வியாழன், 30 மார்ச், 2023

சோழர்கள் - போலிகள்

கள்ளர்களுக்கும் சோழருக்குமான தொடர்பை பார்த்தோம், ஆனால் இன்று பல சாதியினரும் தாங்கள் தான் சோழ வாரிசுகள் என்ற சுவரொட்டியை தஞ்சையில் நாம் காண முடியும். வெள்ளாளர், பள்ளி, பார்க்கவகுலம், வலையர், பள்ளர், பறையர் என்று ஒவ்வொரு சாதியும் நங்கள் தான் சோழர்களின் வாரிசுகள் என்று சுவரொட்டியை தஞ்சையில் நாம் காண முடியும். ஆனால் இதில் உள்ள ஒரு சாதியும் தஞ்சையில் குறுநில மன்னர்களாக இருந்தார்களா என்றால் கண்டிப்பாக இல்லை. 



 ஒவ்வொரு சாதியாக பார்ப்போமானால் 

பள்ளி சாதி சேர்ந்த சூரப்ப சோழகனார் :

சிதம்பரநாத சூரப்ப சோழனார் என்னும் சோழ வாரிசுகள் என்னும் போலிகள் பற்றியும் பார்ப்போம்.

வீரபாண்டி கட்டபொம்மன் என்பதால், தெலுங்கு கட்டபொம்மு நாயக்கரை, பாண்டிய வாரிசு என்று கூறினால் எவ்வளவு மடமையோ, அதை போல எந்த ஒரு குறிப்புகளிலும், சோழ ஆட்சி நலிவுற்ற பின்பு நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்ட பாளையக்காரர், ஆங்கிலேய ஆட்சியில் ஏற்பட்ட ஜமீன் முறையில் கூட குறிப்பட படாத, வெறும் சூரப்ப சோழகனார் என்ற பெயரை வைத்து  20 ஆம் நூற்றாண்டில் குடி உயர்வுக்காக தங்களை சோழ வரிசு  என்று குறிப்பிடும் இவர்கள் யார்  ??????????????????

சோழர்களுக்குப்பின் பாண்டிய மன்னர்களும், விஜயநகர பேரரசின் கிருஷ்ண தேவராயர் கோவிலின் இராஜ கோபுரம் மற்றும் தஞ்சை நாயக்க மன்னர்கள் கோயிலின் பிரகாரங்கள் கனகசபை உட்பட ஒன்பது மண்டபங்களை கட்டியதாகவும் பல்வேறு திருப்பணிகள் பலபுரிந்ததாகவும் கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. ஆனால் பிச்சாவரம் மற்றும் சூரப்ப சோழ கோனார்கள் பற்றிய குறிப்புக்கள் கோயிலின் கல்வெட்டிலோ, நூலிலோ இதுவரை ஒரு குறிப்புக்கூட இல்லை. 

சூரப்ப சோழ கோனார்கள்:

இன்று சிதம்பரம் நடராசர் கோயிலின் நிர்வாகம் தங்களிடம் உள்ளது, சிதம்பரம் கோயிலில் முடி சூட்டுவதால் நாங்களே சோழ வம்சத்தினர் என அங்கு வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் முறையிட்டு வருகின்றனர். தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் இவர்களின் கூற்றை தொல்லியல் துறை பொருட்படுத்தவில்லை.

தங்களை சோழர் வம்சம் என கூறிக்கொள்ளும் சூரப்பர்கள் இதுவரை பதில் அளிக்காத பல புதிர்களில் சிலவற்றை காண்போம்.


மேலே உள்ள இந்த புத்தகத்தில் என்ன முக்கியமான ,  கிபி 15 ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி 20 ஆம் நூற்றாண்டு வரையான 500 ஆண்டு கால செப்பேடுகள் இந்த நூலில் உள்ளது..  எந்த செப்பேட்டிலும் இன்றைய திடீர் சோழர்கள் பற்றிய ஒரு குறிப்பு கூட இல்லை என்பதே திடீர் சோழர்களின் போலித் தன்மையை உலகுக்கு உணர்த்துகிறது...

இவர்கள் பற்றிய எந்த ஒரு  கல்வெட்டும், செப்பேடும் இதுவரை இல்லை, இவர்கள் ஆதாரமாக சொல்வதும் மற்றும் காட்டுவதும் 

1) கோவிலின் சாவி இவர்களிடம் இருந்ததாக சொல்கிறார்கள், ஆனால் அதற்க்கான எந்த ஆதரகங்களும் இல்லை.

2) கோவிலில் தரும் முதல் மரியாதையை, தில்லையம்பலத்தில் முடிசூட்டியாத குறிப்பிட்டு சில புகைப்படங்களை மட்டுமே காட்டுகிறார்கள். 

3) பழைய செய்தி தாளில் வந்ததை எல்லாம் ஆதாரமா காட்டுகிறார்கள்.

4) இவர்கள் தாய் மொழி தெலுங்கு.

தில்லையில் முடிசூட்டியது சோழர்கள் மட்டுமா?

இவர்களுக்கு கோவிலில் தரும் மரியாதையை முடிசூட்டி கொள்வதாக குறிப்பிட்டு, தில்லையில் தற்காலத்தில் நாங்களும் முடிசூட்டுகிறோம் ஆகையால் நாங்கள் தான் சோழர்கள் என சிலர் வரலாற்றை திரிக்கின்றனர். ஆனால் உண்மையான வரலாறு என்ன.

தில்லையில் முடிசூட்டுவதால் தாங்களே சோழ மன்னரின் வாரிசுகள் என கூறிவருகிறார்கள். பிச்சாவரம் சூரப்பர்கள்.

முதலாம் ஆதித்ய சோழன்தான் சிதம்பரத்துக்கு முக்கியத்துவம் தந்து, அதை சோழப் பேரரசின் பண்பாட்டு நடவடிக்கைகளுக்கான மையமாக மாற்றினான். படையெடுப்பின்போது கவர்ந்துவந்த ஏராளமான பொன்னைக் கொண்டு அவனும் அவனது மகன் பராந்தகனும் சிதம்பரம் கோயிலுக்குப் பொன் வேய்ந்தனர்.

பராந்தகனுக்குப் பின்னர் வந்த சோழ மன்னர்கள், சிதம்பரத்துக்கு முக்கியத்துவம் தரவில்லை. குலோத்துங்கனது ஆட்சியில்தான் மீண்டும் சிதம்பரம் முக்கியத்துவம் பெறலாயிற்று.

சோழர்கள் தில்லையில் முடிசூட்டியுள்ளனர் என்பதை மறுக்க இயலாது. ஆனால் சோழர்கள் மட்டும் தான் இங்கு முடிசூட்டிக் கொண்டார்களா?

பல்லவர் முடிபுனைதல்:-

பல்லவர் வழிவந்த இரண்யவர்மன் தில்லை அம்பலத்தில் முடிசூட்டிக்கொண்டதாக பழங்கால நூலான கோயிற்புராணம் எனும் நூல் உரைக்கிறது.

" காலை தொடங்கி நடந்து சடங்கு கணித்தோதும் வேலையின் மங்கல நீடஅபி ஷேகம் வியந்தாடி மூல முயங்கிய மாமுடி தார்முது வாள்பெற்றங்கு ஏல விருந்தபி னிட்டன ராண்டொன் றிரண்டென்று " 

பொருள்: உதயகாலம் தொடங்கி ஒமம் நடந்து முடித்துச் சோதிடர்கள் கணித்த முகூர்த்தத்தில் மங்கலார்த்தமாய் இருக்கிற நவதீர்த்தங்களினால் மிக அபிடேகம் பண்ணி, பாரம்பரியமான மகத்தான மணிமகுடம், பழைய வீரகட்கம் வியாக்கிபாரதர் கையினாலே கொடுக்கப் பெற்று அந்த மண்டபத்திலே சிங்காதனத்தில் இருந்தார்" என கூறப்பட்டுள்ளது. 

பாண்டியரின் வீராபிஷேகம் மற்றும் விஜயாபிஷேகம்:-

சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி காலத்தில் கிபி 1267ல் அவரது அரசியல் பிரதிநிதியாக சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்பவன் அரசாண்டான். இவன் தில்லைமாநகரில் உள்ள திருக்கோயிலில் சிவகாமக்கோட்டத்திற்கு தென்புறமுள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் வீராபிஷேகமும் விசயாபிஷேமும் செய்துக்கொண்டான். அவர் அபிஷேகங்கள் செய்துக்கொண்ட மண்டபம் வீரப்பாண்டியன் மண்டபம் என பெயர் பெற்றது.( பிற்கால பாண்டியர் வரலாறு : சதாசிவ பண்டாரத்தார் பக் 87)

வீரப்பாண்டியன் விக்கரம பாண்டியன் ஆகிய பாண்டிய மன்னர்கள் பிற்காலத்தில் தில்லையில் பல திருப்பணிகள் செய்து தில்லைக்கோயிலில் தங்களது மகுடாபிஷேகத்தை நடத்தி வந்துள்ளனர். (சிதம்பர ரகசியம் பாகம்:7) 




சடையவர்மன் வீரப்பாண்டியன் கொங்குநாடு, ஈழநாடு, சோழநாடு, தெலுங்கு சோழனாகிய விசய கண்ட கோபாலனின் நாடு ஆகிய பகுதிகளை கைப்பற்றி அரசாண்டதாக புதுக்கோட்டை கல்வெட்டுகள் (370,371,376) தெரிவிக்கின்றன.

இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனை வென்று அவனிடம் திறைக் கொண்டு , தில்லை மாநகரில் வீரபிஷேகமும் விஜயபிஷேகமும் செய்துக் கொண்டதாக மேற்குறிப்பிட்ட கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

தில்லை மாநகரில் உள்ள உள்ள திருக்கோயிலில் சிவகாமக் கோட்டத்திற்கு தென்புறமும், சிவகங்கைக்கு மேற்புறத்திலும் உள்ள நூற்றுக்கால் மண்டபம் , வீரப்பாண்டியன் முடிசூட்டியதால் வீரப்பாண்டியன் திருமண்டபம் எனும் பெயர்பெற்றதை அம்மண்டபத்தில் முன் பகுதியில் உள்ள கல்வெட்டு விளக்குகிறது.(Ins 616 of 1929-1930)/ பாண்டியர் வரலாறு T. V சதாசிவ பண்டாரத்தார்.

தில்லையில் வீரப்பாண்டியன் முடிசூடியதை கூறும் கல்வெட்டு வரிகள்:-

புதுக்கோட்டை கல்வெட்டு 370:

"செஞ்சடையோன் பொற்புலியூர் வீற்றிருந்து காடவன் திறை இடக்கண்டு இனிதிருந்து வீராபிஷேகமும் விஜயபிஷேகமும் பண்ணியருளிய வீரப்பாண்டிய தேவர்க்கு யாண்டு"

செஞ்சடையோன் எனும் சிவபெருமான் அருள்பாலிக்கும், பொற்புலியூர் எனும் தில்லையில் காடவன் திறைக்கொண்டு, வீராபிஷேகம் மற்றும் விஜயாபிஷேகம் முதலியவை நடத்தியதை இவ்வரிகள் விவரிக்கின்றன.

புதுக்கோட்டை கல்வெட்டு 371:

" ஈழமும் கொங்கும் இரண்டும் கொண்டு காடவனை வென்று, தில்லை மாநகரில் வீராபிஷேகம் பண்ணியருளிய வீரபாண்டிய தேவர்"

புதுக்கோட்டை கல்வெட்டு 376:

" ஈழமுங்கொங்கும் சோழமண்டலமுங்கொண்டு வல்லானை வென்று, பெரும்பற்றப்புலியூரில்(தில்லையில்) வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் பண்ணியருளிய வீரப்பாண்டிய தேவர்.

இவற்றின் மூலம் நாம் அறிவது சோழர்கள் மட்டுமல்ல அப்பகுதியில் ஆட்சி புரியும் அனைத்து மன்னர்களுக்கும் தில்லையில் முடிசூட்டுதல் நடந்துள்ளது.

சோழர்கள் தில்லையில் மட்டும் தான் முடிசூட்டினார்களா?


சோழர்கள் தில்லையில் மட்டும் தான் முடிசூட்டுவது வழக்கம் என பொய்யுறைகள் தற்காலத்தில் பரப்பப்படுகிறது.

முதற்குலோத்துங்கன் என்னும் அநபாயனின் முன்னோர் முடிசூட்டிக்கொள்ளும் ஐம்பதிகளுள் ஒன்றாகச் சண்டீசர் பிறந்த சேய்ஞலூறும் ஒன்று என சேக்கிழார் பெருமான் பாடியுள்ளார். ஆதலால் சோழர்கள் முடிசூட்டும் 5 ஊர்களில் தில்லையும் ஒன்றே தவிர, தில்லையில் மட்டுமே சோழர்கள் முடிசூட்டுவர் என்பது கிடையாது. சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் ( ஞானசம்பந்தன் 1999) (பக்கம் 441)


கிபி 1219 ல் சோழ தேசத்தின் மீது படையெடுத்த முதலாம் சுந்தரப்பாண்டியன் மூன்றாம் இராசராசனை வென்று திருவையாற்றில் சோழர்கள் முடிசூட்டும் ஆயிரத்தளி மண்டபத்தில் வீராபிஷேகம் செய்துக்கொண்டான். ( பிற்கால பாண்டியர் வரலாறு : சதாசிவ பண்டாரத்தார் பக் 87)


இவை நமக்கு உணர்த்துவது தில்லையில் சோழர்கள் மட்டுமில்லாது அப்பகுதியில் ஆட்சி புரிந்த மற்ற மன்னர்களும் முடிசூட்டியுள்ளனர் மற்றும் சோழர்கள் வழக்கமாக முடிசூட்டும் ஐந்து ஊர்களில் தில்லையும் ஒரு ஊரே தவிர தில்லையில் மட்டும் தான் சோழர் முடிசூட்டுவர் என்பது பொய்யுரை என விளங்கும்.

தில்லை வாழ் அந்தணர் கூறியது என்ன?

‘‘11- 12 ம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிதம்பரம் குறித்த செய்திகள் பெரும்பாலும் புராணக் கதைகள் மூலமாகவே அறியக்கிடைக்கின்றன’’ என பால் யங்கர் என்ற ஆய்வாளர் குறிப்பிடுகின்றார். 

2,000 ஆண்டுகளுக்கு முன்னர் சிதம்பரத்தில் கோயில் இருந்ததற்கான எவ்வித வரலாற்று ஆதாரமும் கிடையாது. இப்போதுள்ள மேற்குக் கோபுரம் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனாலும் வடக்குக் கோபுரம் கிருஷ்ண தேவராயராலும் கிழக்குக் கோபுரம் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனாலும், தெற்குக் கோபுரம் முதலாம் கோப்பெருஞ்சிங்கனாலும் எழுப்பப்பெற்றவை.

சிதம்பரம் கோயில் தொடர்பான இன்றைய புனைவுக்கு அடித்தளமிட்ட பெரிய புராணத்தில், அக்கோயிலில் பூசை செய்தவர்கள் ’அந்தணர்’,’ மறையோர் ’ முதலான சொற்களாலேயே குறிக்கப்படுகின்றனர். அவர்களுக்கெனத் தனிப்பட்ட அடையாளம் எதுவும் அதில் விவரிக்கப்படவில்லை.

7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த களந்தையின் தலைவன் கூற்றுவ நாயனார் பற்றி 12 ஆம் நூற்றாண்டில் பெரிய புராணம் கூறுகிறது. அவர் களப்பிரர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் ஒரு சிவ பக்தர் என்று வர்ணிக்கப்படுகிறார். 

களப்பிர மன்னராகிய கூற்றுவர் பற்றி பாடும் கூற்றுவ நாயனார் புராணம் கூறும் செய்தியாவது:-
"களப்பிர மன்னனாகிய கூற்றுவன், சோழ தேசத்தை ஆளத்தொடங்கிய பின், சோழர்களின் பழமையான மணிமுடியை தான் சூட்டி அரசாள விரும்பி, தில்லையில் வாழும் அந்தணர்களிடம் தனக்கு சோழர்களின் பழமையான முடியை சூட்டுமாறு வேண்டுகிறார். ஆனால் தில்லை அந்தணர்கள் சோழர் குலத்தில் வந்த ஒருவரை தவிர வேறு யாருக்கும் சோழர்களின் முடியை சூட்ட மாட்டோம் என்று கூறி, சோழரின் மணி முடியை தங்களில் ஒரு குடும்பத்தாரிடம் ஒப்படைத்து விட்டு, மற்றவர்கள் அனைவரும் சேரநாட்டுக்கு சென்று விட்டனர்".

"மல்லல் ஞாலம் புரக்கின்றார்
மணிமா மவுலி புனைவதற்குத்
தில்லை வாழந் தணர்தம்மை
வேண்ட அவருஞ் செம்பியர்தம்
தொல்லை நீடுங் குலமுதலோர்க்
கன்றிச் சூட்டோம் முடியென்று
நல்கா ராகிச் சேரலன்தன் மலைநா
டணைய நண்ணுவார்"

(கூற்றுவ நாயனார் புராணம் பாடல் 39)

கூற்றுவ நாயனார் பற்றி பெரிய புராணம் ஒரு சமணர் என்று வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், குற்றுவ நாயனார் பெரும்பாலும் சமணர் என்று விவரிக்கப்படுகிறார், ஒரு சமண மன்னருக்கு முடிசூட்ட சிதம்பரத்தின் இந்து மதகுருமார்கள் மறுப்பது விளக்கப்படுகிறது. 

சிதம்பரம் கோவிலைப் பொறுத்தவரை, அந்தக் கோவிலின் கட்டுப்பாடு எப்போது தீட்சிதர்களின் கீழ் வந்தது என்பது குறித்து ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு காலகட்டத்தைச் சொல்கின்றனர். பக்தி இலக்கியங்களில் சொல்லப்படும் "தில்லை வாழ் அந்தணர்கள்" தீட்சிதர்களைக் குறிப்பதாகவே, தீட்சிதர்கள் ஆதரவு தரப்பு சொல்கிறது. ஆனால்,, "தீட்சிதர்கள்" என்ற சொல் திருமுறைகளிலோ, சங்க இலக்கியத்திலோ குறிப்பிடப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் சிலர், 'தில்லை வாழ் அந்தணர்கள்' என்போர், இந்தத் தீட்சிதர்களின் முன்னோர்கள் என்ற கருத்தை ஏற்க மறுக்கின்றனர்.





ஆனால் இன்று தில்லையில் உள்ள தீட்சிதர்களிடம் பணம் மட்டுமே பிரதானம்.   கோவிலில்  ஆயிரங்கால் மண்டபம் முழுவதும் ஐந்து நட்சத்திர விடுதி போல ஆடம்பர ஏற்பாடு செய்து, பொற்கூரை மீது ஏறி வேலை ஆட்கள் அலங்கரித்துள்ள புகைப்படத்தை பார்க்கும்போது பணம் மட்டுமே பிரதானம். 

அக்னி குலம் :-

சோழர்கள் தங்களை காசிபர் வழியில் சூரிய குலத்தில் உதித்தவர்கள் என செப்பேடுகளில் குறித்துள்ளனர். ஆனால் பிச்சாவரத்தார்களோ தங்களை அக்னி குலம் என கூறிக்கொள்கின்றனர். 



சம்பு மகரிஷி செய்த யாகத்தில் சிவ பெருமானின் நெற்றியில் இருந்து வந்த நெருப்புத்துளி அந்த யாகத்தில் விழுந்து வீர வன்னிய ராஜா வந்ததாகவும் அவர் வழியில் தாங்கள் வந்ததாக கூறுகின்றனர்.


ஆக சம்பு மகரிஷி யாகத்தில் வந்த வீர வன்னிய ராஜா வழியினருக்கும், திருமாலின் அம்சமாக காசிபரின் வழி வந்த சூரிய குல சோழர்களுக்கும் யாதொரு தொடர்பு இல்லை என்பதே உண்மை.

காசிப கோத்திரத்தில் உதித்த சூரிய குல சோழரை எவ்வாறு வீர வன்னிய மகாராசா வழிவந்ததாக கூறிக்கொள்ளும் அக்னி குலத்தார் உரிமை கோருகின்றனர்? 

இரண்யவர்மன் வழியினர் :-

பிச்சாவரம் சூரப்ப சோழனார்கள் தங்களை இரண்யவர்மன் வழிவந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளதாக அதே பள்ளி சாதியை சேர்ந்த, தொல்லியல் அறிஞர் நடன காசி நாதன் எழுதியுள்ளனர்.

"19 ஆம் நூற்றாண்டு வரை இரண்யவர்மன் வழிவந்த சோழ கோனார்களிடமே தில்லை நடராசர் கோயிலின் சாவி ஓவ்வொரு இரவும் ஓப்படைக்கப்படும்" என தனது புத்தகமான ( சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு ( பக் 23-24) ல் குறிப்பிட்டுள்ளார்.

இதே தகவல் அக்னி குலாதித்தன் பத்திரிக்கையில் 1908ல் வெளிவந்துள்ளது. அதாவது :- 



"செங்கோல் ஏந்தி பேர்பரவக்காக்குமிரணியவன்மப்போர் பெறு சோழன் சந்ததியி லினிது போந்த சீர்பரவப் பித்தர்புரத் துரை சூரப்பன் சிற்சபையைந்" என பிச்சாவரம் சூரப்பர் வழியினர் இரணிவர்மன் வழிவந்தவர் என குறிப்பிட்டுள்ளனர். (சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு)




தென்னிந்திய சாதிகள் பற்றிய ஆய்வு நூலை வெளியிட்ட எட்கர் தர்ஸ்டனும் தன்னுடைய குறிப்பில் " பிச்சாவரத்தில் உள்ள ஒரு பள்ளி குடும்பம் ஆறாம் நூற்றாண்டில் வாழந்த பல்லவ மன்னன் ஹிரண்ய வர்மனின் வழிவந்தோர் என தங்களை அழைத்துக்கொள்வதாக கூறியுள்ளார். சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு : நடன காசி நாதன்( பக் 71)

மேற்கூறிய தகவல்கள் மூலம் பிச்சாவர குடும்பத்தினர் தங்களை இரண்யவர்மன் வழியினர் என தங்களை அழைத்துக்கொண்டது விளங்கும்.

சரி, தற்போது யார் இந்த இரண்யவர்மன் என காண்போம்.



இரண்யவர்மன் பற்றி ஆய்வு செய்த திரு, நடனகாசிநாதன் அவர்களின் ஆய்வு முடிவு: " கிபி 13 ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் இயற்றப்பட்ட ' கோயில் புராணம்' எனும் நூலில் சிம்மவர்மனாகிய இரணியவர்மன் வியாக்ரபாத முனிவரால் கோயிலின்(தில்லை) உள்ளே அழைத்து வரப்பெற்று , நடமாடும் பெருமானை வணங்கிய பின்னர், இரண்யவர்மனின் தலையில் இறைவனின் திருப்பாதுகைகளைத் தர்பித்தார் என கூறியுள்ளார். 

இரண்யவர்மன் என அழைக்கப்பட்ட சிம்மவர்மன் இரண்டாம் சிம்மவர்ம பல்லவன் ஆகும். இந்த சிம்மவர்மனே சிம்மவிஷ்ணுவின் தந்தை ஆவார். இவரது காலம் கிபி 550 ஆகும். சோழர்களை வென்ற இந்த இரண்யவர்மன் தில்லைக்கு வந்து சோழரைபோல அத்திப்பூ சூடி முடி சூட்டிக்கொண்டதை கோயிற்புராணம் எனும் நூல் புராணக்கதையாக கூறுகிறது" சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு : நடனகாசிநாதன் ( பக் 101)

கிபி 1921 ல் சிதம்பரத்தில் நடைப்பெற்ற ஒரு விழாவில் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார் விழாவுக்கு தலைமை வகித்ததாகவும், அப்பொழுது சூரப்பா சோழனார் பற்றி வாசிக்கப்பட்ட வந்தனோபசாரப் பத்திரம் எனும் வாழ்த்துரையில்



" மிகு தில்லை நகராண்ட வெங்கள் இரண்யவன் மன்மதலாயிதனைக் கேண்மோ காடவர் நின் முன்னோர்கள்" என இரண்யவர்மன் மற்றும் காடவர்கள் ஆகியோரை சூரப்ப சோழனார்களின் முன்னோர் என கூறியுள்ளனர்.

கிபி 19 ஆம் நூற்றாண்டு வரை தங்களை சாதவாகன மரபில் பரத்துவாஜ கோத்திரத்தாரான பல்லவ இரண்யவர்மர் வழியினர் என அழைத்துக்கொண்ட பிச்சாவரம் சூரப்ப சோழ கோனார்கள் தங்களை திடீரென் சோழர் வம்சம் என உரிமை கோரி பரப்புரைகள் செய்வது எந்த வகையில் பொருந்தும் ? ?????????

600 ஆண்டுகள் மாயம்?

சிதம்பரம் கோயிலுடன் தொடர்புடைய பல செப்பேடுகள் மற்றும் ஆவணங்கள் இதுவரை கிடைத்துள்ளது. இத்தகைய வரலாற்று ஆவணங்கள் ஒன்றில் கூட தங்களை சோழ வம்சம் என்றும், சிதம்பரத்தில் மன்னராக தொடர்ந்து பல நூற்றாண்டுகள் முடிசூட்டி ஆட்சி செய்து வருவதாக கூறிவரும் பிச்சாவரம் சூரப்பர்கள் பற்றி சிறு குறிப்பு கூட இல்லை. 

சிறு நிலப்பரப்பை ஆட்சி செய்த பாளையக்காரர்கள் கூட அப்பகுதியில் வெளியிடப்பட்ட செப்பேடுகளில் ஆட்சியாளராக போற்றப்பட்டு அவர்களைப்பற்றிய புகழ்மொழிகளை காணமுடிகிறது. 

புதுக்கோட்டையில் சிறுநிலப்பகுதிகளை ஆட்சி செய்த கள்ளர் குடியை சேர்ந்த 

அறந்தாங்கி தொண்டைமான், 
பல்லவராயர், 
பெரம்பூர் கத்தலூர் அரசர்கள் 
சூரைக்குடி அரசர்கள் 

தங்களை அப்பகுதியின் ' அரசு' என பல கல்வெட்டுகளில் குறித்துள்ளனர்.

ஆனால் சோழ மன்னர் என தங்களை பிற்காலத்தில் அழைத்துக்கொண்ட பிச்சவரத்தார் பற்றிய சிறுகுறிப்பும் கூட தில்லை கோயில் ஆவணங்களில் இல்லை.

வடமொழி செப்பேடு 1 : ( கிபி 1383)( திருப்பனந்தாள் காசிமட செப்பேடுகள்)

மன்னர்: இரண்டாம் ஹரிஹரன்



செய்தி : விஜய நகர மன்னர் புக்கரின் மகனான இரண்டாம் ஹரிஹரன் காலத்தில் தில்லை நடராசர் கோயிலுக்கு புன்னத்தூர் என்ற ஊரை தானமாக அளித்துள்ளார். விஜய நகர மன்னரின் புகழ் மொழிகள் இடம்பெற்றுள்ளது. பிச்சாவரத்தார் பற்றி எந்த குறிப்பும் இல்லை.

வடமொழி செப்பேடு 2: ( கிபி 1387)( திருப்பனந்தாள் காசிமட செப்பேடுகள்)

மன்னர்: இரண்டாம் ஹரிஹரன்



செய்தி : விஜய நகர மன்னர் இரண்டாம் ஹரிஹரன் காலத்தில் தில்லையில் 76 ஆண்டுகள் கழித்து பூஜை நடந்துள்ளது. மாலிக்காபூர் படையெடுப்பினையடுத்து 76 ஆண்டுகள் தில்லை நடராசர் பூஜைகள் இல்லாமல் இருந்துள்ளார். பூஜைகள் தொடர்ந்து நடைபெற ஹரிஹரன் 2000 பொன் கொடையாக அளித்துள்ளார். 76 ஆண்டுகள் தில்லையில் ஓரூ வேளை பூஜை கூட நடைபெறாதபோது தங்களை சோழர்கள் என கூறிக்கொள்ளும் பிச்சாவரம் சூரப்பர்கள் என்ன செய்து கொண்டு இருந்தனர்?



" கிபி 1427 ஐ சேர்ந்த விசய நகர மன்னர் வீர பிரதப்ப ராயர் தில்லை கோயில் சட்டதிட்டங்கள் மற்றும் கோயில் நிலங்கள் தொடர்பாக எழுந்த குழப்பங்களை தீர்க்க அவர் இயற்றிய ஆணைகளை பற்றி கூறுகிறது ( கல்வெட்டு 376/ 1913). (தில்லை சிற்றம்பலவாணர் கோயில் / முத்துச்சாமிப்பிள்ளை IAS 1987/ பக் 82).இந்த காலகட்டத்திலும் இப்பகுதியில் எந்த ஆட்சியாளரும் இல்லை என்பதை இநத கல்வெட்டு விளக்குகிறது.



" கிபி 1578 ல் வேங்கட தேவ மகாராயர் கால கல்வெட்டில் தில்லைக் கோயிலில் 20 வழிபாட்டு உணவளிப்புகள் பரதேசிகளுக்கு பகிர்ந்தளிக்க பட வேண்டும் என கட்டளையை ஏற்படுத்தி அந்த கட்டளைக்கு பொறுப்பாளராக, கண்காணிப்பாளராக நமச்சிவாய உடையார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்" (தில்லை சிற்றம்பலவாணர் கோயில் / முத்துச்சாமிப்பிள்ளை IAS 1987/ பக் 84) ( கல்வெட்டு 363/1913) இந்த காலகட்டத்தில் கோயில் பொறுப்பாளர்களாக உடையார் என்பவர் இருந்துள்ளார். பிறகு பிச்சாவரத்தார் பொறுப்பாளர்கள் இல்லையா? இதற்கு அவர்களே பதில் கூற வேண்டும்.

திருவாரூர் செப்பேடு 6: (கிபி 1684)( தஞ்சை மராத்தியர் செப்பேடுகள்)

அரசர் : சாம்போசி




செய்தி: மராத்திய மன்னர் சாம்போசி என்பவரின் குலகுருவான முத்தையா தீட்சிதர் என்பவரின் தலைமையில் தில்லை நடராசருக்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. திருச்சிற்றம்பல தவமுனிவர் குடமுழுக்கு செய்துள்ளார். தில்லை நடராசரின் புகழ்மொழிகள் தரப்பட்டுள்ளது. பிச்சாவரத்தார் பற்றிய எந்த குறிப்பும் காணப்படவில்லை. தில்லைக்கோயிலே தங்களது வசம் இருந்ததாக கூறும் பிச்சாவரம் குடும்பத்தார் கோயில் குடமுழுக்கு தொடர்பான செய்திகளில் கூட குறிப்பிடப்படவில்லை.

திருவாரூர் செப்பேடு 4 : ( கிபி 1686)( தஞ்சை மராத்தியர் செப்பேடுகள்)

அரசர்: சாம்போசி( செஞ்சி அரசர்- மராத்தியர்)



செய்தி: 17 ஆம் நூற்றாண்டில் தில்லையில் சில வருடங்கள் பூஜை நடத்தப்படாமல் இருந்ததாகவும், குடந்தையில் சைவ வேளாளர் குலத்தில் தோன்றிய சிவப்பிரகாசர் அக்காலத்தில் ஏற்பட்ட பூஜை தட்டுப்பாட்டை நீக்கியதாகவும், பூஜைகள் நடைபெற லிங்கம நாயக்கர் என்பவர் உதவியதாக " அரசவனத்து அறநிலையம்" என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. கிபி 1648 முதல் கிபி 1686 முடிய சிதம்பரம் நடராசர் சிலை சிதம்பரத்தில் இருந்து வேறு இடங்களில் பாதுகாக்கப்பட்டுள்ள தகவலை செப்பேடு தருகிறது. 




37 ஆண்டுகள் மதுரையிலும், 40 மாதங்கள் குடுமியான்மலையிலும் பாதுகாக்கப்பட்டு பிறகு சிதம்பர சிற்றம்பல முனி என்பவர் மூலம் தில்லையை அடைந்துள்ளார் நடராசர். அக்கால கட்டத்தில் பீஜப்பூர் சுல்தான்கள் படையெடுப்பில் இருந்து காக்க சிதம்பரம் நடராசர் வேறு இடங்களில் பாதுகாக்கப்பட்டு இருக்கலாம். கிபி 1686 ல் மீண்டும் தில்லையை அடைந்த நடராசருக்கு மராத்திய மன்னர் சாம்போசி என்பவரின் ஆணையின் பேரில் கோபால தாதாசி என்பவரால் திருப்பணிகள் செய்யப்பட்டு மீண்டும் குடமுழுக்கு நடத்தப்பட்டு உள்ளது. இந்த செப்பேட்டிலும் பிச்சாவரம் சூரப்பர்கள் பற்றி சிறு தகவலும் இல்லை. தங்களை சோழ மன்னர்கள் என்று அழைத்துக்கொள்ளும் பிச்சாவரம் குடும்பத்தினர் தில்லை நடராசருக்கு ஆபத்து வந்த போதுகூட அவரை காக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தகவல் இல்லை. 

பல ஆண்டுகள் பூஜை நடைபெறாமல் இருந்தபோதும் கூட வேறு ஊர்களில் இருந்தூ வந்த குறுநில மன்னர்கள் உதவியால் தான் திருப்பணிகளும் பூஜைகளும் நடைபெற்றுள்ளது. பிச்சவரத்தார்கள் என்ன செய்து கொண்டு இருந்தனர்  அப்பொழுது ????

திருவாரூர் செப்பேடு 4 : ( கிபி 1686)( தஞ்சை மராத்தியர் செப்பேடுகள்)

அரசர்: சாம்போசி( செஞ்சி அரசர்- மராத்தியர்)




செய்தி: கிபி 1648ல் தில்லையை விட்டு சென்ற நடராசர், 40 திங்கள் குடுமியான்மலையிலும், எஞ்சிய நாட்கள் மதுuரையிலும் இருந்தார் என்று கூறப்பட்டுள்ளது. சாம்போசி மன்னர் கிபி 1684 ல் கோபால பிருத்விசுரபதி என்பவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப தில்லைத் திருப்பணியை தொடங்கினார் என்றும், பொன் வேய்ந்தார் என்றும், கிபி 1686 ல் தில்லைக்கு நடராசர் திரும்பியதால் பாருயிரெல்லாம் உய்யும், செம்பொன் மாமழை பேயும், தில்லை மாநகர் வாழும் என போற்றப்பட்டுள்ளது. இந்த செப்பேட்டிலும் பிச்சாவரம் குடும்பத்தினருக்கும் தில்லை நடராசருக்கும் உள்ள தொடர்பை குறிக்கும் வகையில் எந்த தகவலும் இல்லை. 

திருவாரூர் செப்பேடு 4 : ( கிபி 1686)( தஞ்சை மராத்தியர் செப்பேடுகள்)

அரசர்: சாம்போசி ( செஞ்சி அரசர்- மராத்தியர்)




செய்தி : தில்லையில் இருந்து நடராசர் வெளியேறிய செய்தி இந்த செப்பேட்டிலும் கூறப்பட்டுள்ளது. கிபி 1684 மற்றும் கிபி 1686 ஆகிய ஆண்டுகளில் தில்லையில் குடமுழுக்கு நடைப்பெற்றுள்ளது.

சாம்போசி, கோபால தாதாசி, சிற்றம்பல முனிவர் ஆகியோரின் முயற்சியில் குடமுழுக்கு நடந்ததாக அவர்கள் போற்றப்பட்டுள்ளனர். கோயிலின் குடமுழுக்கை நடத்துவதில் அந்த பகுதியின் மன்னர் என கூறிக்கொள்ளும் பிச்சாவரத்தார் பங்கு சிறிதும் இல்லை என இந்த செப்பேடு விளக்குகிறது.

திருவாரூர் செப்பேடு 1 :(கிபி 1719)( திருப்பனந்தாள் காசிமட செப்பேடுகள்)

அரசர்:முதலாம் ஏகோசி

செய்தி: நியமம் என்ற ஊரின் தலைவரான ராயஸ்ரீ முத்து செல்லப்பா முதலியார் என்பவருக்காக வல்லத்துத் தோட்டமும், ஆயத்தில் ஒரு ஆள் தீர்வையும், தில்லைச் சிதம்பரேசுவரர்க்கும், கோவிந்தராச பெருமாளுக்கும் கொடையாக அளித்துள்ளனர். இந்த கொடைகளை தில்லைக்கோயிலின் சார்பாக பெற்றுக்கொண்டவர் கோயில் கட்டளைகளை நடத்தும் சரவணைத் தம்பிரான் என்பவர். இந்த காலகட்டத்தில் தில்லைக் கோயிலின் பொறுப்புகளை வகித்துள்ளவர் சரவணைத் தம்பிரான் ஆவார். இந்த செப்பேட்டில் எங்கும் பிச்சாவரம் சூரப்பர்களை பற்றி எந்த குறிப்பும் இல்லை. இந்த காலகட்டத்தில் கோயில் பொறுப்புகள் அவர்களிடம் இல்லை என்பதை இச்செப்பேடு விளக்குகிறது. 



பரங்கிப்பேட்டை செப்பேடு 01: (கிபி 1747)( திருப்பனந்தாள் காசிமட செப்பேடுகள்)


செய்தி : கிபி 1747 ல் தில்லையில் ஆயிரங்கால் மண்டபம், நாலுக்கோபுரம் முதலியவற்றுக்கு திருப்பணிகள் செய்த சண்முகத் தம்பிரான் என்பவருக்கு பரங்கிப்பேட்டை வணிகர்கள் திருப்பணிக்கு உதவியாக தங்களால் இயன்ற பொருட்களை வழங்கி உதவியுள்ளனர். தில்லைக் கோயிலின் பொறுப்பு தொடர்ந்து தம்பிரார்கள் வசமே இருந்துள்ளது. இந்த செப்பேட்டிலும் பிச்சாவரம் சூரப்பர்கள் பற்றி சிறு குறிப்பு கூட இல்லை. 

பரங்கிப்பேட்டை செப்பேடு 02:(கிபி 1747)( திருப்பனந்தாள் காசிமட செப்பேடுகள்)



செய்தி : கிபி 1747 ல் தில்லையில் ஆயிரங்கால் மண்டபம், நாலுக்கோபுரம் முதலியவற்றுக்கு திருப்பணிகள் செய்த சண்முகத் தம்பிரான் என்பவருக்கு பரங்கிப்பேட்டையில் வணிகம் செய்து வந்த ஆலந்து நாட்டினர் திருப்பணிக்கு உதவியாக தங்களால் இயன்ற பொருட்களை வழங்கி உதவியுள்ளனர். தில்லைக் கோயிலின் பொறுப்பு தொடர்ந்து தம்பிரார்கள் வசமே இருந்துள்ளது. 

" கிபி 1773ல் மைசூர் போரின் போது தில்லை நடராசரை பாதுகாப்புக்காக திருவாரூர் கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் தஞ்சை அரசரின் உதவியால் நடராசர் தில்லையை அடைந்துள்ளார். சூரப்பர்கள் எங்கே சென்றனரோ?.( தில்லை சிற்றம்பலவன் கோயில்: பக் 23: சோம சுந்தரம் பிள்ளை)

" மற்றொரு முறை ஒரு போரின்போது தில்லை நடராசரை தீட்சிதர்கள் புளியங்குடி எனும் ஊரில் உள்ள ஒரு புளிய மர பொந்தில் பல ஆண்டுகள் மறைத்து வைத்திருந்தனர். பிற்காலத்தில் நிலைமை சரியானவுடன் நடராசரை மீண்டும் தில்லைக்கு கொண்டு வந்துள்ளனர்.( தில்லை சிற்றம்பலவன் கோயில்: பக் 23: சோம சுந்தரம் பிள்ளை)

"கிபி 1781 ல் ஆங்கிலேயருக்கும் ப்ரெஞ்சு படையினருக்கும் போர் நடைபெற்றதால், தில்லை நடராசர் பாதுகாப்புக்காக திருவாரூர் கொண்டு செல்லப்பட்டார்" (தில்லை சிற்றம்பலவாணர் கோயில் / முத்துச்சாமிப்பிள்ளை IAS 1987/ பக் 85) இந்த சம்பவத்தின் போது சோழ மன்னர் பரம்பரை என அழைத்துக்கொள்ளும் பிச்சாவரத்தார்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்??



"கிபி 1797 ல் தில்லையில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட விவாதத்தை ஆர்காடு நவாபின் அதிகாரி ஒருவர் தீர்த்து வைத்ததாக ஆர்காடு நவாப் பர்வானா தெரிவிக்கிறது".(தில்லை சிற்றம்பலவாணர் கோயில் / முத்துச்சாமிப்பிள்ளை IAS 1987/ பக் 43)

இவ்விரு தரப்பினர்க்கும் ஏற்பட்ட தகராறை தீர்க்க ஆர்காடு நவாபின் அதிகாரியே வந்துள்ளார். தில்லையில் அக்காலத்தில் எந்த குறுநில தலைவரும் ஆட்சி செய்யவில்லை என்பதை இது தெரிவிக்கிறது. 


" கிபி 18 ஆம் நூற்றாண்டில் போர்களின் போது சிதைவுற்ற தில்லை கோயிலின் பல பகுதிகளை பச்சையப்ப முதலியாரும், அவரது மனைவி சுப்பம்மாள் என்பவரும் 40,000 வராகன் செலவு செய்து திருப்பணி செய்தனர். இவர்களின் திருப்பணிகளை மழவை மகாலிங்கயரும், காஞ்சி வித்துவான் சபாபதி அவர்களும் பல பாக்களால் போற்றியுள்ளனர். பச்சையப்ப முதலியார் மற்றும் அவரது துணைவியாரின் உருவங்களை இன்றும் கிழக்கு கோபுர வாயிலில் காணலாம்."(தில்லை சிற்றம்பலவன் கோயில்: பக் 23: சோம சுந்தரம் பிள்ளை)



" கிபி 19 ஆம் நூற்றாண்டில் அண்ணாமலை செட்டியார் மற்றும் அவர்களின் முன்னோர்களால் தில்லை கோயிலின் ராஜகோபுரங்கள் பழுதுபார்க்கப்பட்டது. கனகசபையில் பொன் முலாம் பூசப்பட்டது. திருச்சுற்றுகள் அமைக்கப்பட்டு, கிபி 1891ல் குடமுழுக்கு செய்யப்பட்டது. (தில்லை சிற்றம்பலவன் கோயில்: பக் 23: சோம சுந்தரம் பிள்ளை) 

"கிபி 1934ல் செட்டிநாட்டு வள்ளல் அண்ணாமலை செட்டியார் திருச்சித்திர கூடம் மற்றும் நாற்பது கால் மண்டபம் ஆகியவற்றிக்கு திருப்பணி செய்தார். சைவ மற்றும் வைணவர்களுக்கு இடையே ஏற்பட்ட விவாதங்களை தீர்த்துவைத்துள்ளார்.( தில்லை சிற்றம்பலவன் கோயில்: பக் 36: சோம சுந்தரம் பிள்ளை) 

"கிபி 1955ல் நிலக்கிழார் இரத்தினசபாபதி பிள்ளை, இரத்தினசாமி செட்டியார் ஆகியோரின் தலைமையில் 64 ஆண்டுகள் கழித்து குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. (தில்லை சிற்றம்பலவன் கோயில்: பக் 25: சோம சுந்தரம் பிள்ளை) 

தில்லை மூவாயிரவர் செப்பேடு : ( கிபி 1827)( திருப்பனந்தாள் காசிமட செப்பேடுகள்)



செய்தி : கிபி 1827 ல் தில்லையில் இரண்யவர்ம மகாராசர் காலத்தில் திருப்பணி செய்த இராசசபைக்கு நெடுங்காலமாக திருப்பணி செய்யப்படாமல் இருந்தது. இந்தத் திருப்பணியை முத்தையா தம்பிரான் என்பவர் செய்தார். தில்லை நடராசர் கோயிலின் பொறுப்பாளர்களாக " தம்பிரான் " என்பவர்கள் தொடர்ந்து இருந்துள்ளனர். முத்தையா தம்பிரான் திருப்பணி செய்து வரும் திறத்தைக் கண்டு வியந்த தில்லை மூவாயிரவர் தாங்களும் தங்களால் இயன்ற கொடையினை முத்தையா தம்பிரான் அவர்களுக்கு அளித்துள்ளனர். முத்தையா தம்பிரான் பரம்பரையாக இந்த திருப்பணியை செய்து வரும்படி இந்த கொடையை அளித்ததாக தில்லை மூவாயிரவர் குறிப்பிட்டுள்ளனர். இந்த செப்பேட்டிலும் பிச்சாவரம் குடும்பத்தினர் பற்றி எந்த குறிப்பும் காணப்படவில்லை.

முத்துத்தாண்டவர் கீர்த்தனை(16ஆம் நூற்றாண்டு)

தில்லை நடராசர் மீது பேரன்பு கொண்டவர் முத்துத்தாண்டவர். சீர்காழியில் பிறந்தவர். இவர் ஒரு சமயம் தில்லை நடராசரை தரிசிக்க வந்தபோது, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஒடியது. இதைக்கண்டு தில்லை நடராசரை தரிசிக்க இயலாமல் தனது வருத்தத்தை கீர்த்தனையாக பாடினார்.

"சேரன் சோழன் பாண்டியன் இரணியவர்மன் கோபுரமும் சூரவீரப்பபூபன் செய்த திருமதில்களும் பாருலகம் போற்றும் பஞ்சாட்சரப் படிகளும் காணாமல் வீணே காலம் கழித்தோமே" என பாடினார்.( முத்துத்தாண்டவர் கீர்த்தனமும், பதமும்(1916)

இப்பாடலில் சேர சோழ பாண்டியன் மற்றும் இரணியவர்மன் ஆகியோர் தனித்தனியாக குறிப்பிடப்பட்டு உள்ளனர். இரணியவர்மர் வேறு சோழர் வேறு என்பதை தெளிவாக இப்பாடல் உணர்த்துகிறது. 

மேலும் 16 ஆம் நூற்றாண்டில் தில்லையில் எந்த சோழ மன்னரும் ஆட்சியில் இல்லை என்பதால் இப்பாடலில் எந்த சோழ மன்னரும் குறிப்பிட்டு பாடப்படவில்லை. 

மேலே குறிப்பிடப்பட்ட செப்பேடுகள் மற்றும் பிற வரலாற்று ஆவணங்கள் வெவ்வேறு கால இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நேரடியாக தில்லை நடராசர் கோயிலோடு தொடர்புடையவை. மராத்திய மன்னர்கள், பல கொடையாளிகள், கோயில் நிர்வாகத்தினர் என பலர் இந்த செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டு இருந்தும், தங்களை சோழ மன்னர் வழியினர் என்றும், சிதம்பரம் கோயிலின் பரம்பரை காவலர்கள் என்றும் கூறிக்கொண்டு இருக்கும் பிச்சாவரம் சூரப்பர்கள் பற்றி ஒரு சிறு குறிப்பும் கூட இல்லை என்பதை ஆழ நோக்க வேண்டும். 



தில்லை நடராசருக்கு ஆக்கிரமிப்பாளர்களால் பல காலங்கள் பூஜை நடைபெறாமல் தடைப்பட்டு இருந்தபோதும் , தில்லையை விட்டு நடராசர் பல ஆண்டுகள் புதுக்கோட்டை தொண்டைமான் சீமையிலும், மதுரையிலும் பாதுகாக்கப்பட்டு வந்தபோதும் அவரை மீட்க பிச்சாவரம் குடும்பத்தினர் எந்த முயற்சியும் எடுத்ததாக தகவல் இல்லை. 

தில்லை கோயிலுக்கு பல தரப்பினரும் கொடை அளித்த செய்திகளை நம்மால் காணமுடிகிறது. ஆனால் 600 ஆண்டுகள் தில்லையில் ஆட்சி செய்ததாக கூறிக்கொள்ளும் சூரப்பர் பற்றி எந்த குறிப்பும் இதுவரை கிடைக்கவே இல்லை. இவற்றை நோக்கும் போது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிச்சாவரத்தார்கள் தில்லை நடராசர் கோயிலின் சாவியை வைத்திருக்கும் உரிமையை பெற்று இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்களை அரச வம்சங்களோடு இணைத்துக் கூற ஆரம்பித்துள்ளனர் என்பது எளிதில் விளங்கும்.

20 ஆம் நூற்றாண்டில்

13 ஆம் நூற்றாண்டில் முடிவுற்றது சோழப் பேரரசின் ஆளுமை. அதற்கு பிறகு 600 ஆண்டுகள் கழித்து கிபி 1908 ல் பிச்சாவரம் சூரப்ப வம்சத்தினர் முடிசூட்டுதல் நடத்துவதாக " பட்டாபிஷேக பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர். இதை உறுதி செய்யும் விதமாக எட்கர் தர்ஸ்டன் தன்னுடைய குறிப்பில் இரண்யவர்மர் வழியினர் என கூறிக்கொண்டு ஒரு பள்ளி குடும்பத்தார் முடிசூட்டுவதாக தெரிவித்துள்ளார்.

முடிசூட்டிய வெள்ளாழர் 

கூற்றுவ நாயனார் எனும் களப்பிரர் காலத்தில் தில்லை வாழ் அந்தணர்களை தனக்கு முடிசூட்டுமாறு கேட்டதும் அவர்கள் முடிசூட்ட மறுத்து தங்களின் பூர்வீகமான சேர நாட்டுக்கு சென்றுவிட்டதை திருதொண்டர் புராணம் கூறுகிறது.(சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் ( ஞானசம்பந்தன் 1999) (பக்கம் 947). 

அவர்கள் சென்றபின் தில்லையில் கிபி 6 ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னரும், அதன் பின் பாண்டியர்களும் தில்லையில் பல்வகை அபிஷேகங்களை தங்களுக்கு செய்து கொண்டதை கண்டோம்.



இவர்களுக்கு பின் 20 ஆம் நூற்றாண்டில் முடி சூட்ட தொடங்கிய பிச்சாவரம் சூரப்ப குடும்பத்தினர், தில்லையில் உறவினர்களோடு கூடியிருக்க வெள்ளாழர் ஓருவர் இவர்களுக்கு முடியை தலையில் தரித்துள்ளனர். இந்த வெள்ளாழர்கள் பல்லவ மன்னர் இரண்யவர்மனின் அமைச்சர் வழிவந்தவர்கள் என தங்களை அழைத்துக்கொள்வதாக எட்கர் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.

முடிசூட்டும் விழாவின் முழு செலவையும் முடிசூட்டு விழா நடத்துபவர்களே ஏற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(Castes and tribes of southern india :1909 : edgor Thurston) 

ஆக தில்லையில் தங்களது சொந்த செலவில் வெள்ளாழர்களைக் கொண்டு முடிசூட்டு விழாவை பிச்சாவரம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தில்லையில் முடிசூட்டுவதால் தாங்களே சோழ வாரிசு என சூரப்பர்கள் சொல்வது எவ்வகையில் ஏற்றுக்கொள்ளத்தக்கது ????????????????

பிச்சாவரம் உண்மையில் ஜமீனாக இருந்ததா?

இதுவரை பிச்சாவரத்தை ஆட்சி செய்ததாக சூரப்ப குடும்பத்தை பற்றிய எந்த ஆவணமும் இல்லை. 

பிச்சாவரம் சூரப்ப குடும்பத்தினர், அப்பகுதியின் ஜமீன்தார் என பரப்புரைகள் செய்யப்படுகிறது.

ஆனால் பிச்சாவரம் சூரப்பரை குறிப்பிடும் எட்கர் தர்ஸ்டன் " At pichavaram 4 miles east of chidambaram lives a palli family" என்றே கூறுகிறார்.

பிச்சாவரத்தில் வாழும் ஒரு பள்ளி குடும்பம் முடி சூட்டுவதாக கூறியுள்ளாரே தவிர இவர்களை ஜமீன் என்று குறிப்பிடவில்லை.

வெள்ளையர் அளித்த Poligar பட்டம்:-

கிபி 1893 ல் பிச்சபுரம் சாமிதுரை சூரப்ப சோழ கோனார் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு மானியம் கேட்டு ஒரு கடிதம் எழுதினார். அதில் பல முக்கிய தகவல்கள் உள்ளது, அவையாவன:-

கிபி 1828 ல் எழுதப்பட்ட உடன்படிக்கையில் வெள்ளையர்களால் சூரப்ப சோழனார் குடும்பத்திற்கு துமால் மானியமாக நஞ்சை நிலமும் பலவித வரும்படிகளும் அளிக்கப்பட்டு இருந்ததாகவும், இராமபத்திர சூரப்ப சோழனார் மரணத்திற்கு பிறகு மானிய நிலங்கள் ஜப்தி செய்யப்பட்டு பிரிட்டீஷ் அரசாங்கத்திடம் சேர்க்கப்பட்டு வரும்படிகளும் நிறுத்தப்பட்டதாகவும், அதன்பிறகு இராமபத்திர சூரப்ப சோழனாரின் மகன் ஆண்டியப்ப சூரப்ப சோழனார் அரசாங்கத்திடம் வாதாடி வரும்படிகளை மட்டுமாவது பெற்றதாகவும், ஆனால் ஆண்டியப்ப சூரனாரின் மரணத்திற்கு பிறகு அந்த வரும்படியும் நிறுத்தப்பட்டுள்ளது, ஆகையால் பாளையகீர் என அரசாங்கத்தால் பட்டம் அளிக்கப்பட்ட தங்களுக்கு வரும்படிகளை தொடர்ந்து அளிக்க வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் இவர்களின் கோரிக்கை உண்மை தன்மை இல்லாததால் பிரிட்டீசாரால் நிராகரிக்கப்பட்டது.



தாங்கள் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், வாழ்க்கை நடத்த மிக கடினமாக உள்ளதாகவும் பிரிட்டீசாரிடம் பரிதாபமாக கோரிக்கை வைத்துள்ளனர்.

சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு : நடனகாசிநாதன் ( பக் 90-91)/ District munsif's record, chidambaram D.S.NO 205 OF 1930)

காவல்கார்(Kavalgar) 

பிச்சாவரம் சூரப்பர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கிபி 1844 ல் தங்களது பென்சன் தொகையை உயர்த்த சொல்லி பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்களின் பென்சன் தொகையை உயர்த்தி அரசு வெளியிட்ட அறிக்கையில் இவர்களை காவல்காரர் ( Kavalgar) என்றே குறித்துள்னர். 

இவர்களை எங்கும் ஜமீன் என குறிப்பிடவில்லை. வெள்ளையர் காலத்தில் பல பகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட ஊர் காவல்காரர்களில் பிச்சாவரம் குடும்பத்தினரும் ஒருவர் என இந்த அறிக்கை நமக்கு விளக்குகிறது.

:-சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு நடனகாசிநாதன் ( பக் 88)

பிச்சாவரம் சூரப்ப சோழனார்கள் பிரிட்டீஷ் காலத்தில் பிச்சாவரம் பகுதியில் காவல் உரிமை பெற்று வெள்ளையர்களால் Cavalgar என்று பட்டம் பெற்றுள்ளனர். 



இப்பகுதியின் ஆட்சியாளர்களாகவோ, மன்னர்களாகவோ குறிப்பிடும் எந்த ஆவணமும் இல்லை. பிச்சாவரம் காவல்காரர்களாக இருந்து வெள்ளையரிடம் இருந்து நிலத்தை பெற்று பிறகு அதையும் இழந்த பிச்சாவர குடும்பத்தினர் தங்களை ஜ௴ன் என்றும் மன்னர் என்றும் பொய்யுரை பரப்புவது ஏனோ? கிபி 1828 க்கு முன் பிச்சாவரத்தில் சூரப்பர் எனும் குடும்பத்தினர் இருந்ததற்கே எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. 

" சூரப்ப" என்பது யாதெனில்:-




பிச்சாவரம் சூரப்ப சோழனார்கள் தங்களது பெயரோடு சூரப்ப என்ற சொல்லையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். சூரப்பா எனும் பெயரை எதனால் இந்த குடும்பத்தினர் பயன்படுத்தி என்பதை திரு.நடனகாசிநாதன் என்பவர் தனது நூலில் விளக்கியுள்ளார். அதனைக் காண்போம்.

" மகாமண்டலேஸ்வரன் சூரப்பராஜன் எனும் சிற்றரசன் ஆந்திர நாட்டில் வீரக்கொட்டா எனும் பகுதியில் இருந்து அரசாண்டுள்ளான். இவர் தம்மை பரத்வாஜ கோத்திரத்தான் என்றும், கட்வாங்கேதனன், என்றும் ரிஷப லாஞ்சனன் என்றும் காஞ்சிபுரேஷ்வரன் என்றும் குறிப்பிட்டுள்ளார்". ( SII vol 07 No 1327)

பரத்துவாஜ கோத்திரம் என இந்த மன்னர் தன்னை குறிப்பிட்டதால், இரண்யவர்மன் வழியினர் என தங்களை பிற்காலத்தில் அழைத்துக்கொண்ட பிச்சாவரம் சூரப்பர்கள் இந்த குறுநிலமன்னர் வழிவந்தவர் என்பதை குறிக்க சூரப்ப எனும் அடைமொழியை தொடர்ந்து பயன்படுத்தி வருவதை காணலாம். சேலம் மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் செப்பு பட்டயங்களில் தொண்டை மண்டல சோழ கோனார் என குறிப்புகள் காணப்படுகிறது. ஆகையால் தொண்டை மண்டல பகுதியில் ஆட்சி செய்த தெலுங்கு குறுநில அரசர்களான சூரப்பராசாக்கள் வழிவந்தவர்களாக பிச்சாவரம் சூரப்ப சோழனார் குடும்பத்தினர் இருக்கக்கூடும் என தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன் தனது ஆய்வு முடிவை கூறியுள்ளார்.

:-சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு நடனகாசிநாதன் ( பக் 28-29)



இவரது கூற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் இன்றும் சூரப்பா எனும் பட்டப்பெயர் கர்நாடகாவில் ஆந்திராவில் உபயோக்கப் படுத்தப்படுகிறது. 

திருமண உறவுகள் :-

பிச்சாவரம் குடும்பத்தினர் தங்களது மண உறவை பெரும்பாலும் இன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், உடையார்பாளையம், வடகால் குடும்பத்தினரோடு கொண்டிருந்துள்ளனர்.

ஆண்டியப்ப சூரப்ப சோழனாரின் மகள் ஜெயகுமாரியை அரியலூர் ஜமீனுக்கு கொடுத்துள்ளனர். ( வடபகுதி பாளையக்காரர் வரலாறு / பக்155/ நடன காசிநாதன்)

20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிச்சவரம் குடும்பத்தை சேர்ந்த பெண்ணை வடகால் பகுதியை சேர்ந்த ராவுத்த மிண்ட நயினாருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ( வடபகுதி பாளையக்காரர் வரலாறு / பக்155/ நடன காசிநாதன்)

பிச்சாவரத்தை சேர்ந்த ஆண்டியப்ப சூரப்ப சோழனார் மற்றும் அவரது மகன் சிதம்பர சூரப்ப சோழனார் உடையார்பாளையம் ஜமீனிடம் திருமண சமந்தம் வைத்துள்ளனர்.  (வடபகுதி பாளையக்காரர் வரலாறு / பக்156/ நடன காசிநாதன்).

பிச்சாவரத்தார் திருமண உறவு வைத்திருந்த குடும்பத்தார்களின் பூர்வீகம் பற்றி திரு நடனகாசி நாதன் அவர்கள் தனது நூலான வடபகுதி பாளையக்காரர்கள் எனும் புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் இவர்கள் தமிழரா என்றா வினாவினை எழுப்பியுள்ளது.

அரியலூர் ஜமீன் பூர்வீகம்:

பிச்சாவரம் குடும்பத்தினர் மண உறவு கொண்டவர்களில் முக்கியமானவர்கள் அரியலூர் குடும்பத்தினர். அரியலூர் ஜமீன்கள் தங்களது பூர்வீகம் பற்றி கூறியிருப்பதாவது:-



"ஆதிகாலத்தில் வடக்கு ராஜ்ஜியத்தில் ஆனைகுந்தி சமஸ்தானத்தில் உள்ள குன்ன நகரம் எனும் ஊரில் இந்த வம்சத்தார் ஒருவர் பாளையக்காரராக இருந்துள்ளார். ஆனைகுந்தி என்பது கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். திருச்சி துறையூர் பாளையக்காரர்களான ரெட்டியார் முதலிய பெரும்பான்மை தெலுங்கு பாளையக்காரர்கள் தங்களது பூர்வீகமாக ஆனைகுந்தியையே குறித்துள்ளனர். 

இவர்கள் வம்சத்தில் உதித்த பூம நயினார், ராம நயினார் ஆகியோரை கிபி 1308ல் விசயநகர மன்னர் , கோடிகம் நாகம நாயக்கர் என்பவரோடு தமிழகத்துக்கு அனுப்பியுள்ளார். நாகம நாயக்கரோடு தமிழகம் வந்த நயினார்கள், நாகம நாயக்கரின் முடிசூட்டு விழா முடிந்து கர்நாடகத்துக்கு திரும்பிக்கொண்டு இருந்தபோது ஒரிடத்தில் ஒய்வு எடுத்தனர். 

அப்போது ராம நயினார் கனவில் தோன்றிய கிராம தேவதை அந்த பகுதியில் இருந்த காட்டை அழித்து நகரத்தை உண்டாக்கினால் தாமே அவர்களின் குலதெய்வமாய் இருந்து காப்பாற்றுவேன் எனக் கூறி, அவர்கள் வம்சத்தில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு ஒப்பிலியம்மா எனும் தனது பெயரை சூட்டுமாறு அறிவுறுத்தி மறைந்தது. இறைவியின் வேண்டுகோளின்படி காட்டை அழித்து நகரம் உண்டாக்கியபின் இராம நயினார் கன்னட தேசம் என்று நடந்த சம்பவங்களை கூறினார். 

இதைக்கேட்டு மகிழ்ந்த விசய நகர மன்னர், ராம நயினாருக்கு ராம ஒப்பில்லா மழவராயர் எனும் விருதுப்பெயரை அளித்து , பல பரிசுப்பொருட்களையும் அளித்து, அரியலூர் பகுதிக்கு சுபேதாராக இருக்கும்படி விசய நகர மன்னரால் நியமிக்கப்பட்டார்.



விசய நகர மன்னர் அளித்த மழவராயர் பட்டம்:-

கர்நாடக தேசத்தில் ஆனைகொந்தியில் அரியலூரின் சுபேதாராக பொறுப்பேற்ற நயினார் அரியலூரில் வந்து வாழ ஆரம்பித்தார். கிபி 1326ல் விசயநகர மன்னரை எதிர்த்து இரண்டாம் பிரதாப ருத்திரன் என்பவன் போரிட்டான். அந்த சமயத்தில் விசய நகர மன்னருக்கு உதவிய சுபேதார்களில் ஒருவரான ராம நயினாருக்கு ரண விஜய ஒப்பில்லா மழவராயர் எனும் பட்டத்தை அளித்து பாராட்டினார். அரியலூர் பாளையத்தாரின் முதல் இரண்டு பாளையக்காரர்கள் ராம நயினார், பூமி நயினார் என்றே தங்களை அழைத்து வந்தனர். இவர்களுக்கு அடுத்து வந்தவர்களே விஜய நகர மன்னர் அளித்த மழவராயர் பட்டத்தை பயன்படுத்த தொடங்கியிருப்பது எளிதில் விளங்கும்.



( வடபகுதி பாளையக்காரர்கள் வரலாறு: நடன காசி நாதன் பக்7-10)/ அரியலூர் பாளையக்காரர் கைபீடு)



பிச்சாவரம் குடும்பத்தாரின் மற்றொரு சமந்தக்காரர்களான வடகால் பகுதி குடும்பத்தினரும் அரியலூர் வம்சத்தைப்போல நயினார் எனும் பட்டத்தையே பயன்படுத்தி வந்துள்ளார். இவர்களும் அரியலூர் நயினார் வம்சத்தின் கால் வழியினராக இருக்கலாம்.

உடையார்பாளையம் வம்சமும் பூர்வீகமும்:-

பிச்சாவரம் குடும்பத்தார் உடையார்பாளையம் குடும்பத்தாரிடம் தொடர்ச்சியான கொள்வினை கொடுப்பினையில் இருந்துள்ளனர். இவர்களின் பூர்வீகம் பற்றி காண்போம்:


கிபி 16 ஆம் நூற்றாண்டில் விஜய நகர வேந்தரான வீர நரசிம்மர், சாளுவ குலத்தவர்களான தனது உறவினர்களை தமிழகத்தின் பல பகுதிகளில் ஆட்சியில் அமர்த்தினார். அதன்படி செஞ்சிக்கு அதிபதியாக நியமிக்கப்பட்ட உதயகிரி ராமபத்திர நாயக்கருக்கு உதவியாளராக இருக்கும்படி ரங்கப்பட உடையார் என்பவரை நியமித்தார். இவருக்கு குன்னத்தை சுற்றியிருந்த பகுதிகள் ஜாகீராக அளிக்கப்பட்டது. ( வடபகுதி பாளையக்காரர்கள் வரலாறு: நடன காசி நாதன் பக் 81)


இந்த பாளையக்காரர்கள் தங்களை "பார்க்க கோத்திரம்" என்றும் கங்கநூஜா" குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் குறித்துள்ளனர். (வடபகுதி பாளையக்காரர்கள் வரலாறு: நடன காசி நாதன் பக் 101)



உடையார்பாளையம் பாளையக்காரர்கள் தங்களது பூர்வீகம் பற்றிய வரலாற்று நூலில் தங்களது குடும்பப் பெயர் பல்லவாரு என்றும், பூர்வீகம் கர்நாடகம் என்றும் தங்களது ஆதியை குறித்துள்ளனர். கர்நாடகத்தில் இருந்து வந்த திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி ரங்கராஜர் வம்சாவளி நூல் தங்களது முன்னோர் கர்நாடகத்தில் இருந்த போது தம்மிடி பல்லவாரு என குடும்பப் பெயரை பெற்றிருந்ததாக கூறுகின்றனர். (வடபகுதி பாளையக்காரர்கள் வரலாறு: நடன காசிநாதன் பக் 117) 



"கிபி 1690-ல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கு ஆதரவாக போரிட்டு அதில்வென்று தென்ஆற்காடு (தேவனாம்பட்டு) பகுதியில் அரசு காவல்காரராக St. David எனும் ஆங்கிலேயரால் நியமிக்கப்பட்டனர். 

வரிகளை முறையாக செலுத்தி பாளையத்தை தக்கவைத்துள்ளனர்.



உடையார்பாளையம் குடும்பத்தினர் இன்று வரை தெலுங்கு தாய்மொழியாக கொண்டு பேசி வருவதாக தமிழக அரசின் ஆவணமே கூறுகிறது.http://www.tn.gov.in/dtp/CCBP/Udayarpalayam.pdf

பிச்சாவரம் குடும்பத்தினரும் தங்களை விஜய நகர மன்னர் கால தெலுங்கு பாளையக்காரர் சூரப்பராஜன் வழிவந்தவராக இருக்கலாம் என தொல்லியல் அறிஞர் திரு நடனகாசிநாதன் குறிப்பிட்டு இருப்பது உற்று நோக்கவல்லது.

இவற்றால் நாம் அறிவது பிச்சாவரத்து குடும்பத்தார்கள் தங்களை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பரத்துவாஜ கோத்திரமான பல்லவர்களின் வம்சம் என அழைத்துக்கொள்ள ஆரம்பித்தனர். அதிலிருந்து சிறிது காலத்தில் தங்களை காசிப கோத்திரத்தில் உதித்த சோழர்கள் என்றும் கூறலாயினர். அதே நேரத்தில் தங்களை அக்னிக் கோத்திரம் என்றும் கூறிவருகின்றனர். அக்னி கோத்திரத்தில் உதித்து பரத்துவாஜ கோத்திர பல்லவர்களாகவும், காசிப கோத்திரத்தில் உதித்த சோழர்களாகவும் தங்களை கூறி வரும் பிச்சாவர குடும்பத்தார்கள் உண்மையில் தாங்கள் எந்த கோத்திரம் என அவர்கள்தான் விளக்க வேண்டும்!

புலிக்குத்தி புலிவாயில் பொன்ணூஞ்சலாடிய சூரப்ப சோழனார், இந்த ஒரே வார்த்தை தான், இந்த பெயர் தான், இவர்கள் சோழர்கள் இல்லை என்பதற்கு ஒரு உதாரணம். புலியை கொடியில் வைத்திருக்கும் சோழன் ஒருவனும் புலிக்குத்தி என்று தன்னுடைய பெயராக வைத்துக்கொள்ளமாட்டார்கள்.

சோழப் பேரரசு மறைந்து கிட்டதட்ட 600 ஆண்டுகள் கழிந்த பின்னால் 20 ஆம் நூற்றாண்டில் கிடைத்த வாயப்பை பயன்படுத்தி தங்களை சோழர் வாரிசு என கூறிக்கொள்ளும் பிச்சாவரத்தார்களால், கிபி 14- 19 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அப்பகுதியின் ஆட்சியாளர்களாகவோ அல்லது வேறேதும் கோயில்களுக்கு கொடை அளித்தததாகவோ கூறும் எந்த ஆதாரமும் இல்லை. இடைக்காலங்களில் தில்லை நடராசர் கோயில் தொடர்பான வரலாற்று ஆவணங்கள் எதிலுமே, அப்பகுதியில் சோழர்கள் வாழ்ந்ததாகவோ, ஆட்சி செய்தததாகவோ, முடி சூட்டிக் கொண்டதாகவோ எந்த குறிப்பும் இல்லை. தில்லையில் 20 ஆம் நூற்றாண்டில் வெள்ளாளர்களைக் கொண்டு முடிசூட்டும் படலத்தை ஆரம்பித்து இன்று ஊடகங்களின் துணையோடு சோழ வம்சம் என தங்களை கூறிக்கொள்ளும் பிச்சாவரத்தார்கள் தான் அனைத்து வரலாற்று முடிச்சுகளுக்கும் விடையளிக்க வேண்டும்.

வெள்ளாளர்கள் சோழர்களா

இரண்டாம் ராசராச சோழன் காலத்தில் மன்னார்குடி மக்கள் கைலாசநாதர் கோயிலில் கூடி எடுத்த உடன்படிக்கை....

பெரும்குடிகள் வரி தொடர்பான விசயங்களுக்காக  வெள்ளாளர்களை சிறைபிடிக்க கூடாது என்றும்,  அவர்களை வீடுகளில் அடைத்து  வைக்க கூடாது என்றும் பெருங்குடிகள் முடிவு செய்து அறிவித்துள்ளனர்...



சோழர்களின் முடியை விட வேளாளர்களின்  நாற்று முடியே சிறந்தது -  கம்பர் சோழரின் அவைக்களப்புலவர்

 இன்றைய காலச்சூழலில் எல்லோரும் தங்களை போர்குடியாக காட்டிக் கொள்ள பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.

  உழுகுடிகளான வேளாளர்கள் தங்களை போர்குடி மன்னர்கள் வழிவந்தவர்கள் என கூற ஆரம்பித்து உள்ளனர்.

 ஆனால் உண்மை என்றும் சாகாது எனும் வகையில் சோழர் காலத்தில் வாழ்ந்த கம்பர் எனும் புலவர் தான் எழுதிய " ஏரெழுபது" எனும் நூலில் பல உண்மைகளை பாடல்கள் மூலம் கூறியுள்ளார்.

  ஏரெழுபதில் உள்ள பாடல்களில் இரண்டு பாடல்களை இங்கு காணலாம்....

ஏரெழுபதில் உள்ள 32 ஆம் பாடலில் "  சேரன் சோழன் பாண்டியன் ஆகிய மன்னர்களின் மணி முடியை விட வேளாளர்களின் நாற்றின் முடியே சிறந்தது" என பாடியுள்ளார்.

 ஏரெழுபதில் உள்ள 35ஆம் பாடலில் " மன்னர்கள் உயிர்களை அழிக்கும் போர்முனையை விட வேளாளர்கள் உழுது உணவு பயிரிடும்  நாற்று முடிகளை கொண்ட முனையே சிறந்தது என பாடியுள்ளார்....

 முடி மன்னர்கள் தோன்றிய குலமும் வேளாளர்கள் தோன்றிய குலமும் வேறு வேறு என ஏரெழுபது பாடல்கள் சோழர் கால சான்றுகளாக நமக்கு உணர்த்துகின்றன...

 அரசர்களை எள்ளி நகையாடி வெள்ளார்களை உயர்த்திப் பேசும் பல பாடல்கள் எரெழுபது என நூலில் காணப்படுகின்றன....




தீவுக்கோட்டை எனும் கற்பனைக்கோட்டை
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

அண்மைக் காலங்களில் சோழகர் பற்றிய தேடல்கள் மக்களிடம் அதிகரித்து வருகின்றது.  சோழர்கள் பற்றிய தமிழர்களின் தேடல்களை பயன்படுத்தி சில பொய்யான பரப்புரைகளை சமூக வலை தளங்களில் பல சாதி அமைப்புகள் பரப்பி வருகின்றனர்.  இத்தகைய பல பரப்புகரைகளில் ஒன்றாக தீவுக்கோட்டை எனும் பகுதியை சோழர்கள் ஆட்சி செய்ததாகவும் அவர்களின் வம்சாவழியினர் இன்றும் சோழர்களாக வாழ்ந்து வருவதாகவும் பல புரளிகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றது.  இத்தகைய பரப்புரைகளுக்கு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை என்பதே உண்மையாகும்.

வரலாற்றில் மூன்று நிகழ்வுகளை கோர்வையாக கொண்டு இவர்கள் கட்டிய கற்பனை கோட்டையை காண்போம்

கிபி பதினைந்தாம் நூற்றாண்டில் தஞ்சையை வீரசேகர சோழன் என்பவர் ஆட்சி செய்ததாகவும் , இந்த வீர சேகர சோழனுக்கும் சந்திர சேகர பாண்டியனுக்கும் நடைபெற்ற போரில் விசய நகர பிரதிநிதி நாகம்ம நாயக்கர்  பாண்டிய மன்னனுக்கு ஆதரவாக களமிறங்கி சோழ மன்னனை போரில் வீழ்த்தியபின், அவர் கடற்கரை நகருக்கு தப்பி சென்றதாகவும் குறிப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.

அங்கிருந்து தப்பி சென்ற சோழ மன்னன் தீவுக்கோட்டை எனும் பகுதியில் சோழ அரசனாக கோட்டை கட்சி செய்ததாகவும், கிபி பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கரால் இந்த சோழ மன்னன் வீழ்த்தப்பட்டதாகவும் பரப்புரை செய்கின்றனர்.

இந்த சோழ மன்னனின் வழிவந்தவர்களே இன்று பிச்சாவரத்தில் வாழும் சூரப்ப சோழகனார் வம்சத்தினர் என்பதே இவர்களின் வாதம்.

வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் இவற்றின் உண்மைத் தன்மையை காண்போம்.

கற்பனையில் ஒர் சோழ மன்னன்
☀☀☀☀☀☀☀☀☀☀☀☀

கிபி பதினைந்தாம் நூற்றாண்டில் தஞ்சையில் சோழ மன்னர் என யாரும் ஆட்சி செய்யவில்லை என்பதே ஆய்வாளர்களின் முடிவாகும்.  கிபி 1496 ஆம் ஆண்டு காலத்தில் விசயநகர அரச குடும்பத்தை சேர்ந்த நரச நாயக்கர் தென்னாட்டில் திக் விஜயம் மேற்கொண்டு பல பகுதிகளை வெற்றி கொண்டார். 

நரச நாயக்கரால் வெற்றிக் கொள்ளப்பட்ட சோழ நாட்டை ஆண்டவர் கோனேரிராயன் எனும் மகாமண்டலீஸ்வரன் ஆவார். இவரே சோழ நாட்டு அரசன் என குறிப்பிடப்படுகிறார். 

வாதாம்பிகா புராணம் காட்டும் சோழ நாட்டு போர்
☀☀☀☀☀☀☀☀☀☀☀☀☀☀☀☀☀☀

விசயநகர மன்னரான அச்சுதராயர் காலத்தில் எழுதப்பட்ட வரதாம்பிகா பரிணயம் எனும் நூலில்,  அச்சுதராயரின் தந்தையான நரசநாயக்கரின் போர் வெற்றிகள் புகழப்பட்டுள்ளன. 

இதன்படி அம்பு மழை பொழியும் போர்க்களத்தில் நரச நாயக்கன் சோழ நாட்டு அரசனான கோனேரி ராயனை எதிர்த்து போரிட்டார் என்றும்,  போரின் இறுதியில் சோழ நாட்டு மன்னரின் பட்டத்து யானை கொல்லப்பட்டு  கோனேரிராயன் கைது செய்யப்பட்டதாகவும் போர்காட்சிகள் வர்ணிக்கப்படுகிறது.

கோனேரி ராயன் எனும் சோழ நாட்டு அரசன் 
☀☀☀☀☀☀☀☀☀☀☀☀☀☀☀☀

விசய நகர மன்னர் அச்சுதராயரின் புகழ் பேசும் " அச்சுதராயாபுதயம்"  எனும் நூலிலும் நரச நாயக்கனின் சோழ நாட்டு போர் நிகழ்ச்சிகள் வர்ணிக்கப்பட்டுள்ளது.  இந்த நூலில் சோழ நாட்டு அரசனான கோனேரி ராயன் என நேரடியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.  " குதா பதந்தம் சவர குஞ்சர ரௌதை கோனேட்டிராஜம் ஷூபிதான்யஸன்ய"  என வரிகள் யானை மீதிருந்த கோனேரி ராஜன் வீழ்த்தப்பட்டதை குறிப்பிடுகின்றது.

சோழ நாட்டு அரசன் பெற்ற கோட்டை
☀☀☀☀☀☀☀☀☀☀☀☀☀

கிருஷ்ணதேவராயர் காலத்தில் எழுதப்பட்ட " பாரிஜாத பஹ்ரணம் " எனும் நூலில் நரச நாயக்கனின் படையெடுப்பு பற்றி விவரிக்கப்படுகிறது.  இதில் " சோழவல்ல புனகு ஸீரவதூ மதுராத ரமு லிச்சி மதுரா புரம்பு கொனியே"  எனும் வரிகள் நரச நாயக்கன் சோழ நாட்டு அரசனான கோனேரி ராயனுக்கு கோட்டையை திருப்பி அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சோழ நாட்டை ஆண்ட எந்த அரசனும் எந்த தீவுக்கும் தப்பி செல்ல வில்லை என முடிவாகிறது.

வரதாம்பிகா பரிணயம் எனும் நூலில் " மருவ அரசன் என்பவனே நரச நாயக்கனை கண்டு அஞ்சி கடற்கரை நகரை நோக்கி தப்பி ஒடியதாக " குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக மேற்கூறிய ஆதாரங்கள் நமக்கு உணர்த்துவது "  சோழ நாட்டை ஆண்ட அரசனாக குறிப்பிடப்படுபவர் கோனேரி ராயன் என்பவர் என்பதும்,   இவரை நரச நாயக்கன் வென்ற பிறகு இவரது கோட்டை திருப்பி அளிக்கப்பட்டது என்பதும் உறுதியாகிறது.  

எந்த சோழ மன்னனும் கிபி 15 ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் ஆட்சி செய்யவில்லை என்பதும், போரில் தோற்ற எந்த சோழ நாட்டு அரசனும் கடற்கரை நகரை நோக்கி செல்லவில்லை என்பதும் உறுதியாகிறது.

( ஆதாரம்: தமிழ் மன்னன் கோனேரிராயன் /  தொல்லியல் அறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் பக் 50-53)

தஞ்சை நாயக்கர் வரலாற்றை எழுதிய அண்ணமலை பல்கலைக்கழக வெளியீடான " தஞ்சை நாயக்கர் வரலாறு" நூளிலும் கிபி பதினைந்தாம் நூற்றாண்டில் சோழநாட்டில் சோழர்கள் ஆட்சி செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். ( Nayaks of tanjore: Annamalai university pg 11) 

தேவிக்கோட்டை சோழகன்
☀☀☀☀☀☀☀☀☀☀

கிபி பதினாறாம் நூற்றாண்டில் கொள்ளிடம் கடலோடு கலக்கும் தேவிக்கோட்டை எனும் ஊரில் சோழகன் என்பவன் செஞ்சி நாயக்கரான கிருஷ்ணப்ப நாயக்கரின் ஆட்சியில் ஒர் தலைவனாக விளங்கினான். இச் சோழகன் வழிப்போக்கர்களுக்கும் மக்களுக்கும் கொடுமைகள் செய்து வந்ததாக வரலாற்று குறிப்புகள் உணர்த்துகின்றன. சோழகனுக்கு துணையாக செஞ்சி நாயக்கரின் படையும்,  போர்த்துகீசியர் படையும் இருந்தது

பொது மக்களுக்கு துன்பங்களை தந்த சோழனை அழிக்க இரகுநாத நாயக்கர் படையோடு சென்று சோழகனை வீழ்த்தி அவனது குடும்பத்தினரை கைது செய்ததாகவும் , சோழகனுக்கு உதவியாக வந்த செஞ்சி நாயக்கர் தப்பி ஒடியதையும் இரகுநாத நாயக்கர் கால நூல்கள் உரைக்கின்றன.

சோழகன் - சோழகோன் என்பவர்கள் சோழர் காலத்திலும் அதற்கு பிந்தைய கால கட்டத்திலும் அதிகாரிகளாக விளங்கியதை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

கிபி 1036 ஆம் ஆண்டை சேர்ந்த எசாலம் செப்பேட்டில் முதலாம் ராஜேந்திர சோழனின் அதிகாரிகளில் ஒருவராக உத்தம சோழகோன் என்பவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

கிபி 1213 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை மடத்துக்கோயில் கல்வெட்டில், மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் உதயப்பெருமாள் சோழகோனார் எனும் அதிகாரி குறிப்பிடப்படுகிறார்.

கிபி 1351 ஆம் ஆண்டை சேர்ந்த உடையார்பாளையம் கல்வெட்டில் பாண்டிய மன்னரின் அதிகாரியாக " உதையஞ்செய்தானான சோழகோன் என்பவர் குறிப்பிடப்படுகிறார்.

கிபி 1232 ஆம் ஆண்டை சேர்ந்த கடலூர் கல்வெட்டில் " மூன்றாம் ராஜராஜ சோழனை சிறைப்பிடித்த கோப்பெருஞ்சிங்கனின் அதிகாரிகளில் சோழகோன் என்பவரும் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
( Ins 142 of 1902)

கிபி பதினேழாம் நூற்றாண்டில் கள்ளர் நாடான செங்கிளி நாட்டில்( புதுக்கோட்டை -தஞ்சை) பெரிச்சி சோழகர் மற்றும் பலபத்ர சோழகர் முதலானோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த சான்றுகள் நமக்கு உணர்த்துவது சோழகன் , சோழகோன் போன்ற பெயர்கள் சோழர் காலத்தில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பெயர்களாகும். தேவிக்கோட்டை சோழகன் வாழ்ந்த காலத்திலேயே பல்வேறு பகுதிகளில் சோழகர்கள் எனும் குறுநில தலைவர்கள் புதுக்கோட்டை,  தஞ்சை பகுதிகளில் வாழ்ந்து வந்துள்ளதை உணர்த்துகின்றன.  எல்லாவற்றிக்கும் மேலாக மூன்றாம் ராசராச சோழனை சிறைபிடித்தவர்களில் ஒருவரே சோழகோன் எனும் பட்டம் தரித்தவன் என இருக்கும்போது சோழகன் என்பவர்கள் சோழ கால அதிகாரிகள் என்பது தெளிவாக விளங்கும்.

பிச்சாவரம் சூரப்பர்கள்
☀☀☀☀☀☀☀☀☀

பிச்சாவரத்து குடும்பத்தார்கள் தங்களை  20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பரத்துவாஜ கோத்திரமான பல்லவர்களின் வம்சம் என அழைத்துக்கொள்ள ஆரம்பித்தனர். அதிலிருந்து சிறிது காலத்தில் தங்களை காசிப கோத்திரத்தில் உதித்த சோழர்கள் என்றும் கூறலாயினர். அதே நேரத்தில் தங்களை அக்னிக் கோத்திரம் என்றும் கூறிவருகின்றனர். அக்னி கோத்திரத்தில் உதித்து பரத்துவாஜ கோத்திர பல்லவர்களாகவும், காசிப கோத்திரத்தில் உதித்த சோழர்களாகவும் தங்களை கூறி வரும் பிச்சாவர குடும்பத்தார்கள் உண்மையில் தாங்கள் எந்த கோத்திரம் என அவர்கள்தான் விளக்க வேண்டும்! சோழப் பேரரசு மறைந்து கிட்டதட்ட 600 ஆண்டுகள் கழிந்த பின்னால் 20 ஆம் நூற்றாண்டில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களை சோழர் வாரிசு என கூறிக்கொள்ளும் பிச்சாவரத்தார்களால், கிபி 14- 19 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அப்பகுதியின் ஆட்சியாளர்களாகவோ அல்லது வேறேதும் கோயில்களுக்கு கொடை அளித்தததாகவோ கூறும் எந்த ஆதாரமும் இல்லை.

இடைக்காலங்களில் தில்லை நடராசர் கோயில் தொடர்பான வரலாற்று ஆவணங்கள் எதிலுமே, அப்பகுதியில் சோழர்கள் வாழ்ந்ததாகவோ, ஆட்சி செய்தததாகவோ, முடி சூட்டிக் கொண்டதாகவோ எந்த குறிப்பும் இல்லை. தில்லையில் 20 ஆம் நூற்றாண்டில் வெள்ளாளர்களைக் கொண்டு முடிசூட்டும் படலத்தை ஆரம்பித்து இன்று ஊடகங்களின் துணையோடு சோழ வம்சம் என தங்களை கூறிக்கொள்ளும் பிச்சாவரத்தார்கள் தான் அனைத்து வரலாற்று முடிச்சுகளுக்கும் விடையளிக்க வேண்டும்.

சிதம்பரம் செப்பேடுகள் எனும் தொகுப்பை சேர்ந்த 24 செப்பேடுகள்,  கிட்டத்தட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன் நானூறு ஆண்டு கால கொடைகளைப் பற்றிய ஆதாரங்களை கொண்டுள்ளது. இந்த 24 செப்பேடுகளிலும்,  சிதம்பரம் கோயில் கல்வெட்டுகளிலும் எங்கும் இப்பகுதியை சிதம்பரம் சூரப்ப சோழகனார்கள் ஆட்சி செய்தததாகவோ, இவர்கள் சோழ வம்சத்தினர் என்றோ எந்த சான்றுகளும் இல்லை என்பதே உண்மை நிலையாகும்.  



























கேள்விகளுடன்

சம்பட்டியார்

நம்முடைய கள்ளர் குடியை சேர்ந்த இளைஞர்கள் போலிகளை கண்டு குழப்பம் அடையாமல், சோழ, பாண்டிய மன்னர்போல்  போல், இன்று  ஒவ்வொரு துறையிலும் வெற்றி வாகை சூடி நமக்கான முத்திரையை , இந்த உலகில் பதிப்போம். வீன் சாதி மத ரீதியான விவாதங்கள் தவிர்த்து, நவீன காலத்திற்கு ஏற்ப நம்மை தயார் படுத்திக்கொண்டு , இதில் ஒவ்வொருவரும் நமக்கான ஒரு வெற்றி வரலாற்றை பதிவு  செய்வோம்.





இராஜராஜ சோழரின் பள்ளிப்படை உடையாளூரில் உள்ளதா என்பது பற்றி அறிய தமிழக அரசிடம் கேட்டதற்கு கிடைத்த பதில்


வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்