திங்கள், 23 ஜூலை, 2018

பொ. ஆ 1655 - மதுரை நாட்டின் தலைவன் திருமலை பின்னத்தேவன்


நாயக்க அரசு, குமரி முனையிலிருந்து சத்தியமங்கலம் வரையிலான தமிழரின் நிலப்பரப்பை கைப்பற்றி ஆண்ட ஓர் அரசு, எழுபத்திரண்டு பாளையங்களை உருவாக்கி வரி வசூல் செய்து ஆட்சி நடத்திய ஓர் அரசு, தன் அரண்மனைக்கு சில மைல் தொலைவில் இருந்த கள்ளர் நாட்டிலிருந்து எந்த வரியும் வசூல் செய்ய முடியவில்லை.


தொட்டிய நாயக்கர் மதுரையில் ஆட்சி அமைக்கும் போது எதிர்த்து அடித்தனர் கள்ளர் குடிகள்( காலம் கிபி 1560), * Madura - country of kallar caste* என மதுரையை கள்ளரின் நாடாக குறித்த மெக்கன்சி ஒலைச்சுவடிகள்.

கிபி 1654 ல் கள்ளர்களை ஒடுக்க பல முயற்சி செய்த திருமலை நாயக்கன், கள்ளர் நாடுகளை அடக்கி ஒரு பாளையம் அமைக்கமுடியால் தினறியபோது ஒரு சமரசத்திட்டத்திற்கு வந்தான், எட்டு நாட்டிலும் கம்பளி விரித்து அதிகாரம் பன்ன உரிமை கொடுத்து உரப்பனூர் பின்னத்தேவருக்கு பட்டம் கட்டி, மேலும் பின்னத்தேவன், சுந்ததேவனை அழைத்து பல பட்டங்கள் பல பரிசுகள் கொடுத்து நட்பு பாராட்டிய மதுரை கள்ளர் நாடுகளை நட்பு நாடுகளாக மாற்றிக்கொண்டான்.

தருமத்துப்பட்டி செப்பேடு (1655):



மதுராபுரிக்கி கற்த்தறாகிய திருமலை னாயக்கறவற்களுக்கு பெத்த பிள்ளை திருமலைப்புன்னைந்தேவனுக்கு எழுதிக் குடுத்த பட்டயம் செயளு பங்குனி ... சோமவாறத்தில் நாடு யெட்டு வணிகத்துக்கும் கம்பிளி அதிகாரமும் புடிசெம்பும் பட்டமும் முதமையும் பாதகொறடு காளாஞ்சியும் ஆகா யிவளவும் திருமலைப் புன்னைதேவனுக்கு பட்டங்கட்டி ஸ்ரீ யானுக்கு வருமானம் சாதியாற் நாட்டில் வந்தது கம்பிளி போடுகிறபோது பாதக்கணிக்கை 5 வச்சு கண்டு கொள்கிறரது ரெண்டாவது சுந்தத்தேவன் மூணாவது ஒச்சாத்தேவன் திருமலை புன்னைத்தேவனுக்கு அரமனையிலிருந்து 60 பண முடிப்பு குடுத்தனுப்புகிரது ஷியானுக்கு பெண் குளந்தை பிரந்ததக்கு திருமலைப் புன்னியக்காளென்று பேறும் வச்சு தங்கப்பதைக்கமும் போட்டு வீரமடையான் செய்க்கி கிளக்கு கணக்கு மானிபத்துக்கு வடக்கு நாலுசெயி நிலம் நஞ்சை மானிபம் பாக்கு வெத்திலை சிலவுக்கு உச்சப்பட்டி தற்மத்துப்பட்டி ஆக ரெண்டுகிராமம் விட்டுக் குடுத்தது பதினெட்டுப் பட்டிக் கோ னாக்கள் ஆடி தீவாளி சங்கழுந்திக்கி கும்புக்(கு) கிடாய் க னாக்கமாற்கள் பால்க்குடம் நெய்க்குடம் கொண்டு வந்து கண்டு கொள்ளவும் யிந்தப்படிக்கி ராசமானிய ஒப்பம் சாட்சி சிவசங்குராச தொண்டைமான், புதுக்கோட்டை சிவதத்தம்பி, கறுமாத்தூற் கொண்டிரியதேவன் தாம்பூர ப்பட்டயஞ் செய்தவன் ஆசாரி யிந்தப் பட்டயத்தை பின்னோர்கள் அடி அளிவு செய்தால் பிராமணாளைக் கொன்றதோசத்திலுங் காறாங்கோவைக் கொன்ற தோசத்திலு அடைந்து போவாறாகவும் வேணும் சொக்கலிங்கம் மீனம்மாள் துணை முணுசாமிதுணை.



அரையன் பின்னத்தேவர்

பின்னத்தேவர் இந்த எட்டுநாட்டின் தலைவராகவும் (எட்டு நாடு 24 உபகிராமம், 64 பரப்பு நாடு, 128 சிதறல் நாடு), அவர் வாழ்ந்த உரப்பனூர் கிராமம் எட்டுநாட்டின் தலைமை இடமாகக் கருதப்பட்டது. புறமலை நாட்டின் (இராஜதானி) தலைமை கிராமம் இராஜதானி உரப்பனூர்.

திருமலை பின்னத்தேவரின் முன்னோர்கள் கீழ உரப்பனூர் கல்யாண கருப்பசாமி என்று அருள் பெயர் விளங்கும் புன்னூர் அய்யன் கோயிலை தங்களது குலக்கோயிலாக கொண்ட பின்னத்தேவர், கட்டபின்னத்தேவர், காரிபின்னத்தேவர். 


1000 வீட்டிடையர்களின் காப்பாளனாக (காவல் தெய்வமாக) திருமலை பின்னத்தேவன் இருந்தார்.

திருமலை பின்னத்தேவன் வகையறாக்களுக்கு பட்டம் கட்டி செங்கோல் வழங்கும் உரிமை மதுரை வடக்கு மாசி வீதி குருசாமி கோனார் வகையறாக்கள் வழங்கப்பட்டுள்ளது. 








A SOUTH INDIAN SUB CASTE BY - DR.LOUIS DUMONT (French Anthropologist)


திருநெல்வேலி ஜில்லாவில் புதுநாட்டில் வாழ்ந்த இடையர்களுக்கு அங்கிருந்த பாளையக்காரன் தொந்தரவு சகிக்க முடியாமலிருந்தபடியால் அந்தநாட்டு இடையர்கள் ஒன்று சேர்ந்து மதுரைக்கு ஓடிவந்து திருமலை நாயகனிடம் அடைக்கலம் புகுந்தார்கள். நாயக்கர் கள்ளர் தலைவன் திருமலை பின்னதேவரை புதுநாட்டு இடையர்கள் ஆயிரம் வீட்டுக்கார்களுக்கு அதிபதியாக நியமித்து அவர்களுக்கு இடையூறு இல்லாமல் பரிபாலித்து வரும்படியாகச் செய்தார்.

இம்மாதிரியாகத் தங்களைப் பரிபாலித்து வரும்படி யாக மன்னனால் நியமிக்கப்பட்ட திருமலைப்பின்னத் தேவர் காலமாகிவிட்டால் அவர் ஸ்தானத்திற்கு வாரிசாக வரும் அடுத்த பட்டக்காரருக்கு முடி சூட்ட வேண்டிய பொறுப்பு இடியர்களுடையது. (மதுரை ஜில்லா கெஜட்டியர்) 

மதுரையில் இராமாயணச்சாவடியிலிருந்து மாரியம்மன் தெப்பக்குளம் வரையிலும் உள்ள இடத்தில் ஆயிரம் வீட்டு இடியர்களுக்கு வீட்டுவசதி செய்து கொடுக்கத் தேவர் வசம் ஒப்புவிக்கப்பட்டு அதன்படி வீடுகள் அமைக்கப்பட்டன. இவர்களை இடையர்கள் என்றும் கோனார்கள் என்றும் கோங்கிமார்கள் என்று சொல்வதுண்டு. மதுரைக்கு வடக்கிலும் வடமேற்கில் உள்ள 18 பட்டி (ஊர்கள்) இவர்கள் கன்று காலி ஆடுமாடு மேய்த்துக்குடி வாழ்வதற்கு நாயக்க மன்னர்களால் விடப்பட்டது.

மதுரையில் இராமாயணச்சாவடி மேற்கே உள்ள கிருஷ்ணன் கோவில் கோங்கிமார்களுக்கு சொந்தம். இந்த கோவிலுக்குத் திருமலை பின்னதேவன் பாதுகாவலனாகும். விழாக்காலங்களில் தேவருக்கு பட்டம் பரிவட்டம், பாதகாணிக்கை, தீர்த்தம் துளசி மரியாதையும் உண்டு. இவர்களின் காவல் தெய்வமாக இருந்தார்.


ஆதித்திருமலை பின்னத்தேவரில் இருந்து பாத்து பேர் பட்டம் ஆண்டிருக்கிறார்கள்.


1) ஆதித்திருமலை பின்னத்தேவர்
2) திருமலை பெருமாள் தேவர்
3) திருமலை பின்னத்தேவர்
4) திருமலை மூக்குப்பரி பெரியபாண்டி தேவர்
5) திருமலை பின்னத்தேவர்
6) திருமலை மூக்குப்பரி கலியாணித்தேவர் 
7) திருமலை ஆணைஞ்சித்தேவர் 
8) திருமலை மூக்குப்பரி கலியாணித்தேவர் 
9) திருமலை ஆணைஞ்சித்தேவர் 
10) திருமலை பின்னத்தேவர்

மேலும் தெய்வேந்திர கோத்திரமாகிய திருமலை பின்னதேவனை சேர்ந்த ஆறு தாய் மகன்களும் திருமலை நாயக்கனை சந்திக்கும் போது கீழ்கண்டவற்றை அளித்துள்ளனர்.


1) தங்கத்தால் செய்யப்பட்ட கிளியின் சிலை
2) தங்க பூக்கள்
3) வெள்ளி பூக்கள்
4) அரிசி
5) பணம்
6) பசு
7) ஆடு

இதனை பெற்றுக்கொண்ட திருமலை நாயக்கன் மகிழுந்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து குடுத்தார்.

மூக்குப்பரி பட்டம்


கி.பி. 1656ல் மைசூர் படை பழிவாங்க வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன், மதுரை நாட்டிற்கு கம்பையா என்பவன் மைசூர்படைக்கு தலைமை ஏற்று வந்தான் மிகக் கொடியவன். மைசூர் மன்னன் கட்டளைப்படி மதுரை நாட்டிற்கள் புகுந்து ஆண் பெண்கள் குழந்தைகள் இப்படி ஆயிரக்கணக்கான பேர்களை பிடித்து அவர்களின் மூக்கை அறுத்து சாக்குப் பைகளில் போட்டுக் கட்டி மைசூருக்கு அனுப்பி வைத்தான். அதோடு நிறுத்தாமல் கொள்ளையும் அடித்தான். சிக்கியவர்களை வெட்டிக் கொலைகளும் செய்தான். இதை அறிந்த திருமலை நாயக்கர், திருமலை பின்னத்தேவருக்கும், இராமநாதபுரம் சேதுபதிக்கும் தன் மனைவி மூலம் கடிதம் எழுதி, மதுரையைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைக் கண்டவுடன் தாமதியாமல் தன் படைகளுடன் வந்து மதுரை படைகளையும் ஒன்று சேர்த்து கடும் போர் செய்த மைசூர் படைக்கு பெரிய சேதத்தை உண்டாக்கி விரட்டியடித்து விட்டு மதுரையைக் காத்தார். இந்த போரில் இரு தரப்பினரிலும் உயிர் விட்டவர்கள் அதிகம்.


அதே நேரத்தில் தன்னரசு படைகள், கன்னிவாடி, விருப்பாச்சி படைகளை சேர்த்துக்கொண்டு மைசூர் படைகளை விரட்டித் தொடர்ந்து சென்றனர். திருமலை பின்னத்தேவர் தலைமையில் சென்ற படைகள், மதுரையில் பொது மக்களின் மூக்கை அறுத்த போது தளபதியாக இருந்த தளபதி கம்பையாவின் மூக்கையும், கடுக்கனோடு காதையம் ஆறுத்துக் கொண்டு மதுரை வந்தார்கள். மைசூர் மக்களுக்கும் அவர்களின் படைகளுக்கும் தொல்லை கொடுக்காமல் தளபதியை மட்டும் இப்படிச் செய்து வந்ததை அறிந்த திருமலை மன்னர், பின்னத்தேவருக்கும் மூக்குப்பரி என்ற பட்டம் வழங்கினார். சேதுபதிக்கு திருமலை சேதுபதி என்ற பட்டமும் ராணி சொல் காத்தான் என்ற பெயரும் வழங்கினார்.

தருமத்துப்பட்டி செப்பேடு (1655):






நன்றி: 

உயர்திரு. ஐயா முத்து தேவர் (மூவேந்தர்குலதேவர்சமூகவரலாறு)
உயர்திரு. த. வல்லாளத்தேவர்( கள்ளர் நாடு அறக்கட்டளை )

ஆய்வு: திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்