புதன், 20 டிசம்பர், 2017

புற்றில்கழிந்தான், மண்வெட்டியில்கூழ்வாங்கி மற்றும் பாப்புரெட்டி

சில வேறு சமூகத்தை சேர்ந்த சில தற்குறிகள் நமது கள்ளர் பட்டங்களான புற்றில்கழிந்தான் மற்றும் மண்வெட்டியில்கூழ்வாங்கி பற்றி கேவலமாக சொல்லிவருகிறார்கள்

அந்த தற்குறிகளுக்கு சொல்லும் விளக்கம் :

புத்திகழிச்சசோழன்

பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் புத்திகழிச்சசோழன் (அறிவு மிகுந்தசோழன்)  புத்தூர் என்னும் தேவார சிவ தலத்தையும், புத்தபுரம், புத்தகுடி, புத்தமங்கலம், புத்தங்கோட்டம் என்னும் ஊர்களையும் புத்தாறு என்னும் சிற்றாற்றையும் இவன் ஆட்சியில்  உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் புத்திகழிந்தான்  என்னும் பட்டங்களை கொண்டனர். பின்பு இது மருவி புற்றில்கழிந்தான் என்று அழைக்கப்பட்டுவருகிறது.

தமிழ் அகராதியில் :

புத்திகழிச்சசோழன் : புத்தி (அறிவு) + கழி (மிகுந்த) + சோழன்

(கழிந்தான் என்றால் மலம் கழிப்பது என்று நினைத்த அவர்களின் அறிவு)


மண்வெட்டிக்கூழ்வாங்கி :

செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கூழைமன் சோழன் பூமியில் மண்ணை வெட்டி, ஆராய்ந்து பொன்மணலைக் கண்டறிந்து உருக்கிப் பொற்கட்டி (பொற்பாளம்) செய்தவன். இவன் காலமுதல் பூமியில் சுரங்கம் அமைத்து தங்கம் எடுக்கும் வழக்கம் உண்டாயிற்று. மண்வெட்டி மூலம் பொன்மணலை அள்ளியதால் மண்வெட்டிகூழ்வாங்கி என்ற பட்டம் பெற்றான். (கூழ் என்றால் பொன் என்று அர்த்தம் ) இவன் மணலை அள்ளியதால் கூழையாறு என்ற ஒரு சிற்றாரும் உருவாயிற்று. இவன் மரபினர் கூழையன், கூழாக்கி, மண்வெட்டிக்கூழ்வாங்கி (மண்வெட்டியில்கூழ்வாங்கி) என்ற பட்டங்களை பெற்றனர். மண்வெட்டியில் கூழ்வாங்கி திரிபு பட்டங்களை கொண்டுள்ளனர்

.Cuzam Cocom AD 1396-1401 – தமிழில் கூழம் கக்கம் > கூழன் கக்கன் என்பது செப்பமான வடிவம். ஒரு Hittite மன்னன் பெயர் Huzziya I 1530-1525 BCE – தமிழில் கூழய்யன் என்பது செப்ப வடிவம். கூழைமன் ஒரு சோழ அரசன் பெயர். கூழ்பான் தண்டலம் (திருக்கழுக்குன்றம்) ஓர் ஊர்.

Hool Cocom AD 1406-1410 – தமிழில் கூல கக்கம் > கூலன் கக்கன் என்பது செப்பமான வடிவம். இன்றும் வழங்கும் தமிழ்ப் பெயர். சிந்து முத்திரை M2141 இல் பதிவாகி உள்ளது, IsD பக். 230.

தமிழ் அகராதியில் :

கூழ்
kūḻ   n. குழை¹-. kūra. [T. kūḍu,K. M. kūḻ, Tu. kūḷu.] 1. Thick gruel, porridge,semiliquid food; மா முதலியவற்றாற் குழையச்சமைத்த உணவுவகை. (திவா.) 2. Food; பலவகையுணவு. கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்(புறநா. 70, 7). 3. cf. kuḍ. Growing crop; பயிர் (திவா.) 4. cf. kōša. Wealth; பொருள் கூழுங்குடியு மொருங்கிழக்கும் (குறள், 554). 5. cf. kuš.Gold; பொன் (திவா.)  
கூழ்

(கூழ் என்றால் சோறு வாங்கியது என்று நினைத்த அவர்களின் அறிவு).

நாயக்கவடியார்

நாயக்கன் + வடியார்
நாயக்கன் என்பது ஒரு தலைமை உத்தியோகஸ்தன் என்பதை குறிக்கும் 

வடியார் என்பது உடையவர் என்பதை குறிக்கும்

"திறங்கொண்ட வடியார்" (தேவா).  திறம் - பெருமை - வன்மை - முதலிய எல்லாம் உடையவர். 

வடியார் கரம் - அழகு பொருந்திய கை

நாயக்கவடியார் என்பது ஒரு தலைமை உத்தியோகஸ்தர் என்பதை குறிக்கும் என்னும் இதனை தெளிவாக ஆராய்ந்தால் பல உயரிய பொருள் தரும். ஆனால் நாயக்கவடியார் என்பதனை  நாய் கடி வாங்கியவர் என்று பொருள் கூறும் தற்குறிகளை என்ன சொல்வது.  

உத்திரமேரூர்க் கல்வெட்டில் ஊர்ச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிய உறுப்பினர்கள் 'திருவடியார்' எனப்பட்டனர். அவர்களைக் கொண்ட ஊர்ச்சபை 'மகாசபை' எனப்பட்டது.  

பாப்புரெட்டி :

சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பாப்பனசோழன். பாப்புநகரம் என்ற நகரத்தை உருவாக்கி தெற்குக்கோட்டை, வடக்குக்கோட்டை என்று இரு பகுதிகளாக பிரித்து இராசதானியாகக் கொண்டவன். இவன் மரபினர் பாப்படையன், பாப்பிரியன், பாப்புவெட்டி, பாப்புரெட்டி என்னும்  திரிபு பட்டங்களை கொண்டுள்ளனர். வேலூருக்கு அருகில் உள்ள பாப்புரெட்டிப்பட்டி, தருமபுரிக்கு அருகில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஊர்கள் இப்பட்டங்களின் அடியாகத் தோன்றியவைகளாகும். இவர்களின் பட்டங்கள் பார்புரட்டியார் என்ற பட்டபெயரில் இருந்து திரிந்து பல்வேறு திரிபு பெயர்களை கொண்டுள்ளது. பார்புரட்டியார் என்றால் தம் வீரத்தால் பகைவரை தலைகீழாக புரட்டக்கூடிய ஆற்றல் மிக்கவர் என்று பொருள் படும். (மண்ணுக்காக நடந்த மிகப் பெரிய யுத்தத்தின் கதைதான் மகா பார் அதம். மகா என்றால் பெரிய, பார் என்றால் நிலம் அல்லது பூமி, அதம் என்றால் போர்)  இப்பட்டம் உடையவர்கள் திருவையாறு, திருச்சின்னம்பூண்டி, இளங்காடு, வானரங்குடி, திருச்சி, தஞ்சாவூர் முதலிய ஊர்களில் வாழுகின்றனர்.


கோ. நம்மாழ்வார் (06 ஏப்ரல் 1938 - 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவருடைய பட்டம் பாப்புரெட்டி

குறிப்பு:

இப்போது பல ஊர்கள் பெயர்கள் மருவியது. அதற்கு ஒரு உதாரணம்

தண்செய் என்பதுதான் தஞ்சை ஆனது.  இப்படி பல பட்டங்களும் மருவியது.

பழமொழி : அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்...

அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்... வள்ளல் ஆனவரை கஞ்சனாக மாற்றி சொல்வது போல தமிழ் மொழியின் உண்மை பொருள் தெரியாமல் பிதற்றி வருகிறார்கள் சில தற்குறிகள்.    

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

கள்ளர் குல தொண்டைமான்கள்
இரண்டாயிரம் வருடங்களாக தொடர்ச்சியாக பழந்தமிழ்நாட்டை நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள் தொண்டைமான் அரச குலத்தை சார்ந்தவர்கள். அவர்களில் சிறப்புடன் விளங்கியவர்கள்


தொண்டைமான் இளந்திரையன் :


காஞ்சி பண்டு அருவாநாடு எனப் பெயர்பெற்று விளங்கிற்று அந்தநாட்டில் வாழ் மக்கள் அருவாளர் என அழைக்கப் பெற்றனர் (அருவாத்தலைவன், அருவாத்தலையன், அருவாநாடன், அருமைநாடன், அருமடான், அருவாநாட்டான், அருமநாட்டான் என்னும் பட்டங்களையுடைய கள்ளர் குடியினர் மன்னார்குடி பைங்காநாடு என்ற ஊரில் வாழுகின்றனர். அருவாநாட்டான், அருவாத்தலையன் என்னும் பட்டங்கள் அருவாநாட்டு வெற்றிகளோடு சம்பந்தப்பட்டுள்ளது).

கரிகாலன் காலத்திற்குப் பிறகு, அந்நாடு, தொண்டையர் என்பார் ஆளுகைக்கு உட்பட்டதால், அது தொண்டையர் நாடு அல்லது தொண்டைநாடு என்ற பெயர் பெற்றது; திரையன் என்பானொருவன் தோன்றி, பவத்திரி என்ற ஊரை உரிமைகொண்டு வேங்கடத்தைச் சூழ உள்ள அந்நாட்டை ஆண்டு வந்தான். இவனே பெரும்பாணாற்றுப்படை பெற்ற தொண்டைமான் இளந்திரையன்.

தொண்டைமான் இளந்திரையனையும் சான்றோர் “தொண்டையோர் மருக”என்பர். தொண்டை நாட்டுக்கு வடக்கெல்லை வேங்கடமாகும்.


“வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர், இனமழை தவழும்

ஏற்றரு நெடுங்கோட்டு, ஓங்குவெள் ளருவி வேங்கடம்”(அகம். 213)எனச் சான்றோர் கூறுதல் காண்க. இதற்குத் தென்னெல்லை பெண்ணையாறும், மேலெல்லை வடார்க்காட்டையும் சேலமா நாட்டையும் பிரிக்கும் சவ்வாது மலைத்தொடருமாமென்பது கல்வெட்டுக்களால் அறிகின்றோம்.


இத்தொண்டையரை, “உரவுவாள் தடக்கைக் கொண்டி யுண்டித் தொண்டை யோர்”(பெரும்பாண். 454-5) என்றும்,


“பொருவார் மண்ணெடுத் துண்ணும்


அண்ணல் யானை வண்டேர்த் தொண்டையர்”(குறுந். 240) என்றும்,சான்றோர் கூறுவதை, நோக்கின் இத்தொண்டையர் யானைப்படை கொண்டு பெரும்போருடற்றும் சிறப்புடையரென்பது தெளிவாம்.


தொண்டைமான்களில் இளந்திரையன் என்பவன் மிக்க சிறப்புடையவன். இவனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,


“இருநிலங்கடந்த திருமறு மார்பின், முந்நீர் வண்ணன் பிறங்கடை அந்நீர்த், திரை தருமரபின் உரவோன் உம்பல்”(பெரும்பாண்.29-31) என்பதனால்,


இவன் முன்னோன் திரைகடல் வழியாகப் போந்து தொண்டை நாட்டுக்கு வேந்தனாயினானென்றும், அவன் வழித் தோன்றல் இவனென்றும் அறியலாம்.

வென்வேற்கிள்ளி யென்னும் சோழனுக்கும், நாகநாட்டு வேந்தன் மகள் பீலிவளை யென்பாட்கும் பிறந்து, கடலில் கலமூர்ந்து வருங்கால் அது சிதைந்ததாக, இவன் திரையில் மிதந்து கரை யடைந்தானென மணிமேகலை கூறுகிறது.

கரிகால் சோழன் வழி வந்தவன் கிள்ளிவளவன். இவனுக்கு நெடுமுடிகிள்ளி, மாவண்கிள்ளி, வடிவேற்கிள்ளி என்ற பெயர்களும் உண்டு. கிள்ளிவளவன் தன் இளமைக்காலத்தில் கடல் கடந்து நாகர்களின் நாடாகிய நாகர் நாட்டை அடைந்தான். நாகர் நாட்டு மன்னன் வளைவணன் மகளாகிய பீலிவளை என்னும் இளவரசி நாக கன்னிகையை மணம் புரிந்தான். நாகர் மகளுக்கும் சோழன் கிள்ளிவளவனுக்கும் பிறந்த இளம்குமரன் தொண்டை கொடியை அடையாளமாக அணிந்து கடலில் மிதந்து சோழநாட்டின் கிழக்கு கரையை அடைகிறான். சோழ ராஜ புத்திரனை கடலின் திரை (அலைகள்) கொண்டு வந்தமையால் திரையன் என்று பெயரிடப்படுகிறான். மேலும் தொண்டைக் கொடியை அடையாளமாக அணிந்து வந்தமையால் தொண்டைமான் இளந்திரையன் என்று அழைக்கப்பட்டான்.
சோழ இளவரசனாக மகுடம் சூடியபின்னர் சோழநாடு இரண்டாகப்பிரிக்கப் பட்டு கிழக்கே கடலும்,மேற்கே பவளமலையும், வடக்கே வேங்கடமும் தெற்கே பெண்ணையாற்றையும் எல்லைகளாக கொண்டு தொண்டை மண்டலம் உருவாக்கப்பட்டு காஞ்சிமாநகரை தலைநகராக கொண்டு தொண்டைமான் இளந்திரையன் அரசுபுரிந்தான்.


சிறந்த வீரமும் கொடைநலமும் உடையவன். கவி பாடுவதிலும் வல்லவன் இளந்திரையம் எனும் நூலையும் இயற்றியுள்ளான். இவன் பாடிய பாடல்கள் பல புறநானூற்றிலும்,நற்றிணையிலும் கானப்படுகின்றன. சங்க இலக்கிய நூலான பெரும்பாணாற்றுப்படை இவனைப் பற்றி புலவர் கடிலூர் உருத்திரங் கண்ணனார் பாடியதாகும். குறும்பர்களின் கொட்டத்தை அடக்கி,காடுகளை வெட்டி, நிலத்தை திருத்தி,வளம் பெருக்கி தொண்டை நாட்டை வலிமைமிக்க நாடாக்கினான்.

இவன் ஆட்சியில் தொண்டைநாடு சான்றோருடைத்து என்று ஔவையால் புகழப்பட்டது. இளந்திரையன் நாகநாட்டில் இருந்து சோழநாட்டு கிழக்குக்கரையில் ஒதுங்கிய இடமே நாகர்பட்டினம் என்றழைக்கப்பட்டு இந்நாளில் நாகப்படினம் என்றழைக்கப்படுகிறது.  காஞ்சி மாநகரம் (இன்றைய காஞ்சிப்புரம்) 181 பெரும் திருக்கோயில்களை கொண்டு மாமதிற்கச்சி எனவும் கோயில் மலிந்த காஞ்சி எனவும் அழைக்கப்ப்டுவதும் வரலாராகும். தொண்டைமான் இளந்திரையன் பின் நாளில் ஆத்தொண்டை சக்கரவர்த்தி என்றும் அழைக்கப்பட்டான்.

‘ஆதொண்டை’ என்னும் கொடி ஒன்று உண்டு, ஆடி அம்மாவாசை விரதம் இருப்போர் இக்காலத்தில் தொண்டங்காயை உண்டுகொண்டு விரதம் இருப்பர். இந்த ஆதொண்டை என்னும் சொல் முதலெழுத்து குறைந்து தொண்டு என வழங்கலாயிற்று எனலாம். இந்தத் தொண்டைக்கொடி மிகுதியாகப் படர்ந்திருந்த நாடு தொண்டைநாடு எனப்பட்டது எனக் கொள்வாரும் உண்டு.

தொண்டைமான் இளந்திரையன் வழி வந்தவர்களே தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் குலத்தவராவர். இப்பட்டம் கி.பி முதல் நூற்றாண்டில் இருந்து வழக்கத்தில் வருவதும் ஒரு வரலாராகும். பொன்னம்பலநாத தொண்டைமான் இலங்கையை ஏழு நாட்களில் அழித்தவன் தொண்டைமான் ஆவுடைரகுநாத தொண்டைமான்  இவர்கள் எல்லாம் தொண்டைமான் வம்சம் சார்ந்தவர்கள். தொண்டைமார், தொண்டையார், தொண்டைபிரியர், தொண்டைமான் கிளையர் என்றும் பட்டங்களிலும் அழைக்கப்படுகின்றனர்.

'மணிபல்லவம்' என்னும் தீவு மணிமேகலையில் குறிக்கப்பட்டிருத்தல் காண்க. மணிமேகலை காலத்து மக்கட்கு விளங்கி இருத்தல் புலனாகும். பல்லவத்திலிருந்து வந்தவர் பல்லவர் என்று என்று தம்மைக்கூறிக் கொண்டமை இயல்பே அன்றோ?' 'வீரகூர்ச்சன் நாகர் மகளை மணந்து அரசு பெற்றான்' என்று பல்லவர் பட்டயம் கூறுதலும் சோழன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன் தொண்டை மண்டலம் ஆண்டான் என்பது ஆராய்ச்சிக்கு உரியன.கரிகாலனையடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன் இவன் மரபினர் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்டு வந்தனர்.

இளந்திரையனுக்குச் சில தலைமுறை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும்சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும்தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர்அதுபற்றியே தொண்டையர்பல்லவரெனப்பட்டனர்இப்பெயர்களும்பல்லவர்க்கு வழங்கும் காடவர்காடுவெட்டி முத்தரையர் என்னும் பெயர்களும்அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றனதொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெயரும்பல்லவர் என்னும் பெயரும்ஒருவகுப்பினரையே குறிப்பன.

சோழர்கள் வழியில் வந்தோரே பல்லவர் என்றும்தொண்டைமான் என்னும் பெயர் தொண்டைக் கொடிபற்றி வந்ததென்று கூறப்படுதலாயினும்பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும் இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும்.


வண்டையர்கோன் கருணாகரத் தொண்டைமான்பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி.கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள். கருணாகர தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி. இவன் தொண்டை நாட்டை ஆண்டு வந்த பல்லவ அரசன் ஆவான். சோழ மாமன்னனான குலோத்துங்கனுக்கு உட்பட்ட சிற்றரசர்களில் ஒருவனாய் நெருங்கிய நண்பனாகவும் இருந்திருக்கிறான். இந் நட்பு காரணமாகவே குலோத்துங்கன் காஞ்சியில் வந்து படைகளுடன் தங்கினான் என்பர். கருணாகரன் கலிங்கப் போருக்குப் படைத்தலைவனாய்ப் புறப்படும் போது, இவனுடைய தமையனும் குலோத்துங்க சோழனின் நன்பனுமாகிய பல்லவனும் உடன் சென்றான் எனக் குறிக்கப்படுகிறது.

"தொண்டையர்க் கரசு முன்வ ருஞ்சுரவி
துங்க வெள்விடை உயர்த்த கோன்
வண்டையர்க்கரசு பல்லவர்க்கரசு
மால் களிற்றின் மிசை கொள்ளவே" -- (பாடல். 364)
என்ற பாடலால் இதை அறியலாம்.

தமையன் தொண்டை நாட்டை ஆள, குலோத்துங்கனுக்குப் படைத் தலைவனாய் அமைந்த கருணாகரன், வண்டைநகரின் கண் இருந்த பகுதியை ஆட்சி செய்தான் என அறியலாம். இவன் வண்டையர்க்கரசு என்றே பல இடங்களில் குறிப்பிடப்படுகிறான். வண்டை நகர் அக்காலத் தொண்டை நாட்டில் சிறந்திருந்த நகரங்களில் ஒன்று. இக்காலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூர் வண்டை நகராக இருக்கலாம் எனக் கூறுகின்றனர். அக்காலத்தில் வண்டைநகர், மல்லை மாமல்ல புரம், காஞ்சி, மயிலை (மயிலாப்பூர்) என்பன சிறந்த பட்டினங்கள் எனவும் அவை அடங்கிய நாடே தொண்டை நாடு என்பதும் கீழ்வரும் பரணி பாடலால் அறியலாம்.

அலகில் செருமுதிர் பொழுது வண்டையர்
அரச னரசர்கள் நாதன் மந்திரி
உலகு புகழ் கருணாகரன்றன தொருகை
யிருபணை வேழ முந்தவே!

கடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்
கடகரியுங் குவிதனமுங் கவர்ந்து தெய்வச்
சுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்
சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே

வண்டை வளம்பதி பாடிரே
மல்லையுங் கச்சியும் பாடிரே
பண்டை மயிலையும் பாடிரே
பல்லவர் தோன்றலைப் பாடிரே - பாடல் . 534


வண்டன், வண்டயன், வாண்டயன், வண்டதேவன், வண்டப்பிரியன், வாண்டப்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர். இப்பட்டமுடைய கள்ளர் மரபினர் வாண்டையார் குடியிருப்பு, கீரனூர், மேலக்கரும்பிரான்கோட்டை, ஆற்றங்கரைப்பட்டி (புதுக்கோட்டை) வாண்டையாரிருப்பு (தஞ்சாவூர்) கண்ணுகுடி, மேல உழுவூர், புதுப்பட்டி, பட்டுக்கோட்டை, மேடைக்கொல்லை, கறம்பயம், மன்னார்குடி, பஞ்சவாடி, குன்னூர், இடையூர், அரிச்சயபுரம், மறவாக்காடு, செம்பியன்மாதேவி, சாந்தமாணிக்கம், சோலைக்குளம், பைங்காநாடு, காரக்கோட்டை, பேரையூர், பெருகவாழ்ந்தான், திருக்களர், திருமங்கலக்கோட்டை, பாபநாசம், பூண்டி, கோனூர், திருபுவனம்,வலங்கைமான், சின்னகரம், சாத்தனூர் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர்.

கருணாகரத் தொண்டைமானின் பெருமையை பற்றி கம்பர் பாடியது சிலையெழுபது (கம்பர் எழுதினாரா என்பதற்கு சரியான ஆதாரம் இல்லை).


கம்பர் எழுதிய சிலையெழுபது ( வில் வீரர்களின் சிறப்புப் பற்றி எழுதிய நூலாகும்), ஏரெழுபது (ஏரெழுபது என்பது, வேளாண் தொழிலின் சிறப்புப் பற்றி எழுதிய நூலாகும்)  ஆனால் இன்று பள்ளி இனத்தவர்கள் வன்னியர் என்பது எங்களை தான் குறிக்கும் எழுதிவருகின்றனர். ஆனால் வன்னியர் என்பது யார் என்பதற்கு

தொண்டைமான்கள் தொண்டை மண்டலத்தில் இருந்து சோழநாட்டிற்கு இடம் பெயர்தல்: 


சிவந்தெழுந்த பல்லவரையர்

பாண்டிய மன்னன் உக்கிர வீர பாண்டியனால் ஏழு வருடம் காத்திருந்து புதுக்கோட்டைக்கு அழைத்து வரப்பட்ட வெங்கடாசல பல்லவராயர் தொண்டை மண்டலத்தில் இருந்து புதுக்கோட்டையில் குடியேறினார். அவரோடு தொண்டைமான் சக்கரவர்த்தி என்பவரும், தொண்டை மண்டலத்தில் இருந்து இடம்பெயர்ந்து அம்புநாட்டில் குடியேறினார். அங்கிருந்து இடம்பெயர்ந்த பல்லவராயரின் ஒரு குழுவினர் வைத்தூரில் குடியமர்ந்தனர். பல்லவராயன், காடவராயன், காடுவெட்டி ஆகிய கள்ளர் குழுக்கள் இன்றும் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் வாழ்கின்றனர். (Manual of pudukkottai state 1920, P 732)( சிவந்தெழுந்த பல்லவராயன் உலா) ( புதுக்கோட்டை சமஸ்தான செப்பேடு/ General history of pudukkottai state 1916 p 98)
அறந்தாங்கி தொண்டைமான்


அறந்தாங்கி தொண்டைமான் பெயர் பொறித்த 50 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அறந்தாங்கி தொண்டைமான்களைப்பற்றி கி.பி.1426ல் தான் முதலில் தெரிகிறது. பொன்னம்பல நாத தொண்டைமான் (கி.பி.1514—1567) மிகவும் வலியும். செல்வாக்கும் முள்ளவனென்று தெரிகிறது. இவன் இலங்கையை ஏழுநாளில் வென்றதாகச் சொல்லப்படுகிறது. வாளரமாணிக்கம் என்று அழைக்கப்படும் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ #பெரியநாயகி அம்பாள் சமோத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் கானப்படும் பல்வேறு கல்வெட்டுகள் 15 ஆம் நூற்றாண்டுகளில் அறந்தாங்கி மன்னர்களான ஏகாம்பர தொண்டைமான் மற்றும் பொன்னம்பல தொண்டைமான் போன்றோரும் தேவதானம் வழங்கிய தகவல்கள் கிடைக்கின்றன. அறந்தாங்கி தொண்டைமான்களின் வழிவந்தவர்களே, இன்றைய கள்ளர் குல பாலையவனம் ஜமீன்தார்கள் ( A general history of pudukkottai state 1916, புதுக்கோட்டை சமஸ்தான வெளியீடு)P,85 . விஜயநகர சங்கம வம்சத்தின் கீழ் (1336-1485 ஏ.டி) கல்வெட்டுகள் வனாதரையர், கங்கைராயர் மற்றும் அறந்தாங்கி தொண்டைமான் போன்ற பல உள்ளூர் தலைவர்களைக் குறிக்கின்றன.


"அறந்தாங்கி தொண்டைமான் " இந்திரன் ஏழடி எதிர்கொளப் பெற்றோன் "  


என்பதற்கு ஏற்ப புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும் தங்களை இந்திர குலம் என்றே கூறுகின்றனர். அறந்தாங்கி தொண்டைமான் மன்னர்கள் பற்றி ஆராய்ந்த கல்வெட்டு ஆய்வாளர் புலவர். ராசு. அறந்தாங்கி தொண்டைமான் & புதுக்கோட்டை தொண்டைமான் இருவரும் ஒரே கால்வழியினர் என்று கூறுகிறார்.

புதுக்கோட்டை தொண்டைமான்


தொண்டைமண்டலமாகிய பல்லவ நாட்டினினறும் குடியேறிய பல்லவராயர் அல்லது தொண்டைமான் என்னும் பட்டமுடைய அரசர் பலர் குளத்தூர், அறந்தாங்கி முதலிய இடங்களில் பல நூற்றாண்டுகளின் முன்பே விளங்கியிருந்தமை மேல் எடுத்தக் காட்டப்பட்டது. அம்புகோவிலில் தங்கி ஆண்டுகொண்டிருந்த தொண்டைமான் வழியினர் 17-ஆம் நூற்றாண்டிருந்த புதுக்கோட்டை அரசராயினர். 
புதுக்கோட்டை தொண்டைமான்கள் தொண்டைமண்டலத்தில் இருந்து புதுக்கோட்டை அம்புக்கோயில் பகுதியில் பல்லவராயருடன் குடியேறியதாக புதுக்கோட்டை வரலாற்று குறிப்பு கூறுகிறது. தெலுங்கில் காணப்படும் "தொண்டைமான் வம்சாவளி" எனும் கவிதைத் தொகுதியில் இவர்கள் இந்திர (கரிகாலன் சோழன்) வம்சத்தார் என்று குறிப்பிடுவதோடு, இதில் பச்சை தொண்டமானின் வாரிசான ஆவடை ரகுநாத ராய தொண்டைமானின் முன்னோர்களாக 15 பேரின் பெயர்கள் தொண்டைமான் வம்சாவளி எனும் நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.( General history of pudukkottai state 1916 P 114). இவர்கள் திருமலை தொண்டைமான் என்பவரின் மரபு வழியில் வந்தவர்கள். திருமலை தொண்டாமான் தொண்டை நாடு அல்லது தொண்டை மண்டலத்தில் இருந்த திருப்பதியில் இருந்து புதுக்கோட்டைப் பகுதியில் இருந்த கறம்பக்குடி எனும் பகுதியிலும் அம்புக்கோயில் எனும் பகுதியிலும் குடியேறினார்கள்.


புதுக்கோட்டை அம்புக்கோயிலில் கிடைத்த கிபி 1110 ம் ஆண்டை சேர்ந்த வல்லாள பாண்டிய தேவரின் கல்வெட்டில்(IPS 458) முதன்முதலாக புதுக்கோட்டை தொண்டைமான்களின் முன்னோர் குறிக்கப்படுகின்றார். ஆனை தொண்டைமானார் என்பவர் அம்பு கோயிலில் வசித்ததையும், அவர் கோயிலுக்கு அளித்த கொடையையும் இக்கல்வெட்டின் மூலம் அறிகிறோம். இவருடன் குளந்தையராயர் என்பவரும் குறிக்கப்படுகிறார். இன்றும் அம்பு நாட்டில் குளந்தைராயர் எனும் பட்டம் கொண்ட கள்ளர் குழுவினர் வாழ்கின்றனர்.
ஆலங்குடி வட்டத்தைச் சேர்ந்த இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 43 கி.மீ. தொலைவில் உள்ளது. சங்க இலக்கியமான அகநானுறில் இவ்வூர் அலும்பில் எனக் குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டுச் சான்றுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. அலும்பில் என்பதே இன்று அம்புக்கோயில் என்று அழைக்கப்படுகிறது. புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் சக்கரவர்த்தி இங்கு குடியிருந்ததாக 1210 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று கூறுகிறது
புதுக்கோட்டை , வீரபாண்டிய தேவர் கால ( கிபி 13 ஆம் நூற்றாண்டு பிற்பகுதி) கல்வெட்டு எண் (369) அம்புக்கோயிலில் வாழ்ந்த பல்லவராயன் ஒருவனை பற்றி குறிப்பிடுகிறது. தொண்டைமான்களும், பல்லவராயர்களும் அம்புக்கோயிலில் உள்ள தெற்கு கரையில் சில கள்ளர் குடிகளுடன் வாழ்ந்ததாக Manual of pudukkottai state குறிப்பிடுகிறது.

புதுக்கோட்டை கல்வெட்டு எண் 522, முதலாம் சுந்தரபாண்டியர் (கிபி 1230) காலத்தை சேர்ந்ததாகும். இந்த கல்வெட்டில் "அன்பில் அஞ்சுகுடி அரையர்கள்" என அம்புநாட்டின் கள்ளர் அரையர்கள் குறிக்கப்படுகின்றனர். பாண்டியரின் மேலான்மையை ஏற்று அம்புநாட்டின் அரையர்களாக இருந்துள்ளனர்.


தொண்டைமான்கள் அம்புநாட்டில் குடியேறியபின் (மேலக்காரர், கண்டியர்பிச்சர், குருக்கள், அம்பட்டர்) ஆகிய அஞ்சு குடிகளை அங்கு குடியமர்த்தி அந்த ஊரின் அரையர்களாக இருந்துள்ளனர். (General history of Pudukkottai State 1916)


கிபி 11 ஆம் நூற்றாண்டில் அம்புகோயில் கல்வெட்டில் குறிக்கப்பட்ட தொண்டைமான்கள் கிபி 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் அம்புகோயிலின் அரையர்களாக குறிக்கப்படுகின்றனர்.


ராய ரகுநாத ராய வஜ்ரிடு ராய மண்ணித ராய ஆவடை ரகுநாத தொண்டைமான் :

புதுக்கோட்டையின் முதல் மன்னரா இரகுநாத தொண்டைமானின் தந்தையே ஆவடை ரகுநாத ராய தொண்டைமான் ஆவார். அவரை பற்றிய வரலாற்று குறிப்பு " தொண்டைமான் அணுராகமாலை எனும் வரலாற்றுக் காவியத்தில் உள்ளது.

புதுக்கோட்டை தொண்டைமான்கள் தங்களது செப்பேடுகளில் அன்பில் தெற்காலூரில் இருக்கும் காணியுடைய அரையர்கள் என தங்களை குறிப்பிட்டுள்ளனர். ( "பன்றிசூழ்நாடு அன்பில் தெற்காலூரிலிருக்கும் காணியுடைய அரையர்களில் ஸ்ரீமது திருமலைராய தொண்டைமானார்' காடங்குடி செப்பேடு கிபி 1739)


"இந்நிலமன் சீரங்க ராயருக்கு ராயத்தொண்டை மன்னன் பிடித்தனுப்பும் மால் யானை" என குறிக்கப்படுகிறார். அதாவது அம்புநாட்டில் அரையர்களாக இருந்த தொண்டைமான்கள் " மன்னர்களுக்கு யானை படைக்கு பயிற்சி அளித்து போருக்கு அனுப்புவதில் வல்லவர்களாக திகழ்ந்துள்ளனர்.
அம்புகோயிலில் அரையர் நிலையில் இருந்த தொண்டைமான்களை மன்னர் நிலைக்கு உயர்த்த அடித்தளமிட்டவர், ஆவுடைராய தொண்டைமான்.
விஜய நகர சாம்ராஜ்யத்தை ஆண்ட வெங்கடராயர் (1630 முதல் 1642 வரை) காலத்தில் அவருடைய உதவியுடன்  ஆவடை ரகுநாத தொண்டைமான்  தொண்டைமான் தனது ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறார். விஜய நகர சாம்ராஜ்யம் ஒரு பலம் பொருந்திய இந்து சாம்ராஜ்யமாக உருவெடுத்த காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானமும் தொண்டைமான்கள் தலைமையில் ஒரு பலம் பொருந்திய சாம்ராஜ்யமாக உருவாகியது. விஜய நகர ராயர்களுடனான தொடர்பால் தொண்டைமான் மன்னர்களும் தங்கள் பெயரோடு ராய எனும் சொல்லை ஏற்றுக் கொண்டனர்.


ஸ்ரீரங்கராயலு என்ற விஜயநகர அரசன் இப்பக்கமாக இராமேச்சுரத்திற்கு யாத்திரை சென்ற பொழுது அவ்வரசனுடைய யானை மதங்கொண்டு பல சேதங்களை யுண்டுபண்ண, அதனை யறிந்த ஆவடைரகுநாத தொண்டைமான் அந்த யானையைப் பிடித்து அடக்கி ராயலுவிடம் கொண்டு வந்தனன் என்றும், அப்பொழுது தொண்டைமானுக்கு 'ராயராகுத்த ராயவஜ்ரீடு ராயமன்னீடு ராய' என்னம் பட்டமும், பல நிலங்களும், யானையும் சிங்கமுகப் பல்லக்கும், பிறவும் வரிசையாக அளிக்கப்பட்டன. 


இவற்றோடு சேர்த்து,அம்பாரி யானை, முரசு, யானை, சிங்கமுகபல்லக்கு, பெரிய மேளங்கள், உலா வரும்போது கட்டியக்காரர்களை வைத்துக்கொள்ளும் உரிமை, " கண்டபெருண்டா (“யானையை ஒரு பறவை வேட்டை ஆடுவது போல்)" எனும் உருவம் பதித்த பதாகைகளை தனக்கு முன் எடுத்துசெல்லும் உரிமை , பகல் நேரங்களில் தனக்கு முன்னும் பின்னும் விளக்குகளை எடுத்து செல்லும் உரிமை, இவரது புகழை பாடிச்செல்ல கட்டியக்காரர்களை வைத்துக்கொள்ளும் உரிமை, சிங்கக்கொடி, மீன் கொடி, கருடக்கொடி, ஹனுமர்கொடி பயன்படுத்தும் உரிமை, குதிரைகள் படைசூழ செல்லும் உரிமை, வெண்குற்ற குடை உயபோகப்படுத்தும் உரிமை என பல உரிமைகள் ஆவுடை ரகுநாத தொண்டைமானுக்கு அளிக்கப்பட்டது. (General history of pudukkottai state R.aiyar 1916 page 120: ராய தொண்டைமான் அணுராக மாலை)பாண்டிய மன்னர்களுக்குப் பிறகு முதன் முறையாக இரண்ய கற்ப வேள்வி நடத்தி இரண்ய கற்ப யாஜி என்ற பெயரைப் பெற்றவர் திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் காலத்திலேயே அதாவது கிபி 1645- 1672 ல் புதுக்கோட்டை பாளையத்தின் தலைவராக தொண்டைமான் குறிக்கப்படுகிறார். (மெகன்சி சுவடிகள்).ஸ்ரீரங்கராயர் Iii ( கிபி 1642-1678) ஆட்சி காலத்தில் தொண்டைமான்! !!
விசயநகர அரசர் ஸ்ரீரங்கராயர் உதவியுடன் வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பல்லவராயர் பகுதிகளை கைப்பற்றுதல்:-

" In a palace document, dated 1819AD, it is said that 180 years before that date " the pallavarayars were ruling at pudukkottai and raya tondaiman with the consent of sriranga raya of anagundi( vijayanagar) conquered it" (General history of pudukkottai state R.aiyar 1916 page 120)கிபி 1819 ல் எழுதப்பட்ட அரண்மனை குறிப்பில், கிபி 1639 ல் விஜய நகர மன்னர் ஸ்ரீரங்கராயரின் உதவியோடு புதுக்கோட்டை பல்லவராயர் பகுதிகள் ராய தொண்டைமானால் கைப்பற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக  தொண்டைமான் மன்னர்கள் வெளியிட்ட 24 செப்பேடுகளிலும் ஸ்ரீரங்கராயரின் மேலாண்மையை மட்டுமே குறித்துள்ளனர்.

கிபி 1655 ல் திருமலை நாயக்கர் பிறமலை நாட்டு பின்னத்தேவருக்கு அளித்த செப்பேட்டில், சாட்சியாக தொண்டைமான் புதுக்கோட்டை என குறிப்பிடப்பட்டுள்ளது.(பிறமலைக்கள்ளர் வாழ்வும் வரலாறும் பக்கம் 493)

திருமலை சேதுபதி காலத்தில் அவரின் வருகையின் போது புதுக்கோட்டை தொண்டைமான் மரியாதை அளித்ததாக " மறவர் சாதி வர்ணம்" எனும் ஒலைச்சுவடிகள் கூறுகிறது. இவரது ஆட்சி காலம் ( கிபி 1645-1670) . ( Mackenzie manuscript : madras journal of literature and science பக்கம்:347, கிபி,1836).

திருமலை நாயக்கர் ஒலைச்சுவடி ஒன்றில், அவரது காலத்தில் இருந்த சமஸ்தானமாக புதுக்கோட்டை தொண்டைமான் சமஸ்தானம் குறிக்கப்பட்டுள்ளது. திருமலை நாயக்கர் கால 72 பாளையங்களில் குளத்தூர் தொண்டைமான் பாளையமும் குறிக்கப்பட்டுள்ளது.
திருமலை நாயக்கரின் காலம் கிபி (1623-1659) ஆகும் (oriental historical manuscripts in tamil language vol 2 பக் 161 கிபி 1835).
 
இவற்றின் முலம் புதுக்கோட்டையின் பெரும்பான்மையான பகுதிகள் கிபி 1686 க்கு முன்பே அதாவது கிபி 1639 ல் தொண்டைமான் வசம் வந்துவிட்டதை அறியலாம். 

ஆவடை ரகுநாத தொண்டைமானுடைய புதல்வர் இருவரில் மூத்தவர் இரகுநாதராய தொண்டைமான். இளையவர் கிருஷ்ணா முத்து வீரப்ப நமன தொண்டைமான். இந்த ஆவுடை தொண்டைமானின் மகனான இரகுநாத தொண்டைமான், பிற்காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை தோற்றுவித்தார்.

ரகுனாத ராய தொண்டைமான் :

கிபி 1639 ல் புதுக்கோட்டை வெள்ளாற்றின் வடக்கே உள்ள பகுதிகளை கைப்பற்றிய ஆவுடைய ரகுநாத தொண்டைமானின் மகனான ரகுநாதராய தொண்டைமான் கிபி 1641 ல் பிறந்தார்.
(General history of pudukkottai state R.aiyar 1916 page 122). வீர தீர செயல்கள் மூலம் குறுகிய காலத்தில் மிக உயர்ந்த புகழை அடைந்தார்.

தஞ்சை நாயக்கர் படையில் தளபதியாக :-

தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர், வீரராகவ நாயக்கர், ரகுநாத ராய தொண்டைமானை தனது படையில் இணைத்துக்கொண்டார். ஆபத்து காலங்களில் வீர தீரம் காட்டிய தொண்டைமானுக்கு உயர்ந்த பதவிகளை அளித்தார்.

ரகுநாதராய தொண்டைமானின் வீரத்தை பாராட்டி, யானை, குதிரை, வைர சங்கிலி முதலியவற்றை அளித்தார். " பெரிய ராம பாணம் " எனும் வீரவாள் ஒன்றினை பரிசாக அளித்தார். அந்த வாள் இன்றும் அரண்மனையில் பாதுகாக்கப்படுகிறது. விஜயதசமி அன்று மக்களின் பார்வைக்காக வைக்கப்படும். கிபி 1674 வரை தஞ்சை நாயக்கரிடம் தளபதியாக பணியாற்றினார்.
(General history of pudukkottai state R.aiyar 1916 page 123)

திருச்சி நாயக்கருக்கு படை உதவி:-

கிபி 1682 ல் சொக்கநாத நாயக்கர் காலத்தில், திருச்சியை நாயக்கர் ஆண்டபோது, அவர்களின் நண்பராக இருந்த, மராத்தியர்கள் திருச்சி கோட்டையை பிடிக்க திடீர் தாக்குதல் நடத்தினர். துரோகத்தை தாங்க இயலாத சொக்கநாத நாயக்கர் அதிர்ச்சியில் உயிர் இழந்தார்.அவரது வாரிசான ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் ரகுநாதராய தொண்டைமானின் உதவியை நாடினார். 

கோட்டை சுவர்களை வீரத்துடன் போராடி கடந்து கோட்டையை அடைந்து, எதரிகளை விரட்டியடித்தனர்.
 
இவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய முத்துவீரப்ப நாயக்கர் அம்புநாட்டு கள்ளர்களை ரகுநாதராய தொண்டைமான் தலைமையில் திருச்சியின் முக்கிய 12 பகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமித்தார்.

ரகுநாதராய தொண்டைமான் திருச்சியின் அரசு காவலராக நியமிக்கப்பட்டார்.

மருங்காபுரி பூச்சிநாயக்கரின் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்:- ரகுநாதராய தொண்டைமான் திருச்சியின் அரசு காவலராக
 
நியமிக்கப்பட்டுள்ளதால், " ஸ்ரீரங்கம் திருவானைக்கால் பகுதிகளில் உள்ள கடைகள் ஒரு காசும், ஒவ்வொரு வீடும் வருடத்திற்கு 2 பணமும்,பெரிய கிராமங்கள் வருடத்திற்கு 10 கலம் நெல்லும், சிறிய கிராமங்கள் வருடத்திற்கு 5 கலம் நெல்லும் ரகுநாதராய தொண்டைமானுக்கு அளிக்க கடமைபட்டுள்ளனர்.

இவ்வாறு தஞ்சை நாயக்கர், திருச்சி நாயக்கர் மத்தியில் தனது வீரத்தால் பெரும் செல்வாக்கை பெற்றார் ரகுநாதராய தொண்டைமான், இதே காலத்தில் நாகலாபுரம் பாளையக்காரர் மற்ற நாயக்க பாளையங்களோடு சேர்ந்து கொண்டு, மதுரை நாயக்கருக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர். நாயக்கர் தொண்டைமான்களின் உதவியை நாடினர். ரகுநாதராய தொண்டைமான் மற்றும் நமண தொண்டைமான் தலைமையிலான படை நாகலாபுரம் நோக்கி சென்றது. கலக்ககாரர்களை ஒடுக்கி, அவர்களிடம் இருந்து பெறப்பட்ட குதிரை, யானை, மற்ற போர்கருவிகளுடன் திருச்சி வந்தடைந்தனர் தொண்டைமான்கள்.

நமண தொண்டைமானுக்கு குளத்தூர் பாளையம் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அம்பாரி யானை, ஆடல் மகளிர், முரசு, நரகஜ மேளம், கருடகொடி, அனுமர்கொடி, போர் முரசுகள், கண்ட பேருண்ட கருவி முதலியவை அளிக்கப்பட்டது. நமண தொண்டைமான் தன்னை, ரங்க முத்து கிருஷ்ண வீரப்ப நமண தொண்டைமான் என அழைத்துக்கொண்டார்.


(General history of pudukkottai state R.aiyar 1916 page 124,136)
புதுக்கோட்டை மன்னர்கள் பற்றி எழுதிய வரலாற்று ஆசிரியர்கள், அவர்கள் மன்னராக உயர்ந்ததை பற்றி குறிப்பிடும்போது,ராம்நாடு மன்னர் கிழவன் சேதுபதி , பல்லவராயரிடம் இருந்த பகுதிகளை பறித்து தனது மச்சானாகிய ரகுநாதராய தொண்டைமானிடம் அளித்ததாக மேற்போக்காக எழுதியுள்ளனர். கிழவன் சேதுபதியின் ஆட்சியை குறிக்கும் கல்வெட்டுகள் எதுவும் வெள்ளாற்றுக்கு வடக்கே கிடைக்கவில்லை. கிபி 1600 வரை விசயநகர மன்னர்களின் மேலாண்மையை குறிக்கும் கல்வெட்டுகளும், அதற்கு பிந்தைய கல்வெட்டுகளில் மன்னர்கள் தன்னிச்சையாக ஆட்சி புரிந்ததை குறித்துள்ளனர். இதன் மூலம் வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகளில் சேதுபதிகளின் ஆதிக்கம் இருக்கவில்லை என தெளிவு பெறலாம்.


புதுக்கோட்டையில் வெள்ளாற்றுக்கு தெற்கில் மறவரும், வெள்ளாற்றுக்கு வடக்கில் கள்ளரும் ஆட்சி செய்தனர். நிரந்தர கள்ளர் மற்றும் மறவர் படைபற்றுகள் புதுக்கோட்டையில் இருந்தது. வெள்ளாற்றுக்கு தெற்கில் மறவர் படைபற்றுகளும், வெள்ளாற்றுக்கு வடக்கில் கள்ளர் படைபற்றுகளும் இருந்தன. வெள்ளாற்றுக்கு வடக்கில் பல்லவராயர் ஆட்சி செய்த பகுதிகள் கிபி 1639 ல் விஜயநகர மன்னர் ஸ்ரீரங்கராயர் உதவியுடன் தொண்டைமான் பெற்றார். வெள்ளாற்றுக்கு தெற்கே கிழவன் சேதுபதி மேலாண்மை ஏற்ற பல்லவராயர் பகுதிகள் கிபி 1686 ல் சேதுபதி உதவியால் தொண்டைமான் பெற்றார். கிழவன் சேதுபதியின் ஆதிக்கம் திருமயம் வரை இருந்தது. வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகள் விசயநகர மன்னர் ஸ்ரீரங்கராயர் மேலாண்மை ஏற்ற பல்லவராயர் கையில் இருந்து தொண்டைமான் ஆதிக்கத்திற்கு வந்ததுவிஜயநகர பேரரசின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே முடிந்துவிட்ட போதிலும், தொண்டைமான்கள் கிபி 1805 ல் வெளியிட்ட செப்பேட்டில் கூட " ஸ்ரீரங்க தேவ மகாராயர் பிரதிராச்சியம் பண்ணியருளுகின்ற நாளில்" என குறித்து தங்களது நன்றியுணர்ச்சியை காட்டியுள்ளனர். நாயக்கர் மேலாண்மை பற்றியோ, கிழவன் சேதுபதியின் மேலாண்மையையோ எங்கும் குறிப்பிடவில்லை

கிபி 1686 ல் வெள்ளாற்றுக்கு தெற்கே உள்ள பல்லவராயர் பகுதிகள் கிழவன் சேதுபதி உதவியுடன் தொண்டைமானால் கைப்பற்றப்பட்டது என " இளந்தாரி அம்பலக்காரர்" சுவடிகள் கூறுகிறது.General history of pudukkottai state R.aiyar 1916 page 126) 

ஸ்ரீரங்கராயரால் பேர் பெற்ற ராய தொண்டைமான்( கிபி 1639)

தொண்டைமான்களின் எழுச்சியை கண்ட கிழவன் சேதுபதி ரகுநாதராய தொண்டைமானையும், அவரது தம்பி நமண தொண்டைமானையும் அழைத்து தனது படையில் பணியாற்ற வைத்தார். கிழவன் சேதுபதிக்கு எதிராக கிளம்பிய மறவர்களை ரகுநாதராய தொண்டைமான் ஒடுக்கினார். கிழவன் சேதுபதியின் நன்மதிப்பை பெற்றார்.

கிழவன் சேதுபதியுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர் தஞ்சை நாயக்கர். மன்னார்குடியில் கட்டிவைக்கப்பட்டிருந்த தஞ்சை நாயக்கரின் பட்டத்துயானையை கைப்பற்றி, கறம்பக்குடிக்கு கொண்டுவந்தார் தொண்டைமான்.அங்கிருந்து ராமநாதபுரம் மன்னரிடம் கொண்டு சேர்த்தார். தொண்டைமானின் வீரத்தை கண்டு மெச்சிய சேதுபதி, தொண்டைமானுக்கு மரியாதைகளை அளித்தார்.

எட்டயபுர பாளையக்காரரான நாயக்கர் வழியினர், கிழவன் சேதுபதிக்கு கட்டுப்படாமல் ஆட்சி செய்ய முயன்றனர். இவரை அடக்க படைதிரட்டி சென்ற ரகுநாதராய தொண்டைமான் எட்டயபுர பாளையக்காரரின் தலையை கொய்து கிழவன் சேதுபதியின் காலடியில் வைத்தார்.

இராமநாதபுர மன்னரின் பட்டத்து யானைக்கு ஒரு சமயம் மதம் பிடித்து, கட்டுபாடு இழந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. இச்சமயத்தில் நமண தொண்டைமான் மிகுந்த வீரத்துடன் போரிட்டு பட்டத்து யானையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.
(General history of pudukkottai state R.aiyar 1916 page 124) 

ரகுநாதராய தொண்டைமானின் போர் உதவிகளால் மணம் மகிழ்ந்த கிழவன் சேதுபதி தொண்டைமானுடன் மண உறவில் இணைந்தார்.ரகுநாதராய தொண்டைமானின் தங்கையான கதலி நாச்சியாரை தர்மபத்தினியாக ஏற்றார். கிழவன் சேதுபதி மறைவுக்கு பின் இவர் உடன்கட்டை ஏறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகுநாதராய தொண்டைமான் பதவி ஏற்கும்போது, சின்னராம பானம் எனும் வாள், வலம்புரிச்சங்கு முதலியவை கிழவன் சேதுபதி சார்பாக அளிக்கப்பட்டது.
(General history of pudukkottai state R.aiyar 1916 page 127-128//ilandari ambalakarar manuscript )

கிபி 1686க்கு பின் போர் மற்றும் போர் உதவிகளால் ரகுநாதராய தொண்டைமான் பெற்ற பகுதிகள

குமாரவாடி பாளையக்காரரிடம் இருந்து விராலிமலையை வென்றார்.

பூச்சி நாயக்கரை வதம் செய்து மருங்காபுரி பாளையத்தை இணைத்தார்.

பெரம்பூர், கத்தலூர், ஆவூர் பகுதிகளில் படையெடுத்து வென்று புதுக்கோட்டை உடன் இணைத்தார்.

கிபி 1723 ல் சேதுபதி திருவுடையத்தேவருக்கு பின் ஏற்பட்ட வாரிசுரிமை போரில் பங்கேற்று திருமயத்தை பெற்றார்.

பொன்னமராவதி பகுதியில் ஆட்சி செய்த பொம்மி நாயக்கரை வீழ்த்தி, கரிசல்பட்டு- வாராப்பூர் பகுதிகளை இணைத்தார்

நகரம் ஜமீன், பாலையவன ஜமீன்களின் கணிசமான பகுதிகளை புதுக்கோட்டையுடன் இணைத்தனர்.

வாராப்பூர் பாளையக்காரரை வீழ்த்தி, வாராப்பூர் புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது.
குளத்தூர் தொண்டைமான்


தொண்டைமான் ஆட்சிக்குப் புகழ் சேர்த்து ராஜ்யத்தை விரிவு படுத்திய ரகுநாத ராய தொண்டைமானின் காலத்தில் அவருடைய சகோதரர் நமன தொண்டைமான் புதுக்கோட்டையை அடுத்த குளத்தூர் எனும் பகுதிக்குத் தலைவர் ஆனார். இவருக்கு திருச்சிராப்பள்ளியை ஆண்ட நாயக்க மன்னரான ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கரின் நட்பு ஆதரவு கிடைத்தது. இவர் காலத்திலிருந்து குளத்தூர் தனி ராஜ்யமாக விளங்கி இங்கு ஆட்சி புரிந்தவர் குளத்தூர் தொண்டைமான் எனவும் அழைக்கப்பட்டார். இந்த நிலை 1750 வரை நீடித்தது. ஏனென்றால் 1750 இல் இந்த குளத்தூர் பகுதி புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. ரகு நாத ராய தொண்டைமான் தன்னுடைய புதுக்கோட்டையுடன் குளத்தூர் மட்டுமல்லாமல் ஆலங்குடி, திருமெய்யம் ஆகிய பகுதிகளையும் இணைத்து ஒரு பேரரசாகப் பெருமையோடு ஆட்சியைத் துவக்கினார். இந்த ஒருங்கிணைந்த பகுதிதான் பின்னர் புதுக்கோட்டை சமஸ்தானம் எனப் புகழுடன் விளங்கியது.

புதுக்கோட்டையிலுள்ள குளத்தூர் பகுதியை ஆண்ட சொக்கநாத ராமசாமித்தொண்டைமான், தான் அளித்த கொடைகளையும், தன் முன்னோர் பற்றியும் இச்செப்பேட்டில் பொறித்துள்ளார். புதுக்கோட்டையின் முதல் மன்னரின் தந்தையான ராய தொண்டைமானை பற்றிய குறிப்பும் இச்செக்பேட்டில் உள்ளது." ராசராசவளநாட்டு பன்றிசூழுநாடு அன்பில் தெற்குலூரிலிருக்கும் இந்திர குல குலோத்பவரான காணியுடைய அரையர் மக்களில், இராயரால் பேர் பெற்ற ஸ்ரீமது ராய தொண்டைமானார்" என குறிக்கப்படுகிறார். (நாஞ்சியூர் செப்பேடு)

அம்புக்கோயிலில் கிபி 10 ஆம் நூற்றாண்டு வாக்கில் குடியேறிய தொண்டைமானின் கள்ளர் குடிகள், அரையர்களாக உயர்ந்ததை 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு குறிக்கிறது. மன்னர்களுக்கு யானைப்படை தயார் செய்து அனுப்பிக்கொண்டும், அம்புகோயிலில் அஞ்சுகுடிகளுக்கு அரையர்களாக வாழ்ந்து வந்த தொண்டைமான்கள், பிற்காலத்தில் படிப்படியாக வீரத்தால் உயர்ந்து, புதுக்கோட்டை சமஸ்தானத்தை தோற்றுவித்து, இந்திய சுதந்திரம் அடையும் வரை ஆட்சி செய்துள்ளனர்.


திருநெல்வேலி தொண்டைமான்

திருநெல்வேலியில் இருக்கும் தொண்டைமான் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் அல்ல. அந்தப் பெரும்பாணாற்றுப்படை பாட்டுடைத் தலைவனாம் தொண்டைமான் இளந்திரையன் வழிவந்தவர்களே. இவர்கள் பரம்பரையிலே வந்தவர்கள்தான் புதுக்கோட்டை ஒன்றைக் கட்டி அதன் அரசர்களாய் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த அரசப் பரம்பரையைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் ஏதோ குடும்பத்தில் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக புதுக்கோட்டையை விட்டுப் புறப்பட்டுத் தெற்கு நோக்கி நடந்திருக்கிறார்கள். அப்படி வந்தவர்கள் தென்பாண்டி நாட்டில் பொதிகை மலைச் சாரலில் தங்கி வாழ்ந்திருக்கிறார்கள். திருக்குற்றாலம், பாபநாசம், திருச்செந்தூர் முதலிய இடங்களில் மடாலயங்கள் நிறுவி அறக்கட்டளைகள் நடத்தி இருக்கிறார்கள். அப்படி வந்து தங்கிய அரச சகோதரர் ஒருவரின் பரம்பரையே திருநெல்வேலி தொண்டைமான் பரம்பரை.குறிப்பு : தொண்டைமான் மன்னர்கள் தொண்டைமண்டலத்தில் இருந்து புதுக்கோட்டை பகுதியில் குடியேறியதை , ஒட்டுமொத்த கள்ளர்களும் அப்போதுதான் அங்கே குடியேறியதாக சிலர் எழுதி வருவதை காணமுடிகிறது. ஆனால் கள்ளர்கள் அங்கே தொன்றுதொட்டு வாழ்ந்து வருவதற்க்கான பல கல்வெட்டு சான்றுகள் தெளிவாக உள்ளன.
 

நன்றி : ஆக்கம் - உயர் திரு . சியாம் சுந்தர் சம்பட்டியார்

வெள்ளையர் ஆட்சியில் திருட்டு முதலிய குற்றம் புரிந்த சாதிகள்

புதுக்கோட்டை சமஸ்தானம் ----------------------------------------------------- * புதுக்கோட்டை யில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சாதிகள்,...