வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

பொ. ஆ 1755 இல் ஆங்கிலேய படையை விரட்டியடித்த நத்தம் கள்ளர்கள்



கள்ளர்நாடு நிலப்பிரதேசத்தில் இருந்த கள்ளர் இனக்குழுக் கூட்டத்தினர் எவ்வித வரியினையும் கட்டாமல் இருந்தனர். இக்கள்ளர் நாடு என்ற அமைப்பு மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, நத்தம் பகுதிகளுக்கு இடைப்பட்ட நிலமாக 17 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு சுருங்கி போனது. அதற்கு முன் சேலம் பகுதியில் எல்லாம் கள்ளர்நாடுகள் இருந்தற்கான கல்வெட்டுகள் உள்ளன.


நத்தம்
இராசேந்திரன் தன் மகனான சுந்தரசோழன் என்பவனை பாண்டிய நாட்டிற்குத் தலைவன் ஆக்கினான். இவ்விளவல் கல்வெட்டுகளில் சடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் எனப்படுகிறான். பிராமணர்களுக்கும், வணிகர்களுக்கும் நத்தம் பகுதியில் பல மானியங்களை தந்துள்ளதாக கல்வெட்டு கூறுகிறது.

கிபி 1755ல் பெப்ரவரி மாதம் ஆங்கில தளபதி கர்னல் ஹரான் மற்றும் நவாப் தென் தமிழக பாளையக்காரர்களிடம் வரி வசூல் பாக்கியை பெற பெரும்படை கொண்டு கிளம்பினான். மணப்பாறை பகுதியை வெற்றிபெற்றதும் கர்னல் ஹரானிடம் பொறுப்பை ஒப்படைத்து நவாப் திருச்சிராப்பள்ளி திரும்பினான்.




1752 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆலம்கான், பிரெஞ்சு படை துணைகொண்டு திருச்சியை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த சந்தாசாகிபுக்குத் துணையாய் சென்றபொழுது மதுரை திருநெல்வேலி நாடுகளை மூன்று பட்டாணிய உத்தியோகஸ்தர்களிடம் விட்டுச் சென்றான். அம்மூவரின் பெயர் மகம்மது பக்கிரி, மகம்மது மைனாக்கு, நபிகான் கட்டாக்கு என்பன. இவர்களுள் முதலாமவன் பொதுவாக மியானா என்று சாதிப் பெயரால் வழங்கப்பட்டான்.



மதுரை பிரதிநிதியான மியானாவை பிடிப்பதற்காக கர்னல் ஹெரானும், கான் சாகிப் என்கிற மருத நாயகமும் மதுரைக்கு வருகிறார்கள். இவர்களுடைய வருகையையொட்டி மியான அங்கிருந்து தப்பி மதுரையில் இருந்து 8கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவில்குடி (திறம்பூர் என்பது அதனுடைய தொண்மையான் பெயர், மேலூருக்கும் மதுரைக்கும் நடுவில்) என்கிற இடத்தில் ஒழிந்து கொள்கிறான். இதனால் கர்னல் ஹெரானும், கான் சாகிப்பும் கோவில்குடியை நோக்கி செல்கிறார்கள். இதனை எதிர்பார்த்த மியானா மீண்டும் அங்கிருந்து தப்பி செல்கிறான்.



பின்பு மிகவும் தாமதமாக வந்த கர்னல் ஹெரான் கோவில்குடியில் உள்ள கள்ளர்கள் பூர்வீகமாக வணங்கக்கூடிய கோவிலை கொள்ளையடிக்க திட்டமிடுகிறான். கோவிலை சுற்றி காவலுக்கு இருந்த கள்ளர்களுடன் சண்டையிட்டு, அங்கிருந்த அனைத்து கள்ளர்களையும் கொன்றுவிட்டு பின்பு கொள்ளையடிக்க தயாராகிறான் கர்னல் ஹெரான்.



கான் சாகிப்புக்கு இதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லாமல் கோவிலில் ஏறுவதற்கு ஏணி மற்றும் உபகரணங்கள் இல்லை என்றும் மேலும் மியானா இங்கிருந்து தப்பி சென்றுவிட்டான் எனவும் கூறுகிறான். ஆனால் இதனை ஏற்காத கர்னல் ஹெரான் அந்த கோவிலின் கோட்டை கதவை வைக்கோல் போரை வைத்து தீயிட்டு எரிக்க ஆணயிடுகிறான்.




இதனை ஏற்று கான்சாகிப்பும் படைவீரர்களும் தீயிட்டு கதவை தகர்த்து உள்ளே நுழைந்து இஷ்டம் போல் அனைத்தையும் சூரையாடி கோவிலை தரைமட்டமாக்குகிறார்கள். மேலும் கள்ளர்கள் காலங்காலமாக வழிபடும் அவர்களது சாமி சிலையை எடுக்கிறார்கள்.

இந்த காட்டுமிராண்டித்தனத்தை பிரிட்டீஸ் ஆய்வாளர்கள் இராபர்ட் ஓர்ம்,எஸ்.சி ஹிலும், பிரிட்டீஸ் கவுன்சிலும் கடும் கண்டனமும், வருத்ததையும் தெரிவிக்கிறார்கள். மேலும் கர்னல் ஹெரான் ஒட்டுமொத்த மிலிட்டரி விதிமுறைகளை மீறிவிட்டான் எனவும் குறிக்கிறார்கள்.




கொள்ளையடித்த கள்ளர்களின் சாமி சிலையை ஒரு பிரமாணரிடம் 5000 ரூபாய்க்கு கர்னல் ஹெரான் விற்க முனைகிறான் ஆனால் இதனால் ஏற்படும் பின்விளைவு அறிந்த அந்த பிராமணர் ஏற்க மறுக்கிறார் இதனால் அந்த சாமி சிலையை கொள்ளையடித்த பொருட்களோடு சேர்த்து கட்டுகிறார்கள். அங்கிருந்து மார்ச் 25, 1755 ல் திருநெல்வேலியை அடைந்து பாளையக்காரர்களிடம் வரி வசூலில் ஈடுபட்டான்.

5 மே, 1755 ல் நெற்கட்டாஞ்சேவலை அடைந்து பூலித்தேவரிடம் வரி வசூல் செய்ய முயன்றான் ஹரான். அவரது கோட்டை மீது சில மணி நேரம் பீரங்கி தாக்குதல் நடத்தினான். ஆனால் வெள்ளையரின் ஆயுதபலம் மிகவும் குறைந்திருந்ததை அறிந்திருந்த பூலித்தேவர் எந்த சலனமும் இன்றி இருந்ததால், ரூபாய் கொடுத்தால் சென்று விடுகிறோம் என தூது அனுப்பினான் ஹரான். ஆனால் பூலித்தேவர் ஒரு ரூபாய் கூட தர இயலாது என கூறிவிட்டார். ஹரானின் படையினருக்கு தேவையான பொருட்கள் முடியும் நிலையில் இருந்ததால், அவர்கள் அங்கிருந்து பின்வாங்க முடிவு செய்தனர்.20 மே 1755ல், ஹரானின் படை மதுரையை அடைந்தது.


மதுரையை அடைந்தவுடன் படையினர் ஒய்வு எடுத்துக்கொண்டனர். ஜமால் சாகிப் என்பவர் தலைமையில் 1000 சிப்பாய்கள் அங்கிருந்து திருச்சிக்கு புறப்பட தயாராயினர். ஆனால் அங்கிருந்து திருச்சிக்கு நேரடியாக செல்லும் பாதை கள்ளர்கள் வாழும் அபாயகரமான பகுதியாதலால், கேப்டன் ஸ்மித் என்பவர் தலைமையில் 100 ஐரோப்பியர்கள், 4 கம்பனி சிப்பாய்கள் மதுரையில் இருந்து 20 கிமீ தொலைவில் (நத்தம் கணவாயின் தெற்கு எல்லையில்) உள்ள வெளிச்சி நத்தம் எனும் கோட்டையை நோக்கி செல்ல திட்டமிட்டனர்.

மதுரைக்கு தனது படைகளுடன் வந்த ஹெரானுக்கு பிரிட்டீஸ் கவுன்சிலிடம் இருந்து அழைப்பு வருகிறது, அதனால் ஒட்டு மொத்த பிரிட்டீஸ் படையும் திருச்சி நோக்கி செல்லத் தயாராகின்றன.
ஆனால் கிழம்புவதற்கு முன்பாக பிரிட்டீஸ் உளவுத்துறையிடம் இருந்து கர்னல் ஹெரானுக்கும் அவரது படைகளுக்கும் ஒரு தகவல் வந்தது. மிகவும் ஆபத்தான நத்தம் கணவாயை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தபடுகிறது.

ஹரானுக்கு முன் மதுரை கமாண்டோ செர்ஜியண்ட கௌல்ட் (Sergeant gould) என்பவர் தலைமையில் சென்ற சிப்பாய்கள் அனைவரும் கள்ளர்களால் நத்தம் பகுதியில் கொல்லப்பட்டனர். அங்கு சென்ற அனைவரையும் கள்ளர் படைகள் ஊசிமுனை அளவு கூட ஈவு இரக்கமின்றி குத்தி சரித்துவிடுகிறார்கள்.

இதன் மூலமாக கர்னல் ஹெரானையும் அவரது படைகளையும் பழிக்கு பழியாக இரத்த ருசி காண்பதற்கும் இழந்த தங்களுடைய சாமி சிலையை மீட்பதற்கும் கள்ளர் படைகள் நத்தம் கணவாயில் தாயராக இருப்பதாக பிரிட்டீஸ் உளவுத் துறை தகவல் அளிக்கிறது.
இந்த அதிர்ச்சி தகவலால் கர்னல் ஹெரான் மிகவும் நுணுக்கமாகவும், தந்திரமாகவும் தனது படையை நான்கு பாகமாக பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கு ஒரு கேப்டன் தலைமை கொண்டு வழி நடத்த ஆணையிடுகிறார்.

(Joseph smith' account of expedition: orme mss india III 608-612: கள்ளரகளின் தாக்குதலை நேரில் கண்ட கேப்டன் ஜோசப் ஸ்மித் குறிப்புகளில் இருந்து)

28 May 1755 ல் ஹரான் தலைமையிலான ஆங்கிலப்படை மதுரையில் இருந்து புறப்பட்டனர். காலை 5 மணிக்கு புறப்பட தயாரான வெள்ளையர் படை, பல அணிகளாக பிரிந்து சென்றனர். முதலில் கேப்டன் லின் தலைமையிலான அணி, எந்த பிரச்சனையும் இன்றி நத்தம் கணவாயை கடந்து நத்தம் நகரத்தை அடைந்தனர்.

இதன் பின் (Captain polier) கேப்டன் போலியர் தலைமையில் கம்பனி சிப்பாய்கள், செர்ஜியன்டகள்(ஓரு ராணுவ பதவி) , ஐரோப்பியர்கள் மற்றும் 12 பேர் அடங்கிய அணி நத்தம் கணவாயில் பயணத்தை தொடங்கியது. இவர்களை பின் தொடர்ந்து ராணுவ தளவாடங்கள் கொண்ட வண்டி, 20 ஐரோப்பியர்கள், 2 கம்பனி சிப்பாய்கள் வந்தனர். இதனை தொடர்ந்து மாபூஸ் கானின் யானைகள் மற்றும் ஒட்டகங்கள் தொடர்ந்தன.

இதனை தொடர்ந்து 6 ராட்சத பீரங்கிகள், 20 ஐரோப்பியர்கள், 200 சிப்பாய்கள் மற்றும் கம்பனி படைகள் கேப்டன் ஸ்மித் தலைமையில் வந்தது. ஹரான் முன்னாள் படைகளை வழிநடத்தி சென்றுகொண்டு இருந்தார். கணவாய் பகுதியில் கள்ளர்களை எதிர்நோக்கி சென்றது படை. 

முதலில் சென்ற இராணுவ பிரிவு தாங்கள் எந்த தாக்குதலுக்கும் ஆளாகவில்லை, இங்கு கள்ளர்களின் நடமாட்டம் இல்லை என தகவல் அளிக்கிறார்.

அனைத்தும் பாதுகாப்பாக செல்கிறது என அனைவரும் மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருந்தனர். ஆனால் இதை அனைத்தையும் வழித்தடத்தின் இருபுறத்திலும் கள்ளர்கள் தங்களுடைய உளவுபடை உளவாளிகள் மூலம் அத்தனை நிகழ்வையும் அவர்களுக்கே தெரியாமல் கண்காணித்து தகவல் கொடுத்து கொண்டிருந்தனர். கள்ளர்கள் உளவாளிகள் மூலம் அனைத்து சம்பவங்களையும் கண்காணித்து வந்தனர். தாக்குதலை தொடுக்க உரிய நேரத்திற்காக காத்திருந்தனர்.

இவ்வளவு பெரிய ஆங்கிலப்படைகளை தனிமை படுத்துவதற்காக கள்ளர்கள் வழித்தடத்தில் மரங்கள வெட்டி 30 பேர் வரிசையாக செல்லும் வழியை 10 பேர்களுக்கும் குறைவாக செல்லும் அளவு பாதையை சுருக்குகிறார்கள்.

சரியாக கேப்டன் ஜோசப்பின் பீரங்கி படையுடன் வந்த சாமி சிலை பிரிவை கள்ளர்கள் வெட்டி வைத்த புதைகுழியில், போர் கருவிகளை கொண்டு சென்ற ஒரு வண்டியின் சக்கரம் குழியில் இறங்கி சிக்கி கொண்டது. தளபதி முன்னாள் சென்ற வண்டிகளை நிறுத்தவில்லை. அந்த வண்டியை பின்தொடர்ந்த வண்டிகள் அனைத்தும் நின்றது.

முன்னாள் சென்ற வண்டிகளுக்கும், பின்னால் குழியில் மாட்டியிருந்த ராணுவ தளவாட வண்டிக்கும் இடையேயான தூரம் 2 மைல்களை அடைந்தவுடன், பின்னால் இருந்த ராணுவ படையை நோக்கி கள்ளர்கள் தாக்க தயாரானார்கள்.

கள்ளர்களை கண்டவுடன் படையினர் சுடத்தொடங்கினர். கள்ளர்கள் தற்காலிகமாக பின்வாங்கினர்.சிறிது நேரம் அமைதி நிலவியது. அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என எண்ணிக்கொண்டிருந்த போது, பெரும் எண்ணிக்கையிலான கள்ளர்கள் அபாயகரமான சத்தம் எழுப்பிக்கொண்டு மற்றொரு புறத்தில் இருந்து தாக்க தொடங்கினர். இதனால் பின்னால் வந்த அனைத்து படையும் ஒரே இடத்தில் தப்பித்து ஓட முடியாதவாறு தேங்குகிறது.

ஆங்கிலபடைகள் என்ன செய்வதன்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென கள்ளர் படைகள் தங்களுடைய ஆயுதங்களுடன் (வளரி, வில் அம்பு, 18 அடி ஈட்டி, நாட்டு துப்பாக்கிகள்) பயன்படுத்தி ஒருவிதமான வினோத சத்தம் எழுப்பி நான்கு பக்கமும் திரண்டு தாக்குதல் நடத்துகிறார்கள்.

கேப்டன் ஜோசப் படைகள் பீரங்கி மற்றும் நவீன ஆயுதங்களுடன் எதிர் தாக்குதல் நடத்துகிறார்கள். ஐரோப்பிய வீரர்கள் திக்குமுக்காடினர். கள்ளர்களின் கையில் நவீன ஆயுதங்கள் கிடைத்துவிடாமல் இருக்க வேண்டும் என எண்ணினர். ஐரோப்பிய சிப்பாய்கள் சிறிய ரக பீரங்கிகளையும் கொண்டு தாக்கினர். கள்ளர்களும் தொடர்ந்து தாக்கினர்.

ஆனால் திடீரனெ கள்ளர் படைகள் அனைத்தும் காட்டுக்குள் மறைந்து விடுகிறது. ஆங்கிலபடைகளால் அவர்களையோ,அவர்கள் சென்ற இடத்தையோ கண்டுபிடிக்க இயலவில்லை.

இந்த முதல் தாக்குதலில் கேப்டன் ஜோசப் மற்றும் ஆங்கிலப்படைகள் இரத்தம் உறையும் அளவிற்கு பயந்து நடுங்கி ஆயுதங்களுடன் நிற்கின்றனர். சற்று நேரத்தில் மீண்டும் நான்கு பக்கமும் கள்ளர் படை சூழ்ந்து மிகவும் உக்கிரமாக தாக்குதலை தொடர்ந்து பல பிரிட்டீஸ் வீரர்களை கொன்று குவித்து முன்னேருகின்றனர்.

சிறுது நேரத்தில் கள்ளர்கள் காட்டுக்குள் பின்வாங்கி அங்கிருந்து தாக்குதல் நடத்தினர். பிறகு அங்கிருந்து முன்னேறி ராணுவ தளவாடங்கள் இருக்கும் பகுதியை நோக்கி வந்தனர்.

கள்ளர்கள் (Arrows, matchlocks, spikes, javelines,, rockets) அம்புகள், துப்பாக்கி, வேல் கம்பு, ராக்கெட் முதலிய ஆயுதங்களை கொண்டு தாக்கினர்.கள்ளர்களின் மீது செய்யப்பட்ட ஒவ்வொரு தாக்குதலுக்கும் அதே அளவு வீரியத்துடன் அபாயகரமாக சத்தம் எழுப்பிக்கொண்டு பதிலடி கொடுத்தனர்.

தாக்குதலில் சாமி சிலையை வைத்திருந்த பெரிய பீரங்கியை சுற்றி இருந்த அனைவரையும் கள்ளர் படை தங்களது ஈட்டியால் குத்தி சரிக்கிறார்கள். அவற்றை பாதுகாத்து நின்ற சிப்பாய்களை தங்களது ஈட்டி மூலம் பலியிட்டனர்.பீரங்கிகள் இருந்து பகுதியை அடைந்து எதையோ தேடினர். பின்னால் இருந்து மற்றொரு படை கள்ளர்களை தாக்கியது. ஆனாலும் கள்ளர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு தாக்கினர்.

ராணுவ தளவாடங்கள் இருந்த பகுதியில் கள்ளர்கள் எதையோ தேடத்தொடங்கினர். ஆக்ரோசமாக ஒலி எழுப்பினர். சிறுது நேரத்தில் கள்ளர்களின் குரல் ஒருங்கிணைந்து ஒரே சொல்லை ஒலிக்க ஆரம்பித்தது. ஆம், " சாமி, சாமி, சாமி" என ஆக்ரோசமாக ஒலி எழுப்பினர். அவர்கள் தேடி வந்தது கோயில்குடியில் ஹரானால் திருடப்பட்ட சாமி சிலைகள்.

கள்ளர்களில் சிலர் அங்கிருந்த வண்டியில் இருந்த மூட்டைகளை எடுத்து திறந்து பார்த்தனர். அதில் ஒரு மூட்டையில் சுவாமி சிலைகள் இருந்தது.சாமி சிலைகள் கிடைத்த பின்பு அவர்கள் தங்களது மனைவி, பிள்ளைகள் திரும்ப கிடைத்தால் வரும் மகிழ்ச்சியைவிட அதிகம் சந்தோசம் அடைந்தனர்.

சாமி சிலைகளை மீட்ட பின்பும் பல மணி நேரம் தொடர் தாக்குதல்கள் கள்ளர்களால் நடத்தப்பட்டது. கேப்டன் ஸ்மீத் உதவி கோரி அனுப்பிய உளவாளிகள் யாரும் திரும்பவில்லை, எந்த படை உதவியும் கிடைக்கவில்லை. போராட்டம் தொடர்ந்தது.

மாலை 4 மணி அளவில் கள்ளர்கள் தாக்குதல் குறைந்தது. ஆனால் சற்று நேரத்தில் படையினர் மற்றும் கூலிகளை நோக்கி பாய்ந்தனர் கள்ளர்கள். கையில் சிக்கிய அனைவரையும் கொன்று தீர்த்தனர்.வெள்ளைய தளபதிகளின் குடும்பத்தினர் உறவினர் என அனைவரும் அலறியடித்து ஒடினர். சிப்பாய்களில் வெறும் 30 பேர் மட்டுமே உயிர்தப்பினர்.

கேப்டன் ஸ்மீத், கணவாயில் இருந்து பின்வாங்கி காட்டுப்பகுதியில் இருந்து பின்வாங்கி சமவெளி பகுதிக்கு படையினரை அழைத்து வந்தார். இதன் பிறகு கள்ளர்களின் தாக்குதல் ஒய்ந்தது.

இரவு நேரம் நெருங்கியதால், முடிந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மற்றவற்றை அங்கேயே விட்டுவிட்டு வேகமாக ஒடினர் ஆங்கிலேயர்கள். முன்னாள் சென்றிருந்த படைப்பிரிவினருடன் இணைந்து ஸ்மீத் தலைமையில் படையினர் வேகமாக நகர்ந்தனர். கடுமையான சூரிய வெப்பத்தால் வெள்ளையர்கள் சோர்ந்திருந்தனர்.

அடுத்த நாள் காலை கள்ளர் படை தாக்குதலில் எஞ்சியிருந்த சில வீரர்களுடன் கேப்டன் ஜோசப்பும், கர்னல் ஹெரானும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நத்தம் டவுனுக்கு வருகிறார்கள் நத்தம் நகரத்தை அடைந்து அங்கிருந்து திருச்சி நோக்கி தப்பினோம் பிழைத்தோம் என ஒடினார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரிட்டீஸ் கவுன்சில் நத்தம் கணவாயை ஆபத்து பகுதியாக அறிவித்து அந்த வழியாக செல்லும் போது அனைத்து படைகளும் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என அறிவிக்கிறது.

இந்த சம்பவத்தை அனைத்து பிரிட்டீஸ் ஆய்வாளர்களும் தங்களது புத்தகத்தில் ஆவணப்படுத்தியுள்ளனர். கர்னல் ஹெரான் இருந்த வரை பிரிட்டிஸ் படைகளும்,கள்ளர் படைகளும் மாறி மாறி இழப்பை சந்தித்தது.


கம்பம் பள்ளத்தாக்கு- கிபி 1787 குறிப்பு 

(orme millitary transactions in hindoostan vol 1 :p(390-394)

(Yusuf khan the rebel commendant p 41-43)
நன்றி .
திரு . சியாம் சுந்தர் சம்பட்டியார் 
திரு. சோழ பாண்டியன்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்