமிழ் நாட்டு அரசாங்கமாக விளங்கிவந்தது. தமிழ் மொழியைப் புரந்த அம்மன்னர்களைப் போலவே இவர்களும் இப் பொழுது புரந்து வருகின்றனர். சர் வில்லியம் பிளாக்பர்ன் கூறிய படி புதுக்கோட்டை மன்னர் மிகவும் அதிகாரமுள்ளவராவர் .



இது வரையில் வந்த வரலாற்று தகவல்களை ஐயா ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களின் கள்ளர் சரித்திரம் என்ற நூலில் இருந்து தொகுக்ப் பட்டது.



ஐந்தாம் அதிகாரம்



நாடு, நாட்டுக் கூட்டம், நாடு காவல் :




தமிழரது நாடு தமிழ் நாடு எனவும், தமிழகம் எனவும் வழங்கி வருவது போன்று, தமிழரில் கள்ளர் வகுப்பினர்மிக்குள்ள நாடு கள்ளர் நாடு எனவும், கள்ளகம் எனவும் வழங்கப் பெறுகிறன்றது. கள்ளர் நாட்டிலும் பல பிரிவுகள் உண்டு முதலிலே, தமிழ் நாட்டின் பிரிவுகள் பண்டுதொட்டு எப்படியிருந்துவந்தன என்பதை ஒருவாறு விளக்கி, பின்பு கள்ளர் நாட்டின் வரலாற்றைத் தெரிந்த வரை கூறுதும்.




வடக்கில் வேங்கடமலையும், தெற்கில் குமரியாறும், கிழக்கிலும் மேற்கிலும் கடலும் எல்லலையாகவுடைய நிலம் நெடுங்காலம் தமிகம் என வழங்கப்படுவதாயிற்று. தமிழகமானது தொன்று தொட்டு முடியடை வேந்தர்களான சேர, பாண்டிய, சோழர்களால் ஆட்சிபுரியப்பெற்று வந்தது. அதனாலே தமிழகம் சேரமண்டலம் எனவும், பாண்டி மண்டலம் எனவும், சோழ மண்டலம் எனவும் மூன்று பிரிவுகளையுடையதாயிற்று. இவை மண்டலம் என்னும் பெயரானன்றி நாடு என்னும் பெயரானும் வழங்கும். பின்பு தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் என்னும் பிரிவுகளும் உண்டாயின. இம்மண்டலங்களின் எல்லை, அளவுகளைப் பின்வரும் தனிப்பாடல்கள் உணர்த்தும்.



சேர மண்டலம் :



வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி
குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின்
ஓரமே தெற்காகு முள்ளெண் பதின்காதம்
சேரநாட் டெல்லையெனச் செப்பு’.



பாண்டி மண்டலம் :



‘வெள்ளா றதுவடக்கா மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல்கிழக்கா மைம்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி.’



சோழ மண்டலம்



‘கடல்கிழக்குத் தெற்குக் கரைபுரள்வெள் ளாறு
குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏணாட்டு வெள்ளா றிருபத்து நாற்காதம்
சோணாட்டுக் கொல்லையெனச் சொல்’.



தொண்மை மண்டலம் :



‘மேற்குப் பவளமலை வேங்கடம் நேர்வடக்காம்
ஆர்க்கு முவரி யணிகிழக்கு - பார்க்குளுயர்
தெற்குப் பினாகி திகழிருப தின்காதம்
நற்றொண்டை நாடெனவே நாட்டு’.



கொங்கு மண்டலம் :



‘வடக்குத் தலைமலையாம் வைகாவூர் தெற்குக்
குடக்குவெள் ளிப்பொருப்புக் குன்று - கிழக்குக்
கழித்தண் டலைசூழுங் காவிரிநன் னாடா
குழித்தண் டலையளவு கொங்கு.’




சோணாட்டிற்கும் தொண்டை நாட்டிற்கும் இடையே திருமுனைப்பாடி நாடு என்றும் ஒன்று உளதாயிற்று. இதற்கு வேறு சில பெயர்களும் உண்டு. கங்க மண்டலம், ஈழ மண்டலம் என்பன இங்கு ஆராய்ச்சிக் குரியவல்ல. சோழ மன்னர்களின் ஆணை பரவிய இடைக் காலத்தில் பாண்டி மண்டலத்திற்கு ராஜராஜ மண்டலம் எனவும், தொண்டை மண்டலத்திற்கு ஜயங்கொண்சோழ மண்டலம் எனவும், கொங்கு மண்டலத்திற்கு அதிராஜராஜ மண்டலம் எனவும், சோழ கேரள மண்டலம் எனவும் பெயர்கள் வழங்கலாயின. அவை பின்பு விளக்கப்பெறும். இம் மண்டலங்களின் உட்பிரிவுகள் வளநாடு , நாடு, கோட்டம், கூற்றம் என்னும் பெயர்களால் வழங்கின. வளநாடு அல்லாத பிரிவுகள் பழைய தமிழ்ச் சங்க நாளிலே இருந்திருக்கின்றன என்பதற்குச் சங்க நூல்களில் அப்பெயர்கள் காணப்படுதலே சான்றாகும்.




இடைக்கழி நாடு, ஏறுமா நாடு, கோனாடு, பறம்பு நாடு, மலையமானாடு, மழவர் நாடு, மாறோக நாடு, முக்காவனாடு, பல்குன்றக்கோட்டம், குண்டூர்க் கூற்றம், மிழலைக் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் என்னும் பெயர் சங்கச் செய்யுட்களில் காணப்படுகின்றன.



பிற்பட்ட தமிழ் நூல்களிலும் நாட்டு வழக்குகள் பயின்றுள்ளன. சைவசமயகுரவராகிய சந்தரமூர்த்தி சவாமிகள் தேவாரம் திருநாட்டுத் தொகையில் மருகல் நாடு, கொண்டல் நாடு, குறுக்கை நாடு, நாங்கூர் நாடு, நறையூர் நாடு, மிழலை நாடு, வெண்ணி நாடு, பொன்னூர் நாடு, புரிசை நாடு, வேளூர் நாடு, விளத்தூர் நாடு, வெண்ணிக்கூற்றம் என்னும் பெயர்களைக் குறிப்பிட்டு, அவற்றிலுள்ள ஊர்களில் ஒரோவொன்றன் பெயரும் கூறியுள்ளார்கள்.



பெரியபுராணத்திலே மேன்மழநாடு, மேற்காநாடு, கோனாடு, மருகல் நாடு என்பன வந்துள்ளன. இங்ஙனம் பிறவற்றுள்ளும் காண்க.



கல்வெட்டுக்களை ஆராயுமிடத்து அவற்றிலிருந்து நாட்டின் பிரிவுகளைப் பற்றிய பல அரியசெய்திகள் வெளியாகினறன. அவை ஒருவொறு இங்கே விளக்கப்படும்; கோட்டம், நாடு என்னம் பிரிவுகள் தொண்டைமண்டத்திலும், வளநாடு, நாடு என்னும் பிரிவுகள் சோழமண்டலத்திலும் இருந்திருக்கின்றன. பல ஊர்கள் சேர்ந்து ஒரு நாடும், பல நாடுகள் சேர்ந்து ஒரு கோட்டமும் பல கோட்டங்கள் சேர்ந்து ஒரு மண்டலமும் ஆகும்.



அப்படியே பல ஊர்கள் சேர்ந்து ஒரு நாடும் பல நாடுகள் சேர்ந்து ஒரு வளநாடும் பல வளநாடுகள் சேரந்து ஒரு மண்டலமும் ஆகும் கோட்டத்தின் உட்பட்ட நாடு என்பதன் உட்பிரிவாக கூறு என்பதொன்றும் சிறு பான்மை காணப்படுகிறது உதாரணமாக ‘களத்தூர் கோட்டத்துக் களத்தூர் நாட்டுத்தன் கூற்றுத் திருக்கழுக்குன்றம் என வருவது காண்க. இதன்படி ஊர், கூறு, நாடு, கோட்டம், மண்டலம் என்பன முறையே ஒன்றின் னொன்று உயர்ந்தனவாகும் வளநாட்டின் உட்பட்ட நாடு என்பதற்குப் பிரதியாக கூற்றம் என்பதும் காணப்படுகிறது.



 ‘பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர் கூற்றம் ராஜாசிராய வளநாட்டுப் பாச்சீற் கூற்றம், நித்தவினோத வளநாட்டு ஆவூர்கூற்றம் நித்தவினோத வளநாட்டுக் கிழார்க் கூற்றம், கேரளாந்தக வளநாட்டு உறையூர் கூற்றம்’ என வருதல் கண்க. சோழ மண்டலமானது வளநாட்டிற்கு மேலாக தென்கரை நாடு, வடகரைநாடு என்னும் பிரிவினையும் உடைத்தாயிருந்தது. இப்பிரிவு காவிரியால் ஏற்பட்டதாகும். ‘சோழ மண்டலத்து தென்கரை நாட்டு நித்தவினோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆவூருடையான்’ என வருகின்றது. சில இடங்களில் கோட்டமாவது , வளநாடாவது கூறப்படாமல் , மண்டலத்தை யடுத்து நாடு, கூற்றம் என்பன கூறப்படுகின்றன.



மண்டலம், கோட்டம், நாடு முதலியவற்றின் பெயர்கள் காலத்திற்கு காலம் மாறியும் வந்துள்ளன. தொண்டை மண்டலத்திற்கு ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்று பெயர் ஏற்பட்டு விட்டது வெளிப்படை. ‘தொண்டை நாடான ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மானாடு’ என இங்ஙனம் வருகின்றன. இவ்வாறே பாண்டி நாட்டிற்கு ராஜராஜ மண்டலம் என்றும், கொங்கு நாட்டிற்கு சோழ கேரள மண்டலம் என்றம் பெயர்கள் வழங்கியுள்ளமை ‘ பாண்டிநாடான் ராஜராஜ மண்டலம்’ என்றும், கோனேரி மேல்கொண்டான் கொங்கான சோழகேரள மண்டலம் என்றும் வருதலால் அறியலாகும் அதிராஜராஜ மண்டலத்து வெங்கால நாடு என வருதலால் கொங்கிற்கு அப்பெயருண்மையும் பெறப்படும். ஈழ நாடும் ‘ மும்மடி சோழமண்டலம்’ எனப்பட்டது. இவையெல்லாம் சோழ மன்னர்களின் வெற்றிக்கு அடையாளங்கள் ஆகும்.



தொண்டை மண்டலம் 24 கோட்டங்களாகவும் 79 நாடுகளாகவும் வகுக்கப்பட்டிருந்தது. ‘ நாளாறு கோட்டத்து புலியூர்க்கோட்டம்’ , ‘ கோட்டமோ ரிருபானான்கு கூறுநா டெழுபத்தொன்பான்’ என்பன காணக.



கோட்டம் இருபத்து நான்காவன:-



1.ஆமூர்
2.இளங்காடு
3.ஈக்காடு
4.ஈத்தூர்
5.ஊற்றுக்காடு
6.எயில்
7.கடிகை
8.காளியூர்
9.களத்தூர்
10.குன்றபத்திரம்
11.சிறுகரை
12.செங்காடு
13.செந்திருக்கை
14.செம்பூர்
15.தாமல்
16.படுவூர்
17.பல்குன்றம்
18.புழல்
19.புலியூர்
20.பேயூர்
21.மணையில்
22.வெண்குன்றம்
23.வேங்கடம்
24.வேலுர்



என்பன.



ஒவ்வொன்றன் பின்னும் கோட்டம் என்பது சேர்த்துக் கொள்க.



தொண்டைநாடு ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்று பெயரெய்தியவிடத்தும் அங்ஙனமே கோட்டம் என்னும் பிரிவுகளை உடைத்தாய் , இருந்தது. ஆமூர் கோட்டம் , படுவூர் கோட்டம், பல்குன்றக்கோட்டம், காலியூர் கோட்டம் , எயிற்கோட்டம் , ஊற்றுக்கோட்டம், வெண்குன்றகோட்டம், செங்காட்டுக்கோட்டம் , புலியூர்கோட்டம், புழற்கோட்டம், மணையிற் கோட்டம், களத்தூர்கோட்டம் முதலிய ஜெயங்கொட்ட சோழமண்டலத்தில் இருந்தனவாக சாசணங்களால் அறியலாகும்.



 முற்பட்ட சில சோழர்காலத்தில் கோட்டம் என்றிருந்தது, பின் வந்த சோழர் காலத்தில் சோழ மண்டலத்தின் பிரிவு முறைப்படி வள நாடு என மாறியும் இருக்கிறது. ‘ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டு மணிமங்களம்’ என்பது உதாரணமாகும். .



சோழ, பாண்டிய, சேர மண்டலங்களில் கூற்றம் , வளநாடு முதலியவை எத்துணைப் பகுதிப் பட்டிருந்தனவென்னும் வரையரை புலப் படவில்லை உறையூர் கூற்றம், பாச்சிற் கூற்றம், தஞ்சாவூர்க் கூற்றம், வெண்ணிக்கூற்றம் , ஆவூர் கூற்றம் , கழார் கூற்றம், பட்டினகூற்றம், பாம்புணிகூற்றம், வேளூர் கூற்றம், ஒளியூர் கூற்றம் உறத்தூர் கூற்றம், சூரலூர் கூற்றம் என்னும் கூற்றங்களும்; மங்கல நாடு , மருகல் நாடு , மழநாடு, புலியூர் நாடு, அழுந்தூர் நாடு, ஆக்கூற் நாடு, அம்பர் நாடு, அதிகை மங்கை நாடு, இடையள நாடு, நறையூர் நாடு, தேவூர் நாடு பொய்கை நாடு, மண்ணி நாடு, நென்மலி நாடு , புறங்கரம்பை நாடு, பனையூர் நாடு, திரைமூர் நாடு, பிரம்பூர் நாடு, குறும்பூர் நாடு, மிழலைநாடு, குறுக்கை நாடு, விளத்தூர் நாடு, திருக்கழுமல நாடு, திருவாலிநாடு, வெண்ணையூர் நாடு, நாங்கூர் நாடு, கொண்டல் நாடு, ஒக்கூர் நாடு, உறத்தூர் நாடு, பாப்பாநாடு, பைங்காநாடு, அம்பு நாடு, கற்பிங்க நாடு, ஊமத்த நாடு, காசா நாடு, தென்னவநாடு, மீய்செங்கிளி நாடு, எயிநாடு, புறக்கிளியூர் நாடு, மேற்கா நாடு, கார்போக நாடு, வடவழிநாடு, பிடவூர் நாடு, குழிதண்டலை நாடு, நல்லாற்றூர் நாடு, ஏரியூர் நாடு, இடையாற்று நாடு, ஊற்றத்தூர் நாடு, மீகோழை நாடு , கோ நாடு முதலிய நாடுகளும் ; அருண்மொழித்தேவர் வளநாடு , பாண்டியகுலாசணி வள நாடு, நித்தவினோத வளநாடு, ராஜராஜ வளநாடு, ராஜேந்திர சிம்ம வளநாடு, உய்யகொண்டான் வளநாடு, க்ஷத்திரிய சிகாமணி வளநாடு, கேரளாந்த வளநாடு, ஜயசிங்க குலகாள வள நாடு, ராஜாசிரய வளநாடு, கடலடையா திலங்கை கொண்டான் வளநாடு, விருதராஜ் பயங்கர வளநாடு என்னும் வளநாடுகளும் சோழமண்டலத்தில் இருந்தனவாக கல்வெட்டுக்கள் முதலியவற்றால் தெரிவிக்கின்றது.



வளநாடுகளெல்லாம் சோழமன்னர்களின் பெயர்களையே பெயராகக்கொண்டுள்ளன.



சோழருக்கு வளவர் என்பது ஒரு பெயராகலின் அவர் ஆண்ட நாடுகள் வளநாடு எனப்பட்டன. அவ்வச்சோழர் காலத்திலேயே அவை உண்டாயின ஆகலின் வள நாடு என்னும் பெயர் தொன்று தொட்டதாகாது.. ஒரு காலத்தில் நாடு என வழங்கியது பிறிதொரு காலத்தில் வளநாடு என்றாயது என்பதற்கு ‘மழநாடான ராஜாசிரய வளநாட்டுப் பாச்சிற் கூற்றம்’ என வருவது சான்றாகும். வளநாட்டின் பெயரும் ஒவ்வொரு காலத்தில் மாறி வந்துள்ளது. தஞ்சாவூரைத் தன்னகத்துடைய நாடு ஒரு காலத்தில் ‘க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டு மருகல் நாடு’ என்றும், மற்றொரு காலத்தில் ‘பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றம்’ என்றும் வெவ்வேறு பெயர்களை உடைத்தாயிருந்தது.




கொங்குமண்டலத்தின் பிரிவுகளில் கோட்டம், வளநாடு என்னும் பெயர்கள் காணப்பட்டில. அஃது இருபத்து நான்கு நாடுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை:-




1.பூந்துறை நாடு
2.தென்கரை நாடு
3.காங்கேய நாடு
4.பொன்கலூர் நாடு
5.ஆறைநாடு
6.வாரக்கனாடு
7.திருவாவினன்குடி நாடு (வையாபுரி நாடு)
8.மணநாடு
9.தலைய நாடு
10.தட்டய நாடு
11.பூவாணிய நாடு
12.அரைய நாடு
13.ஒடுவங்க நாடு
14.வடகரை நாடு
15.கிழங்கு நாடு
16.நல்லுருக்க நாடு
17.வாழவந்தி நாடு
18.அண்ட நாடு
19.வெங்கால நாடு
20.காவடிக்கனாடு
21.ஆனைமலை நாடு
22.இராசிபுர நாடு
23.காஞ்சிக்கோயினாடு
24.குறும்பு நாடு



என்பன. இவற்றில் சில நாடுகட்கு இணை நாடுகள் எனவும் வேறு உள்ளன. பூந்துறை நாட்டின் இணை நாடுகள் பருத்திப்பள்ளி நாடு, ஏழுர் நாடு என்பன. இங்ஙனமே வேறு சிலவும் உள்ளன.



கோட்டம், வளநாடு நாடு என்பன இன்ன இன்ன இடத்தில் இருந்தனவென்பது அவற்றைச் சார்ந்துவரும் ஊர்ப்பெயர் முதலிய வற்றால் அறியலாகும். ‘ஜயங்கொண்ட சோழமண்டலத்துப் புழற்கோட்டத்துப் புழல் நாட்டுத் திருவொற்றியூர் , ஜயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துக் களத்தூர் நாட்டுத் தன் கூற்றுத் திருக்கழுக்குன்றம், உலகுய்யக்கொண்ட சோழவள நாட்டுத் திரைமூர் நாட்டுத் திருவிடைமருதூர், பாண்டியகுலாசனி வளநாட்டு மீகோழை நாட்டுத் திருவாணைக்கா, க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டு மருகல் நாட்டுத் தஞ்சாவூர்’ என்பன காண்க சில இடங்களில் ஊர்பெயரே கோட்டம் முதலியவற்றின் பெயராக அமைந்திருத்தலும் அவற்றை அறிதற்கு உதவியாகும் ஒரொவழி நாடு இருக்கூறுடையதாகி ‘வகை’ என வழங்கியுள்ளது. நகரங்களும் ஊர்களும் ‘தனியூர் , பற்று, ஊர், குறைபற்று’ என்பனபோலும் பெயர்களால் வழங்கின. சிற் சில ஊர்கள் தமக்குரிய பழம்பெயருடன் சில அரசர் பெயர்களையும் பெயராக ஏற்று வழங்கலுற்றன.



 ‘கருந்திட்டைக் குடியான சுங்கந்தவிர்த்த சோழ நல்லூர், திருக்கழுக்குன்றமான உலகளந்த சோழ புறம், சேவூரான சோழ கேரள நல்லூர், கோட்டாறு ஆன மும்மடிச்சோழ நல்லூர், கருவூரான முடிவழங்கு சோழபுறம், ஏரிநாட்டு விண்ணனேரியான மும்மடி சோழ நல்லூர்’ என இங்ஙனம் வருகின்றன. கல்வெட்டுகளை ஆராய்தலினால் இங்ஙனம் அறியலாகும் உண்மைகள் மிகப் பலவாம்.



நாட்டின் பிரிவுகள் தொன்று தொட்டு இங்ஙனம் வேறு பட வழங்கிவந்தாற் போலவே இப்பொழுது கள்ளர்கள் மிக்குள்ள சோழ பாண்டி மண்டலங்களில் வழங்கி வருகின்றன. வள நாடு, நாடு முதலிய பல பிரிவுகளும் இப்பொழுது விரவிக்கிடக்கின்றன. நாட்டின் எல்லைகள் சில ஊர்கள் அளவிற் குறுகியும் உள்ளன. இந்நாடுகட்கெல்லாம் தலைவராயினார் கள்ளர் குலத்தோர் ஆதலின் இவை பொதுவே கள்ளர் நாடு எனவும், கள்ளர் பற்று எனவும் வழங்குகின்றன. கள்ளர்களுக்கு நாட்டார் என்னும் பெயர் பொதுவாக வழங்குகிறது. கள்ளர் நாடுகளைப் பற்றி தெரிந்தவரை இங்கே எழுதுகின்றோம் .



ஈதர்ஸ்டன் என்பார் எழுதிய ‘ தென்னிந்திய சாதி வகுப்பு வரலாறு’ என்னும் புத்தகத்தில் பின் உள்ளவை காணப்படுகின்றன.



மதுரைக் கள்ளர் நாடுகள் :



1.மேல்நாடு
2.சிறு குடிநாடு
3.வெள்ளூர் நாடு
4.மல்லாக்கோட்டை நாடு
5.பாகனேரி நாடு
6.கண்டர் மாணிக்கம் அல்லது கண்ணன் கோட்டை நாடு
7.கண்டதேவி நாடு
8.புறமலை நாடு
9.தென்னிலை நாடு
10.பழைய நாடு



என்பன



புறமலை நாட்டுக் தலைவரை ஆயர் முடிச்சூட்டுவது வழக்கம் . மேல் நாடானது வடக்குத் தெரு, கிழக்குத் தெரு, தெற்குத் தெரு என்று மூன்று உட்பிரிவையுடையது. சிறு குடி நாட்டின் உட்பிரிவுகள் ;ஆண்டி , மண்டை ஐயனார், வீரமாகாளி என்ற தெய்வங்களின் பெயர்களையுடையன. வெள்ளூர் நாட்டின் உட்பிரிவுகள்; வேங்கைப்புலி, வெக்காலி புலி, சாமிப் புலி, சம்மட்டி மக்கள், திருமான்,சாயும் படைத் தாங்கி என்பன போன்றவை சிவகங்கைச் சீமைகயில் 14 நாடுகள் உள்ளன. ஆண்டிற்கொருமுறை பதினான்கு நாட்டின் தலைவர்களும் சுர்ண மூர்த்திஸ் வாமி திருவிழா சம்பந்தமாய்க் கண்டதேவியில் கூடுவது வழக்கம். உஞ்சனை, செம்பொன் மாரி, இரவு சேரி, தென்னிலை, என்ற நான்கு நாடுகளும் சிவகங்கை சமீனில் மற்றொரு பகுதியாகும்.



பாண்டி நாட்டிலுள்ள கள்ளர் நாடுகளைப் பற்றி, கள்ளல் , ஸ்ரீமத் மணிவாச சரணாலய சுவாமிகளும் , சிவகங்கை , சிரஞ்சீவி எஸ், சோமசுந்தரம் பிள்ளை நன்கு ஆராய்ந்து தெரிவித்தவை பின்வருவன.




1.மேல நாடு :




 இது ஐந்து தெருவாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் மேலை தெருவானது நரசிங்கன் பட்டி முதலிய எட்டு ஊர்களையும் , தெற்கு தெருவானது தெற்கு தெரு முதலிய எட்டு ஊர்களையும் , வடக்கத் தெருவானது வல்லாளப்ட்டி முதலிய 27 ஊர்களையும் பத்துக் கட்டு தெருவானது சிட்டம் பட்டி முதலிய 10 ஊர்களையும் , பறப்பு நாட்டு தெருவானது திருக்காணை முதலிய 8 ஊர்களையும் உடையன. இவர்கள் அழகர் கோயில் கள்ளழகரை வழிப்படுகின்றவர்கள். கள்ளழகர் கோயில் தேர்திருவிழாக்களில் பட்டுப் பரிவட்டம் முதல் மரியாதைகள் இவர்களுக்குண்டு நரசிங்கன் பட்டி அம்பலக்காரர்கள் பரம்பரையாகக் கள்ளழகர் தேவஸ்தானம் தர்மகர்த்தர்களாக இருந்து வருகின்றார்கள். மதுரை, தல்லாகுளத்தில் கள்ளழகர்க்கு ச் சிறந்த மண்டகப்படி இவர்களால் நடைபெற்று வருகிறது.



2.நடுவு நாடு:



இது மேலூர் முதலிய 20 ஊர்களையுடையது .



3.சிறு குடி நாடு:



 இதற்கு செருங்குடி நாடு என்றும் பெயர் உண்டு. இது கீழ வளவு, மேல வளவு, முதலிய பிரிவுகளையும் , பல ஊர்களையும் உடையது முன்பு வெள்ளூரும் இவர்கட்கு கீழ்பட்டிருந்தது. வெள்ளூர் மன்னவன் சின்னாண்டி என்பவனால் சிறு குடியார் துரத்தப்பட்டனர். இது வெள்ளூருக்கு மேற்கில் இருக்கிறது.



4.வெள்ளூர் நாடு :



 இது வடக்கு வேள்வி நாடு வீரபாண்டிய நல்லூர் ஆகிய வெள்ளலூர் நாடு , என்றும் கூறப்படும். இந்நாடு வெள்ளலூர் , அம்பலக்காரன் பட்டி, உறங்கரன் பட்டி, குறிச்சிப்பட்டி, மலம்பட்டி, என்னும் ஐந்து மாகாணங்களை யுடையது. இவற்றில் வெள்ளலூர் மாகாணம் 9 ஊர்களையும், அம்பலக்காரன் பட்டி மாகாணம் 9 ஊர்களையும், உறங்கரன் பட்டி மாகாணம் 9 ஊர்களையும், குறிச்சி பட்டி மாகாணம் 9 ஊர்களையும் , மலம் பட்டி மாகாணம் 11 ஊர்களையும் உடையன மற்றும் இந்நாடு முண்டவாசி கரை, வேங்கைப்புலி , சம்மட்டி கரை, நைக்கான் கரை, சாய்படை தாங்கி, வெக்காலி கரை, சலிப் புலி கரை, திருமான் கரை, செம்புலி கரை, கோப்பன் கரை, மழவராயன் கரையென்னும் 11 கரைகளாக பிரிக்கப் பட்டிருக்கிறது. கரையென்றுக்கு இரண்டு கரையம்பலம் உண்டு. நாட்டுத் தலைவர் நாடு முழுதுக்கும் தலைவராவார். இந்நாட்டிலே ஏழைக்காத் தம்மன் கோயில் , வல்லடியான் கோயில் என இரண்டு கோயில்கள் உண்டு. இந்நாட்டினர் வெள்ளை மலைக்கள்ளர் அல்லது வெள்ளூர் நாட்டார் எனப்படுவர்.



மாகாணக்கூட்டம் , நாட்டுக்கூட்டம் என இரு விதக் கூட்டங்கள் இங்கேஉண்டு மாகாணக் கூட்டம் என்பது ஒரு அம்பலமும் , குடிகளும் கூடுவது. நாட்டுக் கூட்டம் என்பது நாட்டுத்தலைவரும் , 22 கரையம்பலங்களும் மற்றைக் குடிகளும் கூடுவது நீதி (சிவில்) வழக்கும், குற்ற (கிரிமினல்) வழக்கும் தீர்க்கின்ற பஞ்சாயத்துகளும் உண்டு. அபராதம் வரும்படி கோயிலுக்குச் சேர்க்கப்படும். இந்நாடு சிவகங்கைக்கு மேற்கே ஐந்து மைல் தூரத்தில் உள்ளது நாடு முழுவதும் ஏறக்குறைய 20 சதுர மைல் இருக்கும்.



5. அஞ்சூர் நாடு:-



 இது மதுரையின் கிழக்கே பன்னிரண்டு மைலில் உள்ளது; தமராக்கி, குண்ணனூர் முதலிய பல ஊர்களை யுடையது.



6.ஆறூர் நாடு:-



இது சிவகங்கையின் மேற்கே ஐந்து மைலில்உள்ளது ; ஒக்கூர் , நாலுகோட்டை முதலிய பல ஊர்களையுடையது. இந்நாட்டு தலைவர்களுக்குச் சோழ புறம் சிவன் கோயிலில் பட்டுப்பரிவட்டம் மறியாதைகள் உண்டு.



7.மல்லாக்கோட்டை நாடு :-



இது சிவ கங்கையின் வடக்கே 8 மைலில் உள்ளது’ மல்லாக்கோட்டை, மாம்பட்டி , ஏறியூர் முதலிய ஊர்களையடையது.



8.பட்டமங்களம் நாடு:-



இது பட்டமங்கலம் முதலிய பல ஊர்களையுடையது. திருவிளையாடல் புறாணத்திலே கூறப்பெற்ற அட்டாமாசித்தி யருளிய பட்டமங்கை என்னும் தளம் இதுவே. மல்லாக்கோட்டை நாட்டுக்கும் பட்டமங்கள நாட்டுக்கும் திருக்கோட்டியூர் பெருமாள் கோவில் தேர்திருவிழாக்களில் பட்டு பரிவட்டம் மரியாதைகள் உண்டு.



9.பாகநேரி நாடு:-



 இது பாகனேரி ,காடனேரி, நகரம் பட்டி முதலிய பல ஊர்களை யுடையது. இந்நாட்டிற்கு பாகனேரியிலுள்ள சிவன் கோயில் அம்பாள் கோயில்களில் எல்லா உரிமைகளும் மரியாதையும் உண்டு.



10.கண்டர் மாணிக்கம் நாடு:-



இது கண்டர் மாணிக்கம் முதலிய 13 ஊர்களையடையது. இந்நாட்டிற்குக் கண்டர் மாணிக்கம் அம்மன் கோயிலிலும் குன்றக்குடி முருகப்பெருமான் கோயிலிலும் ,தேனாட்சியம்மன் கோயிலிலும் தேர் திரு விழாக்களில் பட்டுப்பரிவட்டம் முதலிய மரியாதைகளும் எல்லா உரிமைகளும் உண்டு.



11.குன்னங்கோட்டை நாடு:-



இது கல்லல் குன்னமாகாளியம்மன் பெயரைக் கொண்டது. இந்நாட்டுக்குத் தலைவர் மேலப்பூங்குடியில் உள்ளவர்கள். இவர்களுக்கு பாண்டிநாடு மதித்தான், திறைகொண்ட பெரியான் , சிறுக்கொந்தி முதலிய பட்டங்கள் உண்டு, இவர்கள் திருவேங்கடத்தானைக் குலதெய்வமாக உடையவர்கள்; கண்ணிழந்தவர்க்குக் கண் கொடுத்த ஒரு பக்கதருடைய வழியினர்;



இவர்கள் பாண்டிவேந்தரிடத்தில் மேலே குறித்த பட்டங்களும், நாயக்க அரசரிடத்தில் அவர்கட்குரிய பாசுபந்து வாசமாலையும், சிவகங்கை இராமநாதபுரம் அரசர்களிடத்தில் இரட்டைத்தீவட்டி, இரட்டைச் சாமரை, தண்டிகை, சுருட்டி, இடைக்கம் பீலிகுஞ்சம், சாவிக்குடை, காவிச் செண்டா, வெள்ளைக்குடை, சிங்கக்கொடி, அனுமக்கொடி, கருடக்கொடி, புலிக்கொடி, இடபக்கொடி, மீனக்கொடி பஞ்சவர்ணக்கொடி என்னும் பதினெட்டு விருதுகளும், காண்டீபன் என்ற விருதாவளியும் பெற்றவர்கள்.



 காளையார் கோயில், கல்லல் திருச்சோமேசுரர் கோயில், சிறு வயல் மும்முடீ நாதர் கோயில் என்னும் சிவாலயங்களின் தேர் திருவிழாக்களில் இவர்கள் மேற்கண்ட விருதுகளுடன் வந்து பட்டுப்பரிவட்டம் முதலிய மரியாதையுரிமைகள் பெறும்வழக்க முடையவர். இந்நாடு தெற்கே காளையார் கோயிலும் வடக்கே ஆலங்குடியும் மேற்கே கல்லலும் கிழக்கே கோயிலாம்பட்டியும் எல்லையாகவுள்ள பல ஊர்களையுடையது. இந்நாட்டுக்குத் தலைவர் தமது இறுதிக் காலத்தில் தமக்குப்பின் தலைவராக இருக்கத் தமது குடும்பத்தில் தக்காரொருவர்க்குப் பட்டங்கட்டுவது வழக்கம். இவர்களைப் பட்டத்துச்சாமி பட்டத்து ஐயா என வழங்கி வருகிறார்கள்.



12.பதினாலுநாடு:-



 குன்னங்கோட்டை நாட்டிலிருந்து கிழக்கே கடல் வரையில் பதினான்கு நாடுகள் உள்ளன. அவை ஏழு கிளை பதினாலுநாடு என்னும் பெயரால் வழங்குகின்றன. அவை:- குன்னங்கோட்டை நாடு, தென்னிலை நாடு, இரவுசேரி நாடு, உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு, கப்பலூர் நாடு, சிலம்பா நாடு, இருப்பா நாடு, தேர்போகிநாடு, வடபோகி நாடு, கோபால நாடு, ஆற்றங்கரை நாடு, ஏழுகோட்டை நாடு, முத்து நாடு என்பன. இந்தப் பதினான்கு நாட்டாரும் கண்டதேவியில் மகாநாடு கூடுவது வழக்கம்.



இவற்றில் தென்னிலை நாடு, இரவுசேரி நாடு, உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு என்னும் நான்கு நாட்டிற்கும் கண்டதேவி சிவன் கோயில் தேர் திருவிழாக்களில் பட்டுப்பரிவட்டம் முதலிய மரியாதைகள் உண்டு. எழுவன் கோட்டை சிவன் கோயில் தேர் திருவிழாக் களில் தென்னிலை நாட்டுக்குப் பட்டுப் பரிவட்டம் முதலிய மரியாதைகள் உண்டு.



இவையன்றித் திருவாதவூர் நாடு, கீழக்கடி நாடு என்னும் நாடுகளும் உள்ளன.



திருவாதவூர் நாடு:-



இது மேலூர்த் தாலுகாவில் தென்கிழக்கில் உள்ளது; இடையப்பட்டி கவரைப்பட்டி முதலிய ஊர்களையுடையது.



கீழக்குடிகாடு:-



 இது மதுரைக்கு மேற்கில் உள்ளது



திருவாளர், துங்கன் சொக்கனாண்டித் தேவர் என்னும் ஓர் அன்பர் சேதுநாடு, கற்பகநாடு என்னும் இரண்டு நாடுகளைப்பற்றி எழுதியனுப்பினர். அவர் தெரிவித்தபடி சேதுநாடு என்பது 4 மாகாணமும், 25 ஊர்களும் உடையதாகும். கற்பக நாடு என்பது 7 மாகாணமும், 30 ஊர்களும் உடையதாகும். முன்குறித்த திருவாதவூர் நாடும் கீழக்குடி நாடுமே முறையே சேதுநாடு, கற்பகநாடு என்னும் பெயர்களால் தெரிவிக்கப்பட்டிருக்குமோ வெனக் கருதப் படுகிறது.



பின் உள்ளவை புதுக்கோட்டைச் சரிதத்திற்காணப்படுவன.



கூற்றம் எனவும் , நாடு எனவும், நாடு வகுக்கப்பட்டது. கூற்றம் பெரும் பிரிவு; நாடு அதன் உட்பிரிவு. கோனாடானது உறையூர்க் கூற்றம் (வடபால்), ஒளியூர்க் கூற்றம் (தென் மேற்கு), உறத்தூர்க் கூற்றம் (வடமேற்கு) எனவும் கானாடானது மிழலைக் கூற்றம், அதளிக்கூற்றம் எனவும் , பகுக்கபட்டிருந்தன. பிற்பட்ட சோழ பாண்டியர் காலத்து வளநாடு என்றும், நாடு என்றும் பிரிவுகள் சோழ பாண்டியர் காலத்து வளநாடு என்றும், நாடு என்றும் பிரிவுகள் ஏற்பட்டன.



புதுக்கோட்டைச் சீமையில் உள்ள வளநாடுகள்:-



1.ராஜராஜ வளநாடு
2.ஜயசிங்க குலகால வளநாடு
3.இரட்டபாடி கொண்ட சோழ வளநாடு
4.கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாடு
5.விருதராஜ பயற்கர சோழ வளநாடு
6.கேரள சிங்க சோழ வளநாடு
7.சுந்தரபாண்டிய வளநாடு



என்பன. இப்பெயர்கள் பின்னாளிலும் வழங்கி வரலாயின”.



திருவாளர்கள் சர்கரை இராமசாமிப் புலவரவர்கள் வீட்டிலிருந்த பழைய ஏட்டிற் கண்ட ராயர் எழுவர் பெயர் முன்பு காட்டப்பட்டது. அவர்கட்கு உரியவாக ஏழு கூற்றமும், பதினெட்டு நாடும் அதிற் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் கூற்றங்கள்: ‘மிழலைக்கூற்றம், முத்தூர்க்கூற்றம். அரும்புர்க் கூற்றம், திருக்கானக் கூற்றம், தொகவூர்க் கூற்றம், கொடுமளூர்க் கூற்றம் , இளையான்குடிக் கூற்றம் என்பன.



 நாடுகள்:-



 கருங்குடி நாடு, உயர்செம்பி நாடு, கலாசை உருக்கு நாடு, தடாதிருக்கை நாடு, உலகு சிந்தாமணி நாடு, தோராபதி நாடு, மதுரை உதயவளநாடு, வாகுள்ள வள நாடு, சேர சோழ பாண்டி வளநாடு, வெள்வி நாடு, கானாடு, கைக்கு நாடு, மெய்கண்ட நாடு விரிஞ்சிங்க நாடு, தொளசிங்க நாடு, செம்பொன் நாடு, முடுக்கு நாடு என்பன.



திருவாளர் S. குமாரசாமி மேல்கொண்டார் அவர்கள் ஓர் செப்புப் பட்டயத்திலிருந்து எழுதிய கள்ளர் நாடுகளின் பெயர்கள்:



“தந்தி நாடு, மனைப்பள்ளி நாடு, அய்வூர் நாடு, அஞ்சு முகநாடு, ஏரிமங்கல நாடு, மேலத் துவாகுடி நாடு, கீழத் துவாகுடி நாடு, கொற்கை நாடு, செங்குள நாடு, மேல் செங்குள நாடு, கீழ செங்குள நாடு, பூளியூர் நாடு, செங்கணி நாடு, பிரம்பை நாடு, கானம்பூண்டி நாடு, சித்தர்குடி நாடு, மேல மகாநாடு, கீழ் வெங்கை நாடு, குளமங்கல நாடு, சித்துபத்து நாடு, பனையக்கோட்டை நாடு, காசாங்கோட்டை நாடு, தென்னம நாடு, ஒக்கு நாடு, உரத்த நாடு, பட்டுக்கோட்டை வளநாடு, கறப்பிங்கா நாடு, அஞ்சுவண்ணப் பத்து நாடு, கல்லாக்கோட்டை நாடு, அய்யலூர் நாடு, தென்பத்து நாடு, மத்தச் செருக்குடி நாடு, அன்னவாசற்பத்து நாடு, கண்ணுவாரந்தய நாடு, கோட்டை பத்து நாடு, பிங்களக் கோட்டை நாடு, மேலப் பத்து நாடு, பெரிய கூத்தப்ப நாடு, அறந்தாங்கி கீழாநெல்லி நாடு, வடுவூர் நாடு, திருமங்கலக் கோட்டை நாடு, பாப்பாநாடு, முசிரி நாடு, பின்னையூர் நாடு, விற்குடி நாடு, அம்பு நாடு, ஆலங்குடி நாடு, நிசிலி நாடு, நாலு நாடு, காசா நாடு, கோனூர் நாடு, சுந்தர் நாடு, மின்னாத்தூர் , நொழயூர் நாடு, அண்டக்குள நாடு, செருவாசல் நாடு, திருப்பத்து நாடு, அஞ்சில நாடு, ஆமையூர் நாடு, கிளியூர் நாடு, மல்லாக்கோட்டை நாடு, மழைநாடு, காவல் நாடு, காவிக்கோவில் நாடு, வலல நாடு, மாலை நாடு, பட்டமங்கல நாடு, கண்டர் மாணிக்க நாடு, கம்பனூர் நாடு, பாகையூர் நாடு, செருக்குடி நாடு, தெருபோகி நாடு, இருப்ப நாடு, எய்ப்பாம்பா நாடு, வன்னாடு, முத்து நாடு, சிலம்ப நாடு, செம்பொன்மாரி நாடு, சீழ் செங்கை நாடு, எயிலுவான் கோட்டை நாடு, மேலூர் நாடு, வெள்ளூர் நாடு” என்பன.



தஞ்சைக் கள்ளர் மகா சங்கம் அமைச்சராகிய திருவாளர் நடராஜ பிள்ளை அவர்கள் (பி.ஏ.,பி.எல்.,) வாயிலாகக் கிடைக்லுற்ற செய்திகள் பின் வருவன:



நாட்டின் பெயர் (தஞ்சாவூர்)
நாட்டின் முதற்கரை
பொதுத்தலம்



காசாநாடு
தெக்கூர்
கோயி
கேனூர் நாடு
தெக்கூர்
கோட்தைத்தெரு
பின்னையுர்நாடு
பின்னையூர்
பின்னையூர்
தென்னம நாடு
தொன்னம நாடு
கன்னந்தங்குடி நாடு
மேலையூர்
உரத்த நாடு
புதுவூர்
கோயிலூர்
ஒக்கூர் நாடு
மேலையூர்
கீழ ஒக்கூர் நாடு
கீழையூர்
திருமங்கலக் கோட்டை நாடு
மேலையூர்
தென்பத்து நாடு
பேரையூர்
அப்பராம்பேட்டை
ராஜவளநாடு
நடுவாக்கோட்டை
ராஜ வள நாடு
நடுவாக்கோட்டை
பைங்கா நாடு
பைங்கா நாடு
வடுகூர் நாடு
தென்பாதி
கோயில்பத்து நாடு
கம்பை நத்தம்
கோயில்பத்து
சுந்தர நாடு
வளமரங்கோட்டை
குளநீள் வளநாடு
துரையண்டார் கோட்டை
கடம்பர் கோயில்
பாப்பா நாடு
தெற்குக் கோட்டை
சங்கரனார்கோயில்
அம்பு நாடு தெற்க வடக்குதெரு
செங்குமேடு 12டான் விடுதி
அம்புகோயில்
வாகரை நாடு
குருங்குளம்
வடமலை நாடு
பகட்டுவான் பட்டி
கொற்கை நாடு
செங்கிபட்டி கூனம் பட்டி
ஏரிமங்கல நாடு
ராயமுண்டான்பட்டி
வெண்டையன்பட்டி
செங்கள நாடு
விராலிப்பட்டி
நொடியூர்
மேலைத்துவாகுடிநாடு
சூரியூர்
மீசெங்கிளி நாடு
தண்டுகமுண்டநாடு
அடைக்கலங்காத்தநாடு
அள்ளூர்
பிரம்பை நாடு
பிரம்பூர்
கண்டி வள நாடு
நடுக்காவேரி
வல்ல நாடு
இளங்காடு
தந்தி நாடு
நத்தமாங்குடி
வாராப்பூர்
பொன்னம் விடுதி
ஆலங்குடி நாடு
ஆலங்குடி
வீரக்குடி நாடு
வாண்டான் விடுதி
திருமணஞ்சேரி
கானாடு
திருவரங்குளம்
கோ நாடு
பெருங்குளூர் நாடு
பெருங்களூர்
கார்யோக நாடு
ஊமத்த நாடு
சிங்கவனம்



கள்ளர் நாடுகளில் இதுகாறும் தெரிந்தவை இங்கு ஒருவாறு எழுதப்பட்டன. இவை இன்னம் நன்காராய்ந்து ஒழுங்குபடுத்தற்பாலன.



இனி, நாட்டுக் கூட்டத்தின் இயல்பினைச் சிறிது விளக்குதும்.



தஞ்சை சில்லாக் கெசட்டியரில் (1906) பின் வருமாறுகூறப் பெற்றுளது.



” கள்ளர் நாடுகளில் கிராமப் பஞ்சாயத்து வழக்கமாக இருந்து வந்தது. வேளாளர் பழக்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்தமையால் இது நின்றுவிட்டது. கிராமத்தில் முக்கியமானவர் அம்பலகாரர் எனப்படுவர். இவர் ஊரிலுள்ள சில்லசைச் சச்சரவுகளைத் தீர்த்து வைப்பர். ஏனையரில் மேலாபனவராகக் கொள்ளப்படுவர். சில சமயங்களில் பல கிராமப் பஞ்சாயத்தார்கள் ஒன்றுகூடிப் பொதுக் காரியங்களை ஆராய்வதுண்டு”.



தென்னிந்திய சாதி வகுப்பு வரலாறு என்னும் ஆங்கிலப் புத்தகத்தில்,



“சிவகங்கை ஜமீன்தாரியில் பதினான்கு நாடுகள் உள்ளன. பதினான்கு நாடுகளின் பிரதிநிதிகளும் ஆண்டிற்கு ஒருமுறை சுவர்ணமூர்த்தி சுவாமியினன் திருவிழா விடயமாய்க் கண்டதேவியில் கூடுவது வழக்கம்” என்று குறித்திருக்கிறது.



“வெள்ளூர் நாடு ஐந்து மாகாணங்களையுடையது. பதினொரு கரைகளாகப் பிரிக்கப்ட்டிருப்பது. ஒருகரைக்கு இரண்டு கரையம்பலமாகும். நாட்டுத்தலைவர் நாடு முழுதுக்கும் தலைவராவர். மாகாணக்கூட்டம், நாட்டுக்கூட்டம் என இருவகைக் கூட்டங்கள் உண்டு. ஒரு அம்பலமும், கடிகளும் கூடுவது மாகாணக்கூடம். நாட்டுக்கூட்டம் என்பது நாட்டுத்தலைரும், இருபத்திரண்டு கரையம்பலங்களும் மற்றைய குடிகளும் கூடுவதாகும். நீதி (சிவில்) வழக்கு, குற்ற (கிரிமினல்) வழக்குகளைத் தீர்க்கம் கழகங்கள் (பஞ்சாயத்து) அங்கு உள்ளன” என்னும் இச்செய்தி முன்பும் காட்டப்பெற்றுள்ளது.



“ஐந்து கிராமத்தினர் ஒன்று சேர்ந்து காங்கயன் என்பானைத் தலைமையாக ஏற்படுத்தினரென்றும், அதற்காகச் சற்றிலுமுள்ள நான்கு கிராமத்தினன் அதிகாரிகள் காங்கயனையும், அவனைச் சேர்ந்தவர்களையும் தாக்தகினரென்றும், பின்ப இந்நால்வரும் காங்கயனால் தோல்வியுற்றுத் தலைக்கு ஒரு மாநிலம் கோயிலுக்குக் கொடுக்க வேண்டியதாயிற்று என்றும் நெடுங்குடிக் கல்வெட்டில் குறிப்பிட்டிருக்கிறது”.



“இவர்களில் தலைவர்களை ஏற்படுத்துவதில் தேந்தெடுப்பு (எலக்ஷன்) நடந்து வந்தது. நந்தவனபட்படி மேல்ண்டான் என்ற தலைவன் ஒருகால்தன்றம்பியொடும்ஈ மற்றமுள்ள துணைவர்களோடும் வெளிச்செல்ல நேர்ந்தபொழுது, மேல்கொண்டானடைய அத்தையை அத்தலைமை யேற்றுக்கொள்ளும்படி செய்தனர், அம்மாது நியாயவிசாரணையிலும், காரிய நிர்வாகத்திலும் அவ்வளவு திறமை வாய்த்திருந்தனள். இக்கூட்டத்திற்கு



(கான்பிடரேஷனக்கு) மதுரை அரசர் தலைமையில் உதவி கிடைத்து வந்தது. மதுரையின் பிரதிநிதிகள் திருச்சிராப்பள்ளியில் இருந்துகொண்டு வரி வாங்கி இக்கூட்டத் தலைவர்களுக்குக் கொடுத்து வந்தனர். சிலர் இக் கூட்டத்தினரால் சிற்சில துன்பங்கள் உண்டாயின என்று நினைத்தாலும், இக்கூட்டத்தினர் பலமடைந்து ஒற்றுமையுடனிருந்ததால்



திருச்சிக்கோட்டைக்கு முன்பு அவர்கள் உதவி செய்தது போல் எப்பொழுதும் உதவி செய்யம்படி துணையாகப் பெற்றுக் கொள்ளலாம். திருச்சிக் கோட்டையை முற்றகையிட்ட மகம்மதிய சிப்பாய்களின் தாக்கதலைவிடக் கள்ளர்களின் தாக்குதலுக்கே மிக நடுங்கினரென்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்” என்று , திருச்சி ரெவரெண்டு காஸ்டெட்ஸ் கூறியிருக்கின்றனர். புதுக்கோட்டைச் சரிதத்தில் இவ்வரலாறுகள் காணப்படுகின்றன.



இங்கே காட்டியவற்றிலிருந்தும் பிறவாறு யாம் ஆராய்ந்தவற்றிலிருந்தும் நாட்டுக்கூட்டத்தின் இயல்பினைப் பின் வருமாறு தொகுத்துக் கூறலாகும்:-



கள்ளர் நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் கள்ளர் குலத்தவரில் ஒருவரோ பலரோ தலைவராக இருப்பர். அவர்களுக்கு அம்பலக்காரர் அல்லது நாட்டாண்மைக்காரர் என்பது சிறப்புப்பெயராகும். சில இடங்களில் காரியக்காரர் என்றும் சொல்வதுண்டு. ஊரிலுள்ளோர் எல்லாவிதமான வழக்குகளையும் அம்பலகாரரிடம் தெரிசவித்துக் கொள்ள அவர் வழக்குகளின் உண்மையைக் கண்டறிந்து,



ஒருபுறமும் கோணாது நடுவு நிலையாகத் தீர்ப்பச்செய்து விடுவர். வழக்காளிகளும் தீர்ப்பிற்குக் கட்டுப்பட்டு நடப்பர். அம்பலகாரர் என்னும் உரிமையைப் பணம் முதலிய எக்காரணத்தாலும் ஒருவர் திடீரென அடைந்து விடுவதில்லை. அது பரம்பரையாக வந்து கொண்டிருப்பதொன்றாம், ஒருக்கால் அம்பலகாரர்க்குச் சந்ததியில்லாது போய்விடின், அவரைச்சார்ந்த தகதியுடைய வேறு யாரையாவதுஊரார் தேர்ந்தெடுத்துக்கொள்வர். அம்பலகாரர் பொருள் குன்றி எவ்வளவு எளியவராகப் போய்விடினும் அவரது உரிமைக்கப் பழுது வருவதில்லை.



சில சமயங்களில்பெண்டிரும் கூட அவ்வுரிமையை வகித்து நடத்துவாராவர். ஒரு நாடு அல்லது நாட்டின் பகுதியில் (மாகாணத்தில்) உள்ள ஒவ்வொரு ஊர் அம்பலக்காரரும் ஆண்டிற்கு ஒருமுறை கூடுவதுண்டு. இது நாட்டுக் கூட்டம் அல்லது மகாநாடு எனப்படும். நாட்டின் முதற்கரை அல்லது தலைக்கிராமத்திலுள்ள அம்பலகாரர், மற்றையூர்களின் தலைவர்களுக்கு மகாநாடு கூட நாள் குறிப்பிட்டுத் திருமுகம் அனுப்புவர். குறிப்பிட்ட நாளிலே நாட்டின் பொதுத்தலத்தில் கூட்டம் ஆரம்பமாகும்.



ஒவ்வொரு நாடு அல்லது நாட்டின் உட்பட்ட மாகாணத்திலும் ஏதேனும் ம் ஒரு தெய்வம் இருக்கம். அத்தெய்வத்திற்குக் காப்புக் கட்டித் திருவிழாச் செய்யத் தீர்மானித்தற் பொருட்டாகப் பெரும் பாலும் நாட்டுக் கூட்டம் கூடும் ஆனால் அப்பொழுதே நாட்டின் உட்பட்ட கிராமப் பொது வழக்குகளெல்லாம் கொண்டு வரப்பெறும். ஏரி குளம், வாய்க்கால், எல்லைப்புறம் என்பன பற்றியும் மற்றும் பலவகையாகவும் ஒரு கிராமத்திற்கு மற்றொரு கிராமத்துடன் ஏற்பட்டுள்ள பிணக்குகளெல்லாம் அப்பொழுது கொண்டுவந்து வாதிக்கப்படும்.



 நாட்டுமக்கள் பெருந்திரளாகக் கூடுவதும் உண்டு எனினும் அவர்கள் வேடிக்கை பார்ப்பதன்றி இடையே யாதும் பேசுதல் செய்யார். அம்பலகாரர்கள் மாத்திரமே பேசி முடிவு செய்தல் வேண்டும். வழக்கு மிகுந்து விடுமேல் கூட்டம் தொடர்ச்சியாய்ப் பல நாள் நடைபெறுவதுமுண்டு. எல்லா வழக்குகளும் யாருக்கும் மனத்தாஙகலின்றித் தீர்த்து வைக்கப்பட்ட பின்னரே திருவிழா நிச்சயிக்கப் பெறும். நாட்டுக் கூட்டத்தின் தீர்ப்புகள் எல்லாம் எழுத்துமூலமன்றி வாய்மொழியாகவேயிருக்கும். பத்திமெழுதிப்பதிவு (ரிஜிஸ்தர்) செய்தும் பிறழ்ச்சி மிகுகின்ற இக்காலத்தில் இச்செயல் எவ்வளவு வியப்பைத் தருவதாகும்! வெறும் வாய்மொழிக்கு முன்பு அவ்வளவு மதிப்பிருந்தது.



வாய்மொழித் தீர்ப்பிற்கு யாவரும் கட்டுப்பட்டு நடந்த வந்தனர். இவ்வாறாக உர்வழக்குகளெல்லாம் அவ்வூர் தலைர்களாலும், நாட்டு வழக்குகளெல்லாம் நாட்டு கூட்டங்களாலும் ஒரு காசும் செலவின்றி உண்மை கண்டுமுடிவு செய்யப்பட்டு வந்தன. இப்பொழுதோ வழக்காளிகளிற் பெரும்பாலரும் தம் சொத்துக்களையெல்லாம் இழந்து முடிவில் ஓட்டாண்டிகளாகி விடுதல் கண்கின்றோம். சட்டத்திற்றேறி மன்றின்கண் ஏறி விடும். வக்கீற் கூட்டத்தினர்க்கு நாட்டிலுள்ள ஏழை மக்களின் நலத்தில் கருத்துண்டாவதில்லை.



 ஏழைகளுக்கு நன்மை செய்ய அவர்களுக்கு எவ்வளவோ வன்மையுண்டு. அவ்படியிருந்தும் யார் எக்கோடு கெட்டால் என்னென்று அவெர்கள் வழக்குகளைப் பெருக்கவே முயலுகின்றனர். அவர்களுக்கு உண்மையாகவே உயர் நோக்கம் இருக்குமாயின் இப்பொழுதுள்ள வளவிற் பாதியளவாக வேனும் வழக்குகள் குறைந்து விடும் என்பதில் ஐயமில்லை. இராஜராஜ தேவர் முதலான பழைய சோழ மன்னர்கள் காலத்தில் ஊர்தோறும் பஞ்சாயத்துகள் இருந்து, நாட்டின் ஆட்சி சிறிதும்வருத்தமின்றிச் செவ்வையாக நடைபெற்று வந்திருத்தலை அறிவிக்கும் கல்வெட்டுச் சாசனங்கள் எண்ணிறந்தனவுள்ளன.



அம்முறையர்னது நாளடைவில் அருகிவந்து இப்பொழுதுள்ள நிலைமை சம்பவித்திருக்கிறது. அரசாங்கத்தினர் சிற்சில இடங்களில் கிராமப் பஞ்சாயத்துகள் ஏற்படுத்திப் பார்க்கின்றனர். அவற்றின் தன்மையும், பயனும் இப்பொழுது விளக்கமாகச் சொல்லுதற்கில்லை. இந்தியாவிலுள்ள அரசியற் கிளர்சியாளர்களில் ஒரு பகுதியார் தங்கள் கொள்கைகளில் பஞ்சாயத்துச் சபை ஏற்படுத்துவதும் ஒன்றாகக் கொண்டிருக்கின்றனர். அஃதுஎவ்வளவு பயனளிக்கு மென்பது பின்பே தெரியக்கூடும்.



அது நிற்க, கள்ளர் குலத்தினர்க்குப் பஞ்சாயத்தும் , நாட்டுக் கூட்டமும் தொன்று தொட்டுள்ள வழக்க மேயாதலின் அவர்கள் மீண்டும் அவைகளைக் காலத்துக்கேற்ற திருந்திய முறையில் ஏற்படுத்தி நடத்திக்கொண்டு வருவது எளிதேயாகும். அவ்வாறு நடத்திவரின் அவர்கட்கும், நாட்டிற்கும் எவ்வளவோ நன்மையண்டு. அரசாங்கத்தினரும், பிறரும் அவற்றை ஆதரிக்கவே கடமைப் பட்டிருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் ஒற்றமையே இன்றியமையாதது.



இனி, நாடு காவலின் இயற்கையை சிறிது விளக்குதும்



கள்ளர் குலத்து இப்பொழுது அரசராயும், குறுநில மன்னராயும் உள்ளாரது காவல் இங்கே எடுத்துக் காட்ட வேண்டுவதன்று. ஏனைய நாட்டாமைக்காரரை பற்றியே இங்கு கூறவது. இன்னோர் பண்டு அரசராயும், குறுநில மன்னராயும் விளங்கி இருந்தமையாலும் அம்மைக்காலம் வரையில் குறுநில மன்னர்களாய் இருந்திருத்தலாலும் இவர்களது செல்வாக்கிற்கு பிற வகுப்பினர் பெரிதும் கட்டுப்பட்டிருக்கின்றனர்.



ஒவ்வொரு நாட்டாமைக் காரர் அல்லது அம்பலக்காரர் காவலில் பற் பல ஊர்கள் அடங்கியுள்ளன. உதாரணமாக தஞ்சை ஜில்லாவின் மேற்கு பக்கத்தில் உள்ளவர்களில் காங்கய அம்பலக்காரரை முதன்மையாகக் கூறலாம் . அவர்கட்கு சென்னப்பட்டினம் வரையில் காவற் கிராமங்கள் இருந்தன என்பர். அடுத்து, ராயமுண்டார் , சோழகர், சோழங்கதேவர், மேல்கொண்டார், நாட்டரையர், சொம்பியமுத்தரசு, வன்னிமுண்டார், கொடும்புராயர், கண்டியர் முதலானவர்களைக் கூறலாகும்.



 இதிலிருந்து இன்னார்க்கு இன்னின்ன கிராமங்கள் என இவர்கள் பங்கிட்டுக்கொண்டிருந்தனர் என்பது விளங்கும். காவர் கிராமம் என்பதில் இவர்களுடைய உரிமையும், கடமையும், என்னவென்று பார்ப்போம். ஓர் அரசனுக்கு குடிகள் வரிசெலுத்துவது போன்றே கிராமத்தார்கள் இவர்கட்கு ஆண்டுதோரும் வரி செலுத்துவர். வரி தனித்தனியாவேனும், கிராமத்தார் ஒன்று சேர்ந்து மொத்தமாக வேனும் செலுத்துவதுண்டு. மற்றும் அம்பலக்காரர் வீட்டில் கல்யாணம் முதலிய நடக்குங்காலங்களில் காணிக்கை செலுத்துவதுண்டு.



இவ்வுரிமையை பெற்றுக்கொள்ளும் அரசு காவலர் தமது காவலில் உள்ள ஊர்களில் எவ்வகை களவும், கொள்ளையும், நிகழாமல் பார்த்துக்கொள்ளும் கட்டுப்பாடுடையர். களவு நிகழாமல் பார்ப்பதென்றால் தாம் சென்று காத்து நிற்பதில்லை; ஆட்களை அனுப்பி காப்பதும் இல்லை. தம் வலிமையாலும் ஆணையாலும் பாது காப்பாராவர். இன்னாருடைய அரசு காவலில் உள்ள ஊர் என்று தெரிந்தால் திருடர்கள் அவ்வழிச் செல்லமாட்டார்கள். ஒரு கால் ஏதேனும் களவு நிகழ்ந்து விடின் கிராமத்தார் அம்பலக்காரருக்கு செய்தி தெரிவிப்பர். அம்பலக்காரர் தம் ஆட்களை பல இடங்களுக்கு அனுப்பி களவு போன பொருளை எவ்வாற்றாலேனும் மீட்டுக் கொடுப்பர்.



 சில சமயங்களில் அம்மபலக்கார் தம் கைப்பொருள் செலவு செய்து மீட்க நேரும். இதில் கிராமத்தார்க்கு எவ்வளவு நன்மையிருக்கிறதென்று பாருங்கள். சில சமயங்கள் அரசு காவலர் சிலர் தவறான வழிகளில் நடத்தலும் நிகழக்கூடியதே. அது குறித்து அம்முறையே வெறுக்கத்தக் கதாகது. தற்காலத்தில் நாட்டின் சாதன பாது காப்புக்கு போலீஸ் படை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நூற்றில் 90 ஊர்களுக்கு அதன் சம்பந்தமே இல்லை. அவ்வூர்களில் ஏதேனும் நிழந்து விட்டால் அவர்கள் நகரங்களில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவிக்க , அன்னோருத்தரைவைப் படிப்படியாகப் பெற்றுப் போலீசுக்காரர் வந்து பாத்து ஏதேனும் எழுதிக் கொண்டு போகின்றனர்.



 இதில் எவ்வளவு நம்மையை நாம் எதிர் பார்க்கமுடியும்? இதனோடு ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுதுதான் பழைய அரசு காவலின் பயன் விளங்கா நிற்கும் . அம்பலகாரர்கட்கு அன்னோர் காவலுட்பட்ட கிராமத்து மக்கள் தாம் ஆண்டுதோறும் செலுத்தும் வரி முதலியவற்றைக் குறிப்பிட்டுப் பாட்டயங்களும், முறிகளும் எழுதிக் கொடுத்திருக்கின்றனர் அரசாங்கத்தினர் அவற்றில் பல பட்டயங்களைக் கைப்பற்றி விட்டனரென்றும், பட்டயம் பெற்றிருந்த சிலரிடம் அவைகளை வாங்கிக்கொண்டு அவர்கட்க உபகாரச் சம்பளம் கொடுத்து வந்திருக்கின்றன ரென்றும் அறிகின்றோம்.



தாங்கள் பரம்பரையாக அடைந்து வந்து வருவாயை இழந்த காரணத்தால் அம்பலகாரரிற் சிற்சிலர் தத்தம் பெருந்தன்மையை இழக்கவும் நேர்ந்தது. இப்பொழுது பெரும் பான்மை அரசு பாவர் ஒழிந்துவிட்டது. சிற்சில இடங்களில் பழமையை நினைவுகூர்ந்து, அன்புபள்ளி ஒருவகையான சம்பந்தம் வைத்துக்கொண்டிருக்கின்றனர். இனி, அம்பலகார்கள் அரச காவல் முறையை நாடுவது பொருத்தமாகத் தோன்றவில்லை,



இவர்கள் தம்முடைய நிலங்களை நன்கு பயிரிட்டுத் தம் ்உழைப்பினார் வருகின்ற பொருள் கொண்டு தம்ட் வாழ்க்கையை நடாத்தி ஏனையர்க்கும் இயன்ற உதவிசெய்து கொண்டு அறநெறியில் நிற்பார்களாயின் எவ்வளவோ சீரும் சிறப்பும் எய்துவார்கள். பழைய நாளில் இவர்கள் அரசு காவல் முறி பெற்றமைக்குச் சில சான்றுகள்் காட்டி இவ்வதிகாரத்தை முடிப்போம். பினவருபவை, விணணனூர்ப் பட்டி, திருவாளர் மு. கந்தசாமிச் சோழங்க தேவர் அவர்களிடமிருந்து எமதருமை மாணவர் திரு. வீ. உலகதாசக் கொடும்புராயர் வாயிலகக்கிடைத்த பழைய (ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளின் முந்திய ) ஏடுகளிற் கண்டவை:-




1. ‘ஈசுவர u ஆனி t 152 வாலிகொண்டாபுரம் சீமை வெண்பா னாட்டில் கூரையூரைச் சேர்ந்த வடவின்னம் பூண்டியிலுக்கும் இருசப்ப நாயனார், முத்துக் கருப்ப உடையார் நாங்களிருவரும் ஏரிமங்கல நாட்டில் விண்ணனூர்ப்பட்டியிலிருக்கும் பலபத்திரச் சோழகனார் குமாரர் குஞ்சான் சோழகனார்க்கு மேன்காவர் பொருப்பு முறிகொடுத்தப்படி .




முறியாவது வடவிண்ணம் பூண்டி மாகாணத்தில் ராயத்துடையார் கிராமம் உட்பட்ட நம்முடைய கிராமம் 12 . இந்த பன்னிரண்டு கிராமத்துக்கு ம் வருடம் ஒன்றுக்குப் பொருப்பு கெட்டி 12 பொன் கொடுத்துக்கொண்டு வருவோமாகவும். இந்த மேன்காவல் கல்லுங் காவேரி புல்லும் பூமி உள்ளவரை ஆண்டு அனுபவித்துக் கொண்டு சுகத்திலே இருப்பீராகவும் .



2. அக்ஷய uதை t 72 முத்துலிங்க ரெட்டியார் கிராமமான துறைமங்கலம் அகரங்குடியான (பொளை) ? துறைமங்கலத்தில் இருக்கும் லெட்சுமணரெட்டியர் நல்லப்ப ரெட்டியார், காளத்தி ரெட்டியார், எறமரெட்டியார், பூசாரிசின்னத்தம்பி உடையார், கலிதீர்த் உடையார், ரெட்டை பச்சை உடையார், அகரத்தில் இருக்கும் மகாஜனங்கள் கொண்டையா, நரசைய்யா, லிங்கய்யா, மன்னக்கோன், மறவைக்கோன், பெருச்சிக்கோன் நாங்கள் அனைவரும் ஏறிமங்கள நாட்டிலிருக்கம் கருத்த காங்கையர் , வேலாயுத சோழகர் இவர்களுக்கு மேன் காவல் முறிஎழுதிக் கொடுத்தோம் .



இதற்கு வருடம் ஒன்றுக்கு பொருப்பு மதுரை சக்கரம் 10 இந்த 10 பொன்னுக்கு கருத்த காங்கயர் பாதிக்கு 5 பொன்னும் வேலாயுத சோழகர் பாதிக்கு 5 பொன்னம் வருஷா வருஷம் கொடுத்துவருவோமாகவும். இந்த படிக்கு சம்மதித்து நாங்கள் அனைவரும் காவல் முறிகொடுத்தோம்.



சாக்ஷிகள்:- சிறுவாச்சூர் நல்லப்ப ரெட்டியர், பெருமாயிலூ நல்லப்பரெட்டியர்… .நாட்டுக்கணக்கு ரெங்கநாதபிள்ளை



3. தாது u வைகாசி t 132 ஏறிமங்கல நாட்டிலிருக்கும் கருத்த காங்கைய அம்பலக்காரர் கீழத் துவாகுடியைச் சேர்ந்த செங்கிப்பட்டியிலிருக்கும் ஓந்தையா மேல்கொண்டார் அம்பலக்காரர், கருவிப்பட்டியிலிருக்கும் ராமையா மேல்கொணடார் அம்பலக்காரர் இவர்களுக்கு கூகையூர்ச் சீமை நாட்டார் செகநாத உடையார் மற்றும் ்உள்ள உடையார் கிராமத்துக் குடியானவர்கள் ஆகிய நாங்கள் மேன்காவல் பட்டையம் எழுதி கொடுத்தோம்.



 மேன் காவலாவது கூகையூர், மாமந்தூர், வீரபயங்கரம், கருத்துளங்குறிச்சி இந்த கிராமம் நான்குக்கும் பொருப்பு மதுரைச்சக்கரம் பொன் 20. செந்து அளம்பளம் , கிருஷ்ணாபுரம், பெருமாள் பாளையம், சித்தேரி, நரையூர், வடபாதி, அரசங்குடி, சிறுபாக்கம், உறத்துர், திருவலந்துறை, பசும்பலூர், பாதாங்கி, ஐயனார்பாளையம், பில்லாங்குளம், சிறு நிலா, பெறுநிலா, பட்டாக்குறிச்சி, வடகரைப் பாதி, மாவிலிவகை, ஆண்டியமடம், ஆகிய இருபது கிராமத்துக்கு ம் பொருப்பு மதுரைச் சக்கரம் பொன் 90. இந்த 20 கிராமம் உட்பட கிராமம் 24 க்கும் பொருப்பு மதுரைச்சக்கரம் பொன் 10. இந்தப்படிக்குச் சம்மதித்து மேன்காவல் பட்டயம் கொடுத்தோம். . . . .



இதற்குச் சாட்சி:- சிகம்பூர் பெரியஉடையார், சிறுமதுரை திருமேனிப் படையாச்சி




ஆறாம் அதிகாரம்




நன்மக்கள், தற்கால நிமை, சீர்திருத்தம் :






கள்ளர் அல்லது அரையர் குலத்தவர் அரசராயும், குறுநில மன்னராயும், அமைச்சராயும், படைத்தலைவராயும் தொன்று தொட்டு இருந்து வந்திருப்பது முன்பு காட்டிய வரலாறுகளானே அறியலாகும், இங்ஙனமே சிறந்த பக்தர்களும், ஞானிகளும், புலவர்களும் , வள்ளல்களும் ஆக எண்ணிறந்த பெரியோர்கள் இக்குலத்தில் இருந்திருக்கின்றனர்.



பெரிய புராணத்திற் கூறப்பட்ட திருத்தொண்டர்களில் கூற்றுவர், நரசிங்கமுனையரையர், ஐயடிகள் காடவர்கோன், கழற்சிங்கர், மெய்ப்பொருளார் ஆகிய ஐவரும் இக்குலத்துக் குறுநிலமன்னராவர், திருமால் அடியாருள் ஒருவரும், பெரிய திருமொழி முதலிய ஆறு சிறந்த பிரபந்தங்களியற்றி நான்கு கவிப்பெருமாள் என்னும் பட்டம் பெற்றவரும், திருவரங்கத்திற் பல திருப்பணிகள் இயற்றிய பெரியாருமாகிய திருமங்கையாழ்வார் இவ்வகுப்பினரென்பது பிரசித்தம்.



 இவர் திருமங்கை யென்னும் நாட்டிலே தோன்றிய சிற்றரசராகலின் திருமங்கை மன்னன் எனவும் கூறப்படுவர். இவருடைய பாசுரங்களினால் இவருக்குரியவாக அறியப்படுகின்ற பரகாலன், கலிகன்றி முதலிய பெயர்களிலிருந்து இவருடைய வீரமும், நேர்மையும் முதலியன நன்கு விளங்கும். நல்லறிவுடையார், இவரது வரலாற்றிற் கலந்துள்ள புனைந்துரைகளை நீக்கி உண்மை காணற்பாலராவர். இவ்வாழ்வாரது பெருமை அளவிட்டுரைக்கற்பாலதன்று, திருவேங்கடத்தை யாண்ட முனித்தொண்டைமானுக்குத் திருவேங்கடமுடையான் சங்காழி நல்கியதாயும், அத்தொண்டைமான் திருமகளாராய அலர்மேல் மங்கையாரைத் திருமணஞ் செய்த தாயும் திருமலை மான்மியம் கூறுகின்றது.



முனையதரையன் என்பான் ஒருவன் வீரசோழனக்குத் தண்டத்தலைவன் என்றும், திருமால் பத்தியிற் சிறந்தவனென்றும் திருக்கண்ணபுர புராணம் கூறுகின்றது. முனையதரையன் பொங்கல் என்று இவன் பெயரால் வழங்கும் திருவமுதே இவனது பத்தியின் மேன்மையைப் புலப் படுத்தும். காடுவெட்டியின் சிவபத்தி மேன்மையைத் திருவிளையாடற் புராணத்தால் அறியலாகும். இவ்வரலாறு முன்பு கூறப்பட்டுளது. இக்குலத்துக் கருணாகரத் தொண்டைமான் என்பான் ஒருவன் அரசற்கு அமைச்சனாயிருந்து, திருவாரூரில் தியாகேதஸ்சரது திருவடியில் கலந்தான் என்று கருணாகரத்தொண்டைமான் என்பதும் ஒன்றாக இருத்தலினாலேயே அவனது அன்பு முதிர்ச்சியை அறியலாகும்.




‘அருணயத் தொண்ட ரனைவருந்தா னென்னுங்

கருணையைப் பார்முழுதுங் காணத் - திருவடிக்கீழ்
மன்னுங் கருணா கரத்தொண்டை மான்வந்தான்
என்னுந் திருச்சின்னத் தெம்பிரான்.’




என்று திருவாரூருலாக் கூறுவது காண்க. திருவரங்கத்தில் சிற்றரசராயிருந்த அகளங்க நாட்டாள்வார் என்பார் இராமாநுசரது சீடரென்றும், சிறந்த பக்தெரென்றும் முன்பே காட்டியுள்ளாம்.




முத்தரையர், முனையதரையர்,செழியதரையர், பல்லவதரையர் என்றார் போலப் பல பட்டப்பெயர்கள் தரையர் என்னம் பெயருடன் சேர்ந்து கள்ளர்களுக்கு வழங்குகினறனவென்றும், ‘இரவலவா……திருவேங்கட நாதா’ ‘தேன்பிறந்த…….பிறந்தான் முன்’ என்னும் பட்டுக்களாற் குறிக்கப்படும் திருவேங்கடநாதர் என்னும் வள்ளல் கள்ளர் குலத்தில் செழியதரையர் என்னும் பட்டமுடையவரென்றும், பாண்டி நாடு பஞ்சமுற்ற பொழுது சங்கப்புலவர்களை வரவழைத்து ஆதரித்தவனும், சோழ நாட்டவனும் ஆகிய ஆலஞ்சேரி மயிந்தன் என்னும் உபகாரியும் இக்குலத்தவனே யென்றும், இக் குலத்தவைரைக் குறித்து மூவரையர் வண்ணம் என்பதொரு பிரபந்தம் உண்டென்றும், இக்குலத்தவரில் பல சிறந்த தமிழ்ப்புலவர்களுண்டென மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் அடிக்கடி பாராட்டிக் கூறுவதுண் டென்றும் மகாமகோபாத்தியர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள் இளங்காடு நற்றமிழ்ச்சங்கத்தின் ஓர் ஆண்டு விழாவில் தலைமை வகித்த பொழுது கூறியுள்ளார்கள்.



நன்னூலின் தொல்லுரையாளரான மயிலை நாதரால் இந்தப் பத்தெச்சமும் புவி புகழ் புலமை அவிநய னூலுட் டண்டலங் கிழவோன் றகைவரு நேமி யெண்டிசை நிறை பெயர் இராச பவித்திரப் பல்லவதரையன் பகர்ச்சி யென்றறிக’ என்று சிறப்பித் தோதப்பெற்ற அவிநய உரையாசிரியராகிய பல்லவதரையரும், அகப்பாட்டுரைகாரரான பால்வண்ணதேவன் வில்லவதரையனார் என்பாரும் கள்ளர் குலத்தினரென்பது தேற்றம்.



மிக அணித்தாய காலத்திலும் இவ்வகுப்பில் கற்றோர் பல் இருந்திருக்கின்றனர். தத்தனூரிலிருந்த அண்ணாசாமி நாடாள்வார் திருவானைக்கா மீது ‘ திருவெண்ணாவற்கோவை’ என ஓர்அகப் பொருட்கோவை பாடியுள்ளார். தத்தனூரிலிருந்த கனகசபைச் சர்க்கரையப்ப நாடாள்வார் ‘பிம்பைக் கோவை’ என ஓர் அகப்பொருட்கோவை பாடியுள்ளார். செங்கரையூரிலிருந்த குழந்தைக் களத்து வென்றார், ‘பஞ்சாட்சா மும்மாலையந்தாதி’ என ஓர் அந்தாதி பாடியள்ளார்.



அதற்கச் சாத்துக்கவியளித்த சோடசாவதானம் வேலாயுதக் கவிராயர், சோடசாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் முதலிய புலவர்கள் களத்து வென்றாரைப் பெரிதும் புகழ்ந்து பாடியிருக்கின்றனர். பிரம்பூரிலிருந்த நடராசச்சர்கரையப்ப நாடாள்வார் ‘திருவையாற்றந்தாதி’ என்னும் பிரபந்தம்பாடி, மாகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் முன்பு படித்ததுக்காட்டி



பிள்ளையவர்களாலும், தியாகராசச் செட்டியாரவரகளாலும் சாத்துக்கவியளிக்கப் பெற்றனர்.



மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடியது:
மறைமுடிவாழ் மாதேவன் வண்செவிக்கண் வாக்கு
நறையெனநூ லோர்ந்தருட ராசன் –பிறைநுதலார
கையாற்றந் தாதிவர்பூங் கஞ்சந் திகழ்கழனி
யையாற்றந் தாதியரைத் தான்.




தியாகரரசச் செட்டியாரவர்கள் பாடியது:




மன்னுதிரு வையாற்றின் வாழ்பரம னார்ச்செவிக்குத்
துன்னு மருளுமையின் சொல்லாகும்– நன்னூல்கள்
நந்தா தினிதோர் நடராசன் சொலயமக
வந்தாதி யென்னு மது.




பூண்டி வீரையா வாண்டையார் திருப்பூவண நாதர் மீது தோத்திரங்கள் பாடியிருக்கினறனர். இளங்காடு, உறத்தூர், கடையக்குடி, நடுக்காவேரி, முதலிய இடங்களில் தமிழ் புலமை யுடையோர் சிற்சிலர் இருந்திருக்கின்றனர். சில ஆண்டுகளின் முன் அன்னம்பட்டீயத்திற்கு விளக்கம் எழுததி ‘தருக்க விளக்கம்’ என வெளிப்படுத்திய சோமசுந்தரம் பிள்ளையும் இவ்வகுப்பினரே. பொதுவாக இக்குலத்தவர் தமிழிலே அளவு கடந்த ஆர்வமும் பற்றுமுடையர் என்று கூறுதல் பொருந்தும்.




மூன்றாண்டின் முன் இவ்வுலகில் புகழுடம்பைவைத்துச் சென்றாரும், கல்வியிலும். வண்மையிலும், நற்குணத்திலும் மிக்காரும், அரசஞ்சண்முகனார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், ஜி. சதாசிவவிஞ்சைராயர், சர்க்கரை இராமசாமிப் புலவர், மு.ரா.அருணாசலக்கவிராயர், கோபால கிருஷ்ணையர், வி. சாமிநாதப்பிள்ளை முத்துசாமி ஐயர்,சேதுராம பாரதியார் முதலிய எண்ணிறந்த புலவர்களாற் புகழ்ந்து பாடப்பெற்ற பெருமை வாய்ந்தாரும் ஆகிய அரித்து வாரமங்கலம் கோபாலசாமி ரகுநாத இராசாளியார் இக்குலத்தவரென்பது யாவரும் அறிவர். சோழவந்தான் சண்முகம்பிள்ளையவர்களால் எழுதப்பட்ட தொல்காப்பியப் பாயிர விருத்தி என்னும் புத்தகம் இராசாளியாரவர்களால் பதிப்பிக்கப்பட்டதென்பதை அதன் முகவேட்டினின்றும் அறியலாகும். மற்றும் பிள்ளையவர்கள் அப்புத்தகத்தில் நன்றி கூறல் என்னும் பகுதியில் இராகாளியாரைக் குறித்துக் கூறியிருப்பது நோக்கத்தக்கது. அது,




” பின்பு சுவாமிகள் கட்டளைப்படி முறையே பாயிரவிருத்தி முதலாயின அச்சிடுமாறு கருதிக் குரோதி வருடம் தை மாதம் தஞ்சை சென்றேன். சென்று வேலை தொடங்கிய சினாளுட் சுரங்கண்டு உணவொழித்துக் கிடைப்படுத்திற்றாகலின் அச்சிடு முயற்சியும் நின்றது. அக்காலை, எனக்கு மிக்க நண்பினரும், வடமொழி, தென்மொழி ஆங்கில நூலாராய்ச்சியே பொழுது போக்கும் விளையாட்டாகவுடையாரும், பிரபு சிகாமணியும், வள்ளலும் ஆகிய அரித்துவாரமங்கலம் மகா ராரா ஸ்ரீ வா. கோபாலசாமி ரகுநாத ராசாளியாரவர்கள் என்னைத் தம்மூர்க்கழைத்துச் சென்று, பல நன்மருத்துவரைக்கொண்டு மருந்தளித்தும், வேதமுணர்ந்த அந்தனரைக் கொண்டு கிரக சாந்தி முதலாயின செய்தும் பிணி தீர்த்து, வெண்பொற்காசு முந்நூற்றின்மேலாக என்னிமித்தம் செலவு செய்ததுவுமின்றி, அப்பொழுது தேகவன்மை யெனக்கின்மையால் தமக்குள்ள இன்றியமையாதனவாகிய உலகியல் பலவற்றையுங் கருதாமல் தாமே பரிசோதித்தும், பிரைக்கொண்டு பரிசோதிப்பித்தும் இப்புத்தகத்தைப் பதிப்பித்து முடித்துப் பேருதவிபுரிந்தார்கள்.




அவர்கள் செய்த உதவியேயன்றிக், குணமாட்சியும் பன்னாளுடனிருந்து பழகித் தெரிந்தேனாகலின் அவர்களது நாட்பை எழுமையும் மறப்பேனல்லேன்” என்பது