புதன், 4 ஏப்ரல், 2018

அஞ்சா நெஞ்சர் எஸ். ஆண்டித்தேவர்


பெருங்காமநல்லூர் மண்ணிலே மார்பில் துப்பாக்கிக் குண்டை ஏந்தி வீர மரணம் அடைந்த வீரர்களின் வழி வந்த அஞ்சா நெஞ்சர் எஸ். ஆண்டித்தேவர் மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி பகுதில் உள்ள, காளப்பன்பட்டி ஊரில், ஆதிசிவன் கோவிலை குலதெய்வமாக கொண்ட, விவசாயக் குடும்பத்தை சேர்ந்த, சிவன்காளைத்தேவருக்கும், பின்னியம்மாள் அம்மாளுக்கும் மகனாக 01 .07 .1943 ஆம் ஆண்டு மகனாக பிறந்தார்.

ஆரம்பக்கல்வியை சொந்த ஊரிலும், உயர்நிலைப் பள்ளிக் கல்வியை உசிலம்பட்டியிலும், பாளைங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

1957 முதல் 1960 வரை சென்னை அரசு தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்தார். பின்பு அரசுப் பணியை உதறிவிட்டு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வி பயின்று வழக்கறிஞரானார். மூத்த வழக்கறிஞர் ராஜையாவிடம் இளம் வழக்கறிஞராக பணியாற்றினார். ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வாதாடினார்.

சாதி மதம் கடந்த ஏழை எளிய மக்களின் தலைவனாக விவசாயத்தொழிலாளர்கள், ஆலைத்தொழிலாளர்கள், கூலித்தொழிலாளர்கள் நலம் காண இயக்கம் நடத்தினார்.


வீரமும் விவேகமும் கொண்ட ஆண்டித்தேவர் நேர்வகிடு சுருள் சுருளான கேசம், ஆஜானபாகுவான தோற்றம் கொண்ட வெள்ளுடை வேந்தர். ஆங்கிலமும் தமிழும் தடம் புரளாமல் பேசும் சிம்மக்குரலோன். மிகச்சிறந்த பேச்சாளர்.


1965 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மதுரை நகர் மாவட்டத் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டார். தலைமை பண்பிற்கு தேவையான அனைத்து குணநலன்களையும் தன்னகத்தே கொண்டவர்.

அருந்ததியர் இனத்தை சேர்ந்த மொக்கையன் என்பவரை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினராக செய்தார்.

உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது அரசு பள்ளி, கல்லூரி விடுதிகளில் தாங்கிப் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை பல ஆண்டுகள் உயிர்த்தப்படாமல் இருந்தது அதை உயிர்த்தியும், சத்துணவு அமைப்பாளர்கள், காவலர், சார்பு ஆய்வாளர்கள், ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏழை எளியோர் சேர்வதற்கு பணமோ , அன்பளிப்போ பெறாமல் பெற்று தந்த பெருந்தகை.

ஆலங்குளம் சிமெண்ட் ஆலை மூடப்படும் நிலை வந்த போது அரசின் கவனத்தை ஈர்த்து ஆலையைத் தொடர்ந்து நடத்த செய்தவர், வரம்பு மீறி சென்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்றார்.

மதுரை நெல்பேட்டை விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்க வருவது வழக்கம். அதை வருவாய் துறையினர் அலுவலகம் போட்டு " லெவி" வாங்கினர். இதனால் நெல் கொண்டுவருவது தடை பட்டும், இதை நம்பி தொழில் செய்த டயர் வண்டித் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான வர்கள் பாதிக்கப்பட்டனர். இதை சட்டமன்றத்தில் எடுத்து வைத்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தார்.

ஐயா P.K.மூக்கையாத் தேவருக்கு பிறகு, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில தலைவராக பணியாற்றியவர்.

1972 இல் திமுக விலிருந்து நீக்கப்பட்ட MGR புது இயக்கம் கண்டார். ஆண்டித்தேவர் அவருக்கு பக்கபலமாக இருந்தார்.

M.G.R ஆட்சிக்காலத்தில் இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். சட்டமன்றத்தில் ஆவேசமாக பேசி அச்சமூட்டக்கூடியவர். எந்த சூழ்நிலையிலும், எவருக்கும் அஞ்சாமல் துணிந்து செயல்படுபவர்.

தனது தலைவர் பசும்பொன் தேவர் பெயரால் மாவட்டம், சட்டப்பேரவையில் தேவர் படம், மதுரை பல்கலைக்கழகத்தில் தேவர் ஆய்வு மையம் பாடபுத்தகத்தில் தேவர் வரலாறு, அரசு அலுவலகத்தில் தேவர் படம் என்று பல சிறப்புக்கள் செய்யப்பட்டதில் பெரும்பங்கு ஆண்டித்தேவருக்கு உரியது.

தேவர் திருத் தொண்டர்கள் பாதிப்புக்கு உள்ளான போதெல்லாம் அவர்களுக்கு ஆபத்பாந்தவனாக திகழ்ந்தவர் ஆண்டித்தேவர். பார்திபனூர் பேரையூர், திருநெல்வேலி கலவரப் பகுதிகளில் காவல் தெய்வமாக கருதப்பட்டார்.


திரு M.G.R முதலமைச்சராக இருந்த காலத்தில், பசும்பொன் தேவரின் வரலாறு தமிழ் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருந்தது. மூன்று கல்வி ஆண்டுகளுக்கு பிறகு அந்த புத்தகத்தை மறுபதிப்பு செய்யும்போது, பசும்பொன் தேவரின் வரலாறு தவறுதலாக விடுபட்டுப்போனது.


இந்த தகவல் திரு எஸ்.ஆண்டித்தேவருக்கு தெரிந்ததும், உடனடியாக முதலமைச்சர் M.G.R-யை தொடர்பு கொண்டு "அந்த பாடப் புத்தகங்களில் பசும்பொன் தேவரது வரலாற்றை இணைக்க வேண்டும்" என்று கேட்கிறார்.

அதற்கு M.G.R, "புத்தகங்கள் அனைத்தும் அச்சிடப்பட்டுவிட்டது. இனிமேல் அவற்றில் திருத்தம் செய்து மீண்டும் அச்சிட்டால் அரசுக்கு அதிக செலவு ஆகும். எனவே மறுபதிப்பு வரும்போது தேவரது வரலாற்றை இணைத்து விடுகிறோம்" என்கிறார்.

அதற்கு எஸ்.ஆண்டித்தேவர் M.G.R-டம் பதில் சொல்கிறார், "தேவரது வரலாறு புத்தகத்தில் இடம்பெறாத தகவல் தெரிந்தால், திருச்சிக்கு தெற்கேயுள்ள அனைத்து பாலங்களும் இடித்து தள்ளப்படும். பிறகு அந்த பாலங்களையெல்லாம் கட்டுவதற்கு உங்கள் அரசு செலவழிக்கும் தொகையைவிட, பாடப்புத்தகங்களை மீண்டும் அச்சிடுவதற்கு ஆகும் செலவு மிக மிகக்குறைவு" என்றார்.

அதன்பிறகு, அதே கல்வியாண்டில் தேவரது வரலாற்றை இணைத்து அனைத்து புத்தகங்களையும் மீண்டும் அச்சிட்டு வெளியிட்டார் அன்றைய முதல்வர் M.G.R..!

1983 இல் வெலிக்கடை சிறையில் தமிழ்ப் போராளிகள் கொடூர சித்தரவதை கண்டு கொதித்தெழுந்த ஆண்டித்தேவர், மதுரையில் பிரம்மாண்டமான தீவட்டி ஊர்வலம் நடத்தினார். இப்போராட்டம் மற்ற தலைவர்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தியது.

ஈழத்திலிருந்து புரப்பட்டு தனது தொப்புல்கொடி உறவான தமிழகத்தில் உதவி கேட்டு, புலிக்கொடி ஏந்திய பார்வர்ட் பிளாக் கட்சியிடம் உதவியை நாடினார் தலைவர் பிரபாகரன்.

அப்போது தமிழகத்தில் போர்க்குனம் மிக்க தலைவராக தலைவர் பிரபாகரனுக்கு தெரிந்தது பார்வர்ட் பிளாக் தலைவர் ஆண்டித்தேவர். விடுதலை புலிகள் தலைவர் ஆண்டித்தேவர் ஆதரவுடன் உசிலம்பட்டியில் ஆயுத பயிற்ச்சியை மேற்கொண்டனர்.

தலைவர் ஆண்டித்தேவரின் விருப்பத்திற்கு மாறாக ஒருபோது செயல்படாத அவருடைய நண்பர் MGR அவர்களிடத்தில் பிரபாகரனை அறிமுகம் செய்து வைத்த தலைவர் ஆண்டித்தேவர். பிரபாகரனுக்கு தன்னால் முடிந்த அனைத்துவிதமான உதவிகளையும் செய்துகொடுத்தார்.

வீரமும் விவேகமும் கொண்ட புரட்சியாளர், அஞ்சா நெஞ்சர் 23 .03 .2009 அன்று தனது பூத உடல் நீங்கி புகழ் உடல் எய்தினார்.


நன்றி : கள்ளர் முரசு

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்