ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

சோழ மண்டலத்தில் கள்ளர்களுக்கு "தேவர்" பட்டம் உள்ளதா ?தேவர் என்ற பட்டம் முக்குலத்தோர்க்கும் பொதுவானது , இந்த பட்டம் மூவரில் யாருக்கு தொன்று தொட்டு உள்ளது என்று யாராலும் அறிதியிட்டு உறுதியாகக் கூற முடியாது.


கி.பி 1655 இல் திருமலை பின்னத்தேவர் தன்னரசாக மதுரை பகுதில் ஆட்சி செய்ததை நாம் அறிந்ததே ஆனால் சோழமண்டலத்தில் கள்ளர்களை தேவர் என்று அழைப்பதில்லை என்று சிலர் கூற்று.சோழமண்டலத்தில் கள்ளர்களை அந்த அந்த குடும்ப பெயரால் அழைக்கபடுவதால் தேவர் பட்டம் உடைய கள்ளர்களை மட்டுமே தேவர் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றனர். இதனை அறியாத சிலர் சோழமண்டலத்தில் தேவர் என்றால் கள்ளர் இல்லை என்று கூறிவருகின்றனர்.தஞ்சை பாப்பாநாடு பாளையக்காரர்கள் “விஜயதேவர்” என்ற பட்டம் உடையவர்கள். தஞ்சையின் பெரும் நிலப்பகுதிகள் இவர்களின் கீழ் இருந்தது. பாப்பாநாடு பாளையக்காரர் “விஜயதேவர்” சிலை மன்னார்குடி செயங்கொண்ட நாத கோவிலில் இன்றும் சிலையாக வழிப்பாட்டில் உள்ளது.

கள்ளர்களுக்கு தேவர் என்ற பட்டங்களை தவிர

" சோழங்கதேவர் , சோழகங்கதேவர் , சோழதேவர் , வள்ளாளதேவர், அச்சித்தேவர் , விசயத்தேவர், அம்பர்த்தேவர், அம்மாலைத்தேவர், அம்பானைத்தேவர், அம்மையத்தேவர், அரசதேவர், ஆஞ்சாததேவர், இராமலிங்கராயதேவர், இராயதேவர், கட்டத்தேவர், கண்டியத்தேவர், கலிங்கராயதேவர், கன்னதேவர், காலிங்கராயதேவர், கைலாயதேவர், சங்கரதேவர், சண்டப்பிரதேவர், சந்திரதேவர், சமயதேவர், சம்பிரத்தேவர், சாலியதேவர், சிவலிங்கதேவர், சோமதேவர், தெலிங்கதேவர், நரசிங்கதேவர், நரங்கியதேவர், நாகதேவர், நாரத்தேவர், நெல்லிதேவர், பருதிதேவர், பனையதேவர், பொய்ந்ததேவர், பொன்னதேவர், போசுதேவர், மங்கலதேவர், மங்கதேவர், மொங்கத்தேவர், மன்னதேவர், மெட்டத்தேவர், மேனாட்டுத்தேவர், வண்டதேவர், விசல்தேவர், வில்லதேவர், வீச்சாதேவர், வெண்டாதேவர், வெள்ளதேவர் "

என்ற பட்டங்களை உடைய கள்ளர்கள் பெரும் எண்ணிக்கையில் இன்றும் சோழ மண்டலத்தில் வாழ்கின்றனர்.

இதில் சில பட்டங்களை மட்டும் பார்க்கும் போது அவை, சோழ கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன.

• சோழங்கதேவர், சோழகங்கதேவர் :

சோழகங்கன் என்னும் பட்டம், இராசராச சோழன் தன் தம்பி மதுராந்தகனுக்கு வழங்கியதாக கூறப்பட்டுள்ளது. 1015-இல் எழுதப்பட்ட கங்கை கொண்ட இராஜேந்திர சோழ தேவரின் மெய்கீர்திகளில் தன் மகன்களில் ஒருவனை சோழபாண்டியன் என்று பாண்டிய நாட்டிலும், சோழ இலங்கேஸ்வரன் என்று ஒருவனை இலங்கையிலும், சோழகங்கன் என்னும் ஒருவனை கலிங்க நாட்டிலும் சோழ வல்லபன், சோழ குச்சிராயன் என கூர்சரம், வேங்கியிலும் அமர்த்தியதாக தெரிகின்றது.

• சங்கரதேவர் :

சங்கர ராசேந்திர சோழன் உலா என்பது சோழர் குலத்தில், தோன்றிய மூன்ரும் குலோத்துங்கனுடைய தம்பியாகிய சங்கரசோழ னைப் பாட்டுடைத் தலைவகைக் கொண்டு பாடப் பெற்றது. சோழ அரசனை இந்தநூல், சங்கர சோழன் (காப்பு, 272) என்றும், சங்கர ராசன் (38, 115) என்றும், சங்கர வேந்தன் (114) என்றும், சங்கரன் (235, 337, 338) என்றும் கூறும்.

• நரசிங்கதேவர், நரங்கியதேவர்:

பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர் கோவில்
கல்வெட்டு அரசு:வாணாதிராயர்; ஆண்டு: 14-ஆம் நூற்றாண்டு
செய்தி: செம்மயிர் பாடிகாவல் சண்டையில் நரசிங்க தேவர், சோழகோன், பல்லவராயர், பஞ்சவராயர்..........
மாவலி வானாதிராயர் காரியத்திர்க்கு..........செவ்வலூர் உரவரும் வடபற்று நாட்டவரான செவ்வலூரு பஞ்சவராயர், நரசிங்க தேவர் உள்ளிட்டோர்க்கும் சோழ்கோனார், பல்லவராயர் உள்ளிட்டார்க்கும் விரோதமான செம்மயிர் விரோதமாய் வெட்டி.......

• சிவலிங்க சோழன் (சிவலிங்க தேவர்) :

சரஸ்வதி மஹால் வெளியிட்டுள்ள அரிய நூலான பிருகதீஸ்வர மாஹாத்மியம் சோழ மன்னர்களில் 16 பேர்களின் வரலாற்றை விவரிக்கும் . இதில் சிவலிங்க சோழன் 119 ஆலயங்களுக்குத் திருப்பணி செய்தான். இவன் பெயர் சிவலிங்க தேவர். சிவலிங்க சோழன் மகன் வீர சோழன் காவிரிக்குக் கிளை ஆறை ஒன்றை வெட்டி உருவாக்க அது வீர சோழன் ஆறு என்ற பெயரைப் பெற்றது.

• அம்பர்த்தேவர்

கோச்செங்கட் சோழனுக்கு அம்பர்த்தேவர் என்றும் பெயர்.

• கண்டியத்தேவர் :

பராந்தகச் சோழனின் மனைவி கண்டியத்தேவர் வம்சத்தை சேர்ந்தவர்.

• கட்டத்தேவர் :

கட்டத்தேவர் என்ற பட்டம் சேதுபதி மன்னருக்கும் உள்ளது. முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி கட்டத்தேவர் சகம் 1692 (கி.பி.1770)ஆம் ஆண்டில் மக்களுக்கு உணவளிக்கவும் தண்ணீர்பந்தல் வைக்கவும் நிலக்கொடை வழங்கினார்.
திருவுடையாத் தேவர் என்ற முத்துவிஜய ரகுநாத சேதுபதி கட்டத்தேவர்(கி.பி.1709-1723) அத்திïத்து என்ற ஊரில் 14 பிராம ணக்குடும்பங்களுக்கு வீடுகளும் நிலங்களும் அளித்தார். திருமலை ரகுநாத சேதுபதி கட்டத்தேவர் ( கி.பி. 1645-1670) கௌண்டினிய கோத்திரத்து அகோ பலையாவுக்கு நிலம் வழங்கனார்.
சேதுபதிகளின் அறப்பணிகளே செப்புப்பட்டயங்களில் பேசப்படுகின்றன. இதில் கட்டத்தேவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

• கன்னதேவர் , கன்ன(ர) தேவன்:

யாழ்ப்பாண அரசனான பரராசனின் உயிர்த்தோழன் கன்னதேவர் என்ற தொண்டை மண்டல அரசன் என வையாடல் (89,90) கூறுகிறது.

புதுச்சேரி, பாகூர் கல்வெட்டு ஒன்று கன்னர தேவன் (கி. பி. 962) பற்றிக் கூறுகிறது.

• சோழதேவர் :


சோழதேவர் என்பது சோழர்களின் பட்டமாகும்.

• சோமதேவர் :

திருக்காளத்தி இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும். இங்கே இக்கோயிலுக்கு வடக்குத் திருவீதியில் கூற்றுதைத்தான் சோமதேவர் மடம் ஒன்று உள்ளது.

• மேனாட்டுத்தேவர் :

சேரநாட்டின் ஒரு பகுதியாகிய வேணாடு என்னும் நாட்டை இராசராசசோழன் வெற்றி கொண்டு ஆண்டுள்ளான். ஒன்பதாம் திருமுறை பாடிய அருளாளருள் ஒருவர் வேணாட்டடிகள் என்பவராவார். வேணாட்டரையன் என்னும் பட்டமே மேனாட்டரையன் என்று திரிந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேனாட்டரையன் என்ற குறுநில மன்னன் நார்தாமலையில் மறைந்து கொண்டு முகமதிய அரசர்களுக்கு பல தொல்லைகளை கொடுத்து பின்னர் நட்புரிமை கொண்டதாகவும் தஞ்சை ஆட்சியரிடம் இருந்து பெறப்பட்ட செப்பேட்டில் குறிப்பு காணப்படுகிறது. இப் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் தஞ்சை பூண்டி, புனவாசல் முதலிய ஊர்களில் வாழுகின்றனர்.

• வாசிதேவன் காலிங்கராயன் :

நெடுங்களம் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமுன் வாயில் உத்திரத்தில் காணப்படும் முதற்குலோத்துங்கரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு,இத்திருமுன்னுக்கு முன்னால் அமைந்துள்ள மண்டபத்தை எடுத்தவராக கிளியூர் நாட்டுக் கள்ளிக்குடி அரையன் மகனார் ஆதித்தன் உலகனான விசையாலய முத்தரையனைச் சுட்டுகிறது. திருச்சுற்று மாளிகையின் மேற்கிலுள்ள தூண்கள் சிலவற்றில், அவற்றை அளித்தவர்களாக மாத்தூர் மடந்தை பாகன் குருகுலராயன், கீரனூர் வாசிதேவன் காலிங்கராயன், நுணாங்குறிச்சிச் சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி,செங்கனிவாயன் ஆகியோர் பெயர்கள் வெட்டப்பட்டுள்ளன.

• அருமொழி தேவன்:

திருவானைக்காக் கல்வெட்டு ஒன்று பின்வருமாறு கூறகின்றது:
'ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு 4107-வது பாண்டி குலாசனிவள நாட்டு மீகோழை நாட்டுத் தேவதான பிரமதேயம் திருவானைக்காவில் திருவெண்ணாவற்கீழ் அமர்ந்தருளிய திரிபுவன பதிக்கு மூலப்பிருத்தியனாகிய சண்டேசவரன் உள்ளிட்ட தேவகன்மிகள், ஜயசிங்ககுல கால வளநாட்டு மீசெங்கிளிநாட்டு வளம்பகுடி அரையன் மகன் முனையன் அருமொழி தேவனான வில்லவராயனுக்கு நாம் விற்றுக்கொடுத்த நிலமாவது....... (தென்னிந்திய சாசன புத்தகம் தொகதி 3, பகுதி 2, பக்கம் 168).

இதிற் குறித்துள்ள வளம்பகுடி என்பது பூதலூருக்குத் தெற்கில் ஐந்தாறு நாழிகையளவில் உள்ளதோர் ஊர். இவ்வூர் அந்நாட்டுக் கள்ளர்கள் நாட்டுக் கூட்டம் கூடுதற் குரிய பொது விடமாகும். வில்லவராயன் பட்டி என்பதோர் ஊரும் பூதலூருக்குத் தெற்கில் ஒரு நாழிகையளவில் உள்ளது.வளம்பகுடியில் இருந்த கள்ளர் குலத்தவனாகிய வில்லவராயனை ' அரையன் மகன்' என்று கூறியிருப்பது காண்க. இக் கல்வெட்டில் 'இவன்' உடையார் திருவானைக் காவுடைய எம்பெருமான் கோயிலில் இடங்கை நாயகரென்று எழுந்தருளவித்த இடப வாகன தேவர்க்கும் நம் பிராட்டியாரக்கும்' என்று வருதலால் இவனது பிரதிட்டைத் திருப்பணியும் புலனாம்.


பொன்பரப்பி தலைநகராகக் கொண்டு சோழங்க தேவன் (கி.பி.1218-1261) என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். சோழங்க தேவன் கால கல்வெட்டுகள் சேலம் மாவட்டத்தில் பரவலாக கிடைத்திருகின்றன. அதன் மூலம் சோழங்க தேவன் கோவில்களுக்கு இறையிலியாக நிலம் கொடுத்தமை,மானியம் வழங்கியது போன்ற செய்திகளை அறியலாம். இராஜேந்திர சோழனின் ஏழாம் ஆட்சியாண்டில் இராசிபுரம் காக்காவேரி கிராமத்திலுள்ள சிவன் கோவிலில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அதில் சேலநாட்டு அஞ்சாத பெருமாளான சோழங்கதேவன் பொன்பரப்பினான் என்கிறது.புதன், 7 பிப்ரவரி, 2018

சோழ வள கள்ளர் நாடு( பட்டமங்கள நாட்டு அம்பலகாரர்கள்) 


வளநாடுகளெல்லாம் சோழ மன்னர்களின் பெயர்களையே பெயராகக்கொண்டுள்ளன. சோழருக்கு வளவர் என்பது ஒரு பெயராகலின் அவர் ஆண்ட நாடுகள் வளநாடு எனப்பட்டன. 


(வளவர் – சோழர் (“சோழ வளநாடு சோறுடைத்து”); செழியர் - பாண்டியர்; பெரும் முக்கோக்கள் - முடிமன்னர்களாகிய மூவேந்தர்கள் ,)

அவ்வச்சோழர் காலத்திலேயே அவை உண்டாயின ஆகலின் வள நாடு என்னும் பெயர் தொன்று தொட்டதாகாது. ஒரு காலத்தில் நாடு என வழங்கியது பிறிதொரு காலத்தில் வளநாடு என்றாயது என்பதற்கு “மழநாடான ராஜாசிரய வளநாட்டுப் பாச்சிற் கூற்றம்” என வருவது சான்றாகும்.

நாட்டின் பிரிவுகள் தொன்று தொட்டு இங்ஙனம் வேறு பட வழங்கிவந்தாற் போலவே இப்பொழுது கள்ளர்கள் மிக்குள்ள சோழ பாண்டி மண்டலங்களில் வழங்கி வருகின்றன. வள நாடு, நாடுமுதலிய பல பிரிவுகளும் இப்பொழுது விரவிக்கிடக்கின்றன. நாட்டின் எல்லைகள் சில ஊர்கள் அளவிற் குறுகியும் உள்ளன.

இந்நாடுகட்கெல்லாம் தலைவராயினார் கள்ளர் குலத்தோர் ஆதலின் இவை பொதுவே கள்ளர் நாடு எனவும், கள்ளகம் எனவும் , கள்ளர் பற்று எனவும் வழங்குகின்றன. பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டதாய் கள்ளர் நாடு இருந்தது. கள்ளர் நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் கள்ளர் குலத்தவரில் ஒருவரோ பலரோ தலைவராக இருப்பர். அவர்களுக்கு அம்பலகாரர் அல்லது நாட்டாண்மைக் காரர் என்பது சிறப்புப் பெயராகும். சில இடங்களில் காரியக்காரர் என்றும் சொல்வதுண்டு.

தொண்டைமண்டத்தில் பல்லவ நாடு பல இராட்டிரங்களாகப் (மண்டலங்களாக) பிரிக்கப்பட்டது. ஒவ்வோர் இராட்டிரமும் பல விஷயங்களாகப் (கோட்டங்களாக) பிரிக்கப்பட்டிருந்தது. முண்டராட்டிரம், வெங்கோராட்டிரம் (வெங்கிராட்டிரம்), துண்டகராட்டிரம் (தொண்டை மண்டலம்) எனபன பல்லவர் பட்டயங்களில் குறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பல்லவர் கோட்டம், நாடு, ஊர் போன்ற ஆட்சிப்பிரிவுகளை அமைத்தனர். நாட்டின் ஆட்சிக்குப் பொறுப்பாளர்கள் நாட்டார் என்றும் ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பானவர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர். கள்ளர்களுக்கு நாட்டார் என்னும் பெயர் பொதுவாக வழங்குகிறது.

சோழ மண்டலத்திற்குள் வளநாடு, நாடு என்னும் பிரிவுகள் இருந்திருக்கின்றன. பல ஊர்கள் சேர்ந்து ஒரு நாடும், பல நாடுகள் சேர்ந்து ஒரு கோட்டமும் பல கோட்டங்கள் சேர்ந்து ஒரு மண்டலமும் ஆகும்.அப்படியே பல ஊர்கள் சேர்ந்து ஒரு நாடும் பல நாடுகள் சேர்ந்து ஒரு வளநாடும் பல வளநாடுகள் சேரந்து ஒரு மண்டலமும் ஆகும் கோட்டத்தின் உட்பட்ட நாடு என்பதன் உட்பிரிவாக கூறு என்பதொன்றும் சிறு பான்மை காணப்படுகிறது சோழ மண்டலமானது வளநாட்டிற்கு மேலாக தென்கரை நாடு, வடகரைநாடு என்னும் பிரிவினையும் உடைத்தாயிருந்தது. இப்பிரிவு காவிரியால் ஏற்பட்டதாகும்.
(புதுக்கோட்டை)

கடல் கொண்ட தமிழ் நிலத்தில் ஏழ்தெங்குநாடு ஏழ்மதுரைநாடு ஏழ்முன்பாலைநாடு, ஏழ்பின்பாலைநாடு, ஏழ்குன்றநாடு, ஏழ்குணக்காரைநாடு, ஏழ்பனைநாடு என்று நாற்பத்தி ஒன்பது நாடுகள் இருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றில் ஒன்றேனும் தேசமென்றிருந்ததாகக் கூறவில்லை. தமிழ் வழங்குமித்தமிழ் நிலம் செந்தமிழ் பேசும் பகுதியாகவும் கொடுந்தமிழ் பேசும் பகுதியாகவும் இருந்ததென்று ஒரு பழம் பாடல் கூறுகிறது.

பாடல் வருமாறு.
“தென்பாண்டி குட்டம்குடம் கற்கா வேண்பூமி
பன்றி அருவா அதன்வடக்கு – நன்றாய
சீதம் மலரடு புனநாடு செந்தமிழ்சேர் 
ஏதழில் பன்னிரு நாட்டெண் “
செந்தமிழிலிருந்து சற்றுத் திரிந்து வழங்கிய பகுதியைக் கொடுந்தமிழ் நாடுகளென்று குறித்ததேயன்றி தேசமென்று குறிக்கவில்லை.


நாடு என்னும் சொல் இச்செந்தமிழ் நிலத்தில் வழக்கேறி வழங்கி வருவதை வரலாற்று வழியில் காண்போம்.


(புதுக்கோட்டை கள்ளர் நாடு )

திருவாளர் S. குமாரசாமி மேல்கொண்டார் அவர்கள் ஓர் செப்புப் பட்டயத்திலிருந்து எழுதிய கள்ளர் நாடுகளின் பெயர்கள்:

“தந்தி நாடு, மனைப்பள்ளி நாடு, அய்வூர் நாடு, அஞ்சு முகநாடு, ஏரிமங்கல நாடு, மேலத் துவாகுடி நாடு, கீழத் துவாகுடி நாடு, கொற்கை நாடு, செங்குள நாடு, மேல் செங்குள நாடு, கீழ செங்குள நாடு, பூளியூர் நாடு, செங்கணி நாடு, பிரம்பை நாடு, கானம்பூண்டி நாடு, சித்தர்குடி நாடு, மேல மகாநாடு, கீழ் வெங்கை நாடு, குளமங்கல நாடு, சித்துபத்து நாடு, குழந்தைவளநாடு, பனையக்கோட்டை நாடு, அருமலைக்கோட்டை, காசாங்கோட்டை நாடு, தென்னம நாடு, ஒக்கு நாடு, உரத்த நாடு, பட்டுக்கோட்டை வளநாடு, கறப்பிங்கா நாடு, அஞ்சுவண்ணப் பத்து நாடு, கல்லாக்கோட்டை நாடு, அய்யலூர் நாடு, தென்பத்து நாடு, மத்தச் செருக்குடி நாடு, அன்னவாசற்பத்து நாடு, கண்ணுவாரந்தய நாடு, கோட்டை பத்து நாடு, பிங்களக் கோட்டை நாடு, மேலப் பத்து நாடு, பெரிய கூத்தப்ப நாடு, அறந்தாங்கி கீழாநெல்லி நாடு, வடுவூர் நாடு, திருமங்கலக் கோட்டை நாடு, பாப்பாநாடு, முசிரி நாடு, பின்னையூர் நாடு, விற்குடி நாடு, அம்பு நாடு, ஆலங்குடி நாடு, நிசிலி நாடு, நாலு நாடு, காசா நாடு, கோனூர் நாடு, சுந்தர் நாடு, மின்னாத்தூர் , நொழயூர் நாடு, அண்டக்குள நாடு, செருவாசல் நாடு, திருப்பத்து நாடு, அஞ்சில நாடு, ஆமையூர் நாடு, கிளியூர் நாடு, மல்லாக்கோட்டை நாடு, மழைநாடு, காவல் நாடு, காவிக்கோவில் நாடு, வலல நாடு, மாலை நாடு, பட்டமங்கல நாடு, கண்டர் மாணிக்க நாடு, கம்பனூர் நாடு, பாகையூர் நாடு, செருக்குடி நாடு, தெருபோகி நாடு, இருப்ப நாடு, எய்ப்பாம்பா நாடு, வன்னாடு, முத்து நாடு, சிலம்ப நாடு, செம்பொன்மாரி நாடு, சீழ் செங்கை நாடு, எயிலுவான் கோட்டை நாடு, மேலூர் நாடு, வெள்ளூர் நாடு” என்பன.

தஞ்சைக் கள்ளர் மகா சங்கம் அமைச்சராகிய திருவாளர் நடராஜ பிள்ளை அவர்கள் (பி.ஏ.,பி.எல்.,) வாயிலாகக் கிடைக்லுற்ற செய்திகள் பின் வருவன:

நாட்டின் பெயர் (தஞ்சாவூர்) 
============================
நாட்டின் முதற்கரை
பொதுத்தலம்

1) காசாநாடு
2) கீழ் வேங்கைநாடு
3) குழந்தை வளநாடு
அருமலைக்கோட்டை
தெக்கூர்
கோயி
4) கேனூர் நாடு
தெக்கூர்
கோட்தைத்தெரு
5) பின்னையுர்நாடு
பின்னையூர்
6) தென்னம நாடு
7) தொன்னம நாடு
8) கன்னந்தங்குடி நாடு
மேலையூர்
9) உரத்த நாடு
புதுவூர்
கோயிலூர்
10) ஒக்கூர் நாடு
மேலையூர்
11) கீழ ஒக்கூர் நாடு
கீழையூர்
12) திருமங்கலக் கோட்டை நாடு
மேலையூர்
13) தென்பத்து நாடு
பேரையூர்
அப்பராம்பேட்டை
14) ராஜவளநாடு
நடுவாக்கோட்டை
15) பைங்கா நாடு
16) வடுகூர் நாடு
தென்பாதி
17) கோயில்பத்து நாடு
கம்பை நத்தம்
கோயில்பத்து
18) சுந்தர நாடு
வளமரங்கோட்டை
19) குளநீள் வளநாடு
துரையண்டார் கோட்டை
கடம்பர் கோயில்
20) பாப்பா நாடு
தெற்குக் கோட்டை
சங்கரனார்கோயில்
21) அம்பு நாடு 
தெற்க வடக்குதெரு
செங்குமேடுடான் விடுதி
அம்புகோயில்
22) வாகரை நாடு
குருங்குளம்
23) வடமலை நாடு
பகட்டுவான் பட்டி
24) கொற்கை நாடு
செங்கிபட்டி கூனம் பட்டி
25) ஏரிமங்கல நாடு
ராயமுண்டான்பட்டி
வெண்டையன்பட்டி
26) செங்கள நாடு
விராலிப்பட்டி
நொடியூர்
27) மேலைத்துவாகுடிநாடு
சூரியூர்
28) மீசெங்கிளி நாடு
29) தண்டுகமுண்டநாடு
30) அடைக்கலங்காத்தநாடு
அள்ளூர்
31) பிரம்பை நாடு
பிரம்பூர்
32) கண்டி வள நாடு
நடுக்காவேரி
33) வல்ல நாடு
இளங்காடு
34) தந்தி நாடு
நத்தமாங்குடி
வாராப்பூர்
பொன்னம் விடுதி
35) ஆலங்குடி நாடு
ஆலங்குடி
36) வீரக்குடி நாடு
வாண்டான் விடுதி
திருமணஞ்சேரி
37) கானாடு
திருவரங்குளம்
38) கோ நாடு
39) பெருங்குளூர் நாடு
பெருங்களூர்
40) கார்யோக நாடு
41) ஊமத்த நாடு
சிங்கவனம்


கொற்கை நாடு, கீழதுவாக்குடி நாடு, வீரமரசன்பேட்டை நாட்டின் முக்கிய 10 வருவாய் கிராமங்களின் மக்கள் தொகை!

கிளைவழி கள்ளர் வாழும் பகுதி பாதினாலுநாடு எனப்படும்.

1) குன்னங்கோட்டை நாடு,
2) தென்னிலைநாடு,
3) உஞ்சனை நாடு,
4) இரவுசேரி நாடு,
5) செம்பொன்மார் நாடு,
6) கப்பலூர் நாடு,
7) இரும்பா நாடு,
8) சிலம்பா நாடு,
9) வடம்போகி நாடு,
10) தேர்போகிநாடு,
11) கோபால நாடு,
12) ஏழுகோட்டை நாடு,
13) ஆற்றங்கரை நாடு,
14) முத்து நாடு

மதுரைக் கள்ளர் நாடுகள்: -
============================1) மேல்நாடு
2) சிறு குடிநாடு
3) வெள்ளூர் நாடு
4) மல்லாக்கோட்டை நாடு
5) பாகனேரி நாடு
6) கண்டர் மாணிக்கம் அல்லது கண்ணன் கோட்டை நாடு
7) கண்டதேவி நாடு
8) புறமலை நாடு
9) தென்னிலை நாடு

பழைய நாடு என்பன புறமலை நாட்டுக் தலைவரை ஆயர் முடிச்சூட்டுவது வழக்கம் . மேல் நாடானது வடக்குத் தெரு, கிழக்குத் தெரு, தெற்குத் தெரு என்று மூன்று உட்பிரிவையுடையது.
சிறு குடி நாட்டின் உட்பிரிவுகள் ;ஆண்டி , மண்டை ஐயனார், வீரமாகாளி என்ற தெய்வங்களின் பெயர்களையுடையன. வெள்ளூர் நாட்டின் உட்பிரிவுகள்; வேங்கைப்புலி, வெக்காலி புலி, சாமிப் புலி, சம்மட்டி மக்கள், திருமான்,சாயும் படைத் தாங்கி என்பன போன்றவை சிவகங்கைச் சீமைகயில் 14 நாடுகள் உள்ளன. ஆண்டிற்கொருமுறை பதினான்கு நாட்டின் தலைவர்களும் சுர்ண மூர்த்திஸ் வாமி திருவிழா சம்பந்தமாய்க் கண்டதேவியில் கூடுவது வழக்கம். உஞ்சனை, செம்பொன் மாரி, இரவு சேரி, தென்னிலை, என்ற நான்கு நாடுகளும் சிவகங்கை சமீனில் மற்றொரு பகுதியாகும்.

பாண்டி நாட்டிலுள்ள கள்ளர் நாடுகளைப் பற்றி, கள்ளல் , ஸ்ரீமத் மணிவாச சரணாலய சுவாமிகளும் , சிவகங்கை , சிரஞ்சீவி எஸ், சோமசுந்தரம் பிள்ளை நன்கு ஆராய்ந்து தெரிவித்தவை பின்வருவன.1.மேல நாடு : இது ஐந்து தெருவாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் மேலை தெருவானது நரசிங்கன் பட்டி முதலிய எட்டு ஊர்களையும் , தெற்கு தெருவானது தெற்கு தெரு முதலிய எட்டு ஊர்களையும் , வடக்கத் தெருவானது வல்லாளப்ட்டி முதலிய 27 ஊர்களையும் பத்துக் கட்டு தெருவானது சிட்டம் பட்டி முதலிய 10 ஊர்களையும் , பறப்பு நாட்டு தெருவானது திருக்காணை முதலிய 8 ஊர்களையும் உடையன.

2.நடுவு நாடு: இது மேலூர் முதலிய 20 உர்களையுடையது.

3.சிறு குடி நாடு: இதற்கு செருங்குடி நாடு என்றும் பெயர் உண்டு. இது கீழ வளவு, மேல முதலிய பிரிவுகளையும் , பல ஊர்களையும் உடையது முன்பு வெள்ளூரும் இவர்கட்கு கீழ்பட்டிருந்தது. வெள்ளூர் மன்னவன் சின்னாண்டி என்பவனால் சிறு குடியார் துரத்தப்பட்டனர். இது வெள்ளூருக்கு மேற்கில் இருக்கிறது.

4. வெள்ளூர் நாடு: இது வடக்கு வேள்வி நாடு வீரபாண்டிய நல்லூர் ஆகிய வெள்ளலூர் நாடு, என்று கூறப்படும். இந்நாடு வெள்ளலூர், அம்பலககாரன் பட்டி, உறங்கரன் பட்டி குறிச்சிப்பபட்டி, மலம் பட்டி, என்னும் ஐந்து மாகாணங்களையுடையது. இவற்றில் வெள்ளலூர் மாகாணம் 9 ஊர்களையும், அம்பலக்காரன் பட்டி மாகாணம் 9 ஊர்களையம் , உறங்கரன் பட்டி மாகாணம் 9 ஊர்களையும், குறிச்சி பட்டி மாகாணம் 9 ஊர்களையும், மலம் பட்டி மாகாணம் 11 ஊர்களையும உடையன மற்றும் இந்நாடு முண்டவாசி கரை, வேங்கைப் புலி, சம்மட்டி கரை, நைக்கான் கரை, சாய்படை தாங்கி, வெக்கர்லி கரை, சலிப் புலி கரை, திருமான் கரை, செம்புலி கரை, கோப்பன் கரை, மழவராயன் கரை யென்னும் 11 கரைகளாக பிரிக்கப் பட்டிருக்கிறது. கரையொன்றுக்கு இரண்டு கரையம்பலம் உண்டு. நாட்டுத் தலைவர் நாடு முழுதுக்கும் தலைவராவார். இந்நாட்டிலே ஏழைக்காத்தம்மன கோயில். வல்லடியான் கோயில் என இரண்டு கோயில்கள் உண்டு. இந்நாட்டினர் வெள்ளை மலைக்கள்ளர் அல்லது வெள்ளூர் நாட்டார் எனப்படுவர். இந்நாடு சிவகங்கைக்கு மேற்கே ஐந்து மைல் தூரத்தில் உள்ளது. நாடு முழுவதும் ்ஏறக்குறைய 20 சதுர மைல் இருக்கும்.

5.அஞ்சூர் நாடு::- இது மதுரையின் கிழக்கே பன்னிரண்டு மைலில் உள்ளது; தமராக்கி, குண்ணனூர் முதலிய பல ஊர்களையுடையது.

6.ஆறூர் நாடு:- இது சிவகங்கையின் மேற்கே ஐந்து மைலிர் உள்ளது; ஒக்கூர்,நாலுகோட்டை முதலிய பல ஊர்களையுடையது. இந்நாட்டு தலைவர்களுக்குச் சோழ புறம் சிவன் கோயிலில் பட்டுப் பரிவட்டம் மறியாதைகள் உண்டு

7.மல்லக்கோட்டை நாடு:- இது சிவ கங்கையின் வடக்கே 8 மைலில் உள்ளது' மல்லகாக்கோட்டை, மாம்பட்டி, ஏறியூர் முதலிய ஊர்களையுடையது.

8.பட்டமங்களம் நாடு:- இது பட்டமங்கலம் முதலிய பல ஊர்களையுடையது. திருவிளையாடல் புறாணத்திலே கூறப்பெற்ற அட்டமாசித்தி யருளிய பட்டமங்கை என்னும் தளம் இதுவே. மல்லாக்கோட்டை நாட்டுக்கும் பட்டமங்கள நாட்டுக்கும் திருக்கோட்டியுர் பெருமாள் கோயில் தேர்திருவிழாக்களில் பட்டு பரிவட்டம் மரியாதைகள் உண்டு.

9..பாகநேரிநாடு:- இது கானேரி, காடனேரி, நகரம் பட்டி முதலிய பல ஊர்களையுடையது இந்நாட்டிற்கு பாகனேரியிலுள்ள சிவன் கோயில் அம்பாள் கோயில்களில் எல்ல எரிமைகளும் மரியாதையும் உண்டு.

10..கண்டர் மாணிக்கம் :- இது கண்டர் மாணிக்கம் முதலிய 13 ஊர்களயுடையது. இந்நாட்டிற்குக் கண்டர் மாணிக்கம் அம்மன் கோயிலிலும் குன்றக்குடி முருகப்பெருமான் கோயிலிலும், தேனாட்சியம்மன் கோயிலிலும் தேர் திருவிழாக்களில் பட்டுப்பரிவட்டம் முதலிய மரியாதைகளும் எல்லா உரிமைகளும்உண்டு.

11..குன்னங்கோட்டை நாடு:- இது கல்லல் குன்னமாகாளியம்மன் பெயரைக் கொண்டது. இந்நாட்டுக்குத் தலைவர் மேலப்பூங்குடியில் உள்ளவர்கள். இவர்களுக்கு பாண்டிநாடு மதிதட்தான், திறைகொண்ட பெரியான், சிறுக்கொந்தி முதலிய பட்டங்கள் உண்டு, இவர்கள் திருவெங்கடத்தானைக் குலதெய்வமாக உடையவர்கள், கண்ணிழந்தவர்க்கு கண் கொடுத்த ஒரு பக்தருடைய வழியினர், இவர்கள் பாண்டி வேந்தரிடத்தில் மேலே குறித்த பட்டங்களும், நாயக்க அரசரிடத்தில் அவர்கட்குரிய பாசுபந்து வாசமாலையும், சிவகங்கை இராமநாதபுரம் அரசர்களிடத்தில் இரட்டைத் தீவட்டி, இரட்டைச் சாமரை, தண்டிகை, சுருட்டி, இடைக்கம் பீலிகுஞ்சம், சாவிக்குடை, காவிச் செண்டா, வெள்ளைக்குடை, சிங்கக்கொடி, அனுமக்கொடி, கருடக் கொடி, புலிக் கொடி, இடபக்கொடி, மீனக்கொடி பஞ்சவர்ணக்கொடி என்னும் பதினெட்டு விருதுகளும், காண்டீபன் என்ற விருதாவளியும் பெற்றவர்கள். காளையார் கோயில், கல்லல் திருச்சோமேசுரர் கோயில், சிறு வயல் மும்முடீ நாதர் கோயில் என்னும் சிவாலயங்களின் தேர் திருவிழாக்களில் இவர்கள் மேற்கண்ட விருதுகளுடன் வந்து் பட்டுப் பரிவட்டம் முதலிய மரியாதையுரிமைகள் பெறும் வழக்கம் முடையவர்கள். இந்நாடு தெற்கோ காளையார் கோயிலுமட் வடக்கே ஆலங்குடியும் மேற்கே கல்லலும் கிழக்கே கோயிலாம் பட்டியும் எல்லையாகவுள்ள பல ஊர்களையுடையது. இந்நாட்டுக்குத் தலைவர் தமது இறுதிக் காலத்தில் தமக்குப் பின் தலைவராக இருக்கத் தமது குடும்பத்தில் தக்காரொருவர்க்குப் பட்டங்கட்டுவது வழக்கம். இவர்களைப் ்பட்டத்துச் சாமி பட்டத்து ஐயா என வழங்கி வருகிறார்கள்.

12.பதினாலு நாடு:- குன்னங்கோட்டை நாட்டிலிருந்து கிழக்கே கடல் வரையில் பதினான்கு நாடுகள் உள்ளன. அவை ஏழு கிளை பதினாலுநாடு என்னும் பெயரால் வழங்குகின்றன.

அவை:- குன்னங்கோட்டை நாடு , தென்னிலை நாடு, இரவுசேரி நாடு, உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு, கப்பலூர் நாடு, சிலம்பா நாடு, இருப்பா நாடு, தேர்போகி நாடு,வடபோகி நாடு, கோபால நாடு, ஆற்றங்கரை நாடு, ஏழுகோட்டை நாடு, முத்து நாடு என்பன. இந்தப் பதினான்கு நாட்டாரும் கண்டதேவியில் மகாநாடு கூடுவது வழக்கம். இவற்றில் தென்னிலை நாடு, இரவுசேரி நாடு, உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு என்னும் நான்கு் நாட்டிற்கும் கண்டதேவி சிவன் கோயில் தேர் திருவிழாக்களில் பட்டுப்பரிவட்டம் முதலிய மரியாதைகள் உண்டு. எழுவன் கோட்டை சிவன் கோயில் தேர் திருவிழாக்களில் தென்னிலை நாட்டுக்குப் பட்டுப்பரிவட்டம் முதலிய மரியாதைகள் உண்டு. இவையன்றித் திருவாதவூர் நாடு, கீழக்கடிநாடு என்னும் நாடுகளும் உள்ளன.


13.திருவாதவூர் நாடு:- இது மேலூர்த் தாலுகாவில் தென்கிழக்கில் உள்ளது; இடைப்பட்டி கவரைப்பட்டி முதலிய ஊர்களயுடையது.

14.கீக்குடிகாடு:- இது மதுரைக்கு மேற்கில் உள்ளது திருவாளர், துங்கன் சொக்கனாண்டித் தேவர் என்னும் ஓர் அன்பர் சேதுநாடு, கற்பகநாடு என்னும் இரண்டு நாடுகளைப்பற்றி எழுதியனுப்பினர். அவர் தெரிவித்தபடி சேதுநாடு என்பது4 மாகாணமும், 25 ஊர்களும் உடையதாகும் கற்பக நாடு என்பது 7 மாகாணமும் 30 ஊர்களும் உடையதாகும் முன்குறித்த திருவாதவூர் நாடும் கீழக்குடி நாடுமே முறையே சேது நாடு, கற்பகநாடு என்னும் பெயர்களாலவ் தெரிவிக்கப்பட்டிருக்குமோ வெனக் கருதப் படுகிறது.

மேல நாடு, நடுவ நாடு, சிறுகுடி நாடு, வெள்ளூர் நாடு, அஞ்சூர் நாடு, மையில்ராயன் கோட்டை நாடு,ஆரூர் நாடு, வல்லக்கோட்டை நாடு, பட்டமங்கல நாடு, பாகனேரி நாடு, கண்டர் மாணிக்க நாடு, உன்னங்கோட்டை நாடு, தென்னிலை நாடு, தேர்போகி நாடு,இரவுசேரி நாடு, உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு, கப்பலூர் நாடு, சிலம்பா நாடு, இவையன்றி இன்னும் பல நாடுகள் ஆராய்ச்சியாளர்களால் குறிக்கப் படுகின்றன..
கல்வெட்டில் நாடுகள் :

சோழ நாட்டில் மங்கலநாடு, மருகல் நாடு, மழநாடு, புலியூர் நாடு, அழுந்தூர் நாடு போன்ற நாடுகளும் அருண்மொழித் தேவவளநாடு, பாண்டிய குலோசினி வளநாடு போன்ற வளநாடுகளும் இருந்ததாகக் கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.


பாண்டிய நாட்டில் மேல்நாடு, சிறுகுடி நாடு, வெள்ளுர் நாடு, மல்லாக்கோட்டை நாடுபாகநேரிநாடு, போன்ற நாடுகளும்.

சேரநாட்டில் கொங்குமண்டலத்தில் பூந்துறை நாடு, காங்கேய நாடு, ஆரை நாடு, திருவானைக்குடி நாடு என மேலும் பல நாடுகளும் உள்ளன.

1) சோழர் கல்வெட்டு முதற்பராந்தகச் சோழன் கி.பி. (907--957) ஆனைமலை நரசிங்கப்பெருமாள் சபையோர் சாசனம் -- சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு மருதூர்.

2) தென்னவன் மூவேந்தவேளான் சாசனம் 995- பொய்கைநாடு, இராசேந்திரசிங்க வளநாடு, தியாவல்லி வளநாடு, திரிபுவன முழுதுடைய வளநாடு, திருவாலி நாடு, நித்தவினோத வளநாடு,

3) இராசராசக்கிணறு மன்னன் இராசராசன் (885-1014) வேங்கைநாடு, இராசிபுரத்து நகரத்தார் சாசனம் மன்னன் இராசராசன் வேங்கை நாடு, குடமலை நாடு,

4) சாமுண்டப்பை நிபந்தம் மன்னன் முதலாம் இரசேந்திரன் (1012--1044) பங்கள நாடு, வகைமுகைநாடு, இந்த கல்வெட்டில் மன்னனின் வெற்றிச்சிறப்பைக் கூறுமிடத்தில் வங்காள தேசம் ஆரியதேசம் வென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ் நிலத்திற்குப் புறத்தே உள்ள நாடுகள் தேசமென்று வழங்கப்பட்டதால் தன்னாட்டுப் பகுதியை நாடு என்று குறிப்பிடும் கல்வெட்டு பிறநாட்டை அவர்கள் வழங்கியபடியே தேசமென்று குறிப்பிடுகிறது.

5) மணிமங்கலம் சபையோர் சாசனம் மன்னன் இரண்டாம் இராசேந்திரன் (1052--64) செயங்கொண்ட சோழபுரத்து மாகனூர் நாடு.

6) வில்லவராயன் சாசனம் மன்னன் முதற் குலோத்துங்கன் (1070) கல்வெட்டு உள்ள இடம் திருவானைக்காவல் பாண்டிய குலாசினி வளநாடு, தென்கவிர்நாடு,

7) மணிமங்கலம் கோவில் சாசனம் மன்னன் மூன்றாம் இராசராசன் (1216) குலோத்துங்க சோழ வளநாடு, குன்றத்தூர் நாடு.
பாண்டியநாட்டுக் கல்வெட்டு

1) புதுக்கோட்டைச் சீமைக்கல்வெட்டு குலசேகரப்பாண்யன் (119-9-1216) திருமயம் தாலுகா மலைக் கோவில் விருதராசபயங்கரவளநாடு கானநாடு இரயிலேசுசாசனம் தென்காசி மன்னன் மாறவன்மன் சுந்தரபாண்டியன் (1219) துரும நாடு, கானநாடு,

2) பெரம்பலூர் மாவட்டம் -- நகரம் மதனகோபாலசாமி கோயில் மன்னன் சடாவர்மன் சுந்தரபாண்டியன் (1258) வெம்பார் நாடு, கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் கோயில் சுவர் மன்னன் வீரபாண்டியன் 13ஆம் நூற்றாண்டு – கிழங்கநாடு, திருநெல்வேலி மாவட்டம் - மேலநத்தம் -அக்கினீசுவரமுடையார் கோயில் பிற்காலப்பாண்டியர் – துரோதைய வளநாடு.

3) அதே கோயில் மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1223) கீழ்வெம்பா நாடு, வல்லபன் கோட்டை – ஐயனார் கோயில் - - மன்னன் சடையன் மாறன் 10 ஆம் நூற்றாண்டு – களக்குடிநாடு.


செப்பேட்டில் நாடுகள்

சோழர் செப்பேடுகள் முதலாம் பராந்தகனின் உதயேந்திரம் செப்பேடு மேலடையாறுநாடு, வேளஞ்சேரிச் செப்பேடு, திருத்தணிநாடு, சுந்தரச்சோழனின் அன்பில் செப்பேடு திருவழுந்தூர் நாடு, இராசகேசரிவர்மனின் திருச்செங்கோட்டுச் செப்பேடு – கன்னநாடு இராசராசனின் ஆனைமங்கலச் செப்பேடு – சத்திரியசிகாமணிவளநாடு, நித்தவினோதவளநாடு, போன்ற நாடுகளும் கரந்தைச் செப்பேடு அம்பர்நாடு, பாம்பூர்நாடு, வெண்ணாடு திரைமூர்நாடு போன்ற நாடுகளுளையும், இந்தச் செப்பேடு இரசேந்திரசோழன் கங்கை நோக்கி படையெடுத்துச் சென்றபோது ஆரியதேசம், மத்திய தேசம், இலாடதேசம், வங்கதேசம் ஆகியவற்றை வென்று கங்கை நீரைக் கொண்டு வந்தான் என்று குறித்துள்ளது.

தேசம் தமிழில்லை. தமிழ்நிலம் குறித்து வழங்கவுமில்லை. வீரபாண்டிச் செப்பேடு மாரியம்மன் கோயில் வழிபாட்டிற்கான கொடைபற்றியது. மன்னன் மதுரை விசுவநாத நாயக்கன் (1529) பிறதலை வளநாட்டில் சேர நாட்டு எல்லைக்குள் வருசை நாட்டு மத்தியில் புல்ல நல்லூரான வளநாட்டில் குடியிருக்கிற காமாட்சியம்மன் பக்தராகியயாகச் சத்திரிய தெலுங்க தேசாதிபதிகள் வமிசத்தார்கள் தலைமை புல்லன்செட்டி. புல்லன்செட்டி மாரியம்மன் கோவிலுக்குக் கொடையளிக்கிறார். புல்லன்செட்டி குடியிருக்கும் தமிழ் நிலப்பகுதியைக் குறிப்பிடும். செப்பேடு பிறதல வளநாடு, செர நாடு, வருசை நாடு, புல்ல நல்லூர் வளநாடு என்று குறிப்பிடுகிறது.

புல்லன்செட்டியின் முன்னோர்கள் வாழ்ந்த இடம் தெலுங்கு மொழி பேசப்படும் தேசமாகும். இதுவும் இராசேந்திரசோழன் செப்பேட்டுக் குறிப்பிற்கு வலுச்சேர்க்கும் வகையில் தமிழ்நிலத்திற்குப் புறத்தேயுள்ள தெலுங்கு நாட்டைத் தேசமென்று குறிப்பிடுகிறது.

முசிறிச் செப்பேடு கோயில் பூசகர் தேவரடியார்க்குக்காணி வழங்கிய பட்டையம் மன்னன் மதுரை முத்துவீர சொக்கநாத நாயக்கன் (கி.பி.1710) வெற்றிச்சிறப்பைக் குறிக்கிறது. இதில் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாதான் என்று அவனின் வெற்றிச்சிறப்பு குறிப்பிடப்படுகிறது. இதில் வரும் நாடு, இராச வளநாடு, ஆமூர் நாடு குறிக்கப்படுகிறது.

நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் செப்பேடு ஒன்றை ஆவணமாகக் காட்டியுள்ளார். அந்தச் செப்பேட்டிலுள்ள நாடுகள் வருமாறு : தந்திநாடு, மனைப்பள்ளிநாடு, ஆய்வூநாடு, அஞ்சமுகநாடு, எரிமங்கலநாடு, மேலத்துவாகுடிநாடு, கீழத்துவாகுடிநாடு, கொற்கை நாடு, போன்ற நாடுகள்.


தென்மலைநாடு:


புதுக்கோட்டை மண்டல கள்ளர் நாடான தென்மலைநாடு என்பது வடமலை நாட்டிற்கும் தெற்கில் உள்ளது!

இவை இரண்டும் சேர்ந்தது இருமலைநாடு என குன்னான்டார் கோவில் கல்வெட்டுக்கள் நமக்கு உணர்த்துகின்றன! நாட்டுக்கூட்டம் அண்டக்குளத்தில் உள்ள முக்கானி அம்மன் கோவிலில் நடைபெறும்!

வடமலை,தென்மலை நாட்டுக்கள்ளர்களின் கூட்டுகூட்டமானது குன்னான்டார் கோவிலில் நடைபெறும்!


குலமாங்கல்ய நாடு : - 


புதுக்கோட்டை மண்டல கள்ளர் நாடுகளில் குலமாங்கல்ய நாடு என்பது 20 பட்டப்பெயர்களையும்,11 கிராமங்களையும் உள்ளடக்கியது. கொப்பனன், தேவன், களித்திரத்தான், பேய்வேட்டி, கொளிபேட்டன், மலுக்கன், மாங்குலன், புதுக்குட்டி, மலையேத்தான் ஆகிய பட்டப்பெயர்கள்.

கிராமங்கள்
குளத்தூர்
பூங்குடி
வாகைவாசல்
முள்ளூர்
உச்சனை
செம்பாட்டூர்
புத்தாம்பூர்
வைத்தூர்
முட்டாம்பட்டி
வத்தனாகுறிச்சி!

குலமங்கால்ய நாட்டார்கள் பனங்காடு வடக்கு மற்றும் தெற்கு ,சிறுவயல் நாடு வடக்கு மற்றும் தெற்கு ,சூரியூர் கிழக்கு மற்றும் கானாடு கள்ளர்கள் அனைவரும் இணைந்து ஒரு கள்ளர்நாட்டை உருவாக்கினார்கள் வெவ்வேறு ஊர்களில் குடியேறினார்கள்!பிற்காலத்தில்  இந்த குலமாங்கல்ய நாட்டு கள்ளர்கள் சூரியூர் நாட்டு கள்ளர் மற்றும் கவிநாட்டு கள்ளர்களோடு திருமண உறவுமுறை கொண்டுள்ளனர்!


நன்றி உயர் திரு. பரத் இராமகிருஷ்ணன் கூழாக்கியார் (தொண்டைமான்)(மறவர்  நாடு )

திங்கள், 5 பிப்ரவரி, 2018

சோலைமலைக் கள்ளன் (மாயோன் - கள்ளழகர் )


கள்ளர் நாட்டிலுள்ள அழகர்மலையில் கோயில்கொண்டுள்ள கள்ளழகர், கள்ளர் இன ஆண்மகனைபோல வேடமணிந்து வருகிறார். கைகளில் சங்கு, சக்கரம், தலையில் கீரிடம், என காட்சியளிக்கும் அழகர், கள்ளர் மரபினரின் ஆசாரங்களுக்கு கேற்றவாறு கைகொன்றாக வளத்தடி எனப்படும் வளரித்தடி, (கள்ளரின் பழைய போர்க்கருவிகளான வளைதடியும் குறுந்தடியும்) சாட்டை போன்ற கம்பு, கள்ளர் இன ஆண்மகன் அக்காலத்தில் இடுகிற கொண்டை, தலையில் உருமால், காதுகளில் வண்டிகடுக்கன் (தொங்கும் காது மடல்களை உடையவராக) என அணிந்து மதுரை நோக்கி வருகிறார். (கள்ளழகர் கோயில் பார்ப்பனர்கள் கறுப்பானவர்களாக இருக்க என்ன காரணமோ)
.மேல நாட்டு கள்ளர்கள் அழகர் கோயில் கள்ளழகரை வழிப்படுகின்றவர்கள். கள்ளழகர் கோயில் தேர்திருவிழாக்களில் பட்டுப் பரிவட்டம் முதல் மரியாதைகள் இவர்களுக்குண்டு நரசிங்கன் பட்டி அம்பலக்காரர்கள் பரம்பரையாகக் கள்ளழகர் தேவஸ்தானம் தர்மகர்த்தர்களாக இருந்து வருகின்றார்கள். மதுரை, தல்லாகுளத்தில் கள்ளழகர்க்குச் சிறந்த மண்டகப்படி இவர்களால் நடைபெற்று வருகிறது.கள்ளழகர் கோயில் தேர்த்திருவிழாவின் போது தேரினை இழுக்கும் உரிமை பெற்றவர்கள்.அங்குள்ள பதினெட்டாம்படி கோபுரத்திற்கு "தொண்டைமான்" கோபுரம் என்று பெயர் உள்ளது


அழகருக்கு அலங்காநல்லூரில்தான் அலங்காரம் நடைபெற்றது. அதன் காரணமாகவே அந்த ஊருக்கு அலங்காரநல்லூர் என்ற பெயர் ஏற்பட்டு, தற்போது அலங்காநல்லூர் என்று மருவிவிட்டது'.
.

இவனை மாயோன் என்றுதான் 'தொல்'காப்பியம் அழைக்கிறது. மாயோன் என்றால் கள்வன்தானே! கண்ணன் கள்வன் என்று எல்லோரும் மாய்ந்து, மாய்ந்து பாட்டு எழுதிவிட்டனர். அவன் சித்சோரன் (நெஞ்சக் கள்வன்) அதனால் கள்ளழகர். பின்னால் கள்ளர் ஜாதிக்கு குலபதியானதினாலும் கள்ளழகர். ஆண்டாள் மனதைக் கவர்ந்ததினாலும் கள்ளழகர்.
.

சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிய நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இதனைப் பாடியவர் இளம்பெரு வழுதி. இரண்டாம் நூற்றாண்டிலேயே கள்ளழகர் என்று பரிபாடலில் அழைக்கப்படுகிறார்.
.

கள்ளழகர் மலையைக் குறிக்கும்பெயர்களில் குறிப்பிடத்தக்கவை சில.
திருமாலிருஞ்சோலை
இருங்குன்று
பெரும்பெயர் இருவரை
கேழ் இருங்குன்று
இக் குன்றில் குடிகொண்டுள்ள திருமலால் "கள்" ( கள்ளணி பசுந்துளவு என்பது துளசிப் பூவோடு கூடிய துளசியிலை மாலை) அணிந்த பசுந்துளசியை மாலையாக அணிந்து கொண்டுள்ளதால் கள்ளழகர் எனப்பட்டார். 
.

அருகர் போற்றிய சோலைமலை, என்றும் முருகனுக்கு உரிய திருமலையாகும். பழுமுதிர் சோலைமலையில் அமர்ந்து அருளும் குறிஞ்சிக் கிழவனாகிய குமரனை,
"சூரர் குலம்வென்று வாகை யொடுசென்று 
சோலை மலைநின்ற - பெருமாளே"
என்று திருப்புகழ் பாடிற்று.
.

சோலைமலை பழங்காலத்தில் பாண்டியர்க்கு உரிய கோட்டையாகவும் விளங்கிற்று. பாண்டியர் அரசு வீற்றிருந்த தலைநகராகிய மதுரையின் வட கிழக்கே காதவழி தூரத்தில் உள்ளதாய், பத்து மைல் நீளமும், நாற்பது மைல் சுற்றளவும் உடையதாய்த் திகழ அம் மலையைப் பாண்டியர் தம் காவற் கோட்டையாக்கிக் கொண்டனர். மலையத்துவசன் என்ற பாண்டியன் அக் கோட்டையைக் கட்டினான் என்பர். அந் நாளிலே கட்டிய உட்கோட்டை, வெளிக் கோட்டை ஆகிய இரண்டும் இன்றும் காணப்படுகின்றன. திண்ணிய மதில் அமைந்த சோலைமலையைக் கண்டு, கண்ணும் மனமும் குளிர்ந்தார் பெரியாழ்வார்; "மதில் சூழ் சோலைமலைக்கு அரசே" என்று பாடினார்.
.

இத்தகைய படை வீட்டையும் கோட்டையையும் காத்து நின்றான் ஒரு வீரன். முறுக்கிய மீசையும், தருக்கிய விழியும் உடைய அவ் வீரன் இப்பொழுது காவல் தெய்வமாய். பதினெட்டாம்படிக் கறுப்பன் என்ற பெயரோடு சோலைமலையிலே காட்சி யளிக்கின்றான். அவனை நினைத்தாலே குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்; படிறுடையார் உள்ளம் பறையடிக்கும். நீதி மன்றத்தில் தீராத வழக்குகளும் கறுப்பையன் படிக்கட்டில் தீர்ந்துவிடும். 
.

கறுப்பன் கள்ளர்களுக்கு உரிய தெய்வம். அதிலும் மேலூரைச் சார்ந்த கள்ளர்களுக்கு அவர் மிகச் சிறப்பான உரிமை உடையவர். அப்பகுதியில் கறுப்பணசாமி கோயிலே கள்ளர்கள் பஞ்சாயத்து அவை கூடும் சாவடியாகும். கள்ளர் அல்லது குயவர் சாதியைச் சேர்ந்தவர்களே அவருக்குப் பூசாரியாக இருப்பர். 
.

முருகனுக் குகந்த படைவீட்டிலே - கறுப்பையன் காக்கும் கோட்டை மலையிலே - ஒரு கள்ளனும் நெடுங்காலமாக உள்ளான்! அன்று இன்று எனாதபடி, என்றும் அவன் உள்ளான் என்று ஆன்றோர் கூறுவர். கள்ளனும் அவனே; காப்பானும் அவனே! ஆதியும் அந்தமும் அவனே! ஆதியும் அவனே; சோதியும் அவனே! சோலைமலை அரசனும் அவனே! அம் மாயக் கள்வனைக் கண்டு கொண்டார் ஞானக் கவிஞராகிய நம்மாழ்வார்.

"வஞ்சக் கள்வன் மாமாயன் 
மாயக் கவியாய் வந்துஎன் 
நெஞ்சம் உயிரும் அவையுண்டு 
தானே யாகி நிறைந்தானே"


என்று பாடினார்; பரவினார்; பரவசமாயினார்; உள்ளம் கவர்ந்த கள்வனை நினைந்து உருகினார்; அவன் அழகைக் கண்ணாற் பருகினார்; இன்ப வாரியில் மூழ்கினார்.

இங்ஙனம் ஆழ்வாரது நெஞ்சிலே புகுந்து திருவாய்மொழி பாடுவித்த வஞ்சக் கள்வனே சோலை மலையில் நின்று அருளும் திருமால். அவர் பெருமையால் சோலைமலை, 'திருமால் இருஞ்சோலை' என்னும் பெயர் பெற்றது.

"அருகரோடு புத்தரும் அமர்ந்தருளும் சோலை 
மருகனோடு மாமனும் மகிழ்ந்துறையும் சோலை 
கருமையோடு* வெள்ளையும் கலந்திலங்கும் சோலை 
அருமையான சோலைஎங்கள் அழகர்பெருஞ் சோலை"


என்று ஆடிப் பாடினாள் சோலைமலைக் குறவஞ்சி. அச்சோலையிலே கள்ள அழகரைக் காண்பது ஓர் ஆனந்தம்! --- * வெள்ளை - வெள்ளை நிறமுடைய பலதேவன். அவரும் கண்ணனோடு அம் மலையில் காட்சியளித்தார் என்பது பரிபாடலால் விளங்கும்.
.

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன் என்பதற்கும் , அழகர் பற்றிய சில செவிவழி செய்திகளாக கூறுவது.
அழகர் மலைக்கு 3 கி.மீ. தூரத்தில் உள்ள கள்ளந்திரி கிராமம், கள்ளர்கள் வாழ்ந்த இடம் என்பதால் அப்பெயர் பெற்றது. இப்போதும், கள்ளழகர் இவ்வூரிலிருந்து கள்ளன் வேடம் தரித்து மதுரை நோக்கிப் புறப்படுகிறார். இது ஆண்டு தோறும் நடக்கிற சித்திரைத் திருவிழாவின் ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது. 
.

அழகர் என்பவர் அப்பகுதியில் வாழ்ந்த கள்ளர் சமுதாய மக்களின் தலைவன் என்றும், இவர் கொரில்லா முறை தாக்குதல்களை நடத்தி கொள்ளையடித்தும்; மாடுகளைக் கவர்ந்தும், மலையில் ஆட்சி நடத்தி வந்தார் என்றும்.

பழைய மதுரை; அதாவது அன்-றைய பாண்டிய நாடு வைகை ஆற்-றுக்குத் தெற்காக இருப்பது மட்டும்தான்! ஆற்றின் வடக்கே இருந்த பகுதிகள் மருத மரங்கள் நிறைந்த பெரும் காடுகளாக விளங்கின. வடபகுதியில் இருந்து மீனாட்சி- சொக்கன் திருக்கல்யாணத்-திற்கு வருகின்ற பெருத்த சீமான்களைத் தடுத்து நிறுத்தி கொள்ளையிடுவது அழகரின் கள்ளர் படை வழக்கமும் ஆகும். கள்ளர் தலைவன் அழகர் குதிரைகளுடன் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுடன் வண்டியூர் சென்று தனது வைப்பாட்டியான துலுக்க நாச்சியார் வீட்டில் தங்கியிருப்பதும், பின் பாதுகாப்புடன் மலையேறுவதும், அவர் வழக்கமாயின!
.

பிற்காலத்திலும் அழகர் மலைக் கள்ளர்களை, மதுரை வீரன் வரை போராடிப் பார்த்தும் அவர்களை அடக்கவும், ஒடுக்கவும் முடியாமல் இருந்து வந்துள்ளது. சங்கிலிக் கருப்பன் என்பவர் அழகரின் பின் தோன்றல் ஆவார். பாண்டிய நாட்டு ஆட்சியை நாயக்-கர்கள் கைப்பற்றிக் கொண்டபோது, கள்ளர்களை எதிர்த்து அமைதியான ஓர் ஆட்சியை நடத்த முடியவில்லை. திருமலை நாயக்க்கர் காலத்தில் கள்ளர்களுடன் இணக்கத்துடன் இருந்து பிறகு மதுரை காவல் கள்ளர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. 
.

அப்பன்திருப்பதி, கள்ளந்திரி பகுதிகளில் கள்ளழகர் மலைக்கு திரும்பும் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கள்ளழகர் வருகையையொட்டி அப்பன்திருப்பதி, கள்ளந்திரி பகுதிகளிலுள்ள கிராமங்கள் விழாக்கோலம் பூண்டு அந்த பகுதிகளில் உள்ள திருக்கண், மண்டபங்களில் நாடகம், கரகாட்டம், இன்னிசை கச்சேரி என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கள்ளழகர் மலைக்கு திரும்பும் விழா, இந்த பகுதிகளில் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.


கள்ளழகர் எட்கர் தர்ஸ்டசன் பார்வையில் - ஆய்வு . உயர்திரு. பரத் இராமகிருஷ்ணன் கூழாக்கியார் : -

கள்ளழகர் கோவிலில் கள்ளர்களுக்கு பரிவட்டம் கட்டப்படும் போது பதினெட்டாம் படி கருப்பர் கோவிலில் பதினெட்டாம்படியில் நின்று உறுமொழி சரியாக செயல்படுவேன் என பதினெட்டாம் படி கருப்பருக்கு உறுதிமொழி கொடுக்க வேண்டும். பரிவட்டம் கட்டுபவர் பொய் கூறினால் சரியாக மூன்றாம் நாள் இறந்துவிடுவார். இதே நடைமுறையில் வேறுஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.

கள்ளர்களின் தலைமை கோவிலான கள்ளழகர் கோவிலில் கள்ளழகர் விஷ்ணுவாக பாளிக்கிறார் இவர் மீனாட்சியின் சகோதரர். மீன்களை போன்ற அழகிய கண்களை உடைய மீனாட்சி பாண்டிய மன்னனின் அழகிய மகள் சிவனை மணப்பதால் இங்கு பிராமணத்துவம், திராவிடமாக மாறுகிறது.

கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை அக்காலத்திலேயே சுமார் 3 லட்சம் பக்தர்கள் கண்டு களித்துள்ளனர் அம்மூன்று லட்சம் பேர்களில் கள்ளர்களே அதிகம்.

கள்ளர் அழகரை தூக்கிசெல்ல,வடம் பிடிப்பது முழுக்க முழுக்க கள்ளர்களே அதன்பின்பே மற்ற சாதியினர் இணைகின்றனர்.

கள்ளர்கள் தங்கள் தெய்வத்திற்கு இரத்த காணிக்கையாக கிடாய் வெட்டுதல், கோழி அறுத்தல் போன்ற பழக்க வழக்கங்களை கொண்டவர்கள்.

களரி ஆயுதமானது கள்ளர்களால் பயன்படுத்தப்படுகிறது. சில கள்ளர் திருவிழாக்களில் கள்ளர்கள் தங்கள் வளரிகளை பரிமாறிக்கொள்வதும் நடந்துள்ளது. இங்கே அழகரும் மதுரைக்கு வருகையில் கள்ளர்கள் பயன்படுத்தும் வளரிதடி, கடுக்கன், தடி, தலைப்பாகை போன்றவற்றை அணிந்தே வருகிறார்.

அழகர் கோவிலில் பலிகொடுக்கும் முன்பாக வெள்ளை மற்றும் சிகப்பு பூக்களை போட்டு சிறுவர்களை அழைத்து எடுக்க வைக்கிறார்கள் அதில் வெள்ளையை எடுத்தால் வெற்றி என்பது அர்த்தம்.

ஆகவே அழகர் ஆற்றில் இறங்கும் விழா என்பதை விட ககள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா கள்ளர் திருவிழா என்பது சாலச்சிறந்தது.


.
நன்றி
உயர் திரு. முனிராஜ் வாணாதிராயர்x

வெள்ளையர் ஆட்சியில் திருட்டு முதலிய குற்றம் புரிந்த சாதிகள்

புதுக்கோட்டை சமஸ்தானம் ----------------------------------------------------- * புதுக்கோட்டை யில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சாதிகள்,...