புதன், 20 டிசம்பர், 2017

புற்றில்கழிந்தான், மண்வெட்டியில்கூழ்வாங்கி மற்றும் பாப்புரெட்டி

சில வேறு சமூகத்தை சேர்ந்த சில தற்குறிகள் நமது கள்ளர் பட்டங்களான புற்றில்கழிந்தான் மற்றும் மண்வெட்டியில்கூழ்வாங்கி பற்றி கேவலமாக சொல்லிவருகிறார்கள்

அந்த தற்குறிகளுக்கு சொல்லும் விளக்கம் :

புத்திகழிச்சசோழன்

பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் புத்திகழிச்சசோழன் (அறிவு மிகுந்தசோழன்)  புத்தூர் என்னும் தேவார சிவ தலத்தையும், புத்தபுரம், புத்தகுடி, புத்தமங்கலம், புத்தங்கோட்டம் என்னும் ஊர்களையும் புத்தாறு என்னும் சிற்றாற்றையும் இவன் ஆட்சியில்  உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் புத்திகழிந்தான்  என்னும் பட்டங்களை கொண்டனர். பின்பு இது மருவி புற்றில்கழிந்தான் என்று அழைக்கப்பட்டுவருகிறது.

தமிழ் அகராதியில் :

புத்திகழிச்சசோழன் : புத்தி (அறிவு) + கழி (மிகுந்த) + சோழன்

(கழிந்தான் என்றால் மலம் கழிப்பது என்று நினைத்த அவர்களின் அறிவு)

மண்வெட்டிக்கூழ்வாங்கி :

செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கூழைமன் சோழன் பூமியில் மண்ணை வெட்டி, ஆராய்ந்து பொன்மணலைக் கண்டறிந்து உருக்கிப் பொற்கட்டி (பொற்பாளம்) செய்தவன். இவன் காலமுதல் பூமியில் சுரங்கம் அமைத்து தங்கம் எடுக்கும் வழக்கம் உண்டாயிற்று. மண்வெட்டி மூலம் பொன்மணலை அள்ளியதால் மண்வெட்டிகூழ்வாங்கி என்ற பட்டம் பெற்றான். (கூழ் என்றால் பொன் என்று அர்த்தம் ) இவன் மணலை அள்ளியதால் கூழையாறு என்ற ஒரு சிற்றாரும் உருவாயிற்று. இவன் மரபினர் கூழையன், கூழாக்கி, மண்வெட்டிக்கூழ்வாங்கி (மண்வெட்டியில்கூழ்வாங்கி) என்ற பட்டங்களை பெற்றனர். மண்வெட்டியில் கூழ்வாங்கி திரிபு பட்டங்களை கொண்டுள்ளனர்

.Cuzam Cocom AD 1396-1401 – தமிழில் கூழம் கக்கம் > கூழன் கக்கன் என்பது செப்பமான வடிவம். ஒரு Hittite மன்னன் பெயர் Huzziya I 1530-1525 BCE – தமிழில் கூழய்யன் என்பது செப்ப வடிவம். கூழைமன் ஒரு சோழ அரசன் பெயர். கூழ்பான் தண்டலம் (திருக்கழுக்குன்றம்) ஓர் ஊர்.

Hool Cocom AD 1406-1410 – தமிழில் கூல கக்கம் > கூலன் கக்கன் என்பது செப்பமான வடிவம். இன்றும் வழங்கும் தமிழ்ப் பெயர். சிந்து முத்திரை M2141 இல் பதிவாகி உள்ளது, IsD பக். 230.

தமிழ் அகராதியில் :

கூழ்
kūḻ   n. குழை¹-. kūra. [T. kūḍu,K. M. kūḻ, Tu. kūḷu.] 1. Thick gruel, porridge,semiliquid food; மா முதலியவற்றாற் குழையச்சமைத்த உணவுவகை. (திவா.) 2. Food; பலவகையுணவு. கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்(புறநா. 70, 7). 3. cf. kuḍ. Growing crop; பயிர் (திவா.) 4. cf. kōša. Wealth; பொருள் கூழுங்குடியு மொருங்கிழக்கும் (குறள், 554). 5. cf. kuš.Gold; பொன் (திவா.)  
கூழ்

(கூழ் என்றால் சோறு வாங்கியது என்று நினைத்த அவர்களின் அறிவு).

நாயக்கவடியார்

நாயக்கன் + வடியார்
நாயக்கன் என்பது ஒரு தலைமை உத்தியோகஸ்தன் என்பதை குறிக்கும் 

வடியார் என்பது உடையவர் என்பதை குறிக்கும்

"திறங்கொண்ட வடியார்" (தேவா).  திறம் - பெருமை - வன்மை - முதலிய எல்லாம் உடையவர். 

வடியார் கரம் - அழகு பொருந்திய கை

நாயக்கவடியார் என்பது ஒரு தலைமை உத்தியோகஸ்தர் என்பதை குறிக்கும் என்னும் இதனை தெளிவாக ஆராய்ந்தால் பல உயரிய பொருள் தரும். ஆனால் நாயக்கவடியார் என்பதனை  நாய் கடி வாங்கியவர் என்று பொருள் கூறும் தற்குறிகளை என்ன சொல்வது.  

உத்திரமேரூர்க் கல்வெட்டில் ஊர்ச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிய உறுப்பினர்கள் 'திருவடியார்' எனப்பட்டனர். அவர்களைக் கொண்ட ஊர்ச்சபை 'மகாசபை' எனப்பட்டது.  

பாப்புரெட்டி :

சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பாப்பனசோழன். பாப்புநகரம் என்ற நகரத்தை உருவாக்கி தெற்குக்கோட்டை, வடக்குக்கோட்டை என்று இரு பகுதிகளாக பிரித்து இராசதானியாகக் கொண்டவன். இவன் மரபினர் பாப்படையன், பாப்பிரியன், பாப்புவெட்டி, பாப்புரெட்டி என்னும்  திரிபு பட்டங்களை கொண்டுள்ளனர். வேலூருக்கு அருகில் உள்ள பாப்புரெட்டிப்பட்டி, தருமபுரிக்கு அருகில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஊர்கள் இப்பட்டங்களின் அடியாகத் தோன்றியவைகளாகும். இவர்களின் பட்டங்கள் பார்புரட்டியார் என்ற பட்டபெயரில் இருந்து திரிந்து பல்வேறு திரிபு பெயர்களை கொண்டுள்ளது. பார்புரட்டியார் என்றால் தம் வீரத்தால் பகைவரை தலைகீழாக புரட்டக்கூடிய ஆற்றல் மிக்கவர் என்று பொருள் படும். (மண்ணுக்காக நடந்த மிகப் பெரிய யுத்தத்தின் கதைதான் மகா பார் அதம். மகா என்றால் பெரிய, பார் என்றால் நிலம் அல்லது பூமி, அதம் என்றால் போர்)  இப்பட்டம் உடையவர்கள் திருவையாறு, திருச்சின்னம்பூண்டி, இளங்காடு, வானரங்குடி, திருச்சி, தஞ்சாவூர் முதலிய ஊர்களில் வாழுகின்றனர்.

கோ. நம்மாழ்வார் (06 ஏப்ரல் 1938 - 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவருடைய பட்டம் பாப்புரெட்டி

குறிப்பு:

இப்போது பல ஊர்கள் பெயர்கள் மருவியது. அதற்கு ஒரு உதாரணம்

தண்செய் என்பதுதான் தஞ்சை ஆனது.  இப்படி பல பட்டங்களும் மருவியது.

பழமொழி : அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்...

அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்... வள்ளல் ஆனவரை கஞ்சனாக மாற்றி சொல்வது போல தமிழ் மொழியின் உண்மை பொருள் தெரியாமல் பிதற்றி வருகிறார்கள் சில தற்குறிகள்.    

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

பிரமலைக் "கள்ளர்" வழிப்பாடும் உறவுமுறையும்

+

பிறமலை நாட்டு  கள்ளர் குலக்கோவிலும் உறவுமுறையும்

பாப்பாபட்டி நாட்டின் அங்காளி பங்காளிகள்

*  வாலாந்தூர்+ 4 ,சங்கம்பட்டி +1: ஐந்து தேவர்கள்

* கொக்குளம் - ஆறுகரை தேவர்கள்

* முதலைக்குளம் - இரண்டுத்தேவர் கூட்டம்

* மதிப்பனூர் - ஏழு தேவர் கூட்டம்

* கருமாத்தூர் செட்டிகுளம் தடியன் இரண்டு தேவர் கூட்டம்

* கருமாத்தூர் குரும்பத்தேவர் நான்கு பங்காளி கூட்டம்

* கருமாத்தூர் காக்குவீரத்தேவர் ஏழு பங்காளி கூட்டம்

* கருமாத்தூர் வின்னுலகாத்தேவர் இரண்டு பங்காளி கூட்டம்

* விளாச்சேரி - வெள்ளையத்தேவர் கூட்டம்

* கொடிக்குளம் - படிவுத்தேவர் கூட்டம்

இதுதான் ஆதி வழக்கம்

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆச்சி கிழவியை (ஆண்டாயி) குலமரபு கோயிலாக வணங்கும் பாப்பாபட்டி பத்துத்தேவர் கூட்டாத்தாரின் பங்காளி முறையுள்ளவர்கள் :

இராஜதானிக்கு அதாவது இராஜதானி உரப்பனூர்க்கு முதல் நாடாக விளங்கும் வாலாந்தூர் நாட்டினர் வாலாந்தூரில் அமைந்துள்ள அங்காள ஈஸ்வரியை கோயிலை பொதுக்கோயிலாகவும் தங்களுக்கென்று தனித்ததனி சிறுவாடு கோயில்களாகவும் வணங்கி வரும் நான்கு தேவர் கூட்டத்தினர்களான.

1. ஆரியபட்டியில் அமைந்துள்ள கல்யாண கருப்பசாமி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும் சின்னிவீரத்தேவர் வகையராக்கள்.

2.சொக்கத்தேவன்பட்டியில் அமைந்துள்ள திருவேட்டை அய்யனார் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும்
கட்டகெடாயித்தேவர் வகையராக்கள்.

3.சக்கிலியன்குளத்தில் அமைந்துள்ள பெத்தனன் சாமி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும்
வெள்ளையாண்டித்தேவர் வகையராக்கள்.

4.கன்னியம்பட்டியில் அமைந்துள்ள காமாட்சியம்மனை கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும் சின்னக்காமத்தேவர் வகையராக்கள்.

5.சங்கம்பட்டியில் அமைந்துள்ள அங்காள ஈஸ்வரி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும் மொந்தகுட்டித்தேவர் வகையராக்கள்.

6.கொக்குளத்தில் அமைந்துள்ள ஆதிசிவன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும் வெறியத்தேவர் வகையராக்கள்.

7.பன்னீர்குண்டில் அமைந்துள்ள ஆதிசிவன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும் வெறியத்தேவர் வகையராக்கள்.

8.கொக்குளத்திற்கு தெற்குபுறமாகவும் (உசிலை, மதுரை) சாலையின் வடக்குபுறமாக அமைந்துள்ள ஆதிசிவன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும் கட்டபின்னத்தேவர் வகையராக்கள்.

9.கொக்குளம் (உசிலை,மதுரை) சாலையிற்கு தெற்குபுறமாக அமைந்துள்ள ஆதிசிவன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கி வரும் கருப்பத்தேவர் வகையராக்கள்.

10.கருமாத்தூர் நாட்டின் மூனுசாமி என்று அழைக்கப்படும் மூனு கோயிலில் முதல் கோயிலான (பெரியகோயில்) கழுவநாத அய்யன், பேச்சியம்மன், விருமாண்டி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும் கொக்குள நாட்டினை பூர்வீகமாககொண்ட சேத்தூரான்தேவர் சடச்சித்தேவர் வகையராக்கள்.

11.கொக்குளத்தில் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும் கன்னித்தேவர் வகையராக்கள்.

12.கருமாத்தூர் நாட்டின் மூனுசாமி என்று அழைக்கப்படும் மூனு கோயிலில் மூன்றாவது கோயிலான கடசாரி நல்ல குரும்ப அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும்

*ஒய்யான் குரும்பத்தேவர்
*உடையான் குரும்பத்தேவர்
*பெரிய குரும்பத்தேவர்
*பேக்காத்தி குரும்பத்தேவர் எனும் நான்கு வகையராக்கள்.

13.கருமாத்தூர் நாட்டின் மூனுசாமி என்று அழைக்கப்படும் மூனு கோயிலில் முதல் கோயிலான(பெரியகோயில்) கழுவநாத அய்யன், பேச்சியம்மன், விருமாண்டி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும் இரணிய சோழத்தேவரின் மூத்த மகன் மங்கான்கழுவத்தேவர் வகையராக்கள்.

14.கருமாத்தூர் நாட்டின் மூனுசாமி என்று அழைக்கப்படும் மூனு கோயிலில் முதல் கோயிலான(பெரியகோயில்) கழுவநாத அய்யன் கோயிலின் கிளைக்கோயிலாக விளங்கும் காக்கும் வீரகருப்பசாமி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும் இரணிய சோழத்தேவரின் இளைய மக்கள் ஏழு பங்காளி வகையராக்கள்.

15.கருமாத்தூர் நாட்டின் மூனுசாமி என்று அழைக்கப்படும் மூனு கோயிலில் இரண்டாவது கோயிலான பொன்னாங்கன் வாசல் ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆங்கால அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கும் கரிசல்பட்டி ஆறு பங்காளிகளின் சகோதரி வாரிசுகளான (பிச்சம்பட்டி செட்டிகுளம்)தடியன் மக்கள் இரண்டு தேவர் வகையராக்கள்.

16.பிறமலை நாட்டின் உச்ச நீதி மன்றமாக செயல்பட்ட கருமாத்தூர் கோட்டை மந்தை கொத்தாள பெரிய கருப்பு கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும் வின்னுலகாத்தேவர் மக்கள் கேசத்தேவர்,பருசபுலித்தேவர் வகையராக்கள்.

17.கொடிக்குளத்தில் அமைந்துள்ள நல்லதங்காள் அம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும் இரண்டு படிவுத்தேவர் வகையராக்கள்.

18.நாவார்பட்டியில் அமைந்துள்ள நல்லதங்காள் அம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும் படிவுத்தேவர் வகையராக்கள்.

19.விளாச்சேரியில் அமைந்துள்ள ஆதிசிவன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும்

*பெரியவெள்ளையன்
*சின்னவெள்ளையன்
*கூனன்
*பட்டியான் வகையராக்கள்.

மேலும் தமது ஆதி வழக்கத்தை மறந்து தாய்வழி பங்காளிகளான அதாவது நலத்தா பெரியாத்தா மக்களான அங்காளிகள்.

முதலைக்குளம் :

மூனுசாமி என்று அருள் பெயர் விளங்கும் ஒச்சாண்டம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும் ஏறாபுலியாத்தேவர் மக்கள் பல்லாக்கு ஒச்சாத்தேவர்,தண்டில்ஒச்சாத்தேவர் வகையராக்கள் மற்றும் இவர்களின் சகோதர்களான

வகுறூர்ணி சந்தபட்டி :

மூனுசாமி என்று அருள் பெயர் விளங்கும் ஒச்சாண்டம்மன் காமாட்சி அம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும் பல்லாக்கு ஒச்சாத்தேவர் வகையராக்கள்.

*விக்கிரமங்கலத்தில் அமைந்துள்ள காமாட்சியம்மனை கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும் நல்லகுட்டி வகையராக்கள் .

மதிப்பனூர்:

மதிப்பனூர் அமைந்துள்ள மூனுசாமி என்று அருள் பெயர் விளங்கும் ஒச்சாண்டம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும் சீறும்புலியாத்தேவர் மக்கள் ஏழு பங்காளி வகையராக்கள் மற்றும் இவர்களின் சகோதர்களான

*மாங்காயம் கன்னியம்பட்டியில் அமைந்துள்ள மூனுசாமி என்று அருள் பெயர் விளங்கும் ஒச்சாண்டம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும் மதிப்பனூர் ஐந்தாவது பங்காளி வகையராக்கள்.

மதிப்பனூர்:

மதிப்பனூர் மேட்டுபட்டியில் அமைந்துள்ள பேச்சியம்மன் விருமாண்டி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும் மதிப்பனூர் ஏழாவது பங்காளி வகையராக்கள்.

*முதலைக்குளம்,
*வகுறூர்ணி,
*மதிப்பனூர்,
*மதிப்பனூர் மேட்டுபட்டி,

* மாங்காயம் கன்னியம்பட்டிக்காரர்கள் தமது ஆதிவழக்கத்தை மறந்து இன்று பாப்பாபட்டி பத்துதேவர் கூட்டத்தில் சம்பந்தம் பன்னுவதை அதாவது திருமணசெய்வதை மறுபரீசீலனை செய்யுமாறு கள்ளர் நாடு தன்னார்வலர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்..

இராஜதானி ஊராண்ட உரப்பனூர் வடமலை சுந்தத்தேவர் கூட்டம்

திருமங்கலம் சித்தாலை எனும் கிராமத்தின் அருகே உள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலை குலக்கோயிலாக வணங்கும் ஊராண்ட உரப்பனூரை பூர்வீகமாகக்கொண்ட வடமலை சுந்தத்தேவர் கூட்டத்தாரின் உடன் பங்காளிகளும் பங்காளி முறை உள்ளவர்களும்

இராஜதானி ஊராண்ட உரப்பனூர் இது வடமலை சுந்தத்தேவரின் பூர்வீக ஊர்ராகும் இவரது வாரிசுகள்

1)ஊராண்டஉரப்பனூர்,
2)கரடிக்கல்,
3)மாவிலிபட்டி,
4)வடபழஞ்சி,
5)தென்பழஞ்சி,
6)வெள்ளைப்பாறைப்பட்டி,
7)நடுவக்கோட்டை,
8)மீனாட்சிபட்டி

போன்ற ஊர்களில் வாழ்கின்றனர் இவர்கள் சித்தாலையில் அமைந்துள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர் மேலும் வடமலை சுந்தத்தேவர் எனும் பட்டத்திற்குரியவர்கள் மேலே கண்ட ஊர்களில் வாழும் வடமலை சுந்தத்தேவர் வாரிசுகளுக்கு மட்டுமே மதுரை மேலமாசி வீதியில் உள்ள இடையர்களுக்கு(கோனார்) பாத்தியபட்ட கிருஷணன் கோயில் பட்டம் கட்டப்படுகின்றனர்.

இராஜதானி மேலஉரப்பனூர் 

இது வடமலை சுந்தத்தேவரின் முதல் மணைவியின் வாரிசான பத்தரகாளி சுந்தத்தேவர் வாரிசுகளுக்கு பூர்வீக ஊர்ராகும் இவர்கள் சித்தாலையில் அமைந்துள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

புங்கங்குளம்

இது வடமலை சுந்தத்தேவரின்
மூன்றாவது மணைவியின் வாரிசான சடச்சி சுந்தத்தேவர் வாரிசுகளுக்கு பூர்வீக ஊர்ராகும் இவர்கள் சித்தாலையில் அமைந்துள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

நல்லபிள்ளைபட்டி 

இது ஊராண்ட உரப்பனூர்
வடமலை சுந்தத்தேவரின் வாரிசுகளில் ஒருவருக்கான பூர்வீக ஊர்ராகும் இவர்கள் சித்தாலையில் அமைந்துள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

தங்களாச்சேரி 

இது நல்லபிள்ளைபட்டியை பூர்வீகமாககொண்ட சுந்தத்தேவரின்
வாரிசுகளில் ஒருவருக்கான பூர்வீக ஊர்ராகும் இவர்கள் தங்காளச்சேரியில் அமைந்துள்ள மாரநாடு சின்னக்கருப்பசாமி
கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

மேலக்குயில்குடி

இது ஊராண்ட உரப்பனூர் வடமலை சுந்தத்தேவரின் வாரிசுகளில் ஒருவருக்கான பூர்வீக ஊர்ராகும் இவர்கள் விளாச்சேரி ஆதிசிவன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கும் நான்கு பங்காளியின் பெண்வழி வாரிசுகளாவார்கள் இவர்கள் இன்று மூன்று பங்காளிகளாக உள்ளனர் மேலும் தங்களது தாய் வழியில் சீதனமாகபெற்ற விளாச்சேரி ஆதிசிவன் கோயிலின் பிடிமண்ணை மேலகுயில்குடியில் வைத்து அங்கு சிவன் கோயில் கட்டி அதனை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்

மானூத்து

இது ஊராண்ட உரப்பனூர் வடமலை சுந்தத்தேவரின் வாரிசுகளில் ஒருவரான வெள்ளையத்தேவரின் வாரிசுகளின் பூர்வீக ஊர்ராகும் இவர்கள் மானூத்தில் அமைந்துள்ள பெத்தனசாமி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

வடமலை சுந்தத்தேவரின் தம்பிகளும் அவரது வாரிசுகளும் வாழும் ஊர்களும் கோயிலும்

கண்ணனூர்

இது ஊராண்ட உரப்பனூர் வடமலை சுந்தத்தேவரின் உடன் பிறந்த தம்பியான பெரியாண்டித்தேவரின் மகன் சோமத்தேவர் மக்கள் பரட்டையாண்டித்தேவர்,ஆண்டித்தேவர் வாரிசுகளின் பூர்வீக ஊர்ராகும் இவர்கள் கருமாத்தூர் நாட்டின் பெரிய கோயிலான கழுவநாதன் அய்யன்,பேச்சியம்மன், விருமாண்டி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

விக்கிரமங்கலம்

இது கண்ணனூர் ஆண்டித்தேவரின் வாரிசான ஐந்து ஆண்டித்தேவர்களின் பூர்வீக ஊர்ராகும் இவர்கள் கருமாத்தூர் நாட்டின் பெரிய கோயிலான கழுவநாத அய்யன்,பேச்சியம்மன், விருமாண்டி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

மானூத்து

இது ஊராண்ட உரப்பனூர் வடமலை சுந்தத்தேவரின் உடன் பிறந்த தம்பியான முதலித்தேவரின் வாரிசுகளின் பூர்வீக ஊர்ராகும் இவர்கள் கருமாத்தூர் நாட்டின் பெரிய கோயிலான கழுவநாதன் அய்யன்,பேச்சியம்மன், விருமாண்டி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

அல்லிகுண்டம் 

இது விக்கிரமங்கலம் ஐந்து ஆண்டித்தேவர்களின வாரிசுகளில் ஒருவரான விருமபிள்ளைதேவரின் பூர்வீக ஊர்ராகும் இவர்கள் அல்லிகுண்டம் வாலகுருநாதன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

வடமலை சுந்தத்தேவர் கூட்டாத்தாரின் பங்காளி முறையுள்ளவர்கள்.

சித்தாலை 

இது சித்தாலையை பூர்வீகமாகக்கொண்ட கட்டவைரத்தேவர் வாரிசுகளின் பூர்வீக ஊர்ராகும இவர்கள் சித்தாலையில் அமைந்துள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

நரியம்பட்டி

இது சித்தாலை கட்டவைரத்தேவரின் வாரிசுகளான சித்ரான்(சித்தாலக்காரன்)கூட்டத்தாரின் பூர்வீக ஊர்ராகும் இவர்கள் பெருங்காமநல்லூர் நரியம்பட்டியில் அமைந்துள்ள காத்தாண்டம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

மானூத்து

இது சித்தாலை கட்டவைரத்தேவரின் வாரிசுகளான சித்ரான்(சித்தாலக்காரன்)கூட்டத்தாரின் பூர்வீக ஊர்ராகும் இவர்கள் பெருங்காமநல்லூர் நரியம்பட்டியில் அமைந்துள்ள காத்தாண்டம்மன் கோயிலிருந்து பிடிமண் எடுத்துவந்து மானூத்தில் காத்தாண்டம்மனுக்கு கோயில்கட்டி தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

கண்ணனூர்

இது சித்தாலை கட்டவைரத்தேவர் கூட்டத்தாரின் எழுமத்தேவர் மக்கள் சிலுக்கத்தேவர்,குப்பனத்தேவர் வாரிசுகளான
இவர்கள் கருமாத்தூர் நாட்டின் பெரிய கோயிலான கழுவநாதன் அய்யன்,பேச்சியம்மன், விருமாண்டி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

சாத்தங்குடி

இது சாத்தங்குடியை பூர்வீகமாககொண்ட மூன்று பங்காளிகளின் பூர்வீக ஊர்ராகும் இவர்கள் மதுரை மாடக்குளம் அய்யனார் கோயி்லிருந்து பிடிமண் எடுத்துவந்து சாத்தங்குடியில் அய்யனாருக்கு கோயில்கட்டி அதனை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

பிறமலை நாட்டுக் கள்ளர்களின் கூட்டங்கள்

1.திடியன் காமாட்சித்தேவர் கூட்டம்.
--------------------------------------------------------------

திடியன் சோணை கருப்பு கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

2.திடியன் பேயத்தேவர் கூட்டம்.

--------------------------------------------------------------

கருமாத்தூர் கழுவநாத அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

3.திடியன் பிச்சத்தேவர் கூட்டம்.

--------------------------------------------------------------

உச்சபட்டி பதினெட்டாம்படி கருப்பு கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

4.திடியன் வாரமிளகித்தேவர் கூட்டம்.

--------------------------------------------------------------

உச்சபட்டி தென்கரை முத்தையா கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

5.திடியன் நல்லாத்தேவர் கூட்டம்.

--------------------------------------------------------------

திடியன் வாலகுருநாதர் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

6.திடியன் ஏராத்தேவர் கூட்டம்.

--------------------------------------------------------------

திடியன் சோணை கருப்பு கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

7.திடியன் பெத்தராமுத்தேவர் கூட்டம்.

--------------------------------------------------------------

திடியன் தென்கரை முத்தையா கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

8.திடியன் வசகழுவத்தேவர் கூட்டம்.

--------------------------------------------------------------

கருமாத்தூர் கழுவநாத அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

9.திடியன் மெய்யத்தேவர் கூட்டம்.

--------------------------------------------------------------

வலங்காங்குளம் கண்ணாத்தாள் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

10.திடியன் அரிகுரும்பத்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

வலங்காங்குளம் கடசாரி நல்ல குரும்ப அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

11.திடியன் பூண்டித்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

வலங்காங்குளம் அழகர் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

12.சங்கம்பட்டி மொந்தகுட்டித்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

சங்கம்பட்டி அங்காள ஈஸ்வரி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

13.ஆரியபட்டி சின்னிவீரத்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி கோயிலையும்,ஆரியபட்டி கல்யாண கருப்பசாமி கோயிலையும் தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

14.சொக்கத்தேவன்பட்டி கட்டக்கெடாய்த்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி கோயிலையும்,சொக்கத்தேவன்பட்டி திருவேட்டை அய்யனார் கோயிலையும் தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

15.சக்கிலியாங்குளம் வெள்ளையாண்டித்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி கோயிலையும்,சக்கிலியாங்குளம் பெத்தணசாமி கோயிலையும் தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

16.கன்னியம்பட்டி சின்னக்காமத்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி கோயிலையும்,கன்னியம்பட்டி காமாட்சி அம்மன் கோயிலையும் தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

17.புத்தூர் பின்னத்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

நல்லுத்தேவன்பட்டி பூங்கொடி அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

18.புத்தூர் இராமசாமித்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் கழுவநாத அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

19.புத்தூர் பெரும்புலி அழகாத்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

வடுகபட்டி கருப்பு கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

20.புத்தூர் ஒச்சான் படிவுத்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

நாவார்பட்டி நல்லதங்காள் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

21.கருமாத்தூர் ஒய்யான் குரும்பத்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் கடசாரி நல்லகுரும்ப அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

22.கருமாத்தூர் உடையான் குரும்பத்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் கடசாரி நல்லகுரும்ப அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

23.கருமாத்தூர் பெரிய குரும்பத்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் கடசாரி நல்லகுரும்ப அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

24.கருமாத்தூர் பேக்காத்தி குரும்பத்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் கடசாரி நல்லகுரும்ப அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

25.கருமாத்தூர் மதயானைத்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் பொன்னாங்கன் வாசல் ஒச்சாண்டம்மன் என்று பெயர் விளங்கும் ஆங்கால அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

26.கருமாத்தூர் சின்னுடையாத்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் பொன்னாங்கன் வாசல் ஒச்சாண்டம்மன் என்று பெயர் விளங்கும் ஆங்கால அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

27.கருமாத்தூர் கொல்லி கூட்டம்.

---------------------------------------------------------------------
கருமாத்தூர் பொன்னாங்கன் வாசல் ஒச்சாண்டம்மன் என்று பெயர் விளங்கும் ஆங்கால அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

28.கருமாத்தூர் ஆண்டரச்சான் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் பொன்னாங்கன் வாசல் ஒச்சாண்டம்மன் என்று பெயர் விளங்கும் ஆங்கால அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

29.கருமாத்தூர் கட்ராண்டித்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் பொன்னாங்கன் வாசல் ஒச்சாண்டம்மன் என்று பெயர் விளங்கும் ஆங்கால அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

30.கருமாத்தூர் புளுத்தான் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் பொன்னாங்கன் வாசல் ஒச்சாண்டம்மன் என்று பெயர் விளங்கும் ஆங்கால அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

31.கருமாத்தூர் கேசத்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் கோட்டை மந்தை கொத்தாள பெரியகருப்பு கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

32.கருமாத்தூர் பரிசபுலித்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் கோட்டை மந்தை கொத்தாள பெரியகருப்பு கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

33.கருமாத்தூர் மங்காங்கழுவத்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் கழுவநாத அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

34.கருமாத்தூர் வெள்ளிக்கருப்பத்தேவன் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் காக்குவீரன் கருப்பு கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

35.கருமாத்தூர் குள்ளக்கருப்பத்தேவன் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் காக்குவீரன் கருப்பு கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

36.கருமாத்தூர் பேக்கருப்பத்தேவன் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் காக்குவீரன் கருப்பு கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

37.கருமாத்தூர் கோராண்டித்தேவன் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் காக்குவீரன் கருப்பு கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

38.கருமாத்தூர் தடியன் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் ஒச்சாண்டம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

39.கருமாத்தூர் மாயன் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் நல்லமாயன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

40.கருமாத்தூர் கருத்தி,செம்பான் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் கடசாரி நல்லகுரும்பன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்

41.பாப்பாபட்டி ஒச்சாத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆச்சி கிழவி ஆண்டாயி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

42.பாப்பாபட்டி மோளத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆச்சி கிழவி ஆண்டாயி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

43.பாப்பாபட்டி சுளி ஒச்சாத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆச்சி கிழவி ஆண்டாயி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

44.பாப்பாபட்டி கட்டகாளைத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------
பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆச்சி கிழவி ஆண்டாயி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

45.பாப்பாபட்டி உடையாத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆச்சி கிழவி ஆண்டாயி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

46.பாப்பாபட்டி பொட்டுலுபந்தித்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆச்சி கிழவி ஆண்டாயி கோயிலையும்,கருமாத்தூர் கழுவநாத அய்யன் கோயிலையும் தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

47.பாப்பாபட்டி ஆங்கித்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆச்சி கிழவி ஆண்டாயி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

48.பாப்பாபட்டி மதியத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆச்சி கிழவி ஆண்டாயி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

49.பாப்பாபட்டி கீரித்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆச்சி கிழவி ஆண்டாயி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

50.பாப்பாபட்டி கூலத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆச்சி கிழவி ஆண்டாயி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

51.கொக்குளம் வெறியத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

கொக்குளம் ஆதிசிவன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாகவும், கொக்குளம் பேக்காமன் கருப்பு கோயிலை தங்களது காவல் தெய்வமாகவும் வணங்குகின்றனர்.

52.கொக்குளம் கட்டப்பின்னத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

கொக்குளம் ஆதிசிவன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாகவும் கொக்குளம் பேக்காமன் கருப்பு கோயிலை தங்களது காவல் தெய்வமாகவும் வணங்குகின்றனர்.

53.கொக்குளம் கருப்பத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

கொக்குளம் ஆதிசிவன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாகவும், கொக்குளம் பேக்காமன் கருப்பு கோயிலை தங்களது காவல் தெய்வமாகவும் வணங்குகின்றனர்.

54.கொக்குளம் சேத்தூராத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

கருமாத்தூர் கழுவநாத அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாகவும், கொக்குளம் பேக்காமன் கருப்பு கோயிலை தங்களது காவல் தெய்வமாகவும் வணங்குகின்றனர்.

55.கொக்குளம் சடச்சித்தேவர் கூட்டம்.

---------------------------------------------------------------------

கருமாத்தூர் கழுவநாத அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாகவும், கொக்குளம் பேக்காமன் கருப்பு கோயிலை தங்களது காவல் தெய்வமாகவும் வணங்குகின்றனர்.

56.கொக்குளம் கன்னித்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

கொக்குளம் காமாட்சி அம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாகவும், கொக்குளம் பேக்காமன் கருப்பு கோயிலை தங்களது காவல் தெய்வமாகவும் வணங்குகின்றனர்.

57.வேப்பனூத்து வெள்ளைப்பின்னத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

மலைராமன் கோயிலையும்,புன்னூர் அய்யன் கோயிலையும் தங்களது குலமரபு கோயிலாகவும் கள்ளபட்டி வெண்டி கருப்பு கோயிலை தங்களது காவல் தெய்வமாகவும் வணங்குகின்றனர்.

58.வேப்பனூத்து நல்லாத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

மலைராமன் கோயிலையும்,புன்னூர் அய்யன் கோயிலையும் தங்களது குலமரபு கோயிலாகவும் கள்ளபட்டி வெண்டி கருப்பு கோயிலை தங்களது

காவல் தெய்வமாகவும் வணங்குகின்றனர்.

59.வேப்பனூத்து மாயன்கட்டத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

மலைராமன் கோயிலையும்,புன்னூர் அய்யன் கோயிலையும் தங்களது குலமரபு கோயிலாகவும் கள்ளபட்டி வெண்டி கருப்பு கோயிலை தங்களது காவல் தெய்வமாகவும் வணங்குகின்றனர்.

60.தும்மக்குண்டு சின்னாங்கி உடையாத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

தும்மக்குண்டு உடையாம்பட்டி மூணுசாமி என்று அருள் பெயர் விளங்கும் ஆங்கால அய்யன்,கண்ணாயி,பூங்கனி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

61.தும்மக்குண்டு வெள்ள ஒச்சாத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

தும்மக்குண்டு மூணுசாமி என்று அருள் பெயர் விளங்கும் ஆங்கால அய்யன்,கண்ணாயி,பூங்கனி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

62.தும்மக்குண்டு கருத்த ஒச்சாத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

தும்மக்குண்டு கரிசல்பட்டி,பிச்சம்பட்டி,கணவாய்பட்டி மூணுசாமி என்று அருள் பெயர் விளங்கும் ஆங்கால அய்யன்,கண்ணாயி,பூங்கனி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

63.தும்மக்குண்டு கந்தன் கூட்டம்(கருத்த ஒச்சாத்தேவர்).

----------------------------------------------------------------------

பழனிபட்டி மூணுசாமி என்று அருள் பெயர் விளங்கும் ஆங்கால அய்யன்,கண்ணாயி,பூங்கனி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

64.பூசலப்புரம் கட்ராண்டி மாயத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

பூசலப்புரம் மூனுசாமி என்று அருள் பெயர் விளங்கும் ஆங்கால அய்யன்,

கண்ணாயி,பூங்கண்ணி கோயிலை தங்களது குலமரபு
கோயிலாக வணங்குகின்றனர்.

65.காளப்பன்பட்டி கூலக்குன்னத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

காளப்பன்பட்டி கருப்பு கோயிலை தங்களது குலமரபு

கோயிலாக வணங்குகின்றனர்.

66.காளப்பன்பட்டி பணிக்கத்தேவர் கூட்டம்

----------------------------------------------------------------------

காளப்பன்பட்டி ஆதி சிவன்(சீதன)கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

67.கேத்தூவார்பட்டி எழுவம்பட்டி நல்ல கருப்பத்தேவர் மக்கள் மூன்று பங்காளிகள் கூட்டம்.

----------------------------------------------------------------------

கேத்தூவார்பட்டி மாற நாடு சின்னச்சாமி என்று அருள் பெயர் விளங்கும் ஆங்கால அய்யன்,கண்ணாயி,பூங்கண்ணி கோயிலை தங்களது குலமரபு

கோயிலாக வணங்குகின்றனர்.

68.சிந்துபட்டி-போத்தம்பட்டி மதயானை கோச்சடையான் கூட்டம்.

----------------------------------------------------------------------

போத்தம்பட்டி ஆங்கால அய்யன்,கண்ணாயி,பூங்கண்ணி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

69.காடுபட்டி அருதி வீரத்தேவன் கூட்டம்.

----------------------------------------------------------------------

சிந்துபட்டி அங்காள ஈஸ்வரி (சீதன)கோயிலை தங்களது குலமரபு

கோயிலாக வணங்குகின்றனர்.

70.அய்யனார்குளம் இரண்டு தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

அய்யனார்குளம் கடசாரி நல்ல குரும்பன் (சீதன)கோயிலை தங்களது குலமரபு

கோயிலாக வணங்குகின்றனர்.

71.வலங்கான்குளம் அரிகுரும்பத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

வலங்கான்குளம் அரி குரும்பன் (சீதன) கோயிலை தங்களது குலமரபு

கோயிலாக வணங்குகின்றனர்.

72.உசிலம்பட்டி ஐந்து பூசாரி மக்கள் கூட்டம்.

----------------------------------------------------------------------

உசிலம்பட்டி சின்ன கருப்பு கோயிலை தங்களது குலமரபு

கோயிலாக வணங்குகின்றனர்.

73.எழுவம்பட்டி நல்ல கருப்பத்தேவர் மக்கள் நான்கு பங்காளிகள் கூட்டம்.

----------------------------------------------------------------------

எழுவம்பட்டி ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆங்கால அய்யன்,கண்ணாயி,பூங்கண்ணி கோயிலை தங்களது குலமரபு

கோயிலாக வணங்குகின்றனர்.

74.தாராபட்டி மதயானை ஒச்சாத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

தாராபட்டி ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆங்கால அய்யன்,கண்ணாயி,பூங்கண்ணி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

75.குருவித்துறை சின்னுடையாத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

குருவித்துறை ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆங்கால அய்யன்,கண்ணாயி,பூங்கண்ணி கோயிலை தங்களது குலமரபு

கோயிலாக வணங்குகின்றனர்.

76.வாகைக்குளம் ஆண்டித்தேவர் மக்கள் சிக்கந்தர்மலையான் கூட்டம்.

----------------------------------------------------------------------

வாகைக்குளம் தென்கரை முத்தையா கோயிலை தங்களது குலமரபு

கோயிலாக வணங்குகின்றனர்.

77.கச்சிராப்பு கட்டையன் கூட்டம்.

----------------------------------------------------------------------

கச்சிராப்பு தென்கரை முத்தையா,கொடிப்புலி கருப்பு கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

78.தாராபட்டி வெயிலாத்தேவன் கூட்டம்.

---------------------------------------------------------------------

தாராபட்டி தென்கரை முத்தையா,கொடிப்புலி கருப்பு கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

79.செட்டிகுளம்(கருமாத்தூர்) பெரியக்கட்டையன் சின்னக்கட்டையன் கூட்டம்.

----------------------------------------------------------------------

தென்கரை முத்தையா,கொடிப்புலி கருப்பு கோயிலை தங்களது குலமரபு

கோயிலாக வணங்குகின்றனர்.

80.கவணம்பட்டி கூலமக்கள் கூட்டம்.

----------------------------------------------------------------------

கவணம்பட்டி வீரபத்திரன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

81.சூடாபுளியங்குளம் சூடாத்தேவன் கூட்டம்.

----------------------------------------------------------------------

சூடாபுளியங்குளம் அங்காள ஈஸ்வரி (சீதன)கோயிலை தங்களது குலமரபு

கோயிலாக வணங்குகின்றனர்.

82.கீழஉரப்பனூர் திருமலை பின்னத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

கீழஉரப்பனூர் கல்யாண கருப்பு கோயிலையும் புன்னூர் அய்யனையும் தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

83.மேல்நாடு செட்டிகுளம் சந்தனகருப்பதேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

கருமாத்தூர் கடசாரி நல்ல குரும்பன் (சீதன)கோயிலை தங்களது குலமரபு

கோயிலாக வணங்குகின்றனர்.

84.வாகைக்குளம் கட்டபின்னத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

வாகைக்குளம் கல்யாண கருப்பு கோயிலையும் அனைஞ்சி பெருமாள் கோயிலையும் தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

85.குருவித்துறை ஆதி வெள்ளை பின்னத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

குருவித்துறை புன்னூர் அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

86.வெள்ளைமலைபட்டி காரிபின்னத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

வெள்ளைமலைபட்டி புன்னூர் அய்யன் கோயிலையும் பாப்பம்மாள் கோயிலையும் தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

87.கப்பலூர் காரிபின்னத்தேவர் கூட்டம்.

----------------------------------------------------------------------

கப்பலூர் கலியுக அய்யன் கோயிலையும் பாப்பம்மாள்,சாலையம்மன் கோயிலையும் தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

88.கொசவபட்டி மாங்குளத்தான் கூட்டம்.

----------------------------------------------------------------------

அழகர் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

89.விக்கிரமங்கலம் ஆண்டித்தேவர் கூட்டம்.
-----------------------------------------------------------------------

கருமாத்தூர் கழுவநாத அய்யன் கோயிலையும் விக்கிரமங்கலத்திலுள்ள கருப்பு கோயிலையும் தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர். 

90.சித்தாலை கட்டவைரத்தேவர் கூட்டம்
----------------------------------------------------------------------

சித்தாலை அருகில் உள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலை தங்களது குலமரபு
கோயிலாக வணங்குகின்றனர்.

91.ஊராண்டஉரப்பனூர் வடமலை சுந்தத்தேவர் கூட்டம்
----------------------------------------------------------------------

சித்தாலை அருகில் உள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலை தங்களது குலமரபு
கோயிலாக வணங்குகின்றனர்.

92.மேலஉரப்பனூர் பத்திரகாளி சுந்தத்தேவர் கூட்டம்.
----------------------------------------------------------------------

சித்தாலை அருகில் உள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலை தங்களது குலமரபு
கோயிலாக வணங்குகின்றனர்.

93.மேலஉரப்பனூர் வெள்ளைத்தேவர் மக்கள் நான்கு பங்காளி கூட்டம்.
----------------------------------------------------------------------

விளாச்சேரி ஆதிசிவன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

94.மேலஉரப்பனூர் கரைக்காரத்தேவர் கூட்டம்.
----------------------------------------------------------------------

கருமாத்தூர் கழுவநாத அய்யன் கோயிலை தங்களது குலமரபு
கோயிலாக வணங்குகின்றனர்.

95.சொரிக்காம்பட்டி(மேலஉரப்பனூர்) கரைக்காரத்தேவர் கூட்டம்.
----------------------------------------------------------------------

கருமாத்தூர் கழுவநாத அய்யன் கோயிலை தங்களது குலமரபு
கோயிலாக வணங்குகின்றனர்.

96.நரியம்பட்டி சித்ரான் கூட்டம்
----------------------------------------------------------------------

நரியம்பட்டி,மானூத்தூ,பசும்பொன் பாறைப்பட்டி போன்ற ஊர்களில் காத்தாண்டம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

97.கண்ணனூர் சிலுக்கத்தேவர் கூட்டம்
----------------------------------------------------------------------

கருமாத்தூர் கழுவநாதன்,பேச்சியம்மன்,விருமாண்டி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

98.கண்ணனூர் குப்பனத்தேவர் கூட்டம்
----------------------------------------------------------------------

கருமாத்தூர் கழுவநாதன்,பேச்சியம்மன்,விருமாண்டி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

99.நல்லபிள்ளைபட்டி சுந்தத்தேவர் கூட்டம்
----------------------------------------------------------------------

சித்தாழை அருகில் உள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

100.புங்கங்குளம் சடச்சி சுந்தத்தேவர் கூட்டம்
---------------------------------------------------------------------

சித்தாழை அருகில் உள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

101.தங்களாச்சேரி(நல்லபிள்ளைபட்டி) சுந்தத்தேவர் கூட்டம்
--------------------------------------------------------------------- 

மாற நாடு சின்ன கருப்பசாமி எனும் தாழை கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

102.மேலக்குயில்குடி(ஊராண்டஉரப்பனூர்) வடமலை சுந்தத்தேவர் மக்கள் மூன்று பங்காளி கூட்டம்
---------------------------------------------------------------------

மேலக்குயில்குடி ஆதிசிவன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

103.மானூத்து வெள்ளையன் கூட்டம்
---------------------------------------------------------------------

மானூத்து பெத்தனசாமி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

104.கண்ணனூர் பரட்டையாண்டித்தேவர் கூட்டம்
------------------------------------------------------------------- 

கருமாத்தூர் கழுவநாதன்,பேச்சியம்மன்,விருமாண்டி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

105.மானூத்தூ முதலித்தேவர் கூட்டம்
------------------------------------------------------------------- 

கழுவநாதன்,பேச்சியம்மன்,விருமாண்டி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

106.அல்லிகுண்டம் விருமபிள்ளைதேவர் கூட்டம்
------------------------------------------------------------------- 

அல்லிகுண்டம் வாலகுருநாதன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

107.மதிப்பனூர் சீறுபுலியான் மக்கள் ஏழு பங்காளி கூட்டம்
------------------------------------------------------------------- 

மதிப்பனூர் மூணுசாமி என்று அருள் பெயர் விளங்கும் ஆங்கால அய்யன் பூங்கண்ணி,பொற்கொடி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

108.முதலைக்குளம் பல்லாக்கு ஒச்சாத்தேவர் கூட்டம்
-----------------------------------------------------------------------
முதலைக்குளம் மூணுசாமி என்று அருள் பெயர் விளங்கும் ஆங்கால அய்யன் பூங்கண்ணி,பொற்கொடி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

109.நாட்டாமங்கலம் உலகாத்தேவர் கூட்டம்.
-----------------------------------------------------------------------
நாட்டாமங்கலம் ஆதிசிவன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

110.நாட்டாமங்கலம் ஒந்தாத்தேவர் கூட்டம்.
-----------------------------------------------------------------------
நாட்டாமங்கலம் ஆதிசிவன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

111.மதிப்பனூர்(மேட்டுபட்டி)விட்டில் பெருமாள் தேவர் கூட்டம்

-----------------------------------------------------------------------
மதிப்பனூர் மேட்டுபட்டியிலுள்ள விருமாண்டி கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர்.

பிறமலை நாட்டின் முதன்மை தெய்வமான கருமாத்தூர் நாட்டின் பெரிய கோயில் என்று அழைக்கபடும் கருமாத்தூர் கழுவநாத அய்யன் கோயிலை குலக்கோயிலாக வணங்கும் கூட்டமும் ஊரும்.!

1.ஜோதிமாணிக்கம்-திடியன் பேயத்தேவர் கூட்டம்.
2.பன்னியான்-கீழத்தெரு பங்காளி கூட்டம்.
3.கொக்குளம்-சடச்சித்தேவர் கூட்டம்.
4.க.பாறைபட்டி- சேத்துரான்,சடச்சிக்கூட்டம்.
5.சிக்கம்பட்டி-சேத்துரான் கூட்டம்
6.விளாச்சேரி-குப்பையாண்டித்தேவர் கூட்டம்
7.மேல்நாடு செட்டிகுளம்-
8.வடிவேல்கரை-
9.கீழஉரப்பனூர்-பெரிச்சித்தேவர் கூட்டம்
10.மேலஉரப்பனூர்-கரைக்காரத்தேவர் கூட்டம்.
11.சாத்தங்குடி-
12.புளியகவுண்டம்பட்டி-
15.பூசலப்புரம்-
16.மதிப்பனூர்(மேட்டுபட்டி) விட்டில் பெருமாள்தேவர் கூட்டம்.
17.வடுகபட்டி-சந்தைகாவளாளி கூட்டம்
18.பன்னிக்குண்டு-கரைக்காரத்தேவர் கூட்டம்.
19.வலையபட்டி-
20.கப்பலூர்-
21.கல்லுபட்டி-சந்தைகாவளாளி கூட்டம்
22.பொட்டுலுபட்டி-பொட்டுலுபந்தித்தேவர் கூட்டம்
23.எழுவம்பட்டி-பேய்க்கழுவத்தேவர் கூட்டம்
24.சொரிக்காம்பட்டி-கரைக்காரத்தேவர் கூட்டம்.
25.விக்கிரமங்கலம் ஆண்டித்தேவர் ஐந்து பங்காளி கூட்டம்.
26.கண்ணனூர்-நான்கு பங்காளி கூட்டம்.
27.கீழக்குயில்குடி-மூன்று பங்காளி கூட்டம்.
28.கோட்டையூர்-மங்காங்கழுவத்தேவர் கூட்டம்
29.மானூத்து-முதலித்தேவன் கூட்டம்

மதுரையை மையபடுத்தி 72 பாளையங்களுக்கு மன்னராக விளங்கிய திருமலை நாயக்கர் கள்ளர் நாடுகளின் மீது தனது ஆதிக்கத்தை செழுத்தவிரும்பி அதிலே தோழ்வியடைந்து அதன்பின்பு கீழஉரப்பனூர் பின்னத்தேவரை எட்டு நாட்டிலும் கம்பளிவிரித்து நீதி பரிபாலனம் செய்யும் உரிமையை திருமலை நாயக்கர் மூலம் திருமலை பட்டத்துடன் திருமலை பின்னத்தேவர் பெறுகிறார் அவருக்கு துணையாக ஊராண்டா உரப்பனூர் சுந்தத்தேவரையும் வடமலை பட்டத்துடன் நியமிக்கிறார்.

திருமலை பின்னத்தேவரும் வடமலை சுந்தத்தேவரும் பூர்வீக மாமன் மைந்துனர்கள் அதாவது வடமலை சுந்தத்தேவரின் அக்காவின் கணவரே திருமலை பின்னத்தேவர். 

இவர்களுது வாரிசுகளும் சகோதர்களும்,

திருமலை பின்னத்தேவர் கூட்டத்தினர்:- 

கீழஉரப்பனூர், மாவிலிபட்டி, கள்ளபட்டி, கரையாம்பட்டி போன்ற ஊர்களிலும் அவரது சகோதர்கள் கட்டபின்னத்தேவர், காரிபின்னத்தேவர் வாரிசுகள் கைக்குளம், பெருங்காமநல்லூர், குருவித்துரை, வெள்ளைமலைப்பட்டி, கப்பலூர் போன்ற ஊர்களில் வாழ்கின்றனர்.

வடமலை சுந்தத்தேவர் கூட்டத்தினர்:-

ஊராண்டா உரப்பனூர், மேலஉரப்பனூர்,கரடிக்கல், வடபழஞ்சி, புங்கங்குளம், மேலக்கோட்டை, மேலக்குயில்குடி, தங்களாச்சேரி போன்ற ஊர்களிலும்.

அவரது சகோதர்கள் பெரியாண்டித்தேவர், முதலித்தேவர் வாரிசுகள் கண்ணனூர், மீனாட்சிபட்டி, புள்ளநேரி, விக்கிரமங்கலம், அல்லிகுண்டம், மானூத்து போன்ற ஊர்களில் வாழ்கின்றனர்.

கள்ளர்நாடு வல்லாளத்தேவன்