புதன், 28 மார்ச், 2018

இந்திய கால்பந்தாட்ட வீரர் ராமன் விஜயன் அம்பலம்



இந்திய கால்பந்தாட்ட ரசிகர்களால் 
"கோல்டன்கோல் விஜயன்" எனப்போற்றப்பட்ட அருந்ததிராமன் அம்பலம் அவர்களின் தவப்புதல்வன் சர்வதேச கால்பந்தாட்டவீரர், சிவகங்கைச்சீமை, கண்டரமாணிக்கம் இராமன் விஜயன் அம்பலம்.

நாடறிந்த கால்பந்தாட்ட வீரர். கிழக்கு வங்கம், எம்.டி. ஸ்போர்ட்டிங், மஹிந்த்ரா யுனைட்டெட், எஃப்.சி. கொச்சி, டெம்போ ஆகிய அணிகளுக்காக தேசிய கால்பந்து லீக் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். 


2012 ஆம் ஆண்டுமுதல் கால்பந்தாட்டப்பயிற்சியாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். கே.ஜி.எஃப் அகாடமி, சவுத் யுனைட்டெட், டெல்லி டைனமோஸ் உள்ளிட்ட பல அணிகளுக்குப் பயிற்சியளித்திருக்கிறார். கால் பந்தாட்டப் பள்ளியை நடத்திவருகிறார். இளைஞர் சமுதாயம், விளையாட்டிலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பதிலும் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.



சிங்கப்பூரில் நடந்த சிங்கா கோப்பை கால்பந்துப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை சிட்டி கால்பந்து கிளப் அணி அரையிறுதி வரை முன்னேறியது. சிங்கப்பூரில், 2011 முதல் சிங்கா கோப்பை என்கிற சிங்கப்பூர் சர்வதேச இளைஞர் கால்பந்துப் போட்டி நடைபெற்று வருகிறது. 18, 16, 14, 12 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையே நடக்கும் போட்டி இது. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் என பல நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை சிட்டி கால்பந்து கிளப் அணி சிறப்பாக ஆடியுள்ளது.

18 வயதுக்குட்பட்ட அணியில் குரூப் ஏ அணியில் இடம்பெற்ற சென்னை சிட்டி அணி, 4 ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் தோற்று பிறகு, 3-ம் இடத்துக்கான போட்டியிலும் தோல்வி அடைந்து 4-ம் இடத்தைப் பிடித்தது.


சென்னை சிட்டி அணி, இந்த வருடம்தான் சிங்கா கோப்பைப் போட்டியில் முதல்முறையாக பங்கேற்றுள்ளது. அணியின் பயிற்சியாளரான முன்னாள் இந்திய வீரர் ராமன் விஜயன் கூறும்போது, “இந்த வெற்றியை எதிர்பார்த்தோம். சென்னை சிட்டி அணி வீரர்கள் செயற்கை புல்தரையில் விளையாடியது கிடையாது. ஆனாலும் சிங்கப்பூரில் சிறப்பாக ஆடினார்கள்.” என்றார். விஜயனால், ராஜபாண்டி போன்ற கிராமங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட திறமையான இளைஞர்கள், ரோஹித் ரமேஷின் சென்னை சிட்டி கால்பந்து கிளப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள சென்னை சிட்டி கிளப்பின் அகாடமியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.


Raman Vijayan (born 4 June 1973) is a former an Indian football player and current manager.

Raman is one of two Indian footballers, other than Baichung Bhutia, to be the top scorer in the old National Football League after he scored 10 goals during the 1997-98 season.


Raman started his footballing career with East Bengal FC before the National Football League began in 1996. After the 1997-98 season, Raman became the top scorer in the NFL that season after he scored 10 goals.

Later in his career, he went on to play for CPT in the Calcutta Football League.

Raman has represented the India national football team during his playing career.

Coaching career : For the 2012 I-League 2nd Division Raman was hired to coach Bangalore side KGF Academy.

After coaching South United, Vijayan went back to Tamil Nadu to coach Chennai FC.

In July 2015, it was announced that Vijayan would become the assistant coach at Indian Super League side Delhi Dynamos. He would also be the technical director of the team's grassroots program.



வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்