செவ்வாய், 22 மே, 2018

மனோரமா கிளாக்குடையார்


"பெண் சிவாஜி " மனோரமா கிளாக்குடையார்

ஆச்சி மனோரமா கிளாக்குடையார் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்து தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார்.

இவரது இயற்பெயர் கோபிசாந்தா. இவரது பெற்றோர் காசி கிளாக்குடையார் மற்றும் ராமாமிர்தம். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர்  பகுதி திருவாரூர் மாவட்டத்திலுள்ள ராஜமன்னார்குடியில் வசதியான கள்ளர் குடியில் 26 மே 1937 பிறந்தவர். தந்தை ஒரு சாலை ஒப்பந்தக்காரராகப் பணியாற்றியவர். தந்தை காசி கிளாக்குடையார் மனோரமாவின் தாயின் தங்கையை இரண்டாம் தாரமாகத் திருமணம் புரிந்தார். இதனை அடுத்து கணவனால் புறக்கணிக்கப்பட்ட இராமாமிருதம் மனோரமாவுடன் வறுமையின் காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார். 6 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அங்கு அவர்கள் பலகாரம் சுட்டு விற்பனை செய்து வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.




தனது 12ஆவது அகவையில் நடிப்புத் தொழிலில் இறங்கினார். "பள்ளத்தூர் பாப்பா" என அழைக்கப்பட்டார். நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு "மனோரமா" எனப் பெயர் சூட்டினர்.


ஆரம்பத்தில் "வைரம் நாடக சபா" நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அக்காலத்தில் புதுக்கோட்டையில் எஸ். எஸ். ராஜேந்திரன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனோரமா பி. ஏ. குமார் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

மனோரமாவின் திறமையை அறிந்துகொண்ட இராசேந்திரன் தனது "எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்" சேர்த்துக் கொண்டார். மனோரமா முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார். பின்னர் ராஜேந்திரன், தேவிகா நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் நடித்தார். ஆனால் இத்திரைப்படம் வெளிவராமல் பாதியிலேயே நின்று விட்டது.


இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.


மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். ராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். 


இவர்களுக்கு பூபதி எனும் மகன் பிறந்தார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்  பெருமான்  பெயரில் உசிலம்பட்டியில் கல்லூரி நிறுவப்பட்ட  சமயத்தில் தலைவர் ஐயா மூக்கையாத் தேவர்களின்  வேண்டுகோளை ஏற்று உசிலம்பட்டி  சென்று நாடகம் நடத்தி  கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி சேர்த்து கொடுத்தவர் மனோரமா அவர்கள் தலைவர் மூக்கையாத் தேவர் எவ்வளவோ   கூறியும், சம்பளம் வாங்க  மறுத்ததுடன், ''இது எனது கடமை''ஆச்சி  மனோரமா எனக்  கூறி   பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமானின் திரு உருவத்தை  வணங்கி , திரு நீற்றையும்   எலுமிச்சம் பழத்தையும் பிரசாதமாக எடுத்துக் கொண்டு  திருப்தியுடன்  சென்றிட்ட பெருந்தகை  ஆச்சி  மனோரமா.


* 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.
* பத்ம ஸ்ரீ விருது – 2002 ஆம் ஆண்டு
* தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை -புதிய பாதை
* 1988 தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது மனோரமா தனது 78 ஆவது அகவையில் 10 அக்டோபர் 2015 இயற்கை எய்தினார்.

சிவாஜி மன்றாயர்  - மனோரமாவின் அண்ணன்-தங்கை பாசம் :-

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனும், மனோரமாவும் திரையுலகில் அண்ணன்-தங்கையாக வாழ்ந்தனர். சிவாஜிகணேசன் நடித்த பல படங்களில் அவருக்கு தங்கையாக மனோரமா நடித்து இருக்கிறார். நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் இருவரும் உடன்பிறவா அண்ணன்-தங்கையாக இருந்தார்கள்.


இதுபற்றி ஒருமுறை மனோரமா கூறியதாவது:-


‘‘எனக்கும், சிவாஜிக்கும் உள்ள உறவு, அண்ணன்-தங்கை உறவு. இதை உண்மை என்று நிரூபிப்பது போல் என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது.



எனக்கு எல்லா வகையிலும் பக்கபலமாக, மிகப்பெரிய துணையாக இருந்தவர், என் தாயார். அவர் திடீரென்று இறந்து போனார். என்னால் துயரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தகவல் அறிந்ததும் முதல் ஆளாக என் வீட்டுக்கு வந்தவர், அண்ணன் சிவாஜிதான். என்னை தேற்றியதுடன், எங்கள் குடும்பத்தினர் அனைவரும் நெகிழ்ந்து போகும்படி ஒரு செயலை செய்தார்.

எங்கள் குடும்ப வழக்கப்படி, தாயார் மறைந்தால் முதலில் மகன்தான் கோடித்துணியை தாயார் உடம்பில் போர்த்த வேண்டும். எனக்கு உடன் பிறந்த சகோதரர்கள் யாரும் கிடையாது. இதை நினைத்து நான் அழுது கொண்டிருந்தபோது, அண்ணன் சிவாஜி, என் கூடப்பிறந்த அண்ணனாக விலை உயர்ந்த ஒரு வெண் பட்டுப்புடவையை என் தாயாரின் உடம்பில் போர்த்தினார்.

என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘‘அண்ணே, இந்த தங்கச்சி மீது உங்களுக்கு இத்தனை பாசமா அண்ணே’’ என்று கதறி அழுதேன். ‘‘என்னைக்குமே நீ எனக்கு தங்கச்சிதாம்மா’’ என்று என்னை தேற்றினார்

வியாழன், 3 மே, 2018

கவிஞானி டாக்டர் அ. மறைமலையான் மண்கொண்டார்



கவிஞானி டாக்டர் அ. மறைமலையான் தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு , கண்ணன்தன்குடியில் 08 .07 .1932 ஆண்டு ஐயா சு.து. அய்யாசாமி மண்கொண்டார், முத்தம்மாள் அம்மையாருக்கு மகனாக பிறந்தார் .

இவர் 1953 ஆண்டு முதல் தனது எழுதுகோல் பயணத்தை தொடங்கினார். தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்ற பாவலர். பேரறிஞர் அண்ணா விருது, கலைமாமணி விருது பெற்றவர்.


இவர் எழுதிய நூல்கள் 50 க்கு மேலே. இவர் தமிழக அரசிடம் இருந்து 'ஒரு தமிழ் பூ தவிக்கிறது" , அண்ணாவின் பெருவாழ்வு என்ற நூல்களுக்கு பரிசும், காட்டு மல்லிகை என்ற நூலிற்கு அனைத்திந்திய வானொலி நாடக போட்டியில் பரிசும் பெற்றுள்ளார்.


நிலவில் பூத்த நெருப்பு என்ற அறிவியல் புதினம், அன்னை தெரசா வாழ்கை வரலாறு, 'ஒரு தமிழ் பூ தவிக்கிறது' காவியம் கல்லூரி, பள்ளி மாணவர்க்கு பாட நூல்களாக உள்ளது.

போர் வாள், போல்ட் இந்தியா, நவமணி நாளிதழ்கள் தலையங்க ஆசிரியர், Guiding Light ஆங்கில இதழின் ஆசிரியர், மக்கள் பாதை மலர்கிறது என்ற மாத இதழின் ஆசிரியராக இருந்தார்.


தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 1988 இல் நடைபெற்ற உலக கவிஞர் மாநாட்டில் தாம் ஆங்கிலத்தில் எழுதிய 'TREES ARE MY TEACH " என்னும் கவிதைக்கு பாராட்டுப்பெற்றவர்.


உலக தமிழ் எழுத்தாளர் பேரவை, மக்களாட்சி பாதுகாப்பு இயக்கம் போன்ற அமைப்புகளின் தலைவர். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை நாடுகளுக்கு இலக்கிய பயணம் மேற்கொண்டு ஆய்வுகள் செய்தவர்.


பாவேந்தர் விருதுப் பாவலர் அ.மறைமலையான் ஒரு நிகழ்வில் பேசும்போது - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தான் முதல் புரட்சி நடிகர் என்றார். அப்பொழுது எம்ஜிஆர் பற்றாளர்கள் அதனை எதிர்த்துக் கேள்வி கேட்ட வேளையில் - உங்கள் எம்ஜிஆர் மூன்றாவது புரட்சி நடிகர் - எனப் பட்டென்று பதிலளித்தார். அப்படியானால் இரண்டாவது புரட்சி நடிகர் யார் - என ஆவலோடு கேட்டனர். எம்ஆர்இராதா தான் என்றவுடன் ஆவேசப்பட்டவர்கள் ஆமோதித்தபடி அமைதியாகி விட்டனர்.