திங்கள், 25 பிப்ரவரி, 2019

உசிலம்பட்டி "‘தங்க மகன்" கணேசன் தேவர்




கருமாத்தூர் நாட்டின் மூனுசாமி என்று அழைக்கப்படும் மூனு கோயிலில் இரண்டாவது கோயிலான பொன்னாங்கன் வாசல் ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆங்கால அய்யன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கும் கரிசல்பட்டி ஆறு பங்காளிகளின் சகோதரி வாரிசுகளான (பிச்சம்பட்டி செட்டிகுளம்) தடியன் மக்கள் இரண்டு தேவர் வகையரா சேர்ந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையை சேர்ந்த கணேசன்தேவர் கனடாவில் நடந்த, உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான, சர்வதேச தடகள போட்டிகளில், குண்டு, வட்டு, ஈட்டி எறிதலில் 2017 ஆம் ஆண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

உயரம் குன்றியவர்களுக்கான 7-வது உலக தடகள போட்டிகள் ஆகஸ்ட் 2017 ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்றது. இதில் 62 நாடுகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். தடகளம், நீச்சல், கால்பந்து, ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தியா சார்பில் 18 பேர் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில், கணேசன் ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்தார்.

இவர், சராசரி மனிதர்களை விட உயரம் குறைவானவர். கனடாவின் டொராண்டோவில் நடந்த சர்வதேச தடகள போட்டிகளில் குண்டு, வட்டு, ஈட்டி எறிதலில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

தற்போது 2019 பிப்ரவரியில் இல் ஷார்ஜாவில் நடந்த 'ஐ வாஸ்' மாற்றுத்திறனாளிகளுக்கான 48 நாட்டு வீரர்கள் பங்கேற்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் கணேசன் மூன்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.


ஷார்ஜாவில் நடந்த 'ஐ வாஸ்' மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் 40 வீரர்களும், அதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற 7 வீரர்களில் கணேசனும் ஒருவர்.

கணேசன் கூறியதாவது: “பத்தாம் வகுப்பு வரை படித்தேன். விவசாயம் போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தேன். சில ஆண்டுகளுக்கு முன், மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சியாளரின் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலம் தடகள பயிற்சிகளை, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பெற்றேன். தொடர்ந்து, சர்வதேச தடகள போட்டிகளில் கலந்து கொள்ள பணம் திரட்டுவதே, கடினமாக இருந்தது. ஒரு வழியாக கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளேன்.

கனடாவில் நடந்த சர்வதேச போட்டிகளில் வீரர்களை அவர்களது உடல் தகுதியைக் கொண்டு மூன்று பிரிவுகளாக பிரித்து அதில் கிடைக்கும் புள்ளிகளை கொண்டு பதக்கங்கள் கொடுத்தனர். ஷார்ஜாவில் ஒரே பிரிவாக கணக்கிட்டு புள்ளிகள் கொடுத்ததால் போட்டி கடுமையாக இருந்தது. அதனால் வெண்கலப்பதக்கங்கள் தான் கிடைத்தன. அடுத்து டோக்கியோவில் நடக்கும் பாராஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள பயிற்சி எடுக்கிறேன். இதற்கு நிறைய செலவாகிறது. அரசுஉதவி செய்தால் வசதியாக இருக்கும் என்றார்.

கள்ளர் பள்ளி, கள்ளர் பண்டு, கள்ளர் சீரமைப்புத் துறை





     இங்கே சொடுக்கவும் (click here)👉  குற்றப்பரம்பரை சட்டம்

பெருங்காமநல்லூர் அப்பாவி மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. எழுத்தறிவற்ற ஏழை, அப்பாவி விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஏற்க இயலாது என்றும், அந்தப் பகுதி மக்களின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கி நிவாரணம் தேடுங்கள் என்றும் பாராளுமன்றம் அறிவுறுத்தியதின் பேரில், கள்ளர் சமுதாய சீரமைப்புக்கென தனியே ஒரு துறையை உருவாக்கி நலத்திட்டங்கள் நிறைவேற்ற இந்தியாவிலிருந்த ஆங்கில அரசு நடவடிக்கை எடுத்தது. பிரிட்டிஷ் இந்திய அதிகார வர்க்கம் செய்த தவறுக்கு பிரிட்டிஷ் பாராளுமன்றமும், பிரிட்டிஷ் அரசும் தேடிய பிராயச் சித்தம் இது.

இந்த கொடிய சம்பவத்தை மறைப்பதற்காக கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் கல்வி, விவசாயம், தொழில், கூட்டுறவு, வேலைவாய்ப்பு மையம் போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.








இந்திய அரசுச்சட்டம், 1919 (Government of india Act, 1919) -ன்படி கள்ளர் சீர்திருத்த திட்டத்தை (Kallar Reclamation Scheme, 1920)-ல் அமல்படுத்தியது  
கொட்டாம்பட்டி, நத்தம், சிறுமலை, செம்பட்டி, திண்டுக்கல், அழகர் கோவில், அலங்காநல்லூர், நிலக்கோட்டை, சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி, வாடிபட்டி, திருமங்கலம், ஆண்டிபட்டி, சேடப்பட்டி, கம்பம், உத்தமபாளையம் ஆகிய பிரமலை கள்ளர் பகுதிகள் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டது.


கிபி1933ல் கள்ளர் மீட்பு திட்டத்தின் கீழ், கள்ளர் மக்களுக்காக, கள்ளர் உயர் நிலைப்பள்ளியும், கள்ளர் விடுதியும் ஆங்கிலேயர்களால் கட்டித் தரப்பட்டது.

இதனை திறப்பதற்காக அப்போதைய ஜார்ஜ் மன்னர், லேடி பிட்டிரிக்ஸ் ஸ்டான்லியுடன், கள்ளர் நாட்டின் மையப்பகுதிக்கு வருகை தந்தார்கள்.

அப்போது கள்ளர் நாட்டு சார்பாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
(Madras administration report : 1932-1933)



திண்டுக்கல், தேனி, உசிலம்பட்டி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்புத் துறை சார்பில் 260 பள்ளிகள் உள்ளன.

15 - மேல்நிலைப்பள்ளிகள்
23 - உயர்நிலைப்பள்ளிகள்
29 - நடுநிலைப்பள்ளிகள்
193 - ஆரம்பப்பள்ளிகள்  


கள்ளர் பள்ளிகள் இருக்கும் ஊர்கள்.



  1. தும்மக்குண்டு
  2. செக்காணூரணி
  3. நாட்டாமங்கலம்
  4. மேலக்கால்
  5. விளாம்பட்டி
  6. ராசதானி
  7. நெல்லூர் 
  8. மேலஉரப்பனூர்
  9. கப்பலூர்
  10. வடக்கம்பட்டி
  11. பூசலப்புரம்
  12. பெருங்காமநல்லூர்
  13. கர்க்காட்டாம்பட்டி
  14. தாடையம்பட்டி
  15. வெள்ளமலைப்பட்டி
  16. விக்கிரமங்கலம்
  17. அய்யப்பநாயக்கன்பட்டி
  18. க.பெருமாள்பட்டி
  19. பாப்பாபட்டி
  20. அன்னஞ்சி
  21. வெள்ளையம்மாள்புரம்
  22. கருநாக்முத்தம்பட்டி
  23. கள்ளபட்டி
  24. உத்தமபுரம்
  25. கம்பம்
  26. கூடலூர்
  27. சேவகம்பட்டி
  28. பி.அணைக்கரைப்பட்டி
  29. கொண்டமநாயக்கன்பட்டி
  30. சென்னமநாயக்கன்பட்டி
  31. எ.புதுப்பட்டி
  32. அய்யணார்குளம்
  33. துரைச்சாமிபுரம்
  34. புதூர்
  35. எருமார்பட்டி
  36. கவுண்டன்பட்டி
  37. பூச்சிபட்டி
  38. கருத்திவீரன்பட்டி
  39. குளத்துப்பட்டி
  40. கொப்புளிபட்டி
  41. மேர்க்கிளார்பட்டி
  42. மெய்யனம்பட்டி
  43. நக்கலப்பட்டி
  44. நல்லுத்தேவன்பட்டி
  45. நல்லிவீரன் பட்டி
  46. வி.பெருமாள்பட்டி
  47. பொட்டுலுபட்டி
  48. பண்ணைப்பட்டி
  49. பாப்பாபட்டி
  50. சில்லாம்பட்டி
  51. வகுரூரணி
  52. வெள்ளைமலைப்பட்டி
  53. கீரிபட்டி
  54. மானூத்து
  55. பூதிப்புரம்
  56. கட்டக்கருப்பன்பட்டி
  57. க.பெருமாள்பட்டி
  58. கோடாங்கிநாயக்கன்பட்டி
  59. மேலத்திருமாணிக்கம்
  60. சானார்பட்டி
  61. கட்டத்தேவன்பட்டி
  62. மதிப்பனுார்
  63. பெருங்காமநல்லூர்
  64. பசுக்காரம்பட்டி
  65. எ.மேட்டுப்பட்டி
  66. வில்லாணி
  67. பேயம்பட்டி
  68. வடுகபட்டி
  69. பெரியகட்டளை
  70. கள்ளபட்டி
  71. பூசலப்புரம்
  72. ஆனையூர்
  73. முத்துப்பாண்டிபட்டி
  74. சுலிஓச்சான்பட்டி
  75. தாடையம்பட்டி
  76. கன்னியம்பட்டி
  77. கல்லூத்து
  78. ஆ.இராமநாதபுரம்
  79. வளையபட்டி
  80. கருக்கட்டான்பட்டி
  81. கணவாய்பட்டி
  82. சோ.ஆலங்குளம்
  83. மேலஉரப்பனூர்
  84. புங்கங்குளம்
  85. பச்சக்கோப்பன்பட்டி
  86. ஊரண்டஉரப்பனூர்
  87. சித்தாலை
  88. சாத்தங்குடி
  89. செங்குளம்
  90. கரடிக்கல்
  91. குப்பணம்பட்டி
  92. ஆரியபட்டி
  93. அம்பட்டையன்பட்டி
  94. ஈச்சம்பட்டி
  95. கொடிக்குளம்
  96. டி.கருசல்பட்டி
  97. முண்டுவேலம்பட்டி
  98. நக்கலக்கோட்டை
  99. பன்னிக்குண்டு
  100. பொ.மேட்டுப்பட்டி
  101. சக்கிலியன்குளம்
  102. வலங்காகுளம்
  103. குமரம்பட்டி
  104. கம்மாளபட்டி
  105. உடையாம்பட்டி
  106. தேங்கல்பட்டி
  107. கண்ணனூர்
  108. கருமாத்தூர்
  109. க.கரிசல்பட்டி
  110. கோவிலாங்குளம்
  111. கருகப்பிலை
  112. கின்னிமங்கலம்
  113. கே. பாறைப்பட்டி
  114. கே.புளியங்குளம்
  115. மீனாச்சிபட்டி
  116. பன்னியான்
  117. பூச்சம்பட்டி
  118. சிக்கம்பட்டி
  119. சொரிக்காம்பட்டி
  120. வடக்கம்பட்டி
  121. சாக்கிலிபட்டி
  122. சி.வாகைக்குளம்
  123. நத்தப்பட்டி
  124. சங்கம்பட்டி
  125. பிச்சம்பட்டி
  126. சொக்கத்தேவன்பட்டி
  127. ஆ.கொக்குளம்
  128. போடியக்கவுண்டன்பட்டி
  129. தாடையக்கவுண்டன்பட்டி
  130. தர்மத்துப்பட்டி
  131. உச்சப்பட்டி
  132. அணைப்பட்டி
  133. முசுவனூத்து
  134. சித்தர்கள்
  135. நத்தம்
  136. சொக்குபிள்ளைபட்டி
  137. ஆவரம்பட்டி
  138. கீழப்பெருமாள்பட்டி
  139. நரியம்பட்டி
  140. வடிவேல்கரை
  141. தனக்கன்குளம்
  142. தெப்பத்துப்பட்டி
  143. வத்தல்பட்டி
  144. தாராப்பட்டி
  145. காடுபட்டி
  146. எழுவம்பட்டி
  147. கீழக்குயில்குடி
  148. அய்யப்பநாயக்கன்பட்டி
  149. M.புதுப்பட்டி
  150. விராலிமாயன்பட்டி
  151. விக்கிரமங்கலம்
  152. முத்துப்பட்டி
  153. கருத்தாண்டிபட்டி
  154. ராமராசபுரம்
  155. விளாச்சேரி
  156. அக்கரப்பட்டி
  157. ஆலங்கொட்டாரம்
  158. தும்முநாயக்கன்பட்டி
  159. கீழப்பட்டி
  160. கீரப்போத்தம்பட்டி
  161. நாயக்கன்பட்டி
  162. காக்கிவாடன்பட்டி
  163. அரப்படித்தேவன்பட்டி
  164. கதிர்நாசிங்காபுரம்
  165. முத்தனம்பட்டி
  166. பிராதுக்காரன்பட்டி
  167. ராமகிருஷ்ணாபுரம்
  168. சுப்லாபுரம்
  169. டி.சிலுக்குவார்பட்டி
  170. திருமலாபுரம்
  171. அம்மாபட்டி
  172. போடிகுப்பு
  173. மீனாச்சிபுரம்
  174. வாழையாத்துப்பட்டி
  175. தேவதானப்பட்டி
  176. சல்லிபட்டி
  177. அன்னஞ்சி
  178. இ.புதுப்பட்டி
  179. செயமங்கலம்
  180. டி.காமக்காபட்டி
  181. புல்லக்காபட்டி
  182. கோட்டார்பட்டி
  183. தும்மலப்பட்டி
  184. போடி கிழக்கு
  185. பெருமாள்கவுண்டன்பட்டி
  186. பொம்மையக்கவுண்டன்பட்டி
  187. சில்வார்பட்டி
  188. பிச்சம்பட்டி
  189. வண்டல் காட்டுப்பட்டி
  190. கருவேல்நாயக்கன்பட்டி
  191. வடகரை
  192. அணைக்கரப்பட்டி
  193. மார்க்கையன்கோட்டை
  194. இராயப்பன்பட்டி
  195. தேவாரம்
  196. காமயக்கவுண்டன்பட்டி
  197. மேலக்கூடலூர்
  198. கீழக்கூடலூர்
  199. ராமசாமிநாயக்கன்பட்டி
  200. அணைப்பட்டி
  201. அனுமந்தன்பட்டி
  202. நாராயணத்தேவன்பட்டி
  203. சுருளிப்பட்டி
  204. குள்ளப்பக் கவுண்டன்பட்டி
  205. கருநாக்கமுத்தன்பட்டி
  206. எம.புதுப்பட்டி
  207. கன்னியம்பட்டி
  208. உத்தமபுரம்
  209. எம்.பெருமாள்பட்டி
  210. பூசாரிக் கவுண்டன்பட்டி
  211. அப்பிபட்டி
  212. வெள்ளையம்மாள்புரம்
  213. சுக்காங்கல்லுப்பட்டி
  214. ஊத்துப்பட்டி
  215. கூளையனூர்
  216. முத்தையன் செட்டிபட்டி
  217. ஊ.அம்மாபட்டி
  218. மல்லைக்கவுண்டன்பட்டி
  219. பாலார்பட்டி
  220. கோகிலாபுரம்
  221. உப்புக்கோட்டை
  222. சின்னமனூர்
  223. எழுவம்பட்டி
  224. ஆணைமலைப்பட்டி
  225. பன்னப்புரம்
  226. கம்பம்
  227. ஓடைப்பட்டி
  228. கோ.துரைச்சாமிபுரம்
  229. எம்.குரும்பபட்டி
  230. தெல்லூர்
  231. என்.கோவில்பட்டி
  232. சென்னமநாயக்கன்பட்டி
  233. பொன்னிமாத்துரை
  234. சுரக்காய்பட்டி
  235. வெயிலடிச்சான்பட்டி
  236. ஆவரம்பட்டி
  237. எல்லப்பார்பட்டி
  238. செத்துப்பட்டி
  239. கோடாங்கிபட்டி
  240. எலப்பார்பட்டி
  241. காமுடள்ளைசத்திரம்
  242. ஒத்தையூர்
  243. செம்பட்டி
  244. மேட்டூர்
  245. சொக்கலிங்காபுதூர்
  246. கொண்டமநாயக்கன்பட்டி
  247. சேவுகம்பட்டி
  248. குட்டிநாயக்கன்பட்டி
  249. பட்டிவீரன்
  250. நரசிங்காபுரம்
  251. சொட்டமாயனூர்
  252. கிருஷ்ணாபுரம்
  253. மத்தனம்பட்டி
  254. சின்னாலபட்டி
  255. பள்ளபட்டி
  256. சாமியார்பட்டி
  257. நாயக்கனூர்
  258. குட்டியபட்டி
  259. எஸ்.குரும்பட்டி
  260. மல்லணம்பட்டி

கள்ளர்களுக்கு “சீர் பழங்குடியினர்” (Denotified Tribes) என்று சான்றிதழ் கொடுக்கப்பட்டு வந்தது. இது இந்தியா முழுவதும் குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட சாதி மக்களுக்கு வழங்கப்பட்டது. 1978 இதனை “சீர் மரபினர்” (Denotified Community) என்று மாற்றி விட்டார். 

குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய பிரமலைக் கள்ளர்களைப் பெருங்காமநல்லூரில் படுகொலை செய்த ஆங்கிலேய அரசு, பெருங்காமநல்லூர் கலவரம் நடந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு 20.8.1920இல் அவ்வூரில் கள்ளர் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

அப்பள்ளிக்காக 1925 இல் இரண்டு நீண்ட அறைகளைக் கொண்ட ஓடு வேயப்பட்ட, உடைகற்களால் ஆன வலிமையான சுவருடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் நூற்றாண்டைக் கொண்டாடவிருக்கும் அந்தக் கட்டிடமே தற்பொழுது இடிபடக் காத்துக் கொண்டிருக்கிறது. கட்டடம் வலிமையாகத்தான் இருக்கிறது. இருப்பினும் பள்ளிக் கல்வித்துறையில் வருடந்தோறும் ஒதுக்கப்படும் பணத்தை கணக்குக் காட்டுவதற்காக இவ்வாறான புராதன கட்டடங்கள் கண்மூடித்தனமாக இடித்தழிக்கப்படுகின்றன.

முதல் கள்ளர் பள்ளியான தேனி மார்க்கையங்கோட்டையிலுள்ள பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்ட பொழுது அங்கிருந்த பழமையான கல்வெட்டும் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நக்கலக்கோட்டையிலுள்ள பழைய கள்ளர் பள்ளி கட்டம் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டது. தற்பொழுது அப்புதிய கட்டடம் பழையதை விட கேவலமாக உள்ளது. கட்டத்தேவன்பட்டி கள்ளர் பள்ளி இடிக்கப்பட்டுவிட்டது. இன்னும் இடிபடுவதற்காகப் பல கட்டடங்கள் அரசின் பட்டியலில் இருக்கலாம். தும்மக்குண்டிலுள்ள பழைய தொடக்கப்பள்ளி கட்டடம்(1921) பழைமையானது. பூட்டி கிடக்கும் அக்ககட்டடத்தை விரைவில் இடித்துவிடுவார்களோ என்று தோன்றுகிறது.

கள்ளர் பள்ளிகள் பிரமலைக் கள்ளர்களின் அடையாளங்கள். அவர்கள் சந்தித்த குற்றப் பரரம்பரைச் சட்ட ஒடுக்கு முறையின் வாழும் சாட்சிகள் அவை. பெரும்பான்மையான கள்ளர் பள்ளிகள் 2020இல் நூற்றாண்டை அடைந்துவிடும். கள்ளர் பள்ளிகளின் நூற்றாண்டு விழாவை அரசு நிச்சயம் கொண்டாடாது. நாம்தான் கொண்டாட வேண்டும். அதற்கு கள்ளர் பள்ளி கட்டடங்கள் அதன் பழமை மாறாமல் காப்பாற்றப்பட வேண்டும். கள்ளர் பள்ளிகள் மட்டுமல்லாது குற்றப் பரம்பரைச் சட்டத்தின் நினைவுச் சின்னங்களான கீழக்குயில்குடி நீதி மன்றம், பூசலப்புரம் காவல் நிலையம், சிந்துபட்டி காவல் நிலையம், உசிலை போர்டு ஹைஸ் ஸ்கூல் பழைய கட்டிடடம் முதலியவற்றை பாரம்பரியக் கட்டடங்களாக நாம் பாதுகாக்க வேண்டும். இதன் முதல் படிநிலையாக இடிபடக் காத்திருக்கும் பெருங்காமநல்லூர் பள்ளியைக் காப்போம் வாருங்கள்.

கள்ளர் மாணவிகள் விடுதி

கள்ளர் சீரமைப்புத் துறை உருவாக்கிய மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா செக்கானூரணியில் பிரமலைக் கள்ளர்களின் மாணவிகளுக்கு 1945ஆம் ஆண்டு மாணவிகளுக்கான விடுதிகள் கட்டிக் கொடுக்கப்பட்டது தற்போது உள்ள அந்தக் கட்டடத்தின் படங்கள்.






கள்ளர் கூட்டுறவு விற்பனை சங்கம் 






கள்ளர் பள்ளிகள்










அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளி கல்லூத்து






























































கண்டிஷன் ஜாரி நிலங்கள்


பிரமலைக் கள்ளர்கள் முன்னுக்கு வருவதற்காக நிலமும் வழங்கி னார்கள். அப்படி வழங்கப்பட்ட 'கண்டிஷன் ஜாரி நிலங்களை' விற்கவோ வாங்கவோ கூடாது என்பது அரசாணை. சுதந்திரப் போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பிரமலைக் கள்ளர்களும் கணிச மான அளவில் பங்கெடுத்தார்கள். அதனால், அவர்கள் எல்லாம் பிரிட்டீஷ் அரசாங்கத்தால் நாலா திசைகளிலும் விரட்டி அடிக்கப்பட்டனர். அப்படி ஓடியவர்களின் ஜாரி நிலங்கள் எல்லாம் அப்போது பிரிட்டீஷ் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த பிற சாதிக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. காலப்போக்கில் விதிகளை மீறி அந்த நிலங்களுக்கு பட்டா மாறு தலும் செய்திருக்கிறார்கள்.


இப்படி அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டுக் கொடுக்கச் சொல்லி பசும்பொன் தேவர் காலத்திலிருந்தே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. நாங்கள் ஒன்றுகூடினால் வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்து விடுவோமோ என்ற பயத்தில் அரசியல் கட்சியினர் சதி செய்து எங்களைப் பிரித்து விடுகிறார்கள். கண்டிஷன் ஜாரி நிலங்கள் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு கொடுத்ததற்கு, பெரியகுளம் தாலுக்காவில் 800 ஏக்கர், தேனியில் 400 ஏக்கர், ஆண்டிபட்டியில் 300 ஏக்கர் நிலங்கள் இருப்பதாக தகவல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இவைகளில் பெரும்பகுதி வேறு சமுதாயத்தினர் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுவிட்டது'' என்றார். 











விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அய்யம்பட்டி தேவர் தெருவில் உள்ள "அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி" மங்காபுரம்.



இப்பள்ளி பிரிட்டிஷ் அரசால் 1992 ஆம் ஆண்டு கட்டப்பட்டு உள்ளது என்பதற்கு சான்றாக பள்ளியின் பின்பகுதி சுவற்றிலும்,இப்பள்ளி காக வெட்டப்பட்ட கிணற்றின் சுற்றுச் சுவற்றிலும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளது.



கீழக்குயில்குடி















வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்