சனி, 5 மே, 2018

கள்ளர் ஜல்லிக்கட்டு
கள்ளர் நாடுகளில் மட்டுமே உள்ளன ஜல்லிக்கட்டிற்கான உட்கட்டமைப்புகள். அக்காலத்தில் சிறந்த ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களாக திருமங்கலம் மற்றும் மேலூர் பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக கள்ளர் வாழும் கிராமங்களில், அதிலும் திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளர்களால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதாக குறிக்கப்பட்டுள்ளது.


மஞ்சுவிரட்டு அல்லது ஜல்லிக்கட்டு அல்லது ஏர்தழுவுதல் கள்ளர் கிராமங்களில் அதிக அளவில் நடைபெற்றுள்ளது. காலை 8 மணியளவில் போட்டிகள் தொடங்கும், மாட்டின் கொம்பு அல்லது கழுத்தைச்சுற்றி துணிகளை கட்டியிருப்பார்கள். " டம் டம்" என ஒலி ஒலிக்க கூடியிருக்கும் மக்களின் சத்தம் அதிரவைக்க போட்டி துவங்கும். காளைகளை முரட்டுதனமாகவும் அதே சமயத்தில் சமயோசிதமாகவும் செயல்பட்டு அடக்கிப்பிடித்து, துணியை அவிழ்ப்போர். அவர் அந்த நாளின் நாயகனாக கொண்டாடப்படுவார் சன்மானமாக மாட்டின் கொம்பில் சுற்றி வைக்கப்பட்ட துணியில் உள்ள பணம் அன்பளிப்பாக தரப்படும். பொங்கல் நாளிலிருந்து இரண்டு மாதங்கள் அனைத்து கள்ளர்வாழும் பகுதிகளிலும் நடைபெறும். உடல் வழுவில்லாமல், போதிய அறிவில்லாதவர்களுக்கு இங்கு காயங்கள் பரிசாக தரப்பட்டுள்ளன காளைகளால். 

ஏழுகிளை கள்ளர் சீமையான தேவகோட்டை,கள்ளர் நாடான கண்டதேவியில் சிறுமருதூர் இராஜ்குமார் அம்பலகாரர் தலைமையில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு. கீழே 
வடமாடு மஞ்சுவிரட்டு என்பது சாதாரண ஜல்லிக்கட்டு போட்டியில் இருந்து வேறுபட்டது. செம்புலி ஆட்டிற்கு கிடைபோடுவதுபோல சுற்றி வட்டவடிவில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு காளை அதிகபட்சம் 25 நிமிடங்கள் களத்தில் விளையாடும். அதுபோல வீரர்களும் கபடி விளையாட்டை போல 7-10 நபர்கள் மட்டுமே ஒரு போட்டிக்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். மிகவும் ஆக்ரோஷமாக நடைபெறும் இப்போட்டியில் பரிசுகளும் அதிகம். இரண்டாம் ஆண்டாக இப்போட்டியை நடத்தி சிறப்பித்துள்ளார்கள் கள்ளர்குல முத்துராமலிங்கம் அம்பலகாரர் வம்சத்தார்கள்.தஞ்சை ,திருச்சி மண்டலங்களில் உள்ள கள்ளர் நாடுகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள். பெரிய சூரியூரில் மாட்டுப்பொங்கல் அன்றும். கூத்தாப்பாரில் பிப்ரவரி மாதத்தில் வரும் சிவன் இராத்திரி அன்றும். அன்பில், துவாக்குடி, நவல்பட்டு, பூதலூர் கோவில் பத்தில் மார்ச்சு,  மே மாதத்தில் நடக்கும்.

புத்தகம் :மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு(ஆண்டு :2000), ஆசிரியர் : சிவக்கொழுந்து

பாரம்பரியமாக ஜல்லிக்கட்டுகள் நடைபெறுவது மதுரை கள்ளர் நாடுகளிலே. மேலூர், திருமங்கலம் போன்ற கள்ளர் நாட்டு பகுதிகளில் சிறந்த ஜல்லிக்கட்டுகள் நடந்தன். ஜல்லிக்கட்டுகள் கள்ளர்களால் மிக அதிகமான ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது ( Madurai manual nelson கிபி 1890)


ஜல்லிக்கட்டு ---- 130 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்று குறிப்புகளில் (Manual of pudukkottai state vol 1 P 73) இந்த மாடுபிடி விளையாட்டு ஜல்லிக்கட்டு (இ) மஞ்சுவிரட்டு என அழைக்கபடுகிறது. ஜல்லிக்கட்டு நடப்பதற்கு முன் தப்பு அடிப்பவர்களால் அருகாமையிலுள்ள கிராமங்களில் ஜல்லிக்கட்டு குறித்து விளம்பரம் செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடைபெறும் தினமன்று காலை 8 மணி அளவில் மாட்டின் கொம்புகளிலும், கழுத்திலும் துணி கட்டப்பட்டு அதில் காசு முடியப்பட்டிருக்கும். ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளில், தப்பு அடிகப்பபட்டு, மக்கள் ஆரவாரத்துக்கு இடையே, காளைகள் விடப்படும். காளைகளை அடக்குபவர்கள் கொம்பிலுள்ள பண முடிப்பை எடுக்க முயற்சிப்பர், காளைகளை அடக்கியவர்கள் நாயகர்களாக கொண்டாடப்பட்டனர்.


ஜல்லிக்கட்டு விளையாட்டு பொங்கலுக்கு அடுத்த நாளில் இருந்து தொடங்கி 2 மாதங்கள் நடைபெறுகிறது. புதுக்கோட்டை யின் கள்ளர் வாழும் கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு பற்றிய குறிப்புகள் 6 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கலித்தொகையில் காணப்படுகின்றன.


திண்டுக்கல்லில் நடைபெறும் ஜல்லிக்கட்டின்போது கள்ளர்களே பூசாரியாக செயல்பட்டு அங்குள்ள தெய்வத்திடம் குறிகேட்கும் உரிமை உடையவர்கள்.இச்சமயத்தில் அவர்கள் உரோமானிய வேளாண்மை தெய்வத்தின் பூசாரிகளை போல பிராமணர்களை விட உயர்ந்தவர்களாக தங்களை கருதி ஆணவம் கொள்வர்.


திண்டுக்கல் சல்லிக்கட்டு விளையாட்டில் தீரமிக்க சாதியாளர்கள் கள்ளர்களே. அதிக ஈடுபாட்டை இவ்விளையாட்டிற்கு காட்டுகின்றனர். பல ஊர்களில் தனியே இதற்காகவென்றே சாதிக்காளைகளை வளர்க்கின்றனர்.

கள்ளர்கள் வாழும் பகுதியான திருமங்கலத்திலேயே மிகச்சிறந்த  ஜல்லிக்கட்டை காணலாம். இதற்கு அடுத்தபடியாக மேலூரில் நடைபெறுவதை கூறலாம். இதன்மூலம் அலங்காநல்லூர்,பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் எல்லாம் தற்காலத்தில் சிறப்படைந்தவை என கொள்ளலாம்.

கவர்னர் பிரமலை நாட்டில் சுற்றுப்பயணம் செயதார். கவர்னர் சிந்துபட்டிக்கு வருகிறபோது அந்தப்பகுதியில் வழக்கமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு செய்து, அதில் கள்ளர் சமூகத்தினர் மாடுபிடிப்பதை கவர்னர் பார்க்கும்படி ஏற்பாடு செய்திருந்தனர். சீறிப்பாய்கின்ற முரட்டுக்காளைகளை முரட்டுத்தனமாகப் பாய்ந்து காளைகளை அடக்கும் கள்ளர் சமூகத்தினரை கவர்னர் பார்த்தால், இப்படி முரட்டுத்தனமாக உள்ள ஒரு சமூகத்தினரை அடக்க சி..டி.ஆக்ட் போன்ற கடுமையான சட்டம் தேவைதான் என்று கவர்னர் முடிவெடுத்துவிடுவார். அதன்மூலம் சி.டி.ஆக்ட்டை ரத்து செய்யாமல் தடுத்துவிடலாம் என்று சூதுமதிகொண்டவர்கள் இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

இந்த சதியைப்புரிந்துகொண்ட தேவர் திருமகன், உள்ளங்கை அளவுள்ள(1 x 16 சைஸ்) ஒரு துண்டுப் பிரசுரத்தில்,”சிந்துபட்டிக்கு கவர்னர் வரும்போது நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு யாரும் மாடுகொண்டு போகவோ , மாடுபிடிக்கப்போகவோ கூடாது. அப்படியாரேனும்போனால், அவன்தான் இனதுரோகி” என்று குறிப்பிட்டார். அவ்வளவுதான். கவர்னர் வருகிற அன்று செக்கானூரனியிலிருந்து உசிலம்பட்டி வரை யாருமே சாலையில் நடமாடவில்லை. கவர்னர் சிந்துபட்டி ஊருக்குள் நுழைந்ததும் ஊரே மயான அமைதியாக காட்சி தந்தது. கவர்னர் திகைத்துப்போய், “என்னமோ விழா என்றீர்கள். ஊரில் ஒரு காக்கை குருவியைக்கூட காணவில்லை. ஊரில் ஆள் அரவம் அற்று காட்சி அளிக்கிறதே ஏன்?” என்று கேட்டார். அப்போது மதுரை கலெக்டர் தேவர் வெளியிட்ட கையகல நோட்டீஸைக்காட்டி “தேவர் ஜல்லிக்கட்டைப் பகிஷ்கரிக்கும்படி விடுத்த அறிக்கையால்தான் மக்கள் யாரும் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்ல. தங்கள் வருகையையும் பகிஷ்கரித்துவிட்டனர்” என்று கூறினார். அப்போது கவர்னர் மூக்கிலே விரலைவைத்து, “ஒரு கையகல நோட்டீஸில் ஒரு நாட்டையே கட்டுப்படுத்தக்கூடிய அவ்வளவு செல்வாக்கு படைத்த தலைவரா தேவர்?” என்று ஆச்சரியப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.