சனி, 15 செப்டம்பர், 2018

பொ. ஆ 1758 இல் கள்ளர்கள் துணைக் கொண்டு பிரஞ்ச் கூட்டுப்படைகளை வெற்றிக்கொண்ட தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப் சிங்




கிபி 1758 ஆகஸ்ட் மாதத்தில் மைசூர் மற்றும் பிரஞ்ச் கூட்டுப்படைகள் தஞ்சையை சூரையாட முற்பட்டு பல ஆயிரக்கணக்கான வீரர்கள், குதிரைகள் மற்றும் பீரங்கிகளுடன் தஞ்சை வந்தடைந்தனர்.

இந்த போரில் மிகவும் முக்கியமான நபரும் ஒட்டுமொத்த பிரஞ்சு படையின் கவர்னர் ஜென்ரலான Mr. Lally அவர்களே இந்த களத்தில் பங்குகொண்டது தான் சிறப்பம்சமே.


மன்னர் பிரதாப் சிங் தஞ்சை கள்ளர் நாடுகளின் உதவியை நாடியதின் பெயரில், இந்த மிகப்பெரிய போரில் மிக முக்கிய பங்காற்றியவர்கள் கள்ளர் பெருமக்களே.

இந்த வரலாற்றில் தஞ்சை கள்ளர் பெருமக்களை பிரஞ்சுக்காரர்களும், மைசூர் படையினரும்

“வெட்டுக்கிளி ஒரு காட்டில் புகுந்தால் எப்படி அந்த காடு சர்வ நாசம் ஆகுமோ அதேபோல் கள்ளர்கள் களம் புகுந்தால் அந்த போர்களம் முற்றிலும் அழிந்துவிடும்” என்கிறார்கள்



தஞ்சை கள்ளர்கள் பிரஞ்சு மட்டும் மைசூர் படையினரின் இராணுவ முகாமிற்கு புகுந்து அந்த முகாமை முற்றிலுமாக தகர்த்து இராணுவ தடவாளங்களை சூரையாடி சர்வ நாசம் செய்கிறார்கள்.

மேலும் கள்ளர்கள் மிகத்தந்திரமாக பிரங்கியை இழுத்து செல்லும் குதிரை மற்றும் எருதுகளை பாதிக்கும் மேல் கவர்ந்து சென்றுவிடுகிறார்கள்.


இதனால் பிரங்கியை நகர்த்தி சென்று எதிரிகளால் மறு தாக்குதல்கள் நடத்த முடியவில்லை.

இவ்வளவு வீரமாகவும், தந்திரமாகவும் போர் புரியும் தஞ்சை கள்ளர் பெருமக்களை மைசூர் தளபதிகள் சையது மெஹக்ம், அலிகான் மற்றும் பிரஞ்ச் மேஜர் பிரிஷ்டன் கொஞ்ச கள்ளர்களுக்கு மட்டுமே பதிலடி கொடுக்க முடிந்தது.



இந்த தாக்குதலால் நிலை குலைந்து குழப்பமான பிரஞ்ச் மற்றும் மைசூர் கூட்டுபடையினர் தோல்வியை தழுவுகிறார்கள். அவர்கள் பிரங்கியை இழுத்து செல்வதற்காக வைத்திருந்த எருதுகளும்,குதிரைகளும் கள்ளர்கள் கவர்ந்து சென்றதால் பல பீரங்கிகளை கைவிட்டு சென்றுவிடுகின்றனர்.

தாங்கள் கவர்ந்து வந்த குதிரைகளையும்,எருதுகளையும் வெற்றிக்காக போராடிய தஞ்சை மராட்டிய படையின் சிப்பாய்களுக்கு பகிர்ந்தளித்து மகிழ்கிறார்கள்.

மேலும் கவர்ந்து வந்த பீரங்கிகளையும்,தடவாளங்களையும் தஞ்சை மன்னர் பிரதாப் சிங்கிடம் கொடுத்து “சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர்கள் கள்ளர்கள்” என்பதை நிருபிக்கிறார்கள்.


கள்ளர் பெருமக்களின் இந்த வீரத்தை போற்றி தஞ்சை மன்னர் பிரதாப் சிங் பலவிதமான பரிசுகளை அளித்து மகிழ்கிறார்.

ஆய்வு

உயர்திரு. சோழபாண்டியன்

ஆதாரம்




Madras university Islamic studies No.4
Source of the history of the Nawwabs of the carnatic by Mr.Burgan Ibn Hasan

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்